Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 4 .

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 4.



ராம் மிகவும் சோர்ந்து போய் களைப்பாக தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்தான். ஜி.எம் அல்லது வி.பி யாரும் இன்னும் வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது , தங்கராஜ் , ராமிடம் வந்து ஜி.எம் ( பைனான்ஸ் ) அவரிடம் போக வேண்டும் என்றும் , அவரையும் கூட வரச் சொன்னார்.



ஜி.எம் பைனான்ஸ் அவருடைய கேபின் முதல் தளத்தில் மாடியில் இருந்தது. அங்கு ஜி.எம் (Training) , G.M (Personnel) , G.M (Finance) ஆகியோர் இருந்தனர். அடுத்தது , M. D Cabin இருந்தது.
மாடிப்படியில் ஏறும் போது தங்கராஜ் ராமிடம் நான் உங்களுக்கு ஒரு சார்ஜ் மெமோ தருகிறேன். அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூற , அதற்கு ராம் , நான் எந்த விதமான தப்பும் செய்யவில்லை. முதலில் நீங்கள் தான் என்னை இடியட் என்று திட்டினீர்கள். அதன் பிறகே நான் அந்த வார்த்தையை பேசினேன் . அது கூட , நான் இடியட் என்றால் நீங்களும் தான் இடியட் என்று திருப்பி சொன்னேன் . எனவே முதலில் என்னை பேசியது நீங்கள் தான் அதை ஜி.எம் இடம் ஒத்துக் கொள்ளுங்கள். நான் பேசியதை நான் ஒத்துக் கொள்கிறேன் . எனக்கு பொய் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று சொன்னான். மேலும் உங்களால் முடிந்தால் சார்ஜ் மெமோ கொடுத்து பாருங்கள். அதை ஒத்துக் கொள்வதும் , ஒத்துக் கொள்ளாததும் எனது விருப்பம் . அதை நீங்கள் சொல்ல தேவை இல்லை . அதை நான் முடிவு செய்து கொள்கிறேன் . ஆனால் ஒன்று என் தன்மானத்தை இழந்து இந்த வேலையில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. தேவை என்றால் வேலையை ராஜினாமா செய்ய கூட தயாராக இருக்கிறேன் , என் மீது தவறு இருந்தால் என்றான் நீங்கள் சார்ஜ் மெமோவை ஒத்துக் கொள்ளுங்கள் என்று திரும்பவும் அதையே பேச ஆரம்பிக்க ‌அதற்குள் ஜி.எம் கேபினுக்கு அருகில் வந்து விட்டதால் பேச்சு அத்துடன் முடிந்தது .



தங்கராஜ் இப்பொழுது கூட தான் பேசியது எவ்வளவு பெரிய வார்த்தை என்பதையும் அது ராமின் தன்மானத்தை பாதித்ததையும் உணராமல் இருந்தார் . மிகவும் டென்ஷனாக , கேபின் கதவை லேசாக தட்ட , ரூம் உள்ளே நுழைய அனுமதி கேட்க ,அனுமதிக்கப்பட்டனர் . ஜி.எம் இருவரையும் பார்த்தார் என்ன விஷயம் என்கிற மாதிரி . ராம் தங்கராஜ் சொல்வார் என்று அவரை பார்க்க , அவர் உடனே " சார் ராம் என்னை இடியட் என்று திட்டி விட்டார் . நான் செல்கின்ற வேலையை செய்ய வில்லை " என்று ஆரம்பித்தார் ராம் உண்மையில் நடந்தது என்ன சொல்ல ஆரம்பித்தார் . அவர்தான் " முதலில் என்னை
இடியட் என்று சொன்னார் . பிறகு தான் நான் சொன்னேன் . அதுவும் நான் இடியட் என்றால் நீங்களும் இடியட் தான் என்று " . ஜி.எம் , " தங்கராஜை பார்த்து நீ எல்லாம் ஒரு மேனேஜராயா ? . உனக்கு வெட்கமாக இல்லை . ராம் உன் பேச்சை கேட்கவில்லை என்று சொல்ல . ஸ்கூல் பசங்க மாதிரி ராம் என் பேச்சை கேட்க மாட்டேன் என்று சொல்கிறான் என்று. மரியாதை இல்லாமல் கம்ளெண்ட் செய்யறே . இங்கு வந்து தேவையில்லாம சீன் கிரியேட் செய்யறே . எனக்கு வேறே வேலை இல்லை ? " . என்னையா நினைச்சிட்டு இருக்கே உன் மனசிலே ? முதல்லே போய் வேலையை பாருங்க " என்று சத்தம் போட்டார் .‌ ராம் ஏதோ சொல்ல வந்தான். அதற்கு அவர், " ராம் , உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் . முதல்லே அவர் என்ன சொல்ராரோ அந்த வேலையை செய்ங்க . பிறகு என்கிட்ட வாங்க " என்று சொல்ல , ராம்," சரி " என்று சொன்னான் . பிறகு இருவரையும் பார்த்து, " போய் வேலையை பாருங்க " என்று சொல்லி அவர் நீங்கள் போகலாம் என்கிற மாதிரி , அவர் திரும்பவும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் . தங்கராஜிக்கு முகம் கறுத்து விட்டது .



என்னடா ... நம்மை பேசவே விடவில்லை என்று . இருவரும் அமைதியாக எதுவும் பேசாமல் மாடியில் இருந்தது இறங்கி வந்தனர் . பிறகு அக்கெண்ட்ஸ் டிபார்ட்மெண்டிற்கு சென்ற ராம் , என்ன செய்ய வேண்டும் என்று கேஷியரை பார்த்து கேட்டான் . ராம் தங்கராஜூடன் அதிகமாக பேசவில்லை . பேச விரும்பவில்லை . அங்கு நிலவரம் கலவரமாக இருந்தது மணி சாயங்காலம் 4.30 ஆகி இருந்தது . இன்னும் முதல் ஷிப்ட் க்கு சம்பளம் கொடுக்கவில்லை . ஒர்க்கர்ஸ் எல்லோரும் காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள் . எல்லோரும் செக்கியூரிட்டில் காத்துக் கொண்டு இருந்தனர் . இரண்டு மணிக்கே ஷிப்ட் முடிந்து இருந்தது.






உடனே ராம் இரண்டு பகுதியாக சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்து , மூன்று அக்கெண்ட்ஸ் ஆட்களை செக்கியூடிக்கும் , மீதம் இருக்கும் ஆட்களை டூல் ரூம்மிற்கும் பிரித்து அனுப்பி ,ஒர்க்கர்ஸ் களை , டூல் கிரிப் ,இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அவர்களோடு பண டிரேயை எடுத்துக் கொண்டு இரண்டு பேரையும் செல்ல சொல்ல , கேஷியர் , " சார் பணம் ஃபில்லிங் எல்லோரும் செய்யற போது , தப்பாயிடுச்சி . சில கவர்லே ஷார்டேஜ் இருக்கும் போல இருக்கு . பணம் எக்ஸஸ் ஆக இருக்கிறது . எந்த கவர்லே ஷார்ட்டேஜூன் தெரியலை . ஒவ்வொரு கவரா ஓப்பன் பண்ணி செக் செய்து கொண்டு இருக்கிறோம் . இப்ப என்ன செய்யறதுண்ணு தெரியலே ? . என்று சொல்ல ,
ஷிப்ட் முடிந்து நேரம் அதிகமாக ஆகிவிட்டதால் பொறுமை இழந்த ஒர்க்கர்ஸ் சிலர் அகெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்க்கே வர ஆரம்பித்தது விட்டார்கள் . மிகவும் பொறுமை இழந்து இருந்தார்கள்.



இதை பார்த்த ராம் , கேஷியர் சேகரிடம் , சேகர் நீ கவைப்படாதே . எவ்வளவு பணம் அதிகமாக இருக்குண்ணு உனக்கு தெரியும் தானே என்று கேட்க , அவன் இவ்வளவு பணம் என்று ஒரு தொகையை சொல்ல , ராம் அதற்கு நான் வருகிறேன் உங்களுடன் . பார்த்துக் கொள்ளலாம் . இப்பவே நேரம் ஆயிடுச்சு . ஒர்க்கர்ஸ் 2 மணிக்கு ஷிப்ட் முடிஞ்சு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க . இங்கேயே வர ஆரம்பிச்சுட்டாங்க . எனவே இப்ப எல்லா கவரையும் ஓப்பன் பண்ணி பார்க்க நேரம் இல்லை . வா பார்த்துக்கலாம் .



நான் கூட வரேன் . ஆனால் நீ எதுவும் சொல்லாதே . நான் உனக்கு எந்த கவர்லே ஷார்டேஜ்ஜூன்னு கண்டு பிடிச்சு சொல்றேன் என்று கூறினார் . எப்படி சார் சாத்தியம் ? என்று சேகர் கேட்க , நீ என் கூட வா , என்று டூல் கிரிப்பிற்க்கு சேகர் மற்றும் இரண்டு பேருடன் ராம் சென்றார் . டூல் கிரிப் உள்ளே சென்று அதன் மேல் பணக் கவர்கள் இருக்கும் பிளாஸ்டிக் டிரே ஐ வைத்து விட்டு , டூல் கிரிப் இல் யாரும் நுழையாமல் இருப்பதிற்கு அதை உள் பக்கமாக தாள்பாள் போட்டு விட்டு , ஒர்க்கர்ஸே பார்த்து அவர்களை வரிசையில் வருமாறு சொல்லி , அவர்களிடம் இருந்து பே சிலிப் ஐ வாங்கி பிறகு ஒர்க்கர் பெயர் படித்து , கூட இருந்த சேகரை பணக் கவரை கொடுக்க சொன்னார் . பிறகு எல்லா ஒர்க்கர் களிடமும் பணத்தை இங்கேயே கவரை பிரித்து பணம் சரியாக இருக்கான்னு பார்க்க சொன்னான் . சரியாக இல்லைன்னா இப்பவே சொல்லுங்க . நான் அந்த பணத்தைத் தரேன் என்றான் .



எல்லோரும் சரி என்று தலையை ஆட்டினார்கள் . ஒரு சிலர் இது வேறே யா ? என்பது போல முணுமுணுக்க , ராம் நான் உங்களுக்கு நல்லதுக்கு தான் சொல்றேன் . நா சொன்ன மாதிரி செய்யுங்க என்று சொல்ல , அவர் சொன்னதில உண்மை இருந்ததால் எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள் . அவர் பணத்தை எண்ணி சரியாக இருந்தவர்கள் தேங்ஸ் சொல்லி மகிழ்ச்சியாக சென்றனர் . ஒருவன் மட்டும் தன் கவரில் பணம் கம்மியாக இருக்கிறது என்று சொல்ல , ராம் அந்த கவரை வாங்கி பணத்தை எண்ணி பார்க்க , பணம் கம்மியாக எவ்வளவு இருக்கிறது என்று எழுதி கொண்டு அந்த பணமும் , சேகர் ‌எக்ஸேஸாக இருக்கிறது என்று சொன்ன பணமும் சரியாக இருக்க‌ , ராம் அந்த கவரில் ஷார்டேஜ் இவ்வளவு என்று எழுதி , அந்த இவரின் மேல் தன்னுடைய கையெழுத்தை போட்டு அந்த ஒர்க்கரிடம் கொடுத்து , அவனை நாளை காலையில் வந்து ஷார்டேஜ் ஆன பணத்தை அக்கெண்ட்ஸ் டிபார்ட்மெண்டிற்கு வந்து வாங்கிக் கொள்ள சொன்னார் . அவன் இப்பொழுதே வரவா என்று கேட்க , நாங்க இங்க இருக்கோம் . அங்கே யாரும் இல்லை . கவலைப்படாதே நாளைக்கு வாங்கிக்கலாம் . நான் கவர் மேலே கையெழுத்து போட்டு இருக்கேன் . கட்டாயம் கொடுப்பாங்க . இல்லைணா என்கிட்ட வா நான் ஏற்பாடு செய்யரேண்ணு சொல்ல அவன் சரி என்று சொல்லி சென்றான் . ஒரு வழியாக இந்த பிரச்சினை தீர்ந்தது . பிறகு பணத்தை பட்டுவாடா செய்து முடித்து விட்டு ‌சரிபார்த்து எல்லாம் சரியாக இருக்க , கொடுக்காத கவர்களை சரிபார்த்து எடுத்துக் கொண்டு அகெளண்ட்ஸ் டிபார்ட்மெண்டிற்கு திரும்பி‌ , எல்லாவற்றையும் ஸோப்டி லாக்கரில் ( Safety Locker ) வைத்து விட்டு , வேலை முடித்து விட்டு கம்பெனியில் இருந்தது சுமார் 7 மணிக்கு மேல் ராம் புறப்பட்டார் . மதியம் வேறு சாப்பிட்டால்தால் வயிறு வேறு பசித்தது . ஹோட்டலுக்கு போகும் வரை தாங்காது என்பதால் , கேன்டீன் சென்று டீ குடித்து வர எல்லோரும் சென்றார்கள் . டீ குடித்து விட்டு பிறகு வீட்டிற்கு புறப்பட ஆரம்பித்தனர் .



காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளை ராமின் மனம் அசைபோட்டுக்கொண்டு இருந்தது . தன்னுடைய இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை . என்ன ஆகும் என்றும் தெரியவில்லை . ஜி.எம் பைனான்ஸூக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் . தங்கராஜ் பற்றியும் தெரியும் . ஜி.எமிடம் ராமின் மேனேஜர் தியாகராஜன் வெலையை விட்டு ரிசைன் செய்தவுடன் வேறு யாரையும் அந்த வேலைக்கு புதியதாக ஆள் எடுக்கவில்லை . அப்பொழுது ராம் அவருக்கு கீழ் தான் வேலை செய்து கொண்டு இருந்தார் . பிறகு தியாகராஜன் திரும்பவும் அதே கம்பெனியில் கண்ஸெல்டன்டாக ( Consultant ) வேலை செய்தார் . எனவே ஜி.எம் ராஜா கோபாலுக்கு ராமை பற்றியும்‌ அவருடைய நேர்மை , கடினமான உழைப்பு , அவனுடைய நல்ல நடவடிக்கை நிர்வாகம் ஆகியவற்றை பற்றி எல்லாம் நன்றாகவே தெரியும் . மேலும் தங்கராஜை பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும் . தங்கராஜ் ஆபீஸில் C.A பரிட்சைக்கு படிப்பது முதல் கொண்டு , அவருடைய நிர்வாக திறமை இன்மை மற்றும் ஸ்டாப் இடம் சரியாக நடந்தது கொள்ளாதது எல்லாம் தெரியும் . அவர் மேனேஜர் வெலைக்கு தகுதியே இல்லாதவர் என்றும் நன்றாக ஜி.எம் க்கு தெரியும் .வேறு வழி இல்லாமல் அவரை அந்த பதவியில் வைத்திருக்கிறார் . அடிக்கடி வந்து தங்கராஜை சத்தப்போடுவார் . இவருடைய வேலையை அதாவது ஜி.எம் வேலையை குறைப்பார் என்று பார்த்தார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை . அதனால் தங்கராஜ் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை . தங்கராஜ் இந்த மேனேஜர் போஸ்டூக்கே லாயிக்கில்லாதவர் . ‌பார்க்கலாம்‌ . நாளை‌ என்ன தான் நடக்கும் என்று . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . தங்கராஜ் தான் செய்த தப்பை இன்னும் உணரவில்லை . தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் .‌ தங்கராஜ் நாளை சும்மா இருக்க மாட்டார் . தனக்கு ஏதாவது தொந்தரவு செய்ய முயற்சி செய்வார் . ராம் அவரைப்பற்றி அவரிடம் பழகியதில் இருந்து தெரிந்து கொண்டிருந்தான் . நாளை வருவதை நாளை பார்த்து கொள்ளலாம் . முதலில் ஹோட்டலுக்கு சென்று ஏதாவது சாப்பிட வேண்டும் . ஓரே தலைவலியாக இருக்கிறது . பசி தலைவலி யாக கூட இருக்கலாம் . மேலும் இப்பொழுது அவன் தனியாக பெங்களூரில் நண்பர்களுடன் வீடு எடுத்து தனியாக தங்கி இருக்கிறான் . அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை . அவனுடைய அப்பா டெப்டி கலைக்டராக தமிழ்நாட்டில் அரசு வேலையில் இருந்து சமீபத்தில் ‌5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் . இப்பொழுது சேலத்தில் வாடகை வீட்டில் அஸ்தம்பட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார் . ராமிற்கு ஒரூ தங்கை இருக்கிறாள் திருமண வயதில் . இன்னும் திருமணத்திற்கு வரன் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . இப்பொழுது சொந்த வீடு கட்ட லோனுக்கு மனு செய்து இருக்கிறான் கம்பெனியில் . இவனுடைய சம்பளத்திலும் அப்பாவின் ஓய்வுதியத்திலும் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது. இவனுக்கு நாளை வேலை இல்லை என்றால் மிகவும் சிரமம் தான் . இன்று நடந்த சம்பவங்களை அப்பாவிடம் சொல்லவும் முடியாது . சொல்லாமலும் இருக்க முடியாது . பார்க்கலாம் நாளை என்ன நடக்கிறது என்று .‌ பிறகு தேவை என்றால் சொல்லிக் கொள்ளலாம் . அவனுக்கு கட்டாயம் இந்த வேலை தேவை . அப்படியே அவனுக்கு நாளை சார்ஜ் மெமோ கொடுத்தால் என்ன செய்வது ? வாங்குவதா ? இல்லை வாங்காமல் இருப்பதா ? அப்படி வாங்காமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படியே அவனுக்கு சஸ்பெண்டு ஆர்டர் கொடுத்தால் , என்கொயரி நடக்கும் வரையில் அவனுக்கு பாதி சம்பளம் தான் வரும் . நிர்வாக அலுவலர்களுக்கு தனியாக எந்த வித தொழில் சங்கங்களும் இல்லை . எனவே அவருக்கு எந்த வித சப்போர்ட்டும் கிடைக்காது . தேவை என்றால் ஏதாவது ஒரு லாயரை பார்க்க வேண்டும் . இங்கு பெங்களூரில் யாரையும் தெரியாது . இது வரை தேவை இல்லாமல் இருந்தது . இங்கு நண்பர்கள் யாரிடமாவது கேட்டு பார்க்கலாம் தேவை என்றால் . அவன் நிர்வாக அலுவலராக இருப்பதால் ‌அவன் அகிரிமெண்ட் படி‌ , அவன் வேலையே விட்டாலோ அல்லது கம்பெனி அவனை‌ வேலையில் இருந்து நீக்கினாலோ மூன்று மாதங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஈடான சம்பளத்தை கொடுக்க வேண்டும் இரண்டு பக்கமும் . அப்படி ஏதாவது ஆனால் ஒன்று சேலத்தில் போய் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும் . அல்லது இங்கே இருந்து வேறு கம்பெனிகளுக்கு முயற்சி செய்ய வேண்டும் . ஆனால் கட்டாயம் அவனுக்கும் , அவன் குடும்பத்திற்கும் வேலை தேவை .‌ இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அப்பாவிடம் சொல்ல முடியாது அவர் ரிடையர் வேறு ஆகி விட்டார் . அவருக்கு உடல்நிலை ‌வேறு சரியில்லை . அவருக்கு வீசிங் பிராப்ளம் வேறு இருக்கிறது .‌ஓய்வு பெற்ற பிறகு ‌பெங்களூர் வந்தார் இங்கு ‌செட்டில் ஆக . ஆனால் அன்று இங்கு ராம் வருவதிற்கு முன்பு கிணற்று தண்ணீர் நன்றாக இருக்கிறது என்று குளித்து விட்டு , அன்று இரவு முழுவதும் வீசிங்கில் மிகவும் அவஸ்தை பட்டார் . அடுத்த நாள் ஞாயிறு கிழமை காலை தனியாக வீடு பார்த்து ஆட்டோவை வரசொல்லி , வீடு பார்ப்பதிற்கு செல்ல இருந்து போது‌ வீசிங் பிரச்சினையால் ‌அவருக்கு பெங்களூர் கிளைமேட் ஒத்துக் கொளாது என்று அவரை சேலத்தில் வீடு பார்க்க சொல்லி‌ ,‌ அவனுடைய குடும்பம் சேலத்தில் தான் இருக்கிறது . பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சேலத்திலேயே ஏற்காடு ‌அடிவாரத்தில் ராம் மற்றும்‌ ராமின் குடும்ப நண்பரும் , அவர்களுடைய ‌குடும்ப டாக்டரும் ‌பக்கம் பக்கத்திலேயே வீட்டு மனைகள் வாங்கி‌ , வீடு கட்டுவது என்று தீர்மானம் செய்து , இப்பொழுது ராம் அந்த ‌இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்து இன்னும் இரண்டு வருடங்கள் ‌ஆகியும் வீடு இன்னும் முடியவில்லை . அதற்கு கையில் இருக்கின்ற பணம்‌‌ அப்பாவின் பி எப் மற்றும் கிராசுட்டி ஆகியவற்றை போட்டும் பணம் பத்தாமல் கடன் வேறு வாங்கியும் , மேலும் பணம் கம்பெனியில் வேறு கடன் கேட்டு இருக்கிறார் . இந்த சூழ்நிலையில் கடன் கொடுப்பார்களோ என்று கூட தெரியவில்லை . எத்தனைப் பற்றி கவலைப்பட்டு என்ன‌ ஆகப்போகிறது‌ ? நடப்பது தான் நடக்கும் . எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் . வேறு வழியே இல்லை . நாளைய பிழைப்பிற்கு நாராயணன் இருக்கிறான் என்று போகவேண்டியது தான் . அவனுக்கு எல்லா பிரச்சினையையும் நினை‌க்க தலையை சுற்றியது . எனவே நடப்பது நடக்கட்டும் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்து ‌, அந்தந்த பிரச்சினை வரும் போது அதை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான் .





நாளை எதுவும் நடக்கலாம் . நாளை கவலைகளை நாளை பார்க்க கொள்ளலாம் .‌ இத்தனை வருடம் காப்பாற்றிய கடவுள் அல்லது ஏதோ ஒரு சக்தி நம்மை காப்பாற்றாமலா போய்விடும் ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , தன்மானத்திற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் . ஆனால் எதற்காகவும் தன்மானத்தை விட்டு கொடுத்து வாழ்க்கை வாழ முடியாது . தன்மானம் இல்லாமல் வாழும் வாழ்க்கை வாழ்க்கையே அல்ல . அப்படி பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்வதை விட வாழாமலே இருக்கலாம் . ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு அர்த்தம் வேண்டும் . இதையெல்லாம் நினைத்துக் கொண்டு ஹோட்டலை அடைந்தான் . ராம் இன் ‌ கவலைகளுக்கு காலம் தான் பதில் சொல்ல முடியும் .





(தொடரும்)
 
நண்பர்களே, தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 4 பதிவு செய்து இருக்கிறேன். படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
 

Attachments

  • FB_IMG_16361215648585200.jpg
    FB_IMG_16361215648585200.jpg
    251.1 KB · Views: 0
Top