Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 18

Advertisement

praveenraj

Well-known member
Member
விவியன் நித்யா கம்பார்ட்மென்டுக்கு போகும் போது அவனை அழைத்தாள் சித்தாரா,
"என்ன விஷயம்?"
"என் கதை கேட்டிங்க. சொல்லலாம்னு இருந்தா போயிட்டிங்க?"
"ஐயோ சாரி அதுக்குள்ள ஒரு பிரச்சனை..."
"என்ன ஆச்சு?"
அவன் திரும்பி துவாராவைப் பார்த்து, "ஒண்ணுமில்லை"
"ஆமா நீங்க சாப்டீங்களா?"
"இல்லை இனிமேல் தான்"
"பேன்ட்ரிலையா வாங்கறீங்க?"
"என்ன செய்ய?"
"சரி நைட்ல இருந்து நான் ஆர்டர் பண்றேன். ஓகே தானே?"
"இதுல எதுவும் சிரமம்?"
"நோ ப்ரோப்லேம்"
இன்னமும் அவன் ஒரு மாதிரியே இருந்தான்.
"என்ன ஆச்சுப்பா? ஏன் ஒரு மாதிரி டென்ஸ்சாவே இருக்கீங்க?"
சுருக்கமாய் சொன்னான். "அதாவது எங்களுக்குள்ள ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் சோ அவனை அடிச்சிட்டோம்"
"என்ன குழந்தையா நீங்க? இப்படி அடிச்சு விளையாடா?"
"குழந்தைங்க கூட பரவாயில்ல. சமயங்களில் வளர்ந்தவங்க செய்யுறதைப் பார்க்கும் போது தான் செம கோவம் வரும்..."
அவனை இலகுவாக்க அவள் பேசுவதாய் நினைத்து அவனை மேலும் சங்கடப்படுத்தினாள். "சரி உங்க பேமிலி பத்தி சொல்லுங்க. அப்பா அம்மா? அப்புறோம் சிப்லிங்ஸ் யாராவது?"
ஏனோ ஏற்கனவே ஒரு மாதிரி இருந்தவனுக்கு இது மேலும் வருந்தச் செய்ய, "எனக்கு யாருமில்ல" என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு அவன் நித்யா கம்பார்ட்மெண்ட் சென்றுவிட்டான்.
ஏனோ இப்போது வருந்துவது சித்தாராவின் முறையாயிற்று.
........................................................................
அங்கே ஜெசி சாப்பிட்டு கைகழுவச் செல்ல அப்போது சுருக்கமாய் எல்லாமும் சொன்னாள் பெனாசிர்.
லோகேஷுக்கு இப்போது எல்லாம் புரிந்தது, "ஓகே!"
"அப்போ அவங்க கிட்ட சொல்லு நாமும் என்ன ஹெல்ப் வேணுனாலும் செய்யறோம்னு. என்ன ஓகேவா?"
"நாங்கயெல்லாம் செம ஸ்பீட் பாஸ். ஏற்கனவே சொல்லிட்டோம்"
"ஓகே, யாருக்கு நல்லது நடக்குதோ இல்லையோ இந்த ட்ரிப் ஜெசி வாழ்க்கையில மறக்க முடியாததா இருக்கனும். ஓகே?"
"டபிள் ஓகே"
"டேய் லோக்கு சொன்னா தப்பா எடுத்துக்ககூடாது"
"சொல்லு"
"அவங்களும் பாவம்டா. நம்ம கூட தானே வராங்க?"
"எவங்க?"
"அனேஷியா டா"
அவன் கோவமாய் எழ, "சரிடா வேணாம் நாங்க கிளம்பறோம் பை"
..................................................
சரியாக அப்போது அனேஷியாவுக்கு கால் வந்தது,
அவள் எக்ஸ்யூஸ் சொல்லி எழுந்து போக,
"என்னடா என்னை மறந்துட்டியா அதுக்குள்ள?"
"ஐயோ டேட் அப்படியெல்லாம் இல்ல" ஏனோ அவள் குரலில் ஒரு உற்சாகம், அதை அவர் நோட் செய்ய தவறவும் இல்லை.
"இங்க நல்ல கம்பெனிக்கு சில பேர் கிடைச்சிருக்காங்க, சோ ஜாலி எல்லோரும் அவங்கவங்க கதையும் சொல்ராங்க"
'மகளின் உற்சாகம் நிறைந்த பேச்சைக் கேட்டு எவ்வளவு நாளாகிவிட்டது? எத்தனை எத்தனை துயரம் தான் பார்த்துவிட்டாள்? பின்னே ஜாலியாக சுற்றித் திரிந்தவள் எப்போது அம்மாக்கு கேன்சர் என்று தெரிந்ததோ அப்போதே பாதி உடைந்து விட்டாள். அதும் அவரின் இறுதி நாட்களை அந்த கொடுமைகளை எல்லாம் உடனிருந்து பார்த்து மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள். போதாக்குறைக்கு தன் தாயின் விருப்த்தை வேறு நிறைவேற்ற இப்போது எவ்வளவோ கஷ்ட படுகிறாள்?"
"டேட்? டேட்?"
"ஆம் இருக்கேன் கண்ணம்மா"
"சாப்டாச்சா? மாத்திரையெல்லாம் எடுத்தாச்சா? லட்சுமி அக்கா வந்தாங்களா?"
"வந்தாச்சுடா. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ என்னைப் பற்றி கவலைப் படாத"
"அப்போ நீங்களும் என்னைப் பற்றி கவலைப் படக்கூடாது"
"அதெப்படி?"
"சில்"
"ஓகே. நீ பிளைட்லேயே போயிருக்கலாம்"
"அப்பா என் ஒருத்தி கம்போர்ட் மட்டும் பார்க்கக் கூடாது, என் கூட வர எல்லோருடைய கம்போர்டும் முக்கியம்"
"சரி சரி எதையாவது பேசி வாயை அடைச்சிடு"
"உங்க பொண்ணாச்சே?"
"சரிப்பா டேக் கேர். என்னை நினைத்து நீங்க ஃபீல் பண்ணவேணாம். என்ன ஆனாலும் சரி ஊருக்கு வந்ததும் உங்களுக்கு நல்ல செய்தி தான். சோ டோன்ட் ஒர்ரி"
"உனக்கும் நல்ல செய்தியா இருக்கனும். பார்ப்போம்"
"பை"
அவள் பேசிவிட்டு திரும்ப அங்கே நின்ற விவானைக் கண்டு பயப்பட,
"ஹே சில்" அப்போது தான் கவனிக்கிறாள் அவன் கையில் இளவேனில் இருக்க, "பாப்பா ரெஸ்ட் ரூம் போகணும்னு சொன்னா அது தான்"
"ஓ கொடுங்க"
"இல்ல நோ ப்ரோப்லேம். நான் பார்த்துக்கறேன்"
"அட கொடுங்க மிஸ்டர்"
விவான் வெளியே நின்றுக்கொண்டிருந்தான்,
"கதை மிஸ் ஆகிடும் வரலையா நீங்க?"
"நீங்க இங்க வந்துடீங்கனு ஸ்டாப் பண்ணி இருக்காங்க. வாங்க போலாம்"
"சோ ஸ்வீட் வரேன்"
அப்போது அனேஷியாவுக்கு மீண்டும் கால் வர,
"ரொம்ப பிசி போல?"
"ட்ரைன்ல இருந்து தான் வருது, சொல்லுங்க இஸ்மாயில்"
"மேம் அது..."
"என்ன ஆச்சு?"
"சாரி மேம், லோகேஷ் பேசுனத்துக்கு..."அவர் இழுக்க,
"அட நோ ப்ரோப்லம் இஸ்மாயில். நீங்க சாப்டீங்க இல்ல?"
"ஆச்சு மேம்"
"ஓகே டேக் கேர்"
இஸ்மாயில் வைக்க சுற்றி பெண்கள் மூவரும் இருந்தனர்,
"பாவம் டா அவங்க. இந்த லோகேஷ் பையனால் வந்தது..."
"வா பார்த்துப்போம்"
.............................
"அப்போ தான் என் டீம்ல வந்து சேர்ந்தா மௌனி, அந்த நேரம் பார்த்து எங்க கம்பெனிக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சது. அது எங்க டீமுக்கு தான் வந்தது "
"ஓ அப்போ உடனே பார்த்து பேசி பழகி ரொமான்ஸ் தான் "- ஜிட்டு.
எல்லோரும் முறைக்க, "நீயேன்டா நடுவுல நடுவுல கேப் விடுற? அதுனால தான் நான் எதையாவது போட்டு பில் பண்ணிடுறேன். நீ பேசாம கேப் விடாம சொல்லு"
"அப்போ ரெண்டாவது நாள் என் டீம்ல சேர்ந்து அன்னைக்கு பயங்கர ஒர்க். காலையிலே ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணியிருந்தேன். ஆனா இவ அன்னைக்கு லேட்டா வந்தா"
"ஐயோ நீயொரு மிஸ்டர் பர்பெக்ட் ஆச்சே?"- மிரு
"ஆமா அதும் வேற அன்னிக்கு கொஞ்சம் மூட் ஆப்ல வேற இருந்தேனா சோ பயங்கரமா கத்திவிட்டுட்டேன்."

ஏனோ அவன் தயங்கியே மௌனியைப் பார்க்க அவளோ சிரித்துக்கொண்டிருந்தாள். ஏனோ ஹேமாவிற்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"அப்போ என் கொலீக் எல்லோரும் குறிப்பா என் பெஸ்ட் ஃப்ரண்ட் அவினாஷ் தான் இவளுக்கு சப்போர்ட் பண்ண எனக்கு இன்னும் கோவம் வந்தது. அவனையும் சேர்த்து கத்திவிட்டுடேன்"
"அம்மா வேற அன்னைக்கு நேரம் காலம் தெரியாம கால் பண்ண நான் இருந்த கோவத்தையெல்லாம் அவங்க கிட்ட காட்டிட்டு போன் வெச்சிட்டு வெளிய போயிட்டேன்"
"நீ மாறவே மாட்டியா டா எருமை" என்று ஹேமாவின் மண்டையில் கொட்டினான் செபா.
மௌனி இதித்ரி இருவரும் புரியாமல் பார்க்க, "இந்த நாய் காலேஜிலும் இப்படி தான் பண்ணும். ஏதாவது கோவம் வந்தா அம்மாவை கண்டபடி பேசி விட்டுடுவான்"
இப்போது ஏனோ மௌனியின் முகம் உண்மையில் கடுமையாக, "ஹே ஹே அழுக்கு மூட்டை உடனே முறைக்காத? இப்போலாம் அப்படி பண்றதே இல்லை. நிஜமா டி"
அவள் இன்னமும் முறைக்க, இப்போது திரும்பி செபாவை முறைத்தான்.
"வெயிட் வெயிட் அதென்ன அழுக்கு மூட்டை?"- நித்யா
இப்போது உண்மையில் மௌனி முறைக்க,
"அதுவா இவ சரியான சோம்பேறி.லீவ்ல குளிக்கவே மாட்டா "
அவளோ அதற்குள் அருகிலிருந்த பில்லோவை எடுத்து அவனை அடிக்க, அதற்குள் அங்கிருந்தவர்கள் எல்லோரும், "என்ன டா நடக்குது இங்க? உங்க காதல் லீலைகள் எல்லாம் இங்க காட்டாதீங்க" என்றதும்
இருவரும் சிரிக்க,
"அப்புறோம் அன்னைக்கு அம்மா திரும்ப திரும்ப கால் பண்ணியிருக்காங்க. எல்லோரும் லன்ச் பிரேக் போயிட்டாங்க போல, இவ தான் அங்க இருந்திருக்கா. போன் வேற அடிச்சிட்டே இருகுதேன்னு இவ எடுத்து பேச அம்மாவும் கொஞ்சம் நேரம் யாரு என்னான்னு பேசிட்டு இருக்க நான் அப்போ உள்ள வர"
"அடப்பாவி, சும்மாவே உன் திங்க்ஸ் தொட்டா சாமியாடுவ இதுல கோவத்துல இருக்கும் போது?"
அவன் ஏனோ தலையைக் கவிழ்க்க, எல்லோருக்கும் புரிந்தது அன்று என்ன நடந்திருக்கும் என்று...
"யாரைக் கேட்டு என் போன் அட்டென்ட் பண்ண?"
"இல்ல சார் கால் வந்துட்டே இருந்தது அது தான்"
இருந்த கடுப்பில் அவளை நன்றாக திட்டிவிட்டு அவன் போன் வாங்கிக்கொண்டு சென்றுவிட, அப்போது நிரஞ்சனா வந்து மௌனியைத் தொட, அவளைப் பார்த்து சிரித்தாள் மௌனி.
"ஏன்டி இப்படி பண்ண? சும்மாவே இவரு சாமி ஆடுவாரு. இதுல நீ சலங்கையை வேற கட்டியிருக்க?"
"போன்ல அம்மானு வந்தது நிரு, நமக்கெல்லாம் அப்படி ஒரு கால் எப்பயுமே வராதுல. ஏதோ ஞாபகம் அட்டண்ட் பண்ணிட்டேன்"
நிருவும் ஏனோ மௌனியின் பேச்சில் அமைதியானாள். நிருவும் மௌனியும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள், என்ன மௌனிக்கு யாருமே இல்லை, நிருக்கு ஒரே ஒரு தூரத்து சித்தப்பா இருந்தும் இல்லாததிற்கு சமம். அவ்வளவு தான் வித்தியாசம்.
"ஹே மௌனி கம் ஆன் சில் வா சாப்பிடலாம்"

உண்மையில் இப்போது எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. சும்மா சும்மா நாம் ஏதோ யார் மீதோ இருக்கும் கோவத்தையெல்லாம் நம் பெற்றோர் மீது நிமிடத்தில் காட்டிவிடுகிறோம். ஆனால் அவர்களின் அருமை நமக்கு சரியாக புரிவதில்லை. அதிலும் செபா தன் தந்தை அழைத்தால் உடனே எடுக்க மாட்டான். பெரும்பாலும் எல்லோரும் செய்யும் தவறு தான் இது.
"அப்பறோம் அப்படியே ஒரு ரெண்டு மாசம் போச்சு. ஆனா எங்களுக்குள்ள ஒரு பரஸ்பரம் நட்பு கூட வரவில்லை "
"அடப்பாவி ஏன்டா?" - விவா
"என்னமோ தெரியில மச்சான். ஒரு மாதிரியே இருந்தது. கொஞ்சம் வேலை. எனக்கு வேற இவளைப் பற்றி எதுவும் தெரியாதா, போதாக்குறைக்கு இவ கொஞ்சம் ஜோவியல் வேறயா நான் சீரியஸா எதாவது பேசிட்டு இருக்கும் போது சட்டுனு குறுக்க பூந்து எதாவது கவுன்ட்டர் கொடுத்துவிடுவா. அது எனக்கு இன்னமும் இவ மேல கோவத்தைக் கூட்டிடும்..."

..........................................................................
அங்கே அனேஷியாவிடம் பேசிவிட்டு பெனாசிர், ஜெசி, ரேஷா, இஸ்மாயில் நால்வரும் என்ன செய்வதென்று புரியாமல் லோகேஷைப் பார்க்க,
அவனோ எதுவும் நடக்காததுப் போல காதில் ஹெட் போன் எடுத்து மாட்டிக்கொண்டு இருக்க,
"டேய் லோக்கு கொஞ்சம் இருடா. டேய் டேய்..."
"என்னடா இவனோட ரோதனையா போச்சு?" ஜெசி வேறு இன்னமும் செபாவின் நினைவுகளில் இருந்து வெளியே வரவில்லை...
அப்போது அவர்கள் கம்பார்ட்மெண்டில் புதியதாக ஒரு ஜோடி வர, ஏனோ அவர்கள் இருவரும் காதலோடு சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஒரு வித இயலாமை வலி எல்லாமும் அவளை ஆட்கொண்டது.
அந்த நாள் நினைவுகளுக்குச் சென்றாள்,
அன்று தான் வீட்டில் இவளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளதாக தெரியப்படுத்த பெரியதாக ஒன்றும் விருப்பம் காட்டாமல் இருந்தாள் ஜெசி. இவளின் தாய் தான் இவளுக்கு மாமியார் ஆச்சே? (பேசிக்கல்லி ஜெசி தன் தந்தையின் அதீத செல்லத்திற்கு ஆளானவள். எல்லாமும் அவள் விருப்பப்படி தான் நடக்கும். அவளின் தந்தையும் எப்போதும் இவள் விருப்பத்திற்கு தான் நடப்பார் )
"மாப்பிள்ளையின் போட்டோவை பாரு , நல்லா இருக்காரு. அவங்க அப்பா ரொம்ப பிரபலமான அக்கௌன்டன்ட்" என்றார். போதாக்குறைக்கு இவளும் கொஞ்சம் பிடிவாதம்.சோ முதலில் இப்போது கல்யாணத்தில் விருப்பமில்லை என்று இவள் மூஞ்சில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு ஆபிஸ் சென்றுவிட்டாள்.
இங்கே அவளின் தாய் தான் அவளை கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தார். "சொன்னப் பேச்சைக் கேட்கறதே இல்லை. இப்படி இருந்தா இவ எப்படி கல்யாணம் பண்ணி செட்டில் ஆவா?" என்று கொஞ்சம் அவளின் தந்தையிடம் முறையிட, அவரும் தன் பெண்ணிடம் பேசலாம் என்று நினைத்து வெளியேறினார்.
அன்று வேறு ஆபிசில் ஏதோ கடுப்பு. அதை அவள் தன் தந்தையிடம் காட்ட, அதற்குள் செபாவின் வீட்டில் வேறு குட்டையைக் குழப்ப, ஜெசியின் தந்தை நேராக செபாவின் தந்தையை அழைத்து இருவரும் கொஞ்சம் தனியே மீட் பண்ணி பேசினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொல்ல , முதலில் இதில் செபாவின் தந்தைக்கு விருப்பம் இல்லை என்றாலும் சரி அவர்கள் பேசட்டும் என்று நினைத்து செபாவை அழைத்து, "டேய் பொண்ணு உன்கிட்ட ஏதோ பேசணுமாம். சோ போய் பேசிட்டு வந்திடு" என்று கட்டளையாக சொல்லிவிட்டு வைக்க, ஏற்கனவே தன் சம்மதம் பற்றி எதுவும் கேட்காமல் நடக்கும் இந்த திருமண ஏற்பாட்டை நினைத்து அவன் கொதித்துக்கொண்டிருக்க, போதாக்குறைக்கு எப்போதும் தன் சம்மந்த பட்ட ஒவ்வொரு முடிவுகளையும் தன் தந்தையே எடுக்கிறாரே, ஏன் தன்னால் மற்றவர்கள் போல் குறிப்பாக அவனுக்கு எப்போதும் விவானின் தந்தையும் ஹேமாவின் தந்தையும் அவர்கள் பிள்ளையோடு பேசும் பழகும் விதம் பார்த்து அதுபோல் தன் தந்தை தன்னையும் ஒரு ஃப்ரண்டாக நடத்த மாட்டாரா என்று கடுப்பில் காத்திருத்தவனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏனோ அவனுக்கு கழுத்தை பிடிப்பதைப் போலவும் கூடவே தன் சுயம் கொஞ்ச கொஞ்சமாய் நசுக்கப்படுவதையும் நினைத்து கொதித்துக்கொண்டிருந்தான்.
அப்போது தான் சரியாக தவறாக நேரத்தில் அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. அது ஜெசியிடமிருந்து தான்,
"நான் ஜெசிந்தா பேசுறேன். நாம ஈவினிங் ....இடத்துல மீட் பண்ணலாம், ஷார்ப்பா 5ஓ க்ளாக் வந்துடுங்க. எனக்கு வேலையிருக்கு" என்று அவள் சொல்ல (பாவம் அவளோ தன் தாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன் தந்தை கொடுத்த ஐடியாவை , அதாவது "போய் பார்த்து பேசி பாருடா அப்புறோம் முடிவு பண்ணிக்கலாம்" என்று சொல்லி அனுப்ப, கொஞ்ச ஆபிஸ் டென்ஷன், வேலை எல்லாம் அவளை கொஞ்சம் கடுமையாக அதும் சற்று அதிகார தொனியில் பேசவைத்தது. பாவம் அதனின் பின் விளைவுகளை எதிர்பாராமல் அவளும் அப்படியே பேசினாள்)
ஏற்கனவே தன்னால் ஒரு முடிவைக்கூட சுதந்திரமாய் எடுக்க முடியாமல் தவிக்கும் செபாஸ்டின் எப்படியாவது இந்த திருமணம் என்னும் போர்சன் மட்டும் தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று துடித்தான். எப்படியோ பாடுபட்டு கேரீரை தன் விருப்பம் போல் (செபாஸ்டின் ஒரு சாப்ட் வேர் கம்பெனியில் பணிபுரிகிறான்) ஐடி டூட் ஆக இருந்தால் நிம்மதியாக தன் வாழ்வை வாழலாம் என்று நினைத்து அதை தேர்ந்தெடுத்து இப்போதைக்கு கல்யாணம் என்னும் கமிட்மென்டில் சிக்காமல் கொஞ்சம் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று நினைத்திருக்க இப்படி அவன் தந்தை கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தான்.
.........................................................

அங்கே கோவமாய் விவியைத் துரத்திவிட்டு மீண்டும் அப்படியே படுத்திருந்த துவாராவை பார்க்கவே சரித்திராவிற்கு ஒரு மாதிரி இருந்தது. அப்போது தான் அவளின் மொபைல் குறுந்தகவல் தர எடுத்தவள்,
"இஸ் எவெரிதிங் கோயிங் அஸ் பெற் தி பிளான்?" என்று மறுமுனையில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
அவளோ ஏனோ சுற்றிமுற்றி பார்த்து எதிரே உறங்கும் துவாரவைப் பார்த்து "எஸ்" என்று அனுப்பினாள்.
அவள் எண்ணமெல்லாம் எங்கெங்கோ சென்றது.
வாழ்க்கையில் அவளும் நிறைய நிராகரிப்புகள் அவமானங்கள் எல்லாமும் பார்த்தவள் தான். சொல்லப்போனால் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். என்ன செய்ய சிலரின் தலைவிதி அப்படி என்று வருந்த அப்போது தான் அவள் தாத்தா இரும்ப, எழுந்து அவரைப் பார்த்து அவருக்கு பருக தண்ணீர் தந்தாள்.
தனக்கு எதிரே துவாரவிற்கு வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. அவனோ இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருக்க, ஒன்றும் புரியாமல் அவனைப் பற்றிய யோசனையில் விழித்தாள் சரித்திரா.
..........................................
"அன்னைக்கு ஒரு நாள் அம்மா அப்பா தங்கை எல்லோரும் என்னைப் பார்க்க ஊருக்கு வந்திருந்தாங்க. முக்கியமான மீட்டிங் வேற அன்னைக்கு இருந்தது. சரினு நான் அவினாஷை அனுப்பி அவங்களை பிக் அப் பண்ண சொன்னேன். அவனும் போய் அவங்களை கூட்டிட்டு வீட்டுல விட்டுட்டான். அவினாஷ் எனக்கு ரொம்ப க்ளோஸ். அவங்க அம்மாவும் என் அம்மாவும் ஃப்ரண்ட்ஸ். நானும் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்த சின்ன சின்ன ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு நைட் கிளம்பிட்டேன்"
"அந்த வாரம் வீக் எண்ட் வந்தது. ஹரிணி பத்திதான் உங்களுக்கு தெரியுமே? (ஹரிணி ஹேமாவின் தங்கை) லீவ் விட்டா போதும் அன்னைக்கு புல்லா ஊரு சுத்தணும். அப்படி பட்டவ? சரினு பெங்களூருரைச் சுத்திப் பார்க்க நாங்க எல்லோரும் அவினாஷ் உட்பட மூவி போயிட்டு அப்படியே அங்க இருந்த ஷாப்பிங் மாலுக்கு போனோம்"
"அப்போ பார்த்து எஸ்கலேட்டர்ல (escalator - நகரும் படிக்கட்டு) நான் அப்பா ஹரிணி முன்ன ஏற அம்மா பின்னாடி வந்தாங்க பாரு அவங்க புடவை அதுல மாட்டிக்கிச்சு"
"ஐயோ?" - இதித்ரி
"அது மேல போக போக அம்மா கால் மடக்கி கீழ விழுந்ததுக்குப் பிறகு தான் நாங்க திரும்பி பார்த்தோம். அந்த டென்ஷனுல என்ன பண்றதுனே புரியில. நாங்க வேற மேல ஏறிட்டு இருக்கோம். நல்ல வேளை பின்னாடியே இவ (மௌனியைச் சுட்டி) வந்திருக்கா. அம்மாவை கை பிடிச்சிட்டு துரிதமா எஸ்கலேட்டரை நிறுத்தி அவங்கள பிடிச்சிகிட்டா. நாங்க எல்லோரும் கீழ வர அம்மா தான் ரொம்பவும் பயந்துட்டாங்க. அவங்க சேரீ வேற கால்ல மாட்டி கிழிஞ்சிடுச்சி. கூட்டமும் கூடிடுச்சி. அம்மாக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிடுச்சு"
"அப்புறோம் அவங்களை தனியா கூட்டிட்டுப் போய் உட்கார வெச்சு ஆசுவாசம் செஞ்சா உடனே என்னை கண்டபடி திட்ட ஆரமிச்சுடுச்சி ஒரு பிசாசு" என்று மௌனியைப் பார்த்து அவன் சிரிக்க, அவளோ அவனின் பிசாசில் கடுப்பாகி அவன் காலை கிள்ளிக்கொண்டிருந்தாள்.
"ஆஹ்ஹா வலிக்குதுடி"
"எப்பா உங்க ரொமென்ஸை கொஞ்சம் நிறுத்திட்டு கதையைச் சொல்லுங்கடா"- ஜிட்டு
"அவ்வளவு ஆர்வமாவா இருக்கு கதை?" - ஹேமா,
"உங்க ரொமென்ஸ் பார்க்கும் போது எனக்கு வெறுப்பாகுது. எனக்கும் தான் வந்து வாய்ச்சி இருக்காளே?" என்று அவன் இதித்ரியைப் பார்க்க,
"அப்போ நான் ரொமான்ஸ் பண்றதில்ல அப்படித்தானே?" - இதித்ரி
"அதை நான் வேற சொல்லனுமா?"
"அப்போ இனிமேல் தனியா இருக்கும் போது வந்து ஸ்வீட்டி பேபினு வா அப்போ இருக்கு உனக்கு" என்று முறைத்து, "நீங்க கதையை கண்டினு பண்ணுங்க" என்றாள்.
"அவ்வளவு ஆகிடுச்சு இல்ல? சரி அப்போ கணக்கை முடிச்சிக்கலாம்" - ஜிட்டு
"என்ன கணக்கு?"
"நேத்து நீ கொடுத்த கிஸ்ஸை நான் திரும்ப உன்கிட்டவே கொடுத்திடுறேன். அதே போல நான் கொடுத்த கிஸ் எல்லாம் நீ திரும்ப கொடுத்திடனும்" என்று 'டீல் ' பேசினான் அந்த ஃப்ராடு,
அவன் சீரியஸாக இப்படி பேச ஏனோ இதித்ரிகே ஒரு மாதிரி வெட்கம் வந்து எம்பேரெஸ் எல்லாம் வர அவள் முகத்தை மூடவும், எல்லோரும் இப்போது இதித்ரியை வாரினார்கள்.
"அப்போ அடுத்த கதை உங்களுது தான். 'எல்லா' உண்மைகளும் வெளிய வரணும்" அந்த எல்லாவில் ஒரு அழுத்தம் தந்தாள் மிரு.
"ஹே மிரு கொஞ்சமாச்சும் டீசெண்டா பேசுடி. சுத்த நான்-சென்ஸ் மாதிரி பேசிட்டு" - ஜிட்டு,
"டேய் சோடாபுட்டி. குள்ள கத்திரிக்கா. காப்புடி உலக்கை"
எல்லோரும் சிரிக்க, "ஆமா அதென்ன காப்புடி உலக்கை?" என்று மௌனி சீரியஸாக டவுட் கேட்க,
"ரொம்ப முக்கியமான சந்தேகம் இது? என்னைய கலாய்க்கறதுனா மட்டும் ஊரே திரண்டுடுங்க" - ஜிட்டு
எல்லோரும் சிரிக்க, "அது கால் பிடி உலக்கை இருக்கும் தெரியுமா? நம்ம உள்ளங்கை சைஸ் இல்ல கொஞ்சம் நீட்டமா. அது மாதிரிதான் இருக்கான் இந்த நாய். குள்ளமா கட்டடையா" என்று விளக்கம் கொடுத்தாள் மிரு.
"ஏய் சொல்லிட்டாப்பா அமிதாப் பச்சன் பேத்தி. இவ அப்படியே ஆறடி இருக்கா பாரு?"
"உன்னைவிட நான் ஜாஸ்தி தான். பார்க்கலாமா? மெஸர் பண்ணலாம் எழு எழுந்து நில்லுடா சோடா புட்டி" என்று சண்டைக்கு இழுத்தாள் மிரு.
"ஹேய் உனக்கு வாய் நீளம்டி. உன்னையெல்லாம் எப்படி ஒருத்தன் கட்டிக்கிட்டு மாரடிக்க போறானோ?" என்று அவன் சொல்லி தியாவைப் பார்த்தான்.
மிருவும் ஏனோ தியாவைப் பார்த்தாள்.
"எப்பா சீக்கிரம் சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா. கதை பாதியில வெயிட்டிங்" என்றாள் மௌனி.
"ஓகே மச்சான் நீ கண்டினு"
"எங்க விட்டேன்?" என்றான் ஹேமா,

"ஒரு பிசாசு..." என்று ஜிட்டு சொல்ல, இப்போது மௌனி ஜிட்டுவை முறைத்தாள். "அப்படி தானம்மா இவன் சொன்னான்"
அவனும் சிரித்துக்கொண்டே, "ஆம் ஓர் பிசாசு கண்டபடி திட்ட ஆரமிச்சுட்டா"
"நல்லா ரிவெஞ் எடுத்துட்ட இல்ல மௌனி?" - நித்யா
"ஐயோ அப்படி இல்லக்கா. எனக்கு உண்மையிலே கோவம். அத்தையை மட்டும் (ஹேமாவின் அம்மா) தனியா விட்டுட்டு இவங்க எல்லோரும் ஜாலியா முன்னாடி போயிட்டாங்க. ஒருவேளை நான் இல்லைன்னா?"
"ஓகே ஓகே. சில் சில். நீ சொல்லுடா ஹேமா அப்புறோம்?"
"அப்புறோம் என்ன இவ என்ன திட்ட நான் திட்டுவாங்க, நான் தலைகுனிந்து நிற்க இவ என்ன திட்ட"
"ஹலோ பாஸ் ரெண்டு ஒன்னு தான். என்னமோ நீ பதிலுக்கு அவளைத் திட்டிப் பேசுன மாதிரி சொல்ற? மேய்ச்சது எருமை இதுல என்ன பெருமை?" என்று ஜிட்டு சொன்னதும் எல்லோரும் சிரித்தனர்.
"நேரம் டா..." ஹேமா மீண்டும் பல்ப் வாங்க எல்லோரும் சிரிக்க அவனுக்கு ஜிட்டு மீது பயங்கர கோவம் வந்தது.
"இவ திட்டும் போது நான் அமைதியா இருக்கிறதைப் பார்த்து என் வீட்டுல இருக்கவங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏன் அவினாஷுக்கும் கூட தான், ஆமா நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர். சட்டுனு கோவம் வரும். ப்ளஸ் என்னை யாருமே கேள்வி கேட்கக் கூடாது. எனக்கு அது பிடிக்காது. ஆனா இவ அன்னைக்கு என்னைய வெளுத்து வாங்க நான் அமைதியா நின்றதைப் பார்த்து என் அம்மாவும் அப்பாவும் ஹரிணியும் வாயடைச்சு நின்னாங்க"
"அப்புறோம் அவளே கொஞ்சம் ரிலேக்ஸ் ஆக, என் வீட்டுல இருக்கிறவங்களுக்கு அவளை அப்போவே ரொம்பவும் பிடிச்சிடுச்சி"
"அப்போ உனக்கு மௌனியைப் பிடிக்கலையா?
அவன் மௌனியைத் தயங்கியபடி பார்க்க,
"நீ தாராளமா சொல்லு. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்" என்று அவள் சொல்ல, "எனக்கு அவ மேல இருந்த கோவம் போய் அப்போதான் வெறுப்பு வர ஆரமிச்சது"
"அடப்பாவி? அப்புறோம்?"
"அப்புறோம் அன்னைக்கு என் அம்மா வேற..." (பயணங்கள் முடிவதில்லை)
 
Top