Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா.... பகைதீரா-07

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா.... பகைதீரா-07

இருவரும் மாலையும் கழுத்துமாக காரில் வந்திறங்க... முப்பது பெண்கள் கூட்டமாக இருந்து ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார்கள்... பூஜை அறையில் விளக்கேற்றினாள் சிட்டு...

சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அங்கே வேலை செய்யும் ஆட்களுக்கு துணிமணிகள் இனிப்புகள் இருவரும் வழங்கினர்... மதியம் நான்கு மணிக்கு உறவினார்கள் வந்தபடியே இருந்தனர்... சிட்டுவை அழகுபடுத்தி வேறு உடையான காக்ரா சோளிக்கு மாற்றினார்கள்.. வந்த உறவினர்கள்

அனைவரும் ஜமீன்தார்கள் தான் ஆதலால் மகேந்திரனும் அந்த பெரிய ஹாலில் உட்கார்ந்து வந்தவர்களை வரவேற்றார்... ஒரு சிலர் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமை என்று பாராட்டினர்.. ஒருசிலர் வயிற்றெரிச்சலில் இந்த பொண்ணுக்கு வந்த வாழ்வு பாரேன் என்றனர்...

ஆனால் மகேந்திரன் மற்றும் சேதுபதிக்கோ எல்லையற்ற மகிழ்ச்சியே, தீரனை கல்யாணக்கோலத்தில் பார்க்க முடியாதா என்று ஏங்கிதான் போயிருந்தனர்..

பணம் நம்மிடம் நிறையவே இருக்கு ஆனா தன் மகனை அன்புமும் காதலாகவும் பார்க்க நல்ல குணவதியாக வரவேண்டும்.. ஆதலால் பார்த்தவுடனே சிட்டை பிடித்துவிட்டது மகேந்திரனுக்கு உடனே திருமணத்தை நடத்திவிட்டார்...

அரண்மனையே பரபரப்பாக சூழன்றுக்கொண்டிருந்தது... பார்ட்டி ஆரம்பித்தது வந்தவர்களுக்கு பப்வே உணவு... தீரன் பக்கத்தில் பொம்மைமாதிரி நின்றிருந்தாள் சிட்டு..

சிறிதுநேரத்தில் தீரனின் தொடையில் ஏதோ ஊறுவதுபோல் தோன்ற என்ன என்று யோசிப்பதற்குள் மறுபடியும் சீண்டினாள் சிட்டு...

ஏய்..சீ கையை எடு, அவளை திட்டினான்..

டாக்டரு... அவள் கண்களை உருட்டி பாவமாக பார்க்க..

என்ன பசிக்குதா.. ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லட்டா.

வேணா டாக்டரு நான் நிறையவே குடிச்சிட்டேன்... எனக்கு தூக்கமா வருது பாதி நைட்டே எழுப்பிட்டிங்க.. அதோ அங்கேயிருக்க பெரிய சோபாவுல படுத்துக்குவா பார்ட்டி முடிச்சவுடனே என்னை எழுப்புங்க... சரியா..

அடிங்க.. வந்தவங்க என்னடி நினைப்பாங்க பட்டிக்காடு... காட்டிகொடுத்துடுவ போல.. இங்கபாரு நீ நடிக்கிற தெரிஞ்சுது எனக்கு வேற கல்யாணம் செஞ்சிவைச்சிடுவாங்க.. நான் ராஜா எத்தனை மேரேஜ் வேணாலும் செய்யலாம் ஆனா நீ செய்ய கூடாது..

இதென்னடா நியாயம்...

ஆமாம் ஜமீன் ரூல்ஸ் அப்படி..

க்கும்... யோவ் எனக்கு தூக்கமா வருது அவன்மேலே சாய..

உன்ன பல்லை கடித்துக்கொண்டு தன் சித்தப்பாவிடம் சொன்னான் சிட்டு டயர்டாயிட்டா ரூமில ரெஸ்ட் எடுக்கட்டுமா திரன் கேட்க..

சின்னபிள்ள காலையிலே சீக்கிரமா எழுந்திருச்சு.. கூட்டிட்டு போப்பா.. அவள் கையை பிடித்துக்கொண்டு மாடிபடியேற.. அப்படியே நின்றுவிட்டாள் சிட்டு..

என்ன வரமாட்டறா.. என்னடி..

என்னால நடக்கமுடியல டாக்டரு.. மாடியேற முடியல ,உன் ரூமு ரொம்ப தூரமாயிருக்கு...

அதுக்கு..

தலையை கீழே குனிந்து இருகைகளை நீட்டி தூக்கிட்டுபோங்க... அதிர்ச்சியாக வாயில் கைவைத்து அப்படியே நின்றான் தீரன்..

அந்த வழியே போன அர்ஜூன்... இவர்களை பார்த்து மனதில், செத்தான்டா சேகரு, அய்யோ மச்சான் வாழ்நாள் முழுவதும் எப்படிதான் குப்பகொட்ட போறீயோ..

எல்லாம் எந்நேரம்டி, அவள் இடுப்பில் ஒரு கையையும் தொடையில் ஒரு கையையும் வைத்து தூக்கிக்கொண்டான்...

வந்த உறவினர்கள் , தீரனின் தோழர்கள் அனைவருமே இவர்களை பார்த்து சிரித்தனர்... ரொமன்ஸ் நடக்குது என்று சிலர் கேலி செய்ய..

ஏய் எரும மானம் போச்சுடி..

உங்களுக்குமா டாக்டரு, எனக்கு எப்பவோ மானம் போயிடுச்சு

அவன் புரியாமல் சிட்டுவை பார்த்தான்..

தலையை ஆமாம் என்று ஆட்டினாள்.. சின்ன வயசிலே போயிடுச்சு டாக்டரு..

என்னடா இவ டைபாய்டு வந்து போனமாதிரி சொல்லுறா.. ஏய் லூஸூ..

ஒன்பதாவதுல பெயில் ஆனயில்ல.. அப்ப தும்மாதுண்டு சிறுசுல இருந்து பெரிசு வரைக்கு சிட்டு பெயில் ஆயிட்டான்னு மானத்தை கப்பல் ஏத்திட்டாங்க டாக்டர்..

த்தூ...நீயும் உன் ப்ளாஷ் பேக்கும், அவளை கண்டுக்கொள்ளாமல் கதவை திறந்து சிட்டுவை பெட்டில் படுக்க வைத்தான்... அவன் திரும்பி செல்ல..

டாக்டரு என்று அழைத்தாள், போக சொல்ல கதவை சாத்திட்டு போங்க..

உன்ன வந்து வச்சிக்கிறேன்டி, அவளை எச்சரித்து கதவை சாத்திவிட்டு சென்றான்..

என்னது வச்சிக்கிறீயா... பெட்டில் மேலேறி...தன் லேகாங்காவை மடித்துக் கட்டிக்கொண்டு செல்லில் பாட்டை போட்டாள்..

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

சிட்டு குத்தாட்டாம் ஆடிக்கொண்டிருக்க

பாதி தூரத்தில் சென்ற தீரன் என்ன சாப்புடுவான்னு கேட்க மறந்துட்டோமே... திரும்பி ரூமுக்கு வந்து கதவை திறந்தான்..

வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா...

திரும்பி இடுப்பை ஆட்டிக்கொண்டே பின்னாடி வர, பெட்டின் விளிம்பில் கால்வைத்து தடுக்கி விழ... வந்து பிடித்துக்கொண்டான் அவளை... தடுமாறி அவன் கழுத்தை கைகளால் கட்டிக்கொண்டாள்... பூ மேனியவளின் ஸ்பரிஸத்தில் அவளை கட்டிக்கொண்டு நின்றான்...பிறகு நினைவுக்கு வந்தவள் அவனைவிட்டு பிரிந்து சுற்றி சுற்றி பார்த்தாள்..

என்னடி ரியாக்ஷனு...

கண்ணத்தில் விரலை வைத்து யோசித்தாள், டாக்டர் நான் எப்படி பெட்டுமேலே ஏறினேன்...

அய்யோ டாக்டர் எனக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி... எனக்கே தெரியாம பெட்டிலே நின்று இருக்கேன்..

ஓ அப்படியா ,தீரன் முறைத்து பார்க்க அங்கே செல்லில் அடுத்த பாட்டு ஓடியது...

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா இல்ல சாட் பண்ணவா

பாடல் இசைக்க... அதைபார்த்து அய்யோ கோவத்துல அடிச்சிட போறான் என்று சிட்டு ஒட..

அவளை துரத்திய படி கட்டிலின் இந்த பக்கமாக நின்று... மரியாதையா அடிவாங்கிக்கோடி... டாக்டர்கிட்டவே உன் நடிப்பா... தூக்கத்துல நடக்கிற வியாதியா... பொய் சொல்லுற...

டாக்டரே எனக்கு அந்த பார்ட்டி பிடிக்கல அதான் டையர்டா இருக்குன்னு பொய் சொன்னேன்.. அதற்குள் தீரன் செல்லில் கால் வர.. அதை அட்டன் செய்தான்.. ம்ம் இதோ வரேன் என்று போனை வைத்தான்..

சிட்டு இரண்டு மணிநேரம் தூங்கி ரெடியாயிரு... உனக்கு மறுபடியும் டிரஸ் மாத்தி மேக்கப் செய்ய வருவாங்க..

எதுக்கு தூங்கபோறதுக்கு மேக்கப்...

அதுக்கில்ல பர்ஸ்ட் நைட்டுக்கு... ரெடியாயிரு வரட்டா பேபி என்றான்..

-------

பார்ட்டியில் நீலமேகம் தன் நன்பர்களிடம் பேசிக்கொண்டிருக்க.. அதில் ஒருவர்.. என்ன நீலமேகம் தீரனை மருமகனாக ஆகிடுவீங்க சொன்னீங்க... ஆனா ஏதோ பஞ்சத்தில அடிப்பட்ட பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கான் தீரன்..

விசாரிச்சு இந்த கல்யாணத்தை நிறுத்தலாம் நினைச்சேன் பாபு ,அதுக்குள் அடுத்த நாளே திருமணத்தை வச்சிட்டாரு பெரிய மச்சான்... பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுவதுன்னே தெரியல... வந்திட்டே இருக்கா..

யாரப்பா சொல்லுற...

என்னுடைய இரண்டுபொண்ணு டிவின்ஸ்பா... ஹாசினி அமெரிக்காவுல படிக்கிறா.. பையன் குணா கூட்டிட்டு வர போயிருக்கான்..

விடு நீலமேகம், இந்த பொண்ணை தொறத்திவிட்டு, உன் பொண்ணை கட்டிவை உங்க ஜமீன்ல நடக்காததா.. இதெல்லாம் சகஜம்தானே..

நானும் அந்த முடிவுலதான் இருக்கேன்பா...

......

அன்று இரவு 10.30 மணிக்கு நல்லநேரம் பார்த்து சிட்டுவை தீரன் ரூமிற்குள் தள்ளிவிட்டனர்...

பட்டுபுடவையில், தலைநிறைய ஜாதிமுல்ல பூவைத்து கையில் வெள்ளி பால்சொம்போடு மெல்ல நடந்து வந்தாள்.. அறையை சுற்றி பார்க்க தீரனை இல்லை... எங்க போனாரு பயந்துட்டாரோ அவளுக்குள் சொல்லியபடி பால்கனியில் பார்க்க நிலவை பார்த்து நின்றிருந்தான்...

வேகமான தென்றல் காற்று வீச ,வெண்மேகங்கள் காலில் தழுவி சென்றது.. என்ன குளிருதுப்பா... அவனுக்கு பிடித்த இடம் பால்கனியில் நின்று மலையை பார்ப்பான்.. அவனின் இதயம் அமைதியாகும்...

டாக்டரு என்ன இங்க நிற்கிறீங்க... அவளின் குரலை கேட்டு திரும்பி நின்றான்.. சீக்கிரம் வாங்க டாக்டர் பர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு தூங்க போலாம்..

என்னது... உளறாதே..

ப்ச்.. எத்தனை படத்தில பார்த்திருப்பேன்... வாங்க டாக்டரு அவன் கையை பிடித்து இழுத்து வந்தாள்..

அவனுக்கு சொம்பில் பாலை கொடுத்துவிட்டு அவனின் காலில் விழுந்தாள்..

ஏய் எழுந்திரு... நீ நடிக்கதான் வந்திருக்க.. உண்மையான ஓய்ப் இல்ல...

தெரியும் டாக்டரே கதாபாத்திரத்தில ஊறி நடிக்கவேணாமா..

ஒரு மயி... வேண்டாம் போய் தூங்கு...

அதுக்குள் எப்படி பர்ஸ்ட் நைட் முடியும் .... எல்லாம் சொல்லி அனுப்பிச்சாங்க.. உங்க மனசை நோகாம நடந்துக்கனும்மாம்.. அப்படினு உங்க அத்தை, சித்தி சொன்னாங்க.. நான் நடக்கிறது என் காலுக்குதான் வலிக்கும், உங்க மனசு எப்படி வலிக்கும்.. சில்லி பீப்பூள்..

க்கும்.. நேரா சொன்னாவே புரியாது இதுல மறைமுகமா சொல்லுறாங்க... தீரன் அலுத்துக்கொள்ள... என்ன இங்கிலீஷெல்லாம் வருது..

நாங்களும் அப்பஅப்ப இங்கிலீஷ் படம் பார்ப்போமில்ல...

டாக்டரு நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. நான் தெளிவா சொன்னேன் ஏற்கனவே எனக்கும் டாக்டருக்கு பர்ஸ்ட் நைட் முடிச்சிடுச்சு.. அதனால எனக்கு எல்லாம் தெரியுமுன்னு...

என்னது... எப்போ.. இதை...யார்கிட்ட சொன்னடி

உங்க அத்தை, சித்தி, சித்தப்பா, தம்பி, தங்கச்சி,மாமா, அஜ்ஜூ...

ஹாங்... எங்க வீட்டு நாய்க்குட்டி டாமிக்கு சொன்னீயா..

அடச்சே.. அதை மறந்துட்டேன்னே நைட்டாச்சில்ல பாவம் தூங்கபோயிருக்கும்... நாளைக்கு காலையில் சொல்லிடுறேன் டாக்டர்....

தலையில் கைவைத்துக்கொண்டான்...மானம் ,மரியாதை எல்லாம் போச்சு, பொம்பள பொறுக்கினு நினைப்பாங்க...

பெரிய கட்டிலில் பூக்களால் அலங்கரித்திருந்தனர்... இங்கபாரு நான் ரொம்ப டயர்டா இருக்கேன் நீ பெட்டுல இந்தபக்கம் படு அந்தப்பக்கம் நான் படுத்துக்கிறேன்...

சிறிது நேரத்தில் புரண்டு அவன்பக்கம் படுத்தாள், டாக்டரேரே...... என்று வாயில் ஒரு கையை வைத்து கூவி அழைத்தாள்...

தலையில் ஒருகையை மடித்துவைத்து கண்ணை மூடியிருந்தான் தீரன்.. இவ கத்தவும் பதறி எழுந்தான்..

ஏன்டி கத்தன..

பின்ன இந்த டபுள் கிங் சைஸ் கட்டில்ல நீ அந்த கோடி நான் இந்த கோடி நடுவுல யார் படுப்பா

ம்ம்... நடுவுல உங்க சித்தி, சித்தப்பா, அத்தை,மாமா எல்லாரையும் ஃபில் பண்ணிக்கோ.. ஜகஜோதியா பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம்..

------பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
Fill in the blank ???
 
Last edited:
Top