Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-3

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
hil3BML0AS9zrXRvJnsy2EX9n9PA29ZfusUQnVCm990Qc4oqBQYBEgDWOd8jjaSMmz8-xg0G-eWwIStF22gj4ZXPaTD9ugqlT-pzDCimQQ7MxWnD87Na6l6sNNQmqb9gePfEyKxV



அன்புள்ள தோழர்களே,

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! உங்களது உண்மையான விமர்சனத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின், திருத்தி எழுதுவதற்கு அது என்னை ஊக்கப்படுத்தும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-3..


அகிலனின் அலுவலகப் பேருந்து இன்று ஐதராபாத்தை வந்தடைந்தது. முன்பதிவு செய்திருந்த நட்சத்திர ஹோட்டலில் அனைவரும் இறங்கினர். வந்த களைப்பினால் நாளையிலிருந்து சுற்றிப் பார்க்கச் செல்வோம் என்று முடிவெடுத்தனர். அடுத்த நாள் காலையில் முதலில் கோல்கொண்டா கோட்டையை சுற்றிப்பார்க்க சென்றார்கள்.

அகிலன் உள்ளே நுழைந்ததும் சிறிது தூரத்தில் சக ஊழியர்களிடம் "நீங்கள் முன்னாடி போய்ட்டே இருங்க, நான் இதை முன்னரே பார்த்திருக்கிறேன்." என்று கூறி அனுப்பினான்.

அதன்பின் அங்கிருந்த ஒரு பூங்காவில் அமர்ந்து ,போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கு பள்ளி மாணவர்கள் அதிகம் வருவதுண்டு, அதேபோல் அன்றும் அங்கு வந்த பள்ளி மாணவர்களை கண்டதும் அவனது நினைவுகள் மீண்டும் கல்லூரிக்குச் சென்றது.

அவர்கள் கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த போது கடைசி நாள்தான் கோல்கொண்டா கோட்டையை பார்த்தனர். அது பார்க்க ஒரு சிறிய பாறையாலான மலை போன்று இருக்கும். மேலே ஏறி இறங்க மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். குறைந்தது 350-க்கும் அதிகமான படிகட்டுகளை கொண்டது.

அன்று கல்லூரியில் இருந்து வந்த அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டே உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். மேலே ஒரு சிறு குறுகலான பகுதியில் பள்ளி மாணவர்கள் திபுதிபுவென்று இறங்க, தடுமாறிய யாழினி கீழே விழப்போனாள். பின்னால் வந்த அகிலன் தாங்கி பிடிக்கச் சென்றான். ஆனால் அவன் பிடிப்பதற்குள் யாழினி கீழே விழுந்து விட்டாள்.

அகிலன் ' சே ! சில நேரம் மனசு சொல்லுரத இந்த மூளை கேட்க மாட்டேங்குது. இன்னும் கொஞ்சம் வேகமா செயல்பட்டிருந்தால், பிடிச்சிருக்கலாமோ' என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே, பின்னால் திரும்பிப் பார்த்த யாழினி, அகிலன் வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருப்பதை பார்த்து கடுப்பானாள்.

" பிடிக்கக்கூடாது? எப்படி விழுகிறான்னு பார்த்துட்டு நிக்குறியா?" என்றாள்.

"கீழே பார்த்து வரணும், மகாராணி வேடிக்கை பாத்துட்டு நடந்தா…" என்று வேகமாக கூறிவிட்டு, பின்பு தூக்குவதற்காக கையை நீட்டினான்.

மேலும் கடுப்பாகி அவனை தவிர்த்து, அருகில் இருந்த பெண்ணின் துணையுடன் யாழினி எழுந்து கொண்டாள்.

'இவனுக்கெல்லாம் பசங்க காலேஜே அதிகம், வேடிக்கை பார்த்தாங்கலாம். பின்ன இங்க என்ன எதுக்கு வந்தாங்க. எப்ப பாரு அசிங்கப்படுத்துறதே வேலையா போச்சு' என்று முணுமுணுத்தாள்.

யாழினியால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. அங்கு வந்த ஆசிரியை, அங்கிருந்த ஒரு நிழலில் அவளுடன் அவள் தோழி கவிதாவை இருக்கச் சொல்லி, மற்றவர்களை நடக்கச் சொன்னார்கள். அகிலன் மனமில்லாமல் விட்டு விலகி சென்றான். கவிதாவை நிறுத்திக்கொள்ளுவதில் மனமில்லாததால் யாழினி "கவிதா, இவ்வளவு தூரம் வந்தாச்சு, நான் பார்த்துக்கிறேன். நீ உச்சி வரைக்கும் போய் பார்த்துட்டு வா," என்று கூறினாள்.

கவிதாவிற்கு தோழியை தனியாக விட்டுச் செல்ல மனமில்லை என்றாலும் உச்சி சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையால் 'சரி! யாழினி, பத்திரமா இருந்துக்கோ. நான் போயிட்டு சீக்கிரமா வந்திடுறேன்" என்று நடக்கலானான்.

யாழினியை தனியாக விட்டு கவிதா மேலே வருவதை கண்ட அகிலன், யாழினி தனியாக இருப்பாலோ என்று எண்ணி தோழர்களிடம் தனக்கு லேசான தலைவலி என்று கூறி விட்டு கீழே இறங்கினான். யாழினி அவள் காலில் பட்ட காயத்திற்கு நீருற்றி கழுவிக்கொண்டிருந்தாள். அதை பார்த்த அகிலனின் மனம் உண்மையில் துடி துடித்துப் போனது. நான் கீழே விழாமல் பிடித்து இருந்தால் அவளுக்கு இந்த காயம் வந்திருக்காது என்று தன்னையே கடிந்து கொண்டான்.

”உனக்கு ஆறுதல் கூற


ஆயிரம்பேரிருந்தாலும்

உன்னவனின்


அருகாமையை போலாகுமா… “

"யாழினி, மன்னிச்சுக்கோ!" என்றான் அகிலன்.

"உனக்கு என் பேரு கூட தெரியுதா! என்றாள் கோவமாக.

" அதான் மன்னிச்சுக்கோன்னு சொல்லிட்டேன்ல. வேணுமென்று கீழே விடவில்லை, பிடிப்பதற்குள் விழுந்து விட்டாய்" என்றான்.

" நீ என்ன அந்நியன் மாதிரி பேசுற, அப்போ எல்லாருக்கும் முன்னாடி கிண்டல் பண்ணிட்டு, இப்போ எதுக்கு மன்னிப்பு கேக்கணும். எது உண்மை?" என்றாள் யாழினி.

" எது உண்மை என்று உனக்கு தெரியாதா, நான் உன்னை பிடித்து இருந்தாலோ ,இல்ல உடனே தூக்கியருந்தாலோ பிரண்ட்ஸ்லாம் கிண்டலடித்து உன்னை சங்கடப்படுத்தி இருப்பார்கள்" என்றான்.

இவனுக்கு உண்மையிலே நம்ப மேல அக்கறைதானா என்று எண்ணிக்கொண்டே அவனை பார்த்தாள். அவனது பார்வை அவளது உள்ளம் வரை தீண்டியது.

இது என்ன மாதிரியான பார்வை, காதலின் உஷ்ணத்தை மெலிதாக உணர்ந்த யாழினி தாங்க முடியாமல் "கீழே போகலாமா? என்னால் மற்றவர்கள் அளவுக்கு வேகமாக நடக்க முடியாது" என்றாள்.

அவளின் தவிப்பை புரிந்த அகிலன் கள்ளச் சிரிப்புடன் " போகலாம்" என்று உதவிக்காக கையை நீட்டினான். ஆனால் அவள் கையை பிடிக்காமல் எழுந்து நடக்க முற்பட்டாள். காலில் அடிபட்டு இருந்ததால் மீண்டும் நிலை தடுமாறியவளை, அவளின் ஒப்புதலின்றி அகிலன், யாழினி கையைப் இருகப் பற்றினான். அவள் இதற்கு முன்னரே அண்ணன், தந்தை கையைப் பற்றி இருந்தாலும், இவனது பிடியானது இறுக்கமாகவும், வேறு மாதிரியான உணர்வாகவும் இருந்தது. இருவரும் எதை உணர்ந்தார்களோ அதை இழக்க மனமில்லாமல் அமைதியாக நடந்தார்கள்.


பேச நினைத்த

வார்த்தைகளும்


காற்றோடு கலந்தது

உன்னருகில் நானிருக்கும் போது… “


கீழே சென்றதும் அவளை ஓரிடத்தில் அமரவைத்து "சாப்பிடுறியா? ஏதாவது வாங்கிட்டு வரணும்னா சொல்லு." என்றான்.

"கொஞ்சம் வலியா இருக்கு ஆயில்மெண்ட் எதாவது கிடைக்குமா" என்றாள் தயங்கியபடி.

"காசு இருந்தா குடு, பக்கத்துல எதாவது மெடிக்கல் ஷாப் இருக்கான்னு பார்க்கிறேன்" என்றான். அவனின் பேச்சு அவளை திகைப்படையச் செய்தது.

" காசா! இந்தா 100 ருபீஸ் தான் இருக்கு , சில்லறை இல்லை" என்றாள்.

'கஞ்சபிசினாரி! இவனை கல்யாணம் பண்ணறவ செத்தாள். பார்வைக்கும் , பேச்சுக்கும் சம்பந்தமே இருக்கமாட்டேங்குது' என்று எண்ணிக்கொண்டிருந்தாள். அதற்குள் சக மாணவர்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தார்கள். அதனால் அவன் அவளை விட்டு விலகி சென்றான். கல்லூரிப் பேருந்து வந்ததும் அனைவரும் பேருந்தில் ஏறினார்கள். யாழினி மூன்று இருக்கைகள் தாண்டி நடுவில் அமர்ந்திருந்தாள்.

அதைப்பார்த்த அகிலன் ஏறும்போது "போய், படிக்கட்டு சீட்டு கிட்ட உட்காரு. இங்க உட்கார்ந்துட்டு கால் இடிச்சிருச்சு, டிரைவர் இடிச்சுட்டார் என்று மத்தவங்களை திட்டாதே" என்று கூறி வம்பிலுத்துக்கொண்டே, மருந்தை கொடுத்துவிட்டு பின்னால் சென்றுவிட்டான்.

யாழினிக்கு மருந்தை தூக்கி எரியலாம் போல் இருந்தது, மத்தவங்கள நான் திட்டிறனா? நான் எங்க உட்கார்ந்திருந்தா இவனுக்கு என்ன?' என்று எண்ணிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

இறுதியாக பேருந்துக்குள் நுழைந்த ஆசிரியை "யாழினி, நீ எதுக்கு நடுவுல உட்கார்ந்து இருக்க? எழுந்து வந்து இங்கே, படிக்கட்டு கிட்ட உட்காரு" என்று கூறி இடம் மாற்றி விட்டு சென்று அமர்ந்துகொண்டார்.

யாழினி "கடவுளே இவர் ஒருத்தர்!" என்று முணுமுணுத்துக் கொண்டே வந்து அமர்ந்துகொண்டாள். அது சுற்றுலா கடைசி நாள் என்பதால் அனைவரும் கல்லூரிக்கு திருப்பினர். வலிக்கான மாத்திரை போட்டு இருந்தபடியால் உடனே உறங்கியும் போனாள். ஆனாலும் காலின் வழி அவ்வப்பொழுது அவளது முகத்தில் தெரிந்தது.

தூக்கமின்றித் தவித்த அகிலன், எழுந்து வந்து படிகட்டிலில் அமர்ந்து கொண்டு அந்த இருளில் அவள் உறங்கும் அழகை ரசிக்கலானான். அவள் காலை மெல்ல எடுத்து தன் மீது வைத்து, காயம் எங்கும் படாமல் இதமாக வைத்துக் கொண்டான். என்ன ஒரு மென்மையான பாதம்," உன்னை பூமியில் படாமல் காப்பேனடி" என்று நினைத்தபடி அப்படியே கண்ணை மூடி அமர்ந்து, பேருந்தில் ஓடிய மெல்லிசையை கேட்டுக்கொண்டிருந்தான்.

“எட்டாத உயரத்தில் நிலவை

வைத்தவன் யாரு

பெண்ணே பெண்ணே

பூங்காற்று அறியாமல் பூவை

திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல்

தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க

வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு….”


அவளுக்கும் அவனுடைய இதமான பிடிப்பு ஏதோ கனவுலகில் இருந்தது போலிருந்தது. ஒரு தூக்கம் தூங்கி எழுந்து பார்த்தவள், கால் அவன் மடியில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்றாள்.

'ஐயையோ! இவன் எப்போ இங்க வந்து உட்கார்ந்தான். தூக்கத்தில் தெரியாமல் காலை அவன் மேல போட்டு விட்டோமோ! இவன் எழுந்தால் ஊர கூப்பிட்டு மானத்தை வாங்குனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்ல. எப்படி நடந்து கொள்வான் என்றே தெரியாது' என்று நினைத்து தனது காலை அவனுக்கு தெரியாமல் எடுக்க முயற்சித்தாள்.

அவளது மெல்லிய அசைவினால் விழித்துக்கொண்ட அகிலன், தவறாக நினைப்பாளோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே.

"மன்னிச்சுக்கோ! தெரியாம கால் பட்டுருச்சு" என்றாள் யாழினி.

அவன் வேண்டுமென்றே வம்புக்காக "அது எப்படி தெரியாம அடுத்தவர்கள் மேல் படும்? கால விட முடியாது" என்றான்.

"வலிக்கிறது. காலை விட்டுரு" என்றாள்.

"வலிக்காம நான் பார்த்துக்குறேன், என்று காலை இதமாக அழுத்திக்கொண்டே 'போதுமா'?" என்று அவளை பார்த்தான். அந்த தொடுதல் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அந்த இரவிலும் சிறிய வெளிச்சத்தில் அவனது பார்வை தன்னை விழுங்கி விடுமோ என்பது போல் இருந்தது அவளுக்கு.

யாழினியை பொறுத்தமட்டில் கல்யாணத்திற்கு பின் வரும் காதல் நிரந்தரமானது. அதற்கு முன் வரும் காதல் தோல்வியிலும் முடியலாம். அதை தாங்கும் தைரியம் அவளிடம் இல்லை.

அதனால் இவனது பார்வையை தவிர்க்கும் பொருட்டு, பேருந்தில் எங்காவது இடமிருந்தால் அமர்ந்து கொள்ளலாம் என்று திரும்பிப் பார்த்தாள். எங்கும் இடம் கிடைக்காததால் வேறுவழியின்றி "கொஞ்சம் இடம் விடு, நானும் படிக்கட்டில் வந்து உட்கார்ந்துக்குறேன். நல்லா காத்து வரும் போல" என்று கூறினாள். அவளது மனஒட்டத்தை புரிந்தவனாய், நகர்ந்து அமர்ந்து கொள்ள, அவளும் வந்து அவனுடன் அமர்ந்தாள். இருவரும் மெல்லிசையை கேட்டுக்கொண்டே ஜில்லென்று வீசும் குளிர் காற்றில் மனதை லயித்தனர். சில நிமிட அமைதிக்குப் பிறகு அகிலன் மௌனத்தை கலைக்கும் விதமாக, அதேநேரம் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததால் மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? என்றான். "எனக்கு எங்க அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் என்னோட பெரிய அண்ணி" என்றாள்.

"அது என்ன எல்லாரும் அண்ணன்னு சொல்லுவாங்க, நீ என்ன அண்ணிங்கிற? அப்படி அண்ணி மட்டும் என்ன ஸ்பெஷல்?" என்றான்.

"எங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது. எங்க அண்ணனும் அண்ணியும் அப்படி ஒரு அந்நியோன்யமாக இருப்பார்கள். எங்க அண்ணனை எதிர்த்து அண்ணி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். அண்ணிக்கு அப்படி ஒரு கண்மூடித்தனமான பாசம் என் அண்ணன் மேல, சில நேரம் எனக்கு அண்ணி மேல கோவம் வரும். அண்ணிக்கு தனிப்பட்ட ஆசையே இருக்காதா என்று கூட தோன்றும். எங்க அண்ணனும் பாசமாத்தான் இருப்பாரு. தினமும் பூ வாங்கிட்டு வருவார். அவங்க அம்மா வீட்டுக்கு கூட அனுப்ப மாட்டார். கேட்டா, அண்ணிய விட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாது என்பார். ஒரு நாளும் சண்டை வந்து பார்த்ததில்லை. அண்ணன் எவ்வளவு கோபமாக பேசினாலும் அண்ணி பொறுத்தே போவாங்க. வாய்ப்பே இல்லை என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாதுப்பா!" என்றாள் யாழினி.

" நீ உங்க அண்ணி மாதிரி இருக்க வேண்டாம். நீ இப்படி இருக்கிறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு" என்றான் மெதுவாக.

நெற்றியை சுருக்கி திரும்பி குழப்பத்துடன் பார்த்துவிட்டு, "என்னது? என்ன சொன்ன?" என்றாள்.

" இல்ல நீ அப்படியெல்லாம் இருக்க மாட்ட! அதுதான் தெரியுமேன்னு சொன்னேன்" என்றான் அகிலன் மலுப்பலாக.

"நானும் பாசமாத்தான் இருப்பேன். என்ன வம்புக்கு இழுக்காத வரைக்கும், நானும் அடுத்தவங்க வம்புக்கு போகமாட்டேன்." என்றாள்.

"உன்னை வம்பு பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கே! என்ன பண்றது" என்றான்.

முகத்தில் குத்துவது போல் செய்துவிட்டு "எல்லாரும் தூங்குறாங்கன்னு பார்க்கறேன், நம்ம சண்டைய இன்னொரு நாள் வச்சுப்போம்" என்று கூறிவிட்டு எழுந்து நிற்க போனாள்.

"இங்க நின்னா விழுந்துருவ. உட்கார்" என்றான். அவன் கூறுவதற்கு முன் யாழினி எழுந்து நின்றபடி வேடிக்கை பார்க்கலானாள். வேறு வழி இல்லாமல் அவனும் எழுந்து, அவளை மேல் படியில் நிற்க வைத்துவிட்டு, தான் கீழிறங்கி அடுத்த படியில் ஒரு கையை கம்பியின் குறுக்கே வைத்து, வெளிப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கலானான். பேருந்தில் ஓடிய மெல்லிசையில் குளிர்காற்றில் அந்த இதமான சூழ்நிலையில் யாழினி, இப்பொழுதுதான் அவனது தோற்றத்தை முதன்முதலாக நெருக்கத்தில், இவ்வளவு அருகில் பார்க்கிறாள். 'எத்தனை கம்பீரம் இவனுக்கு, ஆண்மைக்குறிய அத்தனை ஒழுக்கமும் இருக்கிறது. இருந்தாலும் உன் பேச்சில் மட்டும் ஏன், எப்பொழுதும் என்னை மட்டும் மற்றவர்கள் முன் காலை வாருகிறாய். அரக்கன் டா நீ" என்று எண்ணிக் கொண்டே அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அவள் பார்வை அவனுக்கும் உள்ளே சென்றதோ என்னவோ, அவன் திரும்பி ஒரு புருவத்தை உயர்த்தி 'என்ன' என்பதுபோல் கேட்டான். அந்த நொடி அவள் அவன் அழகில் கிறங்கிப் போனாள் என்று தான் சொல்லவேண்டும். இருவரின் பார்வையும் சிலநிமிடங்கள் நகராமல் தொடர்ந்தது. பேருந்து வேகம் எடுத்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரோட்டில் இருந்த வேகத்தடையின் மீது வரையப்பட்டிருக்கும் அடையாள வெள்ளை பூச்சு அழிந்திருந்ததால், இருட்டில் தெரியாமல் ஓட்டுநர் வந்த வேகத்தில் அதன்மீது ஏறி இறக்கினார். பேருந்து மொத்தமும் ஒரு குலுங்கு குலுங்க, அவன் பார்வையில் சிக்கியிருந்த யாழினி தடுமாறி பேருந்தின் கம்பியை பிடிக்க முடியாமல், அவனை பிடித்து நின்றாள். அவனும் ஒரு கையில் கம்பியையும், மறுகையில் அவளையும் வளைத்துப் பிடித்ததில், யாழினியின் கன்னத்தில் அகிலனின் இதழ் பதிந்தது. அடுத்த நொடியே, அவனே அவளை நிதானப்படுத்தி விட்டு, அவளை அவள் இடத்தில் அமரச் செய்துவிட்டு நகர்ந்தான்.

பேருந்தில் ஒரு சிலர் குலுங்கி மெதுவாக விழித்து பார்க்கும் பொழுது அவன் இடத்தை நோக்கி போய் கொண்டிருந்தான். அவளுக்கு கனவு போல் இருந்தது. அவளால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை, நிலைதடுமாறி இதழ் பதிந்ததா, இல்லை வேண்டுமென்றே இதழ் பதித்தானா? என்று இன்றுவரை அவளுக்கு தெரியவில்லை. அங்கு அவனுக்கும் மனது படபடவென துடித்து, வெடித்துவிடும் போலிருந்தது.

முதல் முத்தம், அதுவும் அவன் மனதை தொட்டவளுக்கு. 'எப்படி இங்க வந்தோம் ஏன் அவளை விட்டு விலகினேன் என்று அவனே அவனை கேட்டுக்கொண்டான். கால் தரையில் படவில்லை, பூமியே காலுக்கு அடியில் இருப்பது போல் மிதந்து கொண்டிருந்தான். தானாக கவிதை எழுதியது அவன் இதயம்..

'கனவுகளும் நினைவுகளும்


நாட்களை கரைத்துக்கொண்டு

என் விழியினை தொலைத்து

உன் வரவினை தேடிக்கொண்டு

உனக்கான கனவுகளையும் நினைவுகளையும்


என் கண்ணிமையில் காக்க…'

தொடரும்…
 
Last edited:
Top