Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை சேர்ந்த ஓடங்கள் - 4

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 04
234


இன்று தான் நவ்தீப்பின் அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது… இரண்டு நாட்களுக்கு முன்னமே மருத்துவக் குழு அவனை தங்களுக்குக் கீழ் கொண்டு வந்து விட, அவனின் பெற்றோர் தான் பெரிதாய் பயந்து போயிருந்தனர்… சினிமாவில் காட்டுவதைப் போல் ஏதேனும் செய்து விடுவார்களோ என்றொரு பயம். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் இது போல் நடக்கத் தானே செய்கிறது… எது நடந்தாலும் பொறுமையாய் இருக்க வேண்டிய கட்டாயம் இப்போது அவர்களுக்கு,

நவ்தீப் நோயோடு போராட, அவனின் பெற்றவர்கள் கடவுளோடு போராடிக் கொண்டிருந்தனர்.. சிவகுருவும் செல்வினும் ஒரு வாரத்துக்கு முன்பே நவ்தீப்பின் சர்ஜரிக்குத் தேவையான பணத்தைக் கட்டிவிட்டு, அவர்களை ஆறுதல் படுத்தி புகழைப் பற்றியும் கூறிவிட்டு, சென்றிருந்தனர்.


அன்று கோபத்தில் பேசியது தான் சாருவிடம், அதன் பிறகு பலமுறை அவள் அழைத்தும் செல்வின் பேசவில்லை. கோபமெல்லாம் கிடையாது. ஒரு குற்ற உணர்ச்சி தான், பேசினால் அவளும் வருத்தப்படுவாளே என்று சாருவின் அழைப்புககளைத் தவிர்த்திருந்தான்… இங்கு வந்து சென்றதும் கூட அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்…


சிவகுரு வேறு அவன் கூடவே இருப்பதால் எந்த வகையிலும் சாருவை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்க வில்லை செல்வின். இவர்கள் வந்து சென்ற அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் புகழ் வந்திருந்தான்…

நவ்தீப்பின் ரிப்போர்ட்ஸை ஆல்ரெடி அனலைஸ் செய்து, இப்போது ஒருமுறை பிஸிகல் எக்ஸாம் செய்திருந்தான்… எதிர்பாராத விதமாக, ஒரு வாரமாய் ஷஷ்டிக்கு பீவர் படுத்தி விட, சாருவால் நகர முடியவில்லை… சந்தீப்பிடமும், மற்ற டாக்டர்களிடமும் நவ்தீப்பின் உடல் நிலையைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்…


இதோ இன்றைக்கு அவளும் அந்த அறுவை சிகிச்சையில். செல்வினுக்குத் தான் பதட்டம் அதிகமிருந்தது. சிவகுருவிடம் சொந்த வேலை என்று கூறி லீவ் சொன்னவன் புகழுக்கு பின்னே நைனிடால் வந்திருந்தான் யாருக்கும் தெரியாமல்… எதுவோ நடக்கப் போவது போல் அவனுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது.. அதை உறுதி செய்வதைப் போலவே இருவரும் ஒரே சர்ஜரியில், அய்யோ என்றானது செல்வினுக்கு, இருவருக்கும் தெரியுமா.? தெரியாதா..? இருவருக்கும் தெரிந்திருந்தால் சாரு நிச்சயம் ஒத்துக்கொண்டிருக்க மாட்டாள்… என்ன நடந்திருக்குமோ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டே வெளியே வர, ஹாஸ்பிடல் காரிடரில் ஷஷ்டியை வைத்துக் கொண்டு ருக்மா நின்று கொண்டிருந்தாள்.

இப்போது என்ன செய்யலாம் என்ற யோசனையில் அப்படியே நின்றிருந்தவனை நோக்கி ஷஷ்டி வர அவன் சென்ற திசையில் ருக்மாவும் பார்க்க, தன்னிடம் வந்த குழந்தயை அள்ளிக் கொண்டவன் ருக்மாவிடம் எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தான்…


அறுவை சிகிச்சை அறை

“அனஸ்தீசியா கொடுத்து ட்வெண்டி மினிட்ஸ் ஆகுது டாக்டர்.. டென் மினிட்ஸ்ல ஸ்டர்ட் பண்ணிடலாம்…" என சாரு கூற


“ஓகே டாக்டர் சாஷி யு கேரி ஆன்.. உங்க சன்னைப் பாருங்க, நான் உங்களுக்கு அப்புறம் கால் பண்றேன்… I can mange , U don’t worry” என ஜிதேந்தர் அவளிடம் கூற,


“எஸ் டாக்டர்.. Thank u so much for ur understanding Doctor… Shall I leave..”


“yeah, sure Shashi please”


“once again thanks jith, and incase any emergency call me” என்றபடியே அந்த அறையை விட்டு வெளியேற, அதுவரை வெறும் பார்வையாளராக மட்டும் இருந்த புகழ்,


“Dr. jith… பீடியாட்ரிசியன் அவைலபிள் தானே. இல்லைன்னா உடனே வரவச்சுடுங்க, வந்ததுக்கு அப்புறமே ஸ்டார்ட் பண்ணலாம்" என் தன் வேலையை ஆரம்பிக்க, அந்தக் குரல் வெளியே செல்ல இருந்த சாருவை அதிர்ச்சியுடன் நிறுத்தியது… சட்டென்று அவனைக் காண அவனும் அவளைப் பார்த்தான்…

இந்தக் குரல் திருவோட வாய்ஸ் எப்படி, எப்படி, அப்போ திரு தான் அந்த ஃபாரின் ரிடன் டாக்டரா? இதை எப்படி தெரிஞ்சுக்காம போனேன்… ஓ மை காட், ஷஷ்டி வேற வெளியே இருந்தானே, பார்த்திருப்பானோ, பார்த்த உடனே அடையாளம் தெரிஞ்சுடுமே..? என்ன செய்ய, இவனை எப்படி இப்போ பேஸ் செய்றது, கண்டிப்பா முடியாது. பார்க்கவே கூடாதுன்னு நினைச்ச முகம், இதோ அவளுக்கு முன்னே… கண்கள் விரிய திருவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…


அறுவை சிகிச்சை உடையில் இருக்க, அவனது கண்கள் மட்டும் தான் அவளுக்குத் தெரிந்தது.. அதனால் அவனை அடையாளம் தெரியவில்லையோ என்ற யோசனை ஓடியது… இவள் யோசனையில் இருக்க, மற்ற இருவரும் சிறு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்…


“என்னோட பைனல் டிஷிஷன் இது தான், நீங்களே பேசி ஒரு முடிவெடுக்க சொல்லுங்க, அவங்க புரிஞ்சுப்பாங்க.. தென் நீங்க ஏன் ஸ்டேன்ட் பை டாக்டர் பிக்ஸ் பண்ணல… இது ஆபரேஷன் தியேட்டர், பிலிம் தியேட்டர் இல்ல வந்துட்டு,வந்துட்டு போக, நீங்க பர்ஸ்ட் பைனலைஸ் பண்ணுங்க” என்று கராராய் பேசுபவனைப் பார்த்து எரிச்சல் வந்தது சாருவிற்கு…


நைனிடாலில் பெயர் போன மருத்துவமனை அது. அதன் MD தான் டாக்டர் ஜிஜேந்தர்… சில அரசியல் வாதிகளைப் பகைத்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார், சஷ்டி பிறந்தது கூட இங்கு தான்.. தனக்கு தந்தை போல் இருந்து சில பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவரை, இவன் எடுத்தெறிந்து பேசுவதா என்ற கோபம் வேறு வர,


“வாட்ஸ் எ ப்ராப்ளம் டாக்டர், கேன் ஐ ஹெல்ப் யூ..? எனவும்,


“நோ..நோ..சாஷி.. ஐ கேன் மேனேஜ்… யூ கேரி ஆன்…” என சஷ்டியை மனதில் வைத்து மறுக்க, அவரின் பதிலில் இப்போது புகழ் எரிச்சலாகி ஒன்றும் சொல்லாமல் அவளருகில் வந்தான்… கண்கள் மட்டும் தெரியுமாறு மாட்டியிருந்த மாஸ்க், அவளது உடலின் படபடப்பை மறைத்தது எனலாம், ஆனால் விழிகளின் படபடப்பை மறைக்க முடியவில்லை அவளால்…

நிதானமாய் அவள் முன் நின்றவனை, உணர்வற்ற பார்வைப் பார்க்கத் திணறி ஒருவழியாய் அதை மீட்டு 'என்ன' என்ற கேள்வியை கண்களில் தாங்கி அவனைப் பார்த்தாள் சாரு…


“லுக் டாக்டர், இது மிகவும் கிரிட்டிகலான சர்ஜரி, பாஸிடிவாகவும் அமையலாம், நெகடிவாகவும் அமையலாம், எனவும் அவள் ‘என்ன’ என்ற அதிர்ச்சியுடன் அவனை நோக்க,

“நோ… நோ… நான் ரியாலிட்டியை சொல்றேன்.. சென் ப்ரசண்ட் வாக்குறுதி கொடுக்க முடியாது என்னால… ஆனாலும் ட்ரை பண்ணுவேன்… என்னோட எல்லா சர்ஜரியும் அப்படித் தான். பேசன்டோட கேஸ் சீட் படிச்சிருக்கீங்க தானே, அதுல பேசன்டுக்கு வீசிங் ப்ராப்ளம் இருந்ததா சொல்லிருக்கு, இப்போ இல்ல, ஆனா வரலாம்… அதோட, பேசன்ட் சைல்டு கண்டிப்பா எனக்கு ஒரு பீடியட்ரிசியன் தேவை… டேட் பிக்ஸ் பண்ணும் போது அவைலபிள்னு சொல்லிட்டு, இப்போ எமர்ஜென்சி போயிட்டாங்க இல்லைன்னு சொல்றார்…” என பற்களைக் கடிக்க,


மற்றவர்களுக்கு அவன் கோபமாய் பேசுவதாக தெரிந்தாலும், சாருவுக்கு வேறு எதுவோ தோன்றியது… இப்படி எல்லாம் இவன் கரார் பேர் வழி இல்லையே, ஒரு வேளை இடைப்பட்டக் காலத்துல, இப்படி ஆகிட்டானா..? இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணியவள், தனக்காத்தான் ஜிஜேந்தர் திட்டு வாங்குகிறார் எனப் புரிந்தது…


அதனால் அவனை நேராய் பார்த்து “ஓகே டாக்டர், நான் தான் பீடியாட்ரிசியன், இன்னைக்கு நான் தான் இருக்கேன்ன ஜித் கிட்ட சொன்னேன்.. மோரோவர் சம் ஹெல்த் இஸ்யூ, சோ ஐ கான்ட் அட்டெண்ட் சர்ஜரி.. பட் ஸ்டில் ஐ கேன் டூ இட்…


அவள் அப்படிக் கூறியதும் அவன் கண்கள் சிரித்ததோ என்று கூடத் தோன்றியது சாருவிற்கு… அவன் ஏதாவது சொல்வான் என சில நொடிகள் அவள் நிற்க, ஒன்றும் சொல்லவில்லை…


“திமிர் பிடித்தவன் ஏதாவது கேட்குறானா பாரு, தபேலா மண்டையன்… ச்சே…” என்று மனதிற்குள்ளேத் திட்டிய படியே நகரத் தொடங்கியவளின் கைகளை அவன் பற்ற, அதில் விதிர்த்து திரும்ப, “டாக்டர் சாருகேஷிக்கு சாமி பக்தி அதிகமோ அதிலும் முருக்கடவுள் ரொம்ப பிடிக்குமோ..” எனவும் சாருவிற்கு சட்டென்று அனைத்தும் விளங்கியது. அப்படியென்றால் அவனுக்கு எல்லாம் தெரியுமா..? சஷ்டியைப் பார்த்து விட்டானா..? பார்த்த பிறகும் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கிறான்…? என்ற கேள்விகள் பல தலையை உருட்டினாலும், அதை வெளியேக் காட்டாமல், தன் கையை அவனிடமிருந்து உருவிக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்…


அதுவரை இழுத்து வைத்த பொறுமையை விட்டவன், “இந்தத தடவையும் என் கையை விட்டு ஓடிப்போகலாம்னு மட்டும் நினைச்சுடாதே, அது நான் இருக்குறவரைக்கும் நடக்காது… தென் சஷ்டிக்கு இப்போ பீவர் நார்மல் தான்.. உன் கூட இருக்குற பொண்ணு நல்லாப் பார்த்துக்குவா. அவ கூட இப்போ உன்னோட பாசமலரும் இருக்கான்… சோ கவலையில்லை" என்று அடுத்தக் குண்டைப் போட்டான்… முதலிருந்தே அவன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராதவளின் உதடுகள் ‘ஸெல்வின் அண்ணாவா' என்று தன்னிச்சையாக முனகிக் கொண்டே அவனிடமிருந்து தன் கைகளை வெடுக்கெனப் பிரித்து, வெளியே செல்ல போக,


“ஒன் செகண்ட் டாக்டர், உங்க பெர்சனல் ப்ராப்ளம்ஸ் எல்லாத்தையும் இங்கே கொண்டு வராதீங்க ஒரு உயிரோடு மதிப்பு தெரியாம விளையாடாதீங்க… நீங்க இல்லாம இந்த கேஸ் நடக்காது ரைட்" என்று சாருவைப் பார்த்து அழுத்தத்துடன் கூறிவிட்டு க்ளவசை எடுத்து தன் கைகளில் மாட்டினான் புகழ்.


அவன் ஏதோ ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறான் என்று புரிகிறது அவளுக்கு… அதோடு மின்னலாய் நவ்தீப்பின் முகம், “நவ்தீப் இஸ் நவ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்" என்ற குழந்தையின் அழகு முகம் வந்து போகிறது. வேறு எதையும் யோசிக்காமல், அவனுக்குப் பின்னே அவளும் சென்றாள்…


தனக்குப் பின்னால் வந்தவளின் கண்களைப் பார்த்து (இப்போதைக்கு அது மட்டும் தான் ஓபன் ப்ளேஸ், சோ அங்க மட்டும் தான் நோக்கியா போன் வொர்க் ஆகுது) "என் பின்னாடி வர உனக்கு இத்தனை வருசம் ஆகிருக்கா" நிதானமான அவன் கேள்வியில், எரிக்கும் பார்வையை அவன் மேல் செலுத்தி விட்டு, இருவரையும் வித்தியாசமாய் பார்த்து குழம்பிப் போய் நின்றிருந்த ஜிதேந்தரை நோக்கிச் சென்றவள், “என்னால எந்த ப்ராப்ளமும் வேண்டாம் டாக்டர், நான் இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்லை… ஸ்டார்ட் பண்ணலாம்," எனவும்


வேண்டாம் என் மறுத்து மீண்டும் புகழிடம் ஒரு வாக்குவாதம் ஆரம்பிக்க, அவர் விரும்பவில்லை… எனவே அவரும் சரியென்று விட, அடுத்த வந்த நான்கு மணி நேரம் முழுதாய் முடிய, நவ்தீப் சேப் ஜோனுக்கு கொண்டு வரப்பட்டான்… சர்ஜரி வெற்றியானதும் அனைவரும் அவனைப் பாராட்ட, சாருவும் ‘கங்க்ராட்ஸ்’ என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டாள்…


ஆனால் இந்த நான்கு மணி நேரத்தில் அவனது உழைப்பு அபாராமானது, சிறு சிறு நுணுக்கங்களையும் ஆராய்ந்து அவன் அந்தக் கட்டியை முழுமையாய் அகற்றிய விதம், அவளை வியப்பில் ஆழ்த்தியது உண்மை.. ஒவ்வொரு இடத்திலும் அவன் விவரித்த விதம், முன்னெச்சரிக்கையாய் என்ன செய்ய வேண்டும் என்று கூறிய விதம் என்று எல்லாமே அவளை அவன் மேல் மரியாதையை இன்னும் கூட்டியது…


“முதலில் அவன் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து, கோபத்தில் ஏதேனும் பிழை நடந்து விடுமோ என அவள் பயந்து எவ்வளவு முட்டாள் தனம் என்பது புரிந்தது… சர்ஜரி தொடங்கிய நொடியில் இருந்து முடியும் தருவாய் வரை அவன் கவனம் எதிலும் சிதறவில்லை… “கடமை கண்ணாயிரம் தான் போல” என்று எண்ணிக் கொண்டவள் எல்லோரும் அவனை வாழ்த்துவதைப் பார்த்து, மற்றவர்கள் பார்வையில் வித்தியாசம் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவள், அவனிடம் தன் வாழ்த்தைத் தெரிவித்து விட்டு நகர்ந்து விட்டாள்… சாருவின் செய்கையில் அவள் மீது அழுத்தமாய் ஒரு பார்வையை பதிந்து விட்டு, ஜிதேந்தரிடம் அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை சொல்லிக் கொண்டிருந்தான் புகழ்…
 
சூப்பர் புகழ் சூப்பரோ சூப்பர்
இங்கே நைனிடாலுக்கு வந்துட்டான்
பொண்டாட்டி சாருகேஷியையும் பையன் சஷ்டியையும் பார்த்துட்டான்
சூப்பரா ஆபரேஷன் செஞ்சு நவ்தீப்பையும் காப்பாத்திட்டான்
பொண்டாட்டியையும் பையனையும் இனி திருப்புகழ் விட மாட்டான்
இப்போ என்ன செய்வீங்க வசந்தாம்மா இப்போ என்ன செய்வீங்க?
 
பேரன் சஷ்டி இருப்பது தெரிந்தால் வசந்தாம்மாவின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், வதனி டியர்?
 
ஊருக்கு வர சாரு விரும்பலைன்னு புகழிடம் மறுத்திடுவாள்
So, சாருகேஷியின் வீட்டுக்கு எதிர் பிளாட்டில் புகழ் குடி வருவான்னு படித்த ஞாபகம்
சரியா, வதனி டியர்?
 
Top