Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-29

Advertisement

praveenraj

Well-known member
Member
"அதுவரை என்ன நடந்ததோ தெரியில, என் அக்கா என்கிட்ட வந்து,'எங்கேயிருந்தோ வந்த உனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசையா? நீ டாக்டர் ஆகி என் அப்பா சொத்தையை எல்லாம் ஆட்டைய போட பிளான் பண்றியானு' என்னை வார்த்தையால கஷ்டப்படுத்த நான் bba படிச்சேன். என்னோட அந்த முடிவு என் பெரியப்பாவை ரொம்ப பாதிச்சதுனு எனக்குத் தெரியும். நான் என் அக்காவைப் பற்றிச் சொல்லி அவரை மேலும் கஷ்டப்படுத்த விரும்பல..." (முன்பொரு எபியில் ஐராவதியைப் பற்றி இருக்கும் குறிப்பை மீண்டும் படிக்கவும்)
"இந்தச் சூழ்நிலையில தான் அவரு அன்னைக்கு எனக்கு ஒரு போன் பண்ணாரு. 'இங்க பாரு மாதுளை, பெரியப்பா சொல்றதை நல்லா கேட்டுக்கோ... ஒருவேளை இதுவே நான் உன்கிட்ட கடைசியா பேசுறதா கூட இருக்கலாம். ஆனா நீ எந்த சூழலிலும் உன் தைரியத்தை இழக்கக் கூடாது. அதே மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் பொறுப்பா யோசிச்சு நல்லா முடிவெடுத்து செய்யணும். இன்னொரு வேண்டுக்கோளையும் உன்கிட்ட வைக்கணும், எல்லா வீட்டுலையும் அக்காகிட்ட தங்கையை பத்திரமா பார்த்துக்கோன்னு தான் சொல்லி விட்டுட்டுப் போவாங்க. ஆனா நான் இந்த தங்கை கிட்ட உன் அக்காவைப் பொறுப்பா பார்த்துக்கோனு சொல்றேன். இன்னைக்கு நிலைக்கு என்னால எதையும் வெளிப்படையா முழுசா சொல்ல முடியாது, மனுஷங்கனு நெனச்சு நிறைய பாம்புக்கு பால் வார்த்துட்டேன். இன்னைக்கு அதுங்க என்னை பலி கேட்குதுங்க. அதை விடு,ஆனா ஒன்னு ஐராவதி நான் பெத்த பொண்ணா இருக்கலாம் ஆனா நீ தான் என் கனவை எல்லாம் பூர்த்தி செய்யப் போறவ, நாளைக்கோ இல்லை என்னைக்கோ ஒருநாள் என்கிட்ட இருந்து உனக்கொரு பார்சேல் வரலாம். அதை உன் ஹாஸ்டெல் அட்ரஸுக்கு அனுப்பறேன். அது கூட ஒரு லெட்டர் இருக்கும். அதுல ஒருத்தரைப் பற்றிச் சொல்லியிருப்பேன். அவரைப் போய்ப் பாரு. உன் வாழ்க்கையையும் உன் அக்கா வாழ்க்கையையும் அவர் பார்த்துப்பாரு. உன் அக்கா வாழ்க்கைக்கு நான் சொல்லாமலே அவர் எல்லாம் செய்வாரு ஆனா உன்னைப் பற்றித் தான் பெருசா அவருக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.வாய்ப்பிருந்தா நாளைக்கு உன்னைப் பார்க்கறேன். இல்லை இதுவே என் கடைசி ஆசை, ஐராவதியை மட்டும் கைவிட்டுடாத...' என்றவர் அழைப்பைத் துண்டித்தார். எனக்கு அவர் கிட்ட நிறைய கேட்கணும்னு நெனச்சேன். ஆனா என்னால பேச முடியல..."
"அந்தச் சூழ்நிலையில தான் மறுநாள் அவரோட இறப்பு எனக்குத் தெரிஞ்சது. எனக்கு நேற்று அவர் பேசுவதைப் பற்றி யார்கிட்டயாவது சொல்லணும்னு நெனச்சேன். ஆனா சொல்ல முடியல. முதல, என்னை அங்க யாருக்கும் தெரியாது.ரெண்டாவது என்னால பேசவும் முடியாது. அப்போதான் பெரியப்பா பெரியம்மா சாவுக்கு காரணம்னு ஐராவதி அக்கா ஒருத்தரைக் காட்டுனாங்க. அந்த போட்டோவைப் பார்த்தா என் பெரியப்பாவுக்கு அவருக்கும் பெரிய சண்டை நடந்தது தெரிஞ்சது. நானும் அவரைப் பற்றித் தெரிந்துக்க முயற்சிக்க அப்போ தான் அவங்க ரொம்ப வசதி படித்தவங்கனு தெரிஞ்சது. அது உங்க அப்பா இமைய வர்மன் தான். நாங்க எப்படி எங்க அப்பா அம்மா இல்லாம கஷ்டப் படுறோமோ அதே மாதிரி அவரை அவர் பசங்க இல்லாம பண்ண முடிவு செய்தா என் அக்கா. எனக்கும் எவ்வளவோ கோவம் இருந்தும் என் பெரியப்பா சொன்ன மாதிரி நல்லா வாழ அந்த பார்சேல் வரும்னு காத்திருந்தேன். அது வரவே இல்லை. அப்போ தான் என் அக்கா என்னை எமோஷ்னலா ப்ளாக் மெயில் பண்ணா... 'இந்தாப் பிடி பணம். செத்தது என் அப்பா தானே? நீ எங்கேயோ போய் நல்லா இரு,நானே எல்லாம் பார்த்துக்கறேன்னு' சொல்லும் போது எனக்கு என் பெரியப்பா சொன்னது தான் நினைவு வந்தது. நான் தனியா போய் என் அக்கா மிஸ்கைட் ஆகுறதை விரும்பல... சரி யார் என் அக்காக்கு பின்னாடி இருக்காங்கனு கண்டுப் பிடிக்கவும் அதேநேரம் உண்மையிலே என் அப்பா சாவுக்கு உங்க அப்பா தான் காரணமானு கண்டுப் பிடிக்கவும் தான் அவங்க பிளானுக்கு ஒத்துக்கிட்டேன். அப்போ தான் எனக்கு இன்னொரு உண்மை தெரிஞ்சது. ஏற்கனவே இந்திரனுக்கு ஆக்சிடென்ட் ஆகி அவர் தங்கையும் லவ்வெரும் இறந்துப் போயிட்டாங்கனும் அதுல பிழைத்த இந்திரனை மீண்டும் கொல்லணும்னுங்கறதும் என் அக்கா பிளான். எனக்கு இதுல நிறைய சந்தேகம்,முரண் இருந்தது. அப்போ தான் பெரியப்பா கிட்ட இருந்து எனக்கான லெட்டர் வந்தது. லெட்டர் மட்டும் தான் வந்தது. அதைப் படிக்கும் போது தான் யாரைக் கொல்லணும்னு இருக்கோமோ அவரையே மீட் பண்ண வேண்டி சொல்லி இருந்தாரு. எனக்கு நிறைய நிறைய சந்தேகம் எழுந்தது..."
"என் அக்கா சொன்ன படி அட்டகட்டில இந்திரனைக் கொலை பண்ணனும்னு போனேன். ஆனா எனக்கு என்னவோ தப்பா பட்டது. இந்திரனோட முகம் அதுல தெரிஞ்ச சோகம், வருத்தம் எல்லாம் என்னை யோசிக்க வெச்சது. அண்ட் ஒருவேளை நான் எதாவது செஞ்சு என் அக்கா பெரிய சிக்கல்ல மாட்டவும் எனக்கு விருப்பமில்லை. கொல்ல வந்த நானே அன்னைக்கு இந்திரனைக் காப்பாத்தினேன். என் அம்மாவோட அப்பா அம்மா ஊருக்குப் போய் நிறைய நாள் அங்கேயே தங்கி இமைய வர்மனைப் பற்றி எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். ஊரே அவரை நல்லவருனு சொன்னது வேறு எனக்கு மேலும் குழப்பத்தைத் தந்தது..."
"எல்லாம் தீர விசாரிச்சேன். ஒன்னு மட்டும் க்ளியர் ஆகிடுச்சு. இமையவர்மன் நல்லவரா தான் இருக்கனும். இல்லைனா எதுக்கு என் பெரியப்பா அவர்கிட்ட எங்களைப் போக சொல்லணும்? அதுனால நான் எல்லாமும் அறிய அன்னைக்கு முயற்சி பண்றதுக்குள்ள இந்திரனைக் கொல்ல ஆள் அனுப்பியிருப்பதாவும், நான் இனிமேல் அங்க இருக்க வேண்டாம்னு சொல்லியும் எனக்கு என் அக்கா கிட்ட இருந்து தகவல் வந்தது. என் தாத்தா கிட்டப் போய் எல்லாம் சொன்னேன். அவர் அன்னைக்கு உங்களைக் காப்பாற்ற வந்து இறந்துட்டார். அந்தப் பழங்குடியின மக்களுக்கு இமையவர்மன் நல்லது தான் செய்யுறாருனு எனக்கு அப்போவே புரிஞ்சது.இதுக்கு நடுவுல இமையவர்மனைப் பழிவாங்க நிச்சயம் திரும்ப வேற எதாவது வழி செய்வாங்கனு புரிஞ்சது. அப்போ தான் சகுந்தலா அம்மா என்னை அவங்க கூடவே கூப்பிட்டாங்க. நானும் அங்க போனேன். அப்போ தான் மீண்டும் மீண்டும் இந்திரனைக் கொல்ல எனக்கு இன்ஸ்ட்ரக்சன்ஸ் வந்துட்டே இருந்தது. அந்த நேரத்துல தான் கதிரவனும் இந்திரனுக்கு எதிரா இருக்கறது எனக்குத் தெரிஞ்சது. ஓகே கொலை பண்ணப் போற சாக்குல நாமே நல்லது பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். தாமோ சாரை நானே மீட் பண்ணி எல்லாமும் சொன்னேன். அவருக்கும் கதிரவன் மேலயும் அசோக் சௌனி மேலையும் சந்தேகம் இருந்தது. என்னைய முழுசா அவர் கண்ட்ரோல்ல வெச்சிகிட்டார் தாமோதரன். ஆபிஸ்ல கதிரவனை வாட்ச் பண்ணுவேன். இமையவர்மன் சார் கிட்ட எல்லாமும் சொல்லணும் நிறைய முறை நெனச்சி இருக்கேன் ஆனா தாமோ சார் தான் இப்போ எதுவும் நீ சொல்ல வேணாம் . அமைதியா இருன்னு என்னைக் கட்டுப் படுத்தவார்..."
"அவர் கிட்ட நான் வெச்ச ஒரே ரெக்குஸ்ட் என் அக்காவை எப்படியாவது காப்பாத்தி தாங்கனு மட்டும் தான். ஆம் உங்க சந்தேகத்துலயும் சம்மதத்துலயும் மட்டும் நான் இந்த வீட்டுல இல்ல. தாமோ சாரோட சம்மதத்துலயும் தான் இங்க இருக்கேன். நான் தான் இன்னைக்கு நீங்க மீட் பண்ணப் போறதையும் அவர் கிட்டச் சொன்னேன்..." என்றதும்
தாமோதரன் அந்த அறைக்குள் நுழைந்தார்.
அந்த அறையில் தருணைப் பார்த்ததும்,"இந்திரா இவனை எதுக்கு நீ பார்க்க அப்பொய்ண்ட் மென்ட் தந்த? என்கிட்ட இருந்து எதுக்கு இதை மறைத்த? அந்த கதிரவனுக்கு சப்போர்ட் பண்ணி என்னையவே பாலோ பண்ணவன் இவன்..." என்று தருணை குற்றம் சாட்டவும் அந்த அறைக்குள் கதிரவன் நுழையவும் சரியாக இருந்தது.
உள்ளே வந்தவன் கதவைச் சாற்றினான்.
"ஓகே மிஸ்டர் தாமோதரன். பிசினெஸ் மேக்னெட் இமையவர்மனோட லெப்ட் ரைட் எல்லாமும் நீங்க தான். அவர் அவரை நம்புறாரோ இல்லையோ உங்களைத் தான் கண்மூடி தனமா நம்புறாரு. அப்படித் தானே?" என்றான் கதிரவன்.
"சொல்லுங்க மிஸ்டர் தாமோ எதுக்கு இந்திரனைக் கொல்ல முயற்சி பண்றீங்க?" என்றதும் வெகுண்டெழுந்தவர் கதிரவனின் குரல் வலையைப் பிடித்து நெருக்கினார்.
"யாரு டா கொலைக்காரன்? நானா? நீ தான்... நீ தான் அந்த அசோக் சௌனி கூடச் சேர்ந்து இவ்வளவும் பண்றது..." என்று தாமோ பேச,
"அங்கிள், எதுக்கு மாச மாசம் கம்பெனி அக்கௌண்ட்ல இருந்து ஒரு டிரஸ்ட் அக்கௌண்டுக்கு பெரிய பணம் ட்ரான்ஸ்பெர் ஆகி பின்பு அது உங்களோட இன்னொரு ட்ரஸ்ட் அக்கௌண்டுக்கு வந்து அங்கேயிருந்து கண்மணி மெடிக்கல் பவுண்டேசனுக்கு ட்ரான்ஸ்பெர் ஆகுது? அப்படி ட்ராஸ்பெர் ஆகுற பணம் கம்பெனி ட்ரஸ்ட் அக்கௌண்டுல இருந்தே நேரா போகட்டுமே? இடையில எதுக்கு உங்க அக்கௌண்டுக்கு வந்து மாறிப் போகுது? இது மட்டுமில்லாம நிறைய அக்கௌண்டுக்கு பணம் ட்ராஸ்பெர் ஆகுது. இதெல்லாம் ஏன்? அப்பாக்குத் தெரியுமா? அதென்ன ஏற்கனவே வர்மா குரூப்ஸ் ஒரு டிரஸ்ட் நடத்தியும் இதுல நீங்க எதுக்கு ஒரு ட்ரஸ்ட் தனியா நடத்தணும்? என்ன காரணம்? அதும் ரொம்ப ரகசியமா? இது சின்ன அமௌன்ட்னா நான் கண்டுக்க மாட்டேன். ஆனா கடந்த ஐந்து வருஷத்துல மாசாமாசம் நூறு இருநூறு ஐநூறு கோடினு போகுது. இதைப் பற்றி கதிரவன் உங்ககிட்டக் கேட்ட போது, அதாவது நான் ஹாஸ்பிடல்ல இருந்த டைம்ல எதுக்கு அவனை மிரட்டி இதுல இனிமேல் தலையிடவே கூடாதுனு சொன்னீங்க? இதெல்லாம் அவன் ஏன் எப்படித் தெரிஞ்சிகிட்டான்னு வேற கண்டுப்பிடிச்சு அவன் மேல ஆக்சன் எடுக்க முயற்சி பண்ணியிருக்கீங்க? இதைப் பற்றி ஆடிட்டர்ஸ் கூட என்கிட்டயே தனிப்பட்ட முறையில நிறைய கம்பளைண்ட் பண்ணியிருக்காங்க... ஆனா உங்க மேலயோ இல்ல உங்க குடும்பத்து ஆட்கள் மேலயோ எந்தப் பணமும் சொத்தும் இல்ல. அதேபோல உங்களுக்கு பினாமினு கூட யாருமில்லை. மாடு மாதிரி உழைக்கறீங்க நாய் மாதிரி விசுவாசமா இருக்கீங்க... உழைக்கறீங்க எல்லாம் கரெக்ட். இதுக்கு மட்டும் என்ன காரணம்? கோவையிலும் மும்பையிலும் எதுக்கு உங்க பேர்ல இருக்கும் ட்ரஸ்ட் பேர்ல அவ்வளவு பெரிய இடம் வாங்கியிருக்கீங்க? ஓ உங்களுக்கு எதுவும் தெரியாதில்லை?" என்றவன் கதிரவனைப் பற்றி எல்லாமும் சொன்னான்.
தாமோதரனுக்கு இது அதிர்ச்சியாக கதிரவன் புன்னகைத்தான்."நான் தான் கதிரவனை இங்க வர வெச்சு எல்லாமும் விசாரிக்கச் சொன்னேன். ஏன் முப்பது வருஷமா எங்க கூடவே இருக்கீங்க, விசுவாசமான இருக்கீங்க, உங்களைப் பற்றி எவ்வளவு உயர்வா நெனச்சிட்டு இருந்தேன். ஸ்டில் நான் உங்களைப் பழிச் சொல்லல... கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும். அதே மாதிரி குறிப்பிட்ட ஒரு ட்ரஸ்டுக்கும் மெடிக்கல் பவுண்டேசனுக்கும் மட்டும் ஏன் நம்ம கம்பெனில இருந்து அதிக பணம் ட்ராஸ்பெர் ஆகுது? ரெண்டுக்கும் எனக்கு விளக்கம் வேணும். இப்போ... அதே மாதிரி இந்தப் பொண்ணைப் பற்றி எல்லாம் தெரிஞ்சும் ஏன் நீங்க எந்த ஆக்சனும் எடுக்கல?" என்று இந்திரன் கேட்கவும்,
சிரித்தவாறு,"தம்பி உன் திறமையை நினைக்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு. இல்ல வர்மன் வாரிசு சோடை போகல... சந்தோசம்..." என்றார் தாமோ.
"அங்கிள், நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல. ஏன் கதிரவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல? இந்தப் பணமெல்லாம் எங்க யாருக்கு எதுக்குப் போகுது?"
"என்னை மன்னிச்சுடு தம்பி. இதுக்கெல்லாம் நான் ஒரே ஒருத்தரைத் தவிர யாருகிட்டயும் விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. அண்ட் அவருக்கு நான் கொடுத்துட்டேன்..." என்று விடாப்பிடியாக மறுத்தார்.
"அங்கிள், நீங்க என்னை சின்ன வயசுல இருந்து வளர்த்தவரு. எனக்குத் தொழில் நுணுக்கம் சொல்லித் தந்தவரு. ப்ளீஸ்..."
அவர் மறுப்பாக தலையாட்ட,
"அங்கிள் கடைசியா கேட்கறேன். வர்மா குரூப்சோடா md யா கேட்கறேன். நீங்க இப்போ பதில் சொல்லியே ஆகணும்..." என்றவனின் குரல் இதுவரை இருந்த மென்மை மாறி கடுமையாகவே ஒலித்தது.
"மச்சி இதெல்லாம் அங்கிள் கிட்டப் பேசிக்கலாம் வா..." என்று கதிரவன் சொல்ல, அப்போது தான் இமையன் தாமோவை அழைத்தார்.
"என்ன தாமோ? என்ன ஆச்சு?"
"சார் ஒரு பெரிய சிக்கல் ஆகிடுச்சு..." என்று தாமோ பதிலளித்தார்.
"என்ன?" என்ற இமையனுக்கு தாமோ அனைத்தையும் தெரியப்படுத்தவும் போனை ஸ்பீக்கரில் போட சொன்ன இமையன்,"இந்திரா நீங்க எல்லோரும் உடனே வீட்டுக்கு வரீங்க. அண்ட் தாமோ அவனுங்க பேசுனத்துக்கு என்னை மன்னிச்சுடு டா..." என்றதும்,"ஐயா என்கிட்டப் போய் நீங்க மன்னிப்பு எல்லாம்? விடுங்க..." என்றார் தாமோ. இந்திரனும் கதிரவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தருண், குகன் மாதுளை ஆகியோரை அழைத்துச் சென்றனர்.
"என்ன மச்சான் என்ன விஷயம்னு தெரிஞ்சதா?" என்றான் கதிரவன்.
"இவ இல்லை, இவ அக்கா ஒருத்தி இருக்களாம். அவ தான் எல்லாத்துக்கும் காரணம் போல..." என்று சொன்ன இந்திரனுக்கு மறுத்தார் தாமோ.
"தம்பி இந்தப் பொண்ணு இன்னோசென்ட். இவ அக்கா இவளை விடவும் இன்னொசென்ட்..." என்று சொன்னார் அவர்.
"அம்பு இவ தான்னு எனக்குத் தெரிஞ்சது. அப்போ அதை எய்தவர் யாருனு எனக்குத் தெரியணும். அதுக்கு தான் இந்தப் பெண்ணைப் பற்றி எதையும் சொல்லாம இருக்கேன்..." என்று தாமோ சொல்ல,
"என்ன வக்காலத்தா?" என்ற கதிரவனுக்கு,
"இல்ல அவர் சரியா தான் சொல்றாரு..." என்றான் தருண்.
"பாஸ் இதுவும் உங்களுக்குத் தெரியுமா? எப்படி பாஸ்?" என்றான் குகன்.
மாதுளை தலையாட்டி அடுத்து எழுதத் துவங்கினாள்."நிச்சயமா இதெல்லாம் என் அக்கா மட்டும் பண்ணல. அவளுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க. எனக்கு அது யாருனு தெரியில. அது தான் என் பயமே. என் அக்கா அடுத்தவங்க என்ன சொன்னாலும் யோசிக்காம நம்பி அடுத்தடுத்து செய்ய ஆரமிச்சிடுவா..." என்று அவள் அழுதாள்."எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல என் அக்கா பத்திரமா இருக்கனும். அது தான் பெரியப்பாவுடைய கடைசி ஆசை..." என்று எழுதி அழுதாள் மாதுளை.
தருண் உடனே தன் பெங்களூரு டிடெக்டிவ் நண்பனைத் தொடர்புகொண்டு ஐராவதியை ரொம்ப கேர்புல்லா வாட்ச் பண்ணச் சொல்லி உத்தரவிட்டான். இப்போது மாதுளை சற்று ஆசுவாசம் அடைந்தாள்.
"தாமோதரன் சார் நீங்க மாதுளையைப் பற்றி யாருகிட்ட விசாரிக்கச் சொல்லியிருக்கீங்க? தயாளன் தானே?" என்றான் தருண்.
"ஆமா" என்றார் தாமோ.
"அப்போ ஓகே" என்று மனதில் நினைத்துக்கொண்டான் தருண்.
"பாரதி சார் அவர் வைப்போட வரும் போது கார் ஆக்சிடென்ட் தானே?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் தருண்.
ஆமாம் என்று தலை ஆட்டினாள்.
"அவரு உனக்குச் சொன்ன மாதிரி எந்த டாக்குமெண்டும் அனுப்பலையா மாதுளை?"
இல்லை என்றாள் அவள்.
"பாஸ் ஒரு முக்கியமான விஷயத்தையே நாம இன்னும் பேசல..." என்றான் குகன்.
"என்னடா?"
"ஸ்ரீயும் சிந்துவும் உயிரோட இருக்க..." என்று குகன் இழுக்க இப்போது கதிரவன் இந்திரன் இருவரும் அதிக அதிர்ச்சி மகிழ்ச்சியில் திரும்பினார்கள். ஏனோ தருண் அவர்களைப் பார்த்து குகனை முறைத்தான். பின்னே அது தருணின் ஒரு யூகம் தானே? மீண்டும் ஒரு ஆசையைக் காட்டி அவர்களை ஏமாற்ற தருண் விரும்பவில்லை.
"என்ன சொல்றான் தருண் இவன்?" என்றான் கதிரவன் உணர்ச்சிப்பெருக்கில்.
"தருண் ப்ளீஸ்..." என்றான் இந்திரன்.
தாமோ கூட ஆச்சரியப்பட்டு,"உண்மையாவா?" என்றதும்,
"ஓகே என் கெஸ்ஸை நான் சொல்றேன்..." என்ற தருண்,"சிந்து ஸ்ரீ ரெண்டு பேரும் அடிபட்டு ஹாஸ்பிடல் வந்தாங்க. அவங்க இறந்துட்டாங்க. யாருமே அவங்களோட முகத்தைப் பார்க்கல. மேலும் ரொம்ப அடிபட்ட இந்திரனே பிழைத்த போது ஏன் அவங்க இன்னும் உயிரோட இருக்கக் கூடாது? ஏன்னா உங்களை மட்டும் கொல்ல நெனச்சியிருந்தா நீங்க மூணு பேர் அதும் அந்த ரோட்ல ஆக்சிடென்ட் மெத்தடை யூஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை... அதுல நிறைய ரிஸ்க் இருக்கு" என்றதும் இந்திரன் கதிராவின் மீது சாய்ந்து,"நான் இதைத் தான் டா அன்னைக்கே உன்கிட்டச் சொன்னேன். எனக்கு என்னமோ ஒரு இண்டூஷன்... என் ஸ்ரீ, சிந்து ரெண்டு பேரும் இன்னும் உயிரோட தான் இருக்கனும்..." என்றான் இந்திரன்.
"அது மட்டுமில்லை..." என்ற தருணை அவர்கள் பார்க்க,"அந்த ஹாஸ்பிடலை நல்லா விசாரிச்சிட்டேன். அன்னைக்கு அதாவது அந்த ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்கு ரெண்டு பொண்ணுங்க டெட் பாடியும் அங்க இருந்திருக்கு. இருந்தும் இதை கன்பார்ம் பண்ணா புரிஞ்சிடும்..."
"எப்படி?" என்றனர் இந்திரன் மற்றும் கதிரவன் இருவரும் ஒருமித்த குரலில்...
"சிந்து... சாரி அவங்க ரெண்டு பேரையும் லாஸ்ட் ரைட்ஸ் பண்ண இடத்துக்குப் போய் மீண்டும் பாடியை எடுத்து ஒரு dna டெஸ்ட் எடுத்தா எல்லாம் க்ளியர் ஆகிடும்..."
"உடனே பண்ணுங்க..." என்றார் தாமோ.
"இல்ல அதுக்கு லீகல் பார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கு..." என்றதும்,
"அது ஒன்னும் பிரச்சனை இல்லை இன்னைக்கே ஒரு அஃபிடவிட் பைல் பண்ணிடலாம். நாளைக்கே ஆர்டர் வாங்கிக்கடலாம். அர்ஜெஸ்ட் பெட்டிஷன் போட்டுடலாம், ஒன்னும் பிரச்சனை இல்லை..." என்றவர் தன் போனில் அழைத்து ஒருவரிடம் பேசி டீடெய்ல்ஸ் எல்லாம் சொன்னார்.
"சார் நீங்க?" என்றான் தருண்,
"நான் ஒரு லா கிராஜுவேட். தாமோதரன் ba bl..." என்றார். இந்திரனுக்கு இதைப் பற்றித் தெரிந்திருந்தும் அவனுக்கு ஆச்சரியம். "எப்படி டக்குனு சொல்றிங்க அங்கிள்?"
"நான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு தான் இருந்தேன். அப்போ தான் சார் என்னை நம்ம கம்பெனிக்கு கூப்பிட்டாரு. ஆரம்பத்துல நம்ம கம்பெனி சம்மந்தமா எல்லா கேசும் நான் தான் டீல் பண்ணேன். அப்றோம் மேனேஜ்மேட்டுக்குள்ள வந்ததால் முடியாம போச்சு. கவலையை விடு மெட்ராஸ் ஹை கோர்ட்ல நாளைக்கு காலையில முதல் பெட்டிஷனே நம்முது தான்..." என்றார்.
"இல்ல சார் நான் ஏற்கனவே இதைப் பற்றி ஒரு லாயர் கிட்டப் பேசிட்டேன்..." என்றான் தருண்.
"யாரு?"
"சுபத்திரா..." என்றதும்,
"நீலகண்டன் பொண்ணு தானே?" என்றார் தாமு,
ஆச்சரியத்தில் ஆம் என்றான் தருண்.
"இன்னும் வசதியா போச்சு. நாளைக்கே ஆர்டர் வாங்கிடலாம்..." என்றதும் இந்திரன் கதிரவன் இருவரும் மனதில் பிராத்தித்தனர். அப்போது சரியாக அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
"அங்கிள், தருண் ஒரு விஷயம்... ஸ்ரீ, சிந்து பற்றி எதுவும் அப்பாக்கும் அம்மாக்கும் சொல்ல வேண்டாம். அவங்க ரொம்ப எதிர்பார்த்திடுவாங்க. ஓகே?" என்றான் இந்திரன்.
ஓகே என்றனர் இருவரும்.
எல்லோரும் வீட்டிற்கு போக அப்போது தான் வெளியே சந்திர வர்மனின் கார் நிற்பதைக் கண்டவன்,"ஓ சித்தப்பா வந்திருக்காரு போல?" என்று சொல்லிச் சென்றனர். இந்திரனைக் கண்டதும் கோகிலா உண்மையான பாசத்தோடு வரவேற்க இந்திரனும் அவரிடம் பேசிவிட்டு மேலே சென்றான். கூடவே கதிரவன், மாதுளை தாமோ புதியதாக இருவர் செல்ல விஷயம் எதோ சீரியஸ் என்று உணர்ந்தார் சகுந்தலா.
அவர்கள் ஆறுபேரும் மேலே சென்றனர். இமையனின் அபிஷியல் ரூமில் தான் சகோதரர்கள் இருந்தனர். ஹர்ஷா மட்டும் வீட்டை சுற்றிப் பார்த்தபடி இருந்தான்.
கடைசியாகச் சென்ற கதிரவன் கதவைச் சாற்றி நிற்க, தருண் மற்றும் குகன் தான் இரட்டையர்கள் இருவரையும் கண்டு சற்று அதிர்ந்தனர். துளியும் வேறுபாடு இல்லாமல் இருந்ததால் தான் இந்த அதிர்ச்சி.
தாமோ எதையும் பேசாமல் இமையனைப் பார்க்க, இமையன் கோவமாக இந்திரன் மற்றும் கதிரவனைப் பார்த்தார். இது வரை தங்களுக்குள் நடந்த எல்லா உரையாடலும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டது. இவ்வளவு பிரச்சனைக்கும் தான் தான் காரணம் என்று எண்ணிய சந்திரன் வாய்விட்டே கதறினார்.
இந்திரன் தன் சந்தேகத்தை இமையனிடம் நேராக கேட்டான்.
"ஆமாம். அந்த மெடிக்கல் பவுன்டேசனுக்கு நான் தான் ஸ்பான்சர். எனக்காகத் தான் தாமோ அந்தப் பணத்தை அவன் பேர்ல கொடுக்கிறான்..." என்றார்.
"எதுக்கு? அந்த ஒரே பவுண்டேசனுக்கு மட்டும் எதுக்கு அவ்வளவு பணம்? அதும் நேரா நம்ம சேரிட்டி டிரஸ்ட்ல இருந்து போகாம இப்படி சுத்தி வளைத்துப் போகுது?"
"அது சும்மா..." என்று இமையன் மழுப்ப,
"ஊர்ல லட்சம் ட்ரஸ்ட் இருக்கு. அப் கோர்ஸ் நீங்க நிறைய ட்ரஸ்டுக்கு டொனேட் பண்றீங்க தான். ஆனா அந்த ஒரு குறிப்பிட்ட ட்ரஸ்டுக்கு மட்டும் எதுக்கு அவ்வளவு முக்கியத்துவம்? அதாவது அதுல இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பெஷல் கேர். அவங்களை அவங்க விருப்பப் பட்டத்தைப் படிக்க வெக்கறீங்க? டாக்டர், என்ஜினீயர் போலீஸ் இன்னும் நிறைய... இது தப்பில்லை, ஆனா ஏன் அதை மறைமுகமா செய்யணும்? அதாவது மிஸ்டர் சந்தான பாரதியின் பெயரில். நீங்களும் அவரும் ப்ரெண்டா இருக்கலாம், அவரு ரிசர்ச்சுக்கு நீங்க உதவலாம் ஏன்னா அதுல ஒரு சுய லாபம் இருக்கு. ஆனா அதையும் தாண்டி எதுக்கு இவ்வளவு நெருக்கம்? அதும் நீங்க சென்னைக்கு குடி வரதுக்கு முன்னாடி இருந்தே அதாவது வர்மா குரூப்ஸ் ரெண்டா பிரியறதுக்கு முன்னாடி இருந்தே? நிச்சயமா இதுல சமூக சேவை ஒரு காரணமா இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு இல்ல ரைட் மிஸ்டர் இமைய வர்மன்..." என்ற தருணை ஏனோ தாமோ, சந்திரன், இந்திரன், கதிரவன் மாதுளை மற்றும் குகன் உட்பட அதிசயித்துப் பார்த்தனர். (வானிலை மாறும்...)
 
அப்போ வர்மா குடும்பத்து வாரிசு யாராவது அங்கே வளர்ந்தார்களோ ??? குமரன் ????
you guessed it right... will be revealed in next epi? but person is wrong...
 
தாமோதரன் மேல் ஒரு சந்தேகம் உண்டு பண்ணி இல்லைனு
உடனே சொல்லி...தருணை ஒரு ஹீரோவாக்கி...
:rolleyes: ஏகப்பட்ட டுவிஸ்ட்கள்...
 
Top