Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை . அத்தியாயம் ‌3.

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 3.






ராம் தனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு , சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். அவருடைய கைகால்களில் எல்லாம் லேசான நடுக்கம் இருந்தது. தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீர் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இன்னும் அந்த நடுக்கம் குறையவில்லை.





தங்கராஜ் பேசிய அந்த வார்த்தையை கேட்டு வந்த அதிர்ச்சி குறைந்த பாடில்லை. எப்படி தன்னை அப்படி ஒரு அநாகரிகமான வார்த்தையை சொல்லலாம் ?. சிறிது நேரம் மூச்சை உள்ளிழுத்து கொண்டு மெதுவாக மூச்சை வெளியே விட ஆரம்பித்தார். மனதை ஒரு நிலை படுத்த ஸ்ரீ ராமஜயம் சொல்ல ஆரம்பித்தார். தன் மனதை உற்று நோக்க ஆரம்பித்தார். தங்கராஜ் ஏன் தன்னை பார்த்து அந்த அநாகரிகமான வார்த்தையை சொல்லவேண்டும் ?. அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் ? மனதில் சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியே திரும்ப திரும்ப படம் மாதிரி ஓடிக்கொண்டிருந்தது. அதில் அவனுடைய தப்பு என்ன ?. ஏன் என்னை பார்த்து தப்பான அந்த வார்த்தையை சொல்லவேண்டும் ? அப்படி என்ன தான் நடந்தது அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் டில் ? மறுபடியும் மறுபடியும் நடந்த சம்பவங்களை கோர்வையாக நினைத்து பார்த்தார்.




வி.பி செய்ய சொன்ன வேலையை முடித்து கொடுத்து விட்டு , ‌பணம் ஃபில்லிங் செய்ய சாப்பிடாமல் கூட சென்று தங்கராஜை கேட்டது நினைவில் வந்தது. அதுவும் தான் எதுவும் தப்பாக கேட்க வில்லையோ ?. இப்பொழுது தான் வி.பி சொன்ன வேலையை முடித்து கொடுத்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். பணம் ஃபில்லிங் செய்தாகி விட்டதாக ? இன்னும் இருக்கிறதா ? நான் செய்கிறேன் " என்று தானே சொன்னேன் . அதற்கு தங்கராஜ் மிகவும் கோபமாக ராமை பார்த்து , " You're a IODIT I say. After everything is over you asking me what to do ? " Get out off here. "
" நீ ஒரு முட்டாள். எல்லாம் முடிந்த பிறகு வேலை செய்ய ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறாய் ? இங்கிருந்து வெளியே போ " என்று சொல்ல , ராமிற்கு ஒரே அதிர்ச்சி. அதை கேட்டு விட்டு ஒரு நிமிஷம் கழித்து , " If I am IODIT, You're also a IODIT ". he said angrily and came out from there. " " நான் முட்டாள் என்றால் , நீயும் தான் முட்டாள் " என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தில் இருந்து வந்து விட்டார். மனசே ஆறவில்லை .






தங்கராஜ் என்ன வார்த்தை சொல்லி விட்டார் ? . அவனெல்லாம் மேனேஜர் போஸ்டுக்கே லாய்க்கில்லை . இவனுக்கெல்லாம் யார் இந்த ‌அஸிஸ்டெட் மேனேஜர் போஸ்டு கொடுத்தார்கள் ? மேனேஜர் போஸ்டு என்றால் என்ன என்று தெரியாதவனெல்லாம் மேனேஜர் என்று வந்து நம் கழுத்தறுக்கிறான் . சரியான காட்டான் என்று மனதில் அவனை திட்டி தீர்த்து விட்டு , இவனுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு. இவனையெல்லாம் மனுசனாக கூட நினைக்க தகுதி இல்லாதவன். சரியான காட்டான்.




என்னை இப்படி பேச யார் அதிகாரம் கொடுத்தது இவனுக்கு ? என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் ? ஒரு இடத்தில் வேலை பார்த்தால் , நான் என்ன இவனுக்கு அடிமையா ? அப்படியே பார்த்தாலும் இவனும் ஒரு வேலைக்காரன் தானே என்னைப் போல்.‌ இவனும் தான் அடிமை வேலை செய்து சம்பளம் வாங்கரான் . இவனுக்கு என்னை பார்த்து கெட் டவுட என்று சொல்ல எந்த யோகியதையும் இல்லை . இங்கு . இதையெல்லாம் முளையிலே கிள்ளி எறிந்து விடவேண்டும் என்று பொருமிக் கொண்டு இருந்தான் மனதிற்குள்ளே.







அந்த சம்பவத்தை எவ்வளவு தான் மறக்க நினைத்தாலும் தங்கராஜ் அப்படி ( IODIT ) இடியட் என்று திட்டியது மனதிற்குள் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. என்னை கெட் அவுட் என்று சொல்ல இவன் யார் ? இப்பொழுது என்ன செய்வது ? யாரிடமாவது சொல்ல வேண்டும் உண்மையில் என்ன நடந்தது என்பதை. இல்லை என்றால் என் பெயரில் தான் தப்பு அதனால் தான் முதலிலேயே வந்து சொல்லவில்லை என்று பழிசொல் வந்து விடும் . அதற்கு இடம் கொடுக்க கூடாது . ஏதாவதாக இருந்தாலும் நாம் முந்தி கொள்ள வேண்டும் . அது தான் சரி . இந்த எண்ணமே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது







வி. பி இடம் சொல்லலாமா ?இப்படி இடியட் என்று தங்கராஜ் சொல்லி விட்டார் என்று . அல்லது ஜி.எம் இடம் சொல்லலாமா ? யாரிடமாவது நடந்ததை சொல்லியே ஆகவேண்டும் . அப்பொழுது தான் மனசுக்கு நிம்மதி , ஒரு ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்து ஜி.எம் ரூமிற்கு வெளியில் சென்று ஜி.எம் அவருடைய கேபினில் இருக்கிறாரா ? என்று பார்க்க , அவர் அங்கு இல்லை. சரி என்று வி. பி கேபின் வெளியே சென்று பார்க்க அவரும் அவருடைய கேபினில் இல்லை.








மதியம் சாப்பிடாததால் வயிறு வேறு கடமுடா என்று சத்தம் போட‌ ஆரம்பித்தது . இந்த டென்சனில் தலை வேறு பயங்கரமாக வலித்தது. அப்படியே நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து விட்டான் ராம் . கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது . மனம் வெறுமையாக இருந்தது .







அடுத்தது என்ன செய்வது ? தவறு தன் மேல் இல்லை என்ற போதிலும் தான் மோதியது ஒரு அஸிஸ்டென்ட் மேனேஜர் இடம் . கம்பெனி தனக்கு சப்போர்ட் செய்யுமா ? இல்லை தங்கராஜூக்கு சப்போர்ட் செய்யுமா ? இனி இந்த சூழ்நிலையில் தன் நிலை என்ன ? பலவிதமான எண்ண அலைகள் மனதிற்குள் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது சரி என்ன நடந்தாலும் அதை ஒரு கை பார்த்து விடலாம் . இந்த 7 வருட கம்பெனி வேலையில் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை , நல்லது கெட்டதுகளை பார்த்தாகி விட்டது . இதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தான்.







உரலுக்குள் தலையை கொடுத்தாகி விட்டது. உலக்கை வருகிறதே என்று பயந்தால் முடியுமா ? நடப்பது நடக்கட்டும். எவ்வளவோ பார்த்து விட்டோம் இதையும் ஒரு கை பார்த்து விடலாம் . அதற்கு மேல் அப்படியே ஏதாவது நடந்தாலும் என்ன நடக்கும் ? மீறி மீறி போனால் இந்த வேலையில் இருந்து சஸ்பெண்டு செய்வார்களா ? இல்லை மூன்று மாத நோட்டீஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்களா ? அப்படி ஏதாவது நடந்தாலும் கவலையில்லை . அதற்குள் ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளலாம் .







அப்படியே இமீடியெட்டாக ( Immediate ) வேறு வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை . சேலத்திற்கு சென்று அங்கு வேலை ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டியது தான். என்ன பெங்களூரில் கொடுக்கும் அளவிற்கு அங்கு சம்பளம் அதிகமாக கொடுக்க மாட்டார்கள் இல்லையெனில் இங்கயே இருந்து ஒரு வேலை தேட வேண்டியது தான் . இப்படி பலவித மனகுழப்பத்தில் இருந்தான் ராம் . அப்பொழுது தான் ஜி. எம் அவருடைய ரூமிற்கு திரும்ப செல்வதை தன்னுடைய சீட்டில் இருந்து பார்த்தான் . மீட்டிங் முடிந்து அப்பொழுது தான் வந்திருக்கிறார் போல . மணி மதியம் சுமார் 3.30 ஆகியிருந்தது . சரி இப்பொழுது போகலாமா அல்லது அவர் அவருடைய சீட்டில் செட்டில் ஆனவுடன் போகலாமா ? சாப்பிட்டாரா இல்லையா என்று வேறு தெரியவில்லை . சிறிது நேரம் கழித்து பார்த்த போது அவர் கேரியரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வது தெரிந்தது சரி அவர் சாப்பிடவில்லை இன்னும் . அதனால் சாப்பிட போகிறார் என்று நினைத்து கொண்டு இருந்த போது ,
வி. பி அவர் கேபினுக்குள் போவதை பார்த்தான் . பிறகு அவரும் வெளியே செல்வதை பார்த்து கொண்டு இருந்தான் . அவரும் சாப்பிட கிளம்பி விட்டார் வெளியில் காரை எடுத்துக் கொண்டு .







அப்பொழுது தான் அவனுக்கு அவன் மேலேயே சுயபச்சாதாபம் வந்தது . இந்த உலகத்தில் தான் மட்டும் தான் தனித்து விடப்பட்டது போல் ‌ஒரு உணர்வு . தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நான் என்ன தப்பு செய்தேன் இப்படி கஷ்டப்பட ? என்று பல விதமான கேள்விகள் மனதில் வந்து கொண்டு இருந்தது .
ராம் மனம் ஒரு நிலையில் இல்லை. ஊஞ்சல் போல் மனம் இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது . அலைந்து கொண்டிருக்கும் மனத்தை அடக்கி ஆள வழிதெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளுக்குளே அழுது கொண்டு இருந்தார் .








ஆனால் தனது கஷ்டத்தை/ துக்கத்தை வெளியில் சொல்லி யாருடைய அனுதாபத்தையும் பெற நினைக்கவில்லை . மனம் ஒரு குரங்கு என்று நம் முன்னோர்கள் சரியாக தான் சொல்லி இருக்கிறார்கள் . உலகத்திலேயே மிகவும் கொடுமையானது சுயபச்சாதாபம் தான். அது அவனையே அழித்து விடும் என்றும் . எனவே சுயபச்சாதாபம் படக்கூடாது என்று தீர்மானமாக தனக்கு தானே சொல்லிக் கொண்டு இருந்தார்.



சரியாக இனி என்ன செய்வது ? யாரிடம் போய் தன் மேல் தப்பு இல்லை என்று சொல்வது ? சொன்னால் யார் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள் ? எத்தனை நாள் இப்படியே இருக்கமுடியும். மனம் மிகவும் வலித்தது. வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்று எத்தனை பேர் நினைத்து அதை சரியாக பயன்படுத்துகிறார்கள் ? அது ஏற்படுத்தும் ரணத்திற்கு மருந்து ஏதாவது இருக்கிறதா ? ஏன் மனிதர்கள் இவ்வாறு இரக்கமில்லாமல் நடந்து கொள்ள கிறார்கள் ? கை தவறினால் பொருட்கள் உடையும் என்று நினைப்பவர்கள் வார்த்தை தவறினால் மனம் உடைந்து போகும் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள் ? . இப்படி பலவித சிந்தனையில் இருந்தாலும் என்ன செய்வது இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள என்ன யோசனை செய்து கொண்டிருந்தார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த வித நம்பிக்கையும் இல்லாமல் செய்வதறியாது இருந்தார் ராம். இன்னும் வி.பியும் மற்றும் ஜி. எம் யாரும் வரவில்லை . இதற்கு நடுவில் அந்த ஆபீஸில்/ ஃபேக்டரியில் அன்று சில மணி நேரத்திற்கு முன் நடந்த சம்பவம் பற்றி பலரும் பேச ஆரம்பித்து இருந்தார்கள் பலரும் , பலவிதமாக அவர்களுக்கு தெரிந்த படி . அது தான் அன்றைய டாக் ஆப்தி ஆபீஸ் ஆக இருந்தது . ஆனால் இந்த விஷயம் வி.பி மற்றும் ஜி. எம் ஆகியோருக்கு தெரிந்திருக்க வில்லை என்று ராம் நினைத்தார் . ஏனெனில் அப்படியே தெரிந்திருந்தால் உடனே கூப்பிட்டு விஷயம் என்னவென்று கேட்டிருப்பார்கள். அதிலிருந்து அவர்களுக்கு தெரியவில்லை என்று புரிந்தது கொண்டார் .




இனி என்ன நடக்கப்போகிறது என்ற மனநிலையிலும் , எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று தீர்மானத்தில் ராம் ஒரு இறுக்கமான மனநிலையில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த வித சிந்தனையும் இல்லாமல் , நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நினைப்பில் இருந்தார். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. அதில் ஜான் என்ன முழம் என்ன ? நடப்பது தான் நடக்கும். எது வந்தாலும் துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தார் ...
அடுத்தது என்ன நடந்தது ? ராமின் நிலை என்ன ?தங்கராஜூன் நிலை என்ன ? இதையெல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.






(தொடரும்)
 
Top