Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை சேர்ந்த ஓடங்கள் - 5

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 05

242
சஷ்டியுடன் அறைக்குள் முடங்கியிருந்தவளுக்கு நடப்பது எதையும் நம்பவே முடியவில்லை. அறைக்கு வெளியே அவர்களது பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது… தீவரமாய் எதையோ வாதிக்கிறார்கள் என்பதும் அது தங்களைப் பற்றித் தான் என்பதும் புரிகிறது… ஆனால் ஏன்..? என்னைத் தான் வேண்டாம் என்று சொன்னார்களே… ? இப்போது என்ன, புதிதாய் வந்திருக்கிறார்கள். என்று எண்ண அவள் மனசாட்சியோ நீ இருக்குமிடம் மட்டும் தெரிந்திருந்தால் முன்னமே அவர்கள் வந்திருப்பார்கள்… நீ தான் யாரையும் உன்னை நெருங்க விடவில்லையே என்று கூற, தலை தான் வலித்தது, இவர்களுக்கு என்ன தான் வேண்டுமாம் எரிச்சலாய் வந்தது…


குழந்தையைப் பார்த்தாள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனை நன்றாகப் படுக்க வைத்து ரஜாயை இழுத்து மூடியவள் தன்னையே ஒரு முறைப் பார்க்க, முரட்டு ஜீன்சும், ஒரு குர்தியும், அதற்கு மேல் ஒரு ஓவர் கோட்டும் என மார்டனாய் தான் இருந்தாள்… சிவகுருவை மனதில் வைத்து அவர் முன் மரியாதையாய் நடக்க வேண்டும் என்பதால், ஒரு அவசரக் குளியலைப் போட்டு, சுடிதாருக்கு மாறியிருந்தாள்…


நீண்ட, அடர்ந்த தலைமுடியை குழந்தை பிறக்கும் சமயம் பாப் கட்டிங்காக மாற்றியிருந்தாள்… யாரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்ற எண்ணம் அதோடு தலைக்கு குளிக்கும் சமயம் குழந்தைக்கும் சளி பிடிக்கும் என்பதால் வெட்டியிருந்தாள்.. இப்போது வேளைக்காரணமாக, பார்லர் சென்று வருவதற்க்கு நேரமில்லாததால் முடியை வெட்டாமல் அப்படியே விட்டிருந்தாள். அது அவளுக்கு முதுகுக்கு கீழே வந்திருந்தது. அதை அப்படியே ஒரு போனி டெயில் அடக்கியவள் , கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அது நிர்மலமாய் இருந்தது… பெரும் யோசனைக்குப் பிறகு சிறு கருப்பு பொட்டை நெத்தியில் வைத்தவள், அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்…


வெளியே செல்ல, அவர்களை எல்லாம் எதிர் நோக்கப் பெரும் தயக்கம் வந்தது, மருத்துவமனையில் சஷ்டியைத் தேடி வர, அங்கே சிவகுரு தன் பேரனை மடியில் வைத்துக் கொண்டு கெல்வினிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தார்… சாருவுக்கு ஒன்றுமே புரியவில்லை… எப்படி இதெல்லாம் நடந்தது என்ற பெரிய கேள்வி தான்… அகமும் புறமும் பெரும் குழப்பம் அவளை சூழ, அதற்குள் தாயைப் பார்த்த சஷ்டி, அவளிடம் வந்து காலைச் சுற்றியிருந்தான்…


மகனைத் தூக்கியவள் அனிச்சையாய் அவர்களிடம் செல்ல, சஷ்டியையே பார்த்திருந்தவர்கள், அவன் சாருவிடம் வந்ததைப் பார்க்க, இப்போது சாருவையே பார்த்திருந்தார்கள்… அவள் நேராக சிவகுருவிடம் சென்று, “வாங்க அங்கிள், எப்படி இருக்கீங்க…” எனவும்,


“உங்களை பார்த்துட்டேன் இல்ல, இனி நல்லா இருப்பேன்..” ரொம்ப சந்தோசம் சாரும்மா, நீ என் கிட்ட பேசிட்ட, பேச மாட்டேன்னு நினைச்சேன். என் மேலயும் உனக்கு கோபம் இருக்கும், உன் கோபமும் நியாயம் தான். என்ன மன்னிச்சுருடா தங்கம்…” என தழுதழுக்கப் பேச,


“ப்ளீஸ் அங்கிள், நீங்க இப்படியெல்லாம் பேசாதீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு, அதோட, உங்க மேல என்னத் தப்பு இருக்கு நீங்க மன்னிப்பு கேட்க, பழசை எல்லாம் விட்டுங்க. நான் அதையெல்லாம் மறந்துட்டேன் என்று சிவகுருவை சமாதனப் படுத்த,


“சார் ப்ளீஸ், அதுதான் அவ அவ்வளவு சொல்றாளே, விடுங்க இனி நடக்குறது எல்லாமே நல்லாதாவே நடக்கும், மனசை குழப்பிக்காதீங்க…” என கெல்வின் அவரை ஆறுதல் படுத்திய படியே, சாருவைப் பார்த்து, “ருக்மாவை வீட்டுல விட்டுட்டு வந்துருக்கேன், எல்லாருக்கும் சமைக்கனும் இல்லையா..? புகழ் வந்துடுவானா…? இல்லை அவன் வர லேட்டாகுமா…? லேட்டானா நீயும் சாரும் முன்னாடி போங்க, நான் அவனை அழைச்சுட்டு வரேன்…” அவள் பேச இடம் கொடுக்காமல் கெல்வினே பேசி முடிக்க, சாருவின் முகம் குழப்பதைக் காட்டியது…


அவளது குழம்பிய முகத்தை கவனித்த சிவகுரு, “கெல்வின் நாம கிளம்புவோம்…” அவனுக்கு கூறியவர், சாருவிடம் “என்னை வீட்டுக்கு அழைக்க மாட்டியா சாரும்மா…” என்றார்…


“அங்கிள்… வாங்க போக்லாம், இப்போ தான் இப்படியெல்லாம் பேசாதீங்க சொன்னேன். மருபடியும் சொல்றேன் உங்க மேல எனக்கு கோபமோ, வருத்தமோ கொஞ்சம் கூட கிடையாது… இப்படி பேசுறது தான் கஷ்டமா இருக்கு… ப்ளீஸ் வாங்க… என சஷ்டியோடு முன்னே நடக்க,


சிவகுரு கெல்வினிடம் சைகையில் எதையோ கூற, அவனும் சரியென்பது போல் தலையாட்டினான்.. சாரு கார் சாவியை கெல்வினிடம் கொடுத்து விட்டு, பின் பக்கம் ஏறப்போக, அவனோ “டயர்டா இருக்காடா…” என்றான் சம்பந்தமே இல்லாமல் அவன் ஏன் கேட்கிறான் என்று புரியவில்லை என்றாலும் “இல்லை” எனும் விதமாக தலையாட்டி விட, “அப்போ நீயே டிரைவ் பண்ணு எனக்கு சின்ன வேலை முடிச்சுக்குறேன்..” என சரியென்று காரை எடுத்தாள்…


ஆண்கள் இருவரும் பின் பக்கம் ஏற, சஷ்டியை சிவகுரு வாங்கிக் கொண்டார்… கெல்வின் தன் மொபைலில் சாருவின் அட்ரசை மெஸேஜ் செய்துவிட்டு, சிவகுருவைப் பார்த்தான்… அவரும் சிறுதலையாட்டல் கொடுத்துவிட்டு பேரனிடம் லயித்து விட்டார்… கார் கிளம்பிய சில நிமிடங்களிலேயே சாருவின் போன் அடித்தது, காரை ஓரம் கட்டியவள் யாரனப் பார்க்க “Dr,Jith” என வரவும், இன்பார்ம் பண்ணாம வந்துட்டோமே அதுக்குத் தான் கால் பன்றார் போல, என்று எண்ணியப்படியே


“ஹலோ டாக்டர்….”


“…………”


“டாக்டர்….. டாக்டர்…. “ என்னாச்சு லைன் போகுதே, ஏன் பேசமாட்டேங்குறாங்க, என்று போனை எடுத்துப் பார்த்து விட்டு மீண்டும் காதுக்குக் கொடுத்தவள், “ஹலோ டாக்டர்…” எனவும்


“நான் புகழ் பேசுறேன்…. “ என்றதும் இவள் அதிர்ச்சியில் போனை கீழே விட, இப்போது அவன் “ஹலோ…. ஹலோ….” எனவும்,


இங்கு, என்னாச்சுடா, போன் தவறிடுச்சா எடுத்துப் பேசு,” என, கெல்வின் கூற, மற்றவர்கள் முன் எதையும் காட்டாமல் மீண்டும் போனை காதுக்கு கொடுத்து “சொல்லுங்க டாக்டர்” என்றதும்,


“ம்ம்…. அப்பா உன் கூட இருக்காங்கன்னு நினைக்குறேன் அவர்ட்ட பேசனும் அவர் போன் ரீச்சாகல, கொஞ்சம் கொடு….”


“கால் பண்ணாதான் ரீச்சாகும், பண்ணாமலே ரீச்சாகலன்னு ஏன் சொல்றீங்க…” பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பியவள், சிவகுருவிடம் திரும்பி, “அங்கிள் உங்களுக்குத் தான் போன்…” என்று விட்டு வண்டியை எடுத்தாள்…


இரண்டு நிமிடங்கள் பேசியவர், போனை அவளிடம் கொடுத்து விட்டு மீண்டும் பேரனிடம் கவனத்தை செலுத்த, அப்போது கெல்வின், “சார் புகழ் கூட பேசுறீங்களா…? எப்போ இருந்து…? என்றான்…


அவனை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவர், “இப்போ ஒன் மந்தா தான் பேசுறான்… வசந்திக்கு முடியாம போனதுல இருந்து பேசுறான்… அவனும் தன்னோட ரிசர்ச் எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டான்… அவனோட ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்…” என்றார்…


“எனக்குத் தெரியவே இல்லை… நீங்க சொல்லவே இல்ல…” மிகுந்த குற்ற உணர்வுடன் கெல்வின் சொல்ல,


“நான் உன்னை முழுசா நம்பினேன், நீ அதுக்கு உண்மையா இல்லை… எனக்கு உன்மேல நிறைய வருத்தம் இருக்கு… ஆனா கோபம் இல்லை… நீ செய்த எல்லாம் எங்களுக்காக தான்னு நினைக்கும் போது உன்னை நினைச்சு பெருமையா இருக்கு… நீ இதை என் கிட்ட சொல்லிருக்கலாம்… சொல்லல… இப்போவும் புகழ் உன் கிட்ட எதையும் கேட்க வேணாம் தான் சொன்னான்… அவன் சொல்வது சரி தான்… சுயநலமா செய்யல, ஏதோ கட்டாயத்துல தான் செய்திருப்பான்… இதுல முழுசா பாதிக்கப்பட்டது புகழ் தான்…அவன் உன்னை எதுவும் சொல்லத போது, நான் என்ன சொல்ல, இனிமேலாவது இப்ப்டி செய்யாதே…” என்றார் மிகுந்த வருத்ததுடன் சிவகுரு….


ஒரு மகனைப் போல் நடத்தியவரிடம், தான் நடந்து கொண்ட விதம் தவறு தான்… ஆனால் அதே நேரம் சாருவின் பக்கமும் யோசிக்க வேண்டுமே… புகழைத் தாங்கிக் கொள்ள அவனைப் பெற்றவர்கள் இருந்தார்கள்… ஆனால் பணக்கார அனாதையான சாருவிற்கு அப்போது யாருமே இல்லையே, நடந்ததை யாராலும் மாற்ற முடியாது… நடக்க இருப்பதை மாற்ற முயற்சிக்கலாம் என்று எண்ணியவன், வேறெதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான். குற்றம் செய்த உணர்வில்…


பின்னால் இருந்த இருவரின் பேச்சையும் கேட்டவள், ‘என்ன…? மாமா அவனோடு பேசுவதில்லையா…? ஆனால் ஏன்…? புகழுக்கு நாங்கள் இருக்கும் இடம் முன்னமே தெரிந்திருக்க வேண்டும், அது நிச்சயம், இல்லையென்றால் சரியாக இந்த தருணத்தை அவன் பயன்படுத்தியிருக்க முடியாது… முன்னமே என்றால் எப்போ…? எப்போ…? ஒருவேளை நாங்கள் இங்கு வந்து தருணத்திலேவா…? இல்லை, அப்படியென்றால் இத்தனை நாட்கள் விட்டு வைத்திருக்க மாட்டான்… வேறு எப்போது..? என்று பல யோசனையில் இருந்தவள், சிவகுரு பேசியதன் சாரம்சம் புரிய, கெல்வின் குற்ற உணர்வினை பார்த்தவள், “அங்கிள் அண்ணாவை கோவிச்சுக்க வேண்டாம் ப்ளீஸ், இவர் செய்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம்… நான் தான் என்னைப்பத்தியோ சஷ்டி பத்தியோ யாருக்கும் சொல்லக்கூடாது சொன்னேன்… சொன்னா உங்களுக்கும் தெரியாம வேற எங்கயாச்சும் போயிடுவேன் சொன்னேன்…” என்றாள் உள்ளே சென்ற குரலில்….


“வேண்டாம் சாரும்மா… பழசை பேசி யாரும் கஷ்டப்பட வேண்டாம்… விட்டுடுவோம்…”


“இல்ல சார்… அன்னைக்கு சாரு இடத்துல யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்துருப்பாங்க அவள் செயல் தப்புக் கிடையாது… ஆனால் எதையும் முழுசா தெரிஞ்சுக்கல, அதுதான் அவளோட தப்பு… இப்பவும் அங்க நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது… அவளோட இந்தக் கோபம் தப்பு… அவளுக்கும் இந்தப் பிரிவு சில உண்மைகளை உணர்த்தும்னு நினைச்சேன்… அவளோட கோபமும் குறையும்னு தோனிச்சு, அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் எடுக்கவிடாம அமைதிப்படுத்த, அவளோட வழிக்கே நானும் போனேன்… அவக் கேட்டதை நான் செய்தேன்… அவளுக்கு புல் சப்போர்டிவா நான் இருந்துருக்கேன்…. இனியும் இருப்பேன் ஒரு அண்ணனா என் கடமையை செய்வேன்… அவளோட விருப்பம் போல ஒரு வாழ்க்கையை நான் கொடுப்பேன் நிச்சயமா….


“கெல்வின் உன்னை இங்க யாரும் தப்பு சொல்லல, ஒரு அண்ணனா உன் தங்கை மேல உனக்கு இருக்குற பாசமும், உரிமையும் உண்மையாது. அதை யாரும் குறை சொல்லல… நீ டென்சன் ஆகாத விடு, இனி என்ன செய்றது என்பதை மட்டும் பார்க்கலாம்…. சரியா..?


“கண்டிப்ப சார், இந்த மூனு வருஷமா, இவ சொன்னதை நான் கேட்டேன்… இனி நான் சொல்றதை அவக் கேட்பா கேட்கனும்… வேற வழி இல்ல…? இவளுக்கு நான் வைக்குறது ஒரே கண்டிசன் தான்… ஒன்னு தான் இவ புகழோட வாழனும் இல்ல, அவனை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செய்யனும்… இதுல இவளுக்கு ஆப்சனே நான் கொடுக்கல… இல்ல நீங்க சொல்றது எல்லாம் என்னால கேட்க முடியாது… என் இஷ்டமாத்தான் செய்வேன்னு நினைச்சா என்னை சுத்தமா மறந்துட வேண்டியது தான்… நான் இனி இவளோட எந்த பேச்சும் வச்சுக்க மாட்டேன்… இது தான் என் முடிவு என்றான் கெல்வின் ஸ்திரமாக…


பேச்சின் முடிவில் கார் சட்டென்று குலுங்கி நிற்க மற்ற இருவருக்கும் பயம் வந்துவிட்டது… நாம் இப்போது அதைப் பத்தியே பேசியிருக்கக் கூடாதோ… என்னவோ… எதோ என்று முன்னாடிப் பார்க்க,


“வீடு வந்துடுச்சு அங்கிள் இறங்குங்க…” என்றபடியே தானும் இறங்கியவள், சிவகுருவின் மடியில் உறங்கிய மகனை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சாரு…


அவர்கள் பேசியதைக் கேட்டும் சாரு ஒன்னும் சொல்லாமல் சென்றதை கண்டவன் உடனே எதையும் திணிக்க வேண்டாம், அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கனும் என்று எண்ணியவன், “வாங்க சார்” என்று சிவகுருவை அழைக்க அவரது பார்வை அந்த வீட்டின் மேலேயே இருந்தது…


அவன் ஒரு முறை அழைத்தும் அவர் பார்வையைத் திருப்பாமல் இருக்க, அவரைத் தொட்டு “சார்” என்றதும் “கெல்வின் அது நம்ம கெஸ்ட் ஹவுஸ் தானே இவ்வளவு நாளா சாரு இங்கேயா இருந்தா…” நம்பவே முடியாத ஆச்சரியம், அவரது குரலிலும், பார்வையிலும்..


“உங்களோட கெஸ்ட் ஹவுஸ் தான் சார்… சாருவை முழுக்க செக்யூர் பண்ணனும் நினைச்சேன், அவ ப்ரண்ட் இங்கே இருக்கறதா முன்னாடி ஒரு டைம் சொல்லிருந்தா. சோ அதையே அவளுக்கும் ஞாபகப்படுத்தி இங்கேயே கூப்பிட்டு வந்துட்டேன்… அவளோட சாய்ஸை சூஸ் பண்ணிருந்தா, இந்தியா மேப்லயே இல்லாத ஒரு குக்கிராமமா தான் இருந்திருக்கும், அவளை வேற எதையும் யோசிக்க விடாம, நைனிடாலை வை சூஸ் பண்ண வச்சுட்டேன்…”


“உன்னை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு செல்வின், நீண்ட ஆயுளோடு குடுமபம் குழந்தைன்னு சந்தோஷமா இருக்கனும்… நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருந்தாங்க என்றால், அப்போ புகழுக்கு இவங்களை பத்தி முன்னமே தெரிஞ்சுருக்கனும் சரியா…”


“எஸ் சார்... மே பி” என்றபடியே இருவரும் உள்ளே சென்றனர்….


திசை மாறும் ....
 
என்ன தான் நடந்தது.... அண்ணனாக கெல்வின் super.... Eagerly waiting for your next ud sis..
 
Top