Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-26

Advertisement

praveenraj

Well-known member
Member
மாதுளையின் நடவடிக்கைகளில் அதிக அச்சமும் சந்தேகமும் கொண்ட கதிரவன் இப்போது என்ன செய்யலாம் என்று குழம்பினான். மீண்டும் அவளைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் எடுத்துதான். அவள் பெயர் மாதுளை என்றும் mba படுத்திருக்கிறாள் என்றும் பெற்றோர்கள் விபத்தில் இறந்துவிட்டார் என்று தான் இருக்கிறது. இவளைப் பற்றிய பின்புலம் எதுவும் இல்லை என்றதும் கோவம் கொப்பளிக்க கதிரவன் கத்தினான். இதில் இன்று மாலை தாமோவும் இந்திரனும் தனியாகச் சந்தித்து ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள் என்று கதிரவனுக்கு விஷயம் தெரியவரவும் அவன் இன்னும் நிம்மதி இல்லாமல் இருந்தான்.'ஒரு வேளை என்னைப் பற்றி ஏதாவது போட்டுக் கொடுத்திருப்பாரோ அந்தக் கிழம்?' என்று கோவத்தில் கதிரவன் இருக்க தாங்கள் ஆரமித்து ஸ்டார்ட் அப்பில் இருந்து அழைப்பு வந்தது. அதில் ஒரு சிக்கல் என்றும் இந்திரனிடம் பேச வேண்டும் என்றும் அதன் மேனேஜர் பேச இவன் என்ன விஷயம் என்று கேட்டும் அவர்கள் மறுக்க அதில் கடுப்பானவன்,"எதற்கெடுத்தாலும் இந்திரன் இந்திரன் தானா? ஏன் என்னையெல்லாம் பார்த்தா மனுஷனா தெரியாதா?" என்று கதிரவன் கத்த பயந்த அந்த மேனேஜர் விஷயத்தைச் சொல்லவும் அதற்கான தீர்வைச் சொன்ன கதிரவன் அழைப்பை வைத்தான்.
'இப்போ வேற வழியே இல்ல... அந்த டிடெக்டிவ் பசங்களை வெச்சி தான் மாதுளையைப் பற்றியும் இந்த தாமோ என்னவெல்லாம் செய்யறாருனும் பார்க்கணும்...' என்று எண்ணியவன் தருணை அழைத்தான்.

அங்கே தீவிரமாக சுபத்திராவுடன் டிஸ்கசனில் இருந்தவன் போனை சைலென்டில் போட்டு வைத்திருந்ததால் அவன் அழைப்பை எடுக்காததால் இன்னும் டென்ஷன் ஆனான் கதிரவன்.
****************
அன்று திருக்குமரன் மஹேந்திரனைத் தொடர்பு கொண்டு,"மஹி இந்த மாதிரி..." என்று ஐராவதியைப் பற்றி அவனுக்குத் தெரிந்த அனைத்தையும் ஒப்புவித்தான். எதையும் பெரிய ஆவல் இல்லையென்றாலும் வெறுமனே ஊம் கொட்டினான் மஹேந்திரன். அடுத்து மெல்ல தன் விசாரணையைத் தொடங்கினான் குமரன்.

"மஹி, பாரதி சார் உன்கிட்ட எதையாவது மனசு விட்டுப் பேசியிருக்காராடா?"

"டேய் குமரா என் பேர் மஹேந்திரன். நான் ஒன்னும் பாரதி சாரோட செல்ல ஜூனியர் குமரன் இல்ல. என்கிட்ட எதையும் அவர் பெர்சனலா எல்லாம் சொன்னதில்லை..." என்று அவன் சிரித்துக்கொண்டே சொன்னான். அதிலே அவனுக்கு தன் மீதிருக்கும் பொறாமை ஆதங்கம் ஆகியவை எல்லாம் குமரனுக்கு நன்கு புரிந்தது. 'இதற்கு மேல் நான் வெளிப்படையாக எதையுமே கேட்க முடியாதே?' என்று எண்ணியவன்,"டேய் இருந்தும் சார் அவரோட சீக்ரெட் பைல்ஸ் டீடெய்ஸ் எல்லாம் எங்க வெப்பாருனு உனக்கேதாவது தெரியுமா?" என்று கேட்க,

"டேய் உன்கிட்டயே சொல்லாத விஷயங்களையா அவர் என்கிட்டச் சொல்லியிருக்கப் போறாரு? போடா... எதுக்கும் நீ கமலை வேணுனா கேட்டுப்பாரு..." என்றான்.

"டேய் அவனுக்கு சும்மாவே என்னைக் கண்டா ஆகாது. இதுல..."

"அவனுக்கு என்னைக் கண்டா கூடத் தான் டா ஆகாது. எதுக்கும் கேட்டுப்பாரு. இல்லனா சமுத்திரனைக் கேட்டுப் பாரேன்..."

"எஸ் சமுத்திரனைக் கேட்டா ஓரளவுக்குத் தெரியும். இல்லைனாலும் அவனை வெச்சு கமல் கிட்டப் பேசலாம்... தேங்க்க்ஸ் டா..." என்றான் குமரன்.

"சரி டா எனக்கு கேஸ் இருக்கு. நான் வெக்கறேன்..." என்றான் மகேந்திரன். உடனே சமுத்திரனைத் தொடர்பு கொண்டான் குமரன். அழைப்பு எடுக்கப்படாததால் அவன் வேலை செய்யும் மருத்துவமனையை தொடர்பு கொள்ள, அவனொரு ஆப்ரேஷனில் இருக்கிறான் என்று சொல்லப்படவும் வந்ததும் தன்னை அழைக்குமாறு சொன்னான். யா குமரனுக்கு சந்தேகம் இருக்கும் நபர்கள் அந்தக் கமலக்கண்ணனும் உபேந்திரனும் தான்.
ஆபரேஷனில் இருந்து வந்த சமுத்திரனுக்கு குமரனிடமிருந்து தனக்கு வந்த அழைப்பைப் பற்றித் தெரிவிக்கப்பட உடனே குமரனுக்கு அழைத்தான் சமுத்திரன்.

"என்னடா சமு, ஓபியா? என்ன கேஸ்?"

"அப்பண்டிக்ஸ் (ஒட்டுக்குடல்) ஆப்ரேசன் தான் டா. இப்போதான் முடிஞ்சது. வெளிய வந்ததுமே சொன்னாங்க அது தான் கூப்பிட்டேன்..."

"அது ஒன்னுமில்லல சமுத்திரா... நீ ஃப்ரீ தானே?"

"எஸ்"

"அது பாரதி சார் கண்டுபிடிச்ச பார்முலா அதைப் பற்றிய டீடெய்ல்ஸ் ஏதாவது உனக்குத் தெரியுமா?" என்று தயக்கத்துடனே கேட்டான் குமரன்.

"டேய் நானே அவர் கிட்ட வெறும் பிப்ட்டின் டேஸ் தான் ரிசர்ச்ல இருந்தேன். ஜீவா, கமல் உபேந்திரன், நீரஜா இவங்க நாலு பேரும் தான் அதிகமா அவர் கூடவே இருந்தவங்க. இவங்களை விட்டுட்டு என்கிட்டக் கேட்கறியே? நான் இப்போல்லாம் அதிகமா பேசேன்ட்ஸ் கூடப் பார்க்கறதில்லை. ஒன்லி ஆப்ரேசன் தான்..."

"அது எனக்குத் தெரியும் மச்சி. இருந்தாலும் ஏதாவது..."

"சரி நான் கமல் கிட்டப் பேசிட்டுச் சொல்றேன்..."

"டேய் சமு, நான் கேட்டேன்னு கேட்காத டா. அப்றோம் அதுக்கும் வீம்பு பண்ணுவானுங்க..." என்று சலித்தான் குமரன்.

"அப்படி என்னடா உங்களுக்குள்ள ஈகோ? எல்லோரும் ஒன்ன தானே வளர்ந்தோம்? சரி போங்க..." என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
****************
மறுநாள் பொழுது அழகாய் விடிந்தது. தருண் சற்று உற்சாகமாய் எழுந்தவன் இன்று மதியம் பிளைட்டில் நேராக மும்பை செல்லலாம் என்று டிக்கெட் பதிவு செய்ய அவனுக்கு மணிமாறனிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு மாறா... என்ன விஷயம்?"

"இல்ல தருண், சார் (தயாளன்) உன்ன மீட் பண்ண முடியுமான்னு கேட்கச் சொன்னாரு... அது தான்..."

"அப்படியா! டிடெக்டிவ் மேதை தயாளன் சாரை மீட் பண்ண யாருக்கு தான் கசக்கும் சொல்லு? ஆனா இன்னைக்கு ஒரு கேஸ் விஷயமா நான் மும்பை போகவேண்டி இருக்கு சோ நாளைக்கு ஓகே வா?" என்று கேட்க,

"நான் சார் கிட்டப் பேசிட்டுச் சொல்றேன்..." என்றான் மாறன்.

'அவரு எதுக்கு நம்மள மீட் பண்ண ஆசைப்படணும்... என்னமோ இடிக்குதே?' என்று தருணிற்குத் தோன்றியது. ரெடி ஆனவன் குகனை அழைத்தான். அவனை அங்கிருந்தே மும்பை வரச் சொல்லிவிட்டு இவன் புறப்பட, சரியாக மூன்று மணிக்கு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிறான். இவனுக்கு முன்பாகவே குகன் அங்கே இருந்தான்.
****************
அன்று காலை வழக்கத்திற்கும் மாறாக சீக்கிரமே ஆபிஸ்க்கு விரைந்தான் இந்திரன். காலையே மாதுளையை அழைத்து இன்று மாலை ஒரு மீட்டிங் இருக்கிறதென்றும் அதற்கு தன்னோடு அவளும் வரவேண்டும் என்றும் கட்டளையிட்டவன் அந்த ஹோட்டல் முகவரியைச் சொன்னான். அவளும் அவனுக்கு தலையை ஆட்டிவிட்டு அவனுடன் பயணித்தாள். அவளுக்கு ஏனோ மனம் படபடவென்று அடித்து கொண்டது. சொல்ல முடியாத ஒரு நடுக்கம் அவளிடம் இருந்தது. நேராக ஆபிஸ் சென்று விட அங்கே வழக்கத்திற்கும் மாறாக கதிரவன் சீக்கிரம் வந்திருந்தான். அவனைக் கண்டவன்,"என்ன மச்சான் சீக்கிரமே வந்துட்ட? என்ன விஷயம்?" என்றான் இந்திரன்.

பதிலுக்கு,"நீ கூட தான் நேத்து சீக்கிரமே போயிட்ட... நான் ஏதாவது கேட்டேனா?" என்றான் கதிரவன். எந்த பதிலும் சொல்லாமல் இந்திரன் தன் கேபினுக்கு சென்றான். வழக்கமாக ரொம்ப நார்மலாக இருக்கும் மாதுளை இன்று கொஞ்சம் படபடப்போடு இருப்பதாக கதிரவனின் கண்களுக்குப் புலப்பட,"மாதுளை..." என்றான் சப்தமாக. அதற்கு அவளோ துள்ளி விழுந்து திரும்ப,"இங்க வாங்க..." என்றான் கதிரவன்.

என்ன என்பதைப் போல் அவள் கேட்க,

"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றவன் கண்ணிமைக்காமல் அவளின் கண்களை மட்டும் பார்க்க ஏனோ அவனின் ஐ கான்டெக்ட்டை தவிர்த்தாள் மாதுளை.
"ஓகே நீங்க போலாம்..." என்றவன்,'இவளிடம் எதோ தப்பு இருக்கு...' என்று புரிந்து கொண்டான். அங்கே இந்திரன் மிக தீவிரமான யோசனையில் மூழ்கியிருக்க அப்போது தான் தாமோ இந்திரனை அழைத்து சில தகவல்களைத் தெரியப்படுத்த அப்போது தாமோவிடம் எல்லாம் சொல்லிவிடலாமா என்று யோசித்தான் இந்திரன். பின்னே இன்று மாலை தான் தருணைச் சந்திக்கப் போவது அவருக்குத் தெரியாதே என்று இவன் நினைத்திருக்க பாவம் தாமோதரனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அவரை குறைத்து மதிப்பீட்டு இருந்தான் இந்திரன். தாமோவிற்கு எல்லாம் தெரியும். அவர் இன்றொரு வேலையாக வெளியே சென்றிருக்க ஒரு வேளை இந்திரன் தன்னிடம் இதைப் பற்றி ஏதேனும் சொல்வானா என்ற நப்பாசையில் தான் அழைத்தார்.

மதியம் போல மும்பை வந்து தரையிறங்கினான் தருண். குகன் அவனை வரவேற்று இருவரும் இந்திரன் சொன்ன அட்ரெஸ்க்கு சென்றனர்.

இந்திரனும் மாதுளையை அழைத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்குச் சென்று அவர்களுக்காகக் காத்திருந்தான்.
******************
அன்று சில வேலைகளில் பிசியாக இருந்த சமுத்திரன் திருக்குமரன் தன்னிடம் கேட்டதையே மறந்திருந்தான். அப்போது மீண்டும் குமரன் அவனை அழைக்கவும் தான் ஞாபகம் வந்தவனாக,"மச்சான் சாரி சாரி... நான் சுத்தமா அதைப் பற்றி மறந்துட்டேன். இரு இப்போ பேசிடுறேன்..." என்று சொல்லி கமலை அழைத்தான்.

கமல் சென்னையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறான். அதுவும் ஓரளவுக்கு பிரபலமான மருத்துவமனை தான். சமுத்திரனிடமிருந்து வந்த அழைப்பைப் பார்த்தவன் ஒரு வித யோசனையுடனே அட்டென்ட் செய்தான்,

"சொல்லு சமுத்திரா, என்ன அதிசயமா இருக்கு? போன் எல்லாம் பண்ணியிருக்க? அதும் டூட்டி டைம்ல..." என்றான் கமல்.

"ஏன் டா நான் போன் பண்ணக் கூடாதா என்ன?"

"சார் தான் இப்போல்லாம் ரொம்ப பெரிய ஆள் ஆகிட்டிங்க. நிறைய ஆப்ரேசன் எல்லாம் செய்யுறீங்க. நாங்க வெறும் mbbs தானே?" என்றான்.

"டேய் ஏன் இப்படிப் பிரிச்சுப் பார்க்கற? நாம எல்லோரும் எப்பயுமே ஒன்னு தான்டா. மோரேவேர் எல்லோரும் டாக்டர்ஸ்..."

"கரெக்ட் தான், ஆனா பைனான்சியல் ஸ்டேட்டஸ்னு ஒன்னு இருக்கு தானே? உன்னையும் அந்தக் குமரனையும் மட்டும் தானே ms mdனு படிக்க வெச்சாரு அவர். நாங்க எல்லோரும் வெறும் ரிசெர்ச்சல மட்டும் தானே அவருக்கு ஹெல்ப் பண்ணோம்..."

"அதுதான் நீயும் md பண்ணப் போற தானே?"

"ஹலோ அது நானா சம்பாதிச்சதுல படிக்கப் போறேன். உங்களை மாதிரி எங்களை யாரும் படிக்க வெக்கல..." என்று கமல் உரைத்ததில் அத்தனை வெறுப்பிருந்தது.

"இது தப்பு கமல். பாரதி சார் எல்லோரையும் தானே எதாவது படிங்கனு சொன்னாரு? நீ தான் இப்போதைக்கு mbbs போதும்னு சொல்லிட்ட இப்போ ஃபீல் பண்ணா எப்படி?"

"நான் திரும்பவும் போய் படிக்க ஆசைப்படுறேன் சார்னு கேட்டத்துக்கு நெக்ஸ்ட் இயர் சொல்றேன்னு சொன்னாரு. அதுதான் நானா படிக்கப் போறேன். சரியான பார்சியலாலிட்டி பார்க்கும் ஆளு..." என்றான்.

"இது தப்பு கமல். என்கிட்டயே இப்படிப் பேசுற ? அவரு இல்லைனா நாம எல்லாம் ஒன்னுமே இல்ல டா..."

"கரெக்ட், ஆனா எல்லோரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணியிருக்கணும். எல்லோரும் யாரும் இல்லாத அனாதைங்க தானே? அதென்ன ஒருத்தனுக்கு மட்டும் அந்த ஹாஸ்பிடல் நிர்வாகம், உனக்கு படிப்பு அப்போ நாங்க எல்லோரும் அவருக்கு கடைசி வரை அவர் ரிசர்ச்ல மட்டும் இருந்து உதவணும்னு நெனப்பு. கடைசியில அந்த பேராச்சும் எங்களுக்குக் கிடைக்குமானு பார்த்தா இல்ல... ஏன்னா சந்தான பாரதிங்கற அந்த ஆலமரம் எல்லாத்தையும் எடுத்துக்கும்..."

"சரி நீ நல்ல மூட்ல இல்லைனு நெனைக்கிறேன். நான் அப்றோம் கூப்பிடுறேன்..." என்ற சமுத்திரனுக்கு,

"நீ எப்போ கூப்பிட்டாலும் இது தான் என் பதில். உனக்கொரு விஷயம் தெரியுமா? அவரு எதோ திருட்டுத்தனம் செஞ்சாரு. யோசிச்சுப் பாரு அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் அதுக்குப் பெரிய ரிசர்ச் ஆனா அந்த ஹாஸ்பிடல்ல முக்கால்வாசி பேருக்கு ரொம்ப கம்மி விலையில ட்ரீட்மென்ட். இதுல நம்மளை மாதிரி நிறைய பசங்களை வேற படிக்க வெச்சாரு. ஒரு ஹோம் வேற நடத்துறாரு. நீயே யோசிச்சுப் பாரேன்? இவ்வளவு விஷயத்துக்கும் பணம் எங்கேயிருந்து வந்தது? இதை ஒரு நாள் கேட்டேன் அதுக்கு காச்சு மூச்சுனு கத்தி அந்த நர்ஸ் முன்னாடி எல்லாம் என்னை அசிங்கப் படுத்திட்டாரு..." என்றான் கமல்.

"கண்டிப்பா அவரு உன்கிட்ட மன்னிப்பும் கேட்டு இருப்பாரு தானே? கேட்கலையோ?"

"ஆம் திட்டும் போது மட்டும் ஊருக்கு முன்னாடி வெச்சு திட்டுறது. மன்னிப்பு மட்டும் தனியா கூப்பிட்டுக் கேக்குறது. இவரு ரிசெர்ச்சுக்கு உழைச்ச நேரத்துக்கு நான் ஹாஸ்பிடல்ல இருந்திருந்தேனா நாலு காசாவது சம்பாதிச்சு படிக்க ஆரமிச்சு இருப்பேன். எதையும் முழுசா செய்யணும். இல்ல செய்யவே கூடாது..."

"டேய் சரி நான் வெக்கறேன்..."

"என்ன? என் கூடப் பேசவும் உனக்குப் பிடிக்கல தானே? எல்லாம் அந்தக் குமரனைச் சொல்லணும். அந்த நாய் மட்டும் நைசா பேசி பேசி தாஜா பண்ணி ஹாஸ்பிடல் நிர்வாகத்தை வாங்கிட்டான்..." என்று குமரன் மீது ஏற்கனவே தனக்கிருக்கும் வன்மம் இப்போது இருக்கும் கோவம் எல்லாம் ஒன்று சேர்த்து பேசினான் கமல். ஆனால் அவன் பாதி பேச ஆரமித்த போதே சமுத்திரனுக்கு அவனுடன் பேசப் பிடிக்காமல் போய்விட்டது. பிறகு கொஞ்சம் நைசாக பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் சமுத்திரன். இப்போது இதை எப்படி குமாரனிடம் தெரிவிப்பது என்று புரியாமல் தவித்தான். அவன் பேசும் போது காலை ரிக்கார்ட் செய்து அவனுக்கு அனுப்பி விடலாம் என்றும் நினைத்தான். ஆனால் இது கோல் மூட்டுவதைப் போல் ஆகிவிடும் என்று அறிந்தவன் அந்த யோசனையைத் தவிர்த்தான்.

யா ஒன்றை இவனும் நோட் செய்திருக்கிறான். பாரதி சாராகவே தான் குமரனையும் தன்னையும் மேலே படிக்கச் சொன்னது. மகேந்திரன் மற்றும் கமல் இருவரும் தானாக கேட்டும் அவர்களைப் படிக்க வைக்கவில்லை அவர். நீரஜாவைப் படிக்கச் சொன்னவர் ஸ்டெப்பியிடம் சொல்லவில்லை. இவற்றை எல்லாம் பார்த்த உபேந்திரன் எதையுமே கேட்காமல் இருந்து விட்டான். ஒருவேளை அவர் மதிப்பெண்களைக் காரணமாக எடுத்திருக்கலாம். ஏனெனில் குமரன் கோல்ட் மெடலிஸ்ட். சமுத்திரனும் நீரஜாவும் ஜஸ்டில் கோல்ட் மெடலை தவறவிட்டவர்கள். மற்றவர்கள் எல்லோரும் நன்றாகவே படித்தாலும் இவர்களுக்குக் கீழே தான் இருந்தனர்.

பிறகு என்ன நினைத்தானோ எதையும் மறைக்காமல் குமரனிடம் சொல்லிவிட்டான்.
"இங்க பாரு குமரா, அவன் சொன்ன எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீ கேட்டனு தான் நான் பேசினேன்..." என்று சொல்லி வைத்தான். குமரனுக்கு கமலின் பேச்சு அதிக கோபத்தையும் அதைவிட ஆத்திரத்தையும் தான் தந்தது. கமல் இங்கே தான் சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறான். சென்றால் அரைமணி நேரத்தில் சந்தித்து விடலாம் தான். இப்போது வேண்டாம் என்று நினைத்தாலும் அவனை நோட்டட் லிஸ்டில் வைத்தான் குமரன்.
****************
மறுநாள் சொன்னபடியே சந்திர வர்மனும் கோகிலாவும் ஹர்ஷ வர்மனும் இமையவர்மனின் வீட்டிற்கு வந்தனர். சகுந்தலா தான் அவர்களை உளமார வரவேற்று அமரச் செய்தார். இமையவர்மன் அப்போது தான் ஆபிசிலிருந்து வந்து ப்ரெஷ் ஆகிவிட்டு கீழே வந்தார். எப்படி ஆரமிப்பது என்று தெரியாமல் எல்லோரும் அமைதியாக இருக்க, சந்திர வர்மனே பேச தொடங்கினார்.
"அண்ணி அந்த ஆக்சிடெண்டுக்கும் சிந்துவோட..." என்று நிறுத்தியவர்,"சத்தியமா நான் காரணமில்லை. இதோ என் பையன் ஹர்ஷா மேல சத்தியமா சொல்றேன் நம்புங்க. நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம் அதுக்குன்னு பசங்களை நான் என்னைக்குமே விரோதமா நினைச்சதே இல்லை. அதிலும் இந்திரன் அங்க நம்ம வீட்டுல அப்பா கூட வளர்ந்தவன். ஆமா சமயத்துல என் பையனைக் காட்டிலும் இந்திரனுக்கு அப்பா முக்கியத்துவம் கொடுக்கறது எனக்குப் பிடிக்காமலும் இருந்திருக்கு. ஆனா என்னைக்குமே நான் அவனை விரோதியாவோ எதிரியாவோ எல்லாம் பார்த்ததே இல்லை..."

"நீங்க நம்பறீங்களோ இல்லையோ, அந்த ஆக்சிடெண்டுக்கு அப்றோம் இப்போ வரை தினமும் நான் ஒரு பத்து நிமிஷமாவது கமலேஷ் கிட்டப் பேசுவேன். இந்திரன் எப்படி இருக்கான், நீங்க எப்படி இருக்கீங்கன்னு அண்ணா எப்படி இருக்காருன்னு எல்லாம் விசாரிப்பேன். நேர்ல வந்து உங்க கிட்ட ஆறுதல் சொல்லணும்னு நெனச்சியிருக்கேன். இப்பொயில்ல, நான் சென்னை வரும் போதெல்லாம் எப்பயுமே வீட்டுக்கு வரணும்னு நெனச்சியிருக்கேன். எதோ ஒன்னு தடுக்கும். ஆமா நான் தான் இந்த சாம்ராஜ்யம் இன்னைக்கு ரெண்டா பிரிய காரணம். ஆனா கொஞ்ச நாளுலே நான் எல்லாம் புரிஞ்சிக்கிட்டேன். ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குச் சந்தோசம்னு சொல்ற மாதிரி நாங்க புரிஞ்சது நிறைய பேருக்கு சந்தோஷமாவே போயிடுச்சி. திரும்ப ஒன்னா சேரலாம்னு சொல்ல தோணும்... ஆனா அப்படியே விட்டுடுவேன். அப்றோம் என் பிசினெஸ் கொஞ்சம் கொஞ்சமா சரிய ஆரமிச்சது. என் பிசினெஸ் சரியுதுனு தான் உங்களைத் தேடி வரேன்னு நீங்க நெனச்சிப்பீங்களோனு அப்போ நானாவே கற்பனை செஞ்சிப்பேன். எனக்கு எல்லாத்தையும் விட இந்திரன் மேல தான் சந்தோசம். இந்த சின்ன வயசுல இப்படி வளர்ந்து இருக்கறத பார்க்கும் போதெல்லாம் ஒரு சந்தோசம் வரும். அப்பா சின்ன வயசுலேயே இந்திரனைப் பார்க்கும் போதெல்லாம்,"நீ வேணா பாரு சந்திரா இவன் பெரிய ஆளா வருவான். பெரிய ஆளு அதாவது என்னையே தூக்கிச் சாப்பிடுற அளவுக்கு..."னு சொல்லுவாரு. அப்போல்லாம் எனக்கு கொஞ்சம் பொறாமையாவையும் இருக்கும். ஆனா எங்க அப்பா சொன்ன மாதிரியே அவன் வளர்ந்து நிற்கும் போது அவன் மேல எனக்கு அவ்வளவு ஆச்சரியம்..."
"அண்ட் சிந்து, எப்பப்பாரு சித்தப்பா சித்தப்பானு பேசுவா. என் மேல அவளுக்கு அவ்வளவு பாசம். அவளை எப்படி நான் கொன்னு இருப்பேன்? இல்ல அவ சாவுக்கு நான் எப்படி காரணமா இருந்திருப்பேன் சொல்லுங்க? இப்போ கூட அண்ணனால எனக்கு நிறைய லாஸ். அது அண்ணனுக்கு ஒருவேளை இதுக்கெல்லாம் நான் காரணமா இருப்பேனோனு நெனச்சி என்னைப் பழி வாங்குறாரு. எங்க நீங்க சொல்லுங்க அண்ணா, நான் உண்மையிலே இதுக்கு காரணமா இருப்பேன்னு நினைக்கறீங்களா?" என்று சந்திர வர்மன் கேட்க இத்தனை நேரம் சந்திரனின் உடல்மொழியை கவனித்த இமையன் மறுப்பாகவே தலையசைத்தார்.

கோகிலாவும்,"அக்கா நாம உண்மையிலே அக்கா தங்கை தான். (சித்தப்பா பொண்ணு பெரியப்பா பொண்ணு) . சில கசப்பான சம்பவங்கள் நமக்குள்ள நடந்திருக்கு. நான் அதை ஒத்துகிறேன். ஆனா ஒரு நாளும் நம்ம பசங்களோட சாவுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன். ரெண்டு பேரும் ஒன்னா வளர்ந்தோம். சின்ன வயசுல இருந்து நமக்கு எப்பயுமே ஒரு அறிவிக்க படாத போட்டி இருக்கும். நீங்க ஜெய்க்கறீங்களா நான் ஜெய்க்கறேனானு ஒரு ஈகோ இருக்கும். அதே மாதிரி தான் கல்யாணம் ஆனதும் எனக்குக் குழந்தை பிறந்ததும் என்னையே அறியாம ஒரு கர்வம் வந்தது. அதுல சில நேரம் உங்களைக் காயப்படுத்தியிருக்கேன். அதுக்காக நான் மன்னிப்பும் கேட்கறேன். நீங்க வேணுனா இந்திரனைக் கேட்டுப் பாருங்க, அங்க அவனை நான் தான் வளர்த்தேன். தினமும் சாப்பாடு நான் தான் ஊட்டுவேன். என்னைக்குமே அவனையும் இவனையும்(ஹர்ஷா) வித்தியாசமா பார்த்ததில்லை. அப்றோம் மாமா இறந்ததும் இந்திரனை நீங்களே கூட்டிக்கிட்டிங்க. எனக்கு உண்மையிலே அவனை அப்போ உங்க கிட்ட அனுப்ப மனசில்லை. இருந்தும் நீ தான் அவன் அம்மா. அதுனால அவனை நாங்க அனுப்பி வெச்சோம். இதுக்கு மேலையும் நீங்க நம்பலைனா எனக்கு எப்படிப் புரியவெக்கறதுனே தெரியில..." என்றார் அவர்.

ஹர்ஷாவும் தன் பங்கிற்கு எல்லாம் சொல்ல எழுந்து இமையவர்மனிடம் சென்றவன்,"நிஜமா பெரியப்பா நான் எதுவும் பண்ணல..." என்றதும் அவனை அணைத்துக்கொண்டார் இமையன்.
"சரி வாங்க சாப்பிடலாம்..." என்று அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சகோதரர்கள் இருவரும் சற்று தனியே பேசச் சென்றனர்.
*********************
தன்னோடு நாட்டியம் பயிற்றுவிக்கும் அந்த அபர்ணாவைப் பார்க்க வாரத்தில் மூன்று நாட்களும் அவன் வந்து விடுவான். அவனுக்கு என்ன பெயர் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. ஆனால் ஆள் பார்க்க டீசெண்டாக இருப்பான். அவ்வளவு தான் அவள் அறிவாள். அது கோவில் என்பதாலும் நிறைய நபர்கள் வருவார்கள் என்பதாலும் யாருமே அவனைக் கண்டுகொள்ள வில்லை. அபர்ணா ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணு. குடும்பச் சூழ்நிலை காரணமாக இங்கே வகுப்பை எடுக்கிறாள். உண்மையில் அவளுக்கு உதவ தான் ஸ்ரீயும் ரேகாவும் தங்களுக்கென்று ஊதியம் ஏதும் பெறாமல் அவளுடன் சேர்ந்து இலவசமாக இங்கே வரும் மாணவர்களுக்கு நாட்டியம் கற்றுத் தருகிறார்கள். ஸ்ரீக்கு நாட்டியம் பிடிக்கும் என்பதாலும் தன்னால் தன் தோழிக்கு ஒரு உதவி செய்ய முடியும் என்பதாலும் மேலும் இங்கே வந்தால் மனதில் ஒரு இதம் வருகிறது என்பதாலும் தான் இதற்கு ஒற்றுக்கொண்டாள்.

அவனுக்கு அபர்ணாவைப் பிடித்திருக்கிறது என்பது அவனின் நடவடிக்கைகளிலே ஸ்ரீ உணர்த்துகொண்டாள். தூரம் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தவன் அன்று அவர்கள் அருகில் வந்து அபர்ணாவிடம் தனியே பேசியும் விட்டான். (வானிலை மாறும் )
 
மனித மனம்...ஆதரவு அளித்து படிக்க வைத்தவரையே குறை சொல்கிறது..
திருப்தி என்பதே கிடையாது...
 
மனித மனம்...ஆதரவு அளித்து படிக்க வைத்தவரையே குறை சொல்கிறது..
திருப்தி என்பதே கிடையாது...
தன்னிடம் இருப்பதை யாரும் கணக்கிடுவதே இல்லை... ??
 
Top