Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூடா ஒரு டீ

Advertisement

Hariharan

Member
Member
தீயிலை சுடுவானம்
மேல்மழை!
தீஈ இலை சுடு வானம்
மேல் மழை!

பூவிழை தென்றல்
நருமுகை!
தாவதும் அதுவாவதும்
உருவகை!

சூழ் பனிசூழ்
தெருகடை!
ஓரம் தெருவோரம்
திரள் படை!

வா நீ வா
பகையழை!
கூச்சல் பெருங்கூச்சல்
விடை விடை!

தூறல் அச்சாரல்
மடை உடை!
மேலுடை நனை மேலுடை
கடையடை!

தீ பகை தீ
செருக்கழை!
நேர் எதிர் நேர்
முகத்திரை!

வா அடி வா
அழை அழை!
ஓங்க கை ஓங்க
தடை தடை!

பார் அக்கம் பார்
பக்கம் யார்?
நாயர் டீ நாயர்
கடை கடை!

தேயிலை பானம்
நாத்துழை!
நீங்கு அத்தீங்கு
பகை பகை!

டீ ஒரு டீ
அடிப்படை!
சேர் ஈர் சேர்
வாரீர்!
 
Top