Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 14))

Advertisement

பகுதி - 14

" நாம அடிச்சு.. தப்பிக்க விட்ட பாம்பு... என்னிக்கா இருந்தாலும், நம்மளை கொத்தாம விடாது.. அதனால முனியா .. போட்டு தள்ளிடு.. உயிர் மட்டும் இருக்கணும்.. " என போனில் ..கட்டளையிட்டவர் .. அடுதடுத்ததாக விஷ்த்தை யார் ...
. யார் .. மீது கக்கலாம் .. என முடிவு செய்து, அதை செயல்படுத்த விரைந்தார் ... மருதவேல் ..


இங்கே., வீரேந்திரன், ரதியை வப்பாட்டி, அவளின் குழந்தையை அப்பா, பெயர் தெரியாத குழந்தை.. என என்ன தான் மருதவேலுக்கு, உரைக்கட்டும், என்று கூறினாலும்,... "எந்த சூழ்நிலையிலும், பெண்ணை... தவறாக பேசாதே, அவர்கள் மனம் நோக... பேச்சோ, செயலோ ..கூடாது ... " என சொல்லி, தன் அன்னை வளர்த்தது .. இன்று .. விழலுக்கு இறைத்த ..நீராக... வார்த்தையை கொட்டியது,,, தன் மனத்தை அழுத்த .. இன்றே அனைத்தையும் ..ரதியிடம் ..கூறி. விட்டு.. அவள் விட்டிற்கு அவளை அனுப்பி விட வேண்டும் . என நினைத்தவன் ....காரை விரைந்துச் செலுத்தி, இல்லம்.. சென்றான்.,,

கீழே ஹாலில், ரதி இருக்கிறாளா.. என பார்வையை சுழற்றிப் படியே ..மேலேறி, தன் அறையை திறக்க .. சாவியை தேடி எப்போதும் போல்,..பேண்ட்டினுள் .. கை விட... அப்போதுதான், நினைவுக்கு, வந்தது.. டெண்டர் - எடுக்க .. நேரம் ஆனதால், அறையை பூட்டாமல், விட்டுச் சென்றது.. "ச்சே... என நெற்றியில் தட்டிக் கொண்டவன். அறையைத் திறந்து .. உள்ளே செல்ல .. மங்கிய வெளிச்சத்தில். கட்டிலில் கிடந்தவற்றைப் பார்த்து.. அதிர்ந்து நின்றான்".பாண்டியன் ....
- xx - xxxx -

மருதவேலால், தானும், ....தன் அன்னையும் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள்,அவப்பெயர்கள் .. தன்னால் தான் தன் மகனிற்கு.. இத்தகைய இழிநிலையோ... என உள்ளுக்குள் வைத்து.. மருகி, மருகியே இறுதியில் இருதய வலியால் .. உயிர் விட்டது... அதற்கு காரணமானவனிடம் ... இவ்வளவு நாளாக .. அனைத்தும் தெரிந்திருந்தும்...,, எதுவுமே ..தெரியாதது போல் .... அவனருகே இருந்தது.... கழுத்தை யாரோ!.. இறுகப்பற்றியது.. போல் ... அவனை ஒன்றும் செய்ய முடியாமல், கைகள் கட்டப்பட்டு, துடித்துக் கொண்டிருந்தவனுக்கு .. இப்போது..அதிலிருந்து விடுதலைக் கிடைத்ததும்.. சுதந்திரக் காற்றை சுவாசித்தப்படியே .. நடந்துக் கொண்டிருந்தவனை .. அடித்துத் தூக்குவதுப் போல் .. பயங்கர வேகத்தில்... ஜிப் .. ஒன்று அவனை நோக்கி வந்தது...

- xx - xxxx -
கட்டிலில் பத்திரங்கள் .. சிதறி கிடக்க.. தரையில்.. ரதி மயங்கி கிடந்தாள்... இதை பாண்டியன் பார்த்ததும் ...
பதறியவன்..

அவளருகே, ஓடிச் சென்று... அவளின் தலையைத் தூக்கி.... தன் மடியில் வைத்தவன்., "ரதி ".. என அழைத்துக் கொண்டே .. அவள் உடல் முழுவதும் ஆராய்ந்தான்... இவ்வளவு காவலையும் மீறி .. யாரெனும்.. ரதியை தாக்கிவிட்டர்களா?.. என உள்ளம் பதற.... கண்கள் கலங்க.. அவளை ஆராய்ந்தவனுக்கு .. அப்படி எந்த அடியும் படாமல் .. அவள் உடல்
இருக்கவே..


சற்று ஆசுவசமானவன்.. அப்போது தான். சிதறியப் பத்திரங்களை பார்த்தவன்.. ஓஹோ ... இதைப் பார்த்துட்டு தான் .. மயக்கிட்டியா?. என அந்நிலையிலும் .. மெல்லிய சிரிப்பு வர ... அதை அவள் உடல் நிலைக் கருதி அடக்கியவன்.. அவளை எழுப்பும் பொருட்டு கன்னத்தில் தட்டினான். அதற்கு எந்த பிரதிபலிப்பும் அவளிடம், இல்லாமல் போகவே.. . அவளை கைகளில்... ஏந்தியவன் .. காற்றோட்டமாக இருப்பதற்காக .. மாடி ஹாலில் இருந்த ..ஷோபாவில் கிடத்தி விட்டு .. நீரை எடுத்து வந்து ... முகத்தில் தெளித்தான் °.....

இம்முறை அவளிடம், அசைவு தோன்றவும், மீண்டும் கிச்சனுக்கு ஓடிச் சென்று. . ஆரெஞ்சு பழ ரசத்தை எடுத்து வந்து, இன்னும் விழி முடிப்படுத்து இருந்ததவளை... தூக்கி ... தன் மார்பின் மீது சாய்த்து.... பழரசத்தை பருக வைத்தான்..

பழரசத்தை.... அரை சுயநினைவோடு பருகி முடித்தவள் ... சற்று தெம்பு பிறக்கவும் ... நினைவு வந்தும் விழிகளை திறந்தவள்.. அவன் மார்பில் சாய்ந்திருந்த தன் தேகத்தை .. சிறு கூசலுடன் .. அவனிடமிருந்து ..தன்னைப் பிரித்து .. தள்ளி அமர்ந்தவள்..பாண்டியனின் கண்களை நேராகப் பார்த்து.." அப்போ, சொத்துக்காக தான்". என்னை.. என முழுவதும் கூற முடியாமல் ... கண்ணீரில் கரைய ஆரம்பித்தாள்....

அவளின் கண்ணீரை துடைக்க .. எழுந்த கரத்தை .. கட்டுப்படுத்திக் கொண்டு .. சற்று தள்ளி . மாடிப்படி.. அருகேயிருந்த தூணில் சாயந்து .. கண்களை மூட .. மனமோ.. ஒரு நிலைப்படாமல் .. தன் அன்னை இறந்த அன்று, துடித்தைப் போல துடிக்க.... பெண்ணவளிடம் .. உண்மையை சொல்லப் போவதால் .. இப்படி..துடிக்கிறது இதயம் .. என இதயம் கூறும் .. எச்சரிக்கையை புறம் தள்ளியவன்.. கண்களைத் திறந்து ..

வானதி நாச்சியார்... நான் யாரு.. என் அப்பா - அம்மா, யாரு.. உனக்கும், எனக்கும், என்ன சம்பந்தம் .. குள்ள நரி உன் அப்பனுக்கும், எங்க சந்தோஷம், உயிர் .. அழிஞ்சதுக்கும் .. என்னோட இத்தனை வருஷ தீராப் பகைக்கும், என்ன காரணம்னுதெரியுமா?.. என்க...

ரதி..' தெரியாது' என்பது போல் தலை அசைத்தாள்.,,,
"என் அப்பா... பூபதி பாண்டியன்... கோயமுத்தூர் மாவட்டம், 64 - பட்டிக்கும் தலைமை கிராமமான ... சின்னப்பட்டி .. கிராமத்தோட ஜமின் மகேந்திரப் பாண்டியனின் ..ஒற்றை ஆண் வாரிசு.. ஏகப்பட்ட நில, புலன்கள். தங்கம், வைடூரியங்கள் .. கணக்கில் அடங்காத ..அசையும், அசையா.. சொத்துக்களுக்கு உரிமைப்பட்டவர்..

அவர் தான் .. தந்தைக்கு அடுத்ததாக, அனைத்து .. நிர்வாகத்தையும், பார்த்துக் கொண்டார்

அப்போது .. கழனி ( வயல் ) முழுவதையும்.. பார்த்துக் கொள்ள.... உன் அப்பாவும் ., என் அம்மாவும்.... யாருமற்றவர்களாக... வந்தார்கள். இங்கே.. நிறுத்தி ..பாண்டியன் .. அப்போ .. நான் உனக்கு என்ன உறவென்று புரியுதா.. என்பதைப் போல் ரதியைப் பார்க்க...

அவன், பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவள்.." என் அப்பாவும், உங்க அம்மாவும், அண்ணன் ..தங்கையா?... அப்போ.. நீங்க .. எனக்கு மச்சான் முறை வேணும் .... அதனால தான்... அன்னிக்கு .. மச்சானு.. கூப்பிட சென்னிங்களா"..

போட்டோவில் இருந்தவர்களை பார்த்தே.. ஓரளவு இதை யூகித்திருந்தவள்.,, அவன் தன் அத்தை மகன்., என்பதில் .. சிறிது. மகிழ்ச்சி எட்டிப் பார்க்க. .. அது அவனுக்கும் உள்ளதா ?... .என ஆராயும் நோக்கில் .கேள்வி கேட்டு .. ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள். ...

பழைய நினைவுகளில் முகம் கசங்க நின்றிருந்தவன் அவளின் ஆர்வமுகத்தை .. கவனிக்காமல், தரையைப் பார்த்திருந்தவன்.. அவள் கேள்விக்கு.. கசந்தமுறுவலை .. முறுவலித்து விட்டு.. தன் கசந்தப் பக்கத்தை .. திறக்க ஆரம்பித்தான்..

என் அம்மா.. தெய்வநாயகி.. கருணை, பொறுமை, எதை ஒன்றையுமே.. ஆக்கும் சக்தி கொண்டவர். அவர் வயலில் வேலை செய்யும் , பாங்கு .. சகவேலை.... செய்பவரிடம் காட்டும் அக்கறை ... இதை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த .. என் தந்தைக்கு .. அவரின் பால் மனம் .. சாய... உயிர்நேசத்தை என் அன்னையின் மீது வளர்த்துக் கொண்டார்..

ஜமின் குடும்ப வழக்கப்படி .. ஜமின் குடும்பத்து பெண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும், ... என்ற ...கட்டுப்பாட்டையும் .. மீறி ... அவரை கைப்பிடிக்க..அவரின் சம்மதத்தோடு..தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டே ....

நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்களால் அவரை சிறையெடுக்க முயல .. இது என் அன்னைக்கு தெரியவில்லை.. உன் தந்தைக்கு தெரிய.. பணத்தாசை., பேர்... புகழ்.. ஆசைக்காக.,அவர் போட்டது தான் ... முதல் சதி திட்டம் .. கடைசியான நல்ல திட்டம் ..


என் தந்தை.. . மாலை. தினமும் கழனியைப் பார்க்க ....வரும் மாலை வேளையில்.. என் அன்னையோடு.... சில வயதான கிழவிகளை ... களை பறிக்கச் சொல்லி விட்டு...

விஷம் குறைவான பாம்பை... விலைக்கு வாங்கி வந்தவர் ... அங்கு வேலை பார்க்கும் ..ஒரு கிழவிடம் ..கொடுத்துத் தான் சென்றதும். சின்ன ஜமின் அய்யா வர சமயத்துல.. தெய்வா... காலுல கடிக்கிற மாதிரி.. பாம்பை விட்டுடு.. இப்படியாவது சின்ன ஜமின் அய்யா ஆசை நிறை வேறட்டும் ... என்று விட்டு மருதவேல்... சென்று விட... கிழவியும் அவ்வாறே செய்ய .. பாம்புக்கடி பட்ட தெய்வதுடிக்க..ஓடி வந்து அவரை தூக்கியபூபதி.. ஓட்டமும் ... நடையூமாகவே ..வைத்தியரின் வீட்டிற்கு... தெய்வாவை தூக்கிச் சென்று சேர்ப்பித்து ..அவரின் உயிரைக் காக்க.. மருதவேலின் கணக்குப்படி ..தெய்வாவை ஊராரர் தவறாகப் பேச .. அப்பேச்சில்... கொதித்தெழுந்த பூபதி.. "என்னால் தானே. அப்பெண்ணிற்கு, அவப்பெயர் .. அதனால் மணந்தால் அவளை தான் மணப்பேன் ... அவள்ளின்றி ... வேறு யாரையும் மணக்க.. மாட்டேன் .. இது இந்த ஜமின் ... மீது ஆணை என சொல்லவும் .... எங்கே ?...ஜமினுக்கு வாரிசு இல்லாமல் போயிவிடுமோ என பயந்து .. என் பெற்றோருக்கு மணம் முடித்து வைத்தார்" என் தாத்தா.


அவர்களின் அன்பிற்கு சாட்சியாக அடுத்த வருடமே.. நான் பிறக்க.. ஊரே திருவிழா கொண்டாட்டம் தான் அன்று... அடுத்த நாள்.. என் தாத்தாவின் ... வரவு... செலவு கணக்குகளை.... கேட்பதாலும், .... அனைத்து ...வகையிலும்,அச்சுறுத்தம்... கெடு, பிடிகளை தாங்க முடியாமல் ..2 ன் தந்தை. என் தாத்தாவை .. மாடியிலிருந்து தள்ளிக் கொன்றார்.

தன் அத்தை - மாமா.. காதல் கதையை... சுவாரஸ்ஸியமாக... கேட்டிருந்தவள்.. உன் தந்தை, என் தாத்தாவைக் கொன்றார்.. என்றதும்.. அதிர்ச்சியில், "ஆஹா "வென... வாயைப் பிளந்தாள்.

மேலும், தொடர்ந்தவன்.. எனக்கு .. நாலு வயது இருக்கும் போது.. பணக்கார பெண்ணான , .உன் அன்னையை .. அனைத்து .. செலவுகளையும் .... என் தந்தையே செய்து .. உன் தந்தைக்கு திருமணம் செய்து ..30 - ஏக்கர் .. நில,புலன்னோட ....ஒற்றை மாளிகைப் போன்ற வீட்டைக் கட்டிக் கொடுத்தார்..

அந்த நன்றி.. கூட இல்லாமல் .. அடுத்த .. ..4-வது மாதமே.... வேட்டைக்குச் சென்ற .. என் தந்தையை இருவர் ...பிடித்து... குப்புற தள்ளி .. கண்ணில் மண்ணை கொட்ட ....... சகல தற்காப்புக் கைலகளையுமே கற்றவர். நிலை குழைந்துப் போக..அவரின் ...முதுகில் .. கத்தியால் ... நிறைய தடவை கிழித்து .. .. அவரை தடுமாறச் செய்து..... குரல்வளையை நசுக்கி... உன் தந்தை.. கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி .. என் தந்தையை .... கொன்று விட்டு .. பணம் கொடுத்து .. யானையை விலைக்கு வாங்கி.... அதை விட்டு.... மிதிக்க .. வைத்து .. ஊராரின் ..பார்வைக்கு.. யானை மிதித்துக் கொன்றதுப் போல் .. நாடகமாடி .. அனைவரையும் நம்ப வைத்து .. என் அம்மா, நான் .. எங்கள் சொத்துக்களை அவரின் கைக்குள்ளே கொண்டு வந்தார் ...

"அய்யோ . இவ்வளளோ.... கொடூரனா.. தன் தந்தை.....என நெஞ்சில் கை வைத்து அலறினாள் ரதி..

அவளின் வெளிரிய முகத்தைப் பார்த்து. மேற்கொண்டு சொல்லலாம... என யோசித்தவன். அவளருகே சென்று... அவளின் ..கைப்பற்றி தட்டிக் கொடுத்தவன்.

சில மணித்துளிகள் அமைதியாக கழிய..

ஏன்? பாதிலேயே ..நிறுத்திட்டிங்க.. எங்க என் அத்தை என்றவளுக்கு. அப்போதுதான் மூளையில் பளிச்சிட்டது. இங்க வந்த முதல் நாள். கையெழுத்து போட..பாண்டியன் கடைசி அறைக்கு... அழைத்துச் சென்ற போது... மங்கலான ஒளியில் ..
பக்கப்பார்வையில்.. யாருக்கோ? .... மாலையிட்டு .. ஊதுபத்தி, விளக்கு... வைத்தும் எரிந்துக் கொண்டிருந்ததை.. நினைவுப்படுத்தியவளின் ..கண்கள் கண்ணீர் மழையைப் பொழிய ... "அப்போ... அவங்களையும்". . என் தந்தை கொன்று விட்டாரா?.. எனக் கேட்க முடியாமல் பாதியிலேய நிறுத்தி ..பாண்டியன் முகத்தை பயத்துடன் பார்த்தாள்.

"ம்ம்ம் எனத் தலையசைத்தவன் ... கத்தி எடுத்து.. கொல்லலை .. ஆனா, அதைவிட மோசமாக ..என்றவனின் ... கண்களிலும் .. கண்ணீர் ..வலியாகப் . பளபளத்தது...

இதை பற்றி சொன்னா.. நீ
தாங்கமாட்ட... இருந்தாலும்.. எனக்கு வேற வழி இல்லை ... மனசை திடப்படுத்திக்கோ.. என்றவன்.. எழுந்துச் சென்று. தூணில் பழையபடி சாய்ந்து நின்றுக் கொண்டான்.

"என் தந்தை இறந்த .. 7-வது மாதத்தில் நீ பிறந்தாய் ... உனக்கும் பேர் சுட்டு... விழாவுக்கு .. என் அன்னையுடன் .. நானும் ...எங்கள்... காரில் . பக்கத்து ஊரில் இருந்த ... உங்கள் வீட்டுக்கு வந்தோம்.. அப்போ ., எனக்கு 5 - வயசு ..இருக்கணும், மாலை வேளையில் ... விழா தொடங்கியது ..
Nirmala vandhachu ???
Suspense open aguthu pola
Sry pa today late
 
Top