Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
This is my 3rd story in Tamil... ungal aatharavai tharumaari kettukolgiren...

?

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

?

மெல்லிய ஒலியில் காதுக்கு இதமாக இசையும், கடந்த அரை மணி நேரமாகக் கண்களுக்குக் குளுமை அளிக்கும் விதமாகக் காட்சியளித்த அந்த பச்சை மரம், செடி, கொடிகளும் அவன் கண்களுக்கு இதமாய் இருந்தது. இவற்றை ஒரு படி மேலே கொண்டு செல்ல கால் முளைத்த காற்று, அவன் நின்றிருந்த ரயிலை விட வேகமாக வீசி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

கடையநல்லூரைத் தாண்டிய பொழுது துவங்கிய இந்த இளங்காற்று இப்பொழுது வரை கண்களை மூட விடாமல் அதன் அழகை ரசிக்க வைத்தது. காணும் காட்சி எங்கும் வயல்கள், தென்னை, வாழை, சோளம் என மொத்தமும் பச்சை நிறம் தான்...

அதில் ஆங்காங்கு கடமையே கண்ணாக தலையை தூக்காமல் வயலில் பணிபுரியும் விவசாயிகள், ஒரு நீண்ட குச்சியில் கட்டிவிட்டிருந்த வெள்ளை துணி, வேர்வையில் நனைந்திருந்தவர்களுக்கு வீசியது போன்ற அழகிய கட்சி... மறு புறம் பறவைகள் கிடைத்த இரையை அள்ளிக்கொண்டு பறக்கும் கட்சி.

?

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி
என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

?

முதல் முறை வருகிறான் செங்கோட்டைக்கு. குற்றாலம் சென்றது உண்டு ஆனால் அப்பொழுதெல்லாம் முழு உறக்கத்திலோ அல்லது நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றது. இப்பொழுதே முதல் முறையாக இந்த சொர்க பூமியின் அழகை ரசிக்க முடிந்தது... என்ன கேரளா... மைசூர்...? இது தான் சொர்கம் என்று தோன்றியது.

ரயிலின் வேகத்தில் இரு பக்கமும் இருந்த இளம் பயிர்கள் காற்றில் ஆடிய துணி போல் ஒன்றாக ஆடியது. அந்த வயல்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது போன்ற பிரமை தந்தன தூரத்தில் தெரிந்த மலைகள். நெல் வாசனை நாசியைத் துளைத்து புத்துணர்ச்சியை வில்லாய் இறைத்தது.

"தம்பி ஒக்காந்துக்கோயா நான் இப்ப இறங்கிடுவேன்" இயற்கையின் அழகை ரசித்து வந்தவனுக்கு நேரம் சென்றது தெரியவில்லை.

தென்காசி வந்திருந்தது, இன்னும் சற்று நேரத்தில் செங்கோட்டையும் வந்துவிடும். ரயில் கதவோரம் நின்றவனுக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுக்க மனமில்லை. மதுரையில் கூட்டம் அதிகமிருக்க ஒரு முதியவருக்கு இடமளித்து கதவோரம் சென்று நின்றுகொண்டான். சங்கரன்கோவில் வரை இருந்த வறட்சி அதன் பிறகுத் தூசி தட்டியது போல் மறைந்திருந்தது அடுத்த சில நிமிடங்களில்.

சிறு வயதிலிருந்தே தோட்டம், வயல், கம்மாய், குளம் என்று இயற்கையுடன் ஒன்றியிருக்க விரும்பியவனுக்கு இன்று அவற்றின் சிறு முன்னோட்டம் வந்து கண்ணில் பட அதை வீணடிக்காமல் நின்று ரசித்துவிட்டான்.

"சரி பாட்டி" என்று கூறினான் தவிர இடத்தை விட்டு அகலவில்லை. அவன் அடர்ந்த கேசம் கூட அந்த இளங்காற்றில் துள்ளி விளையாடியது.

குற்றால காற்றை இனி வாழ்நாள் முழுவதும் ஸ்வாசிகப் போகிறோம் என்ற துள்ளல் அவன் கண்களில் தெரிந்தது.

?

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய் வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

?

இனிமையான இசையின் நடனத்தைக் கலைக்கும் விதமாக அவன் கைப்பேசி சிணுங்க, எடுத்துப்பார்த்தான். அவன் அன்னை தான். கடந்த அரை மணி நேரத்தில் இது மூன்றாவது அழைப்பு.

"சொல்லுங்க மா" முகத்தை சுளிக்காமல் பேசினான்.

"எப்ப பா வருவ? எல்லாரும் உன்ன தான் கேக்குறாங்க"

"இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன்-னு நினைக்கிறன் மா"

"அவனை வேகமா வர சொல்லுடி. முக்கியமா முன்னாடி நிக்கிறவன் இப்படியா லேட்டா வர்றது? சொல்றத கேக்குறதே இல்ல நேத்தே வந்துருக்கலாம்ல" பின்னால் அவன் தந்தையின் குரல் கேட்டு மெல்லிதாகச் சிரித்துக்கொண்டான்.

"வாத்தியார் ஆரமிச்சிட்டாரு பா, நீ வந்துட்டு சொல்லு பா. நான் யாரையாவது உன்ன கூட்டிட்டு வர அனுப்பி வைக்கிறேன்"

"இருக்கட்டும் மா நான் வந்துடுவேன்"

"சரி பா பத்தரமா வா" என்றவர் இணைப்பைத் துண்டித்தார். இணைப்பைத் துண்டித்த சில நொடியில் மீண்டும் அழைப்பு. இப்பொழுது அவன் தந்தையே அழைத்திருந்தார்.

"ப்பா" தந்தை என்றால் ஒரு தனி மரியாதை.

"ஸ்டேஷன் வந்து நீயா வராத நானே உன்ன வந்து கூட்டிட்டு வர்றேன்" இதுவே தந்தையின் பாசம். வெளியில் என்ன தான் விறைப்பாக இருந்தாலும் உள்ளுக்குள் அளவில்லாத பாசம் வைத்திருப்பார்கள், அதில் இவன் தந்தையும் விதிவிலக்கல்ல.

"சரி ப்பா" என்று மீண்டும் இயற்கையுடன் ஒன்றிவிட்டான்.

இவன் கார்த்திக். கலினரி ஆர்ட்ஸில் மாஸ்டர் டிகிரி படித்துக் கடந்த மூன்று ஆண்டுகள் மதுரையின் கோர்ட்யார்ட் பை மேரியாட் என்னும் பிரபல ஹோட்டல் ஒன்றில் பணி புரிந்து வந்தான். குணம் தங்கம்.

தந்தை சுப்பிரமணி, அரசுப்பள்ளி ஆசிரியர். சற்று கண்டிப்பானவர் அதே சமயம் அமைதியானவர் தான் ஆனாலும் குடும்பம் தான் அவர் உலகம். தாய் மஹாலக்ஷ்மி, இல்லத்தரசி ஆனால் பெயருக்கு ஏற்றவர் குடும்பத்தைப் பாதுகாப்பதிலும் சரி, குணத்திலும் சரி. தங்கை சுபத்ரா, இன்னும் இரண்டு மாதங்கள் ஆகியது பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிப்பை முடித்து.

அடுத்து பாட்டி, சேர்மத்தாய். கணவன் இறப்பிற்குப் பிறகு கோவையிலிருந்த தங்கள் சிறு வீட்டை விற்று மகனுடன் இருந்துவிட்டார். மொத்த அமைதியான குடும்பத்திற்கும் சேர்ந்து அவர் ஒருவரே பேசிவிடுவார். இதற்காகவே அதிகம் அவரை வெளியில் அழைத்துச் செல்ல சுப்பிரமணிக்குப் பயம் வரும், சபை என்று கூட பார்க்காமல் பேசிவிடுவார். ஆனால் ஒரே மகனின் குடும்பத்தைக் கண்ணுள் வைத்துப் பாதுகாக்கும் மீனாட்சி அம்மனை போல் பாதுகாப்பார்.

கடந்த இருபது வருடங்களுக்கு மேல் மதுரையில் இருப்பவர்கள் பிள்ளைகளின் படிப்பு எனத் தலைமை ஆசிரியர் பதவிக்கு இடமாற்றங்கள் பல தட்டிக்கழித்தார். இப்பொழுது பிள்ளைகளின் வற்புறுத்தலின் பெயரில் பணிபுரியும் இறுதி ஐந்து ஆண்டுகளாவது தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வெடுக்கலாம் என்று தான் செங்கோட்டை நோக்கி பயணம்.

இப்பொழுது தங்கள் இல்லத்தின் புதுமனை புகு விழாவிற்குத் தான் வேலை காரணமாகத் தாமதமாகச் செல்கிறான். ரயில் மெல்ல ஊர்ந்து செங்கோட்டையின் மலைகள் சூழ்ந்திருந்த ரயில் நிலையத்தை வந்தடைந்தது. கையிலிருந்து தன தோள் பையையும் கையிலிருந்த ஒரு சிறிய பையையும் எடுத்து இறங்கியவன் கண்ணில் பட்டது இரண்டு ஜோடி மயில்கள்.

அதில் ஒன்று சரியாக கார்த்திக் இறங்கிய நொடி உடலைச் சிலிர்த்து தன் தோகையை விரித்து அந்த ரயில் நிலையத்தில் இறங்கிய மொத்த மனிதர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஏதோ ஒரு உந்துதலில் அதை நோக்கி நடந்தவன் தோளில் திடீரென எவர் கையோ படத் திரும்பிப் பார்த்தவனுக்கு நெற்றியில் சந்தானம், குங்குமம், யாக விபூதி என வந்து நின்றார் சுப்பிரமணி, அவன் தந்தை. மகனைப் பார்த்தவர் எதுவும் பேசாமல் முதலில் அவன் காதில் அவன் அணிந்திருந்த பூம் ஹெட்செட்டை அவிழ்த்தார். அப்பொழுது தான் அவனுக்கு அதை அணிந்திருப்பது நினைவில் வந்தது.

"முதல இத கழட்ட பழகுடா. எப்ப பாத்தாலும் அதை போட்டுட்டே இருக்குறது. கார்த்தி கார்த்தி-னு கூப்டுட்டே இருக்கேன் திரும்பல அதான் வந்தேன்"

கார்த்தியும் சிரித்துக்கொண்டே, "சாரி ப்பா கவனிக்கல" என்றான்.

அவன் கையிலிருந்த பையை வாங்கியவர், "வா" என்று வெளியே அழைத்து சென்றார். ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்தவர் மகனிடம் திரும்பி வண்டி சாவியை அவன் கையில் கொடுத்தார். அது அவன் ராயல் என்பீல்ட் மேட்டரோர் 350 வாங்கி சில மாதங்கள் மட்டுமே ஆகியது.

கார்த்திக் தந்தையைப் பார்க்க அவரோ அவன் பார்வை உணர்ந்து "பாக்காதடா மதுரை டிராபிக்கு வேணாம்னு சொல்லிட்ட. இங்க எங்க டிராபிக் இருக்க போகுது அதுவும் இவ்ளோ நேரம். அதான் எடுத்துட்டு வந்தேன்"

"செங்கோட்டை வந்துட்டா மட்டும் வண்டியோட வெயிட் குறையவாபா போகுது?" என்றவன் வண்டியில் ஏறி அமர்ந்து தந்தையிடமிருந்து பையை வாங்கி முன்னாள் வைத்துக் கொண்டான்.

"என்ன குறை சொல்றத விடு வீடு ஹோமம் பண்றப்ப தலை பிள்ளை இருக்க வேணாம்? நேத்தே சொன்னேன் எங்க கூட வான்னு கேட்டியா? என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி உங்க அம்மா சொந்தம் எல்லாம் என்ன ஒரு மாதிரி பாக்குறாங்க" அவர் போக்கில் புலம்பினார் சுப்பிரமணி.

"நேத்து ஒரு இம்பார்ட்டண்ட் பங்ஷன் ப்பா. சீனியர் செஃப் என்ன இடத்தை விட்டு நகர விடல வேற வழி இல்ல. வேலைய விட்டுட்டு வர்றப்ப நல்ல பேரோட வரணும்னு தோணுச்சு அதான் அவர் சொல்றதெல்லாம் கேட்டுட்டு வந்தேன், அதுவுமில்லாம திங்ஸ் எல்லாம் வண்டில ஏத்தி விடவே நேரமாகிடுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்னாங்க நான் சாயந்தரம் போல வர்ற மாதிரி எங்கையாவது இருந்துட்டு வாங்கனு சொன்னேன். கூட்டம் கொஞ்சம் குறையட்டும்னு நெனச்சேன் பா" தன்னிலையை எடுத்துரைத்தான் கார்த்திக்.

"அடுத்த லெப்ட்ல போ. ம்ம்ம் அதுவும் சரி தான். அது எனக்கு புரியாது கார்த்தி ஆனா சொந்தத்துக்கு புரியாதே. என்னமோ நீ யாரையோ கூட்டிட்டு ஓடுன மாதிரி பாக்குறாங்க. உன்ன கண்ணுல காட்டுனா தான் என்ன நம்புவாங்க போல" கார்த்தி சத்தமாகச் சிரித்துவிட்டான்.

"கார்த்தி ஏன் சைலென்சர் சவுண்ட் வராம வச்சிருக்க?" இயற்கையாய் ஆண்களுக்கு பைக் மேல் இருக்கும் அதே தீராத காதல் சுப்பிரமணிக்கு அதனால் தான் இப்பொழுது வரை அதை விடவில்லை.

"ரொம்ப சத்தம் எனக்கு புடிக்கல ப்பா" தந்தை மகன் இருவரும் பேசிக்கொண்டே இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.

கிராமம் போன்ற காட்சி தான் அந்த தெரு. வரிசையாக வீடுகள் இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிற்கும் இடையில் பல அடி இடைவேளையை மரங்களும், செடிகளும் ஆக்கிரமித்திருக்கும். இப்பொழுது சுப்பிரமணி கட்டியிருக்கும் இல்லம் பல வருடங்கள் முன்னால் மஹாலக்ஷ்மியின் சகோதரனின் வற்புறுத்தலின் வாங்கிய மனை.

அந்த தெருவின் தொடக்கத்திலே இருந்த வீடு இரண்டு மனையை மொத்தமாக ஆக்கிரமித்து அதில் ஒரு பகுதியில் மட்டும் வீட்டைக் கட்டியிருந்தனர். தரை தலத்தில் மூன்று அறைகள் மேல் மாடியில் ஒரு விசாலமான அறை மகனுக்கு அவன் வேண்டியது போல் செய்தனர். தூரத்திலே தெரிந்தது வீட்டின் அலங்காரமும் வாழைமரம், பந்தலும்.

மகனின் வண்டியின் சத்தத்தை வைத்தே மகன் வந்ததை அறிந்துகொண்ட மஹாலக்ஷ்மி வாசலிலே வந்து நின்றுவிட்டார்.

"ம்மா அண்ணே என்னமோ அமெரிக்கால இருந்து வந்த மாதிரி ஏன் இவ்ளோ அவசரம்? நேத்து தான பாத்திங்க?" பல வருடங்கள் பிறகு மகனைப் பார்ப்பவர் போல் வந்து நின்ற தந்தையைக் கடித்தாள் சுபத்ரா.

கார்த்திக் வந்ததும் அவன் மொத்த உறவினர்களும் வந்து நலம் விசாரிக்க அவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம்.

"ஏன் பா கண்ணெல்லாம் செவந்திருக்கு? மதியம் சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் தூங்கு இப்ப மேல போய் குளிச்சிட்டு பட்டு வேஷ்டி கட்டிட்டு வா பா" அன்னை கூறியதும், உறவினர்களிடம் விடைபெற்று வேகமாகச் சென்று தனக்காக ஒதுங்கியிருந்த அறைக்குள் மறைந்துகொண்டான்.

மஹாலக்ஷ்மி சரியாக அவனுக்குத் துண்டு துணி என அனைத்தையும் எடுத்து வைத்திருக்க இளையராஜாவின் இன்னிசையை தன் கைப்பேசியில் ஒழிக்கவிட்டு நிம்மதியாகச் சென்று ஷவரின் கீழ் நின்றுவிட்டான். எவரும் அதிகம் சத்தம் போடாத அமைதி, அதன் பின்னால் மெல்லிய பாடல். இதுவே கார்த்திக்கு நிம்மதி.

மக்க கலங்குதப்பா
மடி புடிச்சி இழுக்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

நாடு கலங்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு
மக்க தவிக்குதப்பா என்னப்
பெத்த மகராசா...

காதை கிழிக்கும் சத்தம் ஷவரின் அடியில் நின்றிருந்த கார்த்திக்கே ஒலி அதிகமிருப்பதாகத் தோன்றியது. அடுத்த சில நொடிகளில் சத்தம் அதிகமாகி தன்னுடைய பாட்டு இசைப்பதே தெரியாமல் போனது அவனுக்கு.

ரோசாப்பூ மாலை
போட்டு ரோசாப்பூ மாலை
போட்டு ராசா நீ அமா்ந்திருக்க

எதற்குமே கோவம் வராத கார்த்திக்கே கோவம் வந்தது, நல்லது நடக்கும் இடத்தில் இப்படியா பாடலை போடுவது? அதுவும் இவ்வளவு சத்தமாக. வேகமாக குளித்து வந்தவன் இடையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு வெளியில் வர தான் தெரிந்தது அது தங்கள் எதிர் வீட்டில் இருந்து வந்த சத்தம் என்று.

நேராகத் தெரிந்த வீட்டின் மாடியில் எந்த நபரும் இல்லாமல் போக சில நொடிகள் பார்த்தவன் கையிலிருந்த ஈரத் துண்டை அங்கிருந்த ஒரு கம்பியில் போட்டுக்கொண்டிருந்த பொழுது.

"யோவ்வ்..." என்ற பெண் குரல், தனக்குப் பின்னால். திரும்பிப் பார்த்தான். அங்குக் கையில் ப்ரஷ், பேஸ்டுடன் சுவரில் கை வைத்து நின்றிருந்தாள் ஒரு பெண். முகம் அமைதியாகச் சாந்தமாக இருந்தது அந்த குரலுக்கும் இந்த முகத்திற்கும் தொடர்பே இருக்காது, 'ச்ச இவ்வளவு சாந்தமான முகம் கொண்ட இவள் அழைத்திருக்க மாட்டாள்' என்று திரும்பினான்.

"யோவ்" மீண்டும் அதே குரல், அதே திசை. திரும்பிப் பார்த்தான், அந்த பெண்ணைத் தவிர அங்கு வேறு யாருமே இல்லை தனக்கு முன்னாளிருந்த திண்டில் கை ஊன்றி நின்றாள்.

"எதுத்த வீட்டுல ஒரு பொம்பள புள்ள இருக்கே இப்படியா டிரஸ் பண்ணிட்டு வந்து நிப்ப?" விழி விரித்து அதிர்ந்து நின்றான் கார்த்திக்.

Epdi iruku chapter?

Marakaama comment potu ponga
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story pa ???
 
Top