Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-10

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
YSxRq_Plo7-WW98OrTGNDcgL6P6h0MyHrZMq05-QeCFA4ndfsKg98IseRtfH2Nu_OFfuFRSlBsMN7Lw1VZQMgr0vWi-S8qJw11yTe4e6xS4M_oGgvUeKylTtGXPv7DQJ2Q9yhnSr


அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.

படித்து விருப்பம் மற்றும் கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!. உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-10..


கல்லூரியில் யாழினியை பார்க்க வந்தவர் ”யாரென்று”, அகிலன் நண்பர்களிடம் கேட்க, ’வந்தவர் யாழினியை திருமணம் செய்ய போகிறவர்’ என்று நண்பர்களில் ஒருவன் கூற அகிலனின் மனம் கோபத்தில் கொந்தளித்தது.

"சும்மா நீயா எதுவும் அளந்து விடாத, அடிச்சு பல்ல கழட்டிடுவேன்." என்றான் அகிலன்.

"உனக்கு ஏன்டா இவ்வளவு கோவம், நாங்க கேட்டதுக்கு அவரு அவங்க வீட்டு மாப்பிள்ளைன்னு தான் சொன்னாரு. அவளை பார்க்கிறதுக்கு தான் இங்க வந்ததாகவும் சொன்னாரு." என்றான் ஒருவன்.

முன்னாடி இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் திரும்பி அவன் பங்குக்கு, "சூப்பரா இருக்கார்டா, எல்லாப் பொண்ணுங்களும் வாயப் பொலந்துகிட்டு பார்க்கிறாள்க , இதே நாம்ப வந்தா திரும்பிக்கூட பார்க்கமாட்டாளுக!" என்றான்.

"பயங்கர வசதி போல காரை பார்த்தியா, யாழினி இருக்கிற அழகுக்கு அமைந்தாலும் அமையும் "என்றான் இன்னொருவன் பெருமூச்சுடன்.

"பொண்ணுங்களுக்குதான்டா ஜாலி! படிக்கும் போதே காரு, பங்களான்னு நல்ல இடமா அமைஞ்சுருது. வாழ்க்கையில் செட்டில் ஆகிடுறாங்க. நமக்கு பாரு நல்லா படிச்சு, அப்புறம் வேலைக்கு போய், கார் வாங்கி கல்யாணம் பண்ணும்போது, நமக்கும் முடியெல்லாம் கொட்டி இருக்குற நல்ல பிகரெல்லாம் போய், மொக்கை பிள்ளைங்களா வந்து வாய்க்கும்" என்றான் ஒருவன் மிகவும் சலிப்புடன்.

அகிலனுக்கு எதுவும் காதில் விழவில்லை. எதையும் ஏற்கும் மன நிலையில் அவன் இல்லை. இவனுங்கெல்லாம் உளருக்கிறார்கள். 'அவள் என்னுடையவள்டா' என்று கத்தி கூற வேண்டும் போல் இருந்தது. ஆனால் இதுவரை நண்பர்களிடம் கூட இவன் மனதில் உள்ளவற்றை தெளிவாக கூறியவில்லை. 'எங்கே கூறினால் தேவை இல்லாமல் இருவரையும் சேர்த்து பேசி அவளை நோகடிப்பார்களோ, என்று 'தோழி' என்றே கூறியுள்ளான்.

யாழினி "எஸ்க்கியூஸ் மீ மேடம் " என்று கேட்டு வகுப்பிற்குள் உள்ளே வரும் போது முகத்தில் மகிழ்ச்சியுடன் நுழைந்தாள்,

ஆசிரியர் "கம் இன்" என்று கூறிவிட்டு அசைமெண்ட் தாள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வேகமாக வந்து அவளுடையதை எடுத்து கொடுத்தாள். அகிலனுக்கான அசைமெண்ட் தாளை எடுத்து யாழினி, அவனிடம் குடுக்க அவன் கையில் வாங்காமல் எதையோ யோசித்தபடி உறைந்து போய் அமர்ந்திருந்தான். "இந்தா! இதை அகிலன் கிட்ட கொடுத்துரு" என்று பின்னாடி இருப்பவரிடம் கொடுக்க, அவன் அகிலனின் மேஜையின் மேல் வைத்து விட்டு திரும்பிக் கொண்டான். நண்பர்களாக ஆனபிறகு யாழினிதான் எப்பொழுதும் அகிலனுக்கு அசைமெண்ட் எழுதித் தருவது வழக்கம்.

ஆசிரியர் வகுப்பு முடிந்து கிளம்பிய பிறகு ,யாழினியிடமே கேட்டுவிடலாம் என்று எழுந்து வந்து அவள் பின் இருக்கையில், அமர்ந்து இருப்பவர்களை நகர்ந்து அமர்ச் சொல்லி அமர்ந்தான் அகிலன். அகிலன் கேட்க வந்ததை கவித்தாவே கேட்க ஆரம்பிக்க அமைதியாக யாழினியின் பதிலை உற்று கவனித்தான்.

கவிதா யாழினியிடம் "யாருடி அது சூப்பரா இருக்காரு, மொத்த காலேஜ் இன்னைக்கு அவரைத்தான் சைட் அடித்தது" என்றாள்.

அகிலன் 'இவ ஒருத்தி, சும்மாவே பசங்கன்னா பல்ல இளிப்பா, மாப்பிளை கார்ல வேற வந்திருக்கான். சொல்லவா வேணும். இவளுகளே வில்லனை உருவாக்கிருவாள்க' என்று மனதிற்குள் பொறுமிக்கொண்டான்.

யாழினி அவளிடம்,' உன்கிட்ட முன்னாடியே சொன்னேனே, போன வாரம் பொண்ணு பார்க்க வந்தாங்கன்னு, அவர்தான் இவர்." என்றாள்.

"இப்ப எதுக்கு இங்க வந்தாங்க" என்று கேட்டாள் கவிதா.

"அவங்க இங்கதான் பெரிய கிரானைட் கடை வச்சிருக்காங்க. நிச்சயதார்த்தத்துக்கு மாடல் கொடுத்துட்டு போக வந்தார்" என்றாள் யாழினி.

அகிலனுக்கு இவர்களின் சம்பாசனை முழுவதுமாக கேட்க அவனுக்கு தலை சுற்றியது. பெண்பார்க்க வந்தார்களா? அவனுக்கு உயிரை உறிஞ்சியது போல் இருந்தது. அப்படியே இந்த பூமி பிளந்து இருவரையும் உள்ளே இழுத்துக்கொள்ளக் கூடாதா என்று தோன்றியது.

திரும்பி பார்த்த யாழினி "ஏய், இங்க எப்போ வந்த? உன் சகாக்களை விட்டுட்டு நகரமாட்டியே?" என்றாள்.

"எங்கேஜ்மெண்ட் எப்போ?" என்றான் இதயம் கனத்து, உயிர் பிரியும் வலியிடன்.

"ஓ! உனக்கும் விசயம் தெரியுமா, உன்கிட்ட எதை சொல்லியிருக்கேன், சொல்லவில்லைன்னு எனக்கே தெரியமாட்டேங்குது. எங்கேஜ்மெண்ட் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு தான். செமஸ்டர் லீவில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள், அப்பொழுது தான் அனைவரும் கலந்து கொள்ள முடியும் என்று. மாப்பிள்ளையை பார்த்தியா, நல்லாருக்காரு இல்ல. ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, நல்லா பேசுறார், முக்கியமா உன்னை மாதிரி வம்பு இழுக்க மாட்டார்" என்றாள் சிரித்துக்கொண்டே.

அதற்கு மேல் அவன் காதில் எதுவும் விழவில்லை அங்கு அமர்ந்து இருக்கவும் முடியவில்லை வகுப்பில் இருக்கப் பிடிக்காமல் எழுந்து சென்றான். கண்ணில் நீர் துளிர்த்து, ரத்தம் சுண்டி, உயிர் போயிருந்தால் கூட இந்த வலி இருக்குமான்னு தெரியல. அது எப்படி இவளால் இதை என்னிடமே சந்தோஷமாக கூற முடிகிறது. எங்கே அழுது விடுவோமோ என்று யாரிடமும் எதுவும் கூறாமல் அவன் நண்பனிடம் இருந்து பைக் சாவியை வாங்கிக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினான். இந்த நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது என்று எண்ணினான்.

பைக்கில் போகும் போது, அழுது அறியாத அகிலனின் கண்கள் இன்று கண்ணீர் திவலையால் விழித்திரையை மறைத்தது.

குருதி கூர்மையாக பாய்ந்து

இதயத்தைக் கிழித்தனவோ

உமிழ் நீரையும் உள்ளே விடாமல்

உணர்வுகள் தடுக்கிறதோ

இன்று

உயிர் பிரிந்தாலும் வலிக்காது கணமணியே

நீ மட்டும் என்னை விட்டு விலகாதே!

'பேசிட்டு இருக்கும்போது இப்ப எதுக்கு எந்திரிச்சு போறான், என்னாச்சு இவனுக்கு? அடுத்த மிஸ் இப்போ வந்துருவாங்க, அறிவில்லாம இப்ப எங்க போறான்' என்று நினைத்து, அவன் மீது கடுப்பானால் யாழினி.

யாழினியின் தோழி சாரா," அகிலன் எங்கடி இவ்வளவு வேகமா போறான்," என்று கேட்டாள்.

"தெரியல! அவன் எங்க கேட்டால் ஒழுங்காகவா பதில் சொல்லுறான்." என்றாள் யாழினி.

"ஆமாம்டி. படிக்கிறதும் சுமார், கிளாஸ்ல இருக்கிறதும் கிடையாது, பைக் கீ வாங்கிட்டு எங்கயோ போறான் பாரு! இவனெல்லாம் உருப்படாத பசங்கடி, கொஞ்சனாவது கடைசி வருசம்னு பொறுப்பு இருக்கா பாரு!" என்று திட்டிக்கொண்டே திரும்பிக்கொண்டாள் சாரா.

"இவன் மானத்தை இவனே வாங்கி கொள்கிறான், நாம் என்ன செய்ய முடியும் " என்று வெளிப்படையாக தண்டிக்கவும் முடியாமல் உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தாள் யாழினி.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அவன் வகுப்பிற்கு வரவில்லை நண்பர்களிடம் விசாரித்ததில் அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்கள்.

ஒரு வார்த்தை சொல்லாமல் போய்விட்டானே என்று ஒருபக்கம் கோபமாகவும், மறுபக்கம் உடல்நிலை சரியில்லை என்று பாவமாகவும் இருந்தது. அந்த வார இறுதியில் யாழினி ஊருக்குச் சென்றாள்.

வீட்டிற்கு சென்றவள் அங்கு அண்ணியை காணாமல் தேடினாள்.

அவளின் பாட்டி தனியாக அண்ணியை ஜாடை பேசி ஏசிக் கொண்டிருந்தார். " மகராசன் இவனுக்குத்தான் அறிவு இல்லையென்றால், இந்த பொட்டச்சிக்காவது அறிவு கொஞ்சமாவது இருக்கணும் இல்ல, இப்ப இடுப்பை பிடிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரில இவதானே கெடக்கிறா, வலி இவளுக்குத்தானே, இந்த காலத்துல எதை கேட்டாலும், எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாளுக, ஏழு, எட்டு மாசம் ஆச்சுன்னு தள்ளி படுக்கணும்னு தெரியாது." என்று புலம்பித் தள்ளினார் பாட்டி.

யாழினி அவள் அம்மாவிடம் சென்று, "பாட்டி, யாரம்மா திட்டுறாங்க, அண்ணியவா திட்டுறாங்க, அண்ணி எங்க?" என்று கேட்டுக்கொண்டிரும்போதே அவளுடைய பெரியம்மா உள்ளே நுழைந்தார்கள்.

யாழினியின் அப்பாவிற்கு, அவருடன் பிறந்தவர் ஒரு அண்ணன் மட்டும். யாழினியின் பெரியப்பா வீடு இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. சொத்தை பிரித்து விட்டதால் இருவரும் தனி, தனியாக பண்ணையம் பண்ணினார்கள். அண்ணன் விவசாயத்துடன் சேர்த்து, ரியல் எஸ்டேட்டும் செய்ததால், யாழினியின் குடும்பத்தை விட வசதி அதிகம். யாழினியின் பாட்டிக்கு, எங்கு விருப்பமோ அங்கு தங்குவார். அனைத்து சின்ன, பெரிய விசேஷங்களையும், இரு குடும்பத்தாரும் சேர்ந்தே சிறப்பாக செய்வார்கள். வசதி, பணம் இவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, பிரிக்கவும் இல்லை.

"கல்பனாவுக்கு இப்போ எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாரு" என்று கேட்டார் பெரியம்மா.

யாழினி திருதிருவென்று இருவரையும் விழித்துப் பார்க்க அவளுடைய அம்மா "இப்போ கொஞ்சம் பரவாயில்ல, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்றேன்னு சொன்னாங்க. இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொன்னாங்க" என்றாள்.

"கல்பனாவுக்கும் எத்தனாவது மாசம்? ஆறா இல்லை ஏழாவதா? என்றாள் பெரியம்மா.

" இது ஏழாவது மாசம் அக்கா" என்றால் அம்மா. யாழினியின் அம்மாவும், பெரியம்மாவும் தமக்கைகள் போல் அன்பு கொண்டவர்கள்.

" அப்போ, வளைகாப்பு பண்ணிட்டு கல்பனாவை அவளோட அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்போமா?. இதற்கு வேறு வழி கிடையாது" என்று கூறினார்.

"என்னத்த சொல்லுறது! தமிழு கேட்க மாட்டேங்கிறான். அங்கிருந்து ஹாஸ்பிடலுக்கு தூரம்ன்னு சொல்றான். கல்பனாகிட்ட கொஞ்சம் நாசுக்காக சொல்லி இனிமேல் ஜாக்கிரதையா இருக்க சொல்லணும் " என்றாள் அம்மா தலையில் அடித்துக்கொண்டு.

யாழினிக்கு தெளிவாக புரியவில்லை என்றாலும் ஏதோ வெளிப்படையாக சொல்லக்கூடாத பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.

அதனால் அதைப்பற்றி துருவிக் கேட்காமல் நான் இன்று "அண்ணியோட போய் இருக்கட்டுமா?" என்று கேட்டாள்.

" அதெல்லாம் வேண்டாம், நான் பாத்துக்குறேன் நீ வீட்டுலயே இரு" என்றார் அம்மா.

" இந்த குழப்பத்தில் உன்னை கவனிக்கவில்லை, நீ எப்போ காலேஜிலிருந்து வந்த யாழினி" என்று கேட்டார் பெரியம்மா.

இப்பதான் பெரியம்மா ஒரு அரைமணிநேரம் இருக்கும். நானும் சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு இந்த கவர கொடுக்க அவங்க வந்தாங்க’ என்று அவர் கொடுத்த கவரை அம்மாவிடம் நீட்டினாள்.

அதை வாங்கிக்கொண்ட பெரியம்மா "அவங்கன்னா யாரு யாழினி?"

"அதான் பொண்ணு பார்க்க போனவாரம் வந்தாங்களே அவங்கதான்" என்றாள்.

"மாமான்னு சொல்லு, இன்னும் என்ன அவங்க இவங்க, அதான் நிச்சய தேதி குறிச்சாச்சு, அப்புறம் என்ன" என்றார் பெரியம்மா.

யாழினியின் அம்மாவிடம் "நீ போய் கல்பனாவை பாத்துக்கோ, எதுன்னாலும் போன் பண்ணு என்று கூறிவிட்டு, யாழினியிடம் திரும்பி "நீ வீட்டுக்கு வர்ரியா?" என்றார்.

"பாட்டி இங்கதானே இருக்காங்க. நான் இங்கே இருக்கிறேன் பெரியம்மா" என்றாள்.

"சரி மறக்காம அடுத்தவாரம் வந்துரு, நிச்சயத்திற்கு புது புடவை எடுக்கணும்" என்றாள் பெரியம்மா.

“ஆமாம், இந்த வரமே போயிருக்கணும், எங்க அதுக்குள்ள ஆஸ்பத்திரி வேலை வந்துடுச்சு” என்றாள் அம்மா வருத்தமாக.

"சரி விடும்மா. பெரியம்மா நான் அடுத்தவாரம் வந்துடுறேன்." என்றாள் யாழினி.

அடுத்த நாள் அண்ணி ஆஸ்பத்திரியிலிருந்து நலமுடன் திரும்பி வர, அவர்களை பார்த்துவிட்டு கல்லூரிக்கு வந்தாள்.

கல்லூரிக்கு திரும்பி வந்த நாள் முதல் அகிலனை பார்த்து, 'ஏன் அன்று அவசரமாக வெளியேறினாய் என்றும் உடல்நிலை பற்றியும் விசாரிக்கலாம்' என்றும் நினைத்தாள்.

ஆனால் அகிலன் என்னவோ அவளை கண்டுகொள்ளவே இல்லை. ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் திரிந்து கொண்டிருந்தான். வேண்டுமென்றே அவளை விட்டு விலகி இடத்தை மாற்றி, ஆண்கள் கூட்டத்திற்கு நடுவில் சென்று அமர்ந்துகொண்டான்.

இடைவேளை நேரமும் அவளிடம் பேசிவிடக் கூடாது என்பதற்காக கேன்டீன், பசங்களோடு வெளியே சென்றான். யாழினி முயன்றும் அகிலனிடம் பேச முடியவில்லை, அவனிடம் நெருங்க கூட முடியவில்லை. வேண்டுமென்றே ஓடி, ஒழிந்து கொள்பவனிடம் அவள் எவ்வாறு பேச முடியும்.


அகிலனோ தனக்குள் இருந்த காதலை எப்படியாவது வெளியேற்றியாக வேண்டும் . இவள் இனிமேல் தனக்கானவள் இல்லை என்ற பின்பு அதில் நிலைத்து கிடப்பதில் சிறு பலனில்லை என்று போராடினான்.

இதில் யாழினியை நேரடியாக முகம் காண முடியாமல், அவளைத் தவிர்க்கவும் முடியாமல் இறுதி இரண்டு நாளும் மீண்டும் உடல்நிலை சரியில்லை என்று விடுமுறை எடுத்துக் கொண்டான்.

இப்படியாக ஒரு வாரம் கடந்து, அவள் அன்று நிச்சயதார்த்த புடவை எடுப்பதற்காக ஊருக்கு போவதாக இருந்தாள்.

அகிலன் ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு தன் மனதில் இருப்பதை இன்று அவளுடன் எப்படியாவது பேசி புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தான். 'இந்த என்கேஜ்மென்ட் வேண்டாம். நான் உன்னை விரும்புகிறேன்! நீ இல்லாத வாழ்வு எனக்கு நரகம்' என்று சொல்லவேண்டும் முடிவு எடுத்தான்.

அடி அழகே! நீயே கேட்டாலும்

விட்டுக் கொடுப்பதாக இல்லை

இது #உன் மேலான #என் காதல்

நீ இல்லை என்றால் நிச்சயம்

நான் இங்கு இல்லை !


அன்று அவன் ஊருக்கு செல்வது தெரிந்து அவளுக்கு முன்னரே நேராக கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்திருந்தான்.

யாழினியும் பையை எடுத்துக்கொண்டு அதே பேருந்து நிறுத்தத்தை நோக்கி வந்தவள் அவன் இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தாள். 'மூன்று நாளாக முகத்தை திருப்பிக் கொண்டு போனானே! பரவாயில்லை, எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காத இடத்தில், சார் வந்து நிற்கிறார். உடம்பு சரியாகி இருக்குமா! இல்ல நல்லா இருந்துகிட்டே பொய் சொன்னானா! தெரியலையே போய் கேட்போம்.' என்று எண்ணிக் கொண்டே அவனை நோக்கி நடந்தாள்

அவன் அருகில் வந்தவள்," எப்படி இருக்க ?" என்றாள்.

உடல்நிலை சரியில்லை என்று அவன் நண்பன், யாழினியிடம் கூறியதை அறியாததால், அகிலன் அவள் தன்னை மறந்து இன்னொருவனை எப்படி மணமுடிக்க சம்மதித்தால் என்ற கோபத்திலும் "நொந்து நூலாய் இருக்கேன், போதுமா?" என்றான்.

அவன் கோபத்தை அறியாத யாழினி "பார்த்தாள் அப்படி தெரியலையே! காலேஜ்க்கு மட்டம் அடிச்சிட்டு, இங்க சுத்திட்டு இருக்கியா?" என்றாள் வழக்கம்போல் கிண்டலாக.

அகிலனின் கோபம் மேலும் கொந்தளிக்க "உங்களுக்கெல்லாம் பார்த்தாலும் தெரியாது, பேசினாலும் புரியாது" என்றான்.

" இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம சண்டை போட்டுட்டு இருக்க" என்று யாழினி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவள் முன் ஒரு கார் காற்றாய் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது.



தொடரும்...
 
அருமை தோழி, யாழினியோட பெரியம்மா பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை சரியா தோழி, நீங்க சொல்ல மாட்டீங்க...... ஆனால் அதுதான்..............:censored::censored:??
 
அருமை தோழி, யாழினியோட பெரியம்மா பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை சரியா தோழி, நீங்க சொல்ல மாட்டீங்க...... ஆனால் அதுதான்..............:censored::censored:??
நன்றி தோழி . நானும் ஒரு twist வைக்கலாம்னா விடமாட்டேன்கிறீங்க :cool::unsure:. பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில் :love:
 
Top