Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-08

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-08
எல்லோரும் வீட்டின் முற்றத்தில் இருக்க..பயந்து சிவாவின் கையை பிடித்தாள் சக்தி...கண்கள் தன் தகப்பனை,தாயையும் தேடியது..அவளுடைய சித்தப்பா கருணாவிடம் பேசிக்கொண்டிருக்க..மகளை ஒருமுறை பார்த்து கீழே குனிந்து அவர் பேசுவதை கேட்டார்...

இங்கு சிவா தன் அம்மாவிடம் வந்தான்... மாம் நீங்க ஏன் வந்தீங்க...வேலுவை பார்த்து முறைக்க...

காலையிலே கருணா அண்ணா கூப்பிட்டாங்க சிவா அதான்..

மாம் மா என்ன பீட்டர் விடுறான்...சக்தி ரேனுகாவை பார்த்தாள்...வாவ் ஆன்ட்டி நீங்க சிவா அம்மாவா...உங்கள பார்த்தா நடிகை அமலா மாதிரி இருக்கீங்க...

ம்ம்ம் அப்படியா இருக்கேன்..மாம் அவ லூஸூ மாதிரி பேசுவா நீ அமைதியா இரு...அக்கா மாதிரி இருக்கீங்க...சிவா அம்மான்னா நான் சினிமாவுல வர வயசான கிழவியா இல்ல நினைச்சேன்...

என் மருமக எவ்வளவு அழகா இருக்கா பாருடா வேலு...

மெதுவா பேசு உன் பையன் காதுல விழுந்தது நான் செத்தேன்...அந்த பொண்ணு பாவம் சித்தி சிவாகிட்ட மாட்டிக்கிச்சு அவ்வளவுதான்...

போடா... எனக்கு இவதான் மருமக...

ஊர் தலைவர் பேச ஆரம்பிக்க..தயாவும் வந்து சோபாவில் உட்கார்ந்தான்...ஊர்ல நல்லவன் மாதிரி நடிச்சி இவன் பண்ண காரியம் ஒண்ணு தெரியாத எங்க வீட்டு பெண்ணை இழுத்திட்டு போயிருக்கான்....

ஏய் வார்த்தையை அளந்து பேசு யாரும் இழுத்துட்டு போகல...கலவரம் நடந்திச்சி...பஸ் வரல அதான் எங்க அக்காவீட்டுக்கு போனோம்...

கூட இருந்த மனோ , அதெப்படி ஒரு நாள் இரவு முழுக்க பொண்ணு கூட இருப்பானாம்...கேட்டா உதவி செஞ்சானாம்... நல்லா செஞ்சான் உதவிய..

டேய் நீ யாருடா என்ன கேட்கறது... இந்த ஊர் ஆளா இல்லதான... வாயை மூடிட்டு இருந்துக்கோ... மனோ அமைதியாக...

இங்க பாரு மனோ... சிவா தம்பியை எங்களுக்கு நல்லாவே தெரியும்... அந்தப்புள்ள சுத்த தங்கம்...எங்க ஊர் பிரச்சனை நாங்க பேசி முடிவெடுப்போம்...

இடையில் குறுக்கிட்ட வளர்மதி அண்ணா இவன்கிட்ட என்ன பேச்சி.. நம்ம குடும்ப மாணம்தான் போகும் சக்தியை என் பையனுக்கு இரண்டாவதா கல்யாணம் செஞ்சி வை... இந்த பையன் யாரோ...

சிவா.. இந்த பொம்பளையை முறைக்க..என்ன பேசுது இது என்று ஜந்துவை போல் பார்த்தான்...

இங்கு காரசாரமாக விவாதம் நடக்க...சக்தி தூரமாக இருந்த கோதையை பார்த்து சைகையிலே அம்மா பசிக்குது ஜூஸ் எடுத்து வா காண்பிக்க.. அப்பா திட்டுவார்டி என்றாள்.

ப்ளீஸ் என்று கண்ணை சுருக்கி கெஞ்ச..முருகனிடம் ஜூஸ்ஸை கொடுத்து அனுப்பினாள்...
வாக்குவாதம் இங்கு மும்முரமாக சக்தி திரும்பி ஜூஸ்ஸை குடித்தாள்..
என்னடா இது என்று வாயை பிளந்து ரேணுகா பார்க்க...

உன் மருமக வேற டிசைன்...எங்கனா கவலை படுதா பாரு...பாப்பா இதயத்தில இருக்கிற ஒட்டையை அடைச்சிட்டியா...

சித்தப்பூ சத்தமா பேசாத மாட்டிக்குவ..

முருகன் பக்கத்திலிருக்கும் சிவாவிடம் மாப்பிள்ள உங்களுக்கு ஜூஸ் என்க. சக்தியை எரிப்பதுபோல் முறைக்க...

அவரு குடிக்க மாட்டாரு நீ போ முருகா -சக்தி..

ஏய் பிரச்சனையை உன்னால தான்டி...

விடு பால்கார் எவ்வளவு நேரம் பேசுவாங்க... கடைசியில நான் பேசிய பிறகுதான் பஞ்சாய்த்தே முடியும்...

சிவா அவளை உற்று நோக்க...இவளும் அவனை பார்க்க...நீ நினைக்கிறது எதுவும் நடக்காதுடி...

பார்க்கலாம்...

இவர்கள் கிசுகிசுப்பதை பார்த்து... அங்கு கூட்டத்தில் ஒருவன் இவ்வளவு பேரு இருக்க சொல்லவே இரண்டுபேரும் எப்படி லவ் பண்ணுறாங்க பாருங்க கூட்டத்தை நோக்கி சொல்ல...

கருணாவின் பங்காளி...சரிப்பா அப்பறம் ஏன் துணிபையை எடுத்துட்டு போயிருங்கீங்க..
அது எனக்கு தெரியாது.. அவ பஸ் ஸ்டான்டல நின்னா.. நான் கூட்டிட்டு வந்தேன்...எதுக்கு விழுப்புரம் போனா என்று எனக்கு தெரியாது.

பச்சபுள்ள ஒண்ணு தெரியாது சின்ன பொண்ண ஏமாத்தி கட்டிக்கிட்டு சொத்த புடிக்கிடலாம் பார்க்கிறான் தயா சொல்ல...

என்னடா சொன்ன...எகிறிக்கொண்டு போனா சக்தி...அவனை நாள் பேர் அடக்கினர்...
பொண்ண கேளுங்க.. ஒருவர் குரல் கொடுக்க...ஏன் சக்தி போன..அவள் சித்தப்பா.

அது நானும் அவரும் லவ் பண்றோம்... எங்க வீட்டில சம்மதிக்க மாட்டாங்கன்னு ஓடிப்போலாம்...பேசும்போதே

ஏய் பொய் சொல்லாதடி... கொண்ணுடுவேன் பல்லை கடிக்க.

இவரு பயப்படுறாரு சித்தப்பா..நாங்க ஒன்ரை வருஷமாக காதலிக்கிறோம்.. கல்யாணம் செஞ்சி வைங்க...இல்ல இவ பொய் சொல்லுறா...

யாரு நானா அந்த பையில பாருங்க அவர் ஷர்டும் இருக்கும்...

என்ன சட்டையா ...பையை திறந்து உள்ளே இருந்த சட்டையை எடுத்தாள். கேன்டினில் வைத்த சட்டை...

சிவா அதிர்ச்சியாக சக்தி பேசுவதை கேட்டு நிற்க.

ரேனுகாம்மா நீங்க என்ன சொல்லுறீங்க... என் பிள்ளை பற்றி எனக்கு தெரியும்.. அவன் எந்த தப்புமும் செய்ய மாட்டான்... ஆனா இவனுடன் சேர்த்து வச்சி ஊரே பேசிட்டிங்க. நாளை இந்த பொண்ணு இன்னோருத்தன் கூட எப்படி வாழும். எனக்கு கல்யாணத்தில சம்மதம்.. எங்க மாப்பிள்ள வரனும் ...அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்.

கருணாவிடம் அவர் தம்பி.. அண்ணா மாப்பிள்ளை நல்ல பையன் அவன் பேக்கிரவுண்ட் நமக்கு தெரியும். மடக்கி கல்யாணத்த முடி மெதுவாக அவரிடம் கிசுகிசுத்தான்.

மானம் மரியாதை போயிடுச்சு இனிமே என்ன இருக்கு..சிவா தம்பிக்கு சம்மதம்ன்னா... நம்ம ஊர் கோவில்ல கல்யாணத்தை இன்னிக்கே வச்சிடலாம்...

சிவா நேராக கருணாவை பார்த்தான்...அவரின் பார்வை என்ன சொன்னதோ... எனக்கு சம்மதம் என்றான்..

கலெக்டர் வராரு கூட்டத்தில் சலசலக்க...இனியன் கருணா பக்கத்தில் அமர்ந்தான்... கருணா ஸார் நைட் என் வீட்டிலதான் தங்கிருந்தாங்க சக்தி என்றான்..

அங்கே முடிவெடுத்தை சொல்ல... என்ன சிவா உனக்கு சம்மதமா சொல்லு இவங்க ஏதாவது மிரட்டனாங்களா ,சிவாவை பார்க்க.

இல்ல மாமா.. எனக்கு சம்மதம்.. ஆனா பொண்ணு நகை ,நட்டு சீர் எதுவும் எடுத்துட்டு வர கூடாது...

என்ன சொல்லுறீங்க கருணா ஸார் எங்க மச்சான் சொன்னது...எனக்கு பொண் குழந்தைங்க தான் இனியா ,அதுக்கு எதுவும் செய்ய கூடாதென்னா எப்படி...கல்யாணமாச்சி என் செலவுல இருக்கட்டும்.

என்ன சிவா.. அப்பாவோட ஆசை மகள் கல்யாணத்தை நல்லாபடியா செய்யனும். சரி மாமா.

கோயில்ல எத்தனை மணிக்கு வச்சிக்கலாம்... பதினொன்றுக்கு அப்பறம் மதியம் அங்கே வெளியே சுற்றி பந்தல் போட்டு விருந்து வைச்சிடலாம் இனியா...

இதை பிடிக்காம தயாவும், மனோவும் வெளியே சென்றார்கள். இனியா இருப்பதால் அடக்கியே வாசித்தார்கள்...

அத்தை அப்ப நான் கிளம்பி தேனுவை கூட்டிட்டு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் கல்யாண வேட்டி, பட்டு புடவை தாலி எல்லா எடுக்கனும்...கிளம்பட்டும்மா...

மாமா நீ ரொம்ப டயர்டா இருப்பிங்க..நான் போய் எடுத்துகிறேன்...

மாமா கடமையை செய்ய விடுடா... நீ மத்த வேலையை பாரு...ம்ம்...

எல்லோரும் கிளம்ப...
சக்தியை பார்த்து முறைத்தான் சிவா.. என்ன முறைப்பு அப்பவே நான் சென்னைக்கு போறேன் சொன்னேன். நீ கேட்டியா...இப்ப எங்கிட்ட மாட்டின.

அசால்ட்டா போடி சொல்லிட்டு வெளியே சென்றான் சிவா.

அவள் பக்கத்திலிருந்த வேலு...பாப்பா நீதான் அவன்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட..
நானா போ சித்தப்பூ...காமெடி பண்ணாதே

பாப்பா, சிங்கமில்ல சிங்கம் அதான் காட்டில இருக்குமே அது குகையில போய் இந்த முயலில்ல நான் வந்துட்டேன் சொல்லுச்சாம்.

இப்பவே மணி 7.30 ஆயிடுச்சி. கருணா இங்கயும் அங்கயும் வேலையை ஏவினார்..கோதை என்ன வேனுமோ சீக்கரம் சொல்லு... ஐயர வரச்சொல்லனும்...நம்ம சைட்டு எப்படி பண்ணுவோமோ அப்படி செய்....

சக்தியை பொண்ணுங்களை விட்டு ரெடியாக சொல்லு...ஏதாவது விட்டுட போறோம் என்றான்...

இதையெல்லாம் பார்த்திருந்த சிவா அவர் அருகில் வந்தான்.ஸார் உட்காருங்க அத்தை சாருக்கு டீ கொண்டு வாங்க..ஏன் டென்சன் ஆகுறீங்க..

இல்லப்பா கேட்ரீங் சொல்லனும் இப்பவே...நான் பார்த்துக்கிறேன் உட்காருங்க...
வீட்டின் முன்னே வாழை மரம் கட்டப்பட்டது...பந்தல் போட்டார்கள்.. பெண்கள் ஒரு பக்கம்...சக்தியை குளிக்கும் முன்னாடி நலங்கு வைத்தார்கள்.

வனிதா, கடைசியில அண்ணனையே வளைச்சி போட்டுட்ட சக்தி. சந்தோஷமா இருக்குடி...எங்க அண்ணனை நல்லா பார்த்துக்கோடி... பெண்கள் கேலி பேசி சக்தியை ஒட்ட...மனதில் சிவாவை கணவனாகவே பதிய வைத்தாள்..சிவாவை பட்டுவேட்டியில் பார்க்க ஆவலாக இருந்தது சக்திக்கு...

இங்கு வந்துதான் யோசித்தாள்... சிவாவை கல்யாணம் செய்துக்கொள்ள... அப்பாவுக்கு திருப்தியாக இருப்பதாக உணர்ந்தாள்..ஆனா தன் அக்கா தேவி அவளிடம் முழுதாக பேச வில்லை.பட்டும் படாமல் இருந்தாள்...ஸ்ரீ க்கு ரொம்ப சந்தோஷம் தன் அக்காவுக்கு கல்யாணம் என்பதால்..தன் தோழிகளோடு சுற்றினாள்...

அந்த வீடே விழாக்கோலம் பூண்டது...காலையில் பார்த்த மாதிரியில்லாமல்...மதனி மாலை எடுத்து வச்சிக்களா, குத்துவிளக்கு எடுத்திட்டிங்களா..மாப்பிள்ள சையின் எடுத்தாச்சா சித்தி...உறவினர்களிடம் சொல்லிக்கொண்டு பம்பரமாக சுற்றினாள் கோதை...பெண்கள் பட்டுச்சேலை உடுத்தி தாம்பூலத் தட்டுக்களை எடுத்துக்கொண்டு கோவிலை அடைந்தார்கள்...

கோவிலில் சக்தி பட்டுவேட்டி உடுத்தி ஆண்மகனாக கம்பீரமா உட்கார்ந்து ஐயர் சொல்லு மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தான்... அவன் பக்கத்தில் இனியன்,தன் மனைவி தேனும், இன்னொரு மச்சான் மோகன் மற்றும் வேலுவும் இருந்தார்கள்... பொண்ணை வரச்சொல்லுங்க ஐயர்...

அவளுடைய தோழி வினிதா மற்றும் உறவினர் பெண்கள் என சிவப்பு நிற பட்டுச்சேலை சரசரக்க...சிவாவின் பரம்பரை நகை வைரங்கள் ஆன ஆரம்,நெக்லஸ், வளையல்கள்,காதில் சிமிக்கு.. நெற்றியில் நெத்திச்சூட்டி அனிந்து தேவதை போல் நடந்து வந்தாள்..தலையை குனிந்து சிவாவின் பக்கத்தில் அமர்ந்தாள். ஒருமுறை யாரோ என்று அவளை பார்த்து திரும்பி மந்திரத்தை சொன்னான் சிவா...

அடப்பாவி இதுதான் உன் ரியாக்ஷனா..தீமிரு அழகா இருக்கன்னு... சக்தி மனதில் வஞ்சினாள். பார்க்கிறானா பாரு...

யாரும் எதிர் பார்க்கவில்லை...கோதையும் கூட மாப்பிள்ளை வீட்டில் இவ்வளவு நகைகள் போடுவார்களா என்று...சக்தியை பார்த்து ஏக்க மூச்சி விட்டனர்...ஊரிலுள்ள பெண்கள்.
ஐயர் கெட்டிமேளம் சொல்ல சிவா சக்தியின் பொன்கழுத்தில் தாலியை கட்டினான். நெற்றியில் குங்குமம் வைத்து .. காலில் மெட்டியை போட்டான்...

கருணாகரனுக்கு திருப்தி தன் பெண்ணின் கல்யாணம் எப்படியோ நல்லபடியா நடந்தது.
பெரிய மாப்பிள்ளை ஆயிற்றே பிடிக்கவில்லை என்றாலும் கல்யாணத்தில் வருபவர்களை கவனித்துக் கொண்டான் தயா.

இனியா...மச்சானுக்கு தங்கத்தில் செயின், காப்பு, மோதிரம் என்று சீர் செய்தான்...
ரேனுகா,கருணா,கோதையிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள்...தன் அக்கா மாமாவின் காலில் விழுந்தார்கள். தேனு சக்தியை கட்டி அனைத்தாள்...

ஊர் பெரியவர்கள், கருணாவின் நட்பு வட்டாரங்கள் அனைவரும் வர காலில் விழுந்து வணங்கினார்கள்... இதில் சக்தி இடுப்பில் கையை வைத்து சிவா இனி என்னால முடியாது... நான் அம்மாகிட்ட போறேன்...

போனவளை கையை பிடித்து வைத்துக்கொண்டான்... இன்னிக்கு ஒரு நாள்தான் அமைதியா நில்லு சக்தி...

காலேஜில் வேலை பார்ப்பவர்கள் வர...அதில் ராமநாதன் என்னவோ இருக்கு நான் நினைச்சது கரெக்ட் தானே சிவா என்றார்.

அதற்கு பதில் சிரிப்பை ஒன்றை கொடுத்து... வேலு அவர்களை கவனிக்க அனுப்பினான்.. எல்லாரும் சாப்பிட்டுதான் போனோம் சார் .மனமக்களை வாழ்த்தி சென்றனர்...

கூட்டம் குறைய,சிவாவை தனியாக அழைத்து சென்றான் இனியன்...சிவா எப்படியோ சக்தி உன்னைய கல்யாணம் பண்ணுடுச்சு. அதை மனசில வச்சிக்கிட்டு அந்த பிள்ளையை...

நான் முழுமனதாக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...மாமா. அப்பறம் கருணா ஸார இந்த நிலைமையில பார்க்க முடியில...இவ விளையாட்டு தனமா முடிவு எடுத்திட்டா. என் சரிபாதி அவதான் மாமா....

தன் மச்சானை அனைத்து கண்ணத்தில் முத்தமிட்டான்.. இன்னும் என் கண்ணுக்கு அன்னைக்கு பார்த்த சின்ன பையன்மாதிரியே இருக்கடா. இதை பார்த்த சக்தி நானும் அண்ணா என்று ஒடி வர தன் இரு கைகளை விரித்து அனைத்துக்கொண்டான்.

சக்திம்மா...இந்த அண்ணா சொல்லுறதை கேட்பியாடா..

கண்கள் கலங்க ஸாரிண்ணா தப்பு பண்ணிட்டேன்....சரி அதவிடு.. எந்த இடத்திலையும் சிவாவை விட்டுக்கொடுக்க கூடாது. நீயும் தான்டா..

சரி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பவா...அப்பறம் என் டாலியை கண்ணடித்துவிட்டு நைட்டே அனுப்பி வச்சிடுடா..அவ இல்லாம என்னால இருக்க முடியாதுடா. சிவா தன் மாமனை முறைக்க. ப்ளீஸ் ப்ளீஸ் கெஞ்சிக்கொண்டிருந்தான் இனியன்.

-----தெறிக்க விடுவான்
 
Super, very nice.
ரெண்டு பேரோட பேரையும் நல்லா போட்டு குழப்பி மாத்தி மாத்தி சொல்றீங்க???
சீகிரம் next epi வேணும்......
 
அருமையா இருக்கு பதிவு
கருணா சிவா இவங்களுக்குள்ள
ஏதாவது ரகசியம் இருக்கா
இனியன் சூப்பர்
 
Top