Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 10....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 10.

அண்ணன் சபாரத்தினம் சொல்லித்தான் மாணிக்கம் வந்தான். அவர்களது தொழிலை சென்னை வரை விஸ்தரிக்கவும், அப்படியே தங்கை எப்படி இருக்கிறாள்? எனப் பார்த்து வரவும் தான் சபா அவனை அனுப்பினான். அண்ணனுக்கு சற்றும் குறைந்தவன் அல்ல மாணிக்கம். திறமை, வேகம், அவசரம் என எல்லாவற்றைலும் அண்ணனை அப்படியே உரித்து வைத்திருந்தான். தங்கையைப் பார்த்ததும் கட்டிப் பிடித்து அழுது தீர்த்தான்.

"ஐயையோ! தங்கச்சி! ராணி! இது என்னம்மா? நீ இப்படி ஆயிட்ட? எளச்சுக் கருத்துப் போயிட்டியே?" என்று அழுதான்.

அவர்கள் தனிக்குடித்தனம் வந்து இரு மாதங்கள் கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் என்னவோ ஆண்டுக்கணக்கில் பார்க்காதவர்கள் போல இருவரும் அழுது தீர்த்தனர். நிதிக்கு எரிச்சலாக வந்தது.

"என்ன மச்சான்? குழந்தை மாதிரி? போங்க போயி ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க! ராணி! அண்ணனுக்கு டீ போட்டு வைம்மா. அப்படியே என் டிஃபன் பாக்சையும் கட்டி வெச்சிரு" என்றான்.

அப்படியே கையை நீட்டி அடிக்க வந்து விட்டான் மாணிக்கம்.

"என்னடா? என் தங்கச்சியை இப்படி அதிகாரம் பண்ற? என் எதிர்லயே இப்படி நீ பேசுறியே? நாங்க இல்லேன்னா என்னென்ன பேசியிருப்ப?" என்றான் ஆத்திரத்தோடு. இன்னும் ஒரு நிமிடம் நிதி தாமத்திருந்தால் அடி விழுந்தே இருக்கும். கைகளைத் தடுத்து விட்டான். நிதிக்கு பயங்கரக் கோபம். இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பொறுமையாகக் கேட்டான்.

"மச்சான்! ஏன் இப்படிக் கோபப்படுறீங்க? நான் ஒண்ணும் தப்பா சொல்லலியே?" என்றான் கட்டுப்ப்டுத்திக்கொண்ட குரலில்.

"அண்ணே! என் தலைவிதியப் பார்த்தியா? எப்படி வளர்ந்தேன்? இன்னைக்கு எனக்கு நாதியே இல்லாமப் போயிடிச்சே?" என்று அழுதாள் தங்கை. இப்போது நிதியை அடிப்பதை விட தங்கையை சமாதானப்படுத்துவது முக்கியமாக ஆனதால் தப்பித்தான் நிதி.

"ராணி! ராணிக்கண்ணு! உனக்கு என்னம்மா? ஏன் இப்படி ஏங்கி ஏங்கி அழுற? ஐயோ! என் தங்கச்சிய இவன் என்ன செஞ்சானோ தெரியலியே?" என்று புலம்பினான்.

இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் அலுவலகத்துக்கு நேரமாய் விடும் அதோடு ரசாபாசமாக அடிதடியே நடக்கக் கூடும் எனக் கணித்து அலுவலகத்துக்குக்கிளம்பினான் நிதி. அவன் போன பிறகு ராணி அண்ணனுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு பேசினாள் பேசினாள் அப்படிப் பேசினாள்.

"அண்ணே! நீங்க எல்லாரும் சொன்னப்ப எனக்குத் தெரியாமப் போச்சுண்ணே! காதல் கண்ணை மறைச்சிரிச்சு. இன்னைக்கு அதுக்குப் பலனை நல்லா அனுபவிக்கிறேன்" என்று கேவினாள்.

"ராணி! நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு! அவனை என்ன பண்றேன் பாரு"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ணே! எல்லாம் என் தலையெழுத்து. யாரைக் குத்தம் சொல்லி என்ன?" என்றாள் பெரிய மனுஷி போல.

"என்ன தான் நடக்குது இங்க சொல்லேன்?" என்றான் மாணிக்கம்.

"அண்ணே! இவரும் ரொம்ப நல்லவரு தான். ஆனா ஏழை வீட்டுப் பையன்றதால பல விஷயங்கள் தெரியல்ல"

"என்ன சொல்லு?"

"முதல்ல நல்லாத்தான் இருந்தாரு. ஆனா போகப் போக என்னை எல்லா வேலையும் செய்யச் சொல்றாரு, சமைக்கணுமாம், பாத்திரம் தேய்க்கணுமாம், வீடு பெருக்கணுமாம். முதல்ல இந்த வீட்டைப் பாருங்க. நம்ம வீட்டு கூடத்தை விடச் சின்னது. இந்த வீட்டுல என்னால இருக்கவே முடியல்ல, மூச்சு முட்டுது. அதனால வெளியில போகலாம்னா பணம் இல்ல, காசு இல்லேன்னு ஒரே புலம்பல்" என்றாள்.

"பணமில்லியா? ஏன்? இவன் சம்பாதிக்குறது எல்லாம் எங்க போகுது?"

"அதான் எனக்கும் தெரியல்லண்ணே! மாசம் சுளையா 50,000 வாங்குறாரு. ஆனா எப்பக் கேட்டாலும் பணமில்லன்னு தான் சொல்றாரு" என்றாள்.

"இதை இப்படியே விட்டா சரிப்படாதும்மா! நல்லவேளை நான் வந்தேன். சபா அண்ணன் வந்திருந்தாருன்னா இந்நேரம் உன் புருசன் சட்டினி ஆகியிருப்பான்,. நீ கவலைப் படாதே! நான் என்ன ஏதுன்னு விசாரிக்கறேன். " எனச் சமாதானம் சொன்னான். இருந்தாலும் இங்கிருக்கும் நிலைமை தங்கள் குடும்பத்தாருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஃபோன் செய்தான். மதிய உணவின் போது அனைவரும் வீட்டிலிருப்பார்கள் என்பதால் அந்நேரம் பேசினான்.

"என்ன மாணிக்கம்! தங்கச்சி நல்லா இருக்கா?" என்றான் சபா எடுத்த எடுப்பில்.

"என்னத்தைச் சொல்ல அண்ணே! அந்தப் படுபாவி, நம்ம புள்ளைய கொடுமைப்படுத்துறான் அண்ணே" என்றான் மாணிக்கம் குரல் கம்ம. கேட்டுக்கொண்டிருந்த சங்கரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அனைவரும் கேட்க வேண்டும் என்பதற்காக ஸ்பீக்கரில் போட்டிருந்தான்.

"ஆமாண்ணே! வீட்டு வேலைக்காரி மாதிரி தங்கச்சியை வேலை வாங்குறான். வெளிய கூட்டிக்கிட்டுப் போறதே இல்ல. வீடு பார்த்தா ரொம்பச் சின்னதா இருக்கு. பாவம் நம்ம தங்கச்சி" என்றான் மாணிக்கம்.

"இன்னும் என்னடா அங்க பண்ணிக்கிட்டு இருக்க? தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு உடனே கிளம்பி வா, வரும் போது அவனை நல்லா கவனிச்சிட்டு வா. மூணு மாசம் படுக்கையை விட்டு அவன் எந்திரிக்கக் கூடாது" என்று கத்தினான் சபா.

இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த சங்கரி இடை மறித்தாள்.

"தம்பி! தப்பா நினைக்காதீங்க. ராணியைக் கூட்டிக்கிட்டு நீங்க வாங்க. ஆனா நிதியை எதுவும் செஞ்சிராதீங்க. என்ன இருந்தாலும் அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. அதுவும் போக என்ன நடந்ததுன்னு முழுசாத் தெரிஞ்சிக்காம நாம முடிவுக்கு வர முடியாது" என்றாள் அமைதியான குரலில்.

என்ன புரிந்ததோ? சபா மௌனமானான். தொடர்ந்து பேசினாள் சங்கரி.

"தம்பி! கொஞ்சம் ஃபோனை ராணி கிட்டக் கொடுங்க" என்றாள் சங்கரி. அங்கேயும் ஸ்பீக்கரில் தான் இருந்தது போலும் ராணி பேசினாள் "சொல்லுங்க அண்ணி! கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றாள்.

"ராணி! நீ விரும்புன வாழ்க்கை தான் இது. கல்யாணம் ஆகி இன்னமும் மூணு மாசம் கூட முழுசா முடியல்ல. அதுக்குள்ள பொறந்த வீட்டுக்கு வந்துட்டா நல்லா இருக்காதும்மா. நம்ம ஊர்லயே, நம்ம வீட்டுலயே இருன்னு தானே உன் அண்ணன் சொன்னாரு. ஆனா நீ என்ன சொன்னே நினைவிருக்கா?" என்றாள் சற்றே காரமாக.

"அண்ணி! நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் அண்ணி. இப்ப ஃபோனை வெச்சிருங்க" என்று சொல்லி கட் செய்து விட்டாள்.

"அண்ணே! நான் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் இங்கேயே இருக்கேன் அண்ணே! அண்ணிக்கு நான் அங்க வரது பிடிக்கல்ல" என்றாள் அழுது கொண்டே அண்ணன் மாணிக்கத்திடம்.

"அவங்க யாரு உன்னை வராதேன்னு சொல்ல? அது நம்ம வீடு. நீ வரதுக்கு யார் அனுமதி கொடுக்கணும்?"

சற்றே யோசித்தாள் ராணி. அவளுக்கு மீண்டும் ஊருக்குச் செல்ல இஷ்டமில்லை. சென்னையில் பல இடங்கள் இருக்கின்றன சுற்றிப் பார்க்க. கணவனோடு கை கோர்த்துக்கொண்டு சென்றாலும் இங்கே யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். துப்பட்டா இல்லாமல் சுடிதார் போடலாம். காலையில் இஷ்ட நேரத்துக்கு எழலாம். மதியம் நன்றாகத் தூங்கலாம். இந்த சுதந்திரம் எல்லாம் ஊருக்குப் போனால் பறி போய் விடும். என எண்ணினாள்.

"அண்ணே! எனக்கு ஒரு யோசனை தோணுது"

"சொல்லு கண்ணு"

"ராத்திரி அவர் வந்ததும் அவர் கிட்ட கொஞ்சம் பேசிப்பாரு. அண்ணன் சொன்னதையும் சொல்லு. அவரு மிரண்டுருவாரு. அப்ப என்னை வேலை செய்யச் சொல்ல மாட்டாரு. நானும் இங்கேயே இருக்கலாம்."

"அப்படியாவது நீ இங்க இருக்கணுமாம்மா?"

"ஆமாண்ணே! கல்யாணம் ஆயிட்டாலே ஒரு பொண்ணுக்கு பொறந்த வீடு இல்லை. முடியுதோ இல்லையோ? இங்க தான் நான் இருக்கணும். இது தான் விதி" என்றாள்.

மதியம் தங்கையை பெரிய ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று வகை வகையாக அசைவ உணவுகள் வாங்கிக்கொடுத்தான் மாணிக்கம்.

"அண்ணே! அசைவம் சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சுண்ணே! எப்பப் பார்த்தாலும் காய்கறி தான் எங்க வீட்டுல" என்ற தங்கையை கண்களில் நீர் பனிக்கப் பார்த்தான். மாலை வந்தது. அலுவலகத்தில் பெர்மிஷன் போட்டு விட்டு மச்சானையும், மனைவியையும் பீச்சுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மகிழ்ச்சியாக வந்தான் நிதி. வந்தவனை வரவேற்கக் கூட இல்லை. நேரே போய்த் தன் அறையில் படுத்துக்கொண்டாள் ராணி.

"என்ன ராணி?"

"எங்கிட்ட ஒண்ணும் பேச வேண்டாம். எங்கண்ணன் உங்கிட்ட ஏதோ பேசணும்மாம். போய்க் கேளு" என்றாள் எரிச்சலாக.

"என்ன இது? அர்த்தமில்லாம இருக்கு. என்ன பேசணுமாம்?"

"என்னை நீ கொடுமைப்படுத்துறதை எல்லாம் அண்ணன் கிட்ட சொன்னேன். அவரு பேசணும்னாரு" என்றாள்.

சட்டெனக் கோபம் வந்தது நிதிக்கு.

"நான் உன்னைக் கொடுமைப்படுத்துறேனா? இதை யாராவது நம்புவாங்களா? நீ இன்னும் என்னென்ன என்னைப் பத்தித் தப்பா சொல்லி வெச்சிருக்க?" என்றான் சத்தமாக. குரல் கேட்டு உள்ளே வந்தான் மாணிக்கம்.

"நிதி! எதுக்கு தங்கச்சியைக் கத்துற? நான் இங்கே இருக்கேன்னே மறந்துட்டியா?" என்றான் காரமாக.

"மச்சான். இவ என்னைப் பத்தித் தப்புத்தப்பா சொல்லி வெச்சிருக்கா. நான் அப்படிப்பட்ட ஆளில்ல. என்னை நம்புங்க" என்றான் நிதி அவசரமாக.

"அவ என்ன சொல்லுறது? அதான் நான் என் கண்ணாலேயே பார்த்துட்டேனே? உன் கிட்ட அமைதியாப் பேசச் சொன்னாங்க அண்ணி. அதான் பேசிக்கிட்டு இருக்கேன்."

"இது என்ன பைத்தியக்காரத்தனம்? அப்படி நான் எதுவுமே செய்யலியே மச்சான்? முதல்ல உக்காருங்க, நிதானமாப் பேசுவோம். அப்பத்தான் எனக்குத் தெளிவாத் தெரியும்." என்றான் நிதி குழம்பியவனாக.

அப்படியே அமர்ந்தார்கள்.

"இதைப் பாரு நிதி, என் தங்கச்சி ஆசைப் பட்டாளேன்னு தான் உனக்கு அவளைக் கட்டிக்கொடுத்தோம். உன் ஏழை புத்தியைக் காட்டாதே" என்றான் கோபமாக.

சுள்ளென ஆத்திரம் வந்தது நிதிக்கு.

"மச்சான், நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், ராணியும், நீங்களும் என் வீட்டை ஏழை வீடுன்னு குத்திப் பேசுறீங்க. தெரிஞ்சு தானே கட்டிக்கொடுத்தீங்க?"

"ஹூம்! அப்ப விதி என் கண்ணை மறைச்சது. இப்படிக் கஷ்டப்படணும்னு இருக்கே?" என்றாள் ராணி மூச்சை இழுத்து விட்டபடி.

"எதுக்கு இப்படி டயலாக் பேசுற? அப்படி என்னடி உன்னை கொடுமைப்படுத்தினேன்? என்ன உங்கண்ணன் முன்னாடி டிராமா போடுறியா?" என்று கத்தினான் நிதி.

"இன்னும் என்ன பண்ணணும்? காலையில ஆறு மணிக்கு எழுந்ததுல இருந்து சமைக்கணும், காய் நறுக்கணும், டீ போடணும், டிஃபன் செய்யணும், அப்புறம் பெருக்கணும் துவைக்கணும்.. வீட்டு வேலையை எல்லாம் நானே செய்யணும், இவ்வளவு செஞ்சும் வெளிய போகலாம்னா உனக்கு மூஞ்சி சுருங்குது. இப்படி வாழவா நான் உன்னைக் காதலிச்சேன்?' என்றாள் கத்தலாக.

"தங்கச்சி சொல்றது எல்லாமே உண்மை. என் கண்ணால நானே பார்த்தேன். இதுக்கு என்ன பதில் சொல்ற நீ?" என்றான் மாணிக்கம்.

அவர்கள் பேசுவதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் விழித்தான் நிதி.

"இவர்கள் என்ன பைத்தியக்காரர்களா? நம் வீட்டு வேலையை நாம் செய்தால் என்ன தவறு? ஞாயிற்றுக்கிழமை நான் தானே வீடு முழுவதும் தூசி தட்டி ஒட்டடை அடித்து எல்லாம் செய்கிறேன். இரவு நேரங்களில் தினமும் பாத்திரம் நான் தானே விளக்குகிறேன்? காயப்போட்ட துணிகளை நான் தானே மடித்து ஷெல்ஃபில் வைக்கிறேன்? வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேனே? இப்படியும் என்ன பிரச்சனை?" என யோசித்தான்.

"பதில் சொல்ல முடியாம முழிக்குறார் பாரு" என்றாள் ராணி.

"ஆமா! கேக்கணும்னு நெனச்சேன். நீ சம்பாதிக்குற பணமெல்லாம் எங்கே போகுது? தங்கச்சியை வெளிய கூட்டிக்கிட்டுப் போக காசே இல்லைன்னு சொன்னியாமே? மாசம் 50,000 சம்பளம்னு சொன்ன? பொய்யா?" என்றான் மாணிக்கம் எகத்தாளமாக.

சுருசுருவென மூண்ட எரிச்சலை மறைத்துக்கொண்டான் நிதி. பதிலே பேசாமல் உள்ளே போய் ஒரு காகிதத்தை எடுத்து வந்தான்.

"இதைப் பாருங்க. இதான் என் பே ஸ்லிப். என்ன போட்டிருக்கு?" என்றான் அதை மாணிக்கத்தின் முகத்துக்கு நேராக நீட்டியபடி. அதில் 50,000 எனப் போட்டிருந்ததைப் பார்த்து விட்டு அமைதியானான் மாணிக்கம். ஆனால் இன்னும் முடியவில்லை என்பதற்கு அடையாளமாக தலையை உயர்ந்த்தினான் நிதி.
 
அடியே ராணி கோணி ஊசில
உன் வாயை தைக்கனும்
நிதி இத்தனை பொறுமையா
இருக்கான்
 
Mudalla ivalai vittu tholai da appa Dan nee munnadiya irukalam iva kuda irunda unaku paithyam pudikum sariyana loose kudumbam da ithu, ivanumga aduku mela makkanumga, iva pachondi pola da, nice update dear thanks.
 
தெரியாத்தனமா இவங்க குடும்பத்தில மாட்டிக்கிட்ட நிதி????

ஆனா...அம்மாவ விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிச்சில்ல....அனுபவி
 
Top