Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீண்டாதே 30🔥

Jadejavid

Well-known member
Member
PicsArt_11-10-12.18.25.jpg


தீண்டாதே 30🔥


"வன் இயர் லிவின் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்.. " என்று ஹர்ஷா சொல்ல சுற்றி இருந்தவர்களோ அதிர்ச்சியில் விழிவிரித்துக் கொண்டனர்.
தேவ்வோ முதலில் அதிர்ந்தாலும் பின் ஏதோ நியாபகம் வந்து, 'இருக்காதே.. எதுக்கு ஹர்ஷா இப்பிடி ப்ளே பன்னிகிட்டு இருக்கான்..' என்று யோசித்தவாறு அவனை அழுத்தமாக நோக்க,

மித்ராவோ "வாட்.." என்று அதிர்ந்தவள் பின், "நோ.. நோ.. ஹீ இஸ் லையி(Lie).. யு ப்ளடி லையர்(liar).. ஹவ் டேர் யு.." என ஹர்ஷா சொன்ன அப்பட்டமான பொய்யில் கொதித்தவள்,
"அமெரிக்காவில நாங்க பழகினது உண்மை தான்.. பட் இவன் சொல்ற மாதிரி இல்ல.. அங்கிள்.. ஆன்ட்டி என்னை நம்புங்க.." என்று மித்ரா புரிய வைக்க முயல,
"நானும் அவளும் சேர்ந்து தான் இருந்தோம்னு ஏதாவது ப்ரூஃப் வேணும்னா என்கிட்ட தாராளமா இருக்கு.. அமெரிக்காவுல என்கூட நல்லா தான் பழகினா.. என்னை ரொம்ப லவ் பன்னா.. பட் இப்போ என்னை வேணாம்னு சொல்றா.. ஷீ ச்சீடட்(cheated) மீ அங்கிள்.. பட் என்னால என் மதுவ விட்டுக் கொடுக்க முடியாது.. இப்போ சொல்லுங்க அங்கிள்.."
என்று ஹர்ஷா கொஞ்சமும் பிசறாமல் பேசிய பேச்சில் பெரியவர்களோ ஒருசேர மித்ராவை பார்க்க அவளோ அவன் தன்னை போட்டு கொடுத்ததில் பெக்க பெக்கவென விழித்துக் கொண்டிருந்தாள்..
"ஒரே கேள்வி தான் மித்ரா இந்த பையன காதலிச்சி ஏமாத்தினியா.." என்று அபி கேட்க,
என்ன சொல்வதென தெரியாமல் விழித்தவள் ஹர்ஷாவை பார்க்க அவன் அனல் பார்வையோ 'இல்லைன்னு சொல்லி தான் பாரேன்..' என்று ரீதியில் தான் மிரட்டிக் கொண்டிருந்தது..
"ஸ்பீக் அவுட் மித்ரா.. ஹர்ஷாவ காதலிச்சி ஏமாத்தினியா." என்று ஆதி அதட்டி கேட்டதில் சற்று திடுக்கிட்டவள் எச்சிலை விழுங்கியவாறு மேலும் கீழும் ஆம் என்ற ரீதியில் தலையாட்ட பெரியவர்கள் பார்த்த அனல் பார்வையிலே பொசுங்கி விட்டாள் மித்ரா..
"இப்போ மட்டும் உன் அம்மா இருந்தா நீ பன்ன காரியத்துக்கு உன்ன கொன்னு போட்டிருப்பா மித்ரா.." கயல் அவளை முறைத்தவாறு சொல்ல மித்ராவோ தன் அத்தையை ஏறெடுத்து பார்க்க சங்கடப்பட்டு கைகளை பிசைந்தவாறு தரையையே வெறித்துக் கொண்டிருந்தாள்..
"எங்களை மன்னிச்சிறுங்க ஹர்ஷா.. எங்க வீட்டு பொண்ணு இப்பிடி பன்னுவான்னு.." என்று சித்து பேச வர அதை குறுக்கிட்ட ஹர்ஷா,
"அச்சோ அங்கிள் என்ன நீங்க போய் மன்னிப்பெல்லா கேட்டுகிட்டு.. நா இப்போ இங்க எனக்கு ஜஸ்டிஸ்(justice) கேட்டு வரல.. ஐ வோன்ட் டு மெர்ரி ஹெர்.. அதுக்கு உங்க பதில் என்ன.." என்று ஹர்ஷா கேட்க,
இவ்வளவு நேரம் நான் செய்தது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட்டது என்ற சங்கடத்தில் இருந்தவள் ஹர்ஷா மீண்டும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்ததில்,
"நோ ஐ கான்ட்.. நா யாரை வேணா கல்யாணம் பன்னிப்பேன்.. எனக்கு நீங்க எந்த மாப்பிள்ளை பார்த்தாலும் எனக்கு கல்யாணத்துக்கு ஓகே.. பட் இவன் மட்டும் வேணாம்.. இல்ல இல்ல.. எனக்கு கல்யாணமே வேணாம்.." என்று மித்ரா கத்திக் கொண்டிருக்கும் போதே அவள் பேச்சில் பொறுமையை இழந்தவன் அவளை நெருங்கி அவள் தாடையை இறுகப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்த அவன் பிடியில் உண்டான வலியில் முகத்தை சுருக்கினாள் மித்ரா.
"ஹர்ஷா லீவ் ஹெர்.." என்று தேவ் ஒரு அடி முன்னோக்கி வர ஹர்ஷா பார்த்த பார்வையிலே அப்படியே நின்று விட்டான் தேவ்..
"என்ன டி சொன்ன.. என்னை கல்யாணம் பன்னிக்க மாட்டியா.. எங்க.. மறுபடியும் சொல்லு.. சொல்லி தான் பாரேன்.. யாரை வேணா கல்யாணம் பன்னிப்பியா.. அதுவும் என் முன்னாடியே இப்பிடி சொல்ல எவ்வளவு தைரியம் டி உனக்கு இருக்கனும்.." என்று கர்ஜிக்க சுற்றி இருந்தவர்களோ முதல் முறை ஹர்ஷாவின் இந்த கோபத்தை பார்த்ததில் ஆடிப்போய் விட்டார்கள் என்றால் மித்ராவுக்கோ உதடு துடிக்க கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்து விட்டது..
"சொல்லு டி.. மறுபடியும் அப்படி சொல்லுவியா ஹான்.. கேக்குறேன்ல.." என்று ஹர்ஷா அதட்டி கேட்க அவன் அதட்டலில் பயந்தவள்,
"மாட்டேன்..மித்.. மித்து.." என்று திக்கித் திணறி சொல்லி சிறுபிள்ளை போல் இருபக்கமும் தலையாட்டினாள்.
தன் பிடியை தளர்த்தி,
"உனக்கு நல்லாவே தெரியும் என்னை பத்தி.. தென் வை டிட் யு ட்ரை.. ஹான்.. நா சொன்னது சொன்னது தான்.. உன்ன கல்யாணம் பன்னிக்க உன் சம்மதம் எனக்கு தேவையில்லை.." என்று அவளை மேலும் நெருங்கியவன், அவள் அணிந்திருந்த லேடிகட் ஷேர்ட் கோலரில் கை விட்டு அவள் கழுத்தில் அவன் அணிவித்திருந்த செயினை வெளியில் எடுத்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு,

"இதை நா உன் கழுத்துல போட்டப்பவே முடிவு பன்னிட்டேன்.. நீ தான் என் பொண்டாட்டின்னு.. இதை இப்போ வரைக்கும் நீ தூக்கி போடாம வச்சிருக்கும் போதே புரிஞ்சிக்கிட்டேன்.. உன் மனசுல நா தான் இருக்கேன்னு.. சோ, டோன்ட் ப்ளே வித் மீ மது.. உனக்கு புடிக்குதோ இல்லையோ என் டிஷிஷன்க்கு(decision) நீ சம்மதம் சொல்லி தான் ஆகனும்.. புரியுதா.." என்று கேட்க,
அவள் அப்போதும் சிவந்த உதடுகள் துடிக்க தன்னவனையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருக்க "புரியு..தான்..னு கேட்..டேன்.. " என்று அவன் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி கேட்க, மித்ராவோ தலையை எல்லா பக்கமும் பூம்பூம் மாடு போல் ஆட்டியதில் சுற்றி இருந்தவர்களுக்கோ மயக்கம் வராத குறை தான்..
இதுவரை யாருக்கும் கட்டுப்படாதவள் தனக்கென வட்டத்தை அமைத்து அதில் யாரையும் தன்னை நெருங்க விடாமல் தனக்கு தோன்றியதை செய்துக் கொண்டு எவர் பேச்சையும் காதில் வாங்காமல் இத்தனை நாட்கள் தங்கள் முன் இருந்த மித்ராவா இது என்று கேட்கும் படி இருந்தது அவளின் தோற்றம்..

உடல் நடுங்க கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு ஹர்ஷாவையே மிரட்சியுடன் பார்த்தவாறு அவன் மிரட்டலுக்கு சிறுபிள்ளை போல் தலையாட்டியவளை கண்ட எல்லாருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது..
தங்களை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புறம் திரும்பியவன்,
"அங்கிள் சீக்கிரம் வீட்ல இதை பத்தி பேசி சொல்லி உங்ககிட்ட பேச சொல்றேன்.. இன்னும் வன் மன்த்ல எனக்கும் மதுக்கும் கல்யாணம் நடக்கனும்.. அதுல யாருக்கும் சம்மதம் இருக்குதோ இல்லையோ.." என்று கறாராக சொல்லி விட்டு எல்லாரும் தங்களை பார்ப்பதை கூட கண்டுக்காது மித்ராவை அணைத்து அவள் கன்னத்தை இரு கைகளிலும் தாங்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்,
"லவ் யு பேபி.. டேக் க்யார்.." என்று சொல்லி விட்டு செல்ல மித்ராவோ ஒரு இடத்தையே தான் வெறித்துக் கொண்டிருந்தாள்..
ஆதியோ கயலை கண்களால் அறையை கண்ஜாடை காட்டி விட்டு செல்ல பின் ஒவ்வொருவராக அந்த இடத்திலிருந்து கலைய ஆரம்பித்தனர். இத்தனை நேரம் இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த வேலுவுக்கு இப்போது தான் அரவிந்தின் நிறைவு வர சட்டென்று மாடியை பார்த்தவளுக்கு அங்கு அவன் இல்லாததில் புரிந்து போனது அவன் எந்தளவு நொறுங்கி போயிருப்பான் என்று..

ஆதி கயலின் அறையில்,

"கயல் அது நிஜமாவே நம்ம மித்ரா தானா.." என்று ஆதி இவ்வளவு நேரம் இருந்த தன் சந்தேகத்தை கேட்க,
முதன் முறை மித்ரா ஒருவருக்கு அடங்கி பார்த்த கயலுக்கு புன்னகை தோன்ற,
"அதுல என்ன சந்தேகம் சிடுமூஞ்சி.. அவளே தான்.. ஆர்யன் ருத்ராவ சிரிச்சே சமாளிப்பான்னா ஹர்ஷா மித்ராவ மிரட்டியே சமாளிக்கிறான்.." என்று சொல்ல,
சிறிது நேரம் யோசித்து ஆதியோ,
"ஆமா கயல் மித்ரா விஷயத்துல நாங்க ஏதோ ஒரு விதத்துல தப்பான முடிவு எடுத்துட்டோம்.. அதனால அவ வாழ்க்கையில எங்கள தலையிட விடாமல் அவ விரைப்பா இருக்கலாம்.. ஆனா அதுக்காக அவள அப்பிடியே விட்டுற முடியாது.. நா நினைக்கிறதை தான் நீயும் நினைக்கிற அப்படி தானே..." என்று சிரித்தவாறு கேட்க,
"எக்ஸ்ஸாக்ட்லி(Exactly).. ஹர்ஷாவை தவிர வேறு யாராலையும் மித்ராவை கன்ட்ரோல் பன்ன முடியாது.. முதல் தடவை மித்ரா ஒருத்தரோட பேச்ச கேட்டு பதில் சொல்றதை இன்னைக்கு தான் பார்த்தேன்.. ஆனா ஏன் அவ அப்படி பன்னா.. நம்ம வீட்டு பொண்ணு காதலிச்சி ஏமாத்துற அளவுக்கு போயிட்டாளா.. " என கயல் ஒருவித வேதனையில் பேச,
"இல்ல கயல் அவ மனசுல அவன் இல்லைன்னா இவ அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டிருக்கவே மாட்டா.. அதுவும் அவ வீட்லயே எங்க எல்லார் முன்னாடியும் இவ்வளவு உரிமையா அவள அதட்டுறான்னா.. அந்த பையனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்.. என்னை பொருத்த வரைக்கும் மித்ரா மனசளவுல ரொம்ப குழம்பி போயிருக்கா.. இரண்டு விஷயங்களுக்கு நடுவுல ரொம்பவே சிக்கித் தவிக்கிறா.. அவளை ஹர்ஷாவால மட்டும் தான் சரி பன்ன முடியும்.. " என ஆதி சொல்ல,
"அப்போ இந்த விஷயத்துல உங்களுக்கு சம்மதமா ராஜன்.. பட் ஹர்ஷா யாருன்னு.." என கயல் இழுக்க,

"ஐ க்னோ கயல்.. பட் மித்ரா பத்தி ஹர்ஷாவுக்கு உண்மை தெரிஞ்சத்துக்கு அப்றம் அவன் மனநிலை எப்பிடி இருக்கும்னு சொல்ல முடியாது.. என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்.." என்று ஆதி சொல்ல தன்னவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் கயல்.

அன்று இரவு,


மொட்டை மாடியில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய வண்ணம் முகம் சற்று சிவந்திருக்க சோர்ந்து போன கண்களுடன் வானத்தையே வெறித்தவாறு நின்றுக் கொண்டிருந்தான் அரவிந்த்..
"அவிந்த்.." என்ற வேலுவின் குரலில் சட்டென திரும்பி தன் கண்களை துடைத்து விட்டு முகத்தை சாதாரணமாக வைக்க பெரும்பாடுபட்டான் அரவிந்ந்..
"சொல்லு நச்சு.." என்று உணர்ச்சிகளை அடக்கிய வண்ணம் கேட்க அவள் காதல் கொண்ட மனமோ தன்னவனை நினைத்து ஊமையாக தான் அழுதது..
"என்கிட்ட எதுக்கு அவிந்த் நடிக்குற.. நா தான் உன் ஒரே ஆறுதல்னு எப்பவும் சொல்வல்ல.. இப்போ.." என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.. அவளை அணைத்து ஓவென்று அழுக ஆரம்பித்து விட்டான் அவிந்த்..
"என்னால முடியல நச்சு.. நா இவ்வளவு நாள் அவளுக்கும் என் மேல விருப்பம் இருந்திருக்குன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கேன்.. ஆனா மித்ரா.. எனக்கு அழுகை அழுகையா வருது நச்சு.. என் காதல் சொல்லாமலே புதைஞ்சிருச்சி.." என அவன் சிறுபிள்ளை போல் அழுக,
அவனை தன்னோடு அணைத்துக் கொண்டவள்,

"எவ்ரிதிங் இஸ் கொய்ங் டு பி ஆல்ரைட்.. ரிலாக்ஸ் அவிந்த்.. ரிலாக்ஸ்.. ப்ளீஸ்.." என்று அவள் சமாதானப்படுத்த நேரம் போவதே தெரியாமல் அவளின் ஆறுதலில் சற்று அழுகையை நிறுத்தி அவள் தோளிலே சாய்ந்தவாறு அரவிந்த் இருக்க வேலு தான் தன்னவன் வேறு பெண்ணிற்காக கலங்குவதில் ஏற்படும் வேதனையை தாங்க முடியாது மௌனமாக கண்ணீர் வடித்தாள்..
------------------------------------------------------------------

கொலேஜ் கேன்டீனில்,


"பாவம் டி அக்கா.. அன்னைக்கு மாமா மிரட்டுனதுல ரொம்ப பயந்துட்டாங்க.. மாமா இப்பிடி அதிரடியான ஆள்னு எனக்கு முன்னாடியே தெரியாம போயிருச்சி டி.." என தியா ஆச்சரியமாக சொல்லிக் கொண்டிருக்க,
"உன் அக்காவ சமாளிக்க ஹர்ஷா ப்ரோவ மாதிரி இருந்தா தான் முடியும்.." என்று அனா பேசிக் கொண்டிருக்கும் போதே எப்போதும் போல் இரு பெண்களையும் பயத்தில் அலற வைத்து தாவி குதித்து அவர்களுக்கருகில் வந்தமர்ந்தான் அனிருத்..
அனாவோ ஏகத்துக்கும் முறைக்க இவன் வந்ததில் முதலில் அதிர்ந்தாலும் பின் முகத்தை வேறுபுறம் திருப்பி அவனை கண்டுக்காதது போல் அமர்ந்திருந்த தியாவை கண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே,
"ஹாய்ய் ஏன்ஜல்.." என்று சொல்ல அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..
"அவமானப்பட்டான் ஆட்டோக்காரன்.." என வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த அனா, "டேய் குரங்குப் பயலே.. இந்த பழக்கத்தை விடவே மாட்டியா டா.. ரொம்ப பதறுது டா.." என்று பாவம் போல் சொன்னதில், அனாவின் தலையில் தட்டியவன்,
"என் ப்ரோ கொடுத்த ஷாக் அ விடவுமா நா உங்களுக்கு கொடுக்குறேன்.." என நக்கலாக கேட்க,
"அதுவும் வாஸ்தவம் தான்.. எங்க வீட்ல தலைப்புச் செய்தியே உங்க ப்ரோதான்னா பாரேன்.. ஆனா ஹர்ஷா ப்ரோ வேற லெவல்ல.. சூப்பர் டா.." என்று அனா சொல்லி பின் ஏதோ யோசித்தவள்,
"ஆமா டா லண்டன்.. உன் வீட்டுக்கு இந்த மேட்டர் தெரியுமா.." என்று தீவிரமாக கேட்க,
'இல்லை..' என்று தலையாட்டியவன்
"எங்க தாத்தா ரொம்ப ஸ்வீட்.. என் அப்பாவும் பெரியப்பாவும் தான் ஜாதி அப்பிடி இப்பிடின்னு லைட்டா பார்ப்பாங்க.. பட், இப்போ என் அப்பா அப்படியெல்லா இல்ல.. பெரியப்பா மட்டும் தான்.." என தயக்கமாக இழுத்தவன் பின்,
"பட், தட்ஸ் நொட் அ பிங் டீல்.. அவருக்கு ப்ரோன்னா உயிரு.. சோ, எப்படியும் சம்மந்திப்பாரு.. அச்சு ப்ரோ அதெல்லாம் பாத்துப்பாரு.." என்று சொல்ல,
தியாவோ, "எல்லா நல்லதாவே நடந்தா சரி தான்.. என் அக்கா இப்பிடியே இருந்துருவாங்களோன்னு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்.. பட் இப்போ மாமாவ பார்ததிலிருந்து அந்த டென்ஷனே எனக்கில்ல.. ரொம்ப நிம்மதியா இருக்கு.. மாமா எப்பவும் சூப்பர் தான்.." என தியா சிறுபுன்னகையுடன் சொல்ல,
அதில் பாவமாக முகத்தை வைத்த அனி,
" உன் மாமா மட்டும் தான் சூப்பரா.. உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்க உன் அக்காவோட கொழுந்தனார பத்தியெல்லாம் யோசிக்க மாட்டியா.. அவங்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியது.. " என அடக்கிய சிரிப்புடன் சொல்ல,

"ஆஹான்.. பேஷா கவனிச்சிட்டா போச்சு.." என்று சொல்லி அங்கிருந்த ஃபோக்(folk) ஆல் அவன் கையில் குத்த "ஆஆ.." என்று அலறியவன்,
"வை இந்த வெறி ஏன்ஜல்.. " என்று அப்பாவி போல் கேட்டான் அனி.
"இங்க பாரு அனிருத்.. எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. தயவு செய்து உன் மனசுல இருக்க கிறுக்குத்தனமான எண்ணத்தை இதோட விட்டுறு.." என கிட்டதட்ட தியா கத்த,
அவள் ரித்து என்ற அழைப்பிற்காக ஏங்கியவன் உதட்டை பிதுக்கியவாறு,
"ஏன் ஏன்ஜல் இப்பிடி சொல்ற.. என்கிட்ட என்ன டி குறை.. நீ சொல்ற ரீசன் ரொம்ப ஸ்டுபிட் ஆ இருக்கு.. என்னால அதை ஏத்துக்கவே முடியல.." என அனி சொல்ல,
கோபமாக குறுக்கிட்ட தியா..,
"உனக்கு எல்லாமே ஸ்டுபிட் தான்.. நீ வளர்ந்த விதம் அப்படி.. பட் நா அப்படி இல்ல.. என்னை விட சின்ன பையன எல்லாம் என்னால ஹஸ்பன்ட்டா ஏத்துக்க முடியாது.. நீ எனக்கு தம்பி மாதிரி ரித்து.." என்று தியா சொன்னதும் "வாட்.." என்று அனி கத்த அனாவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்..
"திஸ் இஸ் டூ மச் ஆரா.. வெறும் எட்டு மாசம் கேப்க்கு என்னை உன் தம்பி ரேன்ஜ்க்கு நீ பேசுறது ரொம்ப ஓவர்.." என்று அனி பொங்கி எழ,

"அது தானே ஃபேக்ட்டு.. நீ எனக்கு தம்பி தானே.." என அசால்ட்டாக சொன்ன தியாவின் மேல் தற்போது அனிக்கு கொலைவெறியே வந்து விட்டது..
"இந்த அநியாயத்தை தட்டி கேக்க மாட்டியா நட்பு.. " என அவன் அனாவை பார்க்க கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தவள் சட்டென இருவரையும் முறைத்து,
"ஆமா டா.. நீ விண்ணை தாண்டி வருவாயா சிம்பு.. இவங்க த்ரிஷா.. இவள விட நீ வயசு கம்மின்னு உன்னை ஏத்துக்க முடியாம தவிக்குறாங்க.. போடா புடலங்கா.. நீ அரை கிறுக்கன் அவ முழு கிறுக்கி இந்த ஈர வெங்காய பஞ்சயத்துக்கு என்னையும் கூட்டி சேர்க்குறியா.. போங்க டா நீங்களும் உங்க வீணாபோன லவ்வும்.." என திட்டிவிட்டு அனா அவள் பாட்டிற்கு நகர,

இதுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் தன் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு கோபம் எழ,
"லுக்.. இனி என்னை தம்பின்னு கூப்பிட்ட அதுக்கப்றம் பேசுற அந்த உதட்டை இழுத்து வச்சி கடிச்சிறுவேன்.. க்யார்ஃபுல்.." என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு அனிருத் செல்ல தியா தான் அவன் கூற்றில் 'உதட்டை கடிச்சிறுவானா..' என மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள்..
--------------------------------------------------------------

அன்று இரவு,


தேவ்விடமிருந்து அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்த ஹர்ஷா,
"ஹெலோ தேவ்.. என்ன இந்த நேரத்துல.. "என என்ன ஏதோ என்று பதட்டமாக கேட்க,
"ஒன்னுஇல்ல ஹர்ஷா.. ஒரு முக்கியமான விஷயம்.. " என்று தேவ் சொல்லியதில் ஹர்ஷாவோ யோசனையாக புருவத்தை நெறித்து எதுவும் பேசாது அமைதியாகவே இருந்தான்..
"மித்ராவ பத்தி உங்க மனசுல இருக்க மொத்த கேள்விக்கும் நாளைக்கு உங்களுக்கு பதில் தெரிய போகுது ஹர்ஷா.. " என்று தேவ் சொன்னதும் தான் தாமதம்
அடுத்த நொடி,
" வாட் நிஜமாவா.. எப்போ எங்க வரனும்னு மட்டும் சொல்லுங்க.. ஐ வில் பீ தெயார் ஒன் டைம்.." என்று உற்சாகமாக ஹர்ஷா சொல்ல தேவ்விற்கோ, 'இப்போ இருக்க இந்த சந்தோஷம் நா நடந்ததை சொன்னதுக்கு அப்றம் இருக்குமா..' என மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை..
"ஓகே ஹர்ஷா ***** ஹோட்டல்ல நம்பர் 201 ரூம் புக் பன்னியிருக்கேன்.. நாளைக்கு மதியம் அங்க மீட் பன்னலாம்.. " என்று தேவ் சொல்ல ஹர்ஷாவுக்கோ 'எதுக்கு ஹோட்டல் ரூம்..' என்ற கேள்வி மனதில் தோன்ற மறைக்காது அவனிடமே கேட்டு விட்டான்..
"அது வந்து ஹர்ஷா.. வெளில வச்சு பேசுறது எனக்கு சரியா படல.. உங்க மனநிலை எப்பிடி வேணா மாறலாம்.. அதான்.." என்று தேவ் தயக்கமாக சொல்ல ஹர்ஷாவுக்கு அவன் சொன்னது பாதி புரியவில்லை என்றாலும் மேலும் கேள்வி கேட்காது சம்மதித்தவன் அடுத்த நாள் டான் என்று தேவ் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே அந்த ஹோட்டல் அறையில் இருந்தான் ஹர்ஷா..

அவனுக்கு எதிதே அமர்ந்த தேவ் கைகளை பிசைந்தவாறு அமைதியாக இருக்க ஹர்ஷாவோ சற்றும் நிதானம் இல்லாமல்,
"சொல்லுங்க தேவ்.. மொதல்ல மது யாரு.. அவளோட அப்பா அம்மா யாரு.. அவங்க இறந்ததால தான் என் மது இப்பிடி இருக்காளா.. இல்ல.. அதுக்கான ரீசன் தான் என்னோட டாட்ஆ.. " என்று அவன் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க சற்று உள்ளுக்குள் பதறித்தான் போனான் தேவ்..

பெருமூச்சுவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன் முட்டியில் கைகளை கோர்த்து ஊன்றி ஹர்ஷாவையே அழுத்தமாக பார்த்தவாறு,
"மித்ரா பத்தி தெரிஞ்சிக்க முன்னாடி முதல்ல அவ அப்பா அம்மாவ பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும் ஹர்ஷா.. " என்று சொல்ல ஹர்ஷாவோ கண்களில் ஆர்வத்துடன் தேவ்வை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

தொடரும்..🔥
--------------------------------------------------------------

நட்பூஸ் நெக்ஸ் எபி மித்ராவ பத்தி எல்லா உண்மையும் தேவ் ஹர்ஷாகிட்ட சொல்ல போறான்.. So keep reading
As usual AWAITING FOR UR COMMENTS..✌

-ZAKI🔥
 
Advertisement

Advertisement

Top