Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொந்தம் 6

Advertisement

sharmila

Member
Member
அத்தியாயம் 6
விஷ்வா மனோஜை சந்தித்து பேசி இன்றோடு 2 வாரம் முடிந்திருந்தது . அன்று மனோகரன் அலுவலகத்தில் சிறு சோர்வுடன் காணப்பட்டார்.
முதலில் இதை கண்ட பரமேஸ்வரன், “என்ன மாமா ஒடம்புக்கு சுகம் இல்லையா என் ஒரு மாதிரி இருக்கீங்க ? “. சிறு வயதில் இருந்தே தந்தையுடன் அலுவலகத்தில் பார்த்து பழகியதால் மற்றும் தூரத்து உறவு முறை என்பதால் மாமா என்றே அழைத்து பழகி இருந்தனர்.
மனோகரன், “ஒன்னும் இல்ல தம்பி எதோ யோசனை அவ்ளோ தான்”. பரமா, “ சரி மாமா எதுவும்ன சொல்லுங்க “ . சரி பா என்ற மனோகரன் தளர்ந்த நடையுடன் தன்னிடம் சென்றார் .
ஜம்புலிங்கம், விஷ்வா , தங்கராசு மற்றும் பரமா டெண்டர் பற்றிய ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். பரமா,” விஷ்வா மாட்டுத்தாவணி சைட்ல கொஞ்சம் சேன்ஜ்ஸ் பண்ண சொன்னேனே பாத்தியா ?” தங்கராசு மனதுக்குள் , ஐயய்யோ அடுத்து நம்மள பிடிபாறே ,தங்கம் சிக்கீராத டா. விஷ்வா, “அதெல்லாம் அப்போயே முடிஞ்சுது ண்ண, மாமா கூட போன வாரம் போய் பாத்து திருப்தியா இருக்கு சொன்னாரு”. தங்கராசு மனதுக்குள் சொல்வதாக நினைத்து “அட பாவி பயலே போன வாரம் மனோகரன் சார் பொண்ணு பின்னாடி என்ன சுத்த விட்டு நீ மட்டும் குடுத்த வேலைய முடிச்சு நல்ல பிள்ளை பேரு வாங்கீட்டியா” என்று ஒலரி பின் விஷ்வா மொரைப்பை பார்த்து நாக்கை கடித்தான் . “மொறப்பையன் மொரைக்குறான் ,சுளுக்கு எடுதுருவனே “ மனதுக்குள் நினைத்து இளித்து வைத்தான் .
என்ன , யாரு பொண்ணு பின்னாடி போன ? என்று பரமா அழுத்தத்துடன் கேட்க , விஷ்வா , அது ஒன்னும் இல்ல அண்ணா இவன் எதோ பெனாத்துறான். பரமா நம்பாத பார்வை பார்க்க ஜம்புலிங்கம், “ டேய் , வயசுபசங்க கூட சேந்தா இப்படித்தான் டா மீட்டிங் போட்டு என்ன பேசுறீங்க அதும் என்ன வெச்சுட்டு . இதையும் நான் மாமாக்கு ரிபோட் பண்றேன் “என்று சொல்ல தங்கராசு,” ஐயோ தெய்வமே ! அப்பா விடுப்ப எனக்கும் இதுக்கும் யாதொரு சமந்தமும் இல்ல” சொன்ன நொடி விஷ்வா மற்றும் பரமா வெளுத்தனர்.
அப்போது அங்கு பணி புரியும் ஒருவர் பதட்டத்துடன் வந்து சார், மனோகரன் சார் மயங்கி விழுந்துட்டாரு, நால்வரும் அங்கே விரைந்தனர்.
மனோகரன் , உடல் எல்லாம் வேர்த்து மயங்கிய நிலையில் இருந்தார் , அனைத்து பணியாளர்களும் அவரை எழுப்ப முயற்சி செய்துக்கொண்டு இருந்தனர்.
ஜம்புலிங்கம் , “ பரமா நீ தூக்கு பா , விஷ்வா நீ போய் வண்டி எடு சீக்கிரம். டேய் தங்கம் நீ போய் அவரு வீட்ல பக்குவமா சொல்லி ஹோஸ்பிடல் கூட்டிட்டு வந்துரு. சீக்கிரம் போ லேட் பண்ணாத” என்று அனைவருக்கும் கட்டளைகள் பிறப்பித்து ஈஷ்வர்மூர்த்தி அறைக்கு விரைந்தார்.
மீனாட்சி மல்டிஸ்பெசலிடி ஹோஸ்பிட்டல், ஐ சி யு முன் இருந்தனர் அனைவரும். மனோகரின் மனைவி அழுதுகொண்டு இருந்தார். தங்கம் சென்று அவரயும் அவரின் ரெண்டாவது மகள் பள்ளியில் இருந்து அழைத்து வந்திருந்தான். மீனாட்சி மற்றும் சீதாவிடம் விஷயத்தை கூறி தமிழ்செல்வியை அழைத்து வர சொல்லி இருந்தனர் . சிறிது நேரத்தில் வந்த மருத்துவர் ,” பெருசா ஒன்னும் இல்ல Bp அதிகமாகிருச்சு . மாத்திரை தரேன் ரெகுலரா சாப்ட சரி அய்டும். ரூம்க்கு மாத்துனதும் போய் பாருங்க . தொந்தரவு பண்ணாதீங்க “ என்று தன் கடமையை முடித்து சென்றார் .
சிறிது நேரத்தில் மனோகர் ரூம் மாற்றப்பட்டு அவர் மனைவி ,மக்கள், ஈஸ்வரமூர்த்தி மற்றும் பரமா மற்றும் இருந்தனர். மற்றவர்களை ஈஸ்வரன் அனுப்பி விட்டார் .
தமிழ் அழுவதை காண முடியாமல் அனைத்து ஆறுதல் படுத்த துாண்டும் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான். சிறிது நேரத்தில் கண் முளித்த மனோகரன் , தனக்கு வலப்புறம் மனைவி மற்றும் மக்கள் அழுது கொண்டிருப்பதையும் இடப்பக்கம் ஈஸ்வரமூர்த்தி அமர்ந்திருப்பதயும் பார்த்து எல முயன்றார்.
பரமா விரைந்து வந்து அவரை அமர வைக்க உதவி , “ என்ன மாமா இப்போ பரவாலயா?, நான் போய் டாக்டர் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி வெளியேறினான்.
ஈஸ்வரமூர்த்தி , “ என்ன மனோகர் இப்படி எல்லாரையும் பயம் காட்டீட்ட என்று குறைபட்டார். மேலும் தொடர்ந்து மனசில என்ன போட்டு அழுத்துது சொல்லு பா , சொன்ன தான தெரியும் , உன்ன இத்தன வருஷத்துல இப்படி ஒடுஞ்சு பாத்ததே இல்லயே. திரும்ப எதும் பிரச்சனையா? “ .
மனோகரன் மனைவி ,” நல்லா கேளுங்க சார், என்னைக்கு அந்த மினிஸ்டர் பையன் பிரச்சினை வந்துச்சோ அன்னைக்கு இருந்து இவரு சரி இல்ல, ரொம்ப பயப்படிரார் , நைட் சரியா தூங்குறது இல்ல , எந்நேரமும் எதோ யோசனையாவே இருக்காரு . “
ஈஸ்வரமூர்த்தி, “ நீ கவலபடாதமா எல்லாம் சரி ஆகும். என்ன மனோகரன் , தங்கச்சி இப்படி சொல்லுது அன்னைக்கு பசங்க பேசி பிரச்சினை இல்லப்பா தேவைப்பட்ட தட்டலாம் சொன்னாங்க , இன்னும் எதும் பிரச்சனையா? “
மனோகரன், “ இல்ல சார் , ரெண்டுமே பொண்ணு இப்படி பிரச்சினை வந்தா எப்படி கரசேக்க போறேன் . வரன் பாத்து நாளே யாரும் மூக்கு மேல பல்ல போட்டு பேசிரகூடாது” .
தமிழ் அப்பாவை மன வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை கண்ட ஈஸ்வமூர்த்தி பாரு பிள்ள சங்கடபடுது இதேயெல்லம் நினைக்காத பா . பரமா உடன் வந்த டாக்டர் பரிசோதனை செய்து மீண்டும் சில பல அறிவுரைகளை வழங்கி சென்றார்.
சிறிது நேர அமைதிக்குப்பின் ஈஸ்வரமூர்த்தி, “ நான் கிளம்புறேன் மனோகரா , ஒடம்ப பாத்துக்கோ , பிள்ளைங்க இங்க இருக்க வேணாம் பரமா நீ வீட்ல இவங்கள விட்டுடு. தங்கராசு, விஷ்வா நைட் இங்க இருப்பாங்க “ கூறி விடைபெற்று சென்றார்.
தமிழ்செல்வி, அவளது தங்கையை வீட்டில் விட்ட பரமா , தங்கையிடம் நீர் கேட்டு அவள் உள்ளே சென்றதும் தமிழ்செல்வியை நொடியில் அணைத்து விடுவித்து ஒன்னும் இல்ல நிம்மதியா தூங்கு என்று கூறி அவசரமாக விடைபெற்றான். நொடியில் நடந்து விதத்தில் அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள் தமிழ்செல்வி
தொடரும்.
 
Top