Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை- 27

Advertisement

praveenraj

Well-known member
Member
தருணும் குகனும் காரில் இந்திரன் சொன்ன விலாசத்திற்குப் பயணித்தனர்.

"பாஸ் இப்போவாச்சும் இந்திரன் கிட்ட என்ன பேச போறோம்னு சொல்லுங்க?"

"இந்திரன் கிட்டப் பேச நிறைய இருக்கு டா குகா..."

"பாஸ் எனக்கொரு சந்தேகம்..." என்றதும் திரும்பி குகனை முறைத்தான் தருண்.

"இல்ல பாஸ், இப்போ நாம இந்திரனை மீட் பண்ணப் போறதை கதிரவன் பார்த்துட்டான்னு வெச்சுக்கோங்க அப்போ என்ன பண்றது?" என்று கேட்க,

"ஏன்டா நல்லதே நெனைக்க மாட்டியா?"

"ஒருவேளை..."

"ஏன் எனக்கென்ன பயம்? ஆமா நான் இந்திரனை மீட் பண்ணனும்னு சொல்லிட்டுப் போவேன்..."

"ஐயோ பாஸ் அப்றோம் அவன் எப்படி நமக்கு உவ்வா குடுப்பான்?"

"என்ன கொடுப்பான்?"

"உவ்வா, ரூபா, காசு, பணம், துட்டு, மணி மணி..."

"என்னமோ இவன் ஒருத்தன் தான் எனக்குப் பணம் தர மாதிரி பேசுற? கம்முனு வாடா..."

"பாஸ் எதுக்கும் கதிரவனுக்கு போன் பண்ணி நீங்க இந்திரன் கூட இல்லையேன்னு கேட்டுக்கலாமா?" என்ற குகனை ஏளனமாக முறைத்த தருண்,"சூப்பர் ஆனா அவன் ஏன் கேட்கறேன்னு கேட்டா என்ன சொல்லுவ?"

"நாங்க உனக்குத் தெரியாம இந்திரனைப் பார்க்க போறோமே... அதுதான்னு சொல்லிடுவேன்..." என்று ரகசியமாகச் சொன்னான் குகன்.

"நீ பெங்களூருல ஒன்ன மறந்து வெச்சிட்டன்னு நெனைக்கிறேன்..."

"இல்லையே பாஸ்... ஆம் என் சீப்பை தான் அங்க வெச்சிட்டேன் அதையும் கரெக்ட்டா எடுத்து வெச்சிகிட்டேனே?"

"உன் சீப்பு பக்கத்துலயே உன் மூளையையும் வெச்சிட்டு வந்திருப்ப. மறக்காம திரும்பப் போய் எடுத்துக்கோ. அப்றோம் அதை யாராவது எடுத்துட்டாங்கனா நிலைமை இன்னும் மோசமாகிடும்..." என்று சொல்ல,

"பாஸ் என்னை கிண்டல் பண்றீங்களா நீங்க? அங்க உங்க ஃப்ரண்ட் எப்படிப்பா நீ எப்படிப்பா தருண் கிட்ட வேலை செய்யுறனு கேட்டாரு தெரியுமா? ஆனா நான் தான், 'சார் இப்படி எல்லாம் ஐஸ் வெச்சாலும் நான் உங்க கூட வரமாட்டேன், எப்பயும் தருண் பாஸுக்கு தான் நான் வேலை செய்வேன்னு' சொல்லிட்டு வந்தேன். ஆனா என்னையவே நீங்க இன்சல்ட் பண்றீங்க..." என்றவனுக்கு,

"ரொம்ப மெச்சிக்காத... அவன் அந்த அர்த்தத்துல எல்லாம் கேட்டிருக்க மாட்டான். உன்னையெல்லாம் எப்படி டா தருண் கூட வெச்சியிருக்கான்னு கேட்டிருப்பான். உன் மானத்தோடு என் மானத்தையும் சேர்த்து வாங்கிட்டு வந்துட்டல்ல?" என்று தலையில் அடித்துக்கொண்டான் தருண்.

*******************

ஜோன்ஸைப் பற்றி இன்னும் சில தகவல்கள் எல்லாம் வேண்டும் என்று எண்ணிய குமரன் மீண்டும் அதே டிடெக்டிவ் நண்பனிடம் அழைத்துச் சொல்லிவிட்டு அப்படியே பாரதி சாரின் பேமிலி பற்றியும் வேறு எதாவது தெரியுமா என்று விசாரிக்க சில தகவல்களை அவனிடம் சொன்னான் அந்த டிடெக்டிவ்.

இப்போது குமரனின் வாட்ச் லிஸ்டில் உபேந்திரன் மற்றும் அந்த இரண்டு பெண்களுடன் மகேந்திரனுடன் இருக்கிறார்கள். இருந்தும் ஜீவா மற்றும் சமுத்திரனையும் முழுமையாக அவன் ஒதுக்கிடவில்லை. வழக்கமாக தங்களின் பவுண்டேசனுக்கு ஒரு பெரிய தொகை மாதம் தவறாமல் வந்துவிடும். இம்முறையும் அந்தப் பணம் வந்தது. என்ன யாரிடமிருந்து வருகிறது என்ற டீடெய்ல் மட்டும் குமரனுக்குத் தெரியவில்லை. அந்த ஆடிட்டருக்கு தெரியும். ஆனால் அவர் அதைச் சொல்வதில்லை. அவனுக்கு தங்கள் மருத்துவமனையின் லாயர் நீல கண்டனின் ஜூனியரிடமிருந்து அழைப்பு வந்தது. குமரன் எடுத்து பேச, ஐராவதி லிகலாக குமரன் மீது ஆக்சன் எதாவது எடுக்க முடியுமா என்று விசாரித்ததாகச் சொல்லப்பட அதிர்ந்தான் குமரன்.
******************
ஹோட்டலுக்குள் தருணும் குகனும் நுழைந்தனர். இந்திரன் சொன்ன அறைக்குச் செல்ல அங்கே இந்திரன் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தான். மாதுளையை தனியே ஒரு அறையில் இருக்குமாறு சொன்னவன் தருண் வந்ததும் அவனைத் தனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமரச் சொன்னான். பார்மலாக தருண் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள எதையும் சொல்லாமல் இருந்தான் இந்திரன்.
அங்கே மௌனம் ஆட்சி செய்ய தருணே ஆரமித்தான்,"மிஸ்டர் இந்திரஜித் வர்மன். நான் தருண், ஒரு பிரைவேட் டிடெக்டிவ்..." என்றதும்,"நான் குகன். பாஸோட லெப்ட் ரைட், ஸ்ட்ரெய்ட் எல்லாம் நான் தான்..." என்று குகன் சொல்லவும் தருண் திரும்பி அவனை முறைத்தான். 'ஆமா இவரு மட்டுமா இந்த கேஸ்ல கண்டுபிடிச்சாரு? எல்லாம் நான் தான்...' என்று முணுமுணுத்தான் குகன்.
"சொல்லுங்க என்ன விஷயம்? எதுக்கு என்னை மீட் பண்ணனும் ஆசைப்பட்டீங்க? அதும் எனக்கு எதிரா கதிரவன் உங்களை பாலோ பண்ணச் சொல்லியும்..." என்று இந்திரன் கேட்கவும் இதை எதிர் பார்க்காத தருண் ஆச்சரியம் கொண்டான்.
"ஸ்மார்ட். வெரி ஸ்மார்ட். ஐ அம் இம்ப்ரெஸ்ஸட் இந்திரன். அப்போ கதிரவனைப் பற்றித் தெரிந்தும் நீங்க அமைதியா இருக்கீங்கன்னா என்ன ரீசன் தெரிஞ்சிக்கலாமா?"
"உங்க கிட்ட நான் இதை ஏன் சொல்லணும்? சொன்னா எனக்கு என்ன கெய்ன் இதுல?"
"மிஸ்டர் இந்திரன். நீங்க பிசினெஸ்மேனா இருக்கலாம். தப்பில்லை ஆனா எல்லாத்தையும் ஒரு பிசினெஸ் மோட்டிவ்ல அணுகக்கூடாது..."
"சரி சொல்லுங்க..."
"ஆக்சுவல்லி உங்க கேசுக்குள்ள நான் எப்படி வந்தேன்னா உங்க கம்பெனியோட சகலமுமா இருக்கும் மிஸ்டர் தாமோதரனை பாலோ பண்ண கதிரவன் என்னை அப்ரோச் பண்ணாரு. அப்போ சாதாரணமா உங்க கேஸை விசாரிக்கும் போது தான் அட்டகட்டில உங்களை அட்டேக் பண்ண வந்த கேங்கை பற்றி எல்லாமும் தெரிஞ்சது. தெய் திங்க் தெய் ஆர் க்ளெவர். ஆனா இல்லை. கல்கத்தாவுல இருந்து மலேசியா காரங்களுக்கு அசைன்மென்ட் போயிருக்கு. அவங்க ராஜஸ்தானுல இருந்து ஒரு கேங்கை அரேஞ் பண்ணியிருக்காங்க. நானும் ரொம்ப தீவிரமா இதுல இறங்கும் போது தான் ஒரு சாதாரண டீலிங்க்ல இந்த விஷயம் அரங்கேறியிருக்குனு தெரிஞ்சது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு லோக்கல் கையாளு அவன் பேரு காசிமேடு கஜா தான் அவங்க. அவன் மூலமா இந்த டீலிங் பேசப்பட்டிருக்கு. என்னடா எந்தச் சம்மந்தமும் இல்லாம லோக்கல் கையாளு மூலமா ஒரு பாரின் ஆளுங்க கிட்டப் போய் திரும்ப ஒரு லோக்கல் ஆளுங்க இறங்கி இருக்காங்கனு நான் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டேன். ஆக்சுவல்லி அதுவரை எனக்கு இந்த கேஸ் மேல அவ்வளவு ஆர்வமில்லை. அப்போதான் இந்த கேஸ் எனக்கு ரொம்பவும் இன்டர்ஸ்டிங்கா இருந்தது..." என்றதும் இந்திரன் மிகவும் ஆவலாக இதைக் கேட்க ஆரமித்தான். குகனிற்கும் பயங்கர ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை எல்லாம் தன்னுடன் சொல்லவேயில்லையே என்று அவன் தருணை முறைத்தான்.
"பட் அந்த போலீஸ் யாருனு எனக்குத் தெரியில. ஆனா இப்போ தெரிஞ்சது. யூ நோ வாட் நான் இதுல இறக்கியிருக்கேன்னு தெரிஞ்சோ இல்ல வேற யாரோ இருக்காங்கனு தெரிஞ்சோ பாவம் அந்த போலீஸ் இப்போ மிஸ்ஸிங். என் கேல்குலேஷன் கரெக்ட்னா இந்நேரம் அந்த போலீஸ் உயிரோட இருக்க வாய்ப்பேயில்லை. பரவாயில்ல... ஆனா இதுல எனக்கு இடிச்சது ஒன்னே ஒன்னு தான். கதிரவன் ஏன் இதுல மூக்கை நுழைச்சாருனு புரியாம இருந்தேன். நானும் கதிரவனை ரொம்ப தப்பா எடை போட்டுட்டேன். பட் அந்த அட்டகட்டியில மூணாவதா ஒரு கேங்க் இருந்தது தெரிய வந்ததும் தான் கதிரவனை எனக்கு நல்லா புரிஞ்சது. அதனால தான் உங்களையும் எனக்கு நல்லாவே புரிஞ்சது. எப்படியெப்படி நீங்களே கதிரவனை உங்களுக்கு எதிரா நிக்க வெச்சியிருக்கீங்க. அதாவது ஒரு உளவாளி மாதிரி. வெரி ஸ்மார்ட் பிளே மிஸ்டர் இந்திரன். பாவம் உங்க கண்ணாமூச்சி ஆட்டம் புரியாம ஏமாந்தது ஐ மீன் ஏமார்ந்து கொண்டிருப்பது அசோக் சௌனி அண்ட் தாமோதரன் தான்."
"உங்களைப் பற்றி எல்லாமும் அறிந்த உங்க அப்பா மிஸ்டர் இமையவர்மன் கூட இதுல கூட்டு. ரைட்? நீங்களும் கதிரவனும் வெறும் வாய் வார்த்தைக்காக மாமன் மச்சான்னு கூப்பிட்டுக் கொள்றது இல்ல. உங்க தங்கை சிந்துஜாவும் கதிரவனும் லவ் பண்றது தெரிஞ்சு அந்த லவ்வுக்கு சப்போர்ட் பண்ணீங்க. பிளான் படி உங்களுக்கு ஸ்ரீக்கும் கல்யாணம் நடந்திருந்தா எல்லாம் ஓகே ஆகியிருக்கும். ஆனா இடையில அந்த ஆக்சிடென்ட் எல்லாத்தையும் மாற்றிடுச்சி..."
"உங்களுக்கு நடந்த ஆக்சிடென்ட், அட்டகட்டி அட்டேக் ரெண்டுத்துக்கும் முன்னாடி ஒரு சம்பவம் நடந்திருக்கு. நீங்களும் கதிரவனும் ஸ்டார்ட் அப் ஆரமித்து நல்லா போயிட்டு இருக்கும் போதே இடையில சிலர் உங்களைப் பிரிக்க நினைக்க அவங்களுக்கு பாடம் புகட்ட தான் உங்களுக்கும் கதிரவனுக்கும் நடுவுல மனஸ்தாபம் இருக்குற மாதிரியும் உங்க மேல கதிரவன் அதிருப்பிதியில இருக்குற மாதிரியும் வதந்தியைக் கிளப்பனீங்க. அப்போ அவங்களை நீங்க ஜெயிக்க உதவிய அந்த டெக்னீக் இன்னைக்கு வரை பாலோ பண்றீங்க இல்ல? நல்ல ஃப்ரண்ட்ஷிப். கீப் இட் அப். இந்த விஷயம் தெரியாம நீங்க அடிப்பட்டதும் உங்க நிறுவனத்தைத் தோற்கடிக்க நெனச்ச அந்த அசோக் சௌனியை மடக்க யோசிக்கும் போது நடந்த அந்த ஆக்சிடென்ட் நடக்க கதிரவனுக்கு அவர் மேல டவுட் வரவும் அவருக்காக நடிச்சிட்டு இருக்காரு. எப்படி எப்படி உங்க கார் டிரைவர் மொபைல்ல நீங்களும் அவர் கார் மொபைல்ல அவரும் பேசுவீங்களாம். ஸ்மார்ட்..." என்றவன் நிறுத்தினான்.
"பட் இவ்வளவு விஷயத்துல ஸ்மார்ட்டா இருக்குற நீங்க எப்படி ஒரு சின்ன பொண்ணு விஷயத்துல முட்டாளா இருக்கீங்கன்னு எனக்குப் புரியில..." என்று அவன் சொல்லவும் எல்லாம் கேட்டவன் நிறைய அமைதி காத்தான். தருணின் ஸ்மார்ட்னேசுக்கு கைத் தட்டினான்.
"நான் ஏதோ ஒரு டிடெக்டிவ மீட் பண்ணப் போறேன்னு தான் நெனச்சேன். இல்ல நீங்க நிஜமாலுமே ஸ்மார்ட் தான் போங்க. அண்ட் இந்த இந்திரன் யாருகிட்டயும் அவ்வளவு சுலபத்துல ஏமாற மாட்டேன். மாதுளை... கொஞ்சம் வெளிய வரியா?" என்று அழைக்க ஏனோ தன் வேஷம் கலைந்ததும் சோகமாகவே வெளியே வந்தாள் மாதுளை. அவளைப் பார்த்த குகன் ஆச்சரியப்பட்டு,"பாஸ் இந்தப் பொண்ணப் பத்தி நேத்து தான் உங்க ஃப்ரண்ட் சொன்னாரு. இந்தப் பொண்ணைக் காணோம்னு தேடிட்டு இருந்தாரு. இது எப்படி இங்க?" என்றதும்,
மாதுளைக்குப் பேச முடியாமல் கண்களில் பயம் அதே நேரம் குற்றயுணர்ச்சி எல்லாம் வர நடுங்கி நின்றாள்.
"மாதுளை. இனி எல்லாம் நீ தான் சொல்லணும். சாரி உன்னால பேச முடியாதில்லை. இருந்தும் நீ இப்போ எங்களுக்கு ரீசன் சொல்லணும். யாரு உன்னை அனுப்பினது?உனக்கெதுக்கு இந்த வேஷம்? யாருக்கு உன் விசுவாசத்தைக் காட்ட இப்படி இருக்க?சொல்லு மாதுளை?" என்றான் தருண்.
"எல்லோரையும் புரிஞ்சிக்க முடிஞ்ச என்னால உன்னை மட்டும் புரிஞ்சிக்க முடியல. காரணமே தெரியில. ஆனா இன்னைக்கு காலையில தான் எனக்குத் தகவல் தெரிஞ்சது. சொல்லு, ஏன் உன்னைப் பற்றிய எல்லா டாக்குமென்சும் அழிச்ச? யாருக்கு நீ மெசேஜ் பண்ற? ஐராவதிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? இல்ல சந்தான பாரதிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் இந்திரனைக் கொல்ல முயற்சிக்கனும்? கொல்லணும்னு வீட்டுக்கு வந்துட்டு அதையும் செய்யாம உன்னை அனுப்பிச்சவங்களுக்கும் மறுப்பைச் சொல்லாம ஏன் இப்படி கஷ்ட படுற? இல்ல ஐராவதி ஏன் என்னைக் கொல்ல உன்னை அனுப்பனும்? ஏன்னா இந்திரனை அட்டேக் பண்ண வந்தவங்க கிட்ட கைமாறுன டாலர்ஸ் எல்லாம் ஐராவதி அக்கௌண்ட்ல அதாவது சந்தான பாரதி அக்கௌண்ட்ல இருந்து ட்ரான்ஸ்பெர் ஆகியிருக்கு. எல்லாத்தையும் ஸ்மார்ட்டா பண்ணவன் இந்த விஷயத்துல தெரிஞ்சே தப்பு பண்ண மாதிரி எனக்கு இருக்கு. அதாவது மாட்டுனா ஐராவதி தான் மாட்டுவா. சொல்லு..." என்றான் தருண்.
"மாதுளை அன்னைக்கு அட்டகட்டில என் மேல மரக்கிளை தானாவா விழுந்தது? நீ நெனச்சியிருந்தா அன்னைக்கு என்னை ரொம்ப ஈஸியா மர்டர் பண்ணியிருக்கலாம். ஆனா அடிக்கவும் செஞ்சிட்டு எதுக்கு ராஜேந்திரன் அண்ணா கிட்ட என்னைக் காப்பாத்த சொன்ன?"
மாதுளை பயத்தில் நடுங்க,
"அன்னைக்கு அங்க கீழ தண்ணீர் தேங்கி இருந்தது. நான் கீழ விழும் போதே உன்னைப் பார்த்துட்டேன். ஆனா மறுநாள் நீ அந்த பேக்கரில என்னைக் கண்டும் காணாமல் போனதை நினைக்கையில் ஒருவேளை இதெல்லாம் என் பிரமையோனு நெனச்சி ரொம்ப குழம்பினேன்..."
"அன்னைக்கு அந்த விழா நடந்த இரவு ஒரு குழந்தை காட்டுக்குள்ள போனது. நான் முட்டாள். இந்த காட்டுலேயே பிறந்து வளர்ந்த அந்தக் குழந்தையை தேடி நான் காட்டுக்குள்ள வந்தேன். ஆனா ஒன்னை நீ மறந்துட்ட... அன்னைக்கு நீ என் கவனத்தை ஈர்க்க தான் அதைச் செஞ்சன்னு எனக்கு அப்போவே தெரியும். நானும் அந்தக் குழந்தையைத் தேடி உள்ள போனேன். அந்த காட்டுக்குள்ள வழி தெரியாம திண்டாட அப்போ அவங்க எல்லோரும் என்னைச் சூழ்ந்துக்க போச்சு இனி நான் பிழைக்க மாட்டேன்னு நினைக்கும் போது உன் தாத்தா சித்தன் எப்படி அங்க வந்தார்? சாரி நீ வரவெச்ச..."
"சரி அதை விடு. சித்தன் தாத்தாவை எதுக்கு அங்க வர வெச்ச? அன்னைக்கு என்னை ரௌடி கும்பல் கொலை செய்ய வராங்கனு தெரிஞ்சும் ஏன் உன் தாத்தாவை அனுப்பி என்னைக் காப்பாற்ற வெச்ச. ஒருவேளை அன்னைக்கு உன் தாத்தாவை நீ அனுப்பாம இருந்திருந்தா உன் வேலையும் சக்சஸ் ஆகியிருக்கும் உன் தாத்தா பாட்டியும் உனக்கு மிஞ்சியிருப்பாங்க... உன் தாத்தாவோட கடைசி வார்த்தை இன்னும் என் காதுலயே இருக்கு."ஐயா சாமி என் பேத்தி உன்னைக் கொல்ல தான் வந்திருக்கானு தெரியாம நான் அவளைக் கூடவே வெச்சியிருந்திருக்கேனே? உங்க அப்பா எங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ராரு... என்னை மன்னிச்சுடு தம்பின்னு" சொல்லிட்டு,"எப்படியாவது அந்தப் புள்ளைய காப்பாத்தித் திருத்துங்க தம்பின்னு" என் கை..." என்று இந்திரன் சொல்ல அவரின் குருதி படிந்த அவனின் அன்றைய கரத்தை நினைக்கையில் இந்திரனுக்கு உடல் நடுங்கியது.
"அன்னைக்கு உன் தாத்தாவை இழந்து கூடவே பாட்டியையும் இழந்து வாய்விட்டுக் கதற கூட முடியாம நீ கஷ்டப்பட்ட பாரு அப்போவே எனக்கு ஒன்னு புரிஞ்சது. அன்னைக்கு என் அம்மா அவங்களா உன்னை எங்ககூடக் கூப்பிடல நானா தான் கூப்பிட வெச்சேன். சரி என்னைக் காப்பாத்தணும்னு நீ முடிவு பண்ணதுக்கு அப்றோம் நீ நேராவே என்கிட்ட வந்து சொல்லியிருக்கலாமே? அன்னைக்கு ரூம்க்கு காஃபீ கொண்டு வரும் போது உன் கையில இருந்த அந்த மருந்தை ஏன் நீ கலக்கல? ஒவ்வொரு முறையும் நீயே என்னைக் கொல்ல வர கடைசியில நீயே என்னைக் காப்பாத்துற. ஏன்? கதிரவன் அன்னைக்குப் பேசுனதை ஒட்டுக் கேட்ட நீ எதுக்கு என் ரூம்ல 'ஆதவன் உங்களை அழிக்கும். கவனம்'னு எழுதி வெச்ச? அன்னைக்கு நீ முகத்துல எவ்வித உணர்ச்சியும் காட்டாம இருந்ததை கதிரவன் கூடச் சொன்னான். சொல்லு மாதுளை, என் அம்மா ஸ்ரீயையும் சிந்துவையும் நினைத்து ஒவ்வொரு முறை அழும் போதும் ஏன் அவங்களை ஆறுதல் செஞ்ச? அப்போ உன்னோட உண்மையான சுயரூபம் தான் என்ன? உன்னால பேச முடியாதுனு எனக்குப் புரியுது. பட் எப்படியாவது கன்வே பண்ணு. நீ உண்மையிலே என்னைக் கொல்ல வந்தியா இல்லை என்னைக் கொல்ல முயற்சி பண்றவங்ககிட்ட இருந்து காப்பாத்த வந்தியா? என்னனு எனக்குப் புரியில..."
"அண்ட் இவ்வளவு பெரிய வீட்டுக்குள்ள அதும் எனக்கு எதிரா ரெண்டு கொலை முயற்சி நடந்த பிறகும் அதுல ஒன்னுக்கு நீயே சஸ்பெக்ட்டா இருந்தும் நீ அவ்வளவு சுலபமா எல்லாம் என் வீட்டுல நுழைஞ்சு அங்கேயே தங்கி எனக்கெதுரா அடுத்த முயற்சிகளைச் செய்ய முடியும்னு நெனச்சிட்டு இருக்கியா மாதுளை? அப்படி ஒரு நினைப்போடு நீ இருந்திருந்தா ஐ அம் சாரி இந்த உலகத்துலயே உன்னைவிட பயங்கரமான முட்டாள் யாருமில்லைனு அர்த்தம். ஆனா இருந்தும் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது..." என்று இந்திரன் சொல்ல அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"ஐ மீன் உன் தைரியம், தன்னம்பிக்கை அதைச் சொன்னேன். சிங்கத்தோட குகைக்குள்ளையே வந்து அதைக் கொல்ல நீ முயற்சித்தது. உன்னோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு நான் கண்டு பிடிக்க ரொம்ப ஆவலா இருந்தேன். அதுனால தான் உன்னை உடனே என் pa ஆக்குனேன். நீ எனக்கு வலை விரிச்சதா நெனச்சிட்டு இருக்க ஆனா உண்மையிலே நான் தான் உனக்கு வலை விரிச்சது..."
"ஆனா இவ்வளவு நடந்தும் உன்னை ஏன் பத்திரமா பார்த்துட்டு இருக்கேன் தெரியுமா? நீ இப்பயும் எனக்கொரு புதிரா தான் இருக்க. கதிரவன் எனக்கு எதிரா நடக்குறானு தெரிஞ்சதும் ஒருவேளை நீ அவன் கூடக் கூட்டணி போட்டிருந்தாலோ இல்ல குறைந்த பட்சம் அவனைப் பற்றி என்கிட்டக் காட்டிக்கொடுக்காம இருந்திருந்தாலோ உன்னை நான் புரிந்ததிருக்க முடியும். ஆனா நீ ரெண்டையும் பண்ணல. அது தான் உன்னை மேலும் இங்கவே தங்க வெச்சது. நான் அமைதியா இருந்தாலும் கதிரவன் அமைதியா இல்லை. அவனோட ஒவ்வொரு பார்வையும் செய்கையும் உன்னைச் சந்தேகத்தோடு தான் பார்த்தது. ஆனா அப்பயும் நீ அவ்வளவு ஸ்ட்ராங்கா தான் இருந்த, இன்னைக்கு காலை வரை. இதுல இருந்து ஒன்னு மட்டும் க்ளியர். நீ என்னைக் கொல்ல வரல. உனக்கு அதுல எந்த விருப்பமும் இல்லை. இன்பேக்ட் நீ என்னைக் காப்பாற்றிக்கிட்டுத் தான் இருக்க. ஆனா ஏன்? எதுக்குனு நீ தான் சொல்லணும்..." என்று தன் நீண்ட உரையை முடித்தான் இந்திரன்.
"பாஸ் இங்க என்ன நடக்குது? எனக்குச் சுத்தமா புரியில... நீங்க ஒன்னு சொல்றீங்க அவரு ஒன்னு சொல்றாரு, இந்தப் பொண்ணு எதையுமே சொல்லாம அமைதியா நிக்குது. ப்ளீஸ் கொஞ்சம் புரியவைங்க. நான் பாவம். எனக்கு உங்க அளவுக்கு அறிவு இல்ல..." என்றான் குகன்.
"கொஞ்சம் பொறு..." என்றான் தருண்.
"ஏன் பாஸ்? அப்போ என்னை மாதிரியே உங்களுக்கும் எதுவும் புரியலையா?" என்று சொல்லி,"சேம் பின்ச் பாஸ்..." என்றவன் தருணைக் கிள்ளினான். குகன் சொன்னதில் கடுப்பான தருண் தலையில் அடித்துகொண்டான்.
"பாஸ் இதுக்கு ஏன் டென்ஷன் ஆகறீங்க? நான் எப்படியாவது என்னனு கேட்டு உங்களுக்கும் புரிய வெச்சிடுறேன்..." என்றான் குகன்.
மாதுளை ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரமித்தாள்.
"பாஸ் இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா நாம இப்படி எதுவும் புரியாம கேள்வி கேட்டும் பதில் சொல்லாம பெரிய கவிஞர் மாதிரி கவிதை எழுதுது பாருங்க... இதை..." என்று எட்டி அவள் எழுதுவதைப் பார்த்தான். எல்லோரும் குகனை முறைக்கவும் அமைதி ஆனான்.
"என் பேர் மாதுளை. என் தந்தையின் பெயர் கணேசன். டாக்டர் சந்தான பாரதியிடம் ட்ரைவராக பணிபுரிந்தவர் தான் என் தந்தை. ஆனால் டாக்டர், இல்லை இல்லை என் பெரியப்பா அவரைத் தன் தம்பியாகவே தான் பார்த்தார்..."
***********************
இப்படி யாரு என்ன என்று எதையுமே சொல்லாமல் அருகில் வந்தவன்,"இங்கப் பாருங்க, நான் இப்போ பேசப் போறது உங்களுக்குக் கோவத்தைத் தரலாம். ஆனா ஒன்னு நான் உண்மையா சொல்றேன். எனக்கு உங்களைப் பிடிக்கும். நான் உங்களைப் பார்க்க தான் தவறாம இந்தக் கோவிலுக்கு வரேன். எனக்கு அப்பா அம்மா யாருமில்லை. நான் டாக்டரா இருக்கேன். என் பேரு @#$% (தெரிந்தே தான் பிளாங்க்). நல்லா டைம் எடுத்துக்கோங்க அண்ட் நல்ல முடிவா சொல்லுங்க..." என்றவன் அங்கிருந்து சென்றான். இதையெல்லாம் தூரம் நின்று பசங்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்தாலும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் ஸ்ரீ. அன்றைய வகுப்பு முடிந்ததும் ஸ்ரீயிடம் நடந்ததை எல்லாம் அபர்ணா சொன்னாள்."சரி விசாரிப்போம்..." என்றாள் ஸ்ரீ. பின்னே தன் தோழியின் முகத்திலே அவளுக்கு இவனைப் பிடித்திருக்கிறது என்று ஸ்ரீக்குத் தெரிந்தது.
மறுநாள் அவனும் அவன் தோழன் ஒருவனும் அவர்களை வழி மறித்தனர். இந்திரன் வேலை விஷயமாக மும்பை சென்றிருந்த போது நடந்தது இது. அதனால் ஸ்ரீ ஆட்டோவில் வீட்டிற்குச் சென்று விடுவாள்...
வானிலை மாறும்...
 
75% மர்ம முடிச்சுக்களை கிளியர் பண்ணிட்டீங்க...
இதில் கதிரும் கிளியராகிட்டான்....
இப்ப மாதுளை பார்ட் தான் இருக்கு...
அந்த டாக்டர், கமலா...?
 
கரெக்ட் கரெக்ட் கிட்ட நெருங்கிட்டிங்க இன்னும் கொஞ்சம் போனா குற்றவாளிய கண்டுபிடிச்சிடலாம்....சீக்கிரமா கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடுங்க ???
 
Top