Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 1.

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 1.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து அந்த நடுங்கும் பெங்களூர் குளிரில் குளித்து விட்டு சாமியை கும்பிட்டு விட்டு அருகில் உள்ள தாசபிரகாஷ் ஓட்டலில் இட்லி, காராபாத் சாப்பிடு விட்டு காப்பி குடித்து விட்டு ஜலஹல்லி கிராஸில் ( Jallahalli cross) பஸ்ஸூக்கு காத்திருந்து BTS பஸ் பிடித்து பீனியா இன்டஸ்டியல் ஏரியாவில் இறங்கி, பிறகு அங்கிருந்து சிறிது தூரம் நடந்து கம்பெனி க்கு வந்து டைம் கார்டு பஞ் செய்யும் போது மணி சரியாக காலை 8 மணி ஆகிவிட்டது இதற்கு மேல் Audit department வந்து சீட்டில் அமர்ந்து பிறகு தனது வழக்கமான வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் ராம். தினசரி இதே மாதிரி தான் செய்கிறார்
கடந்த பல ஆண்டுகளாக.

கடவுளே இன்று பொழுது நல்லபடியாக போகவேண்டும். பிரச்சினை எதுவும் இல்லாமல் என்று தினமும் வேண்டுபோல இன்றும் தான் வேண்டிக்கொண்டு வேலையை ஆரம்பித்தார். கடந்த பத்து வருடங்களில் பலவிதமான மனிதர்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை பார்த்து விட்டார்.‌ அவர் வேலையை சிறிது நேரம் பார்க்கட்டும்.

அதற்குள் நான் அவரைப்
பற்றியும் அவர் வேலை செய்யும் அந்த கம்பெனியை பற்றியும் ஒரு சில வார்த்தைகளில் அறிமுகம் செய்து விடுகிறேன். ஏனெனில் அது இந்த கதைக்கு மிகவும் தேவையான விஷயம்.
ராம் வேலை செய்வது ஒரு டூல் அண்டு டைமேக்கிங் கம்பெனி. ( Tool and Die Making Company)
அது பீனியா இன்டஸ்டியல் ஏரியாவில் இருக்கிறது.பெயர் தேவையில்லை. அது மிகவும் பிரபலமான கம்பெனி.

அவர்களுக்கு வேறு பல மாநிலங்களிலும் அவர்களுடைய பிராஞ்ச் ஆபீஸ் இருந்தது. தமிழ் நாட்டில் காட்பாடி, ஆந்திராவில் கண்ணாவரம், கேரளாவில் தலச்சேரி, மற்றும் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் HMT Company உதவியுடன் டிரைனிங் சென்டர்கள் இருந்தது. பத்தாவதிற்கு பிறகு என்ன படிக்கலாம்? என்று ஒவ்வொரு வருடமும் ஒரு விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.
( After 10 th what next ? ) அது ராம் வேலை செய்யும் இந்த கம்பெனி தான்.

இவர்கள் டூல் அண்டு டைமேக்கிங் டிரைனிங் (பயிற்சி) கொடுக்கிறார்கள் 3 வருடங்களுக்கு. அதன் பிறகு அப்படி டிரைனிங் பயிற்சி எடுத்தவர்கள் " டூல் மேக்கர்களாக " ( Tool Makers.) அங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். அவர்கள் அதன் பிறகு அனுபவத்துடன் வெளியில் வேறு கம்பெனிகளுக்கு செல்லும் போது அதிக சம்பளத்தில் வேலை கிடைத்து பிறகு வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.‌ கம்பெனி ஆரம்பித்தது 25 வருடங்கள் ஆகிவிட்டது.
‌1988 ஆம் ஆண்டில்.

இந்த கதை 1988 ஆண்டு காலகட்டத்தில் நடக்கிறது. அவர்களுக்கு அப்பொழுதே கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தது. டூல் ரூம், பிரஸ் ஷாப், டிரைனிங் சென்டர், பர்சேஸ் டிபார்ட்மெண்ட், அக்கவுண்ட் ஸ், டிபார்ட்மெண்ட், மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட், டிசைன் டிபார்ட்மெண்ட், பிராடெக்ட் டெவளெப்மெண்ட், ஆடிட் டிபார்ட்மெண்ட், ஸ்டோர்ஸ் டிபார்ட்மெண்ட் தனித்தனியாக, மெயின்டனஸ் டிபார்ட்மெண்ட் ஆகியவை இருந்தது.

பிரஸ் ஷாப்பில் மூன்று ஷிப்டில் சுமார் ஆயிரம் பேர் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். முக்கியமாக ஒன்று சொல்ல மறந்து விட்டேன். கேண்டீன் வேறு இருந்தது. அது Subsidised Canteen. கம்பெனியில் வேலை செய்பவர்கள் மலிவு விலையில் கேண்டீனில் சாப்பிட்டு கொள்ளலாம்.‌

இதை தவிர ‌C N C Training Centre இரண்டு கோடி செலவில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்ததால் இருந்தது. இவர்களை எல்லாம் நிர்வாகம் செய்ய 250 க்கு மேல் நிர்வாக அலுவலர்கள் ‌அதாவது Management Staff including Personal department வேறு இருந்தார்கள். அது இல்லாமல் ஒவ்வொன்றிற்கும் General Manager, Asst.Manager, Deputy General Manager, Vice President, and Managing Director அதற்கு மேல் Board of Director வேறு இருந்தார்கள்.

இந்த கம்பெனி யில் தான் ராம் ஆடிட் டிபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டு இருந்தார் அஸிஸ்ஸெண்ட் அக்கவுண்டஸ் ஆபீசராக Asst. Accounts Officer (A. A. O.). தினமும் நிறைய பேர் அவரிடம் வேலை விஷயமாக வந்து அவருடைய உதவியை பயன்படுத்திக் கொள்வார்கள். அவர் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தார் என்று சொல்ல முடியாது. அவர் நல்லவருக்கு நல்லவர்.‌கெட்டவருக்கு கெட்டவர். பொதுவாக அவர் யாரிடமும் கோபப்பட்ட மாட்டார். ஆனால் அவர் கோபப்பட்டால் தாங்க முடியாது. காரணம் அவர் மிகவும் நேர்மையானவர். யாரிடமும் எதையும், எந்த பிரதி உபகாரமும் எதிர் பார்க்க மாட்டார். ஆனால் மேதுவது என்றால் அதற்கும் அஞ்சமாட்டார். சாது மிரண்டால் காடு கொள்ளாது ரகம். அது தான் ராமின் சுபாவம். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த கதைக்கு இதெல்லாம் தேவையாக இருக்கிறது., பின்னாளில் நடக்கக் கூடிய நிகழ்வுகளுக்கு. இப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்தது. எல்லோரும் இவ்வளவு நாள் பார்க்காத அவருடைய மறு பக்கத்தை பார்க்க நேர்ந்தது. கம்பெனியே மிகவும் ஆச்சரியமாக அதே சமயம் ராம் ஆ அப்படி நடந்து கொண்டார் என்று மூக்கின் மேல் விரலை வைத்து அதிர்ச்சியுடன் பார்த்தது. யாரும் அதை கேள்வி பட்டவுடன் நம்பவேயில்லை. அப்படி என்ன தான் நடந்தது? ராம் அப்படி என்ன தான் செய்தார்?
அதன் பிறகு ராம் அந்த கம்பெனியில் வேலை செய்தாரா? இது போன்ற கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் இனி வரும் பதிவுகளில்...

படித்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

(தொடரும்)
 
welcome and bet wishes VRK...
வித்தியாசமான ஆரம்பம்.....(y)
 
Nirmala vandhachu
Best wishes for your story
Me to Salem
 
Happy to hear that you are also from Salem. I am residing at Yearcaud main road. Keep supporting.
 
Top