Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-34

Advertisement

praveenraj

Well-known member
Member
"ஹே பேபி, இதுக்கெல்லாம் போய் அழலாமா? அவங்க தான் சும்மா டீஸ் பண்ராங்கனு எனக்குத் தெரியாதா என்ன?" என்று குழைந்த இதியை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க,
"பேபி அப்போ நீ என்ன நம்புற தானே? யூ பிலீவ் மீ நோ?"
"உன்ன நம்பாம தான் உன்கூட நான் இப்போ வரேன்னா?"
"இப்போ நீ என்ன கலாய்களையே?"
"ப்ரோமிசா சொல்றேன். நான் உன்ன நம்புறேன், அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு"
"என்ன?"
"முதல்ல நீ அவ்வளவு அறிவாளியெல்லாம் இல்ல" என்றதும் எல்லோரும் சிரிக்க, அவன் முகம் வாட,"பேபி எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன் இன்னொசென்ஸ் தான். சோ நீ இப்படியே இரு"
"ஓஹோ!" என்று எல்லோரும் கோரஸ் பாட,
"அப்புறோம் உனக்கு அவ்வளவு தைரியமெல்லாம் இல்ல,அதும் நீ என்ன வெச்சி விளையாட மாட்டேன்னு ஒரு நம்பிக்கை.என்ன மாட்டேயில்ல?"
"ப்ரோமிசா மாட்டேன்" என்று அவன் சொல்ல,
"சரி அப்போ வா என்கூட" என்று அவள் இழுக்க,
"எங்க?" என்று எல்லோரும் கேட்க,
"இதென்னப்பா வம்பா இருக்கு? நித்யா விவான் மட்டும் தனியா போனா எதுவும் கேட்க மாட்டேங்குறீங்க, நாங்க போனா மட்டும் எதுக்கு இந்த க்ரோஸ் கேள்வியெல்லாம்?"
"ஏன்டி நான் பாட்டுக்கு சிவனேனு தானே உட்கார்ந்திருக்கேன். என்னைய ஏன் பச்சாயத்துல இழுக்குற?" என்று கேட்டாள் நித்யா,
"அதுவா சில பல விஷயங்களுக்கு நீங்க தானே முன்னோடியா இருக்கீங்க..."
"நாங்க கைகழுவ தான் போனோம்"
"அப்போ நாங்களுக்கு அதே கைகழுவ தான் போறோம். பை..." என்று கண்ணடிக்க,
"என் மூஞ்சியிலே முழிக்காதீங்க, போய்த் தொலைங்க" என்றாள் நித்யா,
"அப்புறோம் கைஸ் யாருக்காச்சும் ரெஸ்ட் ரூம் போகணும்னா அந்தப் பக்கம் போங்க இந்தப் பக்கம் வேணாம்" என்று சொல்லி ஜிட்டுவை இழுத்துப் போனாள் இதித்ரி.
"அப்போ அழுக்குமூட்டை வா நாம இந்தப் பக்கம் போலாம்" என்று அழைத்த ஹேமாவை,"டேய் எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? பிச்சிபுடுவேன் பிச்சு" என்றான் இளங்கோ.
"மச்சான் நீயெல்லாம் குடும்பஸ்தன்டா. நாங்கயெல்லாம் சின்னஞ் சிறுசுங்க கொஞ்சம் அப்படியிப்படித் தான் இருப்போம். நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணனும்"
"நீங்க சின்னஞ் சிறுசு? நாங்க இதை நம்பனும்? எல்லோருக்கும் ஒன்னு சொல்லிடுறேன், இந்த கூட்டத்துலையே ஒருத்தனும் யோகியன் கிடையாது. பிச்சிப்புடுவேன் பிச்சி" என்று எல்லோரும் கேலிப்பேச,
"மச்சான் அப்போ உங்க லவ் ஸ்டோரி சொல்லுறது?"
"ஏன்டா நல்லா தானே போச்சு?"
"சொல்லு"
"டேய் அவனவன் அவனவன் வேலைய போய்ப் பாருங்க"
"இந்த டகால்டி எல்லாம் வேணாம். ஒழுங்கா சொல்லுங்க, எங்க எல்லோருடைய கதையும் சொன்னோமில்ல? உங்களுதையும் சொல்லுங்க" என்று அவர்களை அணைக்கட்டினர் ஹேமாவும் தியாவும்,
"ஓகே சொல்றோம்"
..................................................
"பை" என்று சொல்லிவிட்டு துஷி கிளம்பிவிட ரேஷாவுக்கு அங்கே பற்றிக்கொண்டு வந்தது."உன்ன உன்ன" என்று பல்லைக்கடித்தவள்,'ஆமா நாம எதுக்கு இப்போ இவ்வளவு கடுப்பாகுறோம்? அவன் யாருக்கூட போனா எனக்கென்ன?' என்று மறுமனம் வாதிட,'அவன் யாருகூட வேணுனாலும் போகட்டும், ஆனா அவனுக்கெதுக்கு நான் ஹெல்ப் பண்ணணும்? இவன் ஜாலியா ஊர் மேய்வான் நான் இவனுக்கு ஹெல்ப் பண்ணனுமா? முடியாது'என்று சொல்லி சென்றாலும்,'அச்சோ நாம வேற நம்ம வாயைக்கொடுத்து வீணா மாட்டிகிட்டோமே? இப்போ நாம தானே வேலையை செய்யணும்' என்று அவளும் கடுப்புடன் சென்றாள்.
'இவனைப் போயா நான் விரும்புறேன்? இல்ல ஏன்டி சேச்சி சும்மா இருந்த என் மனசை இப்படி குழப்பிவிட்டுட்டியே?'
அன்று இரவு அவனுக்காக வேலையெல்லாம் செய்து முடித்தவள், கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்க ஆரமித்தாள். அவளுக்கு அவளின் படிப்பு கேரீர் எல்லாம் மனதிற்குள் வந்துச்சென்றது. இருந்தும் கூடவே அவனின் முகமும் வர,'ச்சே அவனை எனக்கு பிடிக்கவேயில்ல' என்று நினைத்துக்கொண்டு மறுநாள் அவனின் ஒர்க்கை எல்லாம் முடித்துவிட்டு,'இங்கப் பாரு துஷ்யந்த், நேத்து நீ நடந்துக்கிட்டது ரொம்ப ஓவர்.ஏதோ மேம் சொன்னாங்களேன்னு நான் செஞ்சேன். இனிமேல் என் கண்ணு முன்னாடியே வந்து நிற்காதா. எல்லாம் என் தலையெழுத்து..."
"என்னாச்சு ரேஷு? ஏன் இவ்வளவு டென்ஷன்?" என்று சிரித்துக்கொண்டே கேட்க,
"நீ ஜாலியா பொண்ணுங்க கூட ஊர் சுத்த நான் உனக்கு எல்லாம் செய்யணும்னு அவசியம் இல்ல. பை" என்று சொல்ல,
"இரு இரு நான் யார்கூட வேணுனாலும் போறேன் உனக்கென்ன வந்தது?"
அவளுக்கிருந்த கோவத்திற்கு,"நீ யாருகூட வேணுனாலும் போ,என்ன வேணுனாலும் செய், சோனா கூட போ மீனா கூட போ எனக்கு கவலை இல்ல. ஆனால் நான் ஒன்னும் உன் வீட்டு ஆள் இல்ல. நான் உனக்காக எதுக்கு மாங்குமாங்குனு வேலை செய்யணும்?"
"இங்க பாரு நானா செய்யச் சொன்னேன்? நீயா தானே செய்யுறனேனு சொன்ன?"
"அது மேம் சொன்னதுனால மட்டும் தான்" என்று சொல்ல அப்போது அங்கே வந்த அவர்கள் கைட் எல்லாவற்றையும் கேட்க, துஷி முழித்தான். ஆக்சுவல்லி அன்று அவன் பைக்கில் அழைத்துச்சென்ற பெண் இந்த கைடின் அண்ணன் மகள். அண்ணன் குடும்பத்துக்கும் அண்ணி குடும்பத்துக்கும் சண்டை. ஆயினும் அவளுக்கு இரண்டு வீட்டு சொந்தமும் வேண்டும் என்பதால் துஷியிடம் சொல்லி யாருக்கும் தெரியாமல் சென்று வருவாள். இது யாருக்கும் தெரியாது. இது கூட இல்லை பிரச்சனை. இவன் இப்படி இவளை வேலை வாங்கி கூடவே தன் பெயரையும் கெடுத்துவிட்டானே என்று நினைத்து கடுப்பானவர்,"துஷி இந்தப் பொண்ணு சொல்றது எல்லாம் உண்மையா?"
"ஐயோ இல்ல ஆண்ட்டி அது வந்து..."
"நேத்து நீ இந்த வேலை செய்யலையா?"
அவன் அமைதியாக இருக்க,"சாரி ரேஷா. நான் சொன்னேனு தான் நீ செய்யவேண்டியதா போச்சு. என்னை மன்னிச்சுடு" என்றதும்,
"ஐயோ மேம் இல்ல.." என்று ரேஷா சொல்ல அதேநேரம் "ஆண்ட்டி" என்று அவன் சொல்ல,
"இனிமேல் நீங்க ஒரேநாள் வர வேணாம். அல்டெர்நேட் டேஸ் வாங்க. சாரி நான் என் வேலையை ஈஸியாக்க நெனச்சி உன்னை கஷ்டப்படுத்திட்டேன் சாரி ரேஷா. துஷி உன்கிட்ட நான் இவ்வளவு கேர்லஸ் எதிர்பார்கல. ஏதோ உன் அம்மா சொன்னானு நான் உனக்கு கைட் பண்ணேன்..."
"இல்ல ஆண்ட்டி..." என்று அவன் சொல்ல,
"நோ மோர் ஆண்ட்டி கால் மீ மேம்"
"சாரி மேம்"
"நீ போலாம். இனிமேல் நீ அல்டெர்நேட் டேஸ் வந்தா மட்டும் போதும். வா ரேஷா நாம ஒர்க்கை பார்க்கலாம்" என்று அழைத்துச்செல்ல,ரேஷா இதை எதிர்பார்க்கவேயில்லை. நேற்று அவன் டீஸ் செய்ததற்கும் தான் நோஸ் கட் ஆனதற்கு அவன் மீதிருக்கும் அந்த பொசெசிவா என்னவென்று தெரியாதாத ஒன்று அவளை கேள்வி கேட்க வைத்து இப்படி வசமாக மேமிடம் மாட்டி இவ்வளவு சீரியஸ் இஸ்ஸு ஆகும் என்று அவள் நினைக்கவில்லை.
துஷியோ வெளியேறிவிட அவன் எண்ணமும் இப்படித்தான் இருந்தான். சின்ன வயதிலிருந்து தெரிந்த நபர், தன் மீது அளவில்லா நம்பிக்கையை வைத்துள்ளவர் இன்று இப்படிப் பேசியது அவனுக்கு ரொம்ப வலித்தது. இதனால் இவருக்கும் தன் அன்னைக்குமான நட்பில் ஏதேனும் விரிசல் வந்துவிடுமோ என்று எண்ணி வருந்தினான். ஆக்சுவல்லி நேற்று அவன் எந்த சோனாவுடனும் படத்திற்குப் போகவில்லை. சோனா உண்மை, படத்திற்குப்போக போட்ட பிளானும் உண்மை ஆனால் அங்கே சென்றதும் பிளான் ட்ராப் ஆகிவிட்டது. இவன் அன்னையும் ஒரு கல்லூரி பேராசிரியர் தான். அவரின் மாணவிகள் அவரின் கைடென்சில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் துஷியிடம் சுலபமாக பழக முடியும். அவன் பேசிக்கல்லி ஜாலி டைப். என்ன தான் பெண்களிடம் பழகினாலும் எதையும் மறைக்காமல் தன் அன்னையிடம் ஒப்புவிப்பவன் தான். ஒரு சின்ன விளையாட்டு அவன் பெயருக்கும் அவன் அன்னையின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணி பயந்தான்.
அன்றைய இரவு ரேஷாவுக்கு நிம்மதியே இல்லை. அவளும் துஷிக்கு மீண்டும் மீண்டும் அழைக்க அவனோ அழைப்பை ஏற்கவே இல்லை. அதன் பின் நாட்கள் அப்படியே சென்றது. அவளுக்கு இன்னும் 20 நாட்கள் தான் இருக்கிறது. அவளின் கல்லூரி வைவா எல்லாம் இன்னும் 17 நாளில் முடிந்துவிடும். இரண்டு நாட்கள் இங்கே இருந்துவிட்டு ஊருக்கு கிளம்பியாக வேண்டும்.
அவள் மனமெல்லாம் ஒரு பாரம். முதலில் இது குற்றயுணர்ச்சி என்று நினைக்க பின்பு தான் இல்லை இது அதுக்கும் மேல என்று உணர்ந்தாள். அவளுக்கு அவன் மேல் இருக்கும் அதே உணர்வு அவனுக்கும் இருக்குமா என்று நினைத்தவள் அன்று அவனை மீண்டும் அழைக்க அழைப்பு எடுக்கப்பட்டது.
"ஹலோ துஷி ப்ளீஸ் வெச்சிடா, நான் கொஞ்சம் பேசணும்..."
"......"
"ஹலோ சரி நான் சொல்லவந்ததைச் சொல்லிடுறேன்" என்றவள்,"துஷி நான் அன்னைக்கு உனக்கிட்ட பேசுனது நடந்துக்கிட்டது எல்லாமே தப்பு தான். எனக்கும் புரியல நான் ஏன் இப்படி நடந்துக்கறேன்னு? நீ வேற யார்கூட பேசுனாலும் இல்ல உன் பைக்ல நான் அன்னைக்கு உட்கார்ந்து வந்த இடத்துல வேற யார் உட்கார்ந்து வந்தாலும் எனக்கு எதுவும் சொல்லத் தெரியில..." என்று இவள் பேச எதிர்புறம் பதிலெதுவும் இல்லாமல் இருக்க,"துஷி..." என்றவளுக்கு அங்கே நடக்கும் உரையாடல்கள் எல்லாம் கேட்க நேர்ந்தது.
"ஏன்டா நைட் அப்படி பண்ண?"
"என்னடி பண்ணேன்?"
"இப்படி அப்பா அம்மா இல்லனு தெரிஞ்சு தானே உன்ன கூப்பிட்டேன். ஆனாலும் நீ ரொம்ப மோசம் போடா பாரு எப்படி சிவந்திருக்கு" என்று சொல்ல,
"பின்ன நீ சொல்பேச்சு கேட்டிருக்கனும். ரொம்ப திமிரு பண்ண அதுதான்"
"இப்போ அப்பா அம்மா வந்தா என்ன பதில் சொல்றது?"
"எப்பயும் போல மறைச்சிடலாம்"
"கண்டுபிடிச்சா?"
"டாக்டரை பார்த்திடலாம்" என்று சொல்ல,
"ஏ துஷி என்ன இது போன் ஆன்ல இருக்கு?" என்று எடுத்து காதில் வைத்தவள், "ஹலோ?"
அந்தப்பக்கம் ரேஷாவுக்கு எல்லாம் தவறாகப் புரிந்தது. சொல்ல முடியாத ஒரு வலி, துஷியின் இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆனது. அவன் பல பெண்களுடன் பழகுவது தெரியும் தான். ஆனாலும் இப்படி இருப்பான் என்று அவள் நினைக்கவில்லை. எதையும் பேசாமல் அவன் மீது ஏற்பட்ட அந்த சாப்ட் பீலிங்ஸோடு இங்கிருந்து விடைபெற முயன்றாள். அவள் காலை துண்டிக்க,
"யாருடி யாழ் போன்ல?"
"தெரியில இப்போ என்ன பண்ணலாம்?"
"ஏன்டி இப்படி ஒப்பாரிவெக்கிற?"
"நீதானே நைட் அப்படிப் பண்ண?"
"ஏய் நான் என்னமோ உன்ன ரேப் பண்ண மாதிரி பேசுற?"
"பார்ரா அந்த ஆசையெல்லாம் இருக்கா உனக்கு?"
"பின்ன என்னடி இதுக்குத் தான் உன்கூட வீடியோ கேம்ஸ் நான் விளையாடுறதே இல்ல. எப்போப்பாரு சீட்டிங். உனக்கு ஒழுங்கா விளையாடவே தெரியாதா?"
"அதுக்குன்னு என்னை இப்படி தான் கடிச்சு வெப்பியா?"
"உன்ன யாருடி பாதியில கேமை ஆப் செய்யச் சொன்னது?"
"நீ ஏன்டா ஜெயிச்சிட்டே இருக்க? அதுனால தான்..."
"பாரு இப்போ உன்னால நாம சண்டைபோட்டு உன்னை நான் கடிச்சு, நீ என்ன அடிச்சு போதாக்குறைக்கு அந்த ஸ்டாண்ட் விழுந்து நைட் லேம்ப் உடைஞ்சு போச்சுப் போ ஆண்ட்டி கேட்டா நான் உன்னைத்தான் சொல்லுவேன்"
"இதுவரை சண்டைப்போட்டு எத்தனை முறை பல்ப், ஷோ கேஸ் கண்ணாடி உடைச்சி இருக்கோம்? அதுமாதிரியே இதையும் மறைச்சிடலாம். இல்லனு வெய் உன்னை நான் மாட்டிவிட்டுடுவேன்"
"அப்போ நீ கடிச்சு வெச்சதை நானும் சொல்லுவேன்" என்றவன் அவன் கன்னம் தேய்ப்பதைக் கண்டு,
"ரொம்ப வலிக்குதாடி யாழ்?"
"ஏன்டா ஆட்டுக்கறி கோழிக்கறி எல்லாம் பிடிக்காதா? என்னை இப்படி கடிச்சுவெச்சியிருக்க? எருமை..."
அதன் பின் ரேஷாவுக்கு மனமே சரியில்லை. அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது. அவன் மீது எப்போதிருந்து இப்படி மனம் அலைய ஆரமித்தது என்று அவளே அறியவில்லை. 'என்ன அவனை ஒரு இரண்டு மூன்று மாதங்களாக தெரியுமா? அவ்வளவு தானே அதற்குள் இப்படி ஒரு ஈர்ப்பா?' ஈர்ப்பைக்காட்டிலும் ஏனோ இப்போது அவன் வீட்டில் பேசியதைக் கேட்டதும் அவளுக்கு அழகையே வந்தது.'அவன் படிப்பு உடை போன்றவற்றைப் பார்க்கையில் நன்கு வசதிப்படைத்த குடும்பத்து பையன் மாதிரி தான் தெரிகிறான். ஆனால் 'ஒழுக்கம்' சார்ந்த விஷயங்களில் இப்படி இருப்பான்' என்று அவள் நினைத்ததே இல்லை. அவள் மனமெல்லாம் வலிக்க இதற்கு மேல் அவனைப்பற்றி யோசிக்கவே கூடாது என்று நினைத்து அவள் தன் வேலைகளைச் செய்ய ஆயத்தமானாள். அவளின் ப்ரொஜெக்ட் வேலையும் முடிந்துவிட்டது. வைவா வைஸ் முடிந்துவிட்டால் அவள் ஊருக்கு செல்ல வேண்டியது தான். அவளுக்குப் படித்ததும் எங்கேயாவது வேலை செய்யவேண்டும் என்று தான் ஆசை. ஆனால் வீட்டில் அவளை இவ்வளவு நாட்கள் வெளிய விட்டதே அவளுக்கு ஆச்சரியம் தான். தன் பெற்றோர்கள் அவ்வளவு கண்டிப்பு இல்லையென்றாலும் ஸ்கூல் காலேஜ் என்று எல்லாமும் ஹாஸ்டலிலே முடிந்த பெண் என்பதாலும் கூடிய சீக்கிரம் திருமணமும் செய்துவிடுவார்கள் என்பதால் கொஞ்சக்காலம் தன் பெற்றோருடனே இருக்கலாம் என்று நினைத்து காத்துக்கிடந்தாள்.
'இவனொரு நல்ல பையனாக இருந்திருந்தால் வீட்டில் சொல்லி மேற்கொண்டு பேசச் சொல்லியிருக்கலாம் ஆனா இப்போது? முதலில் என்னைப் போலவே அவனுக்கும் என்மீது காதல் இருக்கிறதா? யோசித்தவள் இனிமேல் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?' என்று நினைத்து அவளின் வேலைகளில் மூழ்க மறுநாள் காலையிலே அவள் வெளியே மார்க்கெட் போக அப்போது மீண்டும் அவன் பைக்கில் செல்ல ஆனால் போர் எ சேஞ் இம்முறை யாழ் ஓட்ட அவனோ பின்னால் பயந்து நடுங்கி அவளை இறுக்கிப்பிடித்து அமர்ந்துக் கொண்டிருந்தான். யாழ் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்ப ரேஸ் டிரைவிங். நன்றாக தான் ஓட்டுவாள் இருந்தும் துஷிக்கு அவளோடு செல்ல பயம் என்பதால் பின்னால் இறுக்கி அமர்ந்துக்கொண்டு செல்ல இதுவரை யாழைப் பார்த்திடாதவளுக்கு இவள் புதுமையாக தெரிய ஒருவேளை இவள் தான் அந்த சோனாவோ? என்று நினைத்து வருந்தி வந்துவிட்டாள்.
அதன் பின் நாட்கள் வேகமாய் உருண்டோடியது. அவளும் வைவா வைசில் இருக்க கேம்பஸில் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் வேலையும் கிடைக்க அதும் அவள் ஆசைப்பட்டது போலவே சென்னையில் கிடைக்க அவன் வேறு கல்லூரி இவள் வேறு கல்லூரி என்பதால் பார்த்துப் பேசமுடியவில்லை.
எல்லாமும் முடிந்தது. அன்று கடைசியாக பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு ஒருமுறை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பலாமென்று இருக்க அப்போது தான் அங்கே யாழைப் பார்த்தாள். அவள் கூடவே இரண்டு வயதான பெண்களைப் பார்க்க அதில் பார்த்ததுமே துஷியின் முகச்சாயல் தெரிய அது துஷியின் அன்னையாகத்தான் இருக்கும் என்று நினைக்க அதேபோல் அப்போது யாழை அவர் பார்த்து,"அவன் எங்க யாழ் போனான்?"
"யாரு ஆன்ட்டி?"
"என் பையன் துஷி தான்"
"இன்னேரம் எங்க போயிருப்பான்? ஏதாவது பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருப்பான்" என்று சொல்ல,
"அடிங்கு! பொய்ச் சொல்லாத" என்று அவளின் காதைத் திருக அவளோ வலியில் அலறி, "இருங்க இப்போ நான் ப்ரூவ் பண்றேன்" என்று அவனுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட,
"சொல்லுடி எருமை என்ன விஷயம்?"
"எங்க இருக்க?"
"எதுக்கு?"
"சொல்லுடா ப்ளீஸ்"
"அந்த காலேஜ் பெயரைச் சொல்ல (ரேஷாவின் காலேஜ்)"
"டேய் அது லேடிஸ் காலேஜ் ஆச்சே? அங்க ஏன் போன?"
"ஒரு..." என்று ஆரமிப்பதற்குள் அவனின் அன்னை லைனில் வந்து,"டேய் துஷி என்னடா இது? நான் உன்ன எவ்வளவு நல்ல பையன்னு நெனச்சிட்டு இருக்கேன் நீ என்னன்னா?"
அவனோ ரேஷாவைத் தேடி தான் அவளின் கல்லூரிக்குச் சென்றான்.
"பாத்திங்களா ஆண்ட்டி உங்கப் பையன நம்புறீங்களா?"
"ஏன்டா இப்படி பண்ற? அப்புறோம் உனக்கு யாருடா பொண்ணு தருவா?"
"ஐயோ ஆண்ட்டி நான் இருக்கேன் இல்ல? போனாப் போகுதுனு உங்க பையனுக்கு நான் வாழ்க்கை தரேன்" என்று சொல்ல அதற்குமேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் அவளோ (ரேஷா) சென்றுவிட்டாள். அடுத்த வரியைக் கேட்டிருந்தால் அவளுக்கு எல்லாம் புரிந்திருக்கும். அவள் சென்றதும்,"ஏன்டி என் பையன் கொஞ்ச நஞ்சம் நிம்மதியா இருக்குறது கூட உனக்குப் பிடிக்கலையா? உன்ன அவனுக்கு கட்டிவெச்சு நானே என் பையன் வாழ்க்கையை சீரழிக்கணுமா?" என்று கேட்டார் துஷியின் அன்னை.
"ஏன் ஆண்ட்டி எனக்கென்ன குறைச்சல்? எனக்கு தான் உங்க பையனைப் பத்தி எல்லாமும் தெரியுமே? நான் பார்த்துக்கறேன்" என்று கேட்க,
அதற்குள் அங்கே இருந்த யாழின் அன்னை ஒருவேளை இவள் உண்மையில் துஷியை கல்யாணம் செய்ய விரும்புகிறாளோ என்று நினைத்து,"உண்மையாவா யாழ்? உனக்கு அவனைப் பிடிக்குமா? அப்போ நீங்க கல்யாணம் பண்ணிக்கறீங்களா?"
"ஐயோ இது நல்லா வம்பா போச்சே? நான் சும்மா விளையாண்டேன். விட்டா அவனை எனக்கு கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையையே அழிச்சிடுவீங்க போலயே. நோ நெவர்" என்றவள்,"அம்மா நானும் துஷியும் பெஸ்டிஸ். லைப் லாங் இப்படியே ஜாலியா சண்டைபோட விளையாட வேணுனா சரிவரும் ஆனா எங்களுக்கு கல்யாணம் பண்ணிவெசீங்க அவ்வளவு தான். ஒன்னு நான் இல்ல அவன் யாரவது ஒருத்தர் தான் உயிரோடவே இருப்போம்"
"என்னடி பேசுற?"
"பின்ன நான் பண்ற டார்ச்சர்ல அவனோ இல்ல அவன்... சீச்சீ அவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். அப்போ அவன் தான் என்ன விட்டு துண்டைக் காணோம் துணியைக்காணோம்னு ஓடிடுவான்"
"இப்போ சொல்லுங்க, துஷி அப்படி ஓடணும்னா ஆசைப்பட்டா தாராளமா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்ல இருவரும் அவளின் வாயைப் பார்த்து "பிச்சிபுடுவேன் உன்ன" என்று சொல்லிச்சென்றனர்.கூடவே அவர்களின் நட்பும் புரிந்தது.
ஆக்சுவல்லி துஷியின் தந்தையும் யாழின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக ஒரு தொழிலைத் தொடங்க நடுவில் ஒரு நாள் திடீரென யாழின் தந்தை இறந்துவிட, அன்றிலிருந்து இன்றுவரை யாழும் அவள் அன்னையும் துஷியின் குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆனார்கள். ஒரே வயதை உடையதால் இருவரும் ஒன்றாக சிறுவயதில் ஆரமித்த நட்பு ஒரே ஸ்கூல் என்று தொடர்ந்தது.காலேஜ் மட்டும் வேறு வேறு. அருகருகே வீடு இருவரும் ஒரு பெஸ்டிஸ். துஷி கொஞ்சம் சமத்துப் பையன். ஆனால் யாழோ ஒரு அடாவடிப் பெண். அவளால் பல சிக்கல்களில் மாட்டியிருக்கிறான் துஷி. ஏன் இப்போதும் அவளால் தான் தன் காதலில் சிக்கல் ஏற்பட்டு விட்டது.
முதல் இரண்டு நாட்கள் துஷியுடன் பார்த்தப் பெண் அவன் கைடின் அண்ணன் மகள். அங்கு அவளில் தந்தை வழி குடும்பத்திற்கும் தாய் வழி குடும்பத்திற்கும் சண்டை. அவளை யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாய் அழைத்துச்செல்வது துஷியின் வேலை. அந்த காரணத்தால் அவன் அன்று அதை மறைத்தான். இதெத்துவும் தெரியாமல் ரேஷா தான் அவனுக்கு அந்தப் பெண்,சோனா,யாழ் என்று பெண்களின் தொடர்பில் இருப்பவன் என்று நினைத்து அவள் சென்றுவிட்டாள்.
ரேஷா ஊருக்கு சென்றுவிட துஷியும் ப்ரொஜெக்ட் எல்லாம் முடித்துவிட்டு அவளைத் தேடி ஒருவழியாக அவளின் அட்ரஸ் வாங்கிச்செல்ல அங்கே அவள் காலிசெய்துவிட்டால் என்று தெரிந்ததும் அவன் மனமும் வருந்தியது. அதன் பின் அவன் வாழ்க்கையும் வேலை என்று சென்றுவிட இவனும் அவளின் வேலை செய்யும் இடம் வீட்டின் முகவரி எல்லாமும் கண்டு பிடித்துவிட ஏனோ அவளைத் தேடி செல்ல தான் மனம் விரும்பவில்லை. அவளுக்கு இதில் விருப்பமே இல்லையோ என்று நினைக்க அந்த நாளும் வந்தது.
சென்னையில் ஒரு நெருங்கிய உறவினரின் திருமணமென்று இவன் அன்னையும் அப்பாவும் செல்வதாக இருக்க இறுதிநேரத்தில் அவன் அப்பாவிற்கு சில வேலையின் காரணமாய்ச் செல்ல முடியாத சூழல் வர அன்னைக்கு துணையாக இவன் சென்றான்.
அந்த திருமணத்தில் தான் மீண்டும் ரேஷாவைப் பார்த்தான். அவனின் எண்ணம் போலவே அவன் அன்னைக்கும் அவளைப் பிடிக்க இருகுடும்பம் சொந்தம் என்பதால் திரும்ப ஒரிசா வந்து அவளின் வீட்டில் பேசினார்கள். அதற்குள் இந்தப் பயணம் வேறு முடிவாகிவிட துஷி கிளம்ப அவனோடே யாழும் வந்துவிட்டாள்.
இடையில் ஒருமுறை இவன் அந்த சேச்சியைப் பார்க்க அவளின் மூலமாய் ரேஷாவும் தன்னை விரும்பியதையும் கூடவே அந்த கைடின் சொந்தகார பெண் மற்றும் சோனாவால் தான் இவ்வளவு குழப்பம் என்று நினைத்திருக்க இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணகர்த்தாவான 'யாழ்' உடன் தான் மீண்டும் பயணிக்கிறோம் என்று அவனுக்கு இன்னமும் தெரியாது.அதனாலே தான் நேற்று அவளை தரதரவென இழுத்து வந்ததற்கு தன்னை அறைந்தாள் என்றும் போதாக்குறைக்கு இன்று யாழ் ரேஷாவிடம் அவள் தான் அவனை கல்யாணம் செய்யும் பெண் என்றும் சொல்லி எரியும் நெருப்பில் லிட்டர் கணக்கில் பெட்ரோல் ஊற்றிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இப்போது துஷியின் அருகில் அமர்ந்து சரித்திராவின் தாத்தாவிடம் கதை பேசிக்கொண்டிருக்கிறாள்.ஆனால் இதெதுவும் யாழுக்கே தெரியாது.
குளிக்கப் போன ரேஷாவுக்கு மனமே சரியில்லை. மாப்பிள்ளை புகைப்படம் என்று துஷியின் போட்டோவைப் பார்த்ததும் ஆவலாய்ச் சென்றவள் யாழின் வார்த்தையில் நொறுங்கி குளிக்கிறேனென்று பாத்ரூமில் இருக்கிறாள்.
குளித்து வெளியே வந்தவள் முகமே சரியில்லாமல் வந்து சாப்பிட அமர பெனாசிரும் இஸ்மாயிலும் லோகேஷும் அவளைப் பார்க்க அவள் முகமோ ஒரு மாதிரி சோகத்தில் இருந்தது. என்னவென்று லோகேஷ் பெனாசிரைக் கேட்க அங்கே ஜெஸியும் சோகமாவே முகத்தை வைத்துக்கொண்டு இருக்க, பொறுத்துப்பொறுத்துப் பார்த்த பெனாசிர்,"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? நாம என்ன எழவுக்கா போறோம்? ஏன் இப்படி எல்லோரும் மூஞ்சை தூக்கி வெச்சியிருக்கீங்க? பக்கத்துக்கு கம்பார்ட்மெண்ட்ல எல்லாம் ஒரு ஃப்ரண்ட்ஸ் கேங்க் வந்திருக்காங்க போல, பேமிலியோட எவ்வளவு ஜாலியா கலகலன்னு சிரிச்சிட்டு இருக்காங்க தெரியுமா? போங்கடா... உங்களை நம்பி நான் வந்தேன் பாரு... நான் பேசாம அங்கேயே இருந்திருக்கணும்" என்று புலம்பியவளைப் பார்த்து மற்றவர்கள் எல்லோரும் சிரிக்க, "இப்போ என்ன பண்ணனும்? சொல்லு பெனாசிர்?"
"நாமளும் ஜாலியா இருக்கனும்"
"ஓகே இருங்க வரேன்" என்று சென்ற லோகேஷ் கையில் கார்ட்ஸ்ஸோடு வந்தவன், "ரம்மி விளையாடலாமா? வெய்ட் வெவ்ட் எல்லோருக்கும் விளையாடத் தெரியும் தானே?..." என்று இழுக்க நால்வரும் முறைத்தனர். எல்லாம் ஜெகஜால கேடிகள் என்று அதிலே தெரிந்தது. அவனும் ஐவருக்கும் கார்ட்ஸ் போட்டு,"வெய்ட் என்ன பெட்?"
"பெட் எல்லாம் வேணாம். அது சூது. தப்பு..."
"அப்பப்பா நான் அப்படியே உன் சொத்தையெல்லாம் கேட்கவா போறேன்? ஹ்ம்ம் தோற்பவன் எல்லோருக்கும் ஸ்னேக்ஸ் வாங்கித்தந்துட்டே இருக்கனும்... என்ன ஓகேவா?"
"டன்"
ஏனோ இந்த விளையாட்டு ரேஷா, ஜெசி இருவருக்கும் கொஞ்சம் புத்துணர்ச்சி அளித்தது.(பயணங்கள் முடிவதில்லை...)
 
Top