Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-31

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-31

மாமா முதல்ல நீங்க சாப்பிடுங்க , அப்பறம் எனக்கு ஊட்டிவிடுங்க

இல்ல பொம்மி, நீ கொஞ்சம் சாப்பிடு. இவர்களை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள் பவி.

பவியை பார்த்து, வா பவி பூவரசன் கூப்பிட. அவர்களிடம் வந்தாள். சாப்பிடும்மா என்றான்.

வேணா மாமா.சோகமாக மூஞ்சியை வைத்துக்கொண்டாள், எப்படி இரண்டுபேரும் கூடிட்டாங்க. நானும் கட்டிருக்கேன் நம்மள கண்டுகிறதே இல்லை.

மாமா நான் உங்கிட்ட பேசனும் பவி சொல்ல , அவளை நிமிர்ந்து பார்த்தான்.

என்ன பவி..

மாமா, உங்களுக்கு சுந்தரி மேல கோவமில்லையா என்று தயங்கியப்படி கேட்டாள்.

இருந்துச்சு, இப்ப இல்ல அதுக்குன்னு மனைவியை விட்டுட முடியுமா. ஒருத்தற ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டா சரிதான்.

ஆனா உங்களுக்கு அவளை மட்டும்தான் புடிக்கும், என்னை உங்களுக்கு பிடிக்காது தானே மாமா.

இல்ல பவி, எங்க அக்கா பொண்ணுங்க இரண்டுபேரும் ஒண்ணுதான்.. என்ன நீ ரொம்ப அமைதியாயிருப்ப உன்னால எந்த பிரச்சனையும் வராது. ஆனா உன் தங்கச்சி சரியான அறந்த வாலு எங்க போனாலும் எதையாவது இழுத்துட்டு வருவா. அவளைதான் எப்பையும் பார்க்க முடிச்சது, நிறைய முறை அடிச்சியிருக்கேன், எப்பயும் என்னையே அண்டிட்டு இருப்பா.

உனக்கு எப்பவும் மாமாவை பிடிக்காது, தப்பா சொல்லுறேன் நினைக்காத என்னுடைய செயலும் அப்படிதான் இருக்கும் சில சமயம். படிக்காதவன் வேற அந்த பிம்பம் உன் மனசில இருந்தது, சுந்தரி என்னைய மேலோட்டமா பார்க்க மாட்டா. என்ன சொல்லவரேன் யோசிப்பா. நான் எப்படி ஒரு விஷியத்தை ஹாண்டல் செய்வேன் பார்ப்பா , என்னையை புரிஞ்சி வச்சிருக்கா.

மாமா , உங்கள நான் புரிஞ்சிக்கல , சாரி மாமா.

பரவாயில்ல பவி. பொம்மி அந்த டாக்குமெண்ட் எடுத்துவா.

பவி , உங்க இரண்டுபேருக்கும் சரி சமம்மா சொத்துவாங்கினேன். உங்க வீட்டுக்காரர் சிவில் இஞ்சின்யர் தானே, சேலத்தில் இடம் வாங்கிருக்கேன் நீங்க அங்க பெரிய ஹோட்டல் கட்டிக்கலாம். மெயின்னான இடம்தான் பவி. சுந்தரி கொடுக்க , அதை பவியிடம் நீட்டினான்.

மாமா வேணாம்.

ஏன்டா நான் உன் மாமாம்மா, உனக்கு எல்லாமே நான்தான் செய்யனும், கொஞ்சம் கோவம்தான் ஆனா மனசில எதுவுமில்ல.. வாங்கிக்கோடா.

பவி அழ ஆரம்பித்தாள் , கண்னை துடை பவி சின்ன குழந்தை மாதிரி அழுற.. சாரி மாமா.

ஆ என்று அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டான் பூவரசன். மாமா சுந்தரி எங்கிட்ட பேச மாட்டா..

அப்படியா , ஏன்டி எங்க அக்கா பொண்ணுகிட்ட பேச மாட்டுற, நாத்தனார் பொண்ணு ஞாபகம் வச்சுக்கோ...அவக்கிடக்கிறா நான் உங்கிட்ட பேசறேன். அவள அவங்க அம்மாவீட்டு அனுப்பிவச்சிடலாம். பொம்மி பூவரசை முறைக்க.

போங்க மாமா நீங்களாவது பொம்மியை விடதாவது என்று சிரித்தாள் பவி.

பார்த்தியா பொம்மி ஊருக்கே தெரியது, மாமாவ எப்படி கைக்குள்ள வச்சிருக்க நீ.

சித்தி என்று அருண் ஓடி வந்து சுந்தரியை கட்டிக்க, சண்முகபாண்டியனும் வீட்டிற்குள் வர.வாப்பா என்று வரவேற்றாள் சுந்தரி. சாப்பிடுங்க என்று அவருக்கு தட்டை வைத்தாள். பூவரசன் எதிரே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்...

அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் பூவரசன். பொம்மிக்கு ஒரு வாய் ஊட்டினான் சண்முக பாண்டி. கோவம் வந்தது பூவரசுக்கு என் பொண்டாட்டிக்கு யாரும் ஊட்ட தேவையில்ல என்றான்

நான் என் பொண்ணுக்குதானே ஊட்டுறேன். அவ உன் பொண்ணுயில்ல என் பொண்டாட்டி சொல்லி கோவமா கையை கழுவ சென்றான் பூவரசன்.

“பூவா” என்று பின்னாடியே சென்றாள் பொம்மி...போடி என் பின்னாடி ஏன் வர.

பூவா ,அவன் முதுகை கட்டிக்கொண்டாள், மாமா கோபப்படாத, என் செல்லம் முன்னாடி வந்து கண்ணங்களை பிடித்து இந்த உலகத்திலே என் பூவா தவிற யாரும் முக்கியமில்ல. உனக்கு அடுத்ததுதான் மற்றவங்க.

அந்த ஆளு அப்படியே பாசத்த பொழிறான் இப்பவந்து முகத்தை சுளித்துக் கொண்டே சொன்னான்.

கடவுளே நான் எப்படி சமாளிக்கிறது இரண்டுபேரையும் சுந்தரி நினைக்க, வா நாம்ம பண்னைவீட்டுக்கு போலாம் பொம்மி, சரி போலாம் மாமா இரண்டு நாள் கழிச்சு. ஓகே வா பூவா...

அவளை அனைத்து முத்தமிட்டு ஓகே என்று விட்டான். பூவரசனை வெளியே அனுப்பிவிட்டு, அவள் அப்பாவிடம் வந்தாள், இங்க பாருங்க எனக்கு என் மாமாதான் முக்கியம் சும்மா அவர் எதிர்க்க பாசத்த காண்பிக்காதீங்க. அப்பசொன்னதுதான் இப்பவும் என் மாமனுக்கு உங்கள பிடிச்சாதான், நான் அப்பான்னு உங்கிட்ட வருவேன்.

டீக்கடையில் பரதா, மாதவன் உட்கார்ந்திருந்தார்கள். வண்டியை விட்டு வந்து உட்கார்ந்தான் பூவரசன். என்ன மாப்பிள்ள ரெஸ்ட் எடுத்திட்டியா.

ம்ம்ம் மாமா ரொம்ப டயர்டு இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

ஏன் மச்சான் காலையில்ல ரொம்ப வேலையா -மாதவன்.

ஆமாம் , காலையில குளிச்சிட்டு சாப்பிட்டு பொம்மியை பார்க்க போனது வேலைதான மாப்பிள்ள-பரதன்

மாமா , நான் கோவமா போனேன்னா, அங்க செம சண்டை போட்டேன். பயந்துட்டா. ஓரே அழுகை, சாரி மாமான்னு கேட்டா.

யாரு உன் பொம்மி... நம்பிட்டோம், அப்பறம்.

கால்ல விழுந்துட்டா மாமா.

மாப்பிள்ள எனக்கு ஏற்கனவே காது குத்திட்டாங்க, நீ கால்ல விழுந்திட்டன்னு சொல்லு, அவள பார்த்தாவே நீ பயப்படுவே.

நம்ப மாட்டே போங்க, டிவியில் பாட்டு ஒலித்தது.

"புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிர்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது...".​

இந்த பாட்டை கேட்டு பூவரசன் வெட்கப்பட்டு கீழே உதட்டை கடித்து சிரிக்க... ஏய்ய்ய்ய்ய மாப்பிள்ள வெட்கப்படுறான்டா இருவரும் அவன்மேல் விழ.

இன்னிக்குதான் பூவரசு உன் முகம் பிரகாசமா இருக்கு..

"ச்சீ மேலிருந்து எழுந்திருங்கடா பொம்மியே பரவாயில்ல எவ்வளவு வெயிட்டு".

மச்சான் நாளைக்கு பொண்ணு பார்க்க ஊருக்கு போறேன்டா, என் அத்தை பொண்ணே.

குடும்பஸ்தன் ஆக போற, டிரிட் கொடுடா மாதவா.

கண்டிப்பா பார்த்து உஷாரா இருடா, நேத்தே பார்த்தயில்ல... நேற்று நடந்த சம்பவம் நினைவில் வந்தது.. பூவரசனும் பரதனும் வண்டியில் வர லாரி பின்னாடி வேகமாக மோத வந்தது சட்டென்று சுதாரித்து ரோட்டின் பக்கத்து வயலில் வண்டியை விட்டான் பூவரசன். லாரி வேகமாக போனது. உடனே போனை லோகுக்கு போட்டு லாரியின் நம்பரை சொல்லி பத்து நிமிஷத்தில கூட்ரோடு வரும். ஆட்களை கூட்டிட்டு போய் மடக்கு என்றான். பின்னாடியே வேகமாக வண்டியை செலுத்தினான் பூவரசன். யாரு மாப்பிள்ள இது தெரியில மாமா. லோகு டிரைவரை பிடித்துவைத்திருந்தான். நம்ம மில்லுக்கு கூட்டுட்டு போ லோகு அங்க விசாரிக்கலாம்.

டிரைவரை அடித்து விசாரித்தனர். திவாகர் அனுப்பிய ஆள் என தெரியவந்தது. என்ன செய்யறது மாப்பிள்ள..

திருவிழா முடியட்டும், இவனை பூட்டி வையுங்க, நம்ம தலைவர்கிட்ட பேசிட்டு போலிஸ்க்கு போகலாம்.

மாதவன் திரும்பவும் கூறினான் டேய் ஜாக்கிரத்தை , அடுத்த ஸ்டெப் எடுக்கலாம் பூவரசு எதுக்கு டிலே செய்யுற.



அங்கே லோகு வர... அண்ணே இந்த திவாகரு உன்ன போட்டுதள்ள ஜல்லிக்கட்டுல ஆளை ரெடி பண்ணிருக்கான் போல அதுக்குதான் வராதீங்க போன் செஞ்சேன்.நீங்க எடுக்கல அண்ணிக்கு போன் போட்டேன்.

எப்போடா... காலையில ஒரு பத்து மணி இருக்கும்,அண்ணி சொன்னாங்க நான் பாத்துக்கிறேன்.

ஓ அதான் போனை கையில் வச்சிட்டு நின்னா போல...

சரிண்ணே நான் கிளம்பறேன்..ம்ம்டா

பூவரசு இந்தாப்பா ஸ்வீட் எடுத்துக்கோ மகேஷ் கொடுக்க என்னடா விஷேசம் ...

அது நான் அப்பா ஆக போறேன்டா.

பொண்டாட்டிய ஆடி மாசம் அம்மாவீட்டுக்கு அனுப்ப மாட்டேன் சண்டை போட்டியேடா இப்ப டெலிவரிக்கு அங்கதான அனுப்பனும் பரதா கேலி செய்ய.

பூவரசன் ஸடன்ணா எழுந்து மாமா நான் வீட்டுக்கு போறேன் வண்டியை கிளம்பினான். அவள் ரூமின் கதவை திறந்து பொம்மி எங்கடி இருக்க, முகத்தை கழுவிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

இங்க வா அவள் கையை பிடித்து உட்கார வைத்தான். உன் கண்ணு ஏதோ சொல்லனும் நினைக்குது. சொல்லு மாமாகிட்ட..

அது அது.. வார்த்தை வராமல் இருக்க

தன் முகத்தை கையால் அழுத்தி துடைத்து ஏன் பொம்மி இப்படி மாமாவ கஷ்டப்படுதற, நான் கண்டுபிடிச்சிட்டேன். முகத்தை திருப்பிக்கொண்டான்.



மாமா.. நீங்க அன்னிக்கு சண்டையில பொய்ச் சொல்லிதானே நமக்குள் எல்லாம் நடந்தது சொன்னே. உன் காதலே பொய்யாடின்னு கேட்ட.அதான் இந்த விஷியத்தை சொன்னா இதுவும் நடிப்பாடி என்கூட சேரதுக்கு கேட்ப அழ ஆரம்பித்தாள்.

அவள் பேச பேச தலையில் கை வைத்துக்கொண்டான் பூவரசன்.



பொம்மியின் கையை பிடித்து சாரிடி வேணா மாமாவை அடிச்சிகோ என்றான். மாமா என்று அனைத்துக்கொண்டாள் , அவன் காதருகில் நீங்க அப்பா ஆக போறீங்க வெட்கப்பட்டாள். எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா பொம்மி...



மெல்ல அவள் வயிற்றில் முத்தமிட்டான், உன்னை மாதிரியே பொண்ணு வேனும்டி அவளை மடியில் உட்கார வைத்து கொஞ்சினான். பிறந்த நாள் அன்னிக்கு நீ வாமிட் பண்ண அப்பவே டவுட்தான். உன் முகம் பளிச்சுன்னு இருந்துச்சுடி.

மாமா நான் யாருக்கும் சொல்லவில்லை, உங்கிட்ட இன்னிக்கு சொல்லிட்ட பிறகு தான் எல்லோருக்கும் சொல்லனும் . இப்பகூட வாமிட் எடுத்துட்டு வரேன் மாமா. என்னால முடியில ...அவன் தோளில் சாய்த்தாள்.



அவ்வளவு கஷ்டமா இருக்குதா பொம்மி..மாமாவை ரொம்ப மிஸ் பண்ணியா .ம்ம் என்று சினுங்கினாள். என் செல்லம், மாமா உன்ன பத்திரம்மா பார்த்துபேன்டி. போய் அக்கா, அம்மாகிட்ட சொல்லுவோம்மா. ஏய் எனக்கு டவுட்டு , பொம்மி அவனை பார்க்க , காலையில் நம்ம அப்படியிருந்தோமே பாப்பாக்கு ஏதாவது ஆகுமா.


சிரித்தாள் சுந்தரி ம்ம் கோழி மிதிச்சு--- சொல்லுவதற்குள் வாயை மூடினான் தன் இதழால் சுந்தரியின் பூவரசன்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

பவியின் பொறாமை போய் விட்டதா?
ஹப்பாடா
இப்போத்தான் நிம்மதியாச்சு
பவித்ரா ஏன் வந்தாள்ன்னு இருந்தது அவளுக்கும் பூவரசன் மாமன் சீர் செஞ்சுட்டான்
வாவ்
பூவு பொம்மிக்கு குழந்தை வரப் போற நியூஸ் சொல்லிட்டீங்க
சூப்பர், லக்ஷு டியர்
ஐயோ இந்த திவாகர் பீடை என்ன செய்யப் போறானோ?
அடேய் பூவரசன்
ஜல்லிக்கட்டுக்கு நீ போகாதேடா
ஒருவேளை சுந்தரிக்கு ஏதாவது ஆகிவிடுமோ?
 
Last edited:
Top