Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-9

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
tBeJrE2p1Qwy76rfQh7bYdw_4S4di_t-IpQywV1o_Sl36ph_GE7JWHZtqRui-DL9a-9hYwOs-Vb6r021k5Cm0FqmO6Utjhm4KPG9n-sJvXOGQIepYTH14rtw9mtPSZ4m4vbjgwCa


அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.
படித்து விருப்பம் மற்றும் கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!. உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-9..


அகிலன் ஆரம்பத்தில் நந்தினிக்கு தந்த ஆதரவை காரணமாக்கி, தன்னிடம் கிண்டலோ , கேலியோ செய்பவர்களிடம் நந்தினி தனக்கு அகிலன் அதிகம் தெரிந்தவர், நெருங்கிய நண்பர் என்றும் கூறிக்கொண்டாள். அகிலனை பார்க்கும் போதெல்லாம் புன்னகைப்பதும், தானாக வந்து ஒரிரு வார்த்தை பேசுவதுமாக இருந்தாள். அதனால் மற்ற இரண்டாம் ஆண்டு மாணவர்களையும் மதிக்காமல், அழகின் மீது கொண்ட கர்வமும் சேர்ந்து கல்லூரியை சுற்றித் சற்றுத் திமிருடன் திரிந்தாள். அகிலனும் அதை ஆரம்பத்தில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஒரு பெண்ணிற்கான பாதுகாப்பாக நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்.

அகிலன் மற்றும் சில சகமாணவர்கள் பெரும்பாலான இடைவேளை மற்றும் உணவு இடைவேளை நேரத்தில் வகுப்பிற்கு வெளியில் இருக்கும் வராண்டாவில் தான் நிற்பார்கள். அகிலன் எப்பொழுதும் வெளியில் இருந்து, வகுப்பிற்குள் இருக்கும் யாழினி தெரியும் படி நின்றுகொள்வான். ஆனால் யாழினி பார்க்கும் போதோ வேறுபக்கம் திரும்பிக்கொள்வான். அதிலும் ஒரு கள்ளத்தனம் அவனுக்கு.

எப்பொழுதும் வராண்டாவில் நின்று வேடிக்கை பார்ப்பதைக் கவனித்த யாழினி ஒருநாள், அகிலன் தனியாக நிற்கும் நேரம் பார்த்து "என்ன சார், எப்பவுமே இங்க வராண்டாவே கதின்னு இருக்கிறீங்க போல! படிக்கிற ஐடியாவே இல்லையா?" என்று அவன் மற்ற பெண்களை நோட்டம் விடுகிறான் என்று எண்ணி கேட்டாள்.

அவள் கூறுவதை விட்டு, அவள் காதில் தொங்கும் ஜிமிக்கியின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தவன், "இதே தோடுதான் காலேஜ் வந்த நாள் முதல் போட்டுருக்க, நந்தினி மாதிரி ட்ரெஸ்க்கு ஏத்த மாதிரி கலர் கலரா போடு. உனக்கும் அழகாய் இருக்கும்." என்றான்.

யாழினிக்கோ உள்ளுக்குள் நாம் என்ன பேசுறோம், இவன் என்னடான்னா எப்பவுமே அவள் நினைப்பாகவே இருக்கிறான் என்று கோபமுடன், "என்கிட்ட என்ன இருக்குதோ அதைத்தான் போட முடியும். நான் இங்க சினிமாவில் நடிக்க வரலை. மற்றவர்களுக்கு அழகாகத் தெரிய வேண்டியதும் இல்லை" என்று முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க கூறிவிட்டு ஒரு நிமிடம் கூட நிற்காமல் நகர்ந்தாள்.

"லூசு இவள், இப்போ என்ன சொல்லிட்டேன்னு உலறிட்டு போறாள். உன்னிடம் இல்லாவிட்டால் என்ன, நான் இந்த உலத்தில் உள்ள அனைத்து வண்ணத்திலும் உனக்கு வாங்கி தருவேன் யாழு" என்று அவளது கோபத்தை உணராமல் மனதிற்குள் வருங்காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டான் அகிலன்.

அகிலன், யாழினியிடம் பேசிக்கொள்ளும் ஒரு சில நிமிடங்களில் தெரிந்தோ, தெரியாமலோ நந்தினியை பற்றிக் கூற ஆரம்பித்தான்.

அவளை போல் புதிய ஆடையை உடுத்து, அவளை போல் கண்ணுக்கு மை வை, அவளை போல் இதை செய், அதை செய்… என்று ஏதோ ஒன்றை அவளிடம் கூறினான். அகிலனை பொறுத்தவரை யாழினி இதையெல்லாம் செய்தால் நந்தினியின் அழகை மிஞ்சுவாள் என்ற எண்ணம்.

ஆனால் யாழினிக்கோ, அகிலன் நந்தினியை இந்த அளவுக்கு ரசிக்கிறான் என்பது வலியானது, ஒரு கட்டத்தில் ரணமானது, அவன் மீது கோபத்தை உண்டு பண்ணவும் செய்தது. அகிலன் நந்தினியை காதலிக்க ஆரம்பித்திருக்கலாம் என்று மெல்லிய சந்தேகம் வந்தது. நந்தினியை பற்றிய பேச்சு யாழினியை, அகிலனிடம் இருந்து சற்று விலகி இருக்க செய்தது..

நந்தினியோ ஒருபக்கம் சிறு சிறு விஷயங்களுக்கும் அகிலனின் பெயரை உபயோகிப்பது, அகிலனுக்கு தன் மீது விருப்பம் உள்ளது என்பதுபோல் ஒரு சிலரிடம் கூறியது அகிலனின் காதுக்கு வந்தது.

உணவு இடைவெளியில் அகிலன் வெளியில் வராண்டாவில் இருக்கும் போது வேண்டுமென்றே தண்ணீர் குடிப்பது போல், அங்கு வந்து நின்று கொண்டு பார்ப்பது, சிரிப்பது என்று நந்தினியிடம் ஒரு சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது.

அவள் மனதில் தன்னை பற்றிய தவறான எண்ணம் வளர விரும்பாத அகிலன் அவளை கூப்பிட்டு பேசவிளைந்தான்.

ஒரு நாள் இடைவெளி நேரத்தில் வகுப்பிற்கு வெளியில் அகிலன் தனியாக நின்று கொண்டிருக்கும் போது, அன்றும் அங்கு தண்ணீர் குடிப்பது போல் வந்த நந்தினியிடம் "நந்தினி, இங்க பாரு பொண்ணுங்களுக்கு அதுவும் உன்னை மாதிரி அழகா இருக்குற பொண்ணுங்களுக்கு "என்று கூறும்போதே

நந்தினி வெட்கத்தில் கன்னம், காது சிவந்து "தேங்க்ஸ்" என்றாள்.

அகிலன் அடிப்பது போல் கையை ஓங்க, அதற்கும் அவள் வெட்கப்பட தலையில் அடித்துக்கொண்டு ”சொல்லுரத முழுசா கேளு, பொண்ணுங்களுக்கு காலேஜ்ல கிண்டல், கேலி ,வம்பு இதெல்லாம் வரத்தான் செய்யும், கல்லூரி வளாகத்தில் நீ பார்க்கிற பிரச்சனை என்பது, வெளி உலகத்தில் இருக்கிற பிரச்சினையை பார்க்கும்போது மிக மிகக் குறைவு. அதனால நீயாவே உன் பிரச்சனையை சமாளிக்க கத்துக்கோ, சும்மா தொட்டதுக்கெல்லாம் என் பேரை சொல்லிக்கிட்டு இருக்காதே. இனிமேல் எதையும் என்னிடமும் வந்து சொல்லாதே! ஒரு அண்ணன் அட்வைஸ் பண்றதா நினைச்சுக்கோ" என்றான் அகிலன்.

ஆனால் நந்தினி ஒரே வரியில் "உங்கள் அன்பிற்கு நன்றி! ஆனால் அண்ணன் என்றெல்லாம் நினைக்க முடியாது" என்று கூறிவிட்டு யாருக்கும் தெரியாதபடி மெல்லியதாக கண்ணடித்துவிட்டு சென்றுவிட்டாள். அகிலனுக்கு இது என்ன புதுக்கதையா இருக்கு என்று எண்ணிக்கொண்டான், ஏதோ புரியாமல் பேசுகிறாள் என்று விட்டுவிட்டான்.

அதை வகுப்பிற்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்த யாழினிக்கு பகீரென்றது, ’இவன் என்னவோ மணிக் கணக்கா அவளிடம் பேசுகிறான், அவள் என்னவோ வெக்கத்துடனும் பல்லை இளிச்சுகிட்டு போகிறாள். இங்கு என்னதான் நடக்குது!’

'அந்தப் பொண்ணு சும்மா பேசாமல் போனாலே பசங்களாம் நாய்க்குட்டி மாதிரி பின்னாடி போறாங்க, இதுல இவள் கண்ணடித்துவிட்டு வேற போகிறாள்' என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே அதற்குமேல் இருக்கையில் உட்கார பிடிக்காமல் இவளும் தண்ணீர் குடிப்பது போல் வெளியில் வந்து அகிலனிடம், ”நடக்கட்டும் . நல்லா இரு” என்றாள் முறைப்புடன்.

"என்ன நடக்கட்டும்" என்றான் அகிலன்

"நீ மட்டும் தான் அவள் பின்னாடி போகலைன்னு நினைத்தேன், இப்போ நீயும் அவ்வளவுதானா!" என்றாள்.

"சே! அதெல்லாம் இல்ல, அவ ஏதோ லூசு மாதிரி பண்ணிட்டு போறாள்" என்றான்.

'அவள் லூசா! இல்ல நான் லூசா! என்று போக போகத்தான் தெரியும்." என்று வருத்தத்துடன் கூறிவிட்டு யாழினி நகர்ந்துவிட்டாள்.

'நான் தான் முன்னரே உன் பின்னாடி போய்விட்டேனே, அப்புறம் எங்க அவள் பின்னாடி போகிறது. பொறாமையை பாரு. நந்தினிக்கிட்ட பேசுனா, நம்ப யாழினி குட்டி தானாகவே வந்து பேசிவிட்டு போகுது, இல்லன்னா யாரோ மாதிரி பார்த்துட்டு போவாள்… இருக்கட்டும் இனிமேல் பார்த்துக்கறேன்' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

மன்னித்து விடு என்னை

பொறாமை எனும் நோய்

உன்னையும் விட்டு

வைக்கவில்லை பெண்ணே!

கர்ணனும் கஞ்சனாவான்


உன்னை தாரை வார்க்க வேண்டுமென்றால்!

நந்தினிக்கோ, அகிலனின் நிராகரிப்பே அவனின் மீது ஒருவித பற்றை அதிகப்படுத்தியது. அனைவரும் வலிந்து வந்து பேச, நந்தினியே போய் பேச முற்பட்டாலும் வெடுக்கென்று ஓர், இரு வார்த்தையில் அகிலன் பேச்சை முடித்துக் கொள்வது, அவளது ஈர்ப்பை பலப்படுத்தியது. அதை காதல் என்றும் நந்தினி நம்பினாள்.

நந்தினியின் நடவடிக்கையால் அகிலனை பார்க்கும் போதெல்லாம் யாழினி முறைப்புடனும், யாழினி முறைப்பதை அகிலன் காதலுடனும் ரசித்துக்கொண்டிருந்தான்.

இதற்கு நடுவில் அகிலனின் பிறந்த நாளுக்கு, யாழினி ஒரு நண்பனுக்கான பிறந்தநாள் வாழ்த்து அட்டையும், அதில் ”உனது தோழி” என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டும் தந்திருந்தாள். அந்த தோழி என்ற வார்த்தையை பார்க்க அவனுக்கு வெறுப்பாக இருந்தாலும், அனைவரின் முன்னால் ஒன்றும் கூறமுடியாததால் வாங்கிக்கொண்டான். நந்தினியோ பளிங்கக் கல்லினால் ஆன இரட்டை காதல்-புறா வடிவ பெரிய சிலையை அன்பளித்து, கையையும் குலுக்கி விட்டுச் சென்றாள்.

அடுத்து வந்த யாழினியின் பிறந்தநாளுக்கு, அகிலன் ஒரு பேனாவை பரிசு அளித்திருந்தான். யாழினி, அகிலனிடம் "அது என்ன எல்லாரும் க்ரீட்டிங்ஸ் கார்டு கொடுப்பார்கள், சாக்லேட் கொடுப்பார்கள். நீ பேனா வாங்கிட்டு வந்திருக்க" என்று கேட்டாள்.

"நான் பார்த்தில், நீ அதிகமா யூஸ் பண்றது பேனாதான், அதுவுமில்லாம உன் பேனா ரொம்ப பழசா தெரியுது, நீ கண்டிப்பாக ரொம்ப வருஷமா அதை பயன்படுத்திருப்பன்னு நினைக்கிறேன். சில சமயம், உன் ஸ்பெஸல் பேனா காணாமல் போனால், அது கிடைக்கிறவரைக்கும் முகம் சுருங்கி, கண்ணில் நீர் வர தேடுவதை நான் பார்த்திருக்கிறேன். அது ஏனோ உனக்கு பொக்கிஷம் என்று எனக்குத் தெரியும், அதான் நானும் அதையே வாங்கி வந்தேன். " என்றான்.

அவனை பிரம்மிப்பாக பார்த்தபடி, உள்ளுக்குள் இவன் இந்த அளவுக்கு நம்மை கூர்ந்துக் கவனிக்கிறான் என்று வியப்பாக இருந்தது.

"நீ சொல்லுறதும் சரிதான். அது எனது அண்ணன், முதல் மாத சம்பாத்தியத்தில் நான் பணிரெண்டாவது படிக்கும் போது வாங்கி தந்தது. அது சென்டிமென்ட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றாள்.

"அப்போ இந்த பேனாவையும் அதே மாதிரி பத்திரமாக வைத்துக்கொள்வாய் என்று நினைத்து தான் வாங்கினேன்." என்றான் அகிலன் காதல் பொங்க.

’இது நட்பின் உச்சமா! இல்லை காதலின் தொடக்கமா!’ என்று யாழியின் மனது இரண்டிற்கும் இடையில் கிடந்து அல்லாடியது.

"தேங்க்ஸ்! வேறு வார்த்தை இல்லை" என்றாள் யாழினி. சிறிய புன்முறுவலுடன் நகர்ந்து சென்றான் அகிலன்.

இப்படியே நாட்கள் மகிழ்ச்சியோடும், சிறு சிறு சண்டையோடும், காதலோடும், நட்புடனும் நகர ஓரு நாள் கல்லூரிக்கு புதிதாக ஒரு BMW கருப்பு வண்ண அழகிய கார், மதிய உணவு இடைவேளை நேரத்தில் உள்ளே நுழைந்து அனைவரின் கவனத்தையும் இழுத்தது. அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கினார்.

அவர் நேராக அங்கு குலுமி இருந்த மாணவர்களிடம் சென்று, "எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் செகண்ட் இயர் எங்க இருக்கு" என்றார்.

"இந்த பிளாக்கில் மேலே ஃபர்ஸ்ட் ப்ளோர், முதல் கிளாஸ் ரூம்" என்றான் ஒருவன். "நீங்க யாரை பார்க்க வந்து இருக்கீங்க சார்?" என்றான் இன்னொருத்தன்.

" ஐ வாண்ட் டூ மீட் மிஸ் யாழினி" என்றார்.

"யாழினி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கேன்டீன் பக்கம் போனாங்க, கிளாஸ் பெல் அடிக்கிற நேரம்தான், இப்ப வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் இன்னொருவன்.

' ஓகே! தென் ஐ வில் வெயிட் ஹியர் " என்றார் அந்த இளைஞன்.

யாராக இருக்கும் என்ற ஆர்வம் தாங்க முடியாமல் அந்த குழுவில் இருந்த ஒருவன் "நீங்க யாழினிக்கு என்ன வேணும் சார் ?" என்றான் .

" நான் அந்த வீட்டு மாப்பிள்ளை" என்றார்.

கல்லூரியில் எம்.எஸ்.சி முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு புதிதாக கட்டப்பட்ட அடுக்கு மாடியில் முதல் தளத்தில் இருந்தது. அகிலன் அவர்களுடைய வகுப்புக்கு வெளியில் வந்து வராண்டாவில் நின்று கொண்டிருந்தான். யாழினி கேன்டீன் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள். மேலே இருந்து யாழினியை பார்த்துக் கொண்டே 'வர வர இவகிட்ட ஒழுங்கா பேசறதுக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குது, இந்த வாரம் யாழினி ஊருக்கு போனால், போகும் போது நாம்பளும் ஏதாவது காரணம் சொல்லிட்டு அவள் கூட போகணும்.' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, கேன்டீனில் இருந்து வந்துகொண்டிருந்த யாழினி அந்த இளைஞனை பார்த்து சிரித்த முகத்துடன் சென்றாள். 'யாராக இருக்கும், சிரிச்சுகிட்டே போறாளே, நம்பளை பார்த்து எப்பாவது இப்படி சிரிச்சுருப்பாளா, பாவி' என்று யோசித்து கொண்டிருந்தான்.

கல்லூரி இடைவேளை முடிந்து மணி அடிக்க அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் கலைந்து வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தார்கள். யாழினி அவள் தோழிகளிடம்," மாமா வந்திருக்காங்க கொஞ்சம் பார்த்துட்டு வரேன். நீங்க கிளாஸ்க்கு போங்க, மிஸ் கிட்ட பத்து நிமிஷம் பர்மிஷன் கேட்டேன்னு சொல்லுங்க." என்று கூறி விட்டு அவரை நோக்கி நடந்தாள்.

"ஹாய் யாழினி" என்று கையை உயர்த்தி அசைத்தார்.

"ஹாய்! வாங்க, என்ன திடிரென்று" என்றாள் யாழினி.

"பெல் அடிக்கிற சத்தம் கேட்குதே கிலாஸ்க்கு டைம் ஆயிடுச்சா யாழினி?" என்றார் அந்த இளைஞன்.

"இல்லை, டென் மினிட்ஸ் டைம் கேட்டிருக்கேன், சொல்லுங்க" என்றாள் யாழினி.

" இந்த கவர்ல எங்கேஜ்மென்ட் பத்திரிகையோட மாடல் இருக்கு, உன்கிட்ட குடுக்க சொன்னாங்க யாழினி." என்றார்.

"சரிங்க." என்றாள்

"எப்போ ஊருக்கு போற" என்றார்.

"இந்த வாரம் ஃப்ரைடே ஈவினிங் போவேன் " என்றாள்.

" டைம் இருந்தா ஃப்ரைடே வரேன். மறக்காமல் போகும் போது எடுத்துட்டு போய்டு" என்றார்.

யாழினியும் "கண்டிப்பாக, மறக்காம குடுத்தர்றேன். நீங்க அடுத்து எப்போ மல்லூர் வர்ரீங்க?"

"இனிமேல் நிச்சயதார்த்தம் அன்றுதான் யாழினி, நிச்சயதார்த்ததுக்கு லீவ் சொல்லிட்டியா?"

"இல்லை, இனிமேல் தான் சொல்லணும். பரிட்சை எதுவும் இல்லை. அதனால் எத்தனை நாள் வேணும்னாலும் லீவ் போடலாம் என்று நினைக்கிறேன்"

"ஓகே யாழினி, உனக்கு டைம் ஆச்சு நீ கிளாஸ்க்கு போ" என்றார்.

அவரிடம் கையை ஆட்டி விடைபெற்றுக்கொண்டு அவளது வகுப்பிற்கு வந்தாள். அங்கு வகுப்பில் ஆண், பெண்கள் அனைவரும் வந்த காரையம், அவரையும் பற்றி அளந்துக்கொண்டிருந்தனர்.

அகிலன், அவன் நண்பனிடம், "டேய் மச்சி யார்றா அது? " என்றான்.

"ஹீரோ மாதிரி இருக்காரு இல்ல, என்ன உயரம் ,கலரு, ஆளே அம்சமா இருக்காருடா. யாழினிய பார்க்க வந்திருக்காரு. யாழினி கல்யாணம் பண்ணிக்கப் போறவர்ன்னு நினைக்கறேன்." என்றான் அகிலனின் நண்பன்.


தொடரும்….
 
நன்றாக இருந்தது தோழி, யாழினிக்கு அக்கா இருக்காளோ, அவ கல்யாணம் பண்ணிக்க போகும் மாப்பிள்ளை சரியா தோழி...
 
நன்றாக இருந்தது தோழி, யாழினிக்கு அக்கா இருக்காளோ, அவ கல்யாணம் பண்ணிக்க போகும் மாப்பிள்ளை சரியா தோழி...
ஹா ஹா! இது கூட நல்ல யோசனையாக இருக்கிறது. ??
 
ஹா ஹா! இது கூட நல்ல யோசனையாக இருக்கிறது. ??

நல்ல யோசனையா.....அப்போ நான்தான் உங்களுக்கு ஐடியா கொடுத்துவிட்டேனா........ஹி ஹி ஹி
 
Top