Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீந்தமிழ் தாயிவள்!!

Advertisement

Visha bala

Well-known member
Member
வழமையான நெரிசலில்

வழியோரத்தில் அவள் இருக்க..

எங்கேயோ பார்த்த முகமென்று

எதேச்சையாய் நான் விசாரித்திட..

வார்த்தைகளே கசையென

வன்மையுடன் விளம்பினாள்

வஞ்சியவள் தன் கதையை..

அகரம் படைத்தவளடா-அந்த

அகத்தியமும் தந்தேனடா..

தொன்மை வாய்ந்தவளடா,

தொல் காப்பியமும் நீ கேளடா..

சிகரம் போல் இருந்த பெண்ணிவளை-இன்று

சிதைத்திட்டாய் அது ஏனடா?

கொள்ளையடிக்க வந்த ஒருவன்

கொடுத்துச் சென்ற பொருளினால்,

அறம் பழகிய என் குழந்தை-எனை

அழித்திட முனையுமோ? -என்று

அலட்சியமாய்த் தான் இருந்தேனடா -

மாணிக்கப் பரல் சிலம்பணிந்து..,

மணி முத்தான மேகலை கொண்டு..,

அதிசய சிந்தாமணியுடன்..,

அசைந்தாடும் குண்டலம் சேர்த்து..,

அழிவில்லாத வளையும் நான் பூண..

அணுதினமும் அலங்காரியாய்

அன்ன நடை தான் பயின்றேன்.

கொள்ளையனை விட மோசமான

கொலைகாரனாய் ஆன என் மகனே.,

அகரம் வரைந்த உன் நாவில்-இன்று

ஆங்கிலம் நீ பூசிடத்தான்..

அற்றைத்திங்களில் நான் அணிந்த

வலிமை கொண்ட என் வளையும்..,

வளைந்து தான் நெளிந்ததே..

காது கொண்ட குண்டலமும்..,

கருகித்தான் கரைந்ததே..

சீர் மிகுந்த சிந்தாமணியும்..,

சிதறித் தான் பறந்ததே-சிறு

மாசில்லாத என் மேகலையும்..,

மண்ணில் கழன்று விழுந்ததே-இறுதியில்

செம்பொன் நற்சிலம்பும்

சுக்கல் நூறு என்றானதே..

அன்னையவள் அருமை அறியாமல்

அந்நியனிடம் அடிமை ஆனாயே? ?

ஆங்கிலத்தை நேசிக்கும அறிவாளியே..

அன்னைத் தமிழை சுவாசிக்க மறந்தாயோ?-என

அகிலம் வணங்கிய நம் அன்னை..

அன்பெனும் அமிழ்தளிக்கும் தமிழன்னை..

ஆற்றுவார் தேற்றுவார் யாருமின்றியே..,

அலங்கோலமாய்க் கிடக்கிறாள் வீதியினிலே..

அன்னையவள் நம்மைக் கைவிட்டால் ..

அனாதையாய்ப் போய்விட மாட்டோமா?...

தங்கத்தை மீறி பொருளுண்டு..

தமிழைத் தாண்டியும் வேறு தாயுண்டோ???



-விபா
 

Attachments

  • g1.jpg
    g1.jpg
    13 KB · Views: 0
வழமையான நெரிசலில்

வழியோரத்தில் அவள் இருக்க..

எங்கேயோ பார்த்த முகமென்று

எதேச்சையாய் நான் விசாரித்திட..

வார்த்தைகளே கசையென

வன்மையுடன் விளம்பினாள்

வஞ்சியவள் தன் கதையை..

அகரம் படைத்தவளடா-அந்த

அகத்தியமும் தந்தேனடா..

தொன்மை வாய்ந்தவளடா,

தொல் காப்பியமும் நீ கேளடா..

சிகரம் போல் இருந்த பெண்ணிவளை-இன்று

சிதைத்திட்டாய் அது ஏனடா?

கொள்ளையடிக்க வந்த ஒருவன்

கொடுத்துச் சென்ற பொருளினால்,

அறம் பழகிய என் குழந்தை-எனை

அழித்திட முனையுமோ? -என்று

அலட்சியமாய்த் தான் இருந்தேனடா -

மாணிக்கப் பரல் சிலம்பணிந்து..,

மணி முத்தான மேகலை கொண்டு..,

அதிசய சிந்தாமணியுடன்..,

அசைந்தாடும் குண்டலம் சேர்த்து..,

அழிவில்லாத வளையும் நான் பூண..

அணுதினமும் அலங்காரியாய்

அன்ன நடை தான் பயின்றேன்.

கொள்ளையனை விட மோசமான

கொலைகாரனாய் ஆன என் மகனே.,

அகரம் வரைந்த உன் நாவில்-இன்று

ஆங்கிலம் நீ பூசிடத்தான்..

அற்றைத்திங்களில் நான் அணிந்த

வலிமை கொண்ட என் வளையும்..,

வளைந்து தான் நெளிந்ததே..

காது கொண்ட குண்டலமும்..,

கருகித்தான் கரைந்ததே..

சீர் மிகுந்த சிந்தாமணியும்..,

சிதறித் தான் பறந்ததே-சிறு

மாசில்லாத என் மேகலையும்..,

மண்ணில் கழன்று விழுந்ததே-இறுதியில்

செம்பொன் நற்சிலம்பும்

சுக்கல் நூறு என்றானதே..

அன்னையவள் அருமை அறியாமல்

அந்நியனிடம் அடிமை ஆனாயே? ?

ஆங்கிலத்தை நேசிக்கும அறிவாளியே..

அன்னைத் தமிழை சுவாசிக்க மறந்தாயோ?-என

அகிலம் வணங்கிய நம் அன்னை..

அன்பெனும் அமிழ்தளிக்கும் தமிழன்னை..

ஆற்றுவார் தேற்றுவார் யாருமின்றியே..,

அலங்கோலமாய்க் கிடக்கிறாள் வீதியினிலே..

அன்னையவள் நம்மைக் கைவிட்டால் ..

அனாதையாய்ப் போய்விட மாட்டோமா?...

தங்கத்தை மீறி பொருளுண்டு..

தமிழைத் தாண்டியும் வேறு தாயுண்டோ???



-விபா
தமிழுக்கு தமிழில் நீங்கள் பாடியிருக்கும் இந்த முகாரி, பூபாளமாக மாறி ஓங்கி ஒலிக்க வேண்டும்
 
Top