Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறுகதை வானவில் வரும் வாழ்வில் மீண்டும்-(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
பிரபலமான கஃபே, சென்னை

மாலை வேலையை முடித்தவள் வேண்டா வெறுப்பாகவே அந்த கஃபேக்குள் நுழைந்தாள். வழக்கமாக மாலையில் தன் முகத்தைக் கழுவிவிட்டுத் தான் ஆபிசில் இருந்து வெளியேறுவாள். அன்று ஏனோ அவளுக்கு அவன் முன் அழகு பதுமையாகக் காட்சியளிக்கத் தோன்றவில்லை. ஒருபுறம் தன்னைச் சந்திக்க வருபவனிடம் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லத் தோன்றினாலும் காலை சரண்யா அவளிடம் பேசியது அவளை யோசிக்க வைத்திருந்தது. சமயங்களில் நமக்காக யோசிப்பதைக் காட்டிலும் நம் பிரியத்துக்கு உரியவர்களின் மகிழ்ச்சிக்காக யோசித்தே தீர வேண்டுமே. அவள் எண்ணமெல்லாம் பின் நோக்கிச் சென்றது.

அன்று தன்னுடைய சகாக்களோடு கஃபேக்குள் வந்தவன் தனக்கு எதிர் இருந்த மேஜையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவன் தோழனுள் ஒருவன் அவனிடம்,

"மச்சி என்ன வீட்ல கல்யாணத்துக்கு பெண் பார்க்கலாம்னு சொல்லியும் எந்த ரியாக்சனும் கொடுக்கலையாமே? அப்பா கூப்பிட்டு இருந்தார். என்னடா யாரையாச்சும் லவ் பண்றயா?" என்று ராகமாய் இழுக்க, நிதினின் கண்களும் அன்று அவள் மீது மோதிய இடத்தைப் பார்க்க நிதினின் அடுத்த செயலை யூகித்தவள் அவனுக்கு முதுகை காட்டியவாறு திரும்பி அமர்ந்தாள். அவள் எண்ணப்படியே நிதினும் அடுத்ததாக அவள் இருந்த மேஜையைப் பார்த்தான். அதை தன்னுடைய செல் போன் கேமெராவின் மூலம் வீனஸும் பார்த்தாள். ஒருகணம் அந்த மேஜையைப் பார்த்தவன் தன் நண்பனின் புறம் திரும்பி எதையோ சொல்லிவிட்டு அவளை நோக்கி நெருங்க இங்கே வீனஸுக்கு இதயத்தில் தேவிஸ்ரீ பிரசாத் பி ஜி எம் வாசித்துக்கொண்டிருந்தார். டால்பி சௌண்டில் காதைக் கிழிக்கும் சப்தம் அவள் செவிகளிலே எதிரொலித்தது.

"வீனஸ், ரொம்ப சிரமப்பட்டு ஒளிஞ்சிக்க வேண்டாம் ப்ளீஸ்" என்ற அவன் குரலில் அசடு வழிந்தவள் நொடியில் முகத்தை நார்மல் ஆக்கி எதுவும் நடக்காதது போல் ஒரு பார்வை பார்த்தாள்.

"என்னங்க என்னை மறந்துட்டீங்களா? பத்து நாள்ல என்னை மறக்குற அளவுக்கா நம்ம மீட்டிங் இருந்தது? எனக்கென்னமோ உங்களுக்குள்ள ஒரு சஞ்சய் ராமசாமி குடியிருக்கார்னு நினைக்குறேன். பெட்டர் கன்செல்ட் எ டாக்டர்" என்று அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

"அப்படியெல்லாம் இல்ல" என்று அவள் மொழிந்ததில் சிரித்தவன்,

"அப்பறோம் ட்ரீட் எங்க?" என்றதற்கு அவள் விழிக்க,

"அன்னைக்கு நீங்க தான் முதல் கேண்டிடேட்டா உள்ள நுழைஞ்சிருக்க வேண்டியது. எப்பயுமே இன்டெர்வியூல முதல் ஆளா உள்ள போகக்கூடாது. ஏன்னா உங்களோட பெர்பார்மென்ஸ கம்பேர் பண்ண ஆள் இருக்க மாட்டாங்க. அன்னைக்கு என்னால தான் நீங்க நாலாவது ஆளா உள்ள நுழைஞ்சிங்க. அது போக நான் செலெக்ட் செஞ்ச டிரஸ் போட்டதால் தான் உங்களுக்கு வேலை கிடைச்சது. உள்ள நுழையும் போது நான் கொடுத்த ஜூஸ் குடிச்சிட்டுப் போனீங்க. ஒருவேளை நான் கூட உங்களோட லக்கி சார்மா இருந்திருக்கலாம். சோ நீங்க எனக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணும்" என்று நிறுத்த,
"உள்ள என்னை இருபது நிமிஷம் இன்டெர்வியூ பண்ணாங்க. அல்மோஸ்ட் பதினஞ்சு கொஸ்டின்ஸ் கேட்டாங்க. நான் சொன்ன பதிலை வெச்சு தான் எனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு. சோ நீங்க ஒன்னும் என் லக்கி சார்ம் இல்ல. அண்ட் உங்களால் தான் அன்னைக்கு நான் என்னோட பேவோரைட் டிரஸ் போடாம உள்ள போனேன். ஒன் என் லக்கி நம்பர். சோ எப்படிப் பார்த்தாலும் நீங்க எனக்கு எந்த நல்லதும் செய்யல. இன் பேக்ட் நீங்க எனக்கு கெடுதல் தான் செஞ்சு இருக்கீங்க" என்று அவளும் பதிலளிக்க,
"ஹ்ம்ம் வேலிட் பாயிண்ட் தான். இருந்தாலும் அன்னைக்கு நான் உங்க மேல மோதிட்டு அப்படியே விட்டிருந்தா உங்களால் ஐ மீன் உன் லக்கி நம்பர் டிரஸ் நாலேஜ் இதெல்லாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்குமா? ஓகே உங்களுக்கு ட்ரீட் கொடுக்க விருப்பமில்லைனு எனக்குத் தெரிஞ்சிடுச்சு. பட் ஒன் திங், நான் உங்களை மறக்கல. மறக்கவும் போறதில்லை. ஐ லைக் யுவர் கான்பிடென்ஸ் அண்ட் ஏட்டிடியூட். ஆல் தி பெஸ்ட்" என்று நிதின் சென்று விட அவனது இந்தப் பிடித்தமில்லாத பேச்சு அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவனுடன் அன்று பேசிய சில நிமிடங்களில் அவனது குணத்தை ஓரளவுக்கு அவள் அறிந்திருந்தாள் தான். ஆனால் அவன் முன் திறமையை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் அவள் பேசியது அவளுக்கே வருத்தமாக இருந்தது. அன்றைய நிலையில் அவளுக்கு இந்த வேலை மிகவும் அவசியமாகிப் போனது. ஒருவேளை அன்று இவன் சாரியுடன் கடந்திருந்தால் என்று நினைக்கையில் வீனஸுக்கு மனம் பதைத்தது.

அதன் பின் வந்த நாட்கள் எப்போதும் போல் போனது. அவளுக்கு திவ்யா என்ற தோழி கிடைத்துவிட அவளுடன் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தாள் வீனஸ். ஆனால் அவள் முன் தினம் ஒருமுறையேனும் நிதின் தோன்றிவிடுவான். ஆனால் ஒரு நாளும் அவளிடம் பேச அவன் முனைந்ததே இல்லை. அன்று நிதினின் பிறந்த நாள் என்பதால் எல்லோரும் அவனுக்கு கேக் வெட்ட முயல அவளும் அவனுக்கு வாழ்த்துச் சொன்னாள். அதன் பொருட்டு அவளை மாலை ட்ரீட்டுக்கு அழைத்தான் நிதின். அவளுக்கு அவனுடன் செல்ல வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அவன் கர்டெசிக்காக கூப்பிட்டது போலவே அவளுக்குப் பட மாலை ஹாஸ்டெல் செல்ல முயன்றாள்.

"வீனஸ், எங்க போறீங்க? சிக்ஸ் தேர்ட்டிக்கு எல்லாம் yyyy ரெஸ்டாரெண்டுக்கு வந்துடுங்க. நீங்க வந்தா எனக்கு ஹேப்பியா இருக்கும்"

"இல்ல, எனக்கு கொஞ்சம் வொர்க்" என்று அவள் மறுக்கும் முன்,

"இது பர்த் டே பாயோட விஷ். இதுக்கு மேல உங்க இஷ்டம்" என்று அவன் சொல்ல அவன் கொடுத்த ட்ரீட்டுக்கு சென்றாள் வீனஸ்.

இரவுவரை கதை பேசி உண்டு முடித்தவர்கள் வீட்டிற்குச் செல்ல வீனஸை அவனே டிராப் செய்தான். அவளால் மறுக்க முடிந்தாலும் மறுக்க விரும்பாமல் அவனுடன் பயணித்தவளிடம்,

"வீனஸ் நான் ஒன்னு கேக்கவா? ஒருவேளை நான் இப்போ உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணா உங்களோட ரியாக்சன் என்னவா இருக்கும்?" என்றதில் அவள் அதிர,

"யோசிச்சு சொல்லு. நான் காத்திருக்கேன்... அப்பறோம் அன்னைக்கு நீ என்னை போட்டோ பிடிச்சு ரசிச்சதெல்லாம் வேற லெவல். இதுவே ஒரு பையன் செஞ்சு இருந்தா அது ஹராஸ் மென்ட். ஆனா பொண்ணுங்க செய்யலாம் இல்ல?" என்று மந்தகாச புன்னகை ஒன்றைச் செலுத்தியவன் அங்கிருந்து சென்றிருந்தான். அதன் பின்னும் நிதின் அவளை அநாவிஷயமாக தொந்தரவு செய்யவில்லை. எப்போதாவது அவளுடன் விளையாட்டாக வம்பிழுப்பான். அவளுக்கு 'பதுமை' என்று செல்லமாகப் பெயரும் வைத்தான். பதுமை என்றால் பொம்மை என்று அர்த்தம். அவளுக்குத் தெரியாததை விளக்கும் வேளையிலும் பிறருடன் அவள் உரையாடும் வேளையிலும் தஞ்சாவூர் பொம்மை போல் நளினத்தோடு அவள் தலை அசைப்பாள். அது அவளது ட்ரேட் மார்க் முத்திரை. அதைக் கவனித்தவன் அவளுக்கு பதுமை என்று செல்லப் பெயரும் வைத்தான். இந்தச் சமயத்தில் தான் வீனஸின் தோழி திவ்யா தங்கள் கொலீக் விமலுடன் நெருங்கிப் பழகி இருக்க அதன் காரணமாக அவள் கர்ப்பமாகி இருந்தாள். விஷயத்தைக் கேள்விப் பட்டதில் இருந்து வீனஸுக்கு மனம் ஆறவே இல்லை. விமல் பார்ப்பதற்கு மிகவும் கண்ணியமானவன் போல் தான் இருப்பான். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவன் வெகு சுலபமாக அபார்ட் செய்து விடுமாறு சொல்ல ஒருவாரமாக வீனஸ் மனவுளைச்சலில் இருந்தாள். பிறகு விமலிடம் பேசும் விதத்தில் பேசவும் அவன் பயந்து சரண்டர் ஆகியிருந்தான். இந்தச் சமயத்தில் அவனால் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் சிறிது காத்திருக்குமாறும் அவன் சொல்ல வீனஸ் மிரட்டியதால் விடுமுறை எடுத்து ஊருக்குச் சென்றிருந்தான் விமல். அன்று திவ்யாவின் நிலையைப் பற்றிய யோசனையில் மூழ்கியிருந்த வேளையில் தான் வழக்கம் போல் நிதின் அவளைச் சீண்ட விமல் மீதிருந்த கோவத்தை நிதின் மீது காட்டிவிட்டாள் வீனஸ். சில மாதங்களாக நிதின் வேறொரு ப்ராஜெக்டில் பிசி ஆனதால் வீனஸிடம் அவனால் பழைய படி பேச முடியாமல் போயிருந்தது. அன்று காலை வீனசிடம் ஆவலாகப் பேச வந்தவனை கஃபேட்டேரியாவில் எல்லார் முன்பும் திட்டிவிட்டாள் வீனஸ். அதில் மனமுடைந்தவன் விடுமுறை எடுத்து சென்றிருக்க, அதன் பின் வந்த நாட்களில் அவனது ஒதுக்கத்தைத் தாங்க முடியாமல் தவித்தவளுக்கு அப்போது தான் அது காதல் என்றே விளங்கியது.

இன்று தன்னை பெண்பார்க்க வருபவனுக்காகக் காத்திருந்த வீனஸின் நினைவு கடந்த காலத்தில் வியாபித்திருக்க அவளது செல் போன் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள் அழைப்பது சுப்பு என்றதும்,

"சொல்லுங்கப்பா. நான் வந்து இருபது நிமிஷம் ஆகப்போகுது. இன்னும் ரெண்டு நிமிஷம் தான் டைம். இல்லைனா" என்று முடிக்கும் முன்னே அங்கே வந்துகொண்டிருந்த கௌதமைக் கண்டு அதிர அதற்குள் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் கௌதம்.

"சாரி சாரி... எக்ஸ்ட்ரீம்லி சாரி. ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன் வீனா" என்றதும்,

"அப்பா கௌதமையா என்னை மீட் பண்ண சொன்னிங்க?" என்று வீனஸ் குரல் உயர்த்தும் முன் அவளிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கியவன்,

"அங்கிள், நான் பார்த்துக்கறேன்" என்று அழைப்பைத் துண்டித்தவன்,

"யாரோ ஒரு எக்ஸ பார்த்துப் பேச தைரியமா வந்த நீ அது நான்னு தெரிஞ்சதும் ஏன் இப்படி ஷாக் ஆகுற வீனா?"

வீனஸின் நினைவுகள் அனைத்தும் பின்னோக்கிச் சென்றது. நம் வாழ்வில் சில நிகழ்வுகள் நமக்கு முன்பு நடந்தது போலவே தோன்றும் தானே? அதற்குப் பெயர் தேஜாவு என்று முடிவிலியில் நான் பெரிய விளக்கமே கொடுத்திருப்பேன். ஆனால் இதுபோலொரு தேஜாவு யார்வாழ்விலும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணுமளவுக்கு வீனஸின் வாழ்வில் நடந்தது தான் கௌதமுடனான சந்திப்பு.

தற்போது சென்னையில் தான் பணிபுரியும் அதே நிறுவனத்தில் இன்டெர்வியூவுக்காக வந்திருந்த கௌதமை நிதின் எவ்வாறு வீனஸிடம் சந்தித்தானோ அதே போலொரு சந்திப்பை எதிர்கொண்டாள் வீனஸ். அவனது வெள்ளை நிற சட்டையை காஃபி நிற சட்டையாக மாற்றிவிட்ட வீனஸை அவன் திட்டும் முன்னே அவன் கரம் பிடித்து அவளுடன் அழைத்துச் சென்றவள் அவனுக்கு ஒரு சட்டையை வாங்கிக்கொடுத்து அதே போல் தன்னுடைய இன்புளுவென்ஸ் வைத்து முதலில் இருந்த அவனது வரிசையை ஐந்தாவதாக மாற்றி இந்நிறுவனத்தில் பணியில் சேர்க்க உதவினாள் வீனஸ். அதும் சரியாக ஐந்து வருடம் கடந்து அதே மாதம் அதே நாளில் நிகழ்ந்த அந்நிகழ்வை வீனஸால் அத்தனை சுலபமாக கடந்துவிட முடியவில்லை.

இதற்கிடையில் ஒருநாள் அவளிடம் தன்னுடைய காதலையும் தெரிவித்திருந்தான் கௌதம். அந்த நொடி அங்கேயே மயங்கியும் சரிந்தாள் வீனஸ். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தான் சுப்புவின் மூலமாக வீனஸின் வாழ்வில் நிகழ்ந்ததைத் தெரிந்துகொண்டான் கௌதம்.

பலமுறை நிதினிடம் பேச முயன்றவள் அவனது பாரா முகத்தில் சரிவர சாப்பிடாமல் உடல் நிலை குன்ற திவ்யாவின் மூலமாக அறிந்துகொண்ட நிதின் அவளைச் சந்திக்க வந்தான். அப்போது தான் தன்னைப் பற்றியும் தன் பெற்றோர்கள் பற்றியும் நிதினிடம் உரைத்தாள் வீனஸ். ரத்தினம் தன்னை எவ்வாறு வளர்த்தார் என்றும் தன்னுடைய பின்புலத்தையும் சொன்னவள் தன் தாயின் தற்போதைய நிலையைச் சொல்ல அவளுடைய பயத்தை அறிந்துகொண்ட நிதினுக்கு அவளைப் புரிந்துகொள்ளாமல் போன தன் மீதே வெறுப்பு உண்டானது. அதன் பின் ரத்தினமும் சரண்யாவும் அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட கல்யாண கனவுகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள் நிதினும் வீனஸும். அவர்களின் காதல் விஷயம் அறிந்த அவர்கள் கொலீக் எல்லோரும் அவர்களை கலாய்த்தும் கிண்டலும் செய்ய திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டது.
எல்லாம் நன்றாகவே போயிருந்திருக்கலாம். பாராசூட்டிங் மீது தீராத மோகம் கொண்ட நிதின் அந்த நாளில் மகிழ்ச்சியாக பறந்துகொண்டிருந்த வேளையில் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு தவறால் பத்தாயிரம் அடியில் இருந்து நொடியில் விழுந்து அவள் கண்முன்னே இறுதி மூச்சை விடாமல் இருந்திருந்தால் வீனஸின் வாழ்க்கை என்றோ நிறைவடைந்திருக்கும். அந்த அதிர்ச்சியில் மயங்கிய வீனஸ் கண்விழிக்கவே நாட்கள் பல ஆயின. அதற்குள் இந்த அசம்பாவிதத்தால் சரண்யா மனதளவில் அதிகம் உடைந்துபோக இன்று அது அல்ஸைமர்ச்சாக மாறிவிட்டது.

"இப்போ என்ன முடிவெடுத்திருக்க வீனா? இத்தனை வருஷமா உன் வாழ்க்கை மாறாதனு உனக்காகவே காத்திருக்கும் உன் அப்பா அம்மாவுக்கு இனி அது எப்போதும் மாறவே போகாதுனு சொல்லப்போறியா? சுப்பு அங்கிள் பாவம் வீனா. அவங்களை விட சரண்யா ஆண்ட்டி ரொம்பவும் பாவம். உனக்கென்ன அவங்களை பத்திரமா பார்த்துக்கணும் அவ்வளவு தானே? இங்க உனக்கொரு ப்ராமிஸ் பண்ணுறேன் வீனா. எந்தச் சூழ்நிலையிலும் உன் அம்மா மாதிரி நான் சுயநலமா நடந்துக்கவே மாட்டேன். கண்ணு முன்னாடியே தவமிருந்து பெத்த அவங்க ஒரே மகனான நிதினை பறிகொடுத்த போதும் அவங்க பையன் உயிருக்குயிரா நேசிச்ச பொண்ணை தங்களோட பொண்ணு மாதிரி பாத்துகிட்டு அவளுக்கு ஒரு நல்லது நடக்கனும்னு ஆசைப்படுறாங்களே அவங்களை அவங்க மகன் நிதின் இடத்துல இருந்து நான் பார்த்துப்பேன் வீனா. நானும் சின்ன வயசுலயே அம்மாவை இழந்தவன். என் அப்பா எனக்கு ஒரு பிரென்ட் மாதிரி. கண்டிப்பா அவங்களுக்கும் நான் ஒரு மகனா இருப்பேன் வீனஸ். எப்படி ஆசிரமத்துல வளர்ந்த உன்னை உங்க அப்பா ரத்தினவேல் தத்தெடுத்து வளர்த்து உனக்கு எல்லாம் செஞ்சாரோ அப்படி ஒரு ஆண்மகனா நான் இருப்பேன் வீனஸ். ரொம்ப வருஷம் குழந்தை இல்லாத உன் அப்பா அம்மாக்கு நீ போன உடனே ஒரு பையன் பிறந்ததும் உன் அம்மா உன்னை ஒதுக்கி அவங்க பையனுக்கு ஆதரவா மாறி நீ கடைசி வருஷம் இன்ஜினியரிங் படிக்கும் போது உன் அப்பா இறந்த உடனே உன் தம்பியும் அவன் தாய்மாமாவும் உன்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பி அன்னைக்கு அந்த இன்டெர்வியூ உனக்கு அவசியம்னு இருந்த சூழ்நிலையில நிதின் உன்கூட இருந்த மாதிரி உங்க மூணு பேர் வாழ்க்கையிலும் கடைசி வரை நான் இருப்பேன் வீனஸ். கொஞ்சம் யோசிச்சு பாரு, இருபத்தி ஒன்பது வருஷம் ஆசையா வளர்த்து நிதின் மேல எவ்வளவு கனவுகளைச் சுமந்து வாழ்ந்த சுப்பு அப்பாவும் சரண்யா அம்மாவும் இழந்ததை விடவா நீ அதிகம் இழந்துட்ட? மருமகளா உன்னை பார்க்க ஆசைப்பட்ட அவங்களே உன்னை மகளா பார்க்கும் போது நீ அவங்களுக்கு வெறும் மருமகளா மட்டுமேவா இருக்கனும்னு ஆசைப்படுற? நல்லா யோசிச்சு முடிவெடு வீனா. நான் உனக்காகக் காத்திருப்பேன். பை" என்று கௌதம் சென்றுவிட,
"பதுமையே வீட்டுக்குப் போய் இந்த மேரேஜுக்கு எஸ் சொல்லு. இது பர்த் டே பாயோட விஷ். நீ எஸ் சொன்னா எனக்கு ஹேப்பியா இருக்கும். இதுக்கு மேல உன் இஷ்டம் ..." என்று காற்றில் ஒரு குரல் அசரீரித்ததாய் வீனஸுக்குள் ஒரு பிரக்ஞை.

நானும் நீயும் காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்த காற்றே மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்...
 
கனமான மனதில் சுகமான முடிவு.... ? ? ?

வாழ்த்துக்கள் bro ....
மிக்க நன்றி சகி?? இன்னும் ரெண்டு இருக்கு. நாளைக்கு ஒன்னு அப்டேட் கொடுக்குறேன்.
 
சூப்பர் ப்ரோ ??

ஆமா எங்க உங்கள இத்தன நாளா ஆளக் காணோம்..... எங்க போனீங்க?? நானும் ஒரு வாரமா கேக்கணும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன் அதுக்குள்ள நான் பிஸியாகிட்டேன் ??

அந்தக் கதை வேற அப்படியே நிக்குது ??
 
சூப்பர் ப்ரோ ??

ஆமா எங்க உங்கள இத்தன நாளா ஆளக் காணோம்..... எங்க போனீங்க?? நானும் ஒரு வாரமா கேக்கணும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன் அதுக்குள்ள நான் பிஸியாகிட்டேன் ??

அந்தக் கதை வேற அப்படியே நிக்குது ??
hereafter there will be regular uds... thank you??
 
Top