Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-30

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-30

இரவு மணி பத்து, மாதவன், பரதா, பூவரசன் மூவரும் முற்றத்தில் படுத்தனர். மாதவா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, பொண்ணு பார்த்துட்டு இருக்கிறாங்க.

என் பொண்டாட்டிக்கு குழந்தை பிறந்ததாலா அவங்க அம்மா வீட்டில இருக்கா. ஆனா ஓருத்தனுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டியோட இல்லாமல் இங்க நம்ம கூட படுத்திருக்கான்.

எல்லாம் அவனுடைய விதி பரதா...

அதான் இல்ல அவனுடைய திமீர், கொழுப்பு, கோவம் .... இதையெல்லாம் கேட்டுக் கொண்டே நிலாவை பார்த்திருந்தான் பூவரசன்.

ஆமாம் பூவரசு, என் தங்கச்சி பாவமில்ல, போப்பா போய் அவள சமாதனம் படுத்து.. மாதவன் சொல்ல

அவளா பாவம், அவள பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது மாதவா... என்னைய எப்படி டார்ச்சர் பண்ணறா ..

ஆனா செம பல்பு வாங்கன மாப்பிள்ள சுந்தரிக்கிட்ட இருந்து..

மாமா உனக்கு ரொம்ப சந்தோஷமா, அப்படியே உனக்கு குளு குளுன்னு இருக்குமே.

ஆ ஆஆ இருவரும் சிரிக்க...மாதவா, நம்ம பூவரசுமும், சுந்தரியும் சின்ன வயசிலே அடிச்சிதான் விளையாடுங்க. இந்த சுந்தரி இருக்குல்ல இவன் அடிச்சிட்டா அவங்க தாத்தாகிட்ட போய் சொல்லிடும், மாமா கொட்டிட்டான், கிள்ளிட்டான், முத்தம் கொடுத்தான். சைக்கில்ல இருந்து தள்ளிட்டான். சில சமயம் சுந்தரி கால்ல கூட விழுந்திருக்கான்...

கேட்டவுடன் பூவரசன் சிரித்தான். பயங்கர அராத்து மாதவா என் பொம்மி, எங்கப்பா இறந்தவுடன். எனக்கு ஒண்ணுமே புரியில. என் பொம்மிதான் அந்த வயசில என்மேல கேர் எடுத்தா. அப்பறம் பொம்மிக்காகவே வாழ்ந்திட்டு இருக்கேன். அவ இல்லன்னா இவ்வளவு முன்னுக்கு வந்திருக்க மாட்டேன்.

அப்ப தங்கச்சி உன்மேல எவ்வளவு அண்பு, பாசம் வைச்சிருக்கும். உன்ன எப்படி இன்னோருத்திக்கு விட்டுக் கொடுக்கும். சில உண்மையை மறைச்சிருக்கு அதைப்போய் பெரிசா எடுத்துக்குனு இரண்டு மாசமா தள்ளிருக்கியே.

டேய் அவதான்டா என்கிட்ட சண்டைபோட்டுட்டு இருக்கா. கொடைக்கானல்ல சமாதானமா போகலாம் பார்த்தா , முறைச்சிட்டு இருக்கா. பத்தாத அவ அப்பன் உயிர வாங்கறான். சரி நாளைக்கு போய் பேசி பார்க்கிறேன்.

சந்தோஷமா இருக்கு மாப்பிள்ள, கோவப்படாம அண்பா பேசு...

எல்லாம் எனக்கு தெரியும் மாமா, ரொம்ப அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க.

பூவரசு உன்னைய ஏதாவது செய்ய போறாதா அந்த திவாகர் பிளான் பண்ணுறான். கொஞ்சம் உஷாரா இருப்பா, ஜல்லிக்கட்டுல கலந்துக்க வேணா பூவரசு.

ஏன் மாமா, என்ன செய்யவான், மாப்பிள்ள அவங்க ஊருல நடக்குது, கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லதுதானே.

மாமா நான் ஜல்லிக்கட்டுல கலந்துக்க போறதில்ல ஏன்னா இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் நினைக்கிறேன். ஆனா திருவிழாக்கு போகனும்.நாளைக்கு தானே போய் பார்த்திட்டு பொம்மிக்கிட்ட பேசணும்.

அடுத்த நாள் காலையில் ராயல் வண்டியை பூவரசன் ஓட்ட , பின்னாடி பரதா உட்கார்ந்து வந்தான். சூப்பர் மார்கெட் முன்னாடி வண்டி நின்றது.

என்னாச்சு மாப்பிள்ள... மாமா சுந்தரிக்கு பிடிச்ச சாக்லெட் இங்க இருக்கு, ரொம்ப நாளாச்சு வாங்கி கொடுத்து, அதுக்கே திட்டுவா...

இரண்டுபேரும் கடிச்சி கடிச்சி திண்ணுவிங்களே அந்த சாக்லெட்டா...

பூவரசு வியப்பா, பரதா பார்க்க, எப்படி மாமா உனக்கு தெரியும்.

எனக்கு மட்டுமில்ல உங்க வீட்டில எல்லாரும் தெரியும், நீ பாதி சாப்பிட்டு வைச்சிட்டு போறது. அப்பறம் உன் பொம்மி மீதியை சாப்பிடறது , சொல்லி சிரிக்க....

சே உங்களுக்கு வேலையே இல்லையா எங்களை பார்க்கிறதான் வேலையா, கல்யாணம் ஆனவங்க அப்படி இப்படி இருப்போம்.

நிறுத்து, சுந்தரி அக்காகிட்ட சொல்லும்மா, உன் அக்காவும், அம்மாவும் பெரிய உலக சாதனை செஞ்ச மாதிரி ஊருக்கே என் தம்பி இப்படி செஞ்சான் சொல்லிட்டு வரும்.

அதான் போக சொல்ல வரச்சொல்ல இந்த கிழவிங்க ஒரு மாதிரி பார்க்கிறதுங்க...கடையில் சுந்தரிக்கு பிடித்தவற்றை வாங்கிக்கொண்டு பரதனிடம் வர,

பூவரசன் சார் .... சார்மி கூப்பிட, சார்மியை பார்த்து சிரித்தான். அவனருகில் வந்து , உங்கிட்ட கொஞ்சம் பேசனோம் என்றாள்.

சொல்லுங்க ஏதாவது பிராப்ளம்மா...

இல்ல, எப்படி சொல்லறது, எங்க அப்பா உங்கள பார்க்க வரேன் சொன்னாரு.

எதுக்கு சார்மி

அது எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. மாப்பிள்ள எப்படியின்னு பார்க்க வராங்க.

என்னது , எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு சார்மி தப்பா நினைக்காதிங்க

எனக்கு தெரியும், சுந்தரி சொன்னா.

என்ன சொன்னா.... உங்க பொண்டாட்டி சரியில்லையாம், அவளே எனக்கு விட்டுக்கொப்பாளாம். அந்த பொண்ணுக்கு உங்களை சரியா கவனிக்க தெரியில்லையாம். நான் உங்களை கட்டிக்கிட்டு சந்தோஷமா வச்சிருப்பேன். நீங்க என்னைய டாக்டருக்கு படிச்சுருக்க, வேணாம் சொல்லிவிங்களாம். அதையெல்லாம் கண்டுக்காத நீ மேரேஜ் செஞ்சிக்கோ சொன்னா நைஸ் கேர்ள்.

நீங்க என்ன சொல்லிறீங்க, ஐ லவ் யு பூவரசன்.

பூவரசனுக்கு கோவம் தலைக்கேற... இவள பொம்மியை நினைத்து பல்லை கடித்தான்

.இவ்வளவு சொன்னாளே , பூவரசனோட பொண்டாட்டி சுந்தரி நான்தான் சொன்னாளா.

என்ன சொன்னீங்க சுந்தரி உங்க ஓய்ப்பா...

ஆமாம் நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ள அவ்வளவு பெரிய சண்டையெல்லாம் இல்ல. எங்க பிரச்சனையை நானே சால்வ் செஞ்சிடுவேன். சாரிம்மா நீ என்னைய பத்தி இப்படி ....

சார்மி கண்கலங்க அப்ப அவ மாமா நீங்க தானா , அப்போ அவள பார்க்க தான் வந்தீங்களா.

ம்ம்ம்.... ஜஸ்ட் ஒரு மேரேஜ் புரோபசல் தான் , தப்பா நினைக்காதீங்க அமைதியாக சார்மி செல்ல, வண்டியை ஸ்டார்ட் செய்தான் பூவரசன் , இவன் போகும் வேகத்தை பார்த்து புரிந்துக்கொண்டான் பரதன்.

மாப்பிள்ள , இப்பதான மனசு மாறின அதுக்குள்ள என்ன கோவம், எல்லாம் சுமுகமா முடிஞ்சிட்டதே...

மாமா , என்னைய டென்சன் ஏத்தாதே, வாயை மூடிட்டு வா.... வண்டி பெரியவீட்டை அடைந்தது. உள்ளே கத்திக்கொண்டே வந்தான் பொம்மிமிமி.... எங்கடி இருக்க..

ஆனந்தவல்லி , ஏன்டா கத்தற.. அவ மேல ரூமூல இருக்கா.. சட சடன்னு படியேறி கதவை திறந்தான். இவனை பார்த்து பொம்மி சிலையாய் நின்றாள். என்ன பிரச்சனை தெரியிலையே என்று நினைக்க.

ஏய் சொல்லி அவ கழுத்தை பிடித்தான், எவ்வளவு கொழுப்புடி உனக்கு, அந்த சார்மிகிட்ட என்னடி சொன்ன , நீ விட்டுத்தரியோ , எனக்கு இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான்டி, உன் அப்பன் மாதிரி நினைச்சியா கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்ய. பூவரசன் பேச பேச அமைதியாக இருந்தாள் சுந்தரி. என்ன அமைதியா இருக்கா, இங்க பாருடி சொல்ல, அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. கையை எடுக்க, என்ன கை வழிக்கிட்டு போகுது.

ஐய்யைய்யோ , அவளை பார்த்தான், குளித்துவிட்டு பிங் கலரில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தவளைத் தான். திட்டிக்கொண்டிருந்தான். வாசனையா இருக்கு டவ் சோப்பாடி.

பூவரசு , டேய் போயிடுடா இல்ல உன் பொம்மி நல்ல கேட்பா, ஏற்கனவே வழிற போடா வெளியே என பூவரசு மனசாட்சி பேச, நம்ம இருக்க கூடாது ஆஞ்சிநேயா மனசுக்கு திடதை கொடு, திரும்பி கதவு அருகே நடந்தான். பொம்மி பூவரசையே பார்த்துக்கொண்டிருக்க.

கையை மேலே தூக்கி கதவின் தாழ்பாள் போட்டான்.

பரதா கோவத்தில போயிருக்கான் சண்டை பெரிசா போயிட போதுடா. ஆனந்தவல்லி பயந்துபோய் கேட்க, யாரு உன் தம்பி இன்னெரம் கால்ல விழுந்திருப்பான் நீ பயப்படாதக்கா .

பாக்கெட்லிருந்து போனை எடுத்து பரதாவை அழைத்தான் பூவரசன்,மாமா எனக்கு டயர்டா இருக்கு நான் ரெஸ்ட் எடுக்கிறேன் நீ போய் திருவிழா பாரு, எனக்கு போன் செஞ்சி டிஸ்டர்ப் பண்ணாதே. சரி மாப்பிள்ள, எனக்கு புரியுது அக்காகிட்ட சொல்லிடுறேன். அக்கா உன் தம்பிதான் டயர்டா இருக்காம் ரெஸ்ட் எடுக்கிறானாம். நீ பயப்படாத, எனக்கு டிபன் போடுக்கா நான் சாப்பிட்டு போறேன்.

ஆனந்தவல்லி சிரிந்தாள் என்னடா சின்னபிள்ள மாதிரி சண்டை போடறது, அப்பறம் பழம் விடுறது.

கையிலிருக்கும் சட்டை பட்டனை கழிட்டினான். விசிலடித்துக்கொண்டே இன்னிக்கு மார்னிங் ஷோவாடி, கிட்டே நடந்து வந்தான். மாமா வேண்டாம் சொல்லிட்டேன் சுந்தரி பின்னே நகர்ந்து செல்ல.

வேணுமே.

வேண்டாம்... வேணும் பொம்மிக்குட்டி, எத்தனை நாளாச்சு, ஐயோ மயக்கிறாளே.... அவளருகே வர.

இப்பதான் தெரியுதா பொண்டாட்டின்னு சுந்தரி கோபமாக கேட்க...

எப்பவும் தெரியும், ஆனா நான் சரியா கவனிக்கல உன்ன, இல்லன்னா இன்னோருத்திருக்கு விட்டுக்கொடுப்பியா இந்த மாமாவ. ஸோ கவனிக்கிற கவனிப்புல அப்படியே மாமாகிட்ட மயங்கிருக்கனும் நீ ,சொல்லி இவள் முகத்தில் கை வைத்தான். அவள் கையை தட்டிவிட்டாள்.

மாமா உனக்கும் எனக்கும் சண்டை அப்பறம் புலம்ப கூடாது ,மயக்கிட்டேன் சொல்லி , அவள் காதருகில் முத்தமிட்ட படி இப்ப கூட சண்டைதான் போடுறேன். அவள் இதழ்களை தன் வசமாகினான் பூவரசன்.

அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் கிடத்தினான். மாமா கீழ என்ன நினைப்பாங்க... ஓண்ணும் நினைக்க மாட்டாங்க... பாருடி என்ன.. ம்க்கும் எனக்கு வெட்கமா இருக்கு மாமா. பூவா சொல்லுடி... அதுவே கிக்கா இருக்கும். அவள் வெட்கத்தில் சிவக்க, தன் காதலை கண்களில் நிரப்பி அவளை பார்த்தான்.

பொம்மி என்னால நீ இல்லாம இருக்க முடியிலடி. நம்ம பண்னைவீட்டுக்கே போகலாமா. மாமா உனக்குள்ள புதைந்து போயிடுனும் போல இருக்கு...அப்பறம், நீ திரும்பவும் சண்டை போடுவியா பூவா என்னவிட்டு போயிடுவியா.

மாட்டேன், இனிமே அந்த தப்ப பண்ணமாட்டேன். நீ மாமாவ கூல் செஞ்சிடு கோவம் வரசொல்ல ஓகே வா...

இருவரும் தங்கள் காதலின் உணர்வுகளை காட்டிக்கொண்டிருந்தார்கள்... அவர்களுடைய தாம்பத்யம் அழகாக அரங்கேறியது. பூவரசனின் நெஞ்சத்தில் தலை வைத்து பூவா என்று அழைத்தால், ம்ம்ம் சொல்லி அவள் தலையில் கண்ணம் வைத்து கேட்டான். ஐ மிஸ் யு பூவா..

நானும் ,ஆனா பொம்மி வேணாம் வேணாம் சொல்லிட்டு, இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அடிக்க தொடங்கினாள்... ச்சீ பே நீ ரௌடி பையன். உன்ன ருமூல விட்டதே தப்பு . போடா..

பொம்மி கொஞ்ச நாளா நீ ஏதோ சொல்ல வர மாதிரி இருக்குடி , அதுவும் கொடைக்கானல் போயிட்டு வந்தவுடன் நான் உன்கூடவே இருக்கனும் தோனுச்சு. நீ ஏதாவது பார்த்துட்டு பயந்திட்டியா. மாமா இல்லாத ஏங்கிட்டியா.

ம்ம் ஆனா நீ என்னைய தீட்டிட்ட.. அவளை கட்டிக்கொண்டு சாரிடி சொல்லி நெற்றியில் முத்தமிட்டான், பொம்மி பசிக்குதுடி ரொம்ப..

சரி நான் குளிச்சிட்டு கீழ போறேன், நீயும் ரெடியாயிட்டு வா மாமா.

கீழே டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். அம்மா வெளிய போயிருப்பாங்க போல ஆளில்ல.

பூவரசன் இறங்கி வர, சாப்பாடு எடுத்து வைத்தாள் பொம்மி, மாமா சாப்பிடு பசிக்குது சொன்ன... நீ சாப்பிடல பொம்மி, சாப்பாடு எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான். பிறகு சாப்பிட ஆரம்பித்தான்.

அம்மா என்று கூரல் கொடுத்து உள்ளே நுழைந்தாள் பவி..இவர்கள் இருவரும் அருகில் இருப்பதை பார்த்து அப்படியே நின்றாள் பவித்ரா...
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஸ்ஸ்சப்பா பூவரசன் சுந்தரி இவ்விய ரெண்டு பேர் கூடவும் மிடியலப்பா
பொம்மி என்னடான்னா சின்ன வயசுலேர்ந்து பூவு மாமன் மேலேதான் உசுரா இருந்திருக்கிறாள்
பூவா என்னடான்னா பொம்மி மேலே அப்பிடி அப்பிடி லவ்ஸ்சாகி உருகுறான்
 
Last edited:
நல்லா தான் நகர்கிறது
இவ எதுக்கு இப்ப வந்து இருக்கா
 

Advertisement

Latest Posts

Top