Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-13

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-13
சுந்தரியின் வண்டியை மறைத்தான் துரைப்பாண்டியும் அவன் சிநேகிதனும், எங்க சுந்தரி இந்த பக்கம். ஆமா நீ உன் மாமனை கட்டிக்க போறியாமே கேள்விப்பட்டேன்.
வழியை விடுடா
”ஏன் உங்க அக்கா என் அண்ணனை கட்டிக்கன மாதிரி நீ என்னைய கட்டிக்கலாமில்ல”.
”ச்சீ வாய மூடு ,உனக்கு என்னடா தகாதரம் இருக்கு, என் மாமன் கால் தூசிக்கு வர மாட்டே”
”உன் மாமன் ஜில்லா கலெக்டரா, இல்ல பிரஸிடண்டா, படிக்காதவன் தான. ”
உங்க அக்காவால தான எங்க மாமா படிக்காத போனாரு இல்ல அவரு ஜில்லா கலெக்டரா ஆயிருப்பாரு.
”அப்படியா டாக்டரு, நீ பண்ணத சொண்ணா உங்க மாமா என்ன செய்வான் கல்யாணத்தையை நிறுத்திடுவான்”.
சொல்லுடா , நான் பவி நெனைச்சியா , அவ முட்டாள். இந்த பூச்சாண்டி யெல்லாம் எங்கிட்ட காமிக்காத , வழியை விடு.
நீ எப்படி வாழற பார்க்கிறேன்டி.
நல்லா பாரு சந்தோஷமா தான் வாழுவேன் வண்டியை கிளப்பினாள்.
அண்ணா இந்த சுந்தரிகிட்ட நீங்க பேசினதை பூவரசன் பார்த்தான் உன்னைய கொண்ணே போட்ருவான், இந்த பொண்ணுன்னா அவனுக்கு உயிர், உங்க மாமாவுக்கும் கூட.
ஓ பூவரசனோட உயிரு இந்த கிளிக்கிட்டதான் இருக்கா.
இரவு மணி 11.45 ”ஹலோ ”என்ன தூங்கிட்டியா”, பூவரசன் பொம்மிக்கு போன் செய்தான்.
ம்ம், இன்னும் இல்ல தூக்கம் வர மாட்டுங்குது.
ஏன்.
ஏன்னா என் ரூமுல நீ தூங்குற, நான் கீழே உன் அம்மா ரூமுல தூங்குறேன்.
நிறுத்து இது என் ரூமூடி, நீ புடிச்சிட்ட நான் பண்ணவீட்டுக்கு போனவுடனே.
”அய்யோ பெரிய வசந்த மாளிகை பாரு ,அதுமட்டும் காரணமில்ல, எனக்கு உங்கிட்ட பேசணும்”.
”என்ன விஷியம். ”
”நான் நேரலதான் சொல்லுவேன் இப்ப மணி 11.45 ஆகுது, எல்லோரும் தூங்கிருப்பாங்க நினைக்கிறேன், உன் கூட யாரு இருக்கா.”
”யாருமில்ல நான்மட்டும் தான் இருக்கேன்”. பேசிக்கொண்டே மேலே வந்தாள் சுந்தரி.
”மாமா கதவ திற, ”
”ஏய் யாராவது பார்க்க போறாங்கடி”,
”சீக்கீரம் கதவ திற மாமா”. பூவரசன் கதவை சத்தமில்லாமல் திறக்க உள்ளே வந்தாள் சுந்தரி.
”இந்த நேரத்தில இங்க வரலாமா , நாளைக்கு மறுநாள் கல்யாணத்தை வச்சிட்டு.”
”நாளைக்கு நலங்கு வைப்பாங்க மாமா, பார்க்க விடமாட்டாங்க அதான் உன்கிட்ட பேசலாம் வந்தேன்.”
”போன்னல பேசலாம் இல்ல. ”
இது நேரல பேசிற விஷியம். என்னடி ஓவரா பில்டப் பண்ணுற.
முதல்ல உட்கார்ந்து பேசலாம் வா சொல்லி அவனை பெட்டில் உட்கார வைத்தாள்.
”பயமா இருக்கு மாமா கல்யாணத்துக்கு பிறகு. ”
”எல்லா பெண்களுக்கும் இந்த பயம் இருக்கும், மாமியார் ,நாத்தனார் எப்படி நடந்துப்பாங்க, ஆனா அதுல நீ கொடுத்து வச்சவடி. ”
”ஆனா பயமே அதுயில்ல மாமா”.
”பின்ன என்னடி மாமாவ நினைச்சா. நான்தான் உன்னைய நினைச்சு பயப்படணும்,சரி பசங்க பேச்சலர் பார்ட்டி கேட்கறாங்கடி நாளைக்கு கொடுக்க வா நாளைக்கு நான் பிஸி இப்படி என்ன தேடி வராதடி, ஓட்டியே எடுத்திடுவாங்க, புரியுதா , ம்ம் ஓகேவா. ஆமா நேற்று உங்க அப்பா கழனி பக்கம் ஏன் போன”.
”அது பிளவுஸ் கொடுக்க போனே ,நான் இன்னும் பேச வந்ததே பேசில ,மத்ததெல்லாம் பேசு”.
சரி என்ன சொல்லு, ”மாமா”, ம்ம்ம் , ”மாமா” ரிலாக்ஸா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்.
”பொண்ணுக்கு இது மட்டும்தான் பயமா , நிறைய இருக்கு கல்யாணத்தன்னிக்கு நைட் தான். ”
”ஏய் உனக்கு இதே ஞாபகமாகவே இருக்குமா, எவ்வளவு வேலை வீட்டில இருக்கு ஒரு வாரத்தில கல்யாணம் சொல்லிட்டிங்க , நான் நாயா வேலை செய்யறேன், பத்திரிக்கை கொடுத்து முடியில,இதுக்கே வீட்டில தான் கல்யாணத்தை வைச்சிருக்கோம். சமையல் முதல் தாம்பூலம் வரை ஆளுங்க தான் ஆனா மேற்பார்வை பார்க்கணும். ”
”கொஞ்சம் நிறுத்திறீயா, கல்யாணம் எதுக்கு, குடும்பம் நடத்த தானே செய்யறாங்க. ”
”எல்லாம் நல்லாவே நடத்துவேன் நீ பயப்படாத”
”அதுவா மாமா, சின்ன வயசுல இருந்து உன்னைய மாமாவா, பிரண்டா பார்த்தேன், இதுக்கு அப்பறம் புருஷனா எப்படி பழகுவேன். நான் உனக்கு கோவப்பரேட் பண்ணுவேன்னா , இல்ல தள்ளி வைப்பனா, தெரியில, மூணு வருஷமா முகம் கொடுத்துக்கூட பேசல நீ, நான் உன்னைய கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சிக்கிறேனோ பிலிங்க்ஸா இருக்கு. எந்த குழப்பம் வந்தாலும் உன்கிட்ட தான் கேட்பேன், யாருக்கிட்ட கேக்கனும் கூட தெரிய மாட்டேங்குது. ரொம்ப உளரனா நான். ”
ஆமாம் என தலையை ஆட்டினான் பூவரசன்.
”எல்லாத்துக்கும் நீ தான காரணம்,என்னைய ஆசையா பார்த்தது இல்ல, ரோமன்ஸ் செஞ்சதில்ல, டச் பண்ணதில்ல, இப்ப கூட பாரு கொஞ்சம் கேப் விட்டுத்தான் உட்கார்ந்திருக்க மாமா, உனக்கு என்னைய புடிக்கலையா மாமா, நான் உன்னைய சுகமா வச்சிருப்பேனா” .
”அதில்ல என்ன டௌவூட் உனக்கு, நமக்கு மேரேஜ் ஆன பிறகு நீ மாமாவ எப்படி கவனிச்சிப்ப”.
”நல்லா கவனிச்சிப்பேன், காலையில் எழுந்து காபி போட்டு கொடுத்து , டிபன் செஞ்சி, மதியம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு செஞ்சித் தருவேன், இப்ப நீ டைம்முக்கு சாப்பிட மாட்டற. ஒழுங்கா டயர்ட் கொடுப்பேன். ”
இதெல்லாம் எங்க அம்மா, அக்கா செய்வாங்க, அதயேன்டி நீ செய்யறவ.
பிறகு என்ன செய்ய.
முக்கியமானது சொல்லறேன் கேட்டுக்கோ, ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள் சுந்தரி. மாமாவுக்கு முதுகுக்கு சோப்பு போட்டு தலையை துவட்டி விடணும். அப்பறம்
”ஐய்யோ மாமா எனக்கு தெரியும் டிரஸ் போட்டு விடனும்.”
”அத நானே போட்டுக்குவேன். ”
”எஸ் சாப்பாடு ஊட்டி விடனும் ,தலை வாரி விடனும் ,வெளியே போக சொல்ல கிஸ் பண்ணி பாய் சொல்லனும், கரேக்டா எத்தனை சினிமாவுல பார்த்திருக்கேன். இட் ஸ் வெரி ஈஸி”- சுந்தரி.
”எரும என்னைய பேச விடுறியா, ம்ம், இங்க பாரு இதெல்லாம் புதுசில நல்லா இருக்கும் போக போக வெறுப்பா மாறிடும். நான் ரொம்ப கோவக்காரன் ,நான் எப்போ கோவப்படறனோ இல்ல வெளிய எதாவது பிரச்சனையால டென்ஷன் ஆனா நீ என்னை கூல் பண்ணனும்”.
”அது எப்படி கூல் பண்ணறது. ”
”அத பார்ஸ்ட் நைட்ல சொல்லுறேன். ஓகே”.
”மாமா அத இப்ப ட்ரையல் பார்க்கலாமா. ”
பூவரசன் முறைக்க ”இப்ப என்ன கேட்டேன் நீ இப்படி முறைக்கிற எப்பார்த்தாலும், பேசிக்கொண்டே எழுந்து நின்றாள். ”
அவள் கையை பிடித்து ஜன்னல் அருகில் அழைத்து சென்றான், ஜன்னலை திறந்தான் பௌர்ணமி நிலவு ஓளிவீசியது. பொம்மி ஜன்னலின் கம்பியை பிடித்து நின்றாள்.அவள் அருகில் சென்றான். ”பொம்மி அந்த நிலாவை பாரு, அது வீசுற ஓளி மாதிரி உன் காதல் குளுமையா இருக்கும், யார் மனசையும் உனக்கு கஷ்டப்படுத்த தெரியாது. என்னைய நல்லாவே பார்த்துப்பே”.அவன் பேசும் போது மூச்சுக்காற்று அவள்மேல் சூடாக தொட்டது, கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்.
அவள் காதில் பூவரனின் இதழ்கள் சீண்ட மெதுவாக பேசினான். ஸ்டார்ட் செஞ்சிட்டா மாமாவால கண்ட்ரோல் பண்ணமுடியாதுடி புரிஞ்சிக்கோ பொம்மி, அப்பறம் தப்பாயிடும். அவள் முகத்தை திருப்பி இந்த மூக்குத்தி உனக்கு அழகா இருக்குடி சிறிதுநேரம் இருவர் அமைதியாக பார்த்துக் கொண்டார்கள்.
”சரி பாவம் பார்த்து விடுறேன், ஆனா மாமா எனக்கு பயமா இருக்கு நம்ம கல்யாணம் நடக்குமில்ல, தாலி கட்டுவ இல்ல”.
”என்னடி லூஸு மாதிரி பேசற. ”
”எங்கிருந்து பிரச்சனை வருமுன்னே தெரியில மாமா,சத்தியம் செய்யி ”
”நீயே வேணா சொன்னாலும் தாலிக்கட்டுவேன் இது சத்தியம் என்று கையில் அடித்தான். சரி டைம் ஆயிடுச்சு நீ கிளம்பு”
”அப்ப எப்போ மாமா ரோமன்ஸ் செய்யுவே சொல்லி சிரிக்க, ”
போடி டைம் ஆயிடுச்சு , அவள் கதவருகே சென்று திரும்ப சுந்தரியை கதவின் மேல் சாய்த்து இருக்கண்ணங்களில் தன் இதழை பதித்தான் பூவரசன்.
அடுத்த நாள் நலங்கு வைக்கும் சடங்கு நடந்தது. பெரிய வீடு முழுக்க பூவால் தோரணங்கள் கட்டிவிட்டனர், வாசலில் வாழை மரம், பக்கத்து காலி இடத்தில் பந்தல் போட்டு சாப்பாடு பரிமாரபட்டது. அவ்வூர் மக்களுக்கு இரண்டு நாள் சாப்பாடு பண்ணையார் வீட்டில்தான்.சொந்தங்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். ஒருபக்கம் சிறுவர்கள் ஓடி ஆட மறுபக்கம் உறவினர்கள் ஒருவரை ஒருவர் விசாரித்தனர்.சுந்தரியின் பிரன்ஸ் வந்து இறங்கினார்கள். தோழிகள் சுந்தரியை கலாய்க்க, சங்கவி கடைசியில மாமனை வளைச்சிட்ட என்ஜாய் பேபி.
கல்யாண பெண்ணின் முகம் சந்தனம் தடவி குங்கும்மிட்டு, புது சீலை அணிந்து வெட்கத்தில் இருந்தாள். என்னடி உங்க மாமனை கூப்பிடவா ஒருத்தி சொல்ல .
”வேணாம்டி எனக்கு பார்க்கவே ஒரு மாதிரி இருக்குப்பா பீளிஸ்”. ஐந்து பெண்கள் சென்று உணவு பரிமாறிக்கொண்டிருந்த பூவரசனிடம், மாமா என்று கூப்பிட்டார்கள்.
”உங்களுக்கும் மாமாவா , அண்ணா சொல்லுங்க இல்லைன்னா சுந்தரி கோவிச்சிப்பா. ”
நாங்க ஹண்ட்ஸம்ம எப்பயுமே அண்ணா சொல்ல மாட்டோம்.
என்ன பொண்ணுங்க அதான் நம்ம லூஸ் இப்படி இருக்கு என்று நினைத்தான்.
மாமா உங்களை சுந்தரி அர்ஜெண்ட்டா கூப்பிட்டா. சரி வரேன் வாங்க டேய் லோகு பந்திய கவனி, ஆமா நீங்க எல்லாம் சாப்பிட்டாச்சா.
”ம்ம் சாப்பிட்டோம் மாமா ”என்றார்கள் கோரஸ்ஸா. அங்கதான் இருக்கா.
”என்னடி எதுக்கு கூப்பிட்ட” கேட்டு அவளை பார்த்தான், அழகாக புடவை உடுத்தி தேவதை போல் நின்றிருந்தாள் ,அவளால் நிமிர்ந்து பார்க்க முடியில.
”என்ன பூவரசு நாளைக்கு கல்யாண அதுவரைக்கும் பொண்ண பார்க்காம இருக்கமுடியிலையா” என்று அவன் பெரியம்மா கேட்க.
தலையை சிலுப்பி , ”சும்மா இந்த பக்கம் வந்தேன் பெரியம்மா. ”
”ஆகட்டும் ஆகட்டும் பூவரசு சித்தி கலாய்க்க. ”
”எதாவது தேவையா பொம்மி. ”
”ஓண்ணுமில்ல மாமா பசங்க சும்மா கூப்பிட்டு விட்டாங்க,மாமா மருதாணி எப்படி இருக்கு” கையை காண்பித்தாள்,
”நல்லா பிடிச்சிருக்கு”..
”எனக்கு வெட்கமா இருக்கு மாமா, நான் போன்னுல பேசறேன் சொல்லி ஒடிவிட்டாள்.”
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஐயய்யோ
இப்போ எதுக்கு இந்த துரைப்பாண்டி பயல் சுந்தரியை வழி மறிக்கிறான்?
இந்த கல்யாணம் நடக்குமா?
நடக்காதா?
சுந்தரியை விட எனக்குத்தான் இப்போ டென்ஷனா இருக்கு, லக்ஷு டியர்
நாளைக்கு சுந்தரி பூவரசன் கல்யாணம் நடப்பதற்குள் துரைப்பாண்டி ஏதாவது கோளாறு செஞ்சிடுவானோன்னு பயமா இருக்கே
 
Last edited:
Top