Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்6

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 6

காத்திருந்த அனைவரும் ஹாலிற்கு வந்துவிட, நம்ம நிம்மி பொறுமையா ரெஃப்ரஷ் செய்து, இப்பதான் மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்கிறாள். செல்லி, தன் வீட்டார் மட்டுமின்றி அருகில் இருக்கும் தன் நாத்தனார் மற்றும் கொழுந்தனார், வீட்டினரையும் அழைத்திருந்தார். அனைவரையும் பார்த்த உடனேயே நிம்மி மனதில், ‘பஞ்சாயத்தக் கூட்டிட்டாங்கய்யா, கூட்டிட்டாங்க’ என சினிமா பாணியில் நினைத்துக் கொண்டே, அவள் அம்மாச்சியின் அருகில் வந்து நின்றாள்.

நிர்மலா வந்ததும் செல்லி, “நாங்க பெரிய கம்பெனி வைச்சுருக்கோம், பிஸ்னசும் நல்லாதான் போயிட்டு இருக்கு. பணத்துக்கு என்ன குறைச்சல் இங்க, எதுக்கு வேலைக்கு போகணும், அவங்க வீட்ல இருக்கும் போது வேலைக்கு போன மாதிரி இப்பவும் போகணுமுனு இல்ல, நம் ஸ்டேட்டஸூக்கு வெளிய வேலப் பாக்குறது சரியா வராது, அதனால வேலைக்கு போகக் கூடாதுனு சொல்லுங்க, அத்த” என மாமியாரான மருமகள் தன் மாமியாரையும் சப்போட்டுக்கு அழைத்தார்.

ஆரோக்கியசாமியும், ஹென்றியும் சேர்ந்து சிறிய அளவில் சப்ஆர்டர் எடுத்து செய்துட்டு இருந்த நிலையில், ஒரு பேரல் செய்யும் நிறுவனத்தின் ஆர்டர் கிடைத்த பிறகு, அவர்களுக்கு ஏறுமுகம்தான். தற்போது பிறருக்கு சப்ஆர்டர் கொடுக்கும் நிலையில் கொண்டு வந்து, பிள்ளைகளிடம் முக்கிய பொறுப்பைத் தந்து, இவர்கள் விலகி நிற்கின்றனர், ஆனால் முழுவதுமாக அல்ல. இப்போது பீட்டரின் நிர்வாகத்தின் கீழ், பேட்ரிக்கும் டேனியலும் ஒன்றிணைந்து பணிபுரிகின்றனர். டேனியல் யாருனு பார்க்குறீங்களா?, ஹென்றியோட பையன்தான். ஹென்றி-லீமாக்கு இருபிள்ளைகள், மூத்தவள் செபியா, இளையவன் டேனியல். சரி அறிமுகம் போதும். விஷயத்துக்கு போவோம்.

ரொம்ப கூலா நிம்மி, “ஸ்டேட்டஸுன்னா என்ன, பணத்தை வெச்சி சொல்றீங்களா, இல்ல குடும்பத்த வச்சா, நீங்க எதப் பத்தி பேசுறீங்க”.

அக்ஸிலீயா, “இதென்ன தெரியாத மாதிரி கேட்குற, அதுசரி, உங்க வீட்ல தான் உன்ன வெறும் கையா அனுப்பிட்டாங்கள, அதான் புரியலனு நெனைக்குறேன்”.

நிர்மலா, “அப்படியா, உங்களுக்கு தெரியுமா, நா ஒண்ணும் இல்லாம வந்தேனு, அது சரி உங்க பொண்ணுதான் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே நீங்க அவங்களுக்கு என்ன செஞ்சீங்க, போனவங்கள தேடிப் போய் செய்தீங்களோ”.

செல்லி, ‘நாம எதுக்கு இங்க வந்தோம்கிறதயே மறந்து, அதததுங்க பேசி பிரச்சனைய மாத்தி விடுதுங்களே’ என நொந்து போனார்.

லீமா, “நிர்மலா, பெரியவங்ககிட்ட இப்படி பேசாத, உன் வேலைய பத்தி தான பேச்சு”.

நிர்மலா, “வாங்க, உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன், என்ன பெரியவங்ககிட்ட எப்படி நடந்துக்கனுமுனு உங்களுக்கு முதல தெரியுமா?, அப்படி தெரிஞ்சிருந்தா நீங்க ஏன் வீட்ட விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க”.

ரோஸ்லின், “நிம்மி, இப்ப எதுக்கு அதப்பத்தி பேசற”.

நிர்மலா, “அடடா, அன்னையர் திலகம்ல அம்மாச்சி நீங்க, எப்படி பெத்த பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தோட கடமை முடிஞ்சதுனு கலட்டி விட்டவங்க தான நீங்க”.

பொன்னுசாமி, “பாப்பா, அப்ப நடந்த பிரச்சனையால தான் பேச்சு வார்த்த இல்லனு உனக்கு தெரியுமுல, அப்பறம் எப்படி நாங்க அங்க வர போக இருக்கறது”.

நிர்மலா, “அதெப்படினு நீங்க உங்க சின்ன மருமகள்கிட்ட கேட்கலாமே, என்ன பாக்குறீங்க, நீங்கதா பொண்ணு மேல பாசமே இல்லாம இருந்தீங்க, ஆனா எங்க அப்பாயி மாசம் ஒரு தடவ, இல்ல உங்க வீட்டு பங்கனுக்கு முன்னாடினு அவங்கள பாத்து அவங்க பொண்ண சீராட்டினாங்க, ஏன் நானே அப்பாயிய சர்ச்சுல அவங்க பொண்ண பாக்க டிராப் பண்ணியிருக்கேன், இதெல்லாம் உங்க சின்ன பையனுக்கும் தெரிஞ்சுதுதான் நடந்தது, இது இல்லனு சொல்ல சொல்லுங்க”.

பீட்டர் அப்பாயி, “இது உண்மையா லீமா, நாந்தா குடும்பத்துக்குள்ள பிரச்சன வரக்கூடாதுனு என் பொண்ண பாக்காம இருந்துட்டனோ, எனக்கு தான் கூறில்லாம போச்சோ”.

நிர்மலா, “எங்க அப்பாயி, தாத்தா, அப்பால்லாம் நல்ல விதம்ங்கறதால தான் அம்மா சமாளிச்சாங்க, இல்லனா, அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க”.

ஆரோக்கியசாமி, “என் தங்கச்சி மேல பாச இல்லாமல்லா இல்லம்மா…”

நிர்மலா, “வேண்டாம் மாமா, நீங்க பேசாதீங்க, உங்க கண்ணுக்கு உங்க தம்பி தெரிஞ்ச அளவுக்கு எங்கம்மா தெரியலதான”.

ஹென்றி, “நிம்மிம்மா, அது அப்படியில்லடா..”

நிர்மலா, வேற எப்படி, வீட்டு பொண்ண சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வருவாங்களாம், அத ஏன்னு கேட்கக் கூடாது, கேட்டா தேவையில்லாத பேசி தங்கச்சி வீடுனு பாக்காம உறவை முறிச்சுக்குவாங்களாம், இது எந்த ஊர் நியாயமுனு தெரியலயே”.

பீட்டர் தாத்தா, “தப்புதான்ம்மா..”.

நிர்மலா, “தப்புதானு ஒரு வார்த்தையில சொல்றீங்க, ஆனா எங்கம்மா இழந்தது எவ்வளவு தெரியுமா, பெத்தவங்க பாசம் கிடைக்காம, கூட பொறந்த பொறப்புகளோட உறவு இல்லாம, பிறந்த வீட்டு சீராட்டல் கிடைக்காம, யாரும் இல்லாத மாதிரி எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க” எனக்கூறி லீமாவைக் காட்டி, “இவங்களுக்கும் இதெல்லாம் கிடையலனு சொல்ல முடியாது, இருந்தாலும் இவங்க செய்ததுக்கு இவங்க அனுபவிக்கலாம், ஆனா எங்கம்மாக்கு ஏன், அம்மாச்சி, நீங்க ஏன் எங்கம்மாட்ட பேச முயற்சிக்கல, உங்க பெரிய பிள்ளை தங்கச்சிய விட்டு, தப்பு செய்த தம்பிக்கு சப்போட் பண்ணுவாரு, நீங்களும் வாய மூடிட்டு இருப்பீங்க”.

செல்லி, ‘இவள விட்டா இன்னும் குறை சொல்லிட்டே போவா’ என நினைத்தவர், “எங்க ஆரம்பிச்ச பிரச்சனைய எங்க முடிக்கப் பாக்குற”.

‘அட, இவங்க வேற அப்ப அப்ப மாமியாருனு நிரூபிப்பாங்க’ என நினைத்த நிர்மலா, பொதுவாக நினைத்த விஷயத்தை சிரிச்சுகிட்டே சிலபேர் சொல்லிடுவாங்க, அந்த மாதிரி தான் நம்ம நிர்மலாவும், அதனால, ஹீரோ வசனம் பேசுற மாடுலேஷன்ல “எங்க வீட்ல படிக்க வச்சாங்கனு தெண்டமா படிக்காம, கஷ்டப்பட்டு படிச்சு, ஒரு மூணு டிகிரிய வாங்கி, கவர்மெண்ட் பரிட்சைக்கு நைட்டு பகலுனு பாக்காம கண்ணு முழிச்சு படிச்சு, அதையும் பாஸ் பண்ணி, வேலையில உட்கார்ந்தா ரொம்ப ஈஸியா வேலைக்கு போகாதனு சொல்லுவீங்களோ?” என்றாள்.

சிரிப்பை அடக்கிய டேனியல், ‘பேசறதுக்கே காசு கொடுக்கனும் போலனு நினைச்சா, என்னமா பேசுறாங்க’ என நினைத்தான்.

பேட்ரிக், “கவர்மென்ட் ஜாப்பா..”.

நிர்மலா, “ஆமா, காசு, பணத்துக்காக இந்த வேலைக்கு நா போகல, நா சுயமா, யாரையும் சாராம, என் படிப்ப வீணாக்காம இருக்க வேலைக்குப் போறேன், அதுமட்டுமல்ல எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சுருக்கு, இது என் சுயமரியாதை சம்மந்தப்பட்டது, அதனால, நா போகதான் செய்வேன்.”

செல்லி, “இங்க பாரு…”.

நிர்மலா, “ஏன் அம்மாச்சி, மாமியாருனு கொஞ்சமாவது கெத்து காமிக்கலாம்ல, எப்ப பாரு அடங்கி போறது, உங்க மருமகள்ட்ட பேசுவீங்களா, மாட்டீங்களா?”.

தாத்தா, “செல்லி, விடும்மா, பேத்திதான் ஆசைப்படுதுல, போகட்டும்”.

ஜென்னி, “அது சரி நீ என்ன வேலதான் பாக்குற”.

நிர்மலா, “அதுக்கூட தெரியாம வேடிக்க பாக்க வேண்டியது, நீங்களே கண்டுபிடிங்க, அப்பறம், எல்லாருக்கும் சொல்லிக்கறேன், எங்க வீட்ட பத்தி தெரியாம, நாங்க இப்படினு நீங்களே முடிவு பண்ணி பேசறீங்க, இங்க உள்ள உங்க எல்லாரப்பத்தியும் எனக்கு தெரியும், உங்களுக்கு எங்களப் பத்தி தெரியாதுனா தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாம குறை சொல்லக் கூடாது, இதுவே கடைசியா இருக்கட்டும்” எனக் கூறி “எனக்கு பேசி பேசியே டயர்டா ஆகிடுச்சு, நா ரூம் போறேன்” என எழுந்து சென்றாள்.

பேட்ரிக், “மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கு”.

செல்லி, “பீட்டரு, ஆனாலும் அவ அவ்வளவு பேசுனதுக்கு நீ ஒரு வார்த்த, பேசாம இருனு சொல்லலயே”.

பீட்டர், “ஏன் சொல்லனும், ஒரு கம்பெனிய எடுத்து நடத்துற நா, என் பொண்டாட்டி பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம கல்யாணம் பண்ணுவேனா”.

டேனியல், “என்னண்ணா, அப்ப எங்க வேலப் பாக்குறாங்கனு உங்களுக்கு தெரியுமா?”.

பீட்டர், “ஆமா, அதுக்கு முன்னாடியே அவ அண்ணன் என்னப் பத்தி, நா படிச்ச ஸ்கூல், காலேஜ், வேலப் பாத்த, பாத்துட்டு இருக்கற இடம்னு எல்லாத்தையும் டிடக்டிவ் வெச்சு விசாரிச்சிதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான், அப்பறம் தான் எனக்கு தோணிச்சு, அதனால நானு நிம்மி பத்தி தெரிஞ்சுகிட்டேன்”.

ஜென்னி, “மாமா, நீங்களும் டிடக்டிவ் வெச்சீங்களா”.

பீட்டர், “ச்சேச்ச, நானே விசாரிச்சு தெரிந்ததுகிட்டேன், அது என்னான, நிர்மலாி, எம்.எஸ்சி கெமிஸ்டரி, பி.எட் முடிச்சுட்டு, டி.ஆர்.பி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி, கவர்மென்ட் ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி டீச்சரா இருக்கா, அப்பறம் சொல்ல மறந்துட்டேனு சொல்றத விட தேவையில்லனு ஒதுக்கின விஷயத்த நீங்கலெல்லாம் பேச வைக்கிறீங்க”.

பேட்ரிக், “என்னடா அண்ணா சொல்ற”.

பீட்டர், “நா மாமா வீட்டுக்கு மறுஅழைப்புக்கு போயிருந்தப்ப, அவர் என்ட்ட ஒரு ஏடிஎம் கார்டைக் கொடுத்து, இந்த அக்கௌண்ட்ல பணம் போட்டுக்கேன், திடீருனு உங்க கல்யாணம் பிக்ஸ் பண்ணதுல சீர்வரிசைப் பத்தி பேசல, ஆனாலும் எங்க கடமைய நாங்க செய்யணும்ல, எப்படி இத அங்க வீட்ல பேசறதுனு தெரியல, அதான் டெபாசிட் பண்ணிட்டேன், உங்களுக்கு வேண்டியத வாங்கிகோங்கன்னாரு, நா தான் இதுல உங்க பொண்ணு விருப்பப்படி செய்ங்க, அந்த கார்டையும் உங்க பொண்ணுகிட்டயே கொடுங்கணு சொல்லிட்டேன், எனக்கு அது பெருசா தெரியாதால சொல்லல, இப்படி என் பொண்டாட்டிய கேள்வி கேப்பீங்கனு தெரிஞ்சுருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேன், அப்பறம், அவ இந்த வீட்டு மூத்த மருமக, என் பொண்டாட்டி, அதனால அதுக்கேத்த மரியாதைக் கொடுத்து பேசுங்க”.

பொன்னுசாமி, “எதுவா இருந்தாலும் பேத்தி விஷயம்ன்னா எங்ககிட்ட முன்னாடியே சொல்லிருப்பா, இல்லன்னா உன் பொண்டாட்டி கேக்குற கேள்விக்கு பதிலே பேச முடியல”.

சிரித்துக் கொண்டே பீட்டர், “இன்னொரு விஷயம், இங்க இருக்கிற என்பீல்டு பைக், அவ அண்ணன் அவளுக்கு பிடிக்கும்னு எனக்கு வாங்கி கொடுத்திருக்கான், அதாவது மச்சான் கிப்ட், எது எப்படியிருந்தாலும் அவ நம்ம சின்னத்த மக, கூடவே என் பொண்ணாட்டி, அதனால எல்லாரும் பாத்து பேசுங்க”.

பேட்ரிக், “டேய் அண்ணா, தேறிட்ட போ”

டேனியல், “நடத்துண்ணா, நடத்து”.

செல்லி, ‘இவன் என்ன இப்படி பேசுறான், எப்படியோ நல்லாயிருந்தா சரிதான், இவ எப்படியும் அடங்க மாட்டா, நாமதான் கண்டுக்காம இருந்துக்கனும்’ என நினைத்தார்.

பிறகு அனைவரும் அங்கேயே இரவு உணவையும் முடித்தே வீடு திரும்பினர். அறைக்குள் நுழைந்தயுடன் பீட்டர், “ஏன்டி, இவ்வளவு பேசுற, பாவம் நம்ம வீட்டு ஆட்கள்” என முதன் முறையாக இந்த கதையில் சகஜமாக பேசினான்.

நிர்மலா, “என்ன நீங்க வாடி, போடினு பேசுறீங்க?”.

பீட்டர், “என் பொண்டாட்டிய நா போடினு எப்ப சொன்னேன், வாடினு வேணா சொல்றேன், நா என் பொண்டாட்டிய ‘டி என்ன டா’ போட்டுக் கூட பேசுவேன், அதுல உனக்கு என்ன பிரச்சனை, சரி, டைம் ஆயிடுச்சு, மீதிய காலையில பேசிக்கலாம் இப்ப தூங்கலாம்” எனக் கூறி படுத்துக் கொண்டான்.
 
Haha.... நிம்மி நல்லா பதிலடியாக கொடுத்தா.... (y) (y) (y) ? ? ?
 
Super epi.
Mamiyare ithu than sonthama kuzhi vetti athula poi vizhurathu.Nirmala super. First problem varum pol seriya koduthathum inni namma than vittu pananum ninaikithu puguntha veedu ithu than nitharsanam.
Peter hats off. Niyayama pesuna da monnae. (Setharam illama thapichukuve)
 
பிரண்ட்ஸ், என் கதை எப்படி இருக்குனு தெரியல, ஆர்வம் இருக்கறதால எழுதுறேன், ஆனா உங்க கமென்ட்ஸ் என்ன encourage பண்ணுது, நன்றி.
 
Top