Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 7 .

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 7.



அன்று மதியம் ராம் கிருஷ்ணசாமி ஐ பார்க்க Personnel Department சென்றிருந்தார் . அங்கு அவர் இல்லை . அவர் ஸ்ரீ ராமுலு விஷயமாக அங்கும் , இங்கும் அலைந்து கொண்டிருந்தார் . பிறகு அவர் ராம் உங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன் . நான் ஸ்ரீ ராமுலு விஷயமாக பிசியாக இருக்கிறேன் எனவே இன்று உங்களிடம் பேச முடியாது என்று நினைக்கிறேன் . எனவே முடிந்தால் நாளை நாம் பேசலாம் என்று கூறினார் . ராம் சரி என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து வந்து விட்டார் சிறிது நேரம் கழித்து ஜி . எம் ஐ பார்க்க சென்று அவரும் பிசியாக இருக்க அவரிடமும் எதுவும் சொல்ல இயலவில்லை . சரி என்று யோசனையாக தனது சீட்டிற்கு வந்து வேறு வேலையை பார்க்க ஆரம்பித்தார் .




அதன் பிறகு ஸ்ரீ ராமுலுவை பார்க்க முடியவில்லை . அவர் வேகமாக செல்வதை பார்த்தான் . அவர் கம்பெனி காரை விட்டு விட்டு வேறு காரில் ஏறி சென்று விட்டார் . அவ்வளவு தான் பதவியில் இருக்கின்ற வரை தான் எல்லாம் . பதவி இல்லை என்றால் அவ்வளவு தான் மரியாதை . இதையெல்லாம் நினைக்க என்னடா வாழ்க்கை என்று நினைக்க தோன்றியது . மனம் பலவற்றை நினைத்து மிகவும் கஷ்டமாக இருந்தது . அதற்கு பிறகு ராம் மற்ற தினசரி வழக்கமாக ‌ செய்யும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார் . சிறிது நேரம் கழித்து டிரைனிங் சென்டர் மேனேஜர் பிரகாஷ் வந்தார் .‌ அவர் ராமிடம் அவனுடைய விஷயத்தை , அன்று நடந்ததை கேட்டார் . பிறகு தங்கராஜ் பேசியது மிகவும் தவறு என்று கூறினார் . ஒருவருடைய தன்மானத்தை அல்லது சுயமரியாதையை தொடுகின்ற அல்லது பாதிக்கின்ற மாதிரி பேச யாருக்கும் உரிமை இல்லை . அதுவும் அன்பார்லிமென்ட் வார்த்தைகளை பேசவே கூடாது . அப்படி எல்லாம் பேச யாருக்கும் உரிமை இல்லை வார்த்தைகளுக்கு உயிர் உண்டு . ஆனால் யாரும் இதைப் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை என்று வருத்தப்பட்டார் . பிறகு தான் ராம் அவருக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றார் ‌ என்ன விஷயம் சொல்லுங்க சார் . உங்களுக்கு உதவி செய்யாமல் யாரும் செய்ய போகிறேன் என்று ராம் சொன்னார் . ஒன்றும் இல்லை டிரைனிங் சென்டர் ஸ்டூடெண்களுக்கு கணக்கு கிளாஸ் எடுக்க வேண்டும் என்றார் . ராமின் பாஸ் இருக்கின்ற வரை அவர் சில மணி நேரம் வகுப்பு எடுப்பார் . அதற்கு ராம் நான் இங்கு இருந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் . மேலும் டிரைனீஸ்க்கு வகுப்பு எடுக்க என்னுடைய பாஸ் அனுமதி வேண்டும் . அவர் சரி என்று சொன்னால் பிறகு பார்க்கலாம் . நான் உங்கள் பாஸூடம் அனுமதி கேட்கிறேன் . நீங்கள் கட்டாயம் வந்து வகுப்பு எடுப்பீர்கள் ‌என்று கூறி , எப்பொழுது என்று பிறகு நாள் மற்றும் நேரம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி கிளம்பினார் . அவர்களுக்கு அவரவர் பிரச்சினை என்று ராம் நினைத்தார் .





அதற்கு வேறு வேலை வந்து விட ராம் அதில் பிசியானார் . தங்கராஜ் அவனிடம் வந்து நேசனல் சேம்பியன் சர்வே ரிப்போர்ட் ( National Sample Survey Report ) அவனை தயார் செய்ய வேண்டும் என்று சொல்ல , அதற்கு அவர் , அது தன்னுடைய வேலை இல்லை என்று சொன்னார் .‌இதை அவசரமாக செய்ய வேண்டும் . இப்பொழுது தான் அவர்களுடைய ஆபீஸில் இருந்து பேசினார்கள் என்றார் போன வருடம் நீங்கள் தான் அதை செய்து இருக்கிறீர்கள் என்று சொல்ல , ராம் ஃபோன் வருடம் அப்பொழுது இருந்த மேனேஜர் என்னிடம் ரிக்கெஸ்ட் (Request ) செய்து கொண்டு கேட்டுக் கொண்டு அதற்கு தேவையான வற்றை எல்லாம் செய்து எனக்கு சப்போர்ட் செய்தார் . அவருக்காக அவர் சொன்ன திற்காக , அதை அப்பொழுது செய்தேன் . எனக்கு இருக்கும் வேலையை நான் செய்ய வேண்டும் . எனவே யாரையாவது வைத்து அந்த வேலையை முடித்து கொள்ளுங்கள் . நான் இப்படி மற்ற வேலையை செய்தால் ‌, என் வேலையை யார் செய்வார்கள் ? என்னை நீங்கள் தவறான நினைத்தாலும் எனக்கு கவலையில்லை என்று கூறினார் . மேலும் அவர்களை கவனிக்க வேண்டும் . அதாவது அவர்கள் கேட்பதை எல்லாம் நாம் கொடுக்க வேண்டும் . அவர்களை என்டர் செய்ய வேண்டும் . அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் . வெளியில் ‌ஹோட்டலுக்கு கூட்டி சென்று அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கித் தர வேண்டும் . இதற்கு எல்லாம் தனியாக கம்பெனியில் இருந்து அனுமதி வாங்க வேண்டும் இவ்வளவு வேலை இருக்கிறது . மேலும் யாராவது மறுப்பு சொல்வார்கள் . போனமுறை நான் செய்தபோதே தேவையில்லாமல் கமெண்ட் செய்தார்கள் சிலர் . நீங்கள் இப்போது தான் வந்திருக்கிறீர்கள்‌ . உங்களுக்கு இங்கு இருக்கும் பாலிடிக்ஸ் தெரியாது என்று தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் கூறி விட்டார் ராம் . தங்கராஜ் ஒன்றும் சொல்லாமல் உடனே சொல்ல , ராம் கட்டாயம் அவர் திரும்பி தன்னிடம் வருவார் என்று நினைத்தார் .‌ மேனேஜர் என்றால் இதே எல்லாம் பார்க்க வேண்டும் . அவருக்கே அதைப்பற்றி தெரியாது .‌ வேலை செய்யதெல்லாம் நான்
ஆனால் பேர் மட்டும் வாங்குவது மட்டும் இவர்கள் .





இவனுக்கு இருக்கும் வேலை பளு காரணமாக தினமும் இரவு மிகவும் லேட்டாக தான் செல்கிறார் . அதற்கே இதுவரை எந்தவிதமான பலனும் இல்லை . இதில் இந்த வேலையை வேறு எடுத்துக் கொண்டால் அவ்வளவு தான் . அது மட்டும் குறைந்தது , ஒரு வாரத்திற்கு மேல் எடுக்கும் . அது அரசாங்கத்திற்கு வேறு போகிறது . அதை புள்ளியியல் துறை , நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள் . அதுவுமில்லாமல் , பலவிதமான கணக்குகளை உள்ளடக்கிறது . தவறுதலாக கொடுத்து விட்டால் பிரச்சினை ஏற்பட்டு விடும் . இது வரையில் செய்த வேலைகளுக்ககே நல்லபெயர் வந்தால் போதும் . எல்லோரும் சுயநலம் பிடித்தவர்கள் . நடப்பது நடக்கட்டும் . இனிமேல் எத்தனைப் பற்றியும் கவலைப்படுவதாக இல்லை . அவனே இந்த கம்பெனியில் எத்தனை நாள் இருக்க போகிறார் என்று தெரியவில்லை .‌ அவர் கம்பெனிக்கு எவ்வளவு செய்த போதிலும் மேனேஜ்மென்ட் அவனுக்கு அந்த அளவிற்கு சலுகைகளை கொடுக்கவில்லை . அவன் வீடு கட்ட கடன் கேட்டிருந்தார் . அதையும் கொடுப்பதாக கூறி சில மாதங்களுக்கு வெயிட் பண்ணனும் படி கூறினார் ஜி. எம் பைனான்ஸ் . கம்பெனி நிதி நிலைமை காரணம் காட்டி மேலும் இப்போது உள்ள சூழ்நிலையில் அதை கொடுப்பார்களா என்று வேறு தெரியவில்லை . தனியார் கம்பனியில் எல்லாம் அப்படி தான் .என்ன தான் நாம் சின்சியராக வேலை செய்தாலும் அதற்கு அங்கிகாரம் சரிவர கிடைக்காது .‌ மனம் ஒரு நிலையில் இல்லை . ஊருக்கு போகலாம் ‌என்றால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் லீவு கொடுப்பார்களா என்று தெரியவில்லை . தங்கராஜ் வேறு அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய அடிக்கடி Personnel Department அவர்கள் மூலம் ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டு கொண்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வந்து கொண்டிருக்கிறது .‌‌ எதிர்காலம் அவனுக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை . நடப்பது நடக்கட்டும் . தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது . அதில் ஜான் போனால் என்ன அல்லது முழம் போனால் என்ன ? இனி கவலைப்பட போவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார் . என்ன இந்த சூழ்நிலையில் இங்கு நடப்பதை யாரிடமும் சொல்ல முடியாது . உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை அவர்களுக்கு தெரிந்த வகையில் பேசுவார்கள் . யாரோ பேசுவார்கள் பேசட்டும் . இனி அதைப் பற்றி எல்லாம் கவலப்படுவதாக இல்லை .





( தொடரும் )
 
Just today I posted chapter 7 of story Self-Respect. Pl. go through and comment on this.
 
Top