Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல். இந்த கதையும் கதைக்களமும் எனக்கு மிகவும் புதிய ஒன்று. முயன்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தது.

உண்மையை சொல்லனும்னா நிறைய பேர் இந்த ஸ்லாங் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குதுன்னு தான் சொன்னாங்க. ஆனாலும் தொடர்ந்து இதை கொடுத்தேன்.
வாசகர்களான உங்களுடைய கருத்துக்கள் தான் அதற்கு காரணம்னு சொன்னா கண்டிப்பா மிகையில்லை.

கமெண்ட்ஸ் எதுக்கும் ரிப்ளே பண்ணமாட்டேன்றீங்கன்னு கேட்டாங்க. உண்மை தான். அது எனக்குமே ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் உங்க கருத்துக்கள் எனக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களை தான் கொடுக்க வச்சது.

கேப் இல்லாம இதனை இத்தனை வேகமாகவும் முடிக்க வச்சது. கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ணதில்லையே தவிர என்னுடைய நன்றியை தெரிவிக்காம இருந்ததில்லை.

அதே மாதிரி யார் யார் புதுசா கமெண்ட்ஸ் போடறாங்கன்னு கூட கரெக்ட்டா பார்த்துப்பேன். அதே மாதிரி வழக்கமா கமெண்ட்ஸ் பண்ணாதவங்க யாரும் ஒரு அத்தியாயத்துல பண்ணைன்னாலும் யோசிப்பேன் என்னாச்சோன்னு.

மத்தபடி பண்ண கூடாதுன்னு எல்லாம் இல்லை. நேரம் கிடைச்சா பண்ணிடலாம். இப்ப இருக்கற நேர பற்றாக்குறை அப்டேட் டைப் பண்ணவே சரியா போயிருது. அதனால அதை தவறா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். :)

இந்த கதையுடன் என்னோடு பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள் :)

விரைவில் அடுத்த கதையோட வரேன் ப்ரெண்ட்ஸ்.


சூரியனவனின் ஆழ்கடல் - 29 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 29 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
:love: :love: :love:

??? Best wishes சரண் ???

நீயும் நானுமா தம்பி நீயும் நானுமா-னு மோத விட்டுடீங்களே.....
அப்பாரு முதல் முறையா வாயை தொறக்குறாரு.....
அடங்குமா ராசாத்தி......
என்ன பேச்சு என்ன பேச்சு......
உன் வாழ்க்கையை எங்கம்மா பணயம் வச்ச???
அது எப்போவும் போல போகுது.....
அவ தான் அனாதையா இருந்தா......
நல்ல நாக்கை புடுங்குற மாதிரி கேட்டாச்சு.......
அம்மொவோட தங்கைனாலும் சின்னம்மா சின்னம்மா தான் னு சொல்லிட்டா ராசாத்தி......
அப்பா பாட்டி எல்லோர்க்கும் நல்ல கொடுத்தாச்சு.......
என்ன தான் இருந்தாலும் அருளுக்கு தான் துடிக்குது........
அக்காவிற்காக வேடிக்கை பார்த்தவன் பொண்டாட்டினதும் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்குறான்........

ஏம்மா நாத்தனாரே சவுண்ட் குறைச்சுக்கிட்டு கிளம்புங்க வீட்டுக்காரரோடு.......
குணசாலி அன்னம் எல்லாம் கூட நல்லவங்களாகிட்டாங்க நீ சின்னமாவாவே இருந்துட்டியே உன் தோழிக்கு.......

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை எவளுமில்லை
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை.........
 
Last edited:
???

வாழ்த்துக்கள் சரண்யா.. கிராமிய மணத்தோட அழகான, அருமையான ஒரு கதை கொடுத்ததுக்கு.. அந்த வட்டார வழக்கு முதல்ல படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அப்புறம் போக போக புரிஞ்சு நல்லா இருந்துச்சு..

மின்னுவோட மனசுல இருக்கிற ஆற்றாமை எல்லாம் கொட்டி தீர்த்துட்டா..

சந்தோஷம் என்பது வாழும் வாழ்க்கையில் மட்டுமல்ல, வாழும் வாழ்க்கை துணையிலும் உள்ளது.. ??

 
Last edited:
வாழ்த்துகள் சரண்
ரொம்ப சூப்பர் கதை
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
வட்டாரவழக்கு முதல் 4 அத்தியாயம் தான் படிக்க கடினமா இருந்தது
பிறகு பழகிடுச்சுபா
:love::love:
 
Last edited:
???
மின்னொளி தன் மனதில் உள்ள பாரத்தை எல்லாம் மொத்தமாக இறக்கி வைத்துவிட்டாள்?.அவள் மட்டும் சொல்லி இருக்காவிட்டால் நிச்சயமாக யாருக்கும் அவள் மனதில் உள்ள குமுறல் தெரிந்திருக்காது?. இப்போதாவது ராஜாத்திக்கு , முருகையனுக்கு , அழகு பாட்டிக்கு புரிந்திருக்கும்?. குணசாலியின் மாற்றம் வியப்பாய் இருந்தது??.

ஏம்மா மின்னொளி கோவத்துல நீ பாட்டுக்கு தோப்புக்கு போயிடுவியோ??. ஒரு நிமிஷம் திக்குனு ஆயிடுச்சு???. நல்ல வேளை அருள் வந்துட்டான்??. கடைசியா அன்னத்தையும் ,தர்மராஜனையும் கூட அற்புதமான பாத்திரங்களாக ஆகிவிட்டீர்கள்??. அன்னம் மட்டும் உதவி செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாக மாறி இருக்கும்??.

உங்கள் எழுத்தின் சிறப்பே இறுதியில் எந்த கதாபாத்திரத்தையும் கெட்டவர்களாகவே விட்டு விட மாட்டீர்கள்????. அவரவர் சூழ்நிலையும், குணமும் தான் அதற்கு காரணம் என்பதை புரிய வைத்து விடுவீர்கள். உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அது??.இதிலும் அன்னம், தர்மராஜ், குணசாலி கதாபாத்திரத்தை அப்படியே விடாமல் அவர்களுக்கும் ஒரு நல்ல பக்கம் உண்டு என்பதை காட்டி விட்டீர்கள். அருமை.????
இளவரசனுக்கு ஜோடியாக ஒரு பெண் குழந்தை பெறுவாள் என்று நினைத்தேன்???. ஆனால் பையன் பிறந்து விட்டான்.???? அந்தக் கதையை செகண்ட் பார்ட்டில் பார்க்கலாம்.?????

அருமையான கதை. ?அற்புதமான முடிவு?. அதுவும் வட்டார வழக்கில் நீங்கள் எழுதிய விதம் அற்புதம்???. உங்கள் புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சரண்யா ஜி.???
 
Last edited:
Top