Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-29

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-29

என்ன விநாயகம் சார் ,பேச்சே வரல.. என் பொண்டாட்டிக்கிட்ட மட்டும் பேசுவீங்களா ஸார்ர்ர்...

சிவாவை எரிச்சலாக பார்த்துவிட்டு... விநாயகம் ஆரம்பித்தார், சக்தி மேடம் உங்கப்பா இருக்கிற வரை அவர்தான் சேர்மேனா இருந்தாரு.. இப்போ நீயோ சின்ன பொண்ணு எப்படி இந்த நிறுவணத்தை நடத்துவ... அனுபவமே இல்லாத உன்னை சேர்மேன் ஆக்க எங்களுக்கு இஷ்டமில்லை... அதான் எல்லோரும் சார்பாக நானே இதை பேசுறேன்... மற்றவங்களுக்கும் உங்க கருத்தை தெரிவிக்கலாம் என்று விநாயகம் சொல்லி முடித்தார்...

ஆமாம் சக்தி மேடம் ,எனக்கு அவர் சொல்லுறது கரெக்ட் தான் படுது என்று ரோஸி சொல்ல...

சக்தி அவளை பார்த்து, தங்கள் பெற்றோருக்கு அப்பறம் அவங்க வாரிசு தான் பொறுப்பு ஏற்றுப்பாங்க இதுதான் எல்லா நிறுவனத்திலும் நடக்கும், எந்த தொழில் எடுத்தாலும்... இப்போ நீங்களே உங்கப்பாவுடைய ஷேர்ஸ் வாங்கிட்டு தானே வந்திங்க... ஹேம் ஐ கரேக்ட்...

ரோஸி அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை... சக்தியை ஆ என்று பார்த்தாள்...

மனோ, ஷேர்ஸ் வாங்குறதும், கல்லூரியை நிர்வாகிப்பது ஒண்ணு கிடையாது.

இருக்கலாம் சார் , எங்கப்பா இந்த கல்லூரி ஆரம்பிக்க சொல்ல சின்ன வயதுதானே அப்ப எப்படி இந்த ஷேர்சை வாங்கினீங்க...நம்பிக்கையில் தானே.. அதே போல் நானும் எங்க அப்பா பெயரை காப்பாற்றுவேன் நம்புங்க...

சக்தி பேசுவதை மற்றவர்கள் ஒத்துப்போக..ஆனா விநாயகம் எப்படியாவது இவளை சேர்மென் பதவி வகிக்க கூடாது என்ற முடிவில் இருந்தார்...

சக்தி இது இருவது வருஷமா நடக்கிற காலேஜ் , அதை அசால்ட்டா எப்படி உன்கிட்ட தரமுடியும்.. எனக்கு நம்பிக்கையில்ல விநாயகம் மறுபடியும் அதிலே நிற்க...

ஓகே, நீங்க உங்க முடிவில இருங்க... இங்க என்னுடைய ஷேர்ஸ் தான் அதிகம், அப்பறம் என் கணவரோடதோம் சேர்த்தா அறுபது பர்ஸன்ட் ஷேர்ஸ் இருக்கு... யாரெல்லாம் என்னமீது நம்பிக்கை இருந்தா இங்க தொடருங்க இல்லை உங்க ஷேர்சை வேற யாருக்காகவது விற்றுவிடுங்க... அது உங்க விருப்பம்.

மற்றவர்கள் ஏதும் பேசவில்லை, சிவா பேச ஆரம்பித்தான் எனக்கு சக்தி மேடம் மேல நம்பிக்கையிருக்கு நான் அக்செப்ட் பண்ணுறேன் முதல் அவன் சொல்ல ஒவ்வொருத்தரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் விநாயகம் முகமோ எள்ளு கொள்ளும் வெடித்தது.

சக்தி சேர்மேன் பதவியை ஏற்றுக் கொள்ள எல்லோரும் கை தட்டினார்கள்...தேங்க்யூ புன்னகை அரும்ப சிவாவை பார்த்தாள்... நிர்வாகத்தை பற்றி சிலர் பேச, அவர்களை பார்த்துக் கொண்டே சக்தி சிவாவின் காலை தன் காலால் சீன்டினாள்.. அவளை முறைத்துவிட்டு அடங்க மாட்டியாடி அமைதியாரு சக்தி என்று பல்லை கடித்து கூறினான்...

ஒவ்வொருவாராக விடைபெற கடைசியில் விநாயகம்.. என்ன சிவா நினைச்சதை சாதிச்சிட்ட ரொம்ப சந்தோஷம் படாத தம்பி நீ இந்த சின்ன பொண்ணை வைத்து எப்படி காலேஜ் நடத்திறே பார்க்கிறேன்... இன்னியிலிருந்து உனக்கு தூக்கமில்ல, எண்ணி மூனு மாசத்தில இந்த காலேஜை நான் வாங்கல என் பெயரு விநாயகம் இல்லை...

குலைக்கிற நாயை கண்டு நான் பயப்பட மாட்டேன் விநாயகம் ஸாரே...பேசிட்டிங்களா ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு சக்தி வா கிளம்பலாம். அவளை வீட்டில் விட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றான்...

தயாவிடம் நடந்ததை சக்தி சொல்ல, நிசமாவா சக்தி நீயா இப்படி பேசினேன்... ஆமாம் மாமா, சிவாதான் சொல்லி கொடுத்தான். உடனே தேவி ஏய் புருஷனை மரியாதையாக பேசு சக்தி, காலேஜை நடத்தபோற பேச்சு பாரு திட்ட ஆரம்பித்தாள்.

அய்யோ நீ மாமாவை வாடா,போடா சொன்னதில்லை.. ஒவரா பேசாதடி என்ன மாமா..

சக்தி வம்புக்கு இழுக்க, சொல்லியிருக்கா சக்தி எல்லார் முன்னாடியில்ல ரூமுல தனியாயிருக்கும் போது, தன் மனைவிக்கு ஆப்பிள் துண்டை ஊட்டிக் கொண்டே சொன்னான் தயா...

மாமா இவ்வளவு செல்லம் கொடுக்காதீங்க... தேவி சிரிக்க ஆரம்பிக்க ரொம்ப நாள் கழித்து வீட்டில் சிரித்து பேசினார்கள்... தேவிக்கு ஐந்தாவது மாசம் வயிரு லைட்டா மேடிட்டு காட்டியது..

ஆமாம் மாமா ஸ்கூல்ல மீட்டிங் போடனும் சொன்னீங்க.. என்னாச்சு...

அடுத்த வாரம்தான் சக்தி போடனும், சில மாற்றங்கள் செய்யனும் தேவி சொல்லியிருக்கா.. அதைப்பற்றி பேசனும்.

சக்தி போன் அலற, அதை அட்டன் செய்து கிச்சனுக்கு சென்றாள், சொல்லு சிவா... எங்கயிருக்க சக்தி..

ம்ம்ம் அம்மா வீட்டுல மாமா கூட பேசிட்டுயிருந்தேன்...

சரி உனக்கு எந்த பூ புடிக்கும்..ஏன் கேட்டு என்ன பண்ண போற..

அதுவா பூக்கடை வைக்கலாம் யோசனை, என்ன கேட்டேனோ அதற்கு பதில் சொல்லு...

எல்லாமே புடிக்கும்... முக்கியமா ஜாதிமல்லி சிவா..

சரி சாய்ந்தரம் வீடு வந்து சேரு, உடனே போனை கட் செய்தான்...

வர வர லூஸா ஆயிட்டான் என்ன பூ புடிக்கும் ஒரு போன்... காலையில் சீக்கிரம் எழுந்தது டையர்டா இருக்கு... கொஞ்சம் தூங்கி எழுந்திடலாம்.. மணி 7.00 வரை தூங்கினாள்...கோதை வந்து சக்தியை தட்டி எழுப்ப.. ஏன்டி மாப்பிள்ளை வீட்டு வரச்சொன்னாராம், நீ போனை எடுக்க மாட்டிறா சொல்லுறாரு... சீக்கீரம் வீட்டுக்கு கிளம்பு.. அப்புறம் எங்கோ பார்ட்டிக்கு போறீங்களாம் புடவை கட்டிட்டு வரச்சொன்னார்..

அம்மா இந்த புடவை காலையில் கட்டும்போதே ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு இவன் வேற... சிவாவுக்கு போன் போட்டால், இரண்டு ரிங்கில் போனை எடுத்தான்...

ஏய் மணி என்னடி ஆகுது, சீக்கீரம் கிளம்பி வா, அம்மாவ பார்க்க போகனும்..வரேன் சிவா, ஏதோ பார்ட்டின்னு சொன்னாங்க அம்மா,இந்த சேலை கட்டிட்டுதான் வரனும்மா காலையில கட்டுனதே கசகசன்னு இருக்கு சிவா எஎன்று சினுங்க..

அதெல்லாம் எனக்கு தெரியாது..நான் பத்து நிமிஷத்தில ரெடியாகி வந்துருவேன் , சீக்கீரம் கிளம்பு...

ம்ம் போனை வை...

அடுத்த பத்தாவது நிமிடத்தில் காரில் வந்து இறங்கினான்.. தயா அவனிடம் ஸ்கூல் பற்றி பேச மேலேருந்து பிங் நிற வொர்க் சாரியில் தேவதை போல் இறங்கி வந்தாள் சக்தி.. சிவாவிடம் வர. தன் அத்தை கோதையை அழைத்தான்.. என்ன சிவா கூப்பிட்டியா என்று கோதை கேட்க..அவர்களின் காலில் சிவாவும், சக்தியும் விழுந்தார்கள்..

என்னப்பா இது சிவா... என்று அச்சமூட்ட, இல்ல அத்தை இன்னிக்கு சக்தி வாழ்க்கையில பெரிய திருப்பம், காலையிலே ஆசிர்வாதம் வாங்கனும் நினைச்சேன்.. இப்போதான் வாழ்க்கைக்குள்ள போறா உங்க ப்ளஸிங் வேணும் என்றான்.. காரில் ஏறினாள்..

சிவா எங்க அண்ணா வீட்டுக்கு போகாம நம்ம வீட்டிக்கு போறே..

ப்ச்.. அங்கே போகலை, நேரா நம்ம வீட்டுக்குதான் செல்லக்குட்டி...

என்னடா ஒரு மார்க்கமா இருக்கான்... இப்போதான் சேர்மேன் சொல்லி இழுத்து விட்டிருக்கான்... மேற்க்கொண்டு படிக்க சொல்லுவானோ... இந்த மேனேஜ்மன்ட் படிப்பு சொல்லுவாங்களே அதை படிக்க வைப்பானோ... நம்ப முடியாது உஷார் சக்தி சின்னபிள்ள மாதிரி டியூஷன் சேர்த்துட போறான்...எல்லாம் நல்லாதான் செய்யறான் உடம்பு முழுக்க மூளை ஆனா ரொமன்ஸ் வரமாட்டுதே...காலையில் கிஸ் அடிச்சான் அத்தோட அவ்வளவுதான் கண்டுக்களை... நம்மதான் அந்த தாக்கத்தில இருந்து வெளியே வர முடியில.. இவன் கேஷ்வலா இருக்கான்.

என்ன சக்தி, யோசனை பலமா இருக்கு..

ஒண்ணுமில்ல என்று தலையை ஆட்ட... வீட்டில் காரை நிறுத்திவிட்டு, கதவை திறந்தான்.. எல்லா லைட்டும் அனைத்துவைத்திருக்க...அங்கங்கே கேன்டில் மற்றும் மங்கிய மனதை மயக்கும் சின்ன சின்ன லைட்ஸ் போடப்பட்டிருந்தது, ஹோட்டலில் இருப்பதுபோல்..

தன் கண்களை விரித்து பார்த்து சிவா சூப்பரா இருக்கு வீட்டிலே டின்னரா..

ம்ம் என்று டெபிளில் மேலிருந்து ஜாதிமல்லியை எடுத்து அவள் தலையில் வைத்தான்..

டெபிளில் இருவரும் அமர்ந்தார்கள், என்ன சிவா விஷேசம், சிக்கன் பிரியாணி , 65, சுக்கா அப்பறம் வெஜ்ஜில பண்ணீர், மஷ்ரூம் கிரேவி வேற ஹா..ஹா.. ஜாமுன் வேற..அப்பறம் எனக்கு பிடித்த ரோஸ்மில்க்..அசத்திற போ. சக்தி .ஒவரா எக்ஸைட் ஆக..

அவளுக்கு ஒவ்வொண்ணாக பறிமாறினான்... ம்ம் சாப்பிடு.

ஆனாலும் சிவா நீ ரொம்ப நல்லவன்பா... எவ்வளவு திட்டினாலும் பொண்டாட்டி வயிற்றை காயை விட்டுதில்ல ஐயம் ஹாப்பி...

சாப்பிட்டுக்கொண்டே சிவா, உனக்கு பர்த் டே வா அதுக்குதான் இந்த டீரிட்...

இல்ல அது கிடையாது என்றான்..

ஒருவேளை உங்கப்பா பிறந்த நாளா... சிவா முறைக்க...ஹாங் கண்டுபிடிச்சிட்டேன்.. இன்று என்னுடைய பெர்பாமன்ஸ் பார்த்து சிவா சிரிக்க...

ஆமாம் ஆமாம் பயங்கறம் போ... அதிர்ந்து போயிட்டேன்... என்பேரு கூட பார்க்காம உட்கார்ந்தீயே..

அய்யோ சிவா, நான் முழுதா பார்க்கல தெரியுமா.. நீ ஏன் சொல்லலை ,ஷேர் ஹோல்டர்ன்னு...

அப்பா இறந்தப்ப, மாமா வந்து இதைப்பற்றி பேசினாரு... அங்க என்னுடைய சிட்டூவேஷன் வேற மாதிரி சக்தி... என்கிட்ட இருந்து பணத்த பறிக்கவே ஆளுங்க இருந்தாங்க.. சித்தப்பாவும் சின்னபையனு உதவி செய்யல.. அப்போ இனியா மாமாதான் கருணாசார பாரு நீ அந்த காலேஜில் படின்னு சொன்னாரு.. அப்பறம் மாமாதான் ரொம்ப உதவி செய்தாரு... இந்த ஊருல வந்து செட்டில் ஆனோம்.. அப்பவே உங்கப்பாவுக்கு என்மேல கண்ணு மாப்பிள்ளையா ஆகிக்கனும்..

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கொஞ்சம் நேரம் கார்டனில் நடந்தார்கள்.. சக்தி எனக்கு தூக்கம் வருது நீ பாலை சூடு பண்ணி எடுத்துட்டு வா.. நான் ரூமுக்கு போறேன்...

சரி சிவா..கிச்சனுக்கு சென்று பாலை எடுத்துக்கொண்டு ரூமிற்கு வந்தாள்..

ரூம் கதவை திறக்க.. தன்னை மறந்து நின்றாள்.. அறை முழுவதும் பூவினால் அலங்கரித்திருக்க, பெட்டில் ரெட் ரோஸில் ஹார்டின் , வாசனை கேன்டில் ஏற்றப்பட்டிருந்தது. எப்போ ரெடி பண்ணா இதெல்லாம்..

அய்யோ நான் வரல சக்தி வெளியே ஒட அவளை அலக்கா இரு கையில் தூக்கிய சிவா, பிரியாணி வாங்கி கொடுத்ததே, உன்னை பிரியாணி போடதான்டி...

-தெறிக்க விடுவான்
 
Nirmala vandhachu ???
 
சிவாவுக்கு ரொமான்ஸ் வரல என்று ஷக்தி சொன்னாள் தானே.ஷக்தி இனி அதை சொல்லட்டும் பார்க்கலாம்.
 
Top