Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-30

Advertisement

praveenraj

Well-known member
Member
இப்படியொரு கேள்வியை இந்திரனோ கதிரவனோ கேட்டிருந்தால் பரவாயில்லை ஆனால் யாரென்று தெரியாத ஒருவன் கேட்டதும் இமையன் முகம் முழுக்க வேர்த்தது. 'அதும் இந்தக் கதையின் தொடக்கப் புள்ளியையே பிடித்து விட்டானே இவன். எப்படி?' என்று அவர் தருணை அதிசயமாகப் பார்த்தார்.

"தருண் உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?" என்றான் கதிரவன்.

"உங்களுக்கு...?" என்று இழுத்தார் தாமோ,

இந்திரனுக்கு பதிலே வரவில்லை. அவன் ஏற்கனவே பேசியதில் நிறைய அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்க இப்போது தருண் பேசியது அவனுக்கு வியப்பின் உச்சமாக இருந்தது.

அந்த நிசப்தத்தைக் கலைக்க எண்ணி தருணே தொடர்ந்தான்,"நீங்க இப்போ பேசியே தீரணும் மிஸ்டர் இமையவர்மன். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நீங்க இப்போ பேசுனா தான் இந்திரனுக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல இருந்து சந்தான பாரதி கொலை வரை ஏன் இதுல மாட்டியிருக்கும் உங்க தம்பி அந்த டாக்டரோட பொண்ணுங்க ஐராவதி மற்றும் மாதுளை வர எல்லோரும் தப்பிக்க முடியும். சொல்லுங்க? சந்தான பாரதி இறப்புக்கு பிறகு நீங்க பகிரங்கமா அவரோட குடும்பத்துல உங்களுக்கும் பாரதிக்குமான நெருக்கத்தைக் காட்டிக்கல? ஏன் அவரு உயிரோட இருக்கும் போதே நீங்க அவரை எப்போவாது தான் பார்த்து பேசிப்பீங்க. இன்பெக்ட் உங்களுக்கு அவருக்கு இப்படி ஒரு பிரண்ட்ஷிப் இருப்பதே அவர் குடும்பத்துக்கோ இல்ல உங்க குடும்பத்துக்கோ யாருக்கும் தெரியாது. இப்போ வரை... அந்தப் பொண்ணை உங்க கூட நீங்க தங்க வெச்சுக்க நினைக்கும் போது உங்க நலம் விரும்பி..." என்ற தருண் தாமோவைப் பார்த்து,"எப்படியும் வேண்டாம்னு சொல்லியிருப்பாரு. என்ன சார் சரியா? இது கெஸ் தான்..." என்றதும், இமையன் மட்டுமின்றி எல்லோரும் உறைந்து நிற்க,

"சார் இதுக்கு மேலையும் சில விஷயங்களை நான் தெரிஞ்சிருக்கேன். அதை நானா சொல்றதைக் காட்டிலும் நீங்களா?" என்று முடித்தான் தருண்.

இமையன் இனியும் தான் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்தவர் தனக்கும் சந்தான பாரதிக்குமான நட்பையும் பழக்கத்தையும் சொல்லத் துவங்கினார்.
****************
நல்ல வேளையாக தாமோ அனுப்பிய மாதுளையின் புகைப்படம் தயாளனை வந்து அடைந்தும் அவர் இன்னும் அதில் தீவிரமாக இறங்கவில்லை.

தான் செய்த எதுவும் யாருக்கும் தெரியாது என்ற அசட்டு தைரியத்தில் உலா வந்தான் அவன். அவனைப் பொறுத்த வரையில் எல்லாம் சரியாகவே திட்டமிட்டு விட்டதாக ஒரு மிதப்பு. தான் பற்ற வைத்த நெருப்பு வர்மா குழுமத்தை மொத்தமாக அழிக்கும் என்றும் கூடவே இந்த சந்தான பாரதியின் ஹாஸ்பிடலும் தன் கண்ட்ரோலுக்கு வரும் என்றும் ஐராவதியை இறுதியாக ஒரே ஒரு தூண்டல் செய்தால் மாதுளை மூலமாக இந்திரன் அழிந்து அதைக் கண்டு பிடித்தாலும் ஐராவதி மாட்டி அதற்குள் அந்த ஹாஸ்பிடல் நிர்வாகத்தைக் குழப்பிவிட்டு இறுதியாக அந்த ஸ்ரீகும் சிந்துவுக்கு குட் பை சொல்லிடலாம் என்று நினைத்துக்கொண்டு மிதப்பில் திரிந்தான் அவன். பாவம் நாளை அவன் குட்டு முழுவதும் உடையும் என்று அவன் அறியவில்லை. ஒருவேளை அவனின் திட்டம் அனைத்தும் அவனுக்கு எதிராவே திரும்பினால்? அவன் நிலை தான் என்ன? யார் அவன்? எதற்கு இதெல்லாம் செய்கிறான்? அவனுக்கு இதில் உதவும் நபர் யார்?
****************
தனக்கு வந்த ஷோ காஸ் நோட்டீசை படித்தவன் உடனே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து தங்கள் மருத்துவமனையின் லீகல் அட்வைசர் ஆன நீலகண்டனின் ஜூனியரைத் (ரகுநந்தன்) தொடப்புகொண்டு விஷயத்தைப் பற்றித் தெரிவிக்க அப்போது தான் ஒரு கேஸ் ஹியரிங் முடித்து வந்த சுபத்திரா,"என்ன விஷயம் ரகு?" என்றதும் அவளே வாங்கிப் பேசினாள்.

"சுபத்திரா ஸ்பீக்கிங்..."

"மேடம் நான் திருக்குமரன். கண்மணி ஹாஸ்பிடல் md...: என்றதும் புரிந்தவளாய் அவள் ஆமோதிக்க இதுவரை நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொன்னான். நேற்று ஐராவதியிடமிருந்து வந்த வக்கீல் நோட்டீஸ் முதல் தற்போது வந்துள்ள ஷோ காஸ் நோட்டீஸ் வரை சொன்னவன்,"இப்போ என்ன பண்றது?"

"சார் இப் யூ டோன்ட் மைண்ட் நீங்க இப்போ நேர்ல வர முடியுமா?" என்றதும் திருக்குமரன் உடனடியாக சுபத்திராவைத் தேடிச் சென்றான்.

அங்கே சுபத்திரா வேறொரு கேஸ் விஷயமாக இருந்தாலும் தருண் நேற்று வந்து சென்றது என்ன ஆனது ? என்று யோசிக்கும் தருவாயில் தான் தாமோதரன் அனுப்பிய வக்கீல் சுபத்திராவின் அலுவலகம் வந்து விஷயத்தைத் தெரிவிக்க நாளை அப்பீல் செய்ய தேவையான டாகுமெண்ட்ஸ் எல்லாம் தயார் படுத்தச் சொல்லி தன் ஜூனியரிடம் சொன்னாள்.
*******************
அங்கே ஐராவதியை பாலோ பண்ணச் சொன்ன தருண் பேச்சைக் கேட்டு தருணின் நண்பன் ஐராவதியை பாலோ செய்வதற்காகக் காத்திருந்தான்.

எப்போதும் போல் ஜோன்ஸ் அங்கே வந்து வழக்கத்திற்கும் மாறாக அவர்களிடம் உரையாடல் சற்று ஆக்ரோஷமாக இருந்தது.
"ஐராவதி நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்..." என்று ஜோன்ஸ் சொல்ல ஏனோ அவன் சொல்லில் அதிகம் பதறிய அவள் அவனின் உறவுக்காக அதிகம் மன்றாடினாள். இப்படி திடீரென்று தன்னை விட்டுப் பிரிந்து செல்லத் துணிந்த ஜோன்சை எப்படியாவது சமாதானம் செய்ய முயன்றாள் ஐராவதி.
******************
அங்கே தருணின் கிடுக்குபிடியானக் கேள்விகளுக்கு பதிலளிக்க வாயைத் திறந்தார் இமையவர்மன்.

"எங்க பிசினெஸ்ஸை பற்றி உங்க எல்லோருக்கும் தெரியும். நானும் சந்திரனும் ரெட்டைக் குழந்தைகள். எங்களுக்கு ஒரு அண்ணா இருந்தாரு. அவரு சின்ன வயசுலே இறந்துட்டார். எங்க அப்பாக்கு எல்லாமுமா இருந்தார் அவர். ஆரம்பகாலத்துல பிசினெஸ் துவங்கின அப்போ எல்லாம் அவர் தான் எங்க அப்பா கூட இருந்தவர். அவருடைய எதிர்பாரா மரணம் எங்க அப்பாவை ரொம்ப பாதித்தது. நாங்க என்னத்தான் ரெட்டைக் குழந்தைகளா இருந்தாலும் நான் அப்படியே எங்க அம்மா மாதிரி. இவன் (சந்திரன்) எங்க அப்பா மாதிரி. நான் எதிலும் பொறுமை நிதானத்தைக் கடைப்பிடிக்கறவன் ஆனா இவன் எல்லாத்துலயும் ஒரு வேகம். எங்க அப்பாகும் அதனாலே இவன் மேல அதிக பிரியம். எனக்கும் அது புரியும். அப்போ தான் எங்க பிசினெஸ் ரொம்ப நல்லா வளர்ந்தது..."

"நாங்க அதுவரை மும்பையில் மட்டும் பிசினெஸ் பண்ணினோம். ஆனா அதற்கு அப்றோம் சென்னையிலயும் புதுசா தொடங்க பிளான் பண்ணிய சமயம் அது. அந்த சென்னை பிரான்சை முழுசா சந்திரன் கையில தர தான் என் அப்பா விரும்பனார். அதுக்காக இவனும் நிறைய வாட்டி இங்க வந்தான்..."

ஏனோ இமையன் இதைச் சொன்னதும் சந்திரன் முகம் லேசாக மாறியது. பின்னே இந்த பிளேஷ்பேக்கே அவரைப் பற்றியது தானே?

"வந்தவன் பிசினெஸ் சம்மந்தமா பேசியிருந்தா நல்லாயிருந்திருக்கும். அவன் கவனம் இங்க வேலை செய்த தாட்சாயிணி மேலயும் போனது..." என்றதும் இது எப்படி இவருக்குத் தெரியும் என்று அதிர்ச்சியடைந்தார் சந்திரன். பின்னே தனக்கும் தன் தந்தைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று நினைத்திருந்தவருக்கு இது ஆச்சரியம் தான்.

"அவ கிட்ட அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பால்ஸ் ஹோப் கொடுத்திருக்கான் இவன். அதை நம்பி அந்தப் பெண்ணும் இவன் கிட்ட எல்லை மீறிப் பழகியிருக்கு. அப்போ தான் எங்க அப்பா எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள் அதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கையான சகுந்தலா கோகிலா அவங்க ரெண்டு பேரையும் எங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாரு. ஆமா எங்களைக் கேட்காமலே தான் முடிவெடுத்திருக்கார்..."

"இவன் எங்க அப்பா கிட்ட என்ன பேசினான்னு தெரியாது. இல்ல அவரு இவன்கிட்ட என்ன சொன்னாருன்னு தெரியில, அப்படியே தன் முடிவை மாற்றிக்கிட்டான். எங்களுக்கு கல்யாணம் நடந்தது. பிசினெஸ் எல்லாம் ஒன்னாவே இருந்தாலும் என்னைத் தான் சென்னைக்கு அனுப்புவார் எங்க அப்பா. எனக்கும் அது ஆச்சரியமா இருந்தது. அப்றோம் அவனை மும்பையில் வெச்சிக்க ஆசைப்படுறாருனு நானா நெனச்சிட்டு சும்மா இருந்துட்டேன். அப்போ தான் கோகிலா கர்ப்பமானாள். அதாவது உங்க அக்கா அதாவது இவனோட பெரிய பொண்ணு, வைஷாலி உருவானாள்."

"அப்போ தான் நான் ஒருமுறை சென்னை வரும் போது ரோட்டல அந்தப் பொண்ணைப் பார்த்தேன். ப்ரெக்னன்ட்டா மயங்கி இருந்தா. எனக்கு யாருனு தெரியாம ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்ததும் தான் இதெல்லாம் தெரிஞ்சது. பாவம் இவங்க துரத்தி அனுப்பிச்சதும் அந்தப் பொண்ணோட அண்ணனும் அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டானாம். அப்றோம் எங்கெங்கோ வேலை செஞ்சு பொழைச்சிருக்கா. அந்தப் பெண்ணும் முதல என்னைப் பார்த்து இவனுன்னு சொல்லித் திட்டும் போது எனக்கு எல்லாம் புரிஞ்சது. அந்தச் சமயத்துல தான் என்னோட நெடு நாள் நண்பன் அப்றோம் கான்டெக்ட் விட்டுப் போன பாரதியைப் பார்த்தேன். அவன் டாக்டர்ங்கறதால அவனோட ஹாஸ்பிடல்லயே அந்தப் பொண்ணை பத்திரமா பார்த்துக்கச் சொன்னேன்."

"ஒருநாள் எனக்கொரு போன், இந்த மாதிரி அந்தப் பொண்ணுக்கு குழந்தை பிறந்ததாவும் ஆனா அந்தப் பொண்ணு செத்துப்போயிட்டதாவும் சொன்னாங்க. இதுக்கு நடுவுல அங்க மும்பையில் சகுந்தலாவுக்கும் கோகிலாவுக்கும் நிறைய மனஸ்தாபங்கள் வர ஆரமிச்சது. எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லைங்கறது வேற எங்களுக்கு ரொம்ப ப்ரெஸ்ஸார் தந்தது. பொதுவாவே ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லைனா அவங்க எவ்வளவு நெருக்கடியை பேஸ் பண்ணனும்? அதுலயும் ஒரே நாள் கல்யாணம் ஆனா அதும் ரெட்டைப் பிறவிகளான எங்களுக்குள்ள ஒருத்தருக்கு குழந்தை பிறக்கப் போகுது இன்னொருத்தருக்கு இல்லைன போது நிறைய போட்டி மனஸ்தாபம் உண்டானது. அந்தச் சமயத்துல எங்க அப்பாக்கு வேற உடம்பு சரியில்லாம போக அடுத்து பிசினெஸ் யார் டேக் ஓவர் பண்ணப் போறாங்கன்னு பிசினெஸ் உலகமே எங்களைக் கேள்வியாப் பார்த்தது. எங்க இந்த சாம்ராஜ்யம் ரெண்டா பிரிஞ்சிடுமோனு எங்க அப்பாக்கும் ஒரு பயம். அதனால் உடனே என்னையும் சகுந்தலாவையும் சென்னைக்கு அனுப்பி அங்க தங்க சொல்லிட்டாரு. அப்போ வைஷாலியும் பிறந்துட்டா. வீடே ரொம்ப சந்தோசமா இருந்தது. இந்தச் சமயத்துல சொல்லப்போனா வைஷாலிக்கு முன்னாடியே பிறந்த அந்தப் பையனை என்ன பண்றதுனே எங்களுக்குத் தெரியில. நான் லீகலா அடாப்ட் பண்ணலாம்னு கூட நெனச்சேன். ஆனா தாமோ தான் தடுத்துட்டான். இதுனால நாளைக்கு நிறைய சிக்கல் வரும்னு அந்தத் திட்டத்தைத் தடுத்துட்டேன். ஆனா இப்படி எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாம வளரப்போற அந்தப் பிஞ்சு குழந்தைய என்ன செய்யனு எனக்குப் புரியில. இறுதியா முடிவானது தான் அந்த ட்ரஸ்ட். அந்த ஒரு பையனுக்காக ஊர்ல இந்த மாதிரி இருக்கும் நிறைய குழந்தைகளைக் காப்பாற்ற ஆரமித்தேன்..."

"பாரதிக்கு என்னால முடிஞ்ச எல்லா உதவியும் செஞ்சேன். அவன் ஒரு ட்ரஸ்ட் ஆரமிச்சு நிறைய குழந்தைகளை அதுல சேர்த்து வளர்த்த ஆரமிச்சான். நானும் பலமுறை அந்தக் குழந்தையைப் பார்க்கணும்னு நெனச்சியிருக்கேன் ஆனா என்கிட்ட அவனை பாரதி காட்டவேயில்லை. வருடங்கள் ரெண்டு மூணு போச்சு அதற்கப்றோம் வளர்ந்த விஞ்ஞானம் மூலமா நிறைய டிரீட்மென்டுக்கு அப்றோம் பிறந்தவன் தான் இந்திரன். ஏனோ என் அப்பாக்கு வாரிசாக ஒரு பையன் பிறந்தானு தெரிஞ்சதுமே அவனை தன் கூடவே கூட்டிட்டுப் போய் வளர்த்த ஆரமித்தார். அப்றோம் தான் இவனுக்கு ஹர்ஷா பிறந்தான். எங்களுக்கும் கமலேஷ் சிந்துனு பிறக்க கூடவே ஸ்ரீயையும் எங்க கூடவே வளர்த்தோம். அப்புறோம் எங்க அப்பாவும் இறந்தார். இந்திரனை நாங்களே இங்க கூட்டிட்டு வந்து வளர்த்தோம்..."

"எனக்கு இந்திரன் கமலேஷ் சிந்து ஸ்ரீ எல்லோரும் சகல வசதியுடன் வாழுறதைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் குழந்தையும் ஞாபகம் வரும். அவனும் அவன் ஆசைப்பட்ட எல்லாமும் அவனுக்குக் கிடைக்க நிறைய நிறைய அந்த ஹாஸ்பிடலுக்கு செய்ய ஆரமித்தேன். பாரதியோட கனவான குறைந்த விலை மருந்து கண்டுப்பிடிக்க அவன் செய்யும் எல்லா ஆராய்ச்சிக்கும் நான் தான் ஸ்பான்சர். இப்படி உருவானது தான் எங்க நட்பு. அந்தப் பையன் ஆசைப்பட்டதெல்லாம் அவனுக்குக் கிடைக்கும்னு அந்த இருக்கும் ஒவ்வொரு குழந்தை ஆசைப்பட்டதையும் நான் செஞ்சேன். வெளிப்படையா நான் செய்ய விரும்பல. ஒருவேளை இதுனால நாளைக்கு ஏதாவது சிக்கல் வருமோனு நெனச்சி தாமோ மூலமா தான் எல்லாம் செஞ்சேன். செய்யுறேன். ஏன் பாரதி இறந்ததுக்கு அப்றோம் கூட நிறைய செஞ்சிட்டுத் தான் இருக்கேன். இந்தப் பொண்ணு (மாதுளை) பாரதி எனக்கு எழுதிய லெட்டர் பார்த்து அவன் பொண்ணையும் கண்காணிக்கும் பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன் . அவளுக்கு வேண்டியதெல்லாம் இன்டைரக்ட்டா செய்யுறேன்..."

"என் பொண்ணு இறந்ததும் ஏனோ அந்த இடத்துல சந்திரன் இருந்தானுனு தெரியவந்தது. என்ன ஆனாலும் சரினு தான் போட்டியா பிசினெஸ் ஆரமிச்சேன்..."

"ஆமா இதுக்கும் அந்த ஆக்சிடெண்டுக்கும் பாரதி சாவுக்கும் என்ன சம்மந்தம்?" என்றார் இமைய வர்மன்.

"யாரு என்னன்னே தெரியாம வளர்ந்த அந்தக் குழந்தை தன்னோட அப்பா யாரு? தன்னோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்னு யோசிச்சு பெரிய பையனா வளர்ந்தப் பிறகு ஒருவேளை நீங்க தான் அவனோட அப்பா உங்களால தான் அவன் இந்த நிலைமைக்கு ஆளானுனு எல்லாம் தெரிஞ்சிருந்தா இந்தக் காரணத்துக்காக ஏன் உங்களையும் உங்க குடும்பத்தையும் பழி வாங்க நெனச்சு இந்த உலகத்துலயே பெரிய சோகமான புத்திரச் சோகத்தை உங்களுக்குப் பரிசளிக்க நெனச்சியிருக்கக் கூடாது?" என்றதும் இந்திரன், கதிரவன், மாதுளை, சந்திரன், குகன், தாமோ ஆறு பேரும் தருணை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

"அப்போ சிந்துவைப் பழிவாங்க இது தான் காரணமா?" என்ற கதிரவனுக்கு,

ஆமாம் என்பதைப் போல் தலையாட்டினான் தருண்.

"அப்போ ஸ்ரீயை ஏன் கொல்லனும்?"

"வெரி சிம்பிள். ஸ்ரீயை அவன் உங்ககூட எங்கையாவது பார்த்திருக்கலாம். இல்ல ஏன் ஸ்ரீயை எங்கயாவது பார்த்து அவ மேல ஆசைப்பட்டு அவளை ப்ரொபோஸ் செய்யப் போகும் போது நீங்க தான் அவளோட காதலன்னு தெரிஞ்சி இருக்கலாம் இல்ல எப்பயுமே ஸ்ரீ உங்க குடும்பத்தோடே சுத்திட்டு இருக்கும் காரணத்தாலும் இருக்கலாம் தனக்குக் கிடைக்காதவ தன்னோட பரம எதிரியான போட்டியான உங்களுக்கும் கிடைக்கக் கூடாதுனு நெனச்சியிருக்கலாம்..."

"தருண் ப்ளீஸ் யாரவன்னு சொல்லுங்க?"

மாதுளை சைகையால் எதையோ கேட்க வர,

புரிந்தவனாக,"ஒருவேளை அவன் அந்த api பார்முலாவை யாருக்காவது வெளிய விற்க நெனச்சி இருக்கலாம். அதைத் தெரிந்து பாரதி சார் அவனைக் கூப்பிட்டு கண்டிக்க ஏற்கனவே தன் நிலைமைக்கு அவர் தான் காரணம்னு நெனச்சு கோவத்துல இருந்தவன் அவர் மீதான வன்மத்துல இதைச் செஞ்சியிருக்கலாம்..."

"அப்போ என்னைய எதுக்கு மாட்டிவிட பார்க்கணும்?" என்ற சந்திரனை ஏனோ இமையன் முறைக்க அமைதியாக தலை கவிழ்ந்தார் சந்திரன்.

"இது என்ன சார் கேள்வி? அவனுக்கு பொதுவா ஒரே எதிரி. அது வர்மா குரூப்ஸ் அழியனும். தனக்குக் கிடைக்காத எதுவும் மற்றவர்களுக்கும் கிடைக்கக் கூடாதுனு ஒரு ரேண்டம் காரணமா இருக்கலாம்..." என்றான்.

"இதுல ஐராவதி எதுக்கு வரணும்?"

"வெரி சிம்பிள், டாக்டர் பாரதி சாரை அவனே கூடக் கொன்னுட்டு அந்தப் பழியை நோகாம உங்க மேல போட்டுட்டு அதை போட்டோ எடுத்து அந்த ஐராவதி மூளையைச் சலவை செய்துட்டு இப்போ அவளை வெச்சே இந்திரன் ஆக்சிடெண்ட்டை ஏற்படுத்தி பிறகு இந்திரனை ஆள் வைத்து கொல்ல முயற்சித்து ஒருவேளை போலீஸ் இதைக் கண்டுப் படிச்சாலும் வர்மா சகோதரர்கள் நீங்களும் ஐராவதி, மாதுளை இவங்க தான் சீன்ல வருவீங்க. இதுக்கு தான் ஐராவதி அகௌண்ட்ல இருந்து பணத்தை வெளிப்படையா அனுப்பியிருக்கான். அவனுக்கு உங்களை அழிக்கணும். அதுக்கு ஐராவதியோட இன்னொசென்ஸ் ஒரு வழியா இருந்திருக்கலாம்..."

"சரி ஸ்ரீயும் சிந்துவும் இன்னும் உயிரோட தான் இருக்காங்கனு எப்படிச் சொல்றீங்க? அவங்களை உயிரோட வெச்சியிருக்க வேண்டிய அவசியம் என்ன?"

"அதாவது அவங்க ரெண்டு பேரும் இறந்துட்டாங்கனு நீங்க இப்போ நினைக்கறீங்க. இந்தச் சமயத்துல அவன் இந்திரனை மீண்டும் கொன்னுட்டு அப்போ அந்த நிமிஷம் ஸ்ரீ சிந்து ரெண்டு பேரையும் உண்மையிலே கொன்னு உங்களுக்கு ஒரு மீள முடியாத துயரம் வலி இவ்வளவு நாள் உயிரோட இருந்தும் அவங்களைக் காப்பாற்றாம விட்டுட்டேனேனு உங்களை உங்க மனசாட்சியே அணுவணுவா சித்தரவதைச் செய்ய நெனச்சி இருக்கலாம். இல்லை ஒருவேளை உண்மையாவே கூட அவங்க ரெண்டு பேரும்..." என்று சொல்ல வந்த தருண்,"வேண்டாம். லெட்ஸ் ஹோப் தெய் ஆர் ஸ்டில் அலைவ்..." என்றான்.

"அவனுக்கு எப்படி இத்தனை அறிவு? அவனுக்குப் பின்னாடி யாராவது இருக்க முடியுமோ?" என்றார் தாமோ.

"ஒரு சாதரண மனுஷனால இவ்வளவு யோசிக்க முடியுமா? எஸ் யோசிக்கலாம். ஆனா அப்படிப் பண்ணியிருந்தா கண்டிப்பா எங்கேயாவது ஒரு இடத்துல தப்பு பண்ணி இருப்பான். இந்த விஷயத்துல எந்த தப்பும் இல்லைனா அதாவது ரொம்ப தெளிவா இருந்திருக்கான். தட் மீன்ஸ் தப்பைக் கண்டுப்பிடிக்கிற ஒரு மேதை இந்தத் தப்புக்கு உடந்தையா இருந்து ஒவ்வொரு மூவ்லையும் அவனுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கலாம்..."

"யாரு?"-இமையன்,

"யாராவது?"-தாமோ

"ஐயோ சொல்லு தருண், யாரது?" என்றான் கதிரவன்.

"தயாளன். டிடெக்டிவ் புலி தயாளன்..."

"அவனா?" என்றார் தாமோ அதிர்ச்சியில்.

"எஸ்."

"ஏன்?"

"தாட்சாயிணிக்கு ஒரு அண்ணன் இருந்ததா சொன்னீங்களே, ஞாபகமிருக்கா?"

"தயாளன்?"

"எஸ்..."

"இவ்வளவு சொன்னியே, யாரவன்னு சொல்லு?"

"அவன் பாரதி சார் பார்த்து பார்த்து வளர்த்து ஆளாக்கிய டாக்டர் @#$%^.(அடுத்த எபில சொல்லிடுறேன்! ஐயோ போதும் போதும் அதுக்குன்னு இப்படியா என்னைத் திட்டுவீங்க. ஐ அம் பாவம் நல்ல சின்ன பையன்)
*********************
சுபத்திரா உடனே தருணை அழைத்து திருக்குமரனுக்கு வந்த நோட்டீஸ் பற்றி அனைத்தையும் சொன்னதும் திருவை அந்த மருத்துவமனையின் md பதவியில் இருந்து தூக்கிவிட்டு அங்கே அந்தப் பதவியில் அவன் அமர ஆசைகொள்கிறான் என்று அவனின் திட்டம் தருணிற்கு இன்னும் நன்றாகப் புரிந்தது. அப்போது தானே அந்த apiஐ கொண்டு நிறைய சம்பாதிக்க முடியும்?

கூடவே தன் எதிரிகளையும் அழித்துவிட்ட மகிழ்ச்சி அந்தக் கண்மணி ட்ரஸ்ட், மருத்துவமனை, ரிசர்ச் என்று எல்லாமும் அவன் வசம் ஆகும். அவனின் எல்லாக் கனவுக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டை போட நினைத்தான் தருண்.

நாளை காலை திருக்குமரன் அந்த மருத்துவமனையில் டாக்டர் சந்தான பாரதியிடம் பணியாற்றிய எல்லோரையும் ஒரு முறை நேரில் சந்திக்க முடிவு செய்து ஹாஸ்பிடல் போர்டு மூலமாக எல்லோருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

காலை பதினோரு மணிக்கு எல்லோரும் இங்கே அசெம்பிள் ஆக வேண்டி செய்தி அனுப்பப்பட்டிருந்தது .உள்ளுக்குள் பேரானந்தத்தில் அவன் மீட்டிங்கிற்கு செல்லக் காத்திருந்தான்.
இன்னும் இரண்டு எபியில் வானிலை முற்றிலும் மாறும்.
 
ரொம்பவும் tension பண்றிங்க bro....

அந்த dr மகேந்திரன் ..... :unsure:

அடுத்த ud யையும் இன்னைக்கு கொடுத்து புண்ணியம் கட்டிகோங்க...pls....
 
ரொம்பவும் tension பண்றிங்க bro....

அந்த dr மகேந்திரன் ..... :unsure:

அடுத்த ud யையும் இன்னைக்கு கொடுத்து புண்ணியம் கட்டிகோங்க...pls....
thank you sis... and sorry i have no time to edit... i'll finish this story tmrw for sure... sorry and thanks....???
 
உபேந்திரன் ???

ஒவ்வொரு எபிலயும் அடுத்த எபிலனு சொல்லி தப்பிச்சிட்டுருக்கீங்க :oops::oops::oops:
 
Top