Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-35

Advertisement

praveenraj

Well-known member
Member
அங்கே தன் தந்தையைப் பற்றி ஏனோ அவரை தன் தந்தை என்று சொல்லக்கூட சரித்திராவுக்கு மனம் வரவில்லை. அவரைப் பேச தொடங்க அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து தனியே வந்துவிட்டாள் சரித்திரா. அவள் எண்ணமெல்லாம் எங்கெங்கோ சென்றது. ஆம் இந்த முறைக்கூட தன் தாத்தாவுடன் அவரைப் பார்க்க செல்ல சரித்திராவுக்கு விருப்பம் இல்லை தான். என்ன செய்ய துவாரா அசாம் வரை செல்கிறான் என்று கீர்த்தி மூலமாகத் தெரியவர இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்துக்கொண்டவள் அவளாகவே தன் தாத்தாவிடம் கேட்க அவரோ தன் பேத்தி மனம் மாறிவிட்டாள் என்று தப்புக்கணக்குப் போட்டு இங்கே வந்துவிட்டார். தன் பத்து வயதில் தனக்கு அறிமுகமானவன்,அப்போது அவன் செய்த எந்த காரியத்திருக்குமான விளக்கம் அவளுக்குத் தெரியவில்லை தான். ஆனால் அவள் அடுத்த இரண்டு வருடங்களில் பெரிய பெண் ஆனதும் தான் அன்று துவாரா செய்ததன் பொருளும் வழங்கிய அறிவுரையும் நன்கு மனதில் புரிய அவளுக்கு அந்த நொடியே அவன் மீது ஒரு இனம்புரியாதா உணர்வு தோன்றியது மட்டும் நிச்சயம்.
அதன் பிறகு அவனை அவள் தேடாத இடமில்லை ஆனால் அவன் அவள் கண்ணில் சிக்காமலே சென்று விட்டான். ஆனால் அவனின் ஞாபகங்கள் மட்டும் அவளை விட்டுச் செல்லவில்லை. அவனால் கையில் ரேக்கட்டை(ஷெட்டில் காக் பேட்) எடுத்தவள் தான் முதலில் தடுமாறினாலும் அண்டர் 16 அண்டர் 18 என்று எல்லாவற்றிலும் தன் திறமைகளைக் காட்டினாள். சில நாட்கள் தான் ஆனால் காதல் என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணிற்கும் பேட்மிட்டன் மீது பெரிய ஆவல் இல்லாமல் இருந்தவளுக்கு அந்த நாட்கள் இரண்டையும் நன்கு உணர்த்தியது. காலங்கள் உருண்டாலும் எத்தனையோ முகங்கள் அவள் பார்த்தாலும் அன்று தன்னை அழைத்து தண்மையாக மென்மையாக அதேநேரம் தீர்க்கமாய்ப் பேசிய அவன் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கைகள் எல்லாமும் அவளுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.
விதியின் வசத்தால் இவளும் கீர்த்தியும் ஒரே கல்லூரியில் சேர நெருங்கிய நட்புகள் ஆக எதேர்ச்சையாக அவர்கள் வீட்டிற்குச் சென்றவளின் கண்களில் அன்று பார்த்த அந்த முகம் புகைப்படமாக இருக்க அன்றிலிருந்து அவனை மீண்டும் நேசிக்கிறாள். அவனின் பின்புலம் அவன் தன் தந்தையை வெறுப்பது உட்பட எல்லாமும் தெரிந்த அவளுக்கு அவன் வாழ்வின் 'அந்த' பக்கங்களும் தெரியவந்தது. இன்னும் சொன்னால் கண்கூட பார்கவும் நேர்ந்தது. பலமுறை துவாராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியும் வாண்டேடாய் அதை தவிர்த்து வந்தாள். தன் அண்ணனை நினைத்து அடிக்கடி வருந்தும் கீர்த்தியிடம் ஒருநாள் எல்லாமும் சொல்ல நேர்ந்தது. அவளுக்கு அவனைப் பற்றிய எல்லாமும் தெரியும் என்பதே கீர்த்திக்கு அதிர்ச்சியாக இருக்க கூடவே அவள் அவனை விரும்புவதும் தெரியவர முதலில் துவாரா இதற்கு சம்மதிப்பானா என்று புரியாமல் இருந்தவள் பிறகு தன் அண்ணனின் நன்மைகாகவும் கூடவே தன்அண்ணனின் வாழ்வில் எது நடக்கவே கூடாது என்று நினைக்கிறாளோ எங்கே அது நடந்துவிடுமோ என்று பயந்தவள் இந்த பயணத்தில் சரித்திராவை விவானுடன் இணைத்துவிட்டாள்.
எங்கே தன்னையும் நிராகரித்து விடுவானோ என்று நினைத்து சரித்திராவிற்கு நிறைய பயம் மற்றும் குழப்பம்.ஆனால் எறியவளுக்கு நேற்று காலையில் பார்த்தது முதல் இப்போது வரை தன்னிடம் பேசிட துடிக்கும் அவன் மனதை உணர்ந்துக்கொண்ட பிறகு தான் நிம்மதியே வந்தது. ஆனாலும் அவனின் அந்த தயக்கம் அவளும் உணர்வாள். நேற்று இரவு அவன் தன்னையே பார்த்ததும் தன் காதிலிருந்து ஹெட் போனை கழட்டி விட்டதும் அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியே. அவள் எங்கே உறங்கினாள்? நேற்று முழுவதும் சோர்ந்து அழுது போதாக்குறைக்கு விவான் அவனை அத்தனை பேரின் முன்னால் அடித்ததும் அவளுக்கு சொல்லமுடியாத கோவம். அதற்கு பிறகு துவாரா ரெஸ்ட் ரூம் சென்று கதவைப் பூட்டிக்கொள்ள அவன் வெளியே வரும் வரை தன் இதயம் உணர்ந்த வலியை அவளே அறிவாள். வந்தவனை ஓடிச் சென்று அணைத்திட துடித்த மனதைக் கட்டுப்படுத்த அவள் பட்ட பாடு அவளே அறிவாள்.
தன்னை ஏற்பானா என்பது கூட இரண்டாம் பட்சம் தான். எங்கே தன்னுடைய காதலைப் புரிந்துக்கொள்வானா இல்லை தன்னை பைத்தியம் என்று நினைத்து கடந்துவிடுவானோ என்பதே அவளின் பிரதான பயம். அட்லீஸ்ட் அவளைப் பார்த்ததும் ஏதேனும் ஒரு ஸ்பார்க் அவனிடம் இருக்கிறதா என்று நினைத்து காத்துக்கொண்டிருக்க அவனும் அவளை தீர்க்கமாகப் பார்த்தான் தான் .ஆனால் சற்று முன் பேசியதில் தான் இந்த 'சரித்திராவை' தான் நினைவில்லை அட்லீஸ்ட் சரித்திரா என்ற பெயர்க்கூடவா அவனுக்கு நினைவில்லை? என்று நினைத்து வெதும்பினாள். அந்த 'சரித்திராவை'அவனும் பலமுறை மனதில் சொல்லிப்பார்த்தான் என்று அவளுக்குத் தெரியாதே. ஏதோ ஒரு ஈர்ப்பு அவனிடம் இருக்கிறது.
கடந்த கால நினைவுகளில் அதும் வெறும் நாலு நாட்கள் மட்டுமே தெரிந்த அவனின் மீது மையல்கொண்டு இப்படி பதினான்கு ஆண்டுகளாய் காத்திருக்கிறாளே இது கைக்கூடுமா ? இல்லை கடந்து போகுமா? அவள் மனதை அறிவானா துவாரா?
..............................................................
அங்கே எல்லோரும் இளங்கோ பார்வதியின் கதையைக் கேட்க தயாராக இளங்கோவும் கதை சொல்ல ஆரமித்தான்.
"நான் திருநெல்வேலி பக்கத்துல ஒரு சின்ன ஊருல பிறந்தேன். எனக்கு முன்னாடி ரெண்டு அக்கா. நான் தான் ஒரே பையன். எங்க அப்பாவோட நெருங்கிய சொந்தம் தான் இவளோட அப்பா. நான் பிறக்கிறது முன்னாடி வர ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல நெருக்கம் இருந்து இருக்கு. ஆனா..."
"அதுதான் நீ பிறந்துட்டியே அப்புறோம் எப்படி நல்லது நடந்திருக்கும்" என்றான் ஜிட்டு. எல்லோரும் மைல்டாக ஸ்மைல் செய்ய,
"அப்போ ஏதோ சின்ன நில தகராறு. அதுனால அப்படியே பேச்சி வார்த்தை குறைந்து போய் ரெண்டு குடும்பமும் பேசிக்கறதே இல்ல. இந்த லட்சணத்துல ரெண்டு குடும்பமும் எதெற்கெடுத்தாலும் சண்டை போட்டி பொறாமைன்னு இருக்கும். எங்க அப்பாவைத் தான் பார்த்திருக்கீங்களே ரொம்ப டெர்ரரா இருப்பாரு..."
"இல்ல மச்சி இந்த விஷயத்துல முதல் பிளேஸ் எப்பயும் செபா அப்பாக்குத்தான். எனக்குத் தெரிந்து அவர் தான் பயங்கர டெர்ரர் பாதர் ஆப் அவர் கேங். அவருக்கு அப்புறோம் வேணுனா உங்க அப்பாவை வெச்சுக்கலாம். ஆளு நல்லா பெரிய மீசையும் அதுவுமா அய்யனார் மாதிரியே தான் இருப்பாரு. நீ கண்டினு"- தியா
"நானெல்லாம் அந்த ஊருலயே இருந்தா கெட்டு குட்டிசுவரா போயிடுவேன்னு நெனச்சி என்ன நாலாவது படிக்கும் போதே வெளிய கொண்டுப் போய் ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டாரு. அப்புறோம் அஸ் உஸுல் நான் லீவுக்கு தான் எங்க ஊருக்கே வருவேன் அப்படியே டேஸ் போச்சு. நான் காலேஜ் சென்னையில சேர்ந்தேன்"
"ஆமா இப்போ மட்டும் துரை அப்படியே இந்திய ஜனாதிபதியா இருக்காரு. மொச புடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாதா? வா வா இப்போதான் நீ கதைக்கே வர ,, சீக்கிரம் சொல்லு மேன்" என்றான் ஜிட்டு,
"காலேஜ் வந்து ஹாஸ்டெல் லைஃ பசங்கனு ஜாலியா தான் போச்சு. அப்போதான் முதல் வருஷம் முடியும்போது சென்னையில கவுன்செல்லிங்காக என் மாமா வந்தாரு"
"பாரேன் இந்த வயசுலயும் படிக்கணும்னு தோனியிருக்கு உன் மாமாக்கு. ஹி இஸ் எ கிரேட் மேன். அவரை மாதிரியான ஆளுங்களால தான் இந்தியா கூடிய சீக்கிரம் வல்லரசு ஆகப்போகுது. கிரேட்!" என்று ஜிட்டு சொல்ல எல்லோரும் சேர்ந்து கோரஸாக முறைத்தனர்."இப்போ ஏன் எல்லோரும் சேர்த்து முறைக்கறீங்க?"
"முட்டாள் மாமான்னா பார்வதியோட அப்பா. அவரு வந்தது பார்வதியோட கவுன்செல்லிங்க்கு. நீயெல்லாம் என்னத்த கல்யாணம் பண்ணி என்னத்தப் பண்ணப் போறியோ?" என்று சொல்லி இளங்கோ சிரிக்க,
"ஏன்டா கவுன்செல்லிங்க்கும் கல்யாணத்திற்கு என்னடா சம்மந்தம்? அண்ட் அந்த கவலை உனக்கு வேணாம். நான் பார்த்துப்பேன்" என்றான் ஜிட்டு.
"மச்சி அனுபவஸ்தன் சொல்றேன், ஃப்ரீ அட்வைஸ் தரேன்" என்று இளங்கோ எதையோ சொல்ல வர,
"நிப்பாட்டு. ஆமா இவரு பெரிய அனுபவஸ்தர், ச்சி ச்சி, இதெல்லாம் பெருமையா? இப்போ நீ கதையை மட்டும் சொல்லு"
"ஆமா ஆமா குள்ளமா இருக்கவங்க தான் அந்த விஷயத்துல அத்துபடியாமே? யாழ் சொல்லிட்டா இல்ல அந்த தைரியத்துல பேசுறான் இவன்" என்று மிரு தன் பங்கிற்கு வார,
"ச்சி ச்சி பொட்டப்பிள்ளை மாதிரியா பேசுற? வாய் வாயபாரு" என்று ஜிட்டு பொரிய,
"ஏய் இந்த ஜெண்டர் வெச்சி டிஸ்க்ரீமினேட் பண்ணிப் பேசுறதெல்லாம் இங்க வேண்டாம்" என்று இதித்ரியே குரல் கொடுக்க அவளுக்கு துணையாக நித்யா மிரு பாரு அனேஷியா எல்லோரும் குரல் கொடுக்க,
"எம்மா நான் பேசுனது தப்பு தான். ஒத்துக்கறேன், நீயெண்டா நிறுத்துற கண்டினு பண்ணு. எல்லாம் உன்னால தான். வந்தோமா கதையைச் சொன்னமானு இல்லாம சும்மா என் வாயை கிளறி இப்போ பாரு எல்லோரும் என்ன 'மேல் சாவுனிஸ்ட்' மாதிரி நெனைக்கறாங்க. என் இமேஜை டார்னிஷ் பண்ணலாம்னு நெனக்கறியா?"
சிரித்தார்கள்.
"சரி சரி எங்க விட்டேன்?"
"கவுன்செல்லிங்க்கு உன்ன கூப்பிட்டாங்க"
"ஆம் சரினு நான் இவளுடைய கவுன்செல்லிங்க்காக நேரா அண்ணா யூனிவர்சிட்டி போனேன். அங்க போய் அப்போதான் இவளை நேர்ல பார்த்தேன்"
"வாவ்! ஹீரோயின் இண்ட்ரோவா?"
"நான் இவளை ரொம்ப சின்ன வயசுல பார்த்தது. அதுக்கப்புறோம் நான் பார்க்கவே இல்ல"
"நெக்ஸ்ட்"
"நெக்ஸ்ட் என்ன? கவுன்செல்லிங் டைம் வந்தது. உள்ள ரெண்டு பேரு தான் போகணும். அவளுக்கு துணையா என்ன போகச் சொல்லி அனுப்புனாங்க..."
"ச்சே பாலுக்கு காவல் பூனையா? நேரம்டா எல்லாம் நேரம்"
"அப்புரோமென்ன போனோம் காலேஜ் செலெக்ட் செஞ்சோம் அவங்களை மீண்டும் ட்ரைன்ல ஏத்தி அனுப்பிவெச்சிட்டேன்"
"டேய் டேய் இதெல்லாமா எங்களுக்கு வேணும்? வி வாண்ட் ரொமான்ஸ், பியார் பிரேமா, காதல்" என்றான் ஜிட்டு.
"அந்த வருஷம் தீபாவளி வந்தது இல்ல..."
"ஆமாண்டா அந்த வருஷம் மட்டும்தான் ஸ்பெஷலா தீபாவளி வருது பாரு, வெண்ணவெண்ண எல்லா வருஷமும் தீபாவளி வரத்தான் செய்யுது. கதை சொல்லுடா"
"நான் கிளம்பி ஸ்டேஷன் போனா அப்போ அவளும் நின்னுட்டு இருந்தா. ட்ரெயின் வேற லேட் அப்போ..."
"போதும்டா அப்பா கூட இருக்கும் போதே அப்படிப் பார்த்தவன். இப்போ சொல்லவா வேணும்? ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்" என்று ஜிட்டு கண்ணடிக்க எல்லோரும் மீண்டும் முறைத்தனர்.
"இல்லடா போய்ப் பார்த்து பேசியிருப்பியே அதைச் சொல்ல வந்தேன். நீங்க ஏன் எல்லாத்தையும் தவறான கண்ணோட்டத்திலே பார்க்கறீங்க? நீ சொல்லுடா"
"நான் இவ கிட்ட நெருங்கி பேசுனேன்...
************
நிம்மதியாக கார்ட்ஸ் விளையாடிக்கொண்டும் தோற்பவர் வாங்கித்தரும் ஸ்னேக்ஸ்களை ஒரு கட்டு கட்டிக்கொண்டும் இருந்தனர் அவர்கள். ஜெசிக்கு நீண்ட நாட்கள் கழித்து வேறொரு உலகத்தில் இருப்பதைப்போல் ஒரு உணர்வு. ஒரு நிம்மதி. அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களில் அதிகமாக வெற்றிபெற்றுக்கொண்டு இருந்தது ஜெஸியும் ரேஷாவும் தான். இஸ்மாயிலும் லோகேஷும் அதிகம் செலவு செய்துக்கொண்டிருந்தனர். அதில் ரேஷா கூட ஒரு முறை தோற்றுவிட ஜெசி தான் அசராமல் அதிக 'டிக்' அடித்துக்கொண்டு இருந்தாள். அவளின் வேகம் உற்சாகம் எல்லோருக்கும் சந்தோசம் தந்தாலும் பெனாசிருக்கு அதிக நிம்மதி தந்தது.
வயிறு நிறையும் வரை விளையாடியவர்கள் அப்படியே கார்ட்ஸ் எல்லாவற்றையும் மடக்கவிட்டு கதை பேச ஆயத்தமானர்கள். பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்து பழகியவர்கள் இந்த மாதிரி ஒரு ட்ரிப்பில் கடந்த 40 மணிநேரங்களாக ஜாலியாக கவலைகள் இல்லாமல் இருப்பது எல்லோருக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் தான்.
"டேய் லோகேஷ் நீ எப்போடா கல்யாணம் பண்ணப் போற?" என்றாள் பெனாசிர்,
"அதுவா? இன்னும் சில ஆண்டிஸே கல்யாணம் பண்ணாம சுத்திகிட்டு இருக்காங்க. அவங்க பண்ணட்டும் அப்புறோம் பார்க்கலாம்" என்று ரேஷாவையும் பெனசிரையும் பார்த்துச் சொல்ல ஜெசி அவனுக்கு ஹை பை கொடுத்தாள்."இதுங்களுக்கு கொழுப்பைப் பாரு ஜெஸி ஆண்ட்டி" என்று அவளையும் வாரினான். அதில் கடுப்பானவள்,"டேய் உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு கல்யாணத்துக்கு அப்புறோம் நான் எதாவது மாறியிருக்கேனா? எப்படி இருந்தேனோ அப்படியே தான் இருக்கேன்" என்று சிரித்துக்கொண்டு சொல்ல,
"ஜெசி பிசிக்கலா உன்கிட்ட எந்த மாற்றமும் இல்ல தான். ஆனா நீ முன்ன மாதிரி இல்லைனு யாருக்குத் தெரியுதோ இல்லையோ எங்களுக்கு நல்லா தெரியும் ஜெசி. எங்க ஜெஸி எப்பயும் கலகலன்னு ஜாலியா டேக் இட் ஈஸியா ரிலேக்ஸ்டா இருப்பா. நான் உன் பெர்சனல் லைப்ல உள்ளே நுழையறேன்னு நீ நெனச்சா சாரி. இருந்தும் கேட்கறேன் என்ன பிரச்சனை ஜெசி?" என்ன தான் லோகேஷ் இஸ்மாயிலும் எல்லாமும் தெரிந்திருந்தாலும் அது தெரிந்ததைப் போல் காட்டிக்கொண்டு இதுவரை இருந்தவர்கள் நேற்று முழுவதும் அவள் அழுததும் உறங்காமல் தவித்ததும் நன்கு அறிவார்கள். "என்ன உன்ன ரொம்ப டார்ச்சர் பண்றானா? நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு தூக்கிடலாம் அவனை" என்றவன்,"என்ன இஸ்மாயில் சரிதானே?"
"கண்டிப்பா கண்டிப்பா நம்மகிட்ட தான் ரெண்டு ரவுடிப் பொம்பளைங்க இருக்காங்களேன்னு" அவன் சொல்ல பெனாசிர் ரேஷா இருவரும் அவனை முறைத்தனர்.
கொஞ்சம் இலகுவானவள் எல்லாமும் சொன்னாள். அவள் சொன்னதில் நிறைய விஷயம் பெனாசிருகே தெரியாது. மௌனி, ஹேமா, விவான், ஜெசி ஆகியோரின்திட்டத்தைச்சொல்லி முடிக்க,
"அடப்பாவி அப்புறோம் எதுக்கு ஜெசி நேத்து புல்லா ஃபீல் பண்ணிட்டு இருந்த?"
"சில சமயம் சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் ஈஸியா சால்வ் பண்ண முடியுற நம்மால ஏன் அடுத்தவங்க லைப்ல நடக்குற பெரிய விஷயத்துக்குக் கூட யோசனை சொல்ல முடியுற நம்மால் நம்ம பிரச்னையை தீர்க்க முடியறதில்லையே?" என்றாள்.
அவளை இலகுவாக்கும் பொருட்டு,"நீ கவலை படாதா ஜெசி. எவ்வளவு தைரியமிருந்தா எங்க அமுல் பேபியையே பிடிக்கலைனு சொல்லுவான் அவன்? பேசிப்பார்ப்போம் ஒத்துவரலைனு வெய் பக்கம் தான் இமைய மலையாம் அங்க கூட்டிட்டுப் போய் ஒரே தள்ளா தள்ளிடுவோம் என்ன? இல்லைனா வங்க கடல் எல்லைக்கு கூட்டிட்டுப் போய் தள்ளிவிட்டுடலாம் என்ன?" என்று முறுவலோடு கேட்கவும்,
"டேய் பாவி! சேர்த்துவைக்கச் சொல்லி கேட்டா நீ என்னடானா எங்க எல்லோரையும் கலி திங்க வெச்சிடுவ போலயே?"
"எந்த காலத்துல இருக்க பெனாசிர் நீ? இப்போல்லாம் ஜெயில்ல சிக்கன் பிரியாணியே போடுறாங்களாம்" என்று சிரித்து சொல்ல,
"டேய் அப்போ ஜெயில் தான்னு முடிவே பண்ணிட்ட?"
"இல்ல பெனி. முதல பேசிப்பார்க்கறது, அப்புறோம் தான் என்ன ஜெசி?" என்று கண்ணடிக்க,
அவளோ முறைத்தாள்.
"என்ன தமிழ்ப் பொண்ணு நீ? இந்நேரம் நீ என்ன சொல்லியிருக்கனும் தெரியுமா? கணவனே கண்கண்ட தெய்வம், அவரில்லாமா நான் இல்ல அப்படி இப்படி எதாவது எமோஷன் சீன் வந்திருக்க வேணாமா?"
இப்போது சிரித்தாள் ஜெசி" இன்னும் எத்தனை காலத்துக்கு இதே பழைய கதையை நாங்க பாடுவோம்? எங்களுக்கென்ன கல்யாணம் பண்ணி புருஷனை திருத்துறது மட்டும் தான் வேலையா? ஈகுவாலிட்டி. நாங்களும் சம்பாதிக்கிறோம்..."
"சபாஷ் மை டார்லிங். இது தான் எங்க ஜெசி. போல்ட் எனெர்ஜிடிக் பிராக்டிகல் ஆனா பொண்ணு. நீ கவலை படாத. பேசிப்பார்ப்போம் இல்லனா தூக்கிடலாம்" என்று கண்ணடிக்கவும்,
"எப்பா சாமி கொஞ்சம் அமைதியா இருங்க. ஓகே எப்போ மத்தவங்க எல்லோரும் கல்யாணம் பண்ணப் போறீங்க?"
"ஏன் தாயே கல்யாணம் பண்ணி நீ அனுபவிக்கிறது போதாதா? நாங்கலாச்சும் நிம்மதியா இருக்கோம்" என்றான் லோகேஷ்.
"ஹேய் நிஜமா என்னால தான் நீங்க கல்யாணம் செய்யலையா?" என்று விளையாட்டாகக் கேட்டவள் அங்கே பெனாசிர் மற்றும் ரேஷா இருவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்து,"நிஜமாவா டி? சொல்லுங்க"
"என்ன சொல்றது? அவன் சொன்ன மாதிரி நம்ம கேங்க்லேயே எதுக்கும் அசராத ஆளுனா நீ தான். உன்னையே இந்த கல்யாணம் அசைச்சு பார்க்கும் போது எங்களுக்கு பயமா இருக்குடி..."
"ஹே முட்டாள் மாதிரி பேசாதீங்க. என் பிரச்சனை வேற. அண்ட் அதை நான் சரியும் பண்ணிடுவேன்" என்று சொன்னவள் மனக்கண்ணில் ஒருநிமிடம் அன்று செபா பேசியதெல்லாம் வந்து சென்றாலும் நண்பர்களைத் தேற்ற,"ஒழுங்கா நீங்களும் சீக்கிரம் செட்டில் ஆகுங்க. நான் மட்டும் கல்யாணம் பண்ணி நம்ம கூட்டத்துல 'ஆட்'(odd - தனித்துவம்) ஒன்னா இருக்கேன். கிவ் மீ தி கம்பெனி சூன்"
"ஓகே" என்று எல்லோரும் சொல்ல,"சரிசரி பசிக்குது வாங்க கார்ட்ஸ் விளையாடலாம்" என்று சொல்லி அவள் கண்ணடிக்க எல்லோரும் சிரித்தனர்.
**********
சரித்திரா அவள் வாழ்வில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டிருக்க துவாரகேஷ் வந்தான். அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கோ அவளின் வலி வேதனை எல்லாமும் புரிந்தது."சரித்திரா..." என்று மெதுவாக அவன் அழைக்க அவளோ அந்த குழப்பமான மனநிலையிலும் அவள் மனம் உற்சாகம் பொங்க அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையின் அர்த்தம் என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பார்வை ஏதோ ஒன்று அவனிடம் சொல்லத் துடித்துக்கொண்டு இருக்கிறது என்று மட்டும் புரிந்தது. அவள் கண்கள் அந்த கண்களில் தெரியும் ஏக்கம், ஏக்கத்தைத் தாண்டியும் ஏதோ ஒன்று அவனிடம் எதிர்பார்க்கிறது ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவேயில்லை.
அதே நேரம் அவளைப் பார்க்கும் போது அவனுக்குள்ளும் ஏதோ செய்கிறது தான்.
*********
இளங்கோ பார்வதியை தன் மாமாவின் மகள் என்று சொன்னதும் ஏனோ மிருவின் கண்கள் தியானேஷை சென்று வந்தது. அதை அங்கிருந்தவர்கள் எல்லோரும் பார்த்தும் பார்க்காமல் இருக்க அவர்களின் கவனத்தையும் பெற இளங்கோ தொண்டையைச் செருமினான்.
"அன்னைக்கு ட்ரெயின் வேற செம கூட்டம். அவளோ ரிசெர்வ் செஞ்ச சீட்டு கன்பார்ம் ஆகலை. அவ பயத்துல இருந்தா..."
"என்ன ஆச்சு பார்வதி? ஏன் ஒரு மாதிரி இருக்க?"
அவள் எல்லாமும் சொல்ல,"அப்போ சரி என் சீட்ல நீ போய் உட்காரு. நான் tt கிட்ட பேசுறேன்" என்று சொல்லி அவளை உட்கார வைத்துவிட்டு அவனோ நின்றுக்கொண்டு வேறு கம்பார்ட்மெண்டில் வர அன்றைய பொழுதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தும் சிரித்தும் சென்றனர்.
இரவு இளங்கோவை அழைக்க அவனின் தந்தை வந்துவிட பார்வதியின் தந்தை இன்னும் வராமலிருக்க அவரோ அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். என்ன தான் சொந்தக்காரராக இருந்தாலும் அவளுக்கு நினைவு தெரிந்து அவரிடம் நேராகப் பேசியது இல்லை தான். அவளைப் பார்த்தவர் அவளை அழைத்துக்கொண்டு அவளின் வீட்டில் விட அப்போது தான் அவளின் தந்தைக்கு திடீரென சின்ன ஆக்சிடென்ட் ஏற்பட்டு விட்டதால் வேறொருவரை அழைத்துவர சொல்லிவிட்டு அவர் உறங்க சென்றதும் அவரோ மறந்தும் தெரிந்தது. இளங்கோவின் தந்தையையும் அவனையும் பார்த்த பார்வதியின் அன்னை இருவரையும் உள்ளே அழைக்க நேரம் ஆகிவிட்டது இன்னொரு நாள் வருவதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்தவன் பார்வதியின் தந்தையைப் பார்த்து நலம் விசாரிக்க அவரும் பதிலுக்கு நன்றி சொல்லிவிட்டு கொஞ்சம் இருவரும் நன்றாகப் பேசினார்கள்.
இவர்களின் இரு குடும்பமும் சண்டை என்றாலும் அது ஒரு ஊடல் போலவே இருக்கும். இவர்கள் அவர்களையோ இல்லை அவர்கள் இவர்களையோ எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதேபோல் இளங்கோ எப்போதும் அவன் மாமவைப் பார்த்தால் மரியாதை நிமித்தமாய்ச் சிரிப்பான். அதுவே அன்று பார்வதியின் கவுன்செல்லிங் வரை வந்து சென்றதும் இன்னும் உரிமை வந்தது.
போதாக்குறைக்கு நேற்று பார்வதிக்கு உட்கார இடமளித்து அவளை அழைத்துவந்தது எல்லாமும் தெரிய ஏனோ இளங்கோவின் மீதான நன்மதிப்பு மேலும் கூடத்தான் செய்தது.
என்ன தான் அந்த மரியாதை இருந்தாலும் இரு குடும்பமும் அந்த நிலத்தகராறை
கைவிட மட்டும் முன்வரவேயில்லை. அங்கே தான் அவர்களின் பிரெஸ்டிஜ் ஈகோ எல்லாமும் இருப்பதாய் நினைத்துக்கொண்டு இருந்தனர்.
அன்று எல்லாமும் பேசிக்கொண்டு இருக்க இளங்கோவின் அப்பத்தா தான் பேச்சு வாக்கில் "அந்தப் பொண்ணு எப்படி ராசா இருக்கு? நான் குழந்தையில பார்த்தது. ஒண்ணுமில்லதா சொத்துக்கு ரெண்டு குடும்பமும் சண்டைபோட்டுட்டு இருக்கு... என்னமோ அடுத்த வேளை சோத்துக்கே ரெண்டு குடும்பமும் வக்கில்லாத மாதிரி? என்ன பண்ண உனக்கு அவ மொறைப்பொண்ணு தான்"என்று சாதரணமாகச் சொல்லிவிட்டு சென்றது அந்த கிழவி.

"அந்த விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை கிளம்ப நாங்க ரயில்வே ஸ்டேஷன் வர அப்போ சரியா இவளும் இவ அப்பாவும் வந்தாங்க. பார்த்து அவளை ஏத்திவிட்டு என்கிட்டே வந்த மாமா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்கனு சொல்ல அதன்படியே என் தந்தையும்,"அந்தப் பொண்ணை பார்த்து வழியனுப்பிட்டு நீ போனு" சொன்னார்"
"அப்புறோமென்ன? அடிச்சான் பை லைக்கு. லைசென்ஸை கொடுத்துட்டாங்க. வண்டி ஓட்டியிருப்பியே? ஹ்ம்ம் ஹ்ம்ம்" என்று ஜிட்டு கண்ணடிக்க,
"டேய் தப்பா பேசாதடா. அது ஒரு நம்பிக்கை. அது தான்..."
"ஓ! அப்போ சார் அவளை பஸ் ஏத்தி மட்டும் தான் விட்டிங்க?"
"அப்படியில்ல அப்படியே ஊரு பிடிச்சிருக்கா, என்ஜினீரிங் பிடித்திருக்கானு..."
"ஏன் ஊரு பிடிக்கலைனு சொன்னா நீ என்ன சென்னை மாநகராட்சியையே மாத்திடுவியா என்ன? இல்ல இன்ஜினீயரிங் பிடிக்கலைனு சொன்னா அப்படியே சிலபஸை மாத்திடுவியா? இதெல்லாம் ஓவரா இல்ல? ஏம்மா இவன் இவ்வளவு கேவலமா வழிந்திருக்கானே உனக்கு காரிமூஞ்சியில துப்பணும்னு தோணலயா?" என்றான் ஜிட்டு.
எல்லோரும் ஜிட்டுவை ஆதரிப்பது போல் சிரிக்க, இளங்கோ தான் முறைத்தான்.
"என்ன முறைப்பு? துரை கிரீஸ் டப்பாவை எப்படி உதைசீங்க? இப்போ என் டர்ன்" என்று கெத்தாய்ச் சிரித்தான் ஜிட்டு. (பயணங்கள் முடிவதில்லை...)
சில காரணங்களால் இரண்டு நாட்கள் அப்டேட் கொடுக்க முடியவில்லை சாரி.
 
Top