Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்7

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 7

படுத்திருந்தவன் எழுந்து “என்ன யோசிக்கிற, தூங்குனு சொன்னேன்”.

நிர்மலா, “பேய் எதும் உங்கள பிடிச்சுருச்சா, வித்தியாசமா பேசுறீங்க”.

நிம்மிய அம்மா, அப்பாயி தவிர யாரும் ‘டி’ போட்டு பேச மாட்டாங்க. அப்பா, தாத்தா, அண்ணன் எல்லாரும், ‘சின்னக்குட்டி, பாப்பா’ அப்படினுதான் கூப்பிடுவாங்க, இவன் இப்படி உரிமையா வேற பேசவும் என்ன சொல்றதுனே அவளுக்கு உண்மையாகவே தெரியல.

பொதுவாக, கணவன்/மனைவி என்ற சொந்தம் ஒரு பெண்ணின்/ஆணின் வாழ்வில் வந்து விட்டால், அவனுக்கான/அவளுக்கான இடம் வேறுதானோ, திருமண பந்தம் ஆணின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை விட பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களே அதிகம் எனலாம். ஒரு விதையை விதைத்தால், அதிலிருந்து உருவாகும் ஒரு மரம் போல கணவன் என்றால், விதை தெளித்து நாற்றை வளர்த்து, அதனை பிடுங்கி வேறொரு இடத்தில் நடவு செய்யப்படும் பயிர் போல மனைவி என்பது மிகையாகாது.

கணவனை/மனைவியை வைத்தே அவ்வீட்டிற்கு வரும் பெண்ணைக்/ஆணைக் கையாளுவர் அவ்வீட்டினர், அதனால் பொதுவாக கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குள் விட்டு கொடுத்தும், அடுத்தவரிடம் விட்டு கொடுக்காமலும் வாழ்ந்தால் அவர்கள் வாழ்க்கை கட்டாயம் சிறப்பாக இருக்கும்.

இது புரிந்தோ என்னவோ பீட்டர், தன் வீட்டினரிடம் அவளை விட்டுக் கொடுக்காமல் பேசினான். ‘போகிறேன்’ எனக் கூறி மாடிப்படி ஏறும் பொழுதே பீட்டர் பேச ஆரம்பித்ததால், அவன் பேசிய அனைத்தையும் கேட்ட நிர்மலாவுக்கு, ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு, என்னவென்று சொல்ல முடியாதபடி அவளுக்கு தோன்றியது. அது அன்பா, பாசமா, காதலா என்றால் தெரியாது, ஆனால் உணர்ந்தாள்.

பீட்டர், “ம்ம்ம்…கொஞ்ச நாளா மோகினி பிசாசு பிடிச்ச மாதிரியே இருக்கு” என்றதும்,

நிர்மலா, “ஐய்யய்யோ, இப்பவே நான் வேற ரூம் போறேன்” என கதவருகில் நகர்ந்தவளை, ஒரு எட்டில் எழுந்து பிடித்தவன், “ஆமா, பேய், பிசாசுன்னா அவ்வளவு பயமா?” என பிடித்த கையை விடாமல் கேட்டவன், “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல” என்றான்.

நிர்மலா, “இருக்கா, இல்லயானு எனக்கு தெரியாது, ஆனா எங்க ஊருல நிறைய கதை கதையா சொல்லுவாங்க, அதக் கேட்டு பயமாயிருக்கும், அதனால இருட்டுன்னாலும் ரொம்ப பயம், கூட ஆட்கள் இருந்தா எதுக்கும் பயப்பட மாட்டேன்”.

‘லூசு, இவளதான் மோகினினு சொல்றேன் தெரியாம கதையளக்குறாளே, படிக்கதான் தெரியும் போல, இவள வெச்சுகிட்டு, உன் பாடு ரொம்ப கஷ்டம் போலடா’ என மனதில் நினைத்த பீட்டர், “இப்படியே பேசிட்டு இருந்தனு வை, நாளைக்கு நீ ஸ்கூல் போன மாதிரிதான்” என்றான்.

நிர்மலா உடனே, “ஐய்யோ, காலையில சீக்கிரம் கிளம்பனும், எனக்கு நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு, பேசாதீங்க” எனக் கூறி பெட்டில் படுத்து கொண்டாள்.

ஒரு வாரம் கடந்த நிலையில் ஒரு நாள், சனிக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே, ஒரு பெண்ணின் குரல், “அத்த, என்னனு கேளுங்க, கொஞ்சக் கூட பிகேவியரே இல்ல, ரெண்டுல ஒன்னு பாத்தறனும் வாங்க” என அழைத்து வந்தவளை பாத்து கொண்டே வந்து ஷோபா அருகில் சென்று நிர்மலா, “ரெண்டு பேரும் ஜம்முனு உக்காந்திருக்கீங்க, இடம் கொடுக்கலாம்ல, நகருங்க” என்றாள். ஏனெனில் ஷோபாவில் பீட்டரும் பேட்ரிக்கும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இன்று அனைவரும் வீட்டில் இருக்க இவளுக்கு மட்டுமே பள்ளி இருந்தது. இருவருக்கும் நடுவில் அமர்ந்தாள்.

அப்போது ஜோனா - செல்லியின் தம்பி மகள், “அத்த, இந்த மேடம்தான் மனிதாபிமானமே இல்லாம, நம்ம செலின் அக்கா பையனத் திட்டுனது, நம்ம வீட்ல வேலை செய்றாங்கன்றதுக்காக அவங்க நம்ம அடிமையில்ல”.

பேட்ரிக், “என்ன ஜோ, யார சொல்ற, என்ன விஷயம்?”.

செல்லி, “அது இந்த நிர்மலாதான் செலின் பையன வீட்டுக்கு வெளிய வச்சு திட்டுட்டு இருந்திருக்கா, அத ஜோனா பாத்துட்டு வந்து என்ன, ஏதுனு விசாரிக்க சொல்றா, வேற ஒண்ணுமில்ல”.

நிர்மலா, ‘ஆமா, விசாரிச்சு தண்டன கொடுத்துட்டாளும், நாங்க அப்படியே ஏத்துகிட்டாளும், வேல வெட்டி எல்லாம் கிடையாதா இவங்களுக்கு’ என மிக மெதுவாக தான் முணுமுணுத்தாள், ஆனால் அருகில் இருந்த பீட்டருக்கும் பேட்ரிக்கும் கேட்கவும் இருவரும் அவளை முறைத்து விட்டு அந்த பக்கம் திரும்பி சிரித்தனர்.

நிர்மலா, “செலின் ஆன்டிக்கு பையன் இருக்கானா?, எனக்கு சொல்லவேயில்ல”

ஜோனா, “ஏய், என்ன பொய் சொல்றீயா?”.

நிர்மலா, “நா ஏன்டி பொய் சொல்ல போறேன்?”.

ஜோனா, “என்ன ‘டி’ போட்டு பேசுற, பாருங்கத்த, நா இப்பவே செலின் அக்கா பையன வர சொல்றேன்” எனக் கூறி, “செலின் அக்கா போன் பண்ணி உங்க பையன வர சொல்லுங்க”.

நிர்மலா, “மரியாதை கொடுத்தா, மரியாதை கிடைக்கும், give and take policy தான்”.

ஜோனாவை பார்த்த செலின், “எதுக்குங்கமா, பரவாயில்ல, விட்டுருவோம்”.

நிர்மலா, “ஆன்டி, வர சொல்லுங்க, நல்லா பொழுது போகும்ல” எனக் கூறவும், ‘ஐய்யோ, இவளப் பத்தி தெரியாமா இந்த ஜோனா வேற ஏழரையக் கூட்றாளே’ என மனதில் நினைத்தது சாட்சாத் செல்லியேதாங்க.

செலின் போனை, வாங்கி ஜோனா பேசிய சிறிது நேரத்திலேயே வீட்டிற்குள் நுழைந்தவனைக் கண்ட நிம்மி, ‘அட இவனா, மாட்டினா’ என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

இங்கு செலினும் அவர் கணவர் ராஜூம் முறையே சமையலும் தோட்டவேலையும் பார்க்கின்றனர். அவளுக்கு ஜாய், நிவிஷா என இரு பிள்ளைகள். இங்கு வேலைக்கு வருமுன் இவர்கள் வேலை சென்றுவிடுவதால் பிள்ளைகள் தனியாக இருக்க வேண்டாமென்று, செலினின் தங்கை வீட்டில் விட்டு வளர்த்தனர், அதுவே இன்று வரை தொடர்கிறது. இருவரும் நம்ம நிம்மி ஸ்கூல்லதான் 12 மற்றும் 8ம் வகுப்பில் படிக்கின்றனர். இது தெரியாம ஜோனா வழிய போய் சிக்கிட்டாளே!.

ஜோனா, “ஜாய், அதோ அங்க இருக்கவங்க உன்ன திட்டுனாங்க தான, தைரியமா எல்லார்கிட்டயும் சொல்லு”.

நிர்மலாவைப் பார்த்த ஜாய் ‘இவங்க இங்க என்ன பண்றாங்கனு தெரியலயே, அப்பா, அம்மாட்ட நம்மளப் பத்தி தான் பேச வந்திருப்பாங்களோ’ என நினைத்து கொண்டிருந்தவனிடம் ஜோனா கேட்கவும் அவன், “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்கக்கா” என்றான்.

ஜோனா, “டேய், பயப்படாம சொல்லு, நாங்க எல்லாம் இருக்கோம்ல”.

நிர்மலா எகத்தாளமாக, “ஆமா, ரொம்ப பயந்தவன்தான் இவன், இங்க என்ன பண்ற, உங்க அம்மா, அப்பாவ பாக்க வந்திருக்கேனு கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன, உங்க அப்பாவ வர சொல்லு” எனக் கூறவும், ஜாய் முழிக்கவும், ராஜூவும் அவர் மகள் நிவிஷாவும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அண்ணனைத் தேடி கொண்டு வந்த நிவிஷா, வீட்டிற்குள் இருந்த நிர்மலா முன் அம்மாவும் அண்ணனும் நிற்பதைப் பார்த்தவுடன் தந்தையை அழைத்து வந்திருந்தாள். அவளுக்கு மற்றவர்களைவிட அவளது பள்ளி ஆசிரியைதான் முதலில் கண்ணில்பட்டாள். அதனால்தான் ராஜூவின் வருகை.

வீட்டிற்குள் தந்தையுடன் வந்த நிவிஷா நிர்மலாவிடம் சென்று, “டீச்சர், குட் ஈவ்னிங்” என்றாள்.

நிர்மலா, “குட் ஈவினிங், நிவி, இன்னைக்கு ஸ்கூல் வரல நீ, என்ன விஷயம், ஜாய் இங்க வா”.

ஜாய், “டீச்சர்…” என்றவன் தன் தாய் தந்தையைக் காட்டி, “இவரு எங்க அப்பா, இவங்க அம்மா” என்றான்.

ராஜூவிடம் திரும்பிய நிர்மலா, “அங்கிள், உங்க பையன்தான் இவனு தெரியாது, தெரிஞ்சிருந்தா, குச்ச எடுத்து ரெண்டு அடிய குடுத்துருப்பேன், என்ன நெஞ்சழுத்தம் இவனுக்கு, இன்னைக்கு உங்க பையன்கிட்ட உன் பெற்றோரைக் கூட்டிகிட்டுதான் ஸ்கூல் வரனும்னு சொன்னா, லீவ் போட்டுட்டு ஊர சுத்திக்கிட்டு இருக்கான், விஷயத்த சொன்னானா உங்க பையன்”.

செலின், “ஸ்கூல பசங்கக் கூட சண்ட, கிளாஸ் டீச்சர் உங்கள வரச் சொன்னாங்கனு சொன்னான், ஆனா இங்க எல்லாரும் வீட்டில இருந்ததுனால வேலையா இருந்தால வர முடியல, அதனால லீவ் போட சொன்னோம்”.

நிர்மலா, “வேலை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு பெத்த பிள்ளைகளும் முக்கியம், கூட படிக்கற பசங்களோட சண்ட போட்டுட்டு அலையறான்ங்க, நீங்க கட்டாயம் என்ன வந்து ஸ்கூல்ல பாக்கனும், இத நான் அவனோட வகுப்பாசிரியையா சொல்றேன், சரி ஜாய், நிவி ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க” எனக் கூறி அவர்கள் போனதும், “அங்கிள், ஆன்டி, அவன் நல்ல பையன்தான், இந்த வயசுல ஹீரோ மாதிரி இருக்க பசங்க முயற்சி பண்ணுவாங்க, அது இயல்புதான், அந்த இயல்பை நாம சரியா புரிந்து கொண்டு வழிகாட்டினால் நல்லநிலைக்கு போவாங்க, இல்லன்னா என்ன ஆவாங்கனே சொல்ல முடியாது, அதனால அவன்கிட்ட பொறுமையாயா, அன்பா பேசி நல்லது கெட்டத எடுத்து சொல்லுங்க, இப்ப போயி திட்டி அடிக்கது மாதிரி எதும் செய்யாதீங்க”.

ராஜூ, “சரிங்க பாப்பா, அப்படியே செய்றேன்” எனக்கூறி வெளியேறினார்.

நிர்மலா, “என்ன ஜோனானா…மேடம், தலைல மசாலா இருக்கா இல்லையா?, தேவையில்லாம லீவ் போட்ட ஸ்டூடண்ட்கிட்ட கிளாஸ் டீச்சர், பேசுறது, சரியா,தப்பா?” என நக்கலடிக்க, பேட்ரிக், “தெரியலயேமா” எனக் கவுண்டர் கொடுக்க, பீட்டர் சிரிப்பதைப் பாத்து கடுப்பான ஜோனா, “அத்த, எனக்கு வேல இருக்கு, நா வரேன்” என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பி போனாள்.

பீட்டர் நிர்மலாவைப் பார்த்து, “வாய் உள்ளவன் பிழைச்சுக்குவான்றது உன் விஷயத்துல சரிதான் போல, எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிற உத்தேசம், ரூம் போய், ரெப்ரஷ் பண்ணு”.

நிர்மலா, “ம்ம்ம்… எப்ப பாத்தாலும் வேல வேலனு எல்லாரும் வீட்டுக்கே வர மாட்டீங்க, இன்னைக்கு அத்தன பேரும் ஜாலியா வீட்ல இருந்திருக்கீங்க, நா மட்டும் இல்ல”.

பீட்டர், “எப்பவாவது இந்த மாதிரி அமையறதுதான், பேசிட்டே இருக்காம போய் ரெப்ரஷ் ஆகு”.

அவள் தங்கள் அறையை அடைந்து, ரெப்ரஷ் ஆகி குளியலறையில் இருந்து வெளியே வரவும், பீட்டர் அறைக்குள் நுழைந்தான்.

அவனிடம் நிர்மலா, “கீழ, பழமொழி எல்லாம் சொல்லி என்ன வாயாடினு சொல்லாம சொல்றீங்களா” என்றாள்.

‘ஆஹா, எஃப்.எம் ஸ்டாட்டாயிடுச்சி போல’ என நினைத்த பீட்டர், “குட்டிம்மா, உனக்கு சப்போட் தான பண்ணினேன்”.

நிர்மலா, “அப்பப்ப வித்தியாச பேச ஆரம்பிச்சுறீங்க, என்ன புதுசா குட்டிம்மானு”

பீட்டர், “ஏதோ தோணிச்சு, இப்படி கூப்பிடனும்னு, வேற ஒரு பேர் கூட யோசிச்சு வச்சுருக்கேன், அத விடு, ஏன் உன்னை இப்படி கூப்டுறது பிடிக்கலயா?”

அவள் பதில் சொல்வதற்குள் அவன் மொபைல் அடிக்கவும் யாரென பார்த்தவன் போனை எடுத்து கொண்டு பால்கனி சென்றான். இவள் அங்கிருந்த துவைத்த துணிகளை கப்போட்டில் அடுக்கி வைத்தாள். அவள் வயிறு சத்தம் போடவும் சாப்பிட போகலாம் என நினைத்தவள், அவனைத் தேடி பால்கனி சென்று கதவைத் திறக்கவும், பீட்டர், “ஜென்சி, நா பிளான் பண்ணி, உனக்கு வீட்ட விட்டு போக ஹெல்ப் பண்ணினேன்தான், அதுக்காக நீ சொல்ற எல்லாத்தையும் செய்யனும்னு அவசியமில்ல” என்று திரும்பியவன் நிம்மி நிற்கவும், “சரி போன வைக்கிறேன்” என கட் பண்ணினான்.

நிர்மலா, “நீங்கதான் அவங்க வீட்ட வீட்டு போக காரணமா?”

பீட்டர், “அவ என்ன சின்ன பிள்ளையா, ஏன் அவளுக்கு போகத் தெரியாது பாரு, நா அனுப்ப, எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லனும்னு தேவையில்ல”

நிர்மலா, “எல்லாரும் நானும் ஒண்ணா, அப்ப நீங்க என்கிட்ட உண்மைய சொல்ல மாட்டீங்க, ஒன் சைடுடா லவ் பண்ணீங்களா?, அவங்க லவ் தெரிஞ்சு அவங்களாவது நல்லா இருக்கட்டும்னு தான் ஹெல்ப் பண்ணீங்களா?”.

பீட்டர், “ஏய், போதும் நிறுத்து, எதையாவது உளறிகிட்டு, வா சாப்பிட போகலாம்”

நிர்மலா, “நானா உளறேன், உண்மைய சொல்லுங்க”

பீட்டர், “முடியாது, நா முன்னாடி போறேன்” எனக் கூறி சென்றுவிட்டான்.

கடுப்பானாவள், சாப்பிடாம இருந்தா ஆளாளுக்கு காரணம் கேட்பாங்க என எண்ணி, வேகமாக, சாப்பிட்டு வந்தவள் பீட்டர் வருமுன்னே படுத்துக் கொண்டாள். அறைக்கு வந்த பீட்டர், ‘இவகிட்ட இப்ப உண்மைய சொல்லவேனானு நெனச்சாலும் விட மாட்டா போலயே, என்ன பண்றது’ என யோசித்தபடியே அவனும் உறங்கினான். அடுத்து வந்த நாட்களில் நிம்மி அவனைக் கண்டுக் கொள்ளாமல் நடமாட, பீட்டர் எவ்வளவோ முயற்சித்தாலும் அவள் பேச இடம் தராமல் நழுவினாள். ஒரு நாள் உணவு இடைவேளையின் போது, பீட்டரின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுக்கலாமா, வேண்டாமா என யோசித்தவள் எதற்கும் இருக்கட்டும் என போனை எடுத்தவளிடம் மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ தலைமையாரிசியரிடம் சென்று அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
 

Advertisement

Top