Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-28

Advertisement

praveenraj

Well-known member
Member
"அண்ணா, உண்மையா என்னை நம்புறீங்க தானே? உண்மையிலே நான் இதெல்லாம் பண்ணல அண்ணா. இந்திரன், சிந்து ரெண்டு பேரும் என் பசங்க. நான் எப்படி?..." என்று சந்திரன் சொல்ல,

"அன்னைக்கு எதுக்கு சென்னையில இருந்த?" என்றார் இமையன்.

"அண்ணா அது..."

"இங்க பாரு சந்திரா, நீ எந்த தப்பும் பண்ணல தானே? அப்றோம் ஏன் மறைக்கிற? இல்லை என்கிட்டக் கூடச் சொல்லக் கூடாத அளவுக்கு அப்படி என்ன ரகசியம்?"

"ஓகே. உங்களுக்கே தெரியும் சமீபமா என் தொழில் எதுவும் சிறப்பா போகல. அப்போ தான் எதாவது ஒரு மாற்று தொழில் ஆரமிக்கக் காத்திருந்தேன். அந்தச் சமயத்துல தான் மருந்து தயாரிக்கும் பிசினெஸ் பற்றி ஒரு யோசனை வந்தது. எப்படியும் எல்லா மனுஷனுக்கு ஏதாவது ஒரு வியாதி இருந்துட்டே தான் இருக்கு. அப்போ அவனுக்கு மருந்து அவசியம். ரெண்டாவது மற்ற தொழில் மாதிரி இதுல சிக்கல் பெருசா இல்ல. எது மூடுனாலும் ஹாஸ்பிடலும் மருந்துக்கடையும் மூடுறதே இல்ல. நான் யோசிச்ச மாதிரி தான் நிறைய பிசினெஸ் மேன் யோசிச்சாங்க. அங்க மும்பையில் இருக்கும் எல்லா பிசினெஸ் மேனும் நார்த் இந்தியாவுல மும்பை, கல்கத்தா, டெல்லினு சயின்டிஸ்டை நோக்கி போக நானோ சென்னையை நோக்கி வந்தேன். அப்போ தான் டாக்டர் சந்தான பாரதியைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது. கூடவே மருந்தை எல்லாம் சீப்பா தராருனு கேள்விப்பட்டேன். சரி எப்படியாவது அவரு கிட்டப் பேசி என் கம்பெனியோட ஒரு அக்ரீமெண்ட் போட்டு நானே தயாரிக்கலாம்னு..." என்று நிறுத்தி நிறுத்தி சொன்னார் சந்திரன்.

இமையன் அவரை முறைக்க,

"சத்தியமா எனக்கு அப்போ வரை எதுவும் தெரியாது. அவருடைய எல்லா ஆராய்ச்சியிலும் ஏன் அவரோட ஹாஸ்பிடல் டிரஸ்ட் ஆர்பெனேஜ் எல்லாத்துக்கும் நீங்க தான் ஸ்பான்சருனு உண்மையிலே எனக்குத் தெரியாது. அவர் கிட்டப் பேசப் போனேன். அவரோ என்னைப் பார்த்ததுமே,

"என்னடா இமையா ஏன் இப்படி வித்தியாசமா இருக்க? சொல்லாம கொள்ளாம வந்திருக்கனு..." சொல்லி என் தோள்ல கை போடவும் தான் டாக்டர் பாரதியும் நீங்களும் எவ்வளவு நெருக்கம்னு எனக்குத் தெரிஞ்சது. (எல்லோருடைய கைண்ட் அட்டென்ஷன், இமைய வர்மனும் சந்திர வர்மனும் மோனோசைகாட்டிக் (monozygotic twins / identical twins - ஒரே போல் இருக்கும் ரெட்டைக் குழந்தைகள்)). நானும் எதையும் வெளிக்காட்டிக்காம அன்னைக்கு இருந்துட்டேன்..."

ஏனோ இதை கேட்ட மாத்திரம் இமையவர்மனுக்கு அளவில்லாத கோவம் வந்தது. இருந்தும் முழுவதும் சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

********************

அன்றும் அதே போல் அவர்கள் இருவரும் ஸ்ரீயையும் அபர்ணாவையும் வழி மறைத்தனர். அபர்ணாவிடம் அவளைக் காதலிப்பவன் பேசத் தொடங்க, அவனை தடுத்த அபர்ணா,"இங்க பாருங்க நேத்தே எதுக்கு இவரைக் கூட்டிட்டு வந்தீங்கன்னு திட்டினோமா இல்லையா? இப்போ எதுக்கு இவரு கூட வந்திருக்காரு?" என்று கேட்க அவனோ சங்கடத்துடன் தன் நண்பனைப் பார்க்க,"இங்க பாருங்க சிஸ்டர் சாரி, நான் உங்க ஃப்ரண்ட் கிட்டக் கொஞ்சம் பேசணும்..." என்றதும் பொது இடம் என்றதால் ஏதும் வம்பு வளர்க்காமல் ஸ்ரீ அவனிடம் பேசச் சென்றாள்.

"இங்க பாருங்க, நான் உங்களை பாலோ பண்ணியெல்லாம் இங்க வரல. என் ஃப்ரண்ட் அவன். அவனுக்கு யாரும் இல்ல . உங்க ஃப்ரண்டை அவனுக்குப் பிடிச்சிருப்பதா அவன் சொன்னதும் அவனுக்காகப் பேச தான் வந்தேன். ஆனா அன்னைக்குக் கோவில்ல நீங்க நாட்டியம் சொல்லிக் கொடுக்கும் வேளையில் எதர்ச்சையாக உங்களைப் பார்த்தேன். என்ன சொல்ல எனக்கு ஒரு மாதிரி ஃபீல். அது தான்..." என்று முடிக்கும் முன்னே,

ஸ்ரீ முகம் கடுமையாவதை உணர்ந்தவன்," நிச்சயமா சாரிங்க. இப்படி வழிமறித்து பேசுறதெல்லாம் எனக்கும் விருப்பமில்லை தான். ஆனா என் லவ்வை..." என்று சொல்லும் முன் அவனை நிறுத்தத் சொன்னவள்,"இங்க பாருங்க மிஸ்டர், நீங்க யாரு என்னனு எனக்குத் தெரியாது. ஏன் உங்க பேரு கூட எனக்குத் தெரியாதது..."

"ஐயோ என் பேரு..." என்று அவன் சொல்ல வரும் முன்னே அவனைத் தடுத்தவள்,"அது எனக்கு அநாவிஷியம். ஏன்னா ஐ அம் இன் எ ரிலேஷன்ஷிப். எனக்கு இன்னும் கொஞ்ச நாளுல கல்யாணம் ஆகப் போகுது..." என்றதும் அவன் நக்கலாகச் சிரிக்க,

"உங்களை அவாய்ட் பண்னவோ இல்லை பொய்ச் சொல்லவோ எல்லாம் எனக்கு விருப்பமில்லை. அண்ட் அதே நேரம் என் லவ்வை உங்களுக்கு நிரூபிக்கணும்னும் எனக்கு அவசியம் இல்லை. இருந்தும் சொல்றேன் கேளுங்க, நாளை மறுநாள் எனக்கு இங்க க்ளாஸ் இருக்கு. நான் வருவேன். அன்னைக்கு என்னை பிக் அப் பண்ண ஒருத்தர் வருவாரு. அவரும் நானும் தான் கல்யாணம் பண்ணிக்குவோம். அண்ட் இப்படி தனியா வரப் பொண்ணு கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணா ஈவ் டீசிங்க்ல எல்லாம் சொல்ல மாட்டேன். என் இஜித் கிட்ட தான் சொல்லுவேன். யூ நோ வாட் நான் இதை அவரு கிட்டச் சொன்னா உங்க எதிர் காலமே கூட பாதிக்கலாம். வேண்டாம்னு தான் பொறுத்துப் போறேன். நாம ரெண்டு பேரும் மீட் பண்றது இதுவே கடைசியா இருக்கணும்னு சொல்லல, எச்சரிக்கிறேன். என்ன ஓகே வா?" என்று வழக்கத்திற்கும் மாறாகவே கடுமையுடன் பேசினாள் ஸ்ரீ.

அப்போது தான் கமலேஷ் அங்கே ஸ்ரீக்காக வந்து காத்திருந்தான். அவன் ஒரு வேலையாக வர சகுந்தலா ஸ்ரீயை அழைத்து வருமாறு சொல்லவும் இங்கே வந்தான்.

"ஸ்ரீ... ஸ்ரீ அண்ணி வாங்க..." என்றான் கமலேஷ். இருவரும் திரும்பிப் பார்க்க அந்த விலையுயர்ந்த காரை பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். "வந்துட்டேன் கமலா..." என்றவள் நகர முற்பட ஏனோ அதில் எழுதியிருந்த 'வர்மா குரூப்ஸ்' என்ற ஸ்டிக்கரைப் பார்த்தவன்,:நீங்க யாரை விரும்பறீங்க?" எனவும் ,

"இந்திரன். இந்திரஜித் வர்மன். ஓகேவா?" என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அதுவரை அவள் தனக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்த வெறி மாறி இப்போது அவள் இந்திரனுக்குக் கிடைக்கக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. கூடவே ஒரு கோவம், அவமானம் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததைப் போலொரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது!!! இமையவர்மனைப் பழிவாங்க காத்திருந்தவனுக்கு இதொரு சந்தர்பமாகவே தெரிந்தது.

இந்த விஷயத்தைப் பற்றி இந்திரனிடம் சொல்லலாம் என்று தான் முதலில் ஸ்ரீ லேகா நினைத்தாள். ஆனால் அதன் பின்பு அவனை மீண்டும் அவள் பார்க்காததாலும் அவனும் அவளைத் தொந்தரவு ஏதும் செய்யாததாலும் அவன் பயந்து விட்டான் என்று தப்புக் கணக்கு போட்டு அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் ஒன்றை அவள் அறிந்திருக்கவில்லை, அவன் பயந்து ஒன்றும் ஒழியவில்லை என்றும் அடுத்த பாய்ச்சலுக்காகவே பதுங்கியிருக்கிறான் என்றும் அறியாமல் விட்டு விட்டாள் ஸ்ரீ.

அபர்ணாவும் அவனும் இவனை நோக்கி வர, அபர்ணா தெளிவாக இவனிடம் மீண்டுமொரு முறை,"ஸ்ரீ கமிட்டட். அவளை இனி தொந்தரவு செய்யாதீங்க. அண்ட் நீங்களும் என் வீட்டுல வந்து பேசுறதா இருந்த என்னை மீட் பண்ணுங்க இல்லைன்னா என்னையும் தொந்தரவு செய்யக் கூடாது" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

******************


திருக்குமரன் அடுத்த சஸ்பெக்ட்டான உபேந்திரனைத் தொடர்பு கொண்டான். அவனது அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க, வைத்து விட்டான்.

மஹேந்திரனே இப்போது குமரனை அழைத்தான்.

"என்னடா விஷயம்?"

"இல்ல என்னாச்சு? அந்தப் பொண்ணைப் பத்தி வேற ஏதாவது தெரிஞ்சதா?" என்று கேட்க,

"அதெல்லாம் ஒன்னுமில்லை மச்சி" என்றான் குமரன்.

"ஆமா என்ன கமல் எனக்கு போன் பண்ணி காச் மூச்சுனு கத்துறான். என்னடா பண்ண?"

"எனக்கு ஆத்திரமே அடங்கலை அது தான் அவனை போன் பண்ணி நல்லாத் திட்டிவிட்டேன். எவ்வளவு கொழுப்பிருந்தா பாரதி சாரைப் பற்றி அவதூறாப்பேசியிருப்பான். என்னால நீ மேற்கொண்டு படிக்க விடாமாவே செய்ய முடியும்னு திட்டி வெச்சேன். அது தான் உன்கிட்ட போன் பண்ணிப் பேசியிருக்கான் போல. சமுத்திரனுக்கும் போன் பண்ணியிருக்கான். பாவம் செம திட்டாம். அதையும் ரெகார்ட் பண்ணி எனக்கு மறுபடியும் அனுப்பி வெச்சான். ஏன்டா அவன் இப்படி மாறிட்டான்?"

"ஏதோ லவ் பெயிலியர் போல, யாரோ ஒரு பொண்ணை விரும்பியிருக்கான். எதுக்கும் உபேந்திரனைக் கேட்டா எல்லாம் தெரியும். அவன் தான் எப்பயுமே அவன் கூடவே ஜோடி போட்டுட்டு இருப்பான்..."

"அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?"

"தெரியில அவ வீட்டுல ஒத்துக்கலையாம். விடு அவனுக்கு என்ன காண்டோ?"

"அந்தப் பொண்ணை எப்படித் தெரியுமாம்?"

"ஏதோ கோவில்ல பார்த்தானாம். அதெதுக்கு நமக்கு? விடு. ஐராவதி என்ன சொல்றா?"

"ஏன் டா நீ வேற... அந்த ஐராவதி வேற என் மேல கேஸ் போடப் போகுதாம். இதுல இந்தப் பிரச்சனை வேற..."

"எதுக்காம்? என்ன கேஸ்?"

"நான் இந்த ஹாஸ்பிடலை அந்தப் பொண்ணுக்கு சேராம ஏமாற்று வேலை செய்யுறேன்னாம்..."

"என்னடா சொல்ற? உண்மையாவா?"

"ஹாம். சரி வெக்கறேன் யாரோ லாயர் வராரு..." என்று அழைப்பைத் துண்டிக்க,

"எஸ் சார். என்ன விஷயம்?"

"நீங்க தானே திருக்குமரன்?"

"ஆமாம். என்ன விஷயம்?"

"மிஸ்டர் கமலக்கண்ணன் அண்ட் ஸ்டெப்பி ரெண்டு பேரும் அவங்க ரிசர்ச நீங்க திருடி வெச்சியிருக்கறதாவும், மேலும் சந்தான பாரதி சார் கண்டு பிடிச்சதை எல்லாம் நீங்களே வெச்சிக்கிட்டு அதை அவங்க திருடிட்டாங்கனு அவங்க மேல அபாண்டமான பழி போடுறதாவும் கம்பளைண்ட் பண்ணியிருக்காங்க. உங்க மேல ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. இந்தாங்க..." என்று கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஷோ காஸ் நோட்டீஸ் - ஒரு கோர்ட் ஆர்டர். நீங்க எந்த அர்த்தத்தில் (அதிகாரத்தில்) ஒரு விஷயத்தைச் செய்தீர்கள் இல்லை குற்றம் சாட்டினீர்கள் என்று விளக்க வேண்டும்.

படித்தவனுக்கு மண்டையைப் பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது.

*******************

"அன்னைக்கு நானும் பாரதியிடம் பேசிவிட்டு பொதுவா 'இந்த மருந்து கண்டுப்பிடிக்கிறது எல்லாம் எந்த நிலையில இருக்குனு?' கேட்டதும்..."

"அதுவா கிட்டத்தட்ட டெஸ்ட் வரை எல்லாம் சக்சஸ் தான். அண்டர் ட்ரையல் போயிட்டு இருக்கு. உனக்கு ஒன்னு தெரியுமா இந்த மாத்திரையோட ஒரு ஸ்ட்ரிப் (அட்டை) அதாவது பத்து மாத்திரையோட அடக்க விலையே வெறும் எழுவத்தி அஞ்சு ருபாய் தான். ஆனா இதை மட்டும் வெளிநாட்டு காரன் கண்டுப்பிடிச்சான் ஒரு மாத்திரையை நூறு இருநூறு ரூபாய்க்கு வித்தாலும் ஆச்சரியமில்லை. சரி என்ன அதிசயமா இருக்கு? எப்பயுமே நானா கூப்பிட்டா கூட இந்தப் பக்கம் வர மாட்ட இன்னைக்கு நீயா வந்து அதும் ரிசர்ச் பத்தியெல்லாம் கேட்குற?' என்றதும் சந்திரவர்மனுக்கு வேர்க்க,'நானே உன்னைத் தேடி வரணும்னு இருந்தேன். இதோட டாகுமெண்ட்ஸ் எல்லாம் பத்திரமா நீ வெச்சியிருக்கையா? இங்க கொஞ்சம் சேப் இல்லாத மாதிரி எனக்குத் தோணுது. என் முப்பது வருட கனவு, ஏழு வருட உழைப்பு...' என்றதும் அமைதியாக இருந்தவரைப் பார்த்து,

"நீங்களும் அதிக விலைக்கு விக்கலாமே?" என்றார் சந்திரன்.

"என்ன பேசுற இமையா? இதுக்கா நான் இவ்வளவு கஷ்டப் பட்டேன்?"

"இருந்தாலும்..." என்றதும் அவர் சொன்ன 'நீங்களும்' என்றதில் சுதாரித்து,

"நீ... நீங்க சந்திரவர்மனா?" என்று பாரதி கேட்க அவரோ தயங்கி தலையை ஆட்டினார்.

"நீங்க எப்படி இங்க வந்தீங்க? உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" என்று பாரதி கேட்க,"ஆமாம் இந்த இடம் உங்களுக்கு எப்படித் தெரியும்? எனக்கும் என் டீமுக்கும் இமைய வர்மனுக்கும் மட்டும் தெரிஞ்ச இடம்... எப்படி?" என்று கிடுக்குபிடி கேள்விகளை முன்வைக்க,

"டாக்டர் கொஞ்சம் பொறுமையா இருங்க. ப்ளீஸ் நாம கொஞ்சம் பேசலாம்..." என்றார் சந்திரன்.

"முடியவே முடியாது..." என்று மறுத்தவர்,"இப்போ நீங்க போகல நான் போலீசை கூப்பிட வேண்டி வரும்..." என்று எச்சரிக்கை அங்கிருந்து சந்திரன் சென்றார்.

"ஓ ஷீட்!" என்றார் பாரதி. ஓரவளவுக்கு சந்திரனைப் பற்றியும் அவரின் பிசினெஸ் மைண்டைப் பற்றியும் பாரதி நன்கு அறிவார். பின்னே இமைய வர்மனின் நெடு நாள் தோழர் ஆச்சே? எதனால் இந்த சாம்ராஜ்யம் பிரிந்தது முதல் தற்போது அவர்களுக்கு இருக்கும் உறவு வரை எல்லாமும் அறிந்த வெளிநபர் என்றால் அது பாரதியாகவே தான் இருக்கும்.

'நான் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் பண்ணிட்டேன்? நோ இனி மேல் இது என்கிட்ட இருக்கவே கூடாது. உடனே அதை உரியவரிடம் கொடுக்க வேண்டும்...' என்று விரைந்தார் சந்தான பாரதி.

"எவ்வளவு தைரியமிருந்தா என்னை மாதிரி போய் பாரதி கிட்டப் பேசியிருப்ப? உன்னை..." என்று அதிக கோவம் கொண்ட இமையன் சந்திரனை முறைக்க,

"தப்பு தான் அண்ணா. ஆனா நானா ஒன்னும் ஏமாற்றல..." என்று தயங்க,

"அப்போ பாரதி ஆக்சிடெண்டுக்கும் உனக்கும் சம்மந்தம் இருக்கா?"

"ஐயோ அண்ணா சத்தியமா எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை. அது தான் நான் அவரை முதலும் கடைசியா நேர்ல பார்த்தது. அதுக்கப்றோம் நானும் அவரைப் பார்க்கவும் பேசவும் முயற்சி பண்ணேன். ஆனா அடுத்த ரெண்டு நாளுல அவரு ஆக்சிடென்ட் ஆகி இறந்துட்டாரு. நானும் அப்றோம் அதைப் பற்றி எல்லாமும் மறந்துட்டேன்..."

இமையன் முறைக்க,

"சத்தியமா இது தான் உண்மை. ஆனா எனக்கொரு போன் கால்... இந்த மாதிரி இன்னைக்கு நீங்க சென்னை வந்தா நாளைக்கு உங்களுக்கு அந்த பைல்ஸ் கிடைக்கும் ஆனா எனக்கு கொஞ்சம் பணம் வேணும்னு வந்தது. நான் பெருசா கண்டுக்கல ஆனா எனக்கொரு போட்டோ வந்தது. அதுல நானும் பாரதியும் அன்னைக்கு சண்டை போட்டு பேசுனா போட்டோஸ் டேட் டைமோட இருந்தது. நீங்க வந்தே ஆகணும் இல்லைனா உங்களுக்கும் இந்த கேஸுக்கும் சம்மந்தம் இருக்குனு மாட்டிவிட்டுடுவேன்னு கால் வர நான் என் ஃப்ரண்ட் போலீஸ் ஒருத்தர் மூலமா அன்னைக்கு சென்னை வந்தேன். மறுநாள் தான் இந்திரனுக்கு அந்த ஆக்சிடென்ட் நடந்தது. அந்த ஆக்சிடென்ட் ஸ்பாட்டுக்கு ரொம்ப பக்கத்துல தான் நான் ரொம்ப நேரமா இருந்தேன். எனக்கு இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சிடுச்சி. நான் பிளைட்ல கூடப் போகாம கார்லயே நெல்லூர் போய் அங்கேயிருந்து மும்பை போயிட்டேன். எனக்கு என்னமோ வான்டேடா இந்திரன் ஆக்சிடெண்ட்ல என்னைய இழுத்து விட யாரோ பிளான் பண்ண மாதிரி தான் இருந்தது. நான் உடனே அந்த சம்மந்த பட்ட இடத்துல அந்த டேட்ல இல்லாத மாதிரி எல்லாம் ரெடி பண்ணிட்டேன். இருந்தும் உங்களுக்கு நான் அங்க இருந்தது தெரிஞ்சிடுச்சி. நீங்களும் என்னையே சந்தேகப் பட்டு என்னைப் பழிவாங்க பிசினெஸ் அது இதுனு நிறைய செஞ்சிட்டிங்க. சிந்துவோட சாவுக்கு கூட நான் வந்துட்டு உடனே போயிட்டேன். எனக்கு இதெல்லாம் உங்க கிட்டச் சொல்லணும்னு நெனப்பேன் ஆனா எனக்கொரு பயம். இதை நான் சொல்லப் போய் எங்க பாரதி கேஸ்ல என்னையும் சம்மந்தப் படுத்திடுவாங்களோனு அமைதியாகிட்டேன். அதுகப்புறோம் எனக்கு எந்த போனும் வரல. நானும் அதைப் பற்றி எல்லாம் மறந்துட்டேன். இது தான் உண்மை. உங்களுக்கு சந்தேகம்னா எனக்கு ஹெல்ப் பண்ண மும்பை dc ஐ கேளுங்க. நான் பண்ண ஒரே தப்பு உங்க பேர்ல பாரதியை அன்னைக்கு மீட் பண்ணது தான். அதும் அந்த இடமும் எனக்கொரு போன் கால்ல தான் தெரிஞ்சது..."

"எனக்குப் புரியுது பாரதி கேஸ்ளையும் இந்திரன் ஆக்சிடென்டளையும் என்னை வான்டேடா மாட்ட வெக்க யாரோ பிளான் பண்ணியிருக்காங்க. ஏற்கனவே பிஸினெஸ்ல நிறைய பிரச்சனை இதுல இந்தப் பிரச்சனையிலையும் நான் மாட்டிக்க விரும்பல. மேலும் இது நம்ம குடும்ப மானம் சம்மந்தப்பட்டது..." என்று சந்திரன் உரைக்க,

"என்ன டா பெரிய குடும்ப மானம்? குடும்ப மானம்னு ஏற்கனவே பண்ணதெல்லாம் பத்தாதா?" என்று பொங்கிய இமையன் ஏதோ சொல்லக் கூடாததைச் சொன்னதைப் போல நாக்கைக் கடித்து,"இது எவ்வளவு பெரிய அப்பென்ஸ் தெரியுமா? ஆள் மாறாட்டம்..."

"தப்பு தான்..." என்று வருந்தும் தம்பியைப் பார்க்கவே இமையனுக்கும் பாவமாக இருந்தது.

"அண்ணா எனக்கென்னவோ பாரதி சார் ஆக்சிடென்டுக்கும், இந்திரன் ஆக்சிடெண்டுக்கும், என்னை அங்க வரவெச்சதுக்கும், அந்த api சம்மந்தம் பட்டத்துக்கும் தொடர்பு இருக்குமோனு ஒரு சந்தேகம்..." என்று சந்திரன் சொன்னதும் இமையனும் தலையை ஆட்டினார்.

"இதைப்பற்றி நான் நிறைய விசாரிக்கணும்..." என்றவர் தாமோவுக்கு அழைக்க, தாமோவோ தயக்கத்துடன் பேசினார்.

"என்ன தாமோ? என்ன ஆச்சு?" என்றார் இமையன்.

"சார் ஒரு பெரிய சிக்கல் ஆகிடுச்சு..." என்று தாமோ சொல்ல,

"என்ன டா சிக்கல்?" என்று அதிர்ந்தார் இமையவர்மன்.

*********************

"என் அப்பா என் பெரியப்பாவுக்கு எல்லாமுமா இருந்தாரு. அப்படி ஒருமுறை நீண்ட நாள் மூலிகை ரிசர்ச் பண்ண ஒரு மலை கிராமத்துக்குப் போகும் போது தான் அவங்க என் அம்மாவைப் பார்த்திருக்காங்க. அப்போ தான் பெரியப்பாவுக்கும் கல்யாணம் ஆகி இருந்ததாம். அங்க நீண்ட நாள் தங்குனதுல என் அப்பாக்கு என் அம்மாவைப் பிடிக்க அவங்களுக்கு என் அப்பாவைப் பிடிக்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்பட அவங்க சார்பா என் பெரியப்பா என் தாத்தா கிட்டயும் அந்த இனத் தலைவர் கிட்டயும் பேச அவர்களோ மறுத்து அவசரமா என் அம்மாக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் செய்ய முடிவு எடுத்துட்டாங்க...

இதைத் தெரிஞ்சிகிட்ட என் அப்பாவும் பெரியப்பாவும் இனி இவங்க கிட்டப் பேசி பிரயோஜனம் இல்லைனு நெனச்சி என் அம்மாவை அவங்க கூடக் கூட்டிட்டு வந்து கல்யாணம் செஞ்சி வெச்சிட்டாரு. அதுக்கப்றோம் பிறந்தவ தான் நான். ஆனா இடையில என் பெரியப்பாவுக்கு என் அக்கா பிறந்தாங்க. அவங்க தான் ஐராவதி. சின்ன வயசுல இருந்து யாரு கிட்டயும் அவ்வளவா நெருங்கி பழகாதவங்க. ஆனா நான் எல்லோரு கிட்டயும் நல்லா பழகுவேனா... எனக்கு மூணு வயசாகியும் பேச்சு வராம போக அப்போதான் பெரியப்பா என்னை இன்னும் நல்லா கவனிக்க ஆரமிச்சாரு. நிறைய மருந்து அது இதுனு கொடுக்கணும்னு என்னை அவர் கூட அவங்க வீட்டுலயே வெச்சிகிட்டாரு. இது என் அக்காக்குச் சுத்தமாவே பிடிக்கல. என் அக்காக்கும் அவங்க மட்டும் செல்லமா இருந்த வீட்டுல நான் உள்ள வந்தது பிடிக்கல. மேலும் என் அக்கா சின்ன வயசுல இருந்தே ரொம்ப அடம், பிடிவாதம். அதனால என் அக்காவை ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வெச்சாங்க. என் பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை அவங்க சொந்தப் பொண்ணு போல் தான் வளர்த்தாங்க. நான் ஒரு ஸ்பெஷல் சைல்ட் (வாய் பேச முடியாத காரணத்தால்) என்பதால் என்னை ரொம்ப பொறுப்பாவே பார்த்துக்கிட்டாங்க...

ஒரு நாள் அவசரமா ஒரு இடத்துக்குப் போக என் அப்பாவும் அம்மாவும் கார்ல போகும் போது அவங்க... என்றவள் கண்களில் கண்ணீர் வந்தது. அவள் எழுதும் பேப்பர் ஈரத்தில் நனைய, ஆனா என் பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை இன்னும் பாசமா வளர்த்தாங்க. அது என் அக்காக்கு இன்னும் பிடிக்கல போல. மேலும் என் அக்கா தான் டாக்டர் படிக்க விரும்பலைன்னு சொல்லி மறுத்துட்டாங்க. என் பெரியப்பாவுக்கு அதுல உடன்பாடு தான். ஆனா அவர் ஆசைப்படி என்னை ஒரு டாக்டர் ஆகணும்னு விரும்பினார்..."

வானிலை மாறும்...
 
Top