Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-14

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-14

தயா என்னடா இப்படி ஆயிடுச்சு...அந்த சிவா பையன் மானத்த வாங்கலாம் நினைச்சேன்..ஆனா கடைசியில உன் மச்சினிச்சியே கல்யாணம் கட்டிக்கிட்டான்..

விடுடா மனோ..என் மாமனுக்கு ஆசை போல அவனுக்கு பொண்ணை கட்டனும்...என்ன இப்போ அந்த பையன் புத்திசாலி...சொத்துல பாதி பங்கு அவன்கிட்ட போகும்...

கவலை படாதே மச்சான்...

நீ வேறடா..தேவி இப்போ ஸ்கூலுக்கு வரா...நிர்வாகத்தில தலையிடறத்தில ஆனா எல்லாம் கவனிக்கிறா...நான் எங்க போறேன் பார்க்கிறா.. இதுக்குமேல் இங்க வரது கூட சரிவராது மனோ... தேவி எங்கிட்டயிருந்து ஒதுங்கி போற மாதிரி இருக்கு...

என்னடா பொண்டாட்டி பற்றி ஃபீலீங்ஸ் ...

ஆமாம்டா தேவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்...அவள ஏமாத்திறது ரொம்ப ஈஸிடா...ஆனா என்மேல உயிரா இருப்பா...சரி நான் வரேன் மனோ, தயா கிளம்ப...

இவனை கைக்குள் போட்டு, காலேஜ் ஷேர் வாங்கலாம் நினைச்சா... தீடிரென்று மனசு மாறுறான்...இவனை விட்டுதான் பிடிக்கனும்...மனோ மனம் தந்திராமாக யோசிக்க ஆரம்பித்தது...

-----

காலையில் வேலுவுக்கும், நம்ம சக்திக்கு அர்ச்சனை ஆரம்ப ஆனது , அவர்களை நிற்க வைத்து சுமார் ஒரு மணி நேரமாக திட்டிக்கொண்டிருக்கான் சிவா... ஏன்டா அவளுக்கு தான் மூளையில்லைன்னா... நீ யாருக்கு கடன் கொடுத்து வச்சிருக்க...

படிச்சவங்க செய்யற காரியமா...சொல்லு சித்தப்பூ...

அது நீ பாப்பா கூட சந்தோஷமா வாழனும்...

இப்போ மட்டும் சந்தோஷமாதான் இருக்கேன்...ஓ சந்தோஷம்ன்னா எப்படி...பிள்ளைய கொடுக்கனும்மா... படிக்கற பொண்ணு என்ன வயசுடா உன் பாப்பாவுக்கு... சுயமா நிற்க தெரியுதா..வாய் மட்டும் பாரு எட்டு ஊருக்கு போகுது...

ஏய், இன்னொரு முறை இப்படி கிறுக்கு தனமா செஞ்ச வெட்டிடுவேன்டி... விளையாட்டா போச்சில்ல என் வாழ்க்கை. இருவரும் அமைதியாக தலையை குனிந்தப்படி நின்றிருந்தார்கள். அப்போது காலையில் கணக்கு எழுத வரும் வனிதா... நம் சக்தியிடம் தான் பாதி நேரம் வேலை செய்கிறாள்.

வேலு , இவள் வருவதை பார்த்து சிவாவிடம்...மச்சான் வனி வருது என்றான்.. பாருடா அந்த பொண்ணு வீட்டு கஷ்டம் தெரிந்து எவ்வளவு பொறுப்பா இருக்கா...சாவியை கொடுத்து விட்டு வனிதா கிளப்ப...இனிமே கேன்டினுக்கு நீ போகவேணாம் சித்தப்பூ..வேற ஆள் போடுறேன்...அய்யோ இவன் ஏன் இப்படி சொல்லுறான் என்றானது வேலுக்கு...

சக்தி இன்னிக்கு மதியம் சமைச்சி வை நான் வந்து சாப்பிடுவேன்...புரியுதா மல்லி அக்காகிட்ட கத்துக்க , சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றான்...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்... ஏன் பாப்பா அவன் இவ்வளவு கழுவி கழுவி ஊத்தறான் நீ சிரிக்கிற...அய்யோ சித்தப்பூ என்னையா திட்டினா...உன்னையில திட்டினா நினைச்சேன்..

போ பாப்பா, நான் உன்னைய திட்டினான் நினைச்சேன்...இருவரும் கையை தட்டிக்கொள்ள...இப்பதான் நீ சக்தியோட அண்ணாவா மாறியிருக்க..

வேலுவின் முகம் வாட.. என்னாச்சு சித்தப்பூ...

என்னை கேன்டினுக்கு வர வேணாம் சொல்லிட்டானே அதான் கவலையா இருக்கு...

ஓ பிகர பார்க்க முடியில..ஆனா சித்தப்பூ சூப்பர் மார்கெட்ல நிறைய பிகரு வரும் நீ சைட் அடி...

சக்திம்மா அண்ணாவ நீ சீப்பா நினைச்சிட்ட..உன் அண்ணியை பார்க்கதான் கேன்டினே போறேன்...

அண்ணா யாரு அவங்க... சிவாவுக்கு தெரிஞ்சா மானத்த வாங்கிடுவான்...

இப்பதான் அவ முன்னாடி என் மானமே போயிடுச்சி.

என்ன சொல்லுற புரியில..ம்ம் வனிதா தான் உன் அண்ணி....

சந்தோஷத்தில் குதித்தாள் சக்தி...நிஜமாவா..

ஆமாம் சக்தி...சிவா அவங்க வீட்டில பேசி பரிசமே போட்டாச்சு..அவ படிப்பு முடிஞ்சவுடன் கல்யாணம் சொல்லிருக்கான்...

ஏன் அண்ணா.. கல்யாணமாகிட்டு படிக்க வேண்டியதுதானே...அதில்லமா அவ சின்ன பொண்ணு.. சிவா எப்பவுமே சொல்லுவான் பெண்களுக்கு படிப்பு அவசியம்... அப்பதான் தன் கணவனை வழிநடத்த முடியும்...

இந்த வனி சொல்லவே இல்லைண்ணா...யாருக்கும் தெரியாது சக்தி..ஆனா தினமும் கேன்டின் வருவா என்னைய பார்க்கதான்...

நீங்க பேசாதவே கண்ணாலே லவ் பண்ணுவிங்களா...ஆமாம் அவளும் என்னைய பார்ப்பா நானும் பார்ப்பேன் எப்படியிருக்கும் தெரியுமா.. ஒர் பார்வை போது சக்தி அப்படியே நான் மயங்கிடுவேன்...அதெல்லாம் ஒரு சுகம்...

என்னடா இது கண்ணுக்குள் இவ்வளவு ஆராய்ச்சியா...டெஸ்ட் செய்யனும் சிவா வரட்டும்..

மதியம் உணவு தயாரிக்க... யூ டிப் சேனலில் பக்கம் பக்கமாக தேடி புதுசாக செய்யறேன் சிக்கன் கபாப், மீன் பிரை, சாதம் மற்றும் சாம்பார் செய்து வைத்தாள்... அப்பாடா இதை செய்யவே உயிர் போயிடும் போலவே என்னால முடியல சாமி...போய் குளித்துவிட்டு டைனிங் டேபிளில் உணவுகளை வைத்தாள்.

மதியம் சாப்பிட வந்தான் சிவா...கை கால்களை கழுவிட்டு சக்தி என்று அழைத்தான்...

ஆங் ரெடி சிவா... சாப்பிட வா...அக்காகிட்ட கேட்டு சமைச்சியா...

என்ன சிவா நானே மாஸ்டர் செஃப்ல கலந்துக்கலாம் நினைச்சேன் அதுக்குள் நான் வீட்டை விட்டு போயிட்டேன்...இல்லையின்னா வச்சிக்கோ இந்த தமிழகமே சக்தி..சக்தி...சக்தி என்று கூப்பிட்டே இருப்பாங்க...

அவள் மீது அலட்சியமா பார்வை வீசிவிட்டு...அதுயென்ன எப்ப பார்த்தாலும் வீட்டை விட்டு போயிட்டேன் சொல்லிட்டே இருக்க நீ என்ன அவார்டா வாங்க போனே பெருமையா சொல்லுற...

பையனை கூட்டிட்டு ஊர விட்டு ஓடி போயிடுச்சி சக்தி பொண்ணு பேசறாங்க அசிங்காம இல்லடி...

இல்ல..ஏன்னா அவங்களுக்கு எல்லாம் வயிரு எரிச்சல்ல பேசுறாங்க , ஆனா காலேஜில இந்த சிவாவை கடத்தி சாய்ச்ச பெண்சிங்கம் பேசறாங்க...

இந்த சிங்கம் எப்படி சமைச்சிருக்கு பார்க்கலாம்...சக்தி பரிமாற..சாப்பிட ஆரம்பித்தான் சிவா... நான் டேஸ்ட் கூட பார்க்கலை சிவா நீதான் எச்சி சொல்லுவியா அப்படியே சமைச்சேன்..

சிவா சாப்பிட்டு முடித்தவுடன் , எப்படியிருந்தது கேட்டாள் சக்தி...

நாட் பேட்...சரி நான் சாப்பிட போறேன்...சக்தி இந்தா உனக்காக சிக்கன் பிரியாணி வாங்கிவந்தேன்...

ஹய்யா பிரியாணி தேக்ங்ஸ் சிவா...நான் டெஸ்டியா செஞ்சதால..ஓகே ஓகே..

சிவா படியேற..

இந்த சாப்பாட என்ன செய்யறது..சாம்பார் சாதம் யாரு சாப்பிடுவா...இதை நம்ம நாயிக்கு போடலாம் என்று எடுத்து சென்றாள்...

அதை பார்த்து மேலே இருந்து ஒடி வந்தான்...சக்தி என்ன செய்யற..தயவு செய்து நாய்க்கு போடாதே..

ஏன் சிவா...

இது பாரின் நாய் ரெட் ரீவ்வர்...காஸ்டலி ஆசைப்பட்டு மாமா வாங்கி தந்தது.. இதுக்கு எதாவது ஆயிடுச்சின்னா இங்க ஹாஸ்பிட்டலே கிடையாது...

சக்தி அவனை பார்த்து நீ சாப்பிட்டியே...

முதல் முதல்ல சமைக்கிற..எனக்காக கஷ்டப்பட்டு அதான் சாப்பிட்டேன்... ஒண்ணு புட் பாய்சன்தான் ஆகும்...இங்க டாக்டர் இருக்காங்க..

என்னடா இப்படி சொல்லிட்டான்...ச்சே கஷ்டப்பட்டு செஞ்சேன் முகம் தொங்க..

எடுத்தவுடன் வராது சக்தி...முயற்சி செய்யனும்...தப்பு என்ன பார்த்து திருத்தி செய் ,அதுக்காக சமைக்கவே வராது நினைக்காதே...டிரை பண்ணிட்டே இருக்கனும்...

........

ரூமில்.... சிவா லேப்டாப்பில் ஒர்க் செய்ய...

சிவா...சக்தி கூப்பிட

ம்ம்

சிவ்வ்வா...என்று நீட்ட

என்ன..

அது என் கண்ணை பாரேன்..

ஏன் என்னாச்சு...கண்ணு வலிக்குதா அதுக்குதான் செல்லை அதிகமா யூஸ் பண்ணாதே சொல்லுறேன்...

அய்யோ கொஞ்சம் பேசாத என் கண்ணை பாரு சிவா... கண்ணத்தில் கையை வைத்து அவனை நோக்கினாள்...சிவாவும் உற்று அவளை பார்க்க...

ச்சே ஒண்ணுமே தெரியில..புரியில..அலுத்துக்கொள்ள..

என்னடி வேணும் உனக்கு , எனக்கு வேலையிருக்கு...அய்யோ சிவா கொஞ்சம் லேப்டாப்பை அங்க வை...

சிவா மூடிவைத்துவிட்டு...சரி சொல்லு... சிவா நீயே சின்ன பையன் லவல்ல இருக்க எப்படி என் டவுட்டை கிளியர் செய்வ,

புதுசா ஏதாவது கேட்பாளா..ஏற்கனவே லூஸூ மாதிரி மையை தடவினா...தாம்பத்தையம் பற்றி டவுட்டா இருக்குமா...இந்த அளவுக்கு புத்திசாலி இல்ல...மனதில் நினைத்து சமாளிப்போம்...என்ன.

சிவா இந்த கம்பராமயணத்தில அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் சொல்லுறாங்களே... அதுபோல கண்ணுலே பேசுவாங்களாமே சித்தப்பூ சொல்லுறான்..வனிக்கூட கண்ணாலே பேசுறானாம்..சொல்லி கண்ணை சிமிட்டினால்...

அவள் கண் சிமிட்டியதை பார்த்தவுடன் சட்டென்று உணர்வு ஏதோ செய்தது சிவாவுக்கு அடுத்த நிமிடமே சமாளித்தான்...

உன் அண்ணாதானே உன்னை மாதிரியே லூஸூ...கையில நோக்கியா மாதிரி செல் போன் இருக்க சொல்ல, கண்ணுலே பேசுறானாம்...

நான் நிறைய சினிமாவுல பார்த்திருக்கேன்...உனக்கு கண்ணால பேச தெரியில போடா... நீ என்னடா பிஸினஸ் மேன்...

ஏன்னடி, மனுஷன் நாயா பேயா அலையிறான் இந்த பால் பிராடக்ட்ல..டீலர் கிடைக்கல..எப்படி எல்லா இடத்தில ரீச்சா ஆகுறது மண்டையை பிச்சிக்கிட்டு இருக்கேன்...நீ கண்ண பாரு...ம** பாரு சொல்லிட்டு ஒடி போயிடுடி என்கிட்ட அடி வாங்காத...

சிவா..நான் ஐடியா தரவா...

ம்ம் சொல்லு சக்தி ... ஒரு வாரத்துக்கு ஒரு பாக்கெட் பால் வாங்கனா ஒரு பாக்கெட் ஃப்ரீ சொல்லு...பட்டிதொட்டி எல்லாம் ரீச் ஆயிடும்... நம்ம மக்கள் இலவசமா ஏதாவது கொடுத்தா தான் வாங்குவாங்க... நான் கூட அப்படிதான்...

அவள் கண்ணத்தை கிள்ளி குட் ஐடியா சக்தி...ஆனா கட்டுபடி ஆகாதே...இந்த ஐடியாவில ஒரு மாற்றம்...எல்லா இடத்தில ஃப்ரி கொடுக்காம...வாரத்துக்கு சில ஊர்கள்,அடுத்த வாரம் வேற ஏரியா கொடுக்கனும்..அப்பதான் லாஸ் ஆகாது...

அவன் பேசுவது சக்தி காதில் விழவில்லை....அவன் தன்னை புகழ்ந்து பேசி கண்ணத்தை கிள்ளியதை நினைத்து வானில் பறந்தாள்...

----தெறிக்க விடுவான்
 
???
 
இவங்க ரெண்டு பேரும்
சரியான கலாட்டா ஜோடி
 
Top