Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

கதிரும் தாமரையும் சேர்ந்து நகை விஷயத்துல நல்ல முடிவா எடுத்தாங்க.... அதான் நிவிக்கு தர்ஷன் இருக்கானே... அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சுருங்க... அக்காவும், தங்கையும் ஒரே வீட்ல வாழட்டும்...
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறுகச்சிறுக சேர்த்த நகைகள் பாதிதான் கிடைத்தால் சரளாவுக்கு எப்படி இருக்கும்?

யாரோ கஷ்டப்பட்டு வாங்கிய நகையை யாரோ திருடி யாரோ அனுபவிக்கணுமுன்னு இருக்கே
சரளா ரொம்பவே பாவம்ப்பா

அப்போ பணமும் திரும்ப கிடைக்கப் போறதில்லையா?

என்னாங்கடா சொந்த பந்தங்கள்?
முதலில் தாமரைக்கு கல்யாணம் பண்ணலைன்னாங்க
அப்புறம் கல்யாணத்தில் நகை பணம் கொடுக்கலைன்னாங்க

அப்புறம் தாமரைக்கு பிள்ளை இல்லையான்னு கேட்க வழியில்லாமல் இப்போ தாமரைக்கு ஐந்து மாசம்
அதனால இந்த விஷயத்தில் தாமரை தப்பித்தாள்

இப்போ நிவேதாவுக்கு கல்யாணம்ன்னு அடுத்த கச்சேரியை ஆரம்பிக்கிறாங்களே
எப்போப் பாரு சோமநாதனை வாட்டியெடுக்கிறாங்க
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.அடக்கடவுளே...திருட்டு போன நகையில பாதி நகை கூட கிடைக்கலையே???.கொள்ளையடிச்சவங்க எங்க கிட்ட இருந்ததை போலிஸ்ட்ட கொடுத்துட்டோம்னு சொல்ல,போலிஸூம் எங்கட்ட கொடுத்தது இவ்வளவு தான்னு காட்ட???. நடுவில பாதி நகைக்கங்க எங்கே மாயமா போச்சுன்னு தெரியலை????.

நமக்காவது இவ்வளவு கெடச்சது,ஒரு சிலருக்கு எதுவும் கிடைக்கல அதை நெனச்சு மனசை தேத்திக்கனும்னு கதிர் சொல்றதும் சரிதான்???.இக்கட்டான நேரத்துல கதிரோட யோசனைபடி தான் தாமரை நடக்கறாளா??,எப்படியோ ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்தா சரிதான்???.

பாதி நகையை தாமரை வாங்கிட்டு,மீதியை நிவிக்கு கொடுக்க சொல்லிட்டான்??.சோமுவையும் வி.ஆர்.எஸ் வாங்க சொல்லனும்னு பேசி முடிவு பண்ணதோட,தாமரை வீட்லேயும் பேசி சம்மதம் வாங்கியாச்சு☺☺☺☺.எதுவுமே போடலை என பேசிய சொந்த்களுக்கு முன்பே தாமரைக்கு தாலி பெருக்கி போடும் போது நகையும் சீராக கொடுத்த பிறகு தான் சந்தோஷமும்,நிம்மதியும் கெடச்சது...

விஷேசத்துக்கு வர்றவங்க வாய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டாங்க போலிருக்கு????.
தாமரை கல்யாணமே அவ்வளவு பிரச்சனைக்கு நடுவே நடந்துச்சு.இப்போ வளைகாப்பு,குழந்தை பிறந்தா எவ்வளவு செலவு இருக்கு???.அதை யோசிக்காம படிக்கற பொண்ணுக்கு கல்யாணம் மாப்பிள்ளை பார்க்கலையானு கேட்கறாங்க,சோமுவும் இப்பவே யோசிக்க ஆரம்பிக்கறார்??? .
 
Last edited:
Top