Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்4

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்
அத்தியாயம் 4


திகைத்து நின்ற அக்ஸிலீயாவிற்கு, கழுத்தில் மாலை, புதுதாலியுடன் ஒரு ஆடவனின் அருகில் அமர்ந்திருந்த ஜென்சியே கண்ணில் பட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த ஜென்னி, அம்மாவின் அரவம் கேட்டு, ஓடி வந்து, அவள் கைகளைப் பிடித்தாள். ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்திருந்த அக்ஸிலீயா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

அக்ஸிலீயாவைத் தொடர்ந்து வந்திருந்த அனைவரும் இதனை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஜென்சியின் அருகில் சென்ற நவ்ரோஜ், அவள் சுதாரிப்பதற்குள் ஓங்கி ஒரு அறைக் கொடுத்தார் அவளின் கன்னத்தில். சட்டென்று சுந்தர், ஜென்சியை பின்னிக்கு இழுத்து விட்டு, அவளை மறைத்தது போல், நவ்ரோஜின் முன் சென்று நின்றான்.

சுந்தர் பேசுவதற்குள் அவனின் தந்தை கருணாகரன், “இப்படி இவங்க கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பாங்கனு நெனக்கலங்க. ஆனா எங்களுக்கு இவன் ஒரே பையன், வேற வழியில்ல, புடிக்குதோ புடிக்கலையோ, நாங்க ஏத்துக்கலாமுனு முடிவு பண்ணிட்டோம். உங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்னு தான் இங்க வந்ததே, முடிஞ்சா இவங்கள மன்னிக்க முயற்சி பண்ணுங்க” எனக் கூறி சுந்தரையும் ஜென்சியையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த செல்லி, “என்ன நடக்குது இங்க, என் பசங்க வாழ்க்கை உங்க எல்லாருக்கும் விளையாட்டா போயிடுச்சா, அவங்களுக்கு ஒரு பதில சொல்லுங்க” என்று சத்தமிட்டார்.

ஏனெனில் பீட்டருக்கும் ஜென்சிக்கும், பேட்ரிக்கும் ஜென்னிக்கும் தான் திருமணம் பேசியிருந்தனர். பேட்ரிக் ஜென்னி இருவரும் ஒருவரையொருவர் விரும்பியிருந்தனர். அதனால் பீட்டருக்கும் ஜென்சிக்கும் திருமணம் முடித்து விட்டால் தங்கள் பிள்ளைகள் பிரச்சனையின்றி வாழ்வர் என அக்ஸிலீயாதான் தன் அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைத்திருந்தார். இப்போது நடந்ததோ வேறு, இதுதான் நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார் என்பதோ.

ஹென்றி, “முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பது இதுதானோ, நா பல வருஷங்களுக்கு முன்னாடி செய்யதது இப்ப என் அண்ணன் பையன் தலையில விடிஞ்சுட்டோ, ஐயோ, அண்ணா, இப்ப நாம என்ன செய்றது”.

இடிந்து போயிருந்த பொன்னுசாமி, “அக்ஸி, ஜென்சி விஷயம் உனக்கு ஏற்கனவே தெரியுமா?”.

அக்ஸிலீயா, “அப்பா, எனக்கு தெரிஞ்சுருந்தா நா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வேனா?”.

ரோஸ்லின், “ஜென்னி, உங்கக்கா உன்னட்ட ஏற்கனவே இதப்பத்தி சொன்னாளா”.

ஜென்னி, “ஐயோ அம்மாச்சி, எனக்கு எதுவும் தெரியாது, அவ என்ட்ட எதுவும் சொல்தில்ல”.

லீமா, “பீட்டர பத்தி யோசிங்க, இப்ப கல்யாணம் குறிச்ச நாள்ல எப்படி நடத்துறதுனு பாருங்க”.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, பொன்னுசாமி பங்காளிகள் தங்களுள் ஏதோ முணுமுணுத்து கொண்டும், ஆரோக், பீட்டர், பேட்ரிக் என்ன பேசுவதென அறியாமல் அமைதியாக பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

ஒருவாறு, அங்கு யாரும் எதுவும் பேசாததால் அமைதியாக இருந்த அவ்வீட்டில் பொன்னுசாமி பங்காளிகளில் ஒருவர், “பீட்டருக்கு வேறொரு பொண்ண ஏன் பாக்கக் கூடாது”.

சோர்ந்து போன ஆரோக்கியசாமி, “இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் கூட இல்ல, இப்பபோயி எங்கனு பொண்ணு தேடுறது”.

‘சும்மா ஜாலியா சுத்திட்டு இருந்தவன கல்யாணம் பண்ணிக்கோனு தொல்லை கொடுத்து, இப்ப ஆளாளுக்கு பேசிட்டு இருக்குதுங்க பாரு’ என்று மனதிற்குள் திட்டினான் பேட்ரிக்.

ஆனா பீட்டரோ, யாருக்கு வந்த விருந்தோ என்ற மனப்பான்மையில் அனைத்தையும் வேடிக்கை பார்த்தான், ஆம் அவனுக்கு வேடிக்கை தான், ஏனெனில் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் ‘உங்க இஷ்டப்படி செய்யுங்க, எப்ப சொல்றீங்களோ அப்ப நா தாலி கட்டுறேன்’ என்றிருந்தான்.

பொன்னுசாமியின் மற்றொரு பங்காளி, “அண்ணே, அங்க இங்கனு ஏன் பொண்ணு தேடி அலையனும், கிரேஸு புள்ள மக இருக்குல, அதுவும் முறைப்பொண்ணுதான, நமக்கும் கேட்க உரிமை இருக்கு, மாப்பிள மாட்டேனா சொல்ல போறாரு”.

சட்டென்று இராயப்பன் பங்காளி மகன், “இரண்டு குடும்பமும் சேர்றதுக்கு இது ஒரு வாய்ப்பும் கூட, அதுமட்டுமல்லாம, கல்யாணம் நின்னு நாலு பேர் நாலு விதமாக பேச வாய்ப்பு கொடுக்காம, குடும்ப மானத்தைக் காப்பத்துறதுக்கு இதுதான் சரியான வழி”.

எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆரோக்கியசாமி ஆரோக் கையைப் பிடித்து, “மாப்பிள, உங்க பொண்ண எங்க மருமகளாக்கிக்க நீங்க சம்மதிக்கணும்”.

அடுத்த நொடி ஆரோக், “மச்சான், குடும்ப மானம் முக்கியம், அதனால என் பொண்ண உங்க பையனுக்கு கொடுக்க சம்மதம்”.

பீட்டர் மனதிற்குள், ‘என்ன நம்பி பொண்ணு தரலையாம், குடும்ப மானத்துக்கா தராங்களாம், எல்லாம் என் நேரம், இப்படியா கேவலப்படுத்துவாங்க’, என நினைத்தான்.

பொன்னுசாமி, “அதான் பிரச்சனையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருச்சுல, கல்யாண வேலயப் பாப்போம், என்ன மாப்பிள சொல்றீங்க?”.

ஆரோக், “ஆமாங்க மாமா, நா இப்ப வீட்டுக்கு கிளம்பறேன், எல்லார்கிட்ட விஷயத்தை சொல்லி மேற்கொண்டு செய்ய வேண்டியத பேசுவோம், எல்லாருக்கும் வரேன்” எனக் கூறி விடைப்பெற்று, பங்காளி மகனுடன் சென்றார்.

வீட்டிற்கு சென்ற ஆரோக்கிடம் என்னவோ ஏதோ என்று பதற்றமாய் இருந்த அவர் மனைவி கிரேஸ் குடிக்க தண்ணீர் கொடுத்துக் கொண்டே, “என்ன விஷயங்க, எதுக்கு அக்கா மக அழுதாளாம்” எனக் கேட்டார்.

இராயப்பன், “இவ்வளவு நேரம் அங்கதான் இருந்தியா, இல்ல வேற வேல பாக்க போய்ட்டியா?”.

ஆரோக், “இல்லப்பா… அங்கதா இருந்தேன்.. வந்து…”.

அந்தோணியம்மாள், “மருமக தான் உன்ன ரொம்ப நேரமா காணோம்னு வாசலுக்கும், ஹாலுக்கும் நடையா நடந்தா, லேட் ஆனா ஒரு போன் பண்ணியிருக்கலாமுல”.

ஆரோக், “அம்மா, நடந்த களோபரத்துல ஒண்ணு புரியல, கூடவே உங்கள்ட்ட கேட்காமலே நானா ஒரு முடிவு எடுத்து, வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கேன்” எனக் கூறி அங்கு நடந்த ஒன்றையும் விடாமல் ஒரே மூச்சாய் அனைவரிடம் சொல்லி முடித்தார்.

முடிந்ததுதான் தெரியும் அதற்குள் நிர்மலா, “எனக்கு இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பேசுவேனு சொல்லிட்டு, இப்பவே அனுப்ப பாக்குறீங்க, இதுக்கு நா சம்மதிக்க மாட்டேன்”.

அந்தோணியம்மாள், “அடியேய், கால நேரம் கூடி வந்தா, எவ்வளவு தடுத்தாலும் சிலது தானாவே நடக்கும், நம்மளால ஒண்ணும் செய்ய முடியாது, அதனால ரொம்ப அலட்டாமா வாழ்க்கைய அது போக்குல வாழற வழிய பாரு”.

இதைக் கேட்ட நிர்மலா, “சொல்றது ஒண்ணு, செய்யறது ஒண்ணு” என முணுமுணுத்துக் கொண்டே அவள் அறைக்கு சென்று விட்டாள்.

ஆரோக், “நீங்க என்ன சொல்றீங்க?”.

இராயப்பன், “மருமக தன் குடும்பத்தோட சேர்றது சந்தோஷம் தான், அதுமட்டுமில்லாம, சின்னக்குட்டி தன்னோட தாய்மாமா வீட்டுக்கு தான போக போறா, பையனும் நல்ல மாதிரி தான் தெரியுது, எனக்கு ஆட்சேபனை இல்ல” எனக் கூறி எழுந்து சென்றார்.

கிரேஸ், “இது சரியா வருமாங்க?”.

ஆரோக், “சமயத்துல கைக் கொடுக்கலனா, நாம சொந்தகாரங்கனு சொல்றதுல அர்த்தமில்ல, அப்பறம் நம்ம பொண்ண யாரு வீட்டுக்கோ அனுப்பல, உங்க அண்ணன் வீட்டுலதான கொடுக்க போறோம், கவலைப்படாம சந்தோஷமா கல்யாண வேலய பாரு”

இதுதான் நடந்தது என ஆரோக் ரூபனிடம் போனில் சொன்னார். எல்லாவற்றைக் கேட்ட ரூபன், “அப்பா, நா முன்னமே சொன்ன மாதிரி இரண்டு நாள் பொறுத்துக்கங்க, எந்த ஏற்பாடா இருந்தாலும் நா சொன்ன பிறகு தான் பண்ணனும், புரியுதுங்களா?, சரி, போனை வச்சுறேன்”.

மறுநாள் காலையிலேயே ரோஸ்லின் அந்தோணியம்மாளுக்கு போன் செய்து, கல்யாண புடவை, தாலி எடுக்கலாமானு கேட்க, முன்னாடியே இதுப்பத்தி வீட்டில் பேசியிருந்ததால், “இங்க நாளு ரொம்ப கம்மியா இருக்கிறதால ஆளுக்கு ஒரு வேல செய்றாங்க, எல்லாரும் வரது கஷ்டம், தப்பா எடுத்துகலனா, நீங்களே வாங்கிருங்களேன்”.

ரோஸ்லின், “அதனால என்ன சம்பந்தி, நாங்க பாத்துக்கிறோம்” என முடித்தார்.

ஆரோக் தான் நேற்று, மகனையும் கருத்தில் கொண்டு, ரூபன் நல்ல முடிவாதான் சொல்லுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு, இருந்தாலும் அவன் இரண்டு நாள் டைம் கேட்டிருக்கதால நாம கொஞ்சம் அமைதியா இருப்போம், அவங்க பக்கம் நாம் எந்த தடையும் சொல்லவேனா, நடக்கிறது நடக்கட்டும் என்று கூறியிருந்தார். அதனாலேயே அந்தோணியம்மாள் இவ்வாறு பேசினார்.

இரண்டு நாட்கள் கழித்து போன் செய்திருந்த ரூபன், “அப்பா, நா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். வேண்டிய ஏற்பாட்ட செய்யுங்க, நா முந்தின நாள்தான் வர முடியும், தனியா கஷ்டப்படாம நம்ம பங்காளிங்கல கூப்பிட்டுக்கோங்க”.

ஆரோக், “சரிப்பா, சின்னக்குட்டிக்கிட்ட நீ ஒரு வார்த்த பேசுனா நல்லயிருக்கும், பேசுய்யா” எனக் கூறி விட்டு, “நிம்மிமா அண்ணன் போன்ல, வந்து பேசு” என்றார்.

அப்பாவிடம் இருந்து போனை வாங்கிய நிர்மலா, “சொல்லுண்ணே, டிரைசா பாப்பா, அண்ணியெல்லாம் எப்படி இருக்காங்க?”.

ரூபன், “சின்னக்குட்டி, என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா?”.

நிர்மலா, “என்னண்ணே இப்படி சொல்ற, உன்ன நம்பாம யார நம்பப் போறேன்”.

ரூபன், “ம்ம்ம்.., பையன் பத்தி டிடெக்டிவ் வச்சு விசாரிச்சாச்சு, நல்ல பையன்தான், இந்த மாப்பிளய நாங்க உனக்கு பாத்த மாப்பிளயா நெனச்சுக்கோ, அதுக்கும் மீறி இந்த கல்யாணம் பிடிக்கலனா, சொல்லு, அண்ணே நிறுத்திறேன், ஏன்னா எனக்கு நீயும் உன் விருப்பமும் தான் முக்கியம், என்ன சொல்ற”.

நிர்மலா, “அப்படில்லா ஒண்ணும் இல்லண்ணே, உங்களுக்கெல்லாம் ஓக்கேனா எனக்கும் ஓக்கேதான்ண்ணே, நீங்க எல்லாம் எனக்கு கெட்டதாவா செய்யப் போறீங்க, சரி அப்பாயிட்ட போனைக் கொடுக்குறேன்”.

பிறகு ரூபன், அவன் அப்பாயி, அம்மா, தாத்தா என அனைவரிடமும் பேசியே பேசியை வைத்தான். ரூபனின் அருகில் சென்ற ஏஞ்சல், “எங்கள கிளம்ப சொல்லிட்டு நீங்க என்ன ரூம்ல படுத்துட்டு கனவு காண்றீங்க. டைம் ஆயிடுச்சு, கிளம்பலயா?” என்றாள். அவள் பேசவும் தான் ரூபன் தன் நினைவுகளில் இருந்து மீண்டும் தயாராக சென்றான்.

சிறிது நேரத்தில் அவன் வரவும், டிரைவர் வைத்து வண்டியை வாசலுக்கு கொண்டு வந்த ஆரோக், தன் பேத்தியை தூக்கி மடியில் வைத்து முன்னாடி அமர்ந்து கொண்டார். ஏனெனில் அவருக்கு பிரசர் இருப்பதால் வண்டி ஓட்டக் கூடாது என ஸ்டிக்டாக ரூபன் சொல்லியிருக்கிறான், அதனாலேயே அவருக்கு வண்டி ஓட்ட ஆசையிருந்தாலும் டிரைவர் வைத்தே ஓட்டுவது. எத்தனை தடவை வந்து போனாலும், பிள்ளைகள் பிரிந்து சென்றால், ஒவ்வொரு முறையும் முதல் பிரிவின் போது இருந்த அதே வலிதான் இருக்கும், அந்த வலி கூடுமே ஒழிய மட்டுப்படாது. இங்கும் ரூபன், தன் தாய் மற்றும் அப்பாயியின் கைகளைப் பிடித்திருந்து, பின் தலையசைத்து, இருவரிடம் விடைபெற்று, தங்கையின் தலைத்தடவி காரில் ஏறி அமர்ந்தான். ஏஞ்சல், “அம்மாச்சி, அத்த, தாத்தா எல்லாரும் பத்திரமா இருங்க, நாங்க போயிட்டு வரோம்” எனக்கூறி விட்டு, “நிம்மி, நீயும் எங்களோட வாயேன், மாமா, திரும்பி வரும்போது தனியா தானே வருவாரு, நீ அவரோட வந்துடலாம்” என்றாள்.

நிர்மலா, “அம்மா, நானும் போயிட்டு வரட்டா, ப்ளீஸ்ம்மா…..”. அவர் சம்மதமாக தலையாட்டவும், அண்ணியுடன் சென்று காரில் ஏறினாள்.

அனைவரும் திருச்சி ஏர்போட்டை அடைந்தும், பிளைட்க்கான அறிவிப்பு வரவும் சரியாக இருந்ததால், ரூபன் குடும்பம் வேகமாக உள்ளே சென்று மறைந்தனர். அனுப்ப வந்தவர்கள் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் திரும்பினர். போகும் போது அண்ணன், அண்ணி மற்றும் மருமகளுடன் வழவழத்த நிர்மலா, திரும்பும் போது தனியாக இருந்ததால், அண்ணன் பேசியில் பேசி முடித்த பின் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.

அதுவரை அங்கிருந்து அனைவரிடம் ரூபன் பேசியதைக் கேட்ட நிர்மலா, “தாத்தா, இந்த கல்யாணம் நடக்குனுமுனா என்னோட கன்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா தான் நா பண்ணிப்பேன், இல்லனா மாட்டேன்” என்றாள்.

இவ என்ன புதுசா ஒரு குண்ட தூக்கி போடுறா, என மனதில் நினைத்தது வேறு யாருமில்லங்க, அது கிரேஸே தான்.
 
Top