Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்11

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 11

போனை வைத்தவன் கிரேஸிடம் சென்று, “அத்த, நம்ம வீட்லேயிருந்து எல்லாரும் வராங்க, லஞ்ச்..”.

நிம்மி அம்மா, “செய்துருலாம் மாப்பிள்ள”.

பீட்டர், “நான் உங்களுக்கு மாப்பிள்ள மட்டும் தான் இல்ல, உங்க அண்ணன் பையனா தோணாதா, பேர் சொல்லி கூப்டலாம்ல”.

நிம்மி அம்மா, “இவ்வளவு நாளா எனக்கு பொறந்த வீட்டு சொந்தம் இல்லாம தான இருந்தது, சட்டுனு வரமாட்டேங்குது, முயற்சி பண்றேன்”.

‘முயற்சி செய்றேன்னு’ சொன்னதே கட்டாயம் மாறுவாங்கனு தான் அர்த்தம்’ என்று மனதில் நினைத்து சென்றான்.

பீட்டர் குடும்பத்தினர் நிம்மியின் அம்மா வீட்டை அடைந்தும், நிம்மி தாத்தாயும் அப்பாயியும் வாசலுக்கே வந்து வரவேற்றனர். ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகல்லவா இங்கு வருகிறார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும் பீட்டர் அம்மா செல்லி, “நிர்மலா, எப்படி இருக்க, உடம்பு எல்லாம் நல்லாயிருக்கா?” என முறைத்து கொண்டே கேட்கவும், ‘அடடா, மண்டையில இருந்த கொண்டைய மறந்த வடிவேலு கணக்கா, அம்மாக்கு மட்டும் நான் அத்தைட்ட பேசின விஷயம் தெரிஞ்சது, செத்தேன், இவங்க எதும் சொல்லிருவாங்களா’ என்று மனதில் ஓட்டிக் கொண்டே, “நான் நல்லாயிருக்கேன், அத்த” என்றாள்.

அதன் பிறகு, எப்படி தான் இரண்டு நாட்கள் ஓடியது என்று உணரும் முன்னே, முடிந்திருந்தது. பீட்டர் குடும்பம் நிம்மியின் பிறந்த வீட்டினரிடம் விடைப் பெற்றிருந்தனர். விடைப் பெறும் முன் ஆரோக், “அடிக்கடி நீங்க எல்லாம் இப்படி வந்துட்டு போகனும், உடனே ஆரோக்கியசாமி, “மாப்பிள்ள, நீங்களும் உரிமையா எங்க வீட்டுக்கு வரனும், நீங்க எங்க சம்பந்தி ஆகறதுக்கு முன்னாடியே வீட்டு மாப்பிள்ள, நீங்கெல்லாம் எங்க வீட்டுக்கு வந்தீங்கனா ரொம்ப சந்தோஷப்படுவோம், என்ன சொல்றீங்க அத்த, மாமா” என்று நிம்மி அப்பாயியையும், தாத்தாவையும் துணைக்கு அழைத்தார்.

நிம்மி தாத்தா, “கட்டாயம் வரோம்ப்பா” என்று சொல்லியிருந்தார்.

இதோ, அவரவர் தங்கள் வழக்கமான நிலைக்கு திரும்பியிருந்தனர். ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று பள்ளியில் இருந்து வந்த நிம்மி, ஹாலில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டு கொள்ளாது அமைதியாக மாடியேறினாள்.

அவளைப் பார்த்த ஜென்னி, “நிம்மி இங்க வா, அம்மா வந்திருக்காங்க, பாரு, ஏன் பேசாம மாடியேறுற”, நிம்மி, “அவங்ககிட்ட எனக்கென்ன பேச்சு, உங்க அம்மா நீங்க பேசுங்க”.

ஜென்னி, “என்னாச்சு உனக்கு, பிரிச்சு பேசுற, நான் அப்படி நெனைச்சிருந்தா போன வாரம் உங்க வீட்டுக்கு வந்திருக்கவே மாட்டேன், எங்க அம்மாவும் தான்”.

நிம்மி, “நானா எங்க வீட்டுக்கு வாங்கனு உங்கம்மாவ கூப்ட்டேன், பிள்ளைய ஒழுங்கா வளர்க்காம அடுத்தவங்களுக்கு தொல்லைய கொடுத்துட்டு…”.

நிம்மி பின்னாடியே வந்திருந்து அவள் பேசுவதைக் கேட்ட பீட்டர், “நிர்மலா, போதும், வாய மூடு, என்ன பேசுறோம்னு தெரியாம”.

நிம்மி, “ஏன் உண்மைய தானே சொல்றேன், உங்களுக்கு ரொம்பதான் கோவம் வருது, ஏன் உங்க எக்ஸ் லவ்வரோட அம்மான்னா” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளை அறைந்தே இருந்தான், பிறகு, “இதுக்கு மேல பேசுன பல்லை தட்டிக் கையில கொடுத்துருவேன், ஒழுங்கு மரியாதையா இங்கேயிருந்து போயிரு”.

அடித்தும் அவளுக்கு வந்த கோபத்திற்கு, அவன் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கி, டிவி நோக்கி விட்டெறிந்தாள், டிவி செய்த புண்ணியமோ என்னவோ, டிவியில் படாமல், கீழிருந்த டிவிடி-ல் பட்டு மொபைல் சுக்கு சுக்காக தெறித்தது.

நிம்மி, “இன்னொரு தடவை என்ன அடிச்சீங்க, இனி இந்த மொபைல் உங்க தலையதான் பதம்பார்க்கும்” என்றவள், விடுவிடுவென தன் அறையை அடைந்தாள். ஹாலில் இருந்த ஜென்னியும், ஜென்னியின் அம்மாவும் விக்கித்து நின்றனர்.

பீட்டர் அப்படியே ஷோபாவில் அமர்ந்து விட்டான். அவனின் அம்மா, “ஏன்டா, கை நீட்டுற”

பீட்டர், “அம்மா, அவ பேசுனத கேட்டீங்க தான, அப்பறம்”.

பேட்ரிக், “டேய் இங்க வந்துலேயிருந்து நாம நிம்மிய பாத்துட்டுதான இருக்கும், நல்ல விதமாதான நடந்துக்குச்சு, அப்படி இருக்கப்ப, எனக்கென்னவோ ஏதாவது பிரச்சனைல மாட்டியிருக்குமோனு தோணுது, நீ என்னடா இப்படி பண்ணிட்டேன்”.

பீட்டர், “அவ விட்டா பேசிட்டே இருப்பா, உனக்கு தெரியாது, அவ எந்தளவுக்கு விட்டு கொடுத்து போறாளோ, அந்தளவுக்கு பிடிவாதமும் பிடிப்பா, கோவம் வந்தா என்ன பேசுறோம்னு வேற அவளுக்கு புரியாது”.

பேட்ரிக், “சரி ஏதோ கோபமா நிம்மி இருக்குனு தெரியுதுல்ல, ஏன் இப்படி பேசுற அப்படினு தன்மையா பேசி புரிய வெக்காம, பிரச்சனைய பெருசு பண்ற, என்னவோ, இனி மேலயாவது, நிதானமா இரு”.

வெளியே சென்று வீடு திரும்பிய பீட்டரின் தாத்தா, அப்பாயி, அப்பாவிடம் அவனின் அம்மா நடந்ததைச் சொன்னார், தாத்தாவோ கணவன்-மனைவிக்குள் சண்டையும் சமாதானமும் இருக்கிறதுதான, மூணாவது மனுசங்க தலையிடாம இருந்தா அவங்களே சரி செய்துக்குவாங்க, அதனால நாம தள்ளி இருப்போம் என்றதால், அனைவரும் அதனைப் பற்றி பிறகு பேசவில்லை.

மறுநாள் காலையில் தன் இருமகன்களுடன் அலுவலகம் செல்ல தயாரா நின்றிருந்த மாமனாரிடம் வந்தவள், “மாமா, உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசனும்”.

மாமனார், “சொல்லும்மா”

நிம்மி, “எக்ஸ்போர்ட் யூனிட் கணக்கெல்லாம் ஒரு மாசமா பாக்கல, ஸ்கூல் நாள்ல போகவும் முடியதில்ல, அதான் இன்னைக்கு போயிட்டு நாளைக்கு ஈவினிங் வந்துறேன், போயிட்டு வரட்டுமா”

பீட்டரின் முகத்தைப் பார்த்த அவனின் தந்தை, “சரிம்மா, பாத்து பத்திரமா போயிட்டு வந்துரு” என்றதுதான் தாமதம் பீட்டர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான். அவர் மேலும், “வண்டி எதும் ஏற்பாடு செய்யட்டா”

நிம்மி, “என் வண்டிதான் எனக்கு செட்டாகும், வீட்டுக்கு போயிட்டு அங்க இருந்து யூனிட் போக அதுதான் எனக்கு வசதி, சரி கிளம்புறேன் மாமா” என்றவள் யாரிடம் எதுவும் சொல்லாமல் தன் வண்டியை எடுத்து சென்றிருந்தாள்.

அவள் வெளியே வந்து செல்லும் வரை அவளைப் பார்த்திருந்தவன், பிரிய மாட்டேன் என்றவள் பிரிந்து சென்றதும் மனதில் பாரமேற காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டான். அவனின் அப்பா முன் சீட்டில் அமர்ந்ததும், பேட்ரிக் வண்டி எடுக்க அலுவலகம் சென்றனர். 'இப்பதான இவ என் கூட இருக்கா, இதுக்கு முன்னாடி இருந்தாலா என்ன, அதுமாதிரி நான் எப்பவும் போல இருக்கனும், அப்செட் ஆகக் கூடாது’ என்றெண்ணி, வேலையில் தன்னை மூழ்கடித்தான். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த வேலை முடியதானே செய்யும், அதன் பிறகு அவனால் அவள் நினைவை ஒதுக்க முடியவில்லை.

வீட்டிற்கு உயிர்ப்பில்லாமல் சோர்ந்த முகத்துடன் வந்தவனைப் பார்த்த அவனின் அம்மா, ‘அவ மட்டும் இங்க வரட்டும் அப்பறம் இருக்கு சேதி’ என்று மனதில் கருவினார்.

ஞாயிறு மாலை தன் தந்தையுடன் வந்த நிர்மலாவை முறைத்து, அவளின் தந்தையை நல்லவிதமாகவே உபசரித்து அனுப்பி வைத்தனர். அனைவரும் ஹாலில் இருக்க, பீட்டர் அப்பாயி, “ஏய் நிம்மி, வீட்டுக்கு வந்த மருமக இப்படிதான் வீட்ட விட்டு போவ”.

கோபமான நிம்மி, “நான் எப்ப வீட்ட விட்டு போனேன், சொல்லாம கொள்ளாமயா போனேன், மாமாட்ட பெர்மிஷன் கேட்டு தான கிளம்புனேன், என்ன எங்க வீட்டுக்கு அனுப்பிருலானு பிளான் பண்றீங்களா”.

‘என்ன இவ இப்படி பேசுறா’ என்றே பார்த்தனர்.

நிம்மி, “நான் மாமாட்ட பெர்மிஷன் கேக்கும் போதே, நாளைக்கு சாயங்காலம் வந்துருவேன்னு சொன்னேன்ல, ஆமா, பெர்மிஷன் கேட்டு போனா, உங்க ஊர்ல வீட்ட விட்டு போறாங்கனு அர்த்தமா, என்ன?”

அவளின் பதிலில் அப்பாயி முழிக்க, அவனின் அம்மா, “அது முதல் நாள் ஒரு விஷயம் நடந்துச்சு, அடுத்து நீ உங்க வீட்டுக்கு போகவும் அப்படி கேக்குறாங்க”.

பதில் சொல்லாமல், சட்டென்று ஜென்னி அருகில் சென்ற நிர்மலா அவள் கைகளைப் பிடித்து, “சாரிக்கா, அன்னைக்கு உண்மையாவே ரொம்ப டென்ஷனா இருந்தேன், உன் டென்ஷனுக்கு நாங்கதா கிடைச்சமானு கேட்குறது புரியுது எனக்கு, அதனால தான் மனசார மன்னிப்பு கேட்குறேன், சரி வாங்க பெரியம்மாகிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன்” என்றவள் ஜென்னி கையை விடாது பிடித்து பக்கத்து வீட்டை நோக்கி சென்றாள்.

நிம்மி வந்து விட்டாள் என்பதே பீட்டருக்கு நிம்மதியைக் கொடுக்க, அவள் அருகில் செல்லாமல் அவள் பேசுவதையே பார்த்திருந்தான். அவள் ஜென்னியை அழைத்து செல்லவும் பேட்ரிக்தான், “வாங்க நாமளும் அங்க போவோம், நிம்மிய அத்தயால சமாளிக்க முடியாது”

ஜென்னி வீட்டிற்குள் சென்றதும் அங்கிருந்த ஜென்னி அப்பாவிடம், “பெரியப்பா, பெரியம்மாட்ட பேசனும், ப்ளீஸ், வரசொல்லுங்க”

அவர், “அதும்மா..”

நிம்மி, “ப்ளீஸ், பெரியப்பா..”

நிம்மி வருவதைப் பார்த்து உள்ளே சென்ற ஜென்னியின் அம்மா, இவர்கள் பேசுவதையும் கேட்டு கொண்டுதான் இருக்கிறார்.

ஜென்னி அப்பா, அழைக்கவும் வந்து நின்ற அக்ஸிலீயாவிடம் நிர்மலா, “மன்னிச்சுருங்க பெரியம்மா, என்ன காரணமா இருந்தாலும், நான் அப்படி பேசிருக்கக் கூடாது”

ஜென்னி அம்மா, “உங்க அம்மா சொன்னாளா மன்னிப்பு கேட்க சொல்லி”.

நிம்மி, “அவங்க எப்படி சொல்லுவாங்க, நான் சொன்னாதான தெரியும், அதுமட்டுமில்லாம என் புருஷன் வீட்ல நடக்குறதெல்லாம் என் அம்மாக்கு சொல்லனும் அவசியமில்ல, எங்கம்மா என்ன உங்க அம்மாகிட்ட வந்து அப்படியா சொன்னங்க, எங்க அம்மா முன்னாடியே என்ட்ட ‘நாங்க அமைச்சு கொடுக்குற வாழ்க்கைய நல்லவிதமா வெச்சுக்குறது உன் கையிலதான் இருக்கு, பாத்துக்கோ’ அப்படினு சொல்லிட்டாங்க, நான் எதாவது சொன்னாலும் எனக்குதான் அட்வைஸ் பண்ணுவாங்க, யார் கேட்குறது அத”

ஜென்னியின் அப்பா, “சரிம்மா, தப்பா எடுத்துக்கலனா எங்ககிட்ட சொல்லு, என்னதான் பிரச்சனை, நீ பேசுனத கேட்டப்ப பீட்டர், ஜென்சி மேல தான் உனக்கு கோபம்னு தெரியுது”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அன்றைய நிகழ்வை விவரித்தாள்.

பள்ளி முடிந்து, ‘ஸ்வீட்ஸ் ஏதாவது வீட்டுக்கு வாங்கிட்டு போகலாம்’ என்று கடையில் நுழைய இருந்தவளை கடையில் இருந்து வெளியே வந்தவள் பார்த்து விட்டு, “ஏய் நிர்மலா, என்ன இங்க?”

நிம்மி, “அது… ஜென்சி அக்கா, ஸ்வீட்ஸ் வாங்கலாம்னு”

ஜென்சி, “எனக்கு நல்லது செய்றேன்னு, என்ன வீட்ட விட்டு அனுப்பிட்டு, உன் புருஷன் ஜாலியா இருக்கானா, அதெப்படி இருப்பான், அவன் லவ் பண்ண பொண்ணதான் அவனுக்கு கட்டி வைக்கலயே, உன்ன போயி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்கல”

சுறுசுறுவென கோபமேற நிம்மி, “என்ன ‘உன்ன போயினு’ சொல்றீங்க, எனக்கு என்ன கொறைச்சல், நான் எதுல கீழ”

ஜென்சி, “அவன் வெளிநாடெல்லாம் போயி வந்திருக்கான், அங்க ஏதாவது நல்ல பிகரா பிக்கப் பண்ணியிருப்பான், இப்ப..”

நிம்மி, “தேவையில்லாம பேசுறத விட்டுட்டு புருஷன் வீட்ல ஒழுங்காயிருக்க பாருங்க” என்றவள் திரும்பி பாராமல் சென்றிருந்தாள்.

தற்போது நிகழ்வுக்கு வந்தவள், “லவ் பண்ணது அவங்க, அதுக்கு இவங்க ஹெல்ப் செய்திருக்காங்க, அவங்கக்குள்ள என்னன்னு தெரியாது, அதுக்காக இஷ்டத்துக்கு பேசுவாங்களா?, கூடவே அவங்க எப்படி என்ன பத்தி பேசலாம், இவரோட லவ் பத்தி பேசுறாங்க, இதுவே இவரு இதான் விஷயம் அப்படினு சொல்லியிருந்தா, நானும் தில்லா அவங்ககிட்ட பேசிட்டு வந்திருப்பேன்ல, எனக்கே ஒரு கெஸ் இருக்கு இவங்க லவ் பத்தி, அப்படியிருக்கப்ப நான் ஏன் சந்தேகப்பட போறேன், எனக்கு என்ன கோபம்ன்னா நம்மளால சரியா பதில் பேச முடியலயே, அதுக்கு இவங்க உண்மைய சொல்லாததுதான காரணம், அப்பறம் அந்த அக்காவோட அம்மா இவங்கதானு, ஆனா எப்படியிருந்தாலும் நான் செய்தது தப்புதான், சாரி பெரியம்மா, அக்கா”

பீட்டரின் அப்பா அவனிடம், “பீட்டர் என்ன தான் உண்மையா நடந்ததுனு சொல்லு”.
 
உங்கள் கமென்ட்ஸூம், லைக்கும் எனக்கு ஊக்கமளிக்குது, நன்றி பிரண்ட்ஸ்
 
Top