Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு ரொம்ப ரொம்ப லேட். இதை நானே எதிர்பார்க்கலை. அப்படி ஒரு சூழ்நிலை. இன்னைக்கு அப்டேட் போட முடியாதோன்னு தான் இருந்தது நிலைமை. ஆனாலும் பைனல்ன்னு சொல்லிட்டு போடாம இருக்க முடியாதே :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான நிறைவான முடிவு,
சரண்யா ஹேமா டியர்
இந்த அழகான நிறைவுப் பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குப்பா

முதலில் கண்ணன் இதயாவைக் கண்டுகொள்ளாமல் விட்டுட்டாலும் அப்புறம் விடாப்பிடியாக அவளை தன்னுடன் சேர்த்து வாழ்ந்து ஜெயித்து விட்டான்
ஆரவ் ஒரு விதம் என்றால் பிரசாத் ஒரு விதம் கண்ணபிரான் இன்னொரு விதம்
சூப்பரா இருக்கு
அடுத்து விஜயநெடுமாறன் வாத்தி நாளைக்கு வந்துடுவாரா?
 
Last edited:
அருமையான, நிறைவான பதிவு சரண்யா???.குடும்பத்தில் பிரச்சனை வேண்டாம் என பேச வேண்டிய நேரத்தில்,பேசாமல் இருந்து இதயா அவனை விட்டு பிரிய காரணமாக இருந்தவன்??, இன்று இத்தனை வருடம் பிரிந்து இருந்ததே போதும்,இதயாவின் பிரசவத்தை இங்கேயே பாருங்கள் என இதயாவின் மனதை புரிந்து கண்ணன் கூறியது அருமை☺☺☺☺.

கல்யாணம் ஆனதில் இருந்து இதயா வீட்டுக்கு கண்ணன் குடும்பம் வராததால் எப்படியெல்லாம் அக்கம் பக்கம் உள்ளவங்க பேசினாங்களோ???,எல்லாரும் வரவும் மஞ்சு தடல்புடலா விருந்து வச்சு அசத்திட்டார்???.

ஒரு வழியா திருமணத்துக்கு முன் வீட்டில் நடந்த பிரச்சனைகளை நிஷா,இதயாவிடம் சொல்லிட்டா.
பேசவேண்டிய இடத்துல பேசறது இல்லை,பேசினதையும் சொல்றதில்லை,இப்படிதான் நெனச்சேனு மனசுகுள்ள நெனச்சா யாருக்கு தெரியும்னு இதயா,கண்ணனை வச்சு வாங்கிட்டா????.

இதயா பேரனுடன் வீட்டுக்கு வரவும் சிவசுந்தரம் பேரனின் வரவை கொண்டாட,காஞ்சனா,உத்ரா இருவரும் கிளம்பும் வரை இதயாவுக்கு காவலாக நிற்கும் வேலை கலெக்டருக்கு??.

குழந்தைக்கு பசியாத்த போனது தப்பா,உத்ரா தான் மனசாட்சி இல்லாம பேசறான்னா ருக்மணியும் எல்லாத்துக்கும் தலையாட்டுது????.உத்ரா,இதயாவை பேசுனப்போவே ரெண்டு அறை கொடுத்திருக்கனும் என கணவன் சொன்னதை கேட்டும், ருக்மணி,உத்ரா பேசறப்போ ஒன்னும் சொல்லாம இருக்குது??.இதுங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்????.

அருமையான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.
வாழ்த்துக்கள் சரண்யா????.
 
Last edited:
Top