Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-32

Advertisement

praveenraj

Well-known member
Member
அவன் உள்ளே போக போக அவனுக்கு தயாளனிடமிருந்து அழைப்பு வந்தது. கோவத்தில் அட்டென்ட் செய்தான்.

"டேய் சமுத்திரா இப்போ நீ எங்க இருக்க?" என்று பதறிக் கேட்டார்.

அவனோ,"சில விஷயங்களை அப்பப்போவே முடிச்சிடனும். நான் தான் தப்பு பண்ணிட்டேன். அது தான் முடிக்கப் போறேன்..." என்றான்.

"முட்டாள் முட்டாள்! என்ன டா முடிக்கப் போற?" என்ற அவருக்கு இருந்த சந்தேகம் இப்போது தான் முழுவதுமாகத் தீர்ந்தது. "டேய் அப்போ அந்தப் பொண்ணுங்க?" என்றார்,

"ஆமா அவங்க இன்னும் உயிரோட தான் இருக்காங்க. ஆனால் இனிமேல் இருக்க மாட்டாங்க..." என்றான்.

"டேய் முட்டாள்!" என்று அவர் சொல்ல,

ஏனோ அந்த வார்த்தை அவனை ரொம்ப அவமானப் படுத்துவதாக உணர்ந்தவன் அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த பங்களாவில் இருக்கும் ரகசிய அறையில் நுழைந்தான். அங்கே சென்றால் சிக்னல் கிடைக்காது. உள்ளே நுழைந்தவனை இந்நேரம் எதிர் பார்க்காத சிந்து மற்றும் ஸ்ரீ புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க,

கோவத்தில் இருந்தவன் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி கீழே போட்டு உடைத்தான். அவன் செய்கையில் வித்தியாசம் உணர்ந்தவளாக சிந்து தான் சப்தமாகச் சிரித்தாள். கோவத்தில் அவளை நெருங்கியவன்,"சிரி டி சிரி. உன்னோட கடைசி சிரிப்பு இது தான். உங்க நேரம் நெருங்கிடுச்சி..." என்றான்.

அவன் சொன்னதில் உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல், மேலும் எப்போதும் போல் இல்லாமல் இன்று அவன் முகத்தில் தெரியும் அந்த பயம் டென்ஷன் அவளுக்கு ஒரு தைரியத்தைத் தான் தந்தது. அதனால் சிந்துவே,

"அப்போ நீ தோற்துட்ட ரைட்? ஆமாம். நீ என்னைக்கு என் அப்பா கிட்டயும் என் அண்ணா கிட்டயும் நேரடியா மோத தைரியம் இல்லாம இப்படி கோழைப் போல ஒன்னும் தெரியாத ரெண்டு பெண்களைக் கடத்தி கொண்டு வெச்சியிருக்கையோ அப்போவே நீ தோற்துட்ட... நீ லூசெர்..." என்று அவள் சொல்ல அதில் இன்னும் இன்னும் அவமானப்பட்டான் சமுத்திரன்.

"உன்னைக் கொல்லாம விட மாட்டேண்டி..." என்று அவளை நெருங்கினான் அவன்.

"என்னமோ அன்னைக்கு பெருசா சவால் விட்ட? என் அண்ணனைக் கொன்னு அதுக்கப்றோம் தான் எங்களைக் கொல்லுவேன்னு? எங்க போச்சு உன் சவடால் எல்லாம்?" என்று சிந்து இன்னும் இன்னும் அவனை வார்த்தையால் சீண்டினாள்.

பைத்தியம் பிடித்தவன் போல் கத்தியவன்,"இல்லை நான் தோற்க மாட்டேன். உன்னையும் இவளையும் கொன்னு அதை உங்க அப்பனுக்கும் உன் அண்ணனுக்கும் சொல்லி அவங்க படும் கஷ்டத்தையெல்லாம் பார்த்துட்டுத் தான் நான் சாவேன்..." என்று அவளை நெருங்க அந்த ரகசிய அறை திறக்கப்படவும் அதிர்ந்தபடியே திரும்பினான் அவன். அங்கே தருண் தான் வந்தான். 'எப்படி? எப்படி வந்தான்?' என்று குழம்பியவன் அவனைக் கொன்று விட நெருங்கி பின்பு நிற்க பின்னாலே கதிரவனும் இந்திரனும் குகனும் உள்ளே வந்தனர்.

முந்தி வந்த இந்திரன் தூரத்தில் சிந்துவையும் ஸ்ரீயையும் பார்த்து அப்படியே மண்டியிட்டு அமர்ந்து அழுதான். கதிரவனும் சிந்துவைப் பார்த்து கண்களில் கண்ணீரோடு நிற்க,

"அழு டா அழு... இப்போ உன் கண்ணு முன்னாடியே அவங்க ரெண்டு பேரையும் கொல்லறேனா இல்லையானு பாரு?" என்று அவன் முன்னால் செல்ல, துரிதமாகச் செயல் பட்ட தருண் சமுத்திரனை நெருங்கியிருந்தான். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆம் எப்போதும் அவன் சேப்டிக்காக அவனோடே இருக்கும் துப்பாக்கி அது.

"சமுத்திரன் இன்னும் ஒரு அடி நீ முன்னாடி எடுத்து வெச்சாலும் உன்னைச் சுட்டுடுவேன். மைண்ட் இட்..." என்பதற்குள் அவன் சிந்துவை நோக்கி ஓட அவன் காலில் குண்டு பாய்ந்திருந்தது. அப்படியே மடங்கி விழுந்தான் அவன். கதிரவன் அதற்குள் வேகமாக ஓடி சிந்துவை அந்தக் கூண்டிலிருந்து வெளியே கொண்டு வந்தான். இந்திரன் தான் இன்னும் அப்படியே அமர்ந்து ஸ்ரீயின் கோலத்தையும் அவள் கண்களில் தெரியும் பயத்தையும் இங்கே சிந்து இருந்த நிலையையும் கண்டு நினைவுக்கு வராமல் இருக்க, வெளியே வந்த சிந்து உடனே ஸ்ரீயை நோக்கிச் சென்றாள்.

"நோ நோ... நான் தோற்கக் கூடாது... நோ..." என்று கத்தியவன் அடிப்பட்ட காலோடு அவர்களை நெருங்க, மீண்டும் மற்றொரு காலில் சுட்டான் தருண். அதற்குள் தருண் அவனை நெருங்கி,"போதும் சமுத்திரன். போதும். உன் பழி வாங்கும் உணர்ச்சி எல்லாம் போதும். நிறுத்திக்கோ..." என்று மிரட்ட,

அழுதவன்,"என்னைக்காவது நீ உன் அப்பா அம்மாவை மிஸ் பண்ணியிருக்கையா? சொல்லு? ஒருவேளை நீ பொறந்த அப்போவே உன் அம்மா செத்துப்போயி உன் அப்பா உயிரோட இருந்தும் நீ யாருமில்லாத அநாதை மாதிரி ஒரு ஆஸ்ரமத்துல வளர்ந்திருக்கையா? உனக்கு அதோட வலி என்னனு தெரியுமா? ஒவ்வொரு வேளை சோத்துக்கும் நீ தட்டை கையில ஏந்தி நின்று இருக்கியா? அம்மா அப்பாவோட அரவணைப்பு இல்லாம தனியா தூங்கி இருக்கியா? இதெல்லாம் நீ அனுபவிச்சு இருந்தா தான் உனக்கு என் வலி புரியும். அதும் உன்னோட அப்பா இந்த நாட்டுலயே விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு பெரிய பணக்காரனா இருந்து இதெல்லாம் நீ அனுபவிச்சு இருந்தா உனக்கு என் நிலைமை தெரியும்..." என்று கதறி,"ஆனா இதுக்கெல்லாம் காரணமான அந்த அப்பன் இன்னொரு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி குழந்தைனு சந்தோசமா இருந்தா உனக்கு எப்படி இருக்கும்?" என்று கேட்டான்.

"நானும் உன்கிட்ட சில கேள்வியைக் கேட்கட்டுமா சமுத்திரா? ஒருவேளை யாரு உன் அப்பான்னு உண்மையிலே தெரியாம வேற ஒருத்தரை உன் அப்பான்னு நெனச்சு அவங்க குடும்பத்தைப் பழி வாங்கியிருக்கனு உனக்குத் தெரிய வந்தா உன்னோட நிலைமை என்ன மாதிரி இருக்கும்? அது சரி உன்னைத் தூக்கி வளர்த்த டாக்ட்டரையே கொன்னவன் தானே நீ?" என்றான் தருண்.

"என்ன சொல்ற? எனக்குத் தெரியாதா? எனக்குத் தெரியும். அந்த டாக்டரை நான் தான் கொன்னேனு தெரிஞ்ச உனக்கு, ஏன் கொன்னேனு தெரியல தானே? இதெல்லாம் நான் கண்டுபிடிச்சு ஏன் இப்படிப் பண்ணீங்கன்னு கேட்டா அது தப்பாம். நீ இல்ல அவரோட பையன்னு சொன்னாரு. நானும் நம்பினேன். இதோ நிக்கறாளே ஸ்ரீ இவளையாவது எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்டேன். முடியாதுனு சொல்லிட்டாரு. சரி அந்த api ரகசியமாவது எனக்குக் கொடுங்க, நான் அதை வித்து எங்கேயாவது தனியா போயிடறேனு சொன்னேன். அதுவும் மறுத்துட்டாரு. சரி அந்த ஹாஸ்பிடல் md யாவது ஆக்குங்கனு கேட்டேன். எதுவும் செய்யல. அது தான் நானே அமைதியா அந்த சந்திர வர்மனை வர வெச்சு டாக்டர் கிட்ட டீல் பேசச் சொன்னேன். அன்னைக்கு நைட் நான் அவரை மீட் பண்ணப் போனேன். அதுக்குள்ள ஒரு சீனா நாட்டு நிறுவனம் கோடிக்கணக்குல எனக்குத் தரேன்னு சொன்னாங்க. அந்த ஆள் என்னனா எனக்கு ரகசியம் தராம என்னையே மிரட்டினான்..."

அன்று சந்திர வர்மன் வந்து பாரதியிடம் பேசிச் சென்றதும் அவரைப் புகைபடமெடுத்து பாரதி சாரையே மிரட்டினான் சமுத்திரன்.
"நீங்க இப்போ எனக்கு அந்த api தரல உங்களுக்கும் அந்த சந்திர வர்மனுக்கும் இல்லீகல் பிசினெஸ் இருக்கு அப்படி இப்படினு சொல்லி போலீஸ்ல மாட்டி விட்டுடுவேனு மிரட்டினேன். நான் இத்தனைக்கும் அந்த ஆளுக்கு மூணு சாய்ஸ் கொடுத்தேன். முதல எனக்கு இவள் (ஸ்ரீ) வேணும், இல்லை நான் அந்த ஹாஸ்பிடல் md ஆகணும். இல்லை அந்த api எனக்கு வேணும்னு கேட்டேன். பெரிய இவன் மாதிரி என்னையவே மிரட்டினான். 'நாளைக்கே உன் மெடிக்கல் லைசென்ஸை பிடுங்கி போலீஸ் கிட்டச் சொல்லி உன்னை நடு தெருவுல நிக்க வெக்கறேன்' அப்படி இப்படினு சொன்னான். அப்போ தான் அவன் இனிமேல் இருக்கறது எனக்கு நல்லதில்லைனு நெனச்சு அன்னைக்கே அவன் குடும்பத்தோட தூக்க முயற்சி பண்ணேன். அந்த பொண்ணைத் தவிர அவங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஆனாங்க. ஆனாலும் அந்த கிழவன் அந்த api ரகசியத்தை என்கிட்ட இருந்து மறைச்சிட்டான். அப்போ தான் யோசிச்சேன் எனக்கு இந்த ஹாஸ்பிடல் என் கண்ட்ரோல்ல வரணும்னு உடனே அந்த போட்டோசை எல்லாம் அந்த முட்டாள் ஐராவதி கிட்ட அனுப்பினேன்..."

"எனக்கு சின்ன வயசுல இருந்து அவளைத் தெரியும். ஆமாம் அந்த டாக்டர் என்னை மட்டும் எப்போவாது அவர் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவாரு. அப்போ ஏன்னு தெரியில இப்போ தெரியுது... ஐராவதியை சின்ன வயசுல இருந்து நல்லா வாட்ச் பண்ணேன். நானே ஜோன்ஸ்னு ஒருத்தனை செட் பண்ணி இப்படி எல்லாம் அவ கிட்டப் பேசினா அவளை லவ் பண்ணலாம் அவ சொத்தை வாங்கி உனக்கு ஒரு ஷேர் தரேன்னு சொன்னேன். அவளுக்கு மாதுளையைப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். இன் பேக்ட் மாதுளை மேல அவளுக்கு இருந்த வெறுப்பை எனக்கு சாதகமா யூஸ் பண்ணேன். மேலும் இந்திரனும் இமைய வர்மனும் தான் அவ அப்பா அம்மாவோட சாவுக்கு காரணம்னு சொன்னேன். திரு மேல கூட அவளுக்கு ஒரு வெறுப்பை வர வெச்சேன். அவ கிட்ட இருந்து பணத்தை வாங்கி அதை வெச்சு இந்திரனுக்கு அந்த கார் ஆக்சிடெண்ட்டை பிளான் பண்ணேன். உண்மையிலே அப்போ வரை இவங்களை இப்படிக் கடத்தி வெக்கணும்னு எனக்கு பிளான் இல்ல. ஆனா அன்னைக்கு லாவகமா இதுங்க பிழைச்சிடுச்சிங்க. சரி இதை வைத்து ஒரு பிளான் பண்ணலாம்னு தான் அன்னைக்கே அந்த ஹாஸ்ப்பிட்டல்ல ரெண்டு பிணத்தை வெச்சு ஆள் மாறாட்டம் பண்ணேன். இந்த கேசை கமல் வேலை செய்யும் ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ண வெச்சு அங்க இருந்த பியூன் வார்டு பாய் உதவியோடு எல்லாம் சக்சஸ் பண்ணேன். யாரும் கண்டுப் பிடிக்காத மாதிரி இதெல்லாம் சரியா பண்ணேன்..."

"இதெல்லாம் எப்படி ஐராவதி நம்புனா?"

"அவ ஒரு முட்டாள். சின்ன வயசுல இருந்து அதுக்கு பேண்டேசி கதை மேல ஒரு விருப்பம். நான் ஒரு பேண்டஸி கேரக்டர் மாதிரி நான் அதோட வெல் விஷேர் மாதிரி நான் சொல்றதெல்லாம் நடக்கும்னு அவளை நம்ப வெச்சேன். அது படி தான் ஜோன்ஸ அவளோட லவ்வர்னும் அவன் தான் அவளோட சிந்துபாத்னும் (லைலா சிந்து பாத்) அவன் தான் அவளோட பிரின்ஸ் சார்மிங்க் (சிண்ட்ரெல்லாவின் காதலன்) என்றும் அந்த சிண்ட்ரெல்லா கதையில வர அவளோட கெட்ட ஸ்டேப் சிஸ்டர் தான் மாதுளையினும் சொல்லி சொல்லி அவளை பிரைன் வாஸ் பண்ணேன்..."

"ஐராவதி ஒரு களிமண்ணு. நான் பிடிச்சாலும் பொம்மை வரும் நீங்க பிடிச்சாலும் பொம்மை வரும். சரி அவளை கல்யாணம் பண்ணியாவது அந்த ஹாஸ்பிடலை அடையலாம்னு நெனச்சா அதுக்கும் அந்த பாரதி முட்டுக்கட்டை போட்டுட்டான். திரு தான் அவளுக்கு ஏத்தவனாம். அதையும் என்கிட்டயே சொன்னான்..."

"இதுல தயாளன் எப்படி வந்தாரு?"

"நானே தான் எல்லாம் கண்டுப்பிடிச்சு என் அம்மா தாட்சாயிணி குடும்பத்தைத் தேடிப் போனேன். அப்போ தான் என் மாமாவும் பெரிய ஆளுன்னு தெரிஞ்சது. அவரு கிட்ட என்னைப் பற்றி எல்லாமும் சொன்னேன். அவரு நம்பல... அவருக்கும் எனக்கும் ஒரு dna டெஸ்ட் பண்ணேன். அப்போ தான் நம்புனாரு. அந்த ஆளுக்கும் அந்த வர்மா குடும்பத்து மேல பகையிருந்திருக்கு ஆனா அவ்வளவு பெரிய குடும்பத்தை எதிர்க்க அவருக்குத் துணிவில்லை. நான் அந்த ஆளுக்கு கூட இருந்து எல்லாம் செய்யுறேன்னு சொன்னேன். ஏனோ அந்த ஆளுக்கும் பழி வாங்க எல்லாம் இஷ்டமில்லை போல... நானே தூண்டி தூண்டி தான் இந்திரனைக் கொல்ல திட்டம் போட்டுக் கொடுத்தாரு. ஆனா அந்த ஆளும் சும்மா இருந்திருக்கலாம்... அவரும் பெரிய டிடெக்டிவ் ஆச்சே? என்னைப் பற்றித் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணி நான் தான் பாரதியோட கொலைக்கும் காரணம்னு தெரிஞ்சு கூடவே இதுங்க (ஸ்ரீ, சிந்து) இன்னும் உயிரோட இருக்கும் வரை அந்த ஆளுக்கும் தெரிஞ்சிருக்கு. இதுவும் இல்லாம கடைசியா என்கிட்ட என்னென்னெமோ சொன்னான். நான் இமைய வர்மனோட பையன் இல்லைனு திரும்ப அந்த ஆளு சொல்ல எனக்கு இவன் உயிரோட இருக்கறதும் ஆபத்துனு பட்டது அது தான் அன்னைக்கு அவனைக் கொல்ல காசிமேடு கஜாவைப் பிடிச்சு உடம்புல அந்த மருந்தைத் தெளிக்கச் சொன்னேன். நீ தானே அன்னைக்கு அந்த ஆளைக் காப்பாற்றியது?"

"சரி எப்படி இமைய வர்மன் தான் உன் அப்பான்னு கன்பார்ம் பண்ண?"

"எங்க ஆஸ்ரமத்துல பழைய பைல்ஸ் எல்லாம் எடுத்துப் பார்க்கும் போது அதுல என் பேருக்கு பக்கத்துல வர்மானு இருந்தது. கூடவே கீழ அந்த ஆளோட கையெழுத்தும் பேரும் இருந்தது. அப்றோம் பாரதி சார் கிட்டக் கேட்டதும் அந்த ஆள் ஆமா நீ வர்மா குடும்பத்தோட வாரிசுன்னு சொன்னான். என் அம்மாவைப் பற்றி விசாரிச்சேன். அவங்க சென்னையில வர்மா குரூப்ஸ்ல தான் வேலை செஞ்சாங்களாம். அதை அந்த இமைய வர்மன் தான் பார்த்துக்கிட்டானாம். ஆமா எதுக்கு அந்தக் கேள்வியை என்கிட்டக் கேட்ட? அதாவது என் அப்பா யாருனு தெரியாம வேற ஒருத்தரை பழி வாங்குறதா?"

"நீ வர்மா குடும்பத்துப் பையன் தான். உன் அம்மா பேரு தாட்சாயிணி தான். தயாளன் தான் உன் மாமா தான். ஆனா உன் அப்பா இமைய வர்மன் இல்ல. அவரோட தம்பி சாரி சாரி அவரோட ரெட்டைத் தம்பி சந்திர வர்மன். எஸ் எந்த சந்திர வர்மனை வெச்சு பாரதி சார் கொலையை மாட்டி விடப் பார்த்து அதன்மூலமா வர்மா குடும்பத்தையே அழிக்க நெனச்சியோ அதே சந்திர வர்மன் தான் உன் அப்பா. அவர் அதாவது உன் அப்பாவும் உன் தாத்தாவும் பண்ணப் பாவத்துக்கு தப்புக்கு ப்ராயச்சித்தமா கூடவே குழந்தை இல்லாம இருந்த அவருக்குக் குழந்தையோட அருமை தெரிந்தவராக உன்னை வளர்க்க அதும் எப்படி எப்படி? நீ ஒருத்தன் சகல சௌகரியங்களுடன் வாழ உன்னை மாதிரியே அனாதையா விடப்பட்ட ஆயிரமாயிரம் குழந்தைகளை வளர்த்தி படிக்க வெச்சிட்டு இருக்காரு. இதுல ஒருவேளை உனக்கு சந்தேகம் இல்லைனா ஒரு dna டெஸ்ட் கூட எடுத்துப் பாரு. நீ தான் டாக்டர் ஆச்சே? என்ன தான் ட்வின்சா இருந்தாலும் dna வேற வேறயா தானே இருக்கும்? உனக்குத் தெரியாதா என்ன?" என்றான் தருண்.

அப்போது போலீஸ் உடன் இமையனும் சந்திரனும் அங்கே வந்தனர். ஏனோ சிந்துவைக் கண்டவர் ஓடிச் சென்று அணைக்க அங்கே ப்ரக்னெண்டாக இருந்த ஸ்ரீயின் முன் மண்டியிட்டு அவள் வயித்தில் முகம் புதைத்து அழுதுகொண்டு இருந்தான் இந்திரன். இனி தன் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒரு நிகழ்வை கனவா இல்லை நினைவா என்று தெரியாமல் இருந்தாள் ஸ்ரீ. சிந்துவும் கதிரவனின் கரம் கோர்த்து நின்றாள்.

"என்னை மன்னிச்சுடு லேக்கு பேபி... நான் தானே இதுக்கெல்லாம் காரணம்?" என்று அழும் இந்திரனின் தலை கோதியவள்,"இஜித்... ப்ளீஸ் நம்ம வீட்டுக்குப் போலாம்... எனக்கு இந்த இடத்தைப் பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு..." என்று சொல்ல அவளைப் பூப்போல தன் கரத்தில் ஏந்திச் சென்றான் இந்திரன். ஏனோ அந்த சமுத்திரன் முன்னால் நின்றவன்,"தேங்க்ஸ்... என் ஸ்ரீயையும் சிந்துவையும் இதுவரை கொல்லாம இருந்ததுக்கு..." என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சந்திரன் தான் சமுத்திரன் முன்பு வந்து அமர்ந்து அவன் காலில் வலியும் ரத்தத்தைப் பார்த்து அழ, இமையனோ இனிமேல் தனக்கு இந்த சகவாசமே வேண்டாம் என்பதைப் போல் சிந்துவை அழைத்துச் சென்றார்.

சமுத்திரன் பேசியதை எல்லாம் ரெக்கார்ட் செய்தபடியே இருந்தான் தருண். போலீஸ் வந்து அவனை அழைத்துச் சென்றது. (வானிலை மாறியது!)

அடுத்த எபி எபிலாக். மீதியிருக்கும் சிறு சிறு கேள்விகளுக்கும் முழு விடை கிடைக்கும். கதையும் நிறைவடையும். நாளை சந்திப்போம். நன்றி...
 
ஆக ,சமுத்ரன் தான் வில்லன்....omg
ஒரு நல்ல suspense ah, thirill ah story , நீண்ட நாள் கழித்து படித்தேன்.... Superb ? ? ? ?????

இப்போ ,எல்லாருக்கும் சுபம் கொடுத்து happy ending கொடுத்திடுங்க.....
???????
 
பிஸி ஷெட்யூல்லயும் எங்களுக்காக உடனே உடனே எபி குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ரைட்டர் ஜி???

ரொம்ப ரொம்ப விருவிருப்பா த்ரில்லிங்கா சட்டுனு கெஸ் பண்ண முடியாதபடி அருமையா இருந்தது.... சூப்பர் ப்ரோ ?????????
 
ஆக ,சமுத்ரன் தான் வில்லன்....omg
ஒரு நல்ல suspense ah, thirill ah story , நீண்ட நாள் கழித்து படித்தேன்.... Superb ? ? ? ?????

இப்போ ,எல்லாருக்கும் சுபம் கொடுத்து happy ending கொடுத்திடுங்க.....
???????
அவனே தான் வில்லன்... மிக்க நன்றி சகி...??? � கண்டிப்பா சுபம் தான் போடுவேன்...
 
பிஸி ஷெட்யூல்லயும் எங்களுக்காக உடனே உடனே எபி குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ரைட்டர் ஜி???

ரொம்ப ரொம்ப விருவிருப்பா த்ரில்லிங்கா சட்டுனு கெஸ் பண்ண முடியாதபடி அருமையா இருந்தது.... சூப்பர் ப்ரோ ?????????
எனக்கும் உங்களை எல்லாம் ரொம்ப சஸ்பென்ஸ்ல வைக்க மனமில்லை... நன்றி?� மிக்க நன்றி சகி
 
Top