Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா.... பகைதீரா-10

lakshu

Well-known member
Member
தீரா.... பகைதீரா-10

அரண்மனை பின்பக்கம் உள்ள தோட்டத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்திருக்க.. அங்கே போடப்பட்ட சேரில் உட்கார்ந்து மலைமேகங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ஷினி...

ஓஓய்... என்று அவள் பின்னாடி குரல் கொடுத்தாள் சிட்டு...

பயந்து எழுந்தாள் வர்ஷா... சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மகா என்று அவளை அனைத்துக்கொண்டாள்...

அவள் கையை பிடித்து எப்படியிருக்குடி வலிக்குதா... வர்ஷா கேட்க

ப்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல... ஏன்டி இங்க உட்கார்ந்திருக்க...

சும்மா தான் மகா...
ஹாங்... ஏதோ மறைக்கிற என்கிட்ட சொல்லுறதுக்கு என்னடி... நான் உன் டியர் பிரன்ட்...

எல்லாம் உன்னாலதான்டி எரும... நானா என்று மகா , வர்ஷினியை பார்த்தாள்..

ஆமாம்... உன்ன எட்டாவதுல பார்த்தது... அன்னியலிருந்து தீரன் என் மாமா.. உனக்கு சூர்யாதான் மாமான்னு சொன்ன... முதல் அவருக்கு விருப்பமில்ல.. அப்பறம் என்னை பிடிச்சுபோச்சு...

பைனல் இயர் படிக்க சொல்ல நீதான்டி ஐடியா கொடுத்த... எங்கப்பா தீரனுக்கு கல்யாணம் செய்ய முடிவு பண்ணிட்டாங்க.. அப்ப என்ன சொன்ன.. தீரன்கிட்ட போய் நான் சூர்யா மாமாவதான் கட்டிப்பேன் சொல்லு சொன்ன...

உடனே தீரன் மாமா, சூர்யாவ கல்யாணம் செஞ்சி வச்சாங்க.. ஆனா அவருக்கு என்மேல கோபம்... அவர் சீவில் படிச்சிட்டாரு... அதில்ல சாதிக்க முடியலையாம்... ரொம்ப கோவத்தில இருக்காரு... கொஞ்ச நாள் கழிச்சி கல்யாணம் செஞ்சிருந்தா அவரு சாதிச்சு இருப்பாராம்...

பத்தாத அவர் அண்ணாவை ஏமாத்திட்டாராம்... அவருக்கு கல்யாணம் ஆகி செட்டில் ஆனா தான் எங்க இரண்டுபேருக்கும் எல்லாவேவாம்..

அவள் முகத்தை தன் பக்கம் திரும்பி... அப்ப எதுவுமே நடக்கலையா... வர்ஷூ..

ஆமாம் என்று தலையை ஆட்டினாள்...

அடச்சீ நீயெல்லாம் என் பிரண்டு வெளியே சொல்லாதே...
மவளே அதுமட்டும் தெரிஞ்சது என்னை கட்டி தொங்க போட்டுவாரு என் மாமன் அதாவது உன்ற வீட்டுக்காரரு...

போடிங்க... அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நானில்ல..

மகா... என் தங்கச்சி ஹாசினி , அவக்கிட்ட பார்த்து பேசு இந்நேரம் மோப்பம் பிடிச்சிருப்பா...

சரி... இப்படி ஒழுங்க டிரஸ் செய்யாம... எதையோ பறிகொடுத்தமாதிரி இருக்காதே... ஆள மயக்கிற மாதிரி டிரஸ் போடுடி...

மகா.. யாரோ வரமாதிரி இருக்கு சீக்கிரம் கிளம்புடி...
......
அன்று இரவு,

ஐய்யோ டாக்டர் இனிமே இந்த மாதிரி செய்யமாட்டேன்.. என்னை விட்டுவிடுங்க... தீரன் காலைபிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தாள் சிட்டு...

அதெல்லாம் முடியாது மரியாதையா எழுந்திரு...

டாக்டரு... உனக்கு மனசாட்சியில்ல

இல்ல... சின்னகுழந்தைங்க கூட இப்படி அழாதுடி... ஏழுகழுதை வயசாயிடுச்சு... செப்டிக் ஆயிடும், கையில் இன்ஜக்ஷன் வைத்துக்கொண்டு சிட்டுவை திட்டிக்கொண்டிருந்தான் தீரன்...

என்னை வச்சி எப்படி ஊசிபோடனும் கத்துக்காதீங்க டாக்டரே...

இவ்வளவு பேசிறீயா நீ... இரு பெரிய ஊசியா எடுத்துட்டு வரேன்

எனக்கு சின்னவயசிலிருந்து பயம் டாக்டரே.... இதுக்குதான் டாக்டருக்கு பொண்டாட்டியா வரக்கூடாது... நகைக்காரன் கட்டிக்கிட்டா நகையா எடுத்துட்டு வருவான்... டாக்டர கட்டிக்கிட்டா ஊசியாதான் போடும்... இப்படி காலைபிடித்து கதறும் அழகை தன் செல்லில் வீடியோவாக எடுத்தான் தீரன்...

சரி மாத்திரை தரேன் அதை போட்டுக்கோ...

ஹப்பா , அவன் காலைவிட்டு தீரன் பக்கத்தில் உட்கார்ந்தாள் சிட்டு.. நீங்க ரொம்ப நல்ல
டாக்டர் ஸார்...

அப்படியா என்று அவள் இடுப்பில் ஊசியை ஏற்றினான்...

ஆ....ஆன்னு சிட்டு, வீடே அதிரும் படி கத்த.. அவள் வாயை தன் கையால் மூடினான்...
கண்களில் கண்ணீர் வழிந்தோட... கையில்ல இவ்வளவு பெரிய சூடு வச்சிருக்க அதுக்கே அழல... இந்த சின்ன ஊசிக்கா ஊரக் கூட்டுற...

அவன் கண்களையே பார்த்தப்படி , தன் வாயின்மேலிருக்கும் தீரனின் கையை தன் நாவு கொண்டு தீண்ட..

திட்டிக்கொண்டிருந்த தீரன் அவளின் தீண்டல் உணர.... ச்சீ ஏன்டி எச்சிப் பண்ணுற... போய்
தூங்குடி என்று எழுந்துக்கொண்டான்...

தன் லேப்டாப்பை ஆன் செய்தான், ஆனால் உள்ளுக்குள் இனம்புரியாத ஒரு உணர்வு... தன் கை விரலையே திருப்பி திருப்பி பார்த்தான்... லூஸூ ஏதாவது செஞ்சி நம்மளை டெம்ட் பண்ணுவா... தீரா ஸ்டெடியா இருந்துக்கோ...

டாக்டரே லவ்வு ஸ்டார்ட் ஆயிடுச்சு போல பேஸ் முழுக்க ரெட்டா இருக்கு வெட்கமா, சிட்டு கவுண்டர் விடு..

அவள்மேல் தலையனையை எடுத்து வீசினான்... மூடிட்டு படுறீ...

மணி பதிரொன்று ஆனது.. சிட்டு தூங்கியவுடன் மெல்ல அவள் கையை வருடினான்... நடிக்க சொன்னா ஒவர் ஆக்டிங் பண்ணுறா... ஆயில்மெண்டை தடவி விட்டான் தீரன்...
......
அடுத்த நாள் காலையில், வழக்கமாக அனைவரும் ரெடியாகி உணவு அருந்த கீழே வந்தனர்... கணக்குபிள்ளை ரவி செக் புக்கை எடுத்துக்கொண்டு தீரனிடம் வந்தான்...
ஸார் வொர்க்கர்ஸ் சம்பளம் தரனும் , பிறகு ஸ்டேஸ்னரி பொருளுக்கு இருபதாயிரம் மொத்தம் இருபது சேக் கையெழுத்து போடனும் ஸார் என்று வந்து நிற்க...

ஏன் கடைசி நேரத்தில வாங்குற ரவி... இதையெல்லாம் கேட்க மாட்டிங்களா மாமா என்று நீலமேகத்தை பார்த்தான்...

அதுவா அவங்க பொண்டாட்டி பிரசவத்துக்கு போனான்... அதான் லீவ் போட்டான்..
ரவியில்லைன்னா வேற ஒருத்தர்கிட்ட வேலையை கொடுங்க... அவசரமாக கையெழுத்திட்டான் தீரன்... இதையெல்லாம் கேட்டபடி சிட்டு கையில் காபி கப்பை எடுத்துக்கொண்டு தீரன் அருகில் வந்தாள்... இந்தாங்க காபி...

ம்ம்... அங்க வை...

டீபாயில் காபியை வைத்துவிட்டு தீரனின் கையை பற்றினாள்... என்ன என்ற பார்வை மட்டும் தீரனிடமிருந்து...

மெதுவாக ,அதுவா.... எங்க கணக்கு வாத்தி தப்பா சொல்லி கொடுத்திருக்காரு டாக்டர்... அப்ப நான் படிச்சதெல்லாம் வேஸ்டா...

என்னடி பேசற...

எங்க கணக்கு வாத்தி இருபதாயிரத்துக்கு நாலு சைபர் தான் சொல்லிக்கொடுத்தார்...
ஆனா நம்ம அக்கௌன்டட் ஐந்து சைபர் இல்ல போட்டிருக்காரு...

அவள் சொன்னவுடன் உற்றுபார்த்தான் தீரன்... எழுந்து ப்ளாருன்னு ரவி கண்ணத்தில் அறை... அவனின் காலை பிடித்துக்கொண்டான் ரவி...

ஸார் தெரியாத மிஸ்டேக் பண்ணிட்டேன்... ஒரு சைபர்தான் அதிகமா போட்டுட்டேன் சொல்ல...

இரண்டு லட்சம் போட்டிருக்க... இவ்வளவு நாள் வேலை செய்யற தெரியாம எப்படி வரும்... சூர்யா என்று தன் தம்பியை கத்தி அழைத்தான்... அந்த அரண்மனையே அமைதியானது... கோவம் வந்துவிட்டால் தீரனை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியாது...

அண்ணா... சூர்யா, தீரன் அருகில் நிற்க,

இவனுக்கு செட்டில் செய்து அனுப்பிவிடு... வேற ஆளுளை இன்டர்வியூ எடு...

சரியண்ணா...

மாமா... என்று நீலமேகத்திடம் வந்தான்... என்ன பார்க்கிறீங்க... இப்படி கேர்லஸ்ஸா இருந்தா... நம்ம தெருவில தான் நிற்கனும்...

அது தம்பி, நல்ல பையன்தான் தெரியாம எழுதிருப்பான்...
சந்தேகம் வந்திடுச்சுன்னா எல்லாமே சந்தேகமாகதான் பார்ப்போம்... சிட்டு மனேஜர் நம்ம குணாதான், இனிமே அவன் கொடுக்கிற கணக்கு எல்லாம் கரெக்டா சரிபாரு...

தம்பி படிக்காத பொண்ணுபோல இருக்கு.. அதெப்படி...

அவபுத்திசாலி எல்லாம் மேனேஜ் பண்ணிப்பா மாமா... சிட்டு இனிமே நீ வரவு செலவு கணக்கு இந்த வீட்டையும் சேர்த்து பாரு... எல்லோருக்கும் வயசாயிடுச்சு, அத்தை, சித்தி அவங்களால பார்க்க முடியாது.. நீதான் புரியுதா..

சரிங்க...

முதல்ல இந்த செக்கெல்லாம் கரெக்டா பார்த்துக்கோ மொத்தம் 500 க்கு மேல தொழிலாளர்கள் இருக்காங்க..

நீலமேகத்திற்கு கடுப்பானது சின்ன பொண்ணுகிட்ட இவ்வளவு பொறுப்பை கொடுத்திருக்கான்.

அவன் போகட்டும் இந்த பொண்ணை வீட்டைவிட்டு துரத்திடனும் அப்பதான் நம்ம ராஜ்ஜீயம் நடக்கும்....... நீலமேகம் நினைக்க.

தன் ரூமிற்கு வந்தான்... டென்ஷனாக சில வார்த்தைகள் போனில் பேசிவிட்டு தன்னுடைய ஷர்ட்டை எடுத்து கீழே போட்டான் தீரன்..

அய்யோ டாக்டரே... எதுக்கு எல்லா துணியையும் கீழே போடுறீங்க... முதல்ல டென்ஷனை குறைங்க... தீரனை தன் பக்கம் திருப்பினாள் கப்போர்ட்டிலிருந்து லைட் ப்ளூ சர்டை எடுத்து அவனுக்கு கொடுத்தாள்...

ஏன், சின்ன விஷியத்திற்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க டாக்டரு..

எதுடி சின்ன விஷியம் என்னை ஏமாத்தி எத்தனை வருஷமா கொள்ளையிடிச்சிருக்கான்.. ப்ளடி... எனக்கு இந்த நம்பிக்கை துரோகம் செய்யறவங்களை கண்டாவே பிடிக்காது சிட்டு...

அய்யோ என்னடா சின்ன விஷியத்திற்கே இப்படி ஆகறான்... என்னை பற்றி தெரிந்தாள்.. முடிச்சிடுவானே ஜோலியை... அதுக்குள்ள புள்ளையை பெத்துக்கனும் போல ,தன் மனதில் சிட்டு யோசிக்க..

என்னடி பகல்ல கணவு கண்டுட்டு இருக்க.. நகர்ந்து போடி.. வழியை மறைச்சிட்டு..

ஏன் டாக்டர் இதையெல்லாம் நீங்க பார்க்க கூடாதா..

நான் டாக்டருக்கு படிச்சிருக்கேன்... அந்த வேலைதான் மையின் அடுத்தது தான் இதை பார்க்கனும்...

அப்ப உங்கதம்பி என்ன படிச்சிருக்காரு டாக்டர் ஸார்....

ம்ம்... இப்ப எதுக்கு அது..

சொல்லுங்க...

சிவில் இன்ஜினியர் படிச்சிருக்கான்...

அப்ப அவருமட்டும் தனக்கு சம்மதமே இல்லாம ஆபிஸ் ஒர்க்கை பார்க்கனும்... அவர் படிச்சது ஒண்ணு வேலை செய்யறது... தீரன் முகத்தையே பார்த்தாள்..

சூர்யா கேட்க சொன்னான்னா...

அய்யோ சத்தியமாயில்ல... நானாதான் கேட்டேன் டாக்டரு,,. அவருக்கும் தன் தொழிலில் சாதிக்கனும் எண்ணம் வரலாம் இல்லையா...

கோவத்தில் அவளை தாண்டி கதவருகே சென்றான்... அப்படியே நின்று அர்ஜூனும் வந்திருக்கான் இனிமே இங்கதான் தங்குவான் அவனுக்கு சேர்த்து சாப்பாடு கொடுத்தனும்...

என்ன மூஞ்சியை தூக்கிட்டு இப்படி போறாரு... தீரன் பின்னாடியே அவனுடைய எக்ஸிக்யூட் பேக்கை எடுத்துச்சென்றாள்...

ஹாலில் சூர்யாவை பார்த்தவுடனே நின்றுவிட்டான் தீரன்... தேனீயில ஹாஸ்பிட்டல் கட்டபோறோமில்ல அதுக்கு லே அவுட் போட்டு எடுத்துட்டு வா சூர்யா... அந்த கான்ராக்ட் கேன்சல் பண்ணிடு...

சந்தோஷத்தில வார்த்தையே வரவில்லை சூர்யாவிற்கு... தான் கேட்பது நிஜமா இல்ல கனவா என்று நின்றிருந்தான்... எல்லாம் உங்க அண்ணி சொன்ன ஐடியாதான்.. தீரன்
கிளம்பி சென்றுவிட...

தேங்கஸ் அண்ணி என்று சிட்டுவின் கையை பற்றி நன்றி கூறினான்... எங்கண்ணாவா இப்படி... ஆனா அண்ணி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்...

நீங்க எங்க படிச்சீங்க, அதாவது ஸ்கூல், காலேஜ்... அங்கதான் பார்த்திருப்பேன்..

எல்லாமே சென்னை தான் தம்பி... இந்த ஊரே எனக்கு புதுசு என்றாள் சிட்டு...

வர்ஷாவின் அருகில் வந்த சிட்டு... என்னடி உன் புருஷன் எல்லாமே மறந்திடுவானா...

அவன் இரண்டு வருஷம் சீனியர் நம்ம எட்டாவது படிக்க சொல்ல சூர்யா பத்தாவது
படிச்சான்... சரி அதைவிடு.. நம்ம இரண்டுபேரையும் ஹோட்டல்ல பார்த்திருக்கான் தானே..

ஏய் அது கல்யாணம் டென்ஷன்ல உன்னை சரியா பார்த்திருக்க மாட்டான்..

அதற்குள் ஹாசினி மேலிருந்து கீழே இறங்கிவந்தாள்... சிட்டு இன்னைக்கு என்ன மெனு சமையல்காரரிடம் கேட்டுட்டு வா என்று வர்ஷா அதட்டினாள்...
.......பகைதீரா என்னவனே
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu 😍😍😍
 
Top