Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொந்தம் 5

Advertisement

sharmila

Member
Member
அத்தியாயம் 5
மாலை பொழுது ஈஸ்வரமூர்த்தியின் வீடு , விஷ்வா , தங்கராசு , சீதாலட்சுமி மற்றும் மீனாட்சி விளையாடிக்கொண்டு இருந்தனர் . பரமேஸ்வரன் மற்றும் விஜய் பாடம் எழுதிக்கொண்டு அவர்களுக்குள் எதோ பேசி சிரித்து கொண்டிருந்தனர்.
அங்கை இரவு உணவுக்கு தயார் செய்துக்கொண்டெருந்தார் . அந்த நேரம் ருத்ரமூர்த்தயாய் வீட்டிற்குள் வந்த ஈஸ்வரமூர்த்தி, வீடே அதிரும் வண்ணம் பத்மா என்று கத்தினார் .
அனைவரும் ஒரு திடுக்கிடலுடன் அவரை பார்த்தனர் . பிள்ளைகளை உள்ள அனுப்பு அங்கை . ஏங்க என்ன ஆச்சு ஏன் இவளோ கோவம் ? , அங்கை .
சொல்றத செய் அங்கை என்று கத்தினார் ஈஸ்வரமூர்த்தி. சுதாரித்த அங்கை பிள்ளைகளை உள்ளரை அனுப்பினார் .
தயங்கிக்கொண்டே வந்த பத்மாவை பார்த்து ஈஸ்வரமூர்த்தி , நீ இன்னிக்கு ஆபீஸ் வந்தியா ?
பத்மா தயங்கியும் அங்கை புரியாமல் பார்த்து வைத்தார் . பொறுமை இழந்த ஈஸ்வர் , எனக்கு பதில் வேணும் .
சிறிது நேர அமைதிக்கு பின் பத்மா தான் வந்தது அங்கு நடந்தது அனைத்தையும் கூறினார் . அதை கேட்டு அங்கை அதிர்ச்சி அடைந்தார் என்றால் ஈஸ்வரமூர்த்தி வெறி வந்தார் போல பத்மாவை அடிக்க சென்றார் .
இடையில் வந்த அங்கை, எனங்க நீங்க வயசு பொண்ண அடிக்க போறீங்க . விடுங்க பேசலாம், உங்களுக்கு எப்டி தெரியும் சுந்தரம் அண்ணா என்ன சொன்னார் .
ஈஸ்வரமூர்த்தி, அவன் என்ன சொல்லுவான் , உன் தங்கச்சிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு சரி பண்ண பாருனு சொன்னான் . அவன் பார்ட்னர்ஷிப் விட்டுட்டு ஊருக்கு போறேன்னு சொல்றான் . எந்த ஊருனு கூட எண்ட சொலாமடெட்டேண்ணு சொல்றான் . அவன் மனச அவளோ கஷ்டப்பட்டு பேசுறான் .நா இங்க இருந்தா உன் தங்கச்சி நிம்மதியா இருக்காதுன்னு சொல்றான் . எனக்கு தங்கச்சி எவ்ளோ முக்கியம் அதே அவனும் முக்கியம். நான் யாருக்கு பாக்குறது என்று ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருக்க ,பத்மா சுந்தரம் ஊரைவிட்டு செல்கிறார் என்றதிலே அதிர்ந்து நின்றார் .
சில நொடிகளில் மீண்டவர் ,அண்ணா எனக்கு அவரும் விஜயும் வேணும். அவங்கள நான் நல பாத்துக்க்குவேன் . அண்ணி நீங்க சொல்லுங்க அண்ணன்ட, என்று கண்ணீர் விட்டார் .
அங்கை , நீ புரிஞ்சு தா பேசுறியா பத்மா , உன்ன வேண்டாம்ன்னுசொல்றவங்க கிட்ட கெஞ்ச சொல்றியா ? அதோட நீ அவர காதலிச்சு கல்யாணம் பண்ண ஆசபடல , பரிதாபாத்துல பிடிவாதம் பன்ற . இது நிலைக்காது . உன் வாழ்க்கையை கெடுத்துக்காத என்று அறிவுரை கூறினார்
இது எதயும் கேட்கும் நிலையில் பத்மா இல்லை . இப்போ நீங்க என்ன அவருக்கு கல்யாணம் பண்ணி வெக்கல நான் செத்துருவேன் என்று ஆவேசத்துடன் மாடியை நோக்கி ஓடினார்.
அதற்கு பிறகு அனைத்தும் அதிவேகத்தில் நடந்தது , தங்கை செய்ததை நம்பமுடியாத அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஈஸ்வரமூர்த்தி , விஜயை அழைத்துச்செல்ல வந்த சுந்தரத்தை கட்டாயபடுத்தி திருமணத்தை நடத்தி முடித்தார் .
மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி , சுந்தரம் - பத்மா திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது முடிந்தது . அனைவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர் . தங்கைக்காக நன்பண்ணிடம் பேசி திருமணத்தை நடத்தி இருந்தாலும் இன்னும் முகம் இறுகி தன்னிடம் பேசாமல் முகம் திருப்பும் நண்பனை நினைத்து கவலையில் ஆழ்ந்தார் ஈஸ்வரமூர்த்தி.
பிடித்தம், மனம் பொருத்தம் ஏதும் இல்லாமல் கட்டாயத்தின் அடிப்படையில் நடந்த இத்திருமணத்தில் தன் நாத்தியின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று வேண்டிகொண்டிருந்தார் அங்கைக்கரசி. சுந்தரம் எந்நேரம் வெடிக்கும் எரி மலயாய் நின்றார் என்றால் பத்மா திருமணம் நடந்த மகிழ்ச்சியில்லும் கலக்கத்திலும் இருந்தார் .
ஜம்புலிங்கம் பிள்ளைகளை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டார் .
ஈஸ்வரமூர்த்தி அங்கைக்கு கண் காட்ட , அங்கை சுந்தரத்திடம் சென்றார் , அண்ணா நல்ல நேரம் முடியப்போகுது வீட்டுக்கு போலாம் வாங்க அண்ணா . இங்க பாரு மா அங்கை நான் எவ்ளோ சொல்லியும் காதுல வாங்காம நடந்த சுயநலம் இது. நான் யாரையும் மன்னிக்கவே மாட்டேன் . அது தா உங்க இஷ்டப்படி கல்யாணம் நடந்ததுல அவ்ளோ தான். இனி எனக்கும் உங்களுக்கும் எதும் இல்ல. நன்பன்னு சொல்லிட்டு வரவேனாம் உன் புருஷன்ட்ட சொல்லீரு. பத்மா , என் அண்ணா மேல தப்பு இல்லங்க எல்லாமே என்னால தான் . தயவு செஞ்சி அண்ணவ எதும் சொல்லாதீங்க என்ற பத்மாவை தீயாய் மொரைத்த சுந்தரம் அங்கையிடம் நாங்க ஊருக்கு போறோம் என்று சொல்லி விஜய் மற்றும் பத்மாவை அழைத்து சென்றார்.
அவர்கள் சென்ற திசையை மனவலியுடன் பார்த்துக்கொண்டே இருந்தார் ஈஸ்வரமூர்த்தி .
கடந்த கால நினைவில் இருந்து மீண்டனர் விஜய் மற்றும் ஈஸ்வரமூர்த்தி.
 
Last edited:
Very sorry friends mobile la dha type panren . Adhula post panamudila. Night lap la irundhu post podren . Pls very sorry for the inconvenience
 

Advertisement

Top