Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை(இறுதிப்பகுதி)

Advertisement

praveenraj

Well-known member
Member
சற்று நேரத்திலெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட அங்கே மாதுளையிடம் அதுவரை பேசிக்கொண்டு இருந்த சகுந்தலா கார் வந்ததும் பார்க்க அதிலிருந்து இறங்கிய சிந்துஜா மற்றும் ஸ்ரீலேகா ஆகியோரைப் பார்த்து அதிர்ச்சியில் மயங்கியே விட்டார். ஏனோ இப்போது ஸ்ரீ சிந்து இருவருக்கும் ஒரு நிம்மதியே வந்தது. பின்னே இந்த வீட்டிற்கும் இந்தச் சுதந்திர காற்றையும் மீண்டும் சுவாசிப்போமா என்று எல்லாம் எத்தனை நாட்கள் கனவு கண்டு இருக்கிறார்களே? சகுந்தலா மயங்கியதும் சிந்துவும் ஸ்ரீயும் பதற உடனே தங்கள் குடும்ப மருத்துவரான எழில் வேந்தனை வரவழைக்க அவர் பரிசோதித்து விட்டு ஸ்ட்ரெஸ் மற்றும் அதிர்ச்சி தான் காரணம் என்று சொல்ல சிந்து ஸ்ரீ இருவரும் ரெப்ரெஷ் ஆகி வீட்டிற்கு வந்தனர். ஏனோ தங்கள் புகைப்படத்திற்கு மாலை இடப்பட்டு அந்த வீடே வீடு போல் இல்லாமல் இருக்க கமலேஷ் தான் சிந்துவின் தோளில் கைவைத்தான்.
"நீங்க இல்லாத இந்த இடம் வீடே இல்ல சிந்து குட்டி..."என்று அழுதான்.

கொஞ்சம் நேரம் கழித்து விழித்தவர் அருகில் சிந்துவும் ஸ்ரீயும் இருப்பதைப் பார்த்து குழம்ப பொறுமையாக இமையனும் இந்திரனும் எல்லாம் சொன்னார்கள். ஏனோ பெற்று வளர்த்த அவருக்கு தன் பிள்ளைகளின் துன்பங்கள் அனைத்தும் மனக்கண்ணில் வந்து மறைந்தது. அப்போது தான் ஸ்ரீயை கவனித்தனர் அவளின் மாற்றங்களைப் பார்க்க எப்படி சொல்வதென்று புரியாமல் அவள் தவிக்கவும் சிந்து தான்,"அம்மா இந்த பாலுக்கு காவலா பூனையைக் கூட அனுப்பாதனு நான் தான் அன்னைக்கே சொன்னேன் தானே? இப்போ பாரு..." என்று விளையாட்டாய்ச் சொல்வதைப் போல் சொன்னாலும் ஸ்ரீயின் கஷ்டத்தை அருகிலிருந்து அவளும் அறிந்து கொண்டாள் தானே? அப்போது அங்கே வந்த இந்திரன் சகுந்தலாவின் அருகில் அமர்ந்து அவரின் கரத்தைப் பிடித்து,"சாரிம்மா... தப்பு என் மேல தான்..." என்று சொல்ல வர ஏனோ அவனை கையமர்த்தி தடுத்தவர் இமையவர்மனை அழைத்து அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசினார். ஏனோ சிந்து தான் நிலைமையை இலகுவாக்க,"டேய் அன்னைக்கு விளையாட்டுக்குச் சொன்னேனேனு நெனச்சன்?உண்மையிலே ஒரு பிள்ளையைப் பெத்து தான் கல்யாணமே பண்ணப் போற?" என்று அன்று நடந்ததை (இந்திரனுக்கு அடிபட்டு ஸ்ரீ கவனித்துக் கொண்ட எபி) நினைவு கூர்ந்தாள்.

இதற்கெல்லாம் காரணமும் அதைச் செய்தவனையும் நினைக்கையில் சகுந்தலாவிற்கு ஏனோ கோவத்தைக் காட்டிலும் பரிதாமாமே தோன்றியத. கதிரவனை அழைத்தவள்,"என்ன கதிரா நாமளும் இப்படிப் பண்ணுவோமா?" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல ,அவனோ அரண்டுப் போனான். இருவரையும் அருகில் அழைத்து நீண்ட நேரம் தனது மடியில் படுக்கவைத்துக்கொண்டவர் அவர்களை ரெஸ்ட் எடுக்க அனுப்பினார்.

ஸ்ரீயை அழைத்துக்கொண்டு இந்திரன் செல்ல சிந்து கதிரவனுடன் சென்றான். ஏனோ இமையனும் சகுந்தலாவும் சமுத்திரனைப் பற்றியே பேசினார்கள்.

சிந்துவை தனியே அழைத்துச் சென்றவன், அவளை இறுக்கி அணைத்து அவன் காதலையும் ஏக்கத்தையும் வலியையும் சொல்லாமல் சொன்னான். சிந்துவிற்கும் அதே நிலை தான். அவனை சட்டென விடுவித்தவள் அன்று சமுத்திரன் சொன்னதைப் பற்றிக் கேட்க (கதிரவனைக் கெட்டவன் என்றானே?) அவன் தன்னுடைய விளக்கத்தைச் சொன்னான். அசோக் சௌனி தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெதும்பினான். ஆனால் அவனுக்கொரு மகிழ்ச்சியும் இருந்தது. அது அவனுக்கும் அந்த அழைப்பு வந்தது. வர்மா குழுமத்தை அடியோடு அழிக்க தான் உதவுதாகச் சொல்லப்பட ஏனோ அதைப் பெரிதும் யோசிக்காமல் நிராகரித்து விட்டார். இருந்தும் அவனுடைய கோபமெல்லாம் வர்மா குழுமத்தை அழிக்கும் தானே ஒழிய அவர்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்பது அல்ல. அதற்காக அவனின் முயற்சிகளை இனியும் தொடர்வான் என்பதில் ஐயமில்லை.

அவனைப் பிரிந்து அவள் அடைந்த வலி வேதனை காட்டிலும் அவன் தான் அதிகம் பாதிப்படைந்துள்ளான் என்று அவளும் அறிவாள் தானே? இருவரும் காதலில் மூழ்க சட்டென அவளை விடுவித்தவன்,"நீ அவனை ஏற்கனவே பார்த்திருக்கியா சிந்து?" என்றான்.

அவளோ மறுக்க,

யோசித்தவன்,"ஸ்ரீ தான் ரொம்ப பாவமில்லை?" என்றான். அதற்கு தலையாட்டியவள், "என்கிட்டக் கூட அவ எதையுமே சொல்லல தெரியுமா?" என்றாள். பிறகு காதலர்கள் இருவரும் மனம் விட்டு நிறைய பேசினார்கள்.

ஸ்ரீ,"தன்னுடைய தந்தைக்கு இது தெரியுமா?" என்று கேட்க,"இப்போ வேண்டாம் ஸ்ரீ பேபி. சாயங்காலம் சொல்லிக்கலாம்னு அம்மா சொன்னாங்க..." என்றவன் அவளை அவன் அறையில் கிடத்தினான். அறையைத் தாளிட்டு வந்தவன் ஏனோ ஸ்ரீயை நேரில் பார்க்க துணிவின்றி நிற்க அவன் நிலையை அறிந்தவளாக அவனை தன் அருகே அழைத்து ஆறுதல் செய்தாள் ஸ்ரீ.

"சாரி ஸ்ரீ குட்டி... நான் தானே இதுக்கெல்லாம் காரணம்?" என்று அவன் வருந்த,

"இல்ல நான் தான் காரணம் இஜித்... நான் அன்னைக்கு நடந்ததை உங்ககிட்ட உடனே சொல்லியிருக்கணும். நான் தான் காரணம்..." என்றதும் இருவரும் எதையும் பேசிக்கொள்ள வில்லை. நிறைய மௌனம் ஆட்சி செய்ய அவளே தள்ளி படுத்தவள் அவனை அருகே படுக்கச் சொல்லி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"நீங்க உயிரோட இருக்கும் விஷயம் தெரிந்து நான் எவ்வளவு சந்தோசப் பட்டேன் தெரியுமா?" என்றான். அவளோ ஏதும் பேசவில்லை. இத்தனை மாதப் பிரிவு அவர்களுக்குள் பேச நிறைய வைத்திருந்தாலும் அவர்களின் அந்த அருகாமையை போதும் என்று அப்படியே நிம்மதியாக கண் அயர்ந்தனர்.

சகுந்தலாவிற்குத் தேவையானதை எல்லாம் மாதுளை தான் கொண்டு வந்தாள். மேலும் மாலை தான் கிளம்புவதாகச் சொல்ல அவளை அருகில் அழைத்து,"இங்க பாரு டா, அவங்க வந்துட்டாங்க என்றதும் நீ விலகிப் போகணும்னு அவசியம் இல்லை. நீயும் என் பொண்ணு மாதிரிதான். இனிமேல் இங்கேயே இருக்கனும்..." என்று சொல்ல உண்மையில் இந்த வார்த்தையைத் தான் அவள் எதிர் பார்த்தாள்.

ஐராவதியைப் பற்றிப் பேச்சு வர அவளை பத்திரமாக அழைத்துவர தாமோ மற்றும் திரு இருவரும் சென்றிருப்பதாகச் சொல்லப்படவும் ஏனோ தன் அக்காவின் அறியாமை தான் இதற்கெல்லாம் மூல காரணம் என்று எண்ணி வருந்தினாள்.
"நீ பயப்படாத மா. உங்க அப்பா எனக்கு நிறைய நிறைய நன்மை செஞ்சான். ஒரு வகையில அவனோட மரணத்திற்கு நானும் தான் காரணம். அந்த சமுத்திரனை அவனோட பொறுப்புல தராம இருந்திருந்தா இது நடந்திருக்காது. ஆனா ஒன்னு, உன் அப்பா இருந்து உங்களுக்கு என்ன எல்லாம் செய்வானோ அதெல்லாம் நான் செய்வேன்..." என்றார் இமையவர்மன்.

மாதுளை வெளியே செல்லவும் சகுந்தலா தான் அவளை தங்களோடு வைத்துக் கொள்ள விருப்பம் சொல்ல இமையனும் சம்மதம் சொன்னார். அவர் கேட்கா விட்டாலும் அவளை தங்களோடு வைக்க அவருக்கும் ஒரு விருப்பம் தான். ஏனெனில் அவள் இங்கு வந்த இந்த இடைப்பட்ட நாட்களில் கமலேஷிற்கு அவள் மீது ஒரு விருப்பம் இருக்கிறதென்று என்று சகுந்தலா அறிவார். இருந்தும் இதை இப்போது பேச வேண்டாம் என்றும் முதலில் இந்திரன் ஸ்ரீ திருமணம், பிறகு கதிரவன் சிந்து திருமணம் என்று இரண்டு பெரிய வேலைகள் இருக்கிறது என்று அமைதியானார்.

அங்கே ஐராவதி சொல்ல சொல்ல கேட்காமல் ஜோன்ஸ் அவளை விட்டுச் சென்றுவிட திருவும் தாமோவும் அவளைச் சந்தித்து பொறுமையாக கன்வீன்ஸ் செய்து சென்னை அழைத்து வந்தனர். அவளுக்கு அனைத்தையும் புரியவைக்க நிறைய காலம் ஆகும் தான். இருந்தும் புரியவைக்க வேண்டுமே? புரியவைப்பார்கள் என்று நம்புவோம். மேலும் திருக்கு அவளைப் பிடிக்கும் என்பதால் எப்படியும் அவளைத் திருத்திவிடலாம் என்று நம்பினான். நம்புவோம்...

போலீசுடன் அழைத்துச் செல்லப்பட்ட சமுத்திரன், அனைத்து குற்றங்களையும் அவன் ஒப்புக்கொண்டதாலும் மேலும் அவன் மனதளவில் நிறைய பாதிப்படைந்து உள்ளான் என்றும் எண்ணி அதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டது. கூடவே தயாளனையும் போலீஸ் அரெஸ்ட் செய்தது. அவரை போலீஸ் அழைத்து வர அப்போது அவரைச் சந்தித்தான் தருண்.

"சாரி சார், நாம இன்னைக்கு மீட் பண்ணியிருக்கனும். பட் இனிமேலும் நாம மீட் பண்ணனுமா சொல்லுங்க? சமுத்திரனோட இந்த நிலைக்கு நீங்களும் இல்ல இல்ல நீங்க தான் முக்கியக் காரணம். என்னைக்கு அவன் உன்கிட்ட வந்து இமையவர்மனைப் பழி வாங்குவேணுன்னு சொன்னானோ அப்போதே நீங்க அவனைத் தடுத்திருக்கனும். ஆனா அப்போ கூட மருமகன்னு மன்னிச்சு விட்டீங்க ஓகே. எப்போ அவன் தான் பாரதி சாரோட சாவுக்கு காரணம்னு தெரிஞ்சதும் நீங்க ஏன் சும்மா விட்டீங்க?"

"நான் சொன்னேன்... ஆனா எல்லாம் கைமீறிப் போயிடுச்சி..." என்றார் தயாளன் வேதனை நிரம்பிய குரலில்,

"சரி இது தான் விதி போல!" என்று சொல்லி விடைபெற முயன்ற தருணின் கையைப் பிடித்து அவனைத் தடுத்தவர்,"எப்படி இதெல்லாம் கண்டுபிடிச்ச தருண்?" என்று தன்னுடைய கேள்வியை முன்வைக்க,

"அன்னைக்கு நான் உங்களைக் காப்பாற்றினேன் தெரியுமா? அப்போ நீங்களும் தாமோவும் பேசும் போது அங்க கஜா இருந்தான். அப்றோம் ஒரு டவுட்ல திரும்ப வந்து பார்க்கும் போது நீங்க மயங்கியிருந்தீங்க. உங்களைப் போய் யாரு கொல்லணும்னு எனக்கு ஒரு சந்தேகம். அப்போ விசாரிச்சதுல ஒரு டாக்டர் தான் சொன்னாருன்னு சொன்னான் கஜா. அப்றோம் இந்திரன் குடும்பத்தை விசாரிக்கும் போது எனக்கு தாட்சாயிணி பற்றித் தெரிய வந்தது. யாரு அந்த லேடினு என்குயர் செஞ்சா அவங்களுக்கு ஒரு அண்ணன். அவர் பேர் தயாளன்னு தெரிய வந்தது. உங்கள வாட்ச் பண்ணேன். அப்போவே சமுத்திரனைப் பற்றித் தெரிஞ்சது..."

"அப்போ கூட எனக்கு சமுத்திரன் மேலயும் உங்க மேலயும் டவுட் தான் இருந்தது. ஆனா ஸ்ரீயைப் பற்றியும் சிந்துவைப் பற்றியும் விசாரிக்கும் போது தான் எனக்கு அவளை ஒரு டாக்டர் ப்ரொபோஸ் பண்ணானு தெரிஞ்சது. விசாரிச்சா தான் அவங்க கமலக்கண்ணன் மற்றும் சமுத்திரனு புரிய, அப்போ தான் தாட்சாயினியோட குழந்தை டாக்டர் பாரதி ட்ரஸ்ட்ல வளருதுனு தெரிஞ்சதும் அங்க க்ராஸ் செக் பண்ணா அங்கேயும் சமுத்திரன் இருந்தான். இதெல்லாம் விட ஹை பாயிண்ட் இந்திரன் ஆக்சிடென்ட் அப்போ சந்திரன் சென்னையில இருந்தாருனு தெரிஞ்சு விசாரிச்சா அப்போ தான் கண்மணி ட்ரஸ்டுக்கு எல்லாம் செய்யறது இமைய வர்மனு தெரிஞ்சு விசாரிச்சா அவருக்கும் பாரதிக்கும் உள்ள கனெக்சன் புரிஞ்சது. இந்திரன் அடிபட்டு அட்மிட் ஆனா ஹாஸ்பிடல் கமல் ஒர்க் பண்றது. அங்க நிறைய திருட்டுத் தனம் இருக்குனு உள்ள விசாரிச்சா அங்க தான் அன்னைக்கு ரெண்டு பாடி மாறியிருக்கும்னு டவுட். இதையெல்லாம் விசாரிச்ச அந்த போலீஸ் மிஸ்ஸிங். பார்த்தா இதையெல்லாம் கண்டுப் பிடிச்சதால தான் நடந்திருக்குனு தெரியவந்தது.எல்லாம் சுத்தி சுத்தி ஒரே இடத்துல வர மாதிரி எனக்கொரு பிரமை. இந்திரனை அட்டேக் பண்ண வந்தவங்களுக்கு கைமாறிய பணம் பாரதி சார் அக்கௌண்ட்ல இருந்து போயிருக்கு. இன்னும் டீப்பா பாரதி சார் ஹாஸ்பிடலை விசாரிச்சா அங்க அந்த api பைலை காணோம். ஐராவதி கிட்ட இருந்து குமரனுக்கு ப்ரெஷர், இந்திரன் வீட்டுக்குப் போன மாதுளை பாரதி சாரோட பொண்ணுனு செயின் மாதிரி எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்பு ஈஸியா இருக்கு தானே?"

"மாதுளை ஐராவதி ரெண்டு பேரோட போன் ட்ராக் பண்ணா அங்கேயும் சமுத்திரன் இருந்தான். இதை விட ஒரு ஹைலைட் அந்த ஆக்சிடென்ட் கார்பன் மோனாக்சைடு வெச்சு நடந்திருக்கு. சோ நிச்சயம் யாரோ விஷயம் தெரிந்தவன் தான் செஞ்சு இருக்கணும்னு டவுட். இதுல நீங்க வேற என்னை மீட் பண்ண அப்பொய்ண்ட் மென்ட் கேட்டிங்க... இப்படி எல்லாமே பசில்(புதிர்) மாதிரி ஒன்னோட ஒன்னு தொடர்பு இருந்தது. அண்ட் இந்த எல்லா புதிர்களையும் இருக்கும் ஒரே கனெக்சன் சமுத்திரன் மட்டும் தான். இதுக்கு எல்லாம் கூட யாரோ இருக்காங்கனு நெனச்சா நீங்க, தி கிரேட் டிடெக்டிவ் தயாளன். தப்பு எங்க நடந்தது தெரியுமா? எப்பயுமே ஒரு விஷயம் செய்யணும்னு நெனச்சா லட்சியம் ஒரு புள்ளி மாதிரி சிறுசா இருக்கனும். இங்க என்னடானா அவனுக்கு நிறைய ஆசைகள். அதும் எல்லாமே ஒரே சமயத்துல நடக்கும்னு எண்ணம்..." என்று நிறுத்த,

"யூ ஆர் ரியல்லி ஸ்மார்ட் தருண்..." என்றார் தயாளன்.

"தேங் யூ. பார்ப்போம்..." என்று விடைபெற்றான் தருண்.

தருண் அங்கிருந்து வெளியே வர அவன் உடன் இருந்த குகன்,"பாஸ் எனக்கு தலையே சுத்துது பாஸ்... எப்படி பாஸ்? எப்படி? இந்திரன்-கதிரவன், பாரதி-இமையன், தயாளன் -சமுத்திரன், மாதுளை - ஐராவதினு இப்படி எல்லோருடைய கதையும் புட்டு புட்டு வெக்கறீங்க? எனக்கு இந்திரன் கதிரவன் டீலிங்கே இப்போ தான் புரியுது. நான் மட்டும் இந்த கேசை எடுத்திருந்தா இன்னும் பத்து வருஷம் ஆகியிருந்தாலும் கண்டுப் பிடிச்சு இருக்க மாட்டேன். ஒத்துக்கறேன் என்னைவிட உங்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் மூளை அதிகமா இருக்குனு ஒத்துக்கறேன்..." என்றான் குகன்.

அப்போது வந்த சுபத்திரா,"என்ன மிஸ்டர் டிடெக்டிவ்? கேஸ் சக்சஸ் போல?" என்று குறும்பாகவே வினவ,

"ஹ்ம் ஹ்ம்ம்..." என்றான் தருண்.

"என்ன டல்லா இருக்கீங்க? என்ன ஆச்சு தருண்?"

"இல்ல யார் யார் மனசுல இருக்கிறதோ எனக்குப் புரியுது... தெரியுது. ஆனா ஒரு பொண்ணு மனசுல என்ன நினைக்கிறாங்கனு தான் புரியல..." என்று அர்த்தமாய் அவளைப் பார்க்க,

"அப்படியா? என்ன புரியனும்?" என்று கண்கள் சுருக்கி வினவியவளுக்கு,

"பாப்பா மனசுல யாரு?" என்றதும்

முறைத்தவள்,"அது எதுக்கு உங்களுக்கு?" என்று பொய் கோபம் மின்ன கேட்டாள்.

"வேற எதுக்கு? கல்யாணம் பண்ண தான்..."

"என்னது?" என்று தற்போது உண்மையிலே அதிர்ந்தாள் சுபத்திரா.

"இல்ல பாப்பா மனசுல நான் இல்லைனு தெரிஞ்சா வேற பொண்ணை நான் கல்யாணம் பண்ணணுமில்லை... அது தான்..." என்று அவளை உற்று நோக்கியபடியே வினவினான்.

அவள் எதையும் பேசாமல் போக ,

"ஏங்க அட்லீஸ்ட் எத்தனை வாய்தா ஆகும்னாவது சொல்லுங்க... நான் வெய்ட் பண்றேன்..." என்று சிரித்த படியே கேட்டான்.

அவள் புன்னகைத்து சென்றாள்.

"பாஸ் அந்த ஷீரடி மஹாலிங்கம் கேஸ்ல..." என்று ஆரமித்த குகனுக்கு,

"சீ போடா..." என்றான் தருண்,

"சீ யா? ஹ்ம்ம் எல்லாம் காதல் செய்யும் மாயம் போல?..." என்று புலம்ப அன்று பொழுது கழிந்தது.

********************

அதற்கடுத்து நாட்கள் அப்படியே விரைந்தது. அடுத்த வாரத்தில் இந்திரன்-ஸ்ரீ ஆகியோரின் திருமணம் சிம்பிளாக நடத்த முடிவு செய்திருந்தனர். இந்திரன் அதுவரை வீட்டிலே இருந்தவன் அன்று தான் தன்னுடைய சென்னை ப்ராஞ்சுக்கு சென்றான். அவன் இங்கு வந்து கிட்ட தட்ட ஐந்து ஆறு மாதங்கள் ஆகும். இந்திரன் தன் கேபினுக்குள் செல்ல அது வரை அவனுக்கு வந்த விஷேஸ் க்ரீட்டிங்க்ஸ் பார்சல் எல்லாம் தனியாக இருந்தது. அவற்றை எல்லாம் அங்கிருந்தவரை அழைத்து டிஸ்போஸ் செய்யச் சொன்னான். அப்போது ஒரு பெரிய பார்சேல் கீழே விழுந்தது.

பிரேம் அட்ரஸ் இல்லாமலும் டூ அட்ரஸ் மட்டும் கரெக்ட்டாக இந்த வர்மா குரூப்ஸ் அதும் இந்திரன் என்னும் பெயருக்கு இருக்க அதைப் பிரித்தான். அதில் நிறைய டாகுமெண்ட்ஸ் பைல்ஸ் இருக்க இறுதியில் சந்தான பாரதி என்று இருந்தது. சந்தேகமாய் கண்மணி மருத்துவமனையை அழைத்து குமரனிடம் பேசினான். அது தான் அந்த api ரகசியம் நிறைந்த பைல் என்று ஊர்ஜிதமானது.

பிரம் அட்ரஸ் இல்லாததால் நிறைய அலைக்கழிக்கப் பட்டு இறுதியாக இந்திரனின் அலுவலக வரவும் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகவும் சரியாக இருந்தது. அதன் பின் வந்ததை டிஸ்போஸ் செய்யப்படாமலே அப்படியே பூட்டப்பட இன்று தான் அந்த ரகசியம் வெளியே வந்தது. லெட்டருடன் இதையும் மாதுளைக்குத் தான் முதலில் அனுப்ப நினைத்த பாரதி பிறகு என்ன நினைத்தாரோ லெட்டரை மட்டும் அவளுக்கு அனுப்பி இதை இமையனுக்கு அனுப்பிவிட்டார். இமையவர்மனின் மீது இருந்த அந்த பேட்டேன்டின் உரிமையை ஐராவதி மற்றும் மாதுளையின் பெயருக்கு மாற்றி எழுதித் தரச்சொல்லி விட்டு தன் வேலையைப் பார்த்தான் இந்திரன்.

இந்திரனின் திருமண ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்க வீடே கோலாகலமாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து இமைய வர்மன் மற்றும் சகுந்தலாவின் முகத்தில் ஆனந்த தாண்டவமாடியதைக் கண்டவர்களுக்கு எல்லாம் பெரும் மகிழ்ச்சி! இந்திரனும் கதிரவனும் ஒருமுறை தங்களின் மனம் கவர்ந்தவர்களைத் தவறவிட்டிருக்கலாம். ஆனால் இனி அது போல் நிகழாது என்று சொல்லி இந்த வானிலை மாற்றத்தை பதிவு செய்து இங்கிருந்து விடைபெறுகிறேன். இனியும் வானிலை மாறிக்கொண்டு தான் இருக்கும் ஆனால் கடந்த முறை போன்று இல்லாமல் மகிழ்வாய் நிறைவாய் அழகாய்...

ஒருவழியாக ஆறாவது கதை நிறைவு செய்யப்பட்டது . இந்தக் கதை எனக்கொரு பரிச்சைய முயற்சியே. சுஜாதாவின் கணேஷ்-வசந்த், சுபாவின் நரேன் வைஜெயந்தி, ராஜேஷ் குமாரின் விவேக்-விஷ்ணு, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், அகஸ்டா கிறிஸ்டி முதலியோரின் திரில்லர் சஸ்பென்ஸ் மிஸ்டரி நாவல்களை வாசித்தவன் நான். என்னாலும் ஒரு சஸ்பென்ஸ் கதையை எழுத முடியுமா என்ற என்னுடைய மனதின் கேள்விக்கு நானே கொடுத்த பதில் தான் இந்த 'சட்டென மாறுது வானிலை'. நிச்சயம் இதொரு பர்பெக்ட் சீட் எட்ஜ் திரில்லிங் சஸ்பென்ஸ் நாவலா என்றால் பதில் இல்லை தான். ஆயினும் இது ஒரு மொக்கை நாவலாக இல்லாமல் இருக்க ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தந்து விட்டேன். இருந்தும் இதில் சில லூப் ஹோல்ஸ் இருக்கலாம். அப்படி இருந்தால் சாரி. யாருடைய சாயலும் இல்லாமல் என்னுடைய சாயலில் வந்த ஒரு கதை இது. ஒருவேளை இது உங்களை ஆச்சரியப்படவும் செய்திருக்கலாம் இல்லை அதிர்ச்சி அடையவும் செய்திருக்கலாம். நிறுத்தி நிதானமாக கதை சொல்லி பழகிய எனக்கு இப்படி வேகமாக ஓர் கதையைச் சொல்லுவதில் நிறைய சிரமம் இருந்தது உண்மை. அதை நீங்களும் உணர்ந்திருக்கலாம். மன்னிச்சு... அடுத்த முறை நிச்சயம் இந்த தவறு நடக்காது .

இறுதியாக இந்தக் கதையை படித்து ரேட் செய்தும் கமெண்ட் செய்தும் என்னை எழுத தூண்டியவர்களுக்கு என் நன்றி.



மாறுபட்ட கதை களங்களும் கதை மாந்தர்களும் நிறைய இருக்கு. காலமும் நேரமும் சரியாக அமைந்ததும் அவற்றுடன் சந்திப்போம்...
மைவிடு தூது எழுத ஆரமிச்சுட்டேன். ஆனா அது வர இன்னும் லேட் ஆகலாம்.(எனக்கு எழுத நேரமே இல்லை மக்கா... அதான்...) அதனால் என்னுடைய மற்றொரு கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். அது 'இந்த இரவு இப்படியே தொடரட்டுமாகவோ' இல்லை 'கனவு கண்ட கல்லறை'யாகவோ இருக்கும். முன்னதும் சரி பின்னதும் சரி இதுபோலும் ருசி போலும் அல்லாமல் மாறுபட்ட வடிவில் செல்லும். இரவு ஒரு மாதிரி பீல் குட் ஸ்டோரி என்றால் கனவு ஒரு உறவு சிக்கல்கள் நிறைந்த கதை. சீக்கிரம் ரெண்டில் ஒன்றோடு வருகிறேன். எது வேண்டுமென்று நீங்களும் தெரிவிக்கலாம்... நன்றி.
 
நிஜமாகவே நல்ல ஒரு கதைசொல்லி தான் நீங்கள்... ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

எந்த ball அடிச்சாலும் sixer அடிக்கிறிங்க brother....

உங்க விருப்பம் போல கொடுங்க...daily ud கொடுத்தா போதும்....:):)??
 
தருண் விளக்கம்/ கண்டுபிடிப்புத் தான் ரொம்ப fast ஆ இருந்தது...
எந்த கதை யா இருந்தாலும் ஓகே தான்..
ஒரு சின்ன suggestion...
பெரிய பாராவா கொடுக்காமல் , சின்ன சின்னதா பிரித்துக்
கொடுத்து, ஒரு ஒரு லைனுக்கும் space விட்டு, font கொஞ்சம் பெரிதாக இருந்தால்
eye strain இல்லாமல் படிக்க வசதியா இருக்கும்.

உங்க விருப்பம் தான்..
 
நிஜமாகவே நல்ல ஒரு கதைசொல்லி தான் நீங்கள்... ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

எந்த ball அடிச்சாலும் sixer அடிக்கிறிங்க brother....

உங்க விருப்பம் போல கொடுங்க...daily ud கொடுத்தா போதும்....:):)??
உங்க தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சகி?? சீக்கிரம் ஒன்றை ஆரமிக்குறேன். sure...
 
தருண் விளக்கம்/ கண்டுபிடிப்புத் தான் ரொம்ப fast ஆ இருந்தது...
எந்த கதை யா இருந்தாலும் ஓகே தான்..
ஒரு சின்ன suggestion...
பெரிய பாராவா கொடுக்காமல் , சின்ன சின்னதா பிரித்துக்
கொடுத்து, ஒரு ஒரு லைனுக்கும் space விட்டு, font கொஞ்சம் பெரிதாக இருந்தால்
eye strain இல்லாமல் படிக்க வசதியா இருக்கும்.

உங்க விருப்பம் தான்..
ஆக்சுவல்லி கதை முடிஞ்சிடுச்சு. அதெல்லாம் உள்ள கொண்டு வந்திருந்தா தொய்வா இருந்திருக்கும்னு நெனச்சு விட்டுட்டேன்... post climax ஆகிடக்கூடாதில்ல??� உங்கள் கோரிக்கை நியாயம் தான். ஆனா என்னோட ஒவ்வொரு எபியும் சுமார் 2000+ வார்த்தைகள் நிறைந்தது. அதை ஒரே போஸ்ட்டா இங்க போட முடியறதில்லை. கன்டினியுட்டி மிஸ் ஆகுற மாதிரி எனக்கே பீல் ஆகுது. அதான் ஸ்பேஸ் குறைச்சு பாண்ட் குறைச்சி இங்க ஒரே போஸ்டா போடுறேன்... இருந்தாலும் இனி மேல் இதுபோல் வராமல் ஒவ்வொரு எபியையும் ரெண்டு பார்ட்டாவே கொடுக்குறேன்... சாரி அண்ட் தேங்க்ஸ்?? ஓகே... இங்க பெரிய எபிஸ் சப்போர்ட் ஆகுறதில்லை... இனி மாற்றித் தருகிறேன்... விரைவிலே அடுத்த கதையில் சந்திப்போம். தொடர் ஆதரவுக்கு நன்றி?
 
ஆக்சுவல்லி கதை முடிஞ்சிடுச்சு. அதெல்லாம் உள்ள கொண்டு வந்திருந்தா தொய்வா இருந்திருக்கும்னு நெனச்சு விட்டுட்டேன்... post climax ஆகிடக்கூடாதில்ல??� உங்கள் கோரிக்கை நியாயம் தான். ஆனா என்னோட ஒவ்வொரு எபியும் சுமார் 2000+ வார்த்தைகள் நிறைந்தது. அதை ஒரே போஸ்ட்டா இங்க போட முடியறதில்லை. கன்டினியுட்டி மிஸ் ஆகுற மாதிரி எனக்கே பீல் ஆகுது. அதான் ஸ்பேஸ் குறைச்சு பாண்ட் குறைச்சி இங்க ஒரே போஸ்டா போடுறேன்... இருந்தாலும் இனி மேல் இதுபோல் வராமல் ஒவ்வொரு எபியையும் ரெண்டு பார்ட்டாவே கொடுக்குறேன்... சாரி அண்ட் தேங்க்ஸ்?? ஓகே... இங்க பெரிய எபிஸ் சப்போர்ட் ஆகுறதில்லை... இனி மாற்றித் தருகிறேன்... விரைவிலே அடுத்த கதையில் சந்திப்போம். தொடர் ஆதரவுக்கு நன்றி?

இங்க பெரிய எபியா இருந்தா, ரெண்டு பார்ட் டா தான் எல்லா ரைட்டருஸூம்
தர்றாங்க....நீங்களும் அப்படியே கொடுங்க...நன்றி...?
வாங்க சீக்கிரம் வாங்க....?
 
Top