Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -20

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்களே!!

"கோகுலத்தில்_ராமன்" கதை பைபாஸ்ல போகாம, மெயின் ரோட்டுல ஒவ்வொரு ஸ்டாப்பா நின்னு நின்னு போய்க்கிட்டு இருக்கு...!! அதனால இப்போவே 20 chaptersசோட 250 பேஜஸ் cross ஆகிடுச்சு!!!

So, கதையை இருபாகமா பிரிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்.. கோகிலா கல்யாணம் வரை முதல் பாகம்...
திருமணத்திற்கு பிறகான கலாட்டா இரண்டாம் பாகம்!!!


இப்போ தான் முக்கியமான இடத்துக்கு வரோம்!!! அதாவது "லீவு"

First part முடிஞ்சதும் எனக்கு தீபாவளி விடுமுறையோடு சேர்த்து இன்னும் 10நாள் விடுப்பு தேவைப்படுது...

Nov 9th ஒரு முக்கியமான exam இருக்கு எனக்கு...!!! I have to prepare for this... That's really important to me.. exam முடிஞ்சதும் part-2 ஸ்டார்ட் பண்ணிடுவேன்...
Kindly consider my absence as leave for a while....

And do remember me and my story:cry: திரும்பி வரதுக்குள்ள மறந்துடாதீங்க?



*20*

எதற்க்காக கஷ்டப்பட்டு கோலம் போடுகிறாய்?

பேசாமல் வாசலிலேயே சிறிது நேரம் உட்கார்ந்திரு, போதும்!!

காலையில் நடந்த கலவரமெல்லாம் ஓய, குண்டூசி விழுந்தால் கூட பித்தளை குடம் தான் விழுந்ததோ என எண்ணும் அளவுக்கு, வீடே படுஅமைதியாய் இருந்தது. இன்பன் ஒருவித துள்ளளுடனே வீட்டிற்குள் சென்றான். வீட்டின் கூடம், ஆட்கள் இன்றி வெறுமையாய் இருக்க, முதல் கட்டில் இருந்து இரண்டாம் கட்டிற்க்கு சென்றான். ஒண்டிவீரரின் அறையில் மெல்லிய வெளிச்சம் தென்பட, “அதுக்குள்ள தாத்தா தூங்க போயாச்சா?” என்றான் வாய்விட்டே!



அடுக்களைக்குள் நுழைந்தால், அங்கும் ஒருவரும் இல்லை! மணியை பார்த்தால் பத்து தாண்டி சில நிமிடங்கள் தான் கடந்திருந்தது.

‘என்னடா இது? அதுக்குள்ள எல்லாரும் தூங்கப் போய்ட்டாங்க?’ என்று சிந்தித்துக்கொண்டே, ஹாட்பாக்ஸில் இருந்த இட்லிகளை எடுத்து வந்து சாம்பாரில் குளிப்பாட்டி வாயிற்க்குள் தள்ளிக்கொண்டிருந்தான் பேரின்பன். ஐந்து இட்லிகள் அனாயசமாய் உள்ளே போயிருக்க, காலியான தட்டை மீண்டும் நிரப்ப அவன் எழுந்தபோது, தட்டில் வந்து விழுந்தது நெய் மிதக்கும் முறுகல் தோசை. மூக்கை சுருக்கி நெய்யின் வாசத்தை உள்ளிழுத்தான்.



“போதும் மோப்பம் பிடிச்சது, சாப்பிடுங்க” என்ற கோகிலாவின் குரலில், “அடி, மூக்கி!!! நீதான் மாமனுக்கு தோசை சுட்டியா?” என்று கேட்டுக்கொண்டே பாதி தோசையை பிட்டு ஒரே வாயில் அடைத்தான் இன்பன்.

“தின்னு, தின்னு, நல்லா தின்னு! இப்போ நீ திங்குறது தானே ரொம்ப முக்கியம்!” கோகிலா கோபமாக சொல்ல, மேலும் இரண்டே இரண்டு தோசைகளோடு இரவு உணவை சிம்பிளாக(!?) முடித்துக்கொண்டவன், பெரிய ஏப்பத்தோடு, “வயிறு நிறைஞ்சா தான் மனசு நிறையும்! மனசு நிறைஞ்சா தான், நல்ல விதமா யோசிக்க முடியும்!” என்றான்.



‘க்கும்’ அவள் நொடித்துக்கொள்ள, “என்ன வீடே அமைதியா இருக்கு? என்ன நடந்துச்சு?” என்றான் அவள் கரத்தை பற்றியபடி. காலையில் அவள் கீறிவிட்டுக்கொண்ட இடத்தை மெல்ல வருடிக்கொடுத்தான் இன்பன்.



மெலிதாய் கூச, “கையை விடு சொல்றேன்” என அவள் சொல்ல, அவன் பிடி உறுதியானது.

“இப்படியே சொல்லு, கேட்குறேன்!!” என்றான் அவளை நெருங்கி நின்று.



“ப்ச்! என சலித்துக்கொண்டாலும், “இந்த வீட்ல இனி இருக்க மாட்டோம்ன்னு சொல்லி அப்பா அம்மா அந்த கிஷோரோட கிளம்பி போய்ட்டாங்க! பக்கத்துல ஏதோ லாட்ஜ்ல தங்குறாங்க போல!” என்றாள் கோகிலா.



“விடு தொல்லை ஒழிஞ்சுது! அந்த மூஞ்சிங்களை பார்க்காம இருக்கலாம்”



“அவங்க போனதும் என்கிட்டே யாருமே பேசல, சரியா சாப்பிட கூட இல்லை! நேரமே போய் ரூம்ல படுத்துக்கிட்டாங்க!” முகம் வாடி நின்றவளை தேற்ற, “எங்க உன் காட்ஜில்லா? அவன் கூட பேச வேண்டியது தானே?” என்றான் அவளை தோளோடு அணைத்து. அவன் அணைத்த மறுநொடி அவன் மீது சாய்ந்தவள், “பயமா இருக்கு மாமா” என்றிருந்தாள்.



“உனக்கு பயமா? ஜான்சி ராணிக்கு அடுத்து உன் பேரை கல்வெட்டுல பொறிக்கனும்ன்னு நான் சைன்டிஸ்ட்க்கிட்ட எல்லாம் பெட்டிஷன் போட்டுட்டு வந்தா நீ இப்படி தமாசு பண்றியே மூக்கிம்மா!!” அவள் மூக்கை பிடித்து அவன் திருக, அவன் கரத்தை தட்டிவிட்டவள், “உன்மேல ரொம்ப கோவத்துல இருக்கேன்!! ஆனா அதெல்லாம் இப்போ நான் காட்ட போறது இல்லை! கல்யாணம் மட்டும் முடியட்டும்! உனக்கு இருக்கு!!” என்று கருவிக்கொள்ளும் கோகிலாவை கண்டு போலியாய் அதிர்ந்தான் பேரின்பன்.



“அய்யோ எனக்கு பயமா இருக்குங்களே?!” நடுங்கிக்கொண்டு அவன் சொல்ல, கோகிலாவின் முகத்தில் தீவிரம் குடிக்கொண்டது.



“ஹேய், கேட்கணும்ன்னு இருந்தேன், வேளாண் ஆபிஸ்ல இருந்து போன் பண்ணாங்க! நிலத்தோட தன்மை பத்தி தெரிஞ்சுக்கனும்ன்னு கேட்டுருந்தீங்க தானேன்னு சொன்னபோ எனக்கு ஒண்ணுமே புரியல! அப்புறம் இது நீ பார்த்த வேலையா இருக்கும்ன்னு தோணுச்சு!!

நீதான் சோளகாட்டுல என்ன பயிர் போடுறதுன்னு விசாரிச்சியா?” என்றான் இன்பன்.



“ம்ம்ம்”

“என்னடி வெறும் ம்ம்ம் மட்டும் சொல்ற?” தன்னோடு அவளை இழுத்து நெருக்கிக்கொண்டவனிடம்,

“மாமா! நான் சீரியஸா சொல்றேன்! கிஷோர் எதுக்காக இப்படி ஒரு சவால் விட்டுருக்கான்னு எனக்கு தெரியல! ஆனா அதுல என்னமோ இருக்கு! நீ அசால்ட்டா இருக்காம கொஞ்சம் சீரியஸா இரு!” என்றாள்.



“அட, இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல! மாமன் இன்னைக்கே கல்யாண வேலையில முழுசா இறங்கியாச்சு, காலைல பாரு, கோபியே நம்ம கல்யாண பேனர்ல தான் சும்மா கலைகட்டப்போகுது!” திண்ணமாய் சொன்னான் இன்பன்.



ஆனாலும் கோகிலாவின் முகத்தில் இருந்த தீவிரம் மறையாது, “ஒருவேளை உன்னால வர முடியாம போய், ஏதாவது தப்பா நடந்துட்டா.....!!!” என்றவளை, “ப்ச்! என்னடி பேச்சு இது?” என்று இடைமறித்த இன்பனை தடுத்தவள், “இன்கேஸ் அப்படி எதுவும் நடந்தா, அடுத்து நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது மாமா! ஆனா நான் எடுக்குற முடிவு ரொம்ப மோசமா தான் இருக்கும்” சொன்னவளின் விரல்கள் அவள் காயத்தை தொட்டுக்கொண்டது.

அது இன்பனுக்கு வேறு செய்தியை சொல்ல, இப்போது அவனிடமும் தீவிரம் புகுந்தது.



அங்கே ஹோட்டல் அறையில், “என் பொண்ணு இப்படி பேசுறவளே இல்ல கிஷோர், இவங்க தான் ஏதோ செஞ்சு வசியம் பண்ணிருக்காங்க! நீ இதனால என் பொண்ணை எதுவும் தப்பா நினைச்சுக்காத! கல்யாணத்துக்கு அப்புறம் அவ கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பா!! எது நிஜம் எது பொய்ன்னு புரிஞ்சுக்க தெரியல அவளுக்கு” என்றார் ஷங்கர்.



கிஷோர் வெளியே இயல்பாய் இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், உள்ளூர அவனுக்குள் பல எரிமலைகள் வெடித்துகொண்டிருந்தன.

“உங்க பொண்ணு இனி என் பொறுப்பு, யூ டோன்ட் வொரி அபௌட் ஹர் அங்கிள், ஐ வில் சேன்ஞ் ஹர்!” என்றவனை கடவுள் போல நினைத்து கும்பிட்டார் ஷங்கர். அவன் அலைபேசி பலமுறை கத்தி கத்தி நா வறண்டு ஓய்ந்திருந்தது.



ஷங்கரின் அலைபேசி ஒலிக்க, “சிவகுரு தான் கூப்புடுறான்!!” என்றதும், “என்கிட்டே குடுங்க அங்கிள்” என்று அவசரமாய் அவரிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்து சென்றான் கிஷோர்.



“வாட் டேட்!” என எரிந்து விழுந்தான் கிஷோர்.

“என்னடா செஞ்சு வச்ச? போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் பண்ணிக்கிட்டே இருக்காங்க!!” என்று பதறினார் சிவகுரு. சிறிது நேரத்திற்கு முன்னே, அவருக்கு அழைத்து இரண்டே நாளில் திருமணம் என்று சொல்லி கிளம்பி வர செய்திருந்தான் கிஷோர். பாதி வழியில் வந்துக்கொண்டிருந்தவருக்கு காவல் அதிகாரியிடமிருந்து விடாது அழைப்பு வரவே, முதலில் அதை இயக்கியவரிடம், “சிவகுரு தானே நீ? எங்க உன் புள்ள?” என்று தான் ஒருமையில் விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.



வாகனத்தை செலுத்திக்கொண்டிருப்பதால், ஐந்து நிமிடத்தில் திரும்ப அழைப்பதாக சொல்லி சிவகுரு வைத்துவிட, அடுத்த அரை மணி நேரமாய் கிஷோருக்கு முயன்றுக்கொண்டிருக்கிறார். அதற்குள் ஸ்டேஷனில் இருந்து பலமுறை அழைப்புகள் வந்து தவறிப்போயிருந்தன.



“என்னடா செஞ்சு வச்சுருக்க? சொல்லு மரியாதையா!” சிவகுரு அதட்ட, அருகே, ‘பதமா பேசுங்க’ என்ற லலிதாவின் குரலும் சேர்ந்து ஒலித்தது.



“என்கிட்டே எதையும் கேட்காதீங்க, நான் சொல்றதை மட்டும் ஒழுங்கா பண்ணுங்க” என அதட்டிய கிஷோரை, “வந்தேன்னு வையு, மகன்னு கூட பார்க்க மாட்டேன்.. நானே போலிஸ் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்! மரியாதையா சொல்லுடா உண்மைய!” அவனுக்கு மேல் அதட்டினார் சிவகுரு.



“நான் ஆரம்பிச்ச புது பிசினஸ்ல சின்ன குளறுபடி! அவ்வளோதான்!!” என்றவன் மீண்டும், “அவ்வளோதான்” என்றான் அழுத்தமாய்.



“இதுக்குமேல உங்ககிட்ட என்னால சொல்ல முடியாது! நீங்க இப்போ பேசிக்கிட்டு இருக்க போன், அண்ட் அம்மாவோடு போன் ரெண்டையும் நீங்க இருக்குற இடத்துலயே தூக்கி வீசிட்டு, நம்ம காரை ரோட் சைட் பார்க் பண்ணிட்டு பஸ் ஏறி இங்க வாங்க” என்றான்.



“ஏய் என்னடா சொல்ற? நீ சொல்றதெல்லாம் பார்த்தா எதையோ பெருசா பண்ணிட்ட போலயே” சிவகுருவுக்கு நெஞ்சுக்கூடு எகிறியது.



“காட் டேம்! ஜஸ்ட் டூ வாட் ஐ சே டாட்!” என்று கத்திய கிஷோர், “நேர்ல வாங்க பேசிக்கலாம்! பர்ஸ்ட் நான் சொன்னமாறி மொபைலை தூக்கிபோட்டுட்டு பஸ் ஏறி இங்க வாங்க! முதல்ல என் கல்யாணம் முடியட்டும்! அண்ட் ஒன் மோர் திங், இந்த விஷயம் வேற யாருக்கும் போகக்கூடாது!” தந்தைக்கே கட்டளையிட்டவன், அழைப்பை துண்டித்துவிட்டான்.



இந்த ஊருக்கு வரும்போதே அவன் புது அலைபேசியை வாங்கிக்கொண்டு தான் வந்திருந்தான். சிவகுரு இறுதியாய் தொடர்புக்கொண்டது ஷங்கரை தான் என்பது ட்ரெஸ் செய்தால் தெரிந்துவிடுமே? ஷங்கருக்கு ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்துவிட்டால் என்ன செய்வது? என யோசித்தவன், கையில் இருந்த மொபைல் அப்படியே விட்டான்! அது நான்காம் தளத்தில் இருந்து தெறித்து தரையில் விழுந்தது.



மறுநாள் காலை சூரியன் உதித்த பொழுதே கோகிலாவின் அறைக்கதவை தட்டியிருந்தார் சிவகாமி. “தலைக்கு தண்ணீ ஊத்திக்கிட்டு இந்த புது புடவையை கட்டிக்கிட்டு வா கண்ணு! கோவில்ல நலுங்கு வைக்க ஏற்ப்பாடு செஞ்சுருக்கோம்!!” என்றார் அவர். நேற்று நடந்த விஷயத்திற்கு பின் ஒருவரும் அவளுடன் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. இன்றோ அவரே வந்து திருமணத்திற்காக நலுங்கு வைக்க அழைக்க, “அம்மாயி!!!!” என கட்டிக்கொண்டாள் சிவகாமியை.



அவளை ஆதரவை அணைத்தவர், “கவலைப்படாத கண்ணு! எல்லாம் உன் மனசுப்படி நல்ல விதமா நடக்கும்! உன் அம்மாக்கும் அப்பாக்கும் கிறுக்கு தான் புடிச்சுக்கடக்கு! நீ எதையும் மனசுல போட்டுக்காத சந்தோசமா குளிச்சுட்டு கிளம்பி கீழ வா!! சரியா?” என்று அவள் தாடைப்பற்றி கொஞ்சினார்.



அவள் நிம்மதியுடனும், உற்சாகத்துடனும் தன்னை அழகாய் அலங்கரித்துக்கொண்டு கீழே சென்றால், மொத்த வீடும் பூந்தோரணங்களால் அலங்கரிக்கபட்டு, நேற்றிரவு மயான அமைதியில் இருந்த வீடா என ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆட்கள் நிறைந்து அவர்களின் பேச்சும் கூச்சலும் காதை நிறைத்தது. சுருக்கமாய் சொல்லப்போனால் வீட்டிற்கு கல்யாணக்கலை வந்திருந்தது.



“பொண்ணு வந்துருச்சு!!?” என்றொருவர் செய்தி சொல்ல, நான்கைந்து பெண்மணிகள் வந்து அவளை அழைத்துக்கொண்டு சென்றனர்.

“அம்மாயி எங்க?” என்றதற்கு, ‘கோவிலில் இருப்பார்’ என்றே பதிலே வர, அமைதியாய் காரில் ஏறிக்கொண்டாள். குடும்பத்து ஆட்கள் ஒருவரையும் காணவில்லை.



நேரே வண்டி சென்று நின்றது அவர்களின் ஆஸ்த்தான பாரியூர் அம்மன் கோவில் வாசலில். காரை விட்டு இறங்கியவளை அப்பெண்கள் அழைத்து செல்ல, கோகிலாவின் கண்கள் மட்டும் அவள் சொந்தங்களை குறிப்பாக இன்பனை தேடியது.



வழியெங்கும் கடவுளை வணங்கிக்கொண்டே வந்தவளை கோவிலுக்குள் இருக்கும் வாய்க்கால் அருகே அவர்கள் இட்டுச்செல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் வீற்றிருந்தது அங்கே...!



“இதோ, என் பேத்தி வந்துட்டா!!” என்ற ஒண்டிவீரரின் சொல்லில் திரும்பினர் அவர்கள். சலசலவென ஓடும் நீர் சத்தத்தோடு, வளையொலி வாயொலி எல்லாம் சேர, கோகிலாவுக்குள் உற்சாகம்!



நாத்தனார் முறை என்று ஒருத்தி வந்து கோகிலாவின் தலையில் பூவை அள்ளி வைத்தாள். அங்கு போடப்பட்ட நாற்காலியில் அவளை அமர்த்திவிட்டு, சந்தனம் குழைத்து குங்குமமிட்டு மலர்த்தூவி ஒவ்வொருவராய் வாழ்த்த, இறுதியாய் சிவகாமி முழு மகிழ்வோடு வந்து நலுங்கு வைத்தார். அவர் பாதம் பணிந்தவளை, “உன்னை இன்பனுக்கு கட்டிவைக்கனும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன்! எப்படியோ ஆண்டவன் அதுக்கொரு வழி காட்டிட்டான்!! நல்லா இருடா கண்ணு” என்று வாழ்த்த அவளுக்கிது புது செய்தியாய் இருந்தது.



மெல்லிய குரலில், “அவனுக்கு கௌரதியான வேலை இல்லை, காசு பணம் சேர்க்கலன்னு ஒருநாளும் நினைக்காதத்தா! தம்பி நாட்டை ஆளட்டும்ன்னு விட்டுக்கொடுத்துட்டு காட்டுக்கு போன ஸ்ரீராமனோடு குணம்ம்மா எங்க இன்பனுக்கு! அவனுக்குன்னு எதையும் இதுவரை அவன் கேட்டதில்லை. உன்னையும் அவன் கேட்கல! அவன் அம்மா, மேல தெய்வமா நின்னு எல்லாத்தையும் நடத்திக்கொடுகுறா! கொடுப்பா! அவனை நல்லா பார்த்துக்கோ” என்றார் சிவகாமி.



“காண்டீபா?”

“தாத்தா?”

“சுசீலா வீட்டுக்கு பேச முயற்சி பண்ணியா?”

“நேத்துல இருந்து போட்டுக்கிட்டு தான் இருக்கேன் தாத்தா, நாட் ரீச்சபிள்ன்னு வருது!!” என்று காண்டீபன் சொல்ல, ஒண்டிவீரர் ‘ம்ம்ம்’ என்றார்.



“கடைல இருந்து புடவை எல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு! எது புடிச்சுருக்கோ எடுத்துக்கோங்க எல்லாரும், ராத்திரிக்குள்ள ரவிக்கை தயாராகிடும்! சொல்லி வச்சுட்டேன்!” என்றார் சத்தியராஜன். அது மட்டுமே அவரது பொறுப்பு!



“ஏய் காட்ஜில்லா... இன்பா மாமா எங்க?” கோவிலில் இருந்து கிளம்பும்பொழுது ரகசியமாய் காண்டீபனிடம் கேட்டாள் கோகிலா.



“என் வாய்ல தான் இருந்தான், இப்போதான் கடிச்சு துப்புனேன்!!” என்று அவன் கடுப்பாய் சொல்ல, அவனை முறைத்துக்கொண்டே காரில் ஏறிவிட்டாள் கோகிலா. வீட்டில் இருந்து வரும்போது ஏதோ யோசனையிலேயே வந்தவளால் சாலையில் கவனம் செலுத்த முடியாது போனது. இப்போதோ மனம் லேசாக இருக்க, முழு கவனமும் சாலையிலும், காலை பொழுதின் சுறுசுறுப்பை நோட்டமிடுவதிலும் இருக்க, அவள் கண்களில் இருந்தது அரை கிலோமீட்டருக்கு இரண்டென சாலையின் இரு மருகிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அண்ணாந்து பார்க்குமளவு பெரிய ப்ளெக்ஸ் போர்டுகளும் பேனர்களும்!!



“ஹே ஸ்டாப் ஸ்டாப்!!” கோகிலா குரலில் காண்டீபன் காரை சாலையோரம் நிறுத்த, தெளிவாய் நோட்டமிட்டாள் பேனர்களை.



வெள்ளை வேட்டி சட்டையில் பேரின்பன் நடந்து வருவதை போன்ற கேன்டிட் போஸ் முழு ப்ளேக்ஸின் உயரத்தையும் அடைத்திருக்க, அவனின் கால் மாட்டில் ஷங்கர் செல்லத்தின் ‘உர்ரென்ற’ முகத்தோடு இருக்கும் புகைப்படங்கள்! எங்கிருந்து எடுத்தானோ தெரியாது!! திருமணத்தை முழுமனத்துடன் நடத்திக்கொடுக்கும் பெண் வீட்டார் என்ற தலைப்பின் கீழ் இருந்தது அவர்கள் புகைப்படம்!



இடப்பக்க ஓரத்திலோ, இன்பனின் உருவத்தை விட இரண்டடி சின்னதாய் ஒரு உருவம். “திருமண விழாவின் முக்கிய விருந்தினர் திரு.கிஷோர் குமார் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!!” என்ற வாசத்தின் அருகே பதிப்பிடப்பட்டிருந்தது கிஷோரின் புகைப்படம்!!

‘கோபியின் கோமேதகமே!

பெரிய வீட்டின் பேரின்பமே!

நாசாவில் நாஸ்த்தா துண்பவனே!

டீக்குடிக்க ப்ளூட்டோ பறப்பவனே!

உன் வியர்வை சிந்தினால் சுனாமி உண்டாகும்!

‘உப்ப்’ என ஊதினால் ‘வர்தா’ புயலே வந்துடும்!

உன் கண் பார்வையில் அமேசான் காடே பற்றி எரியும், நீ வாய்க்கொப்பளிக்கும் நீரில் அந்த தீயும் அணைந்துப்போகும்!’


சத்தமாக அவள் படிக்க ஒண்டிவீரருக்கும் சிவகாமிக்கும் சிரிப்பு தாளவில்லை. படித்துக்கொண்டிருந்தவளே சிரிப்பை அடக்கிக்கொண்டு தான் வாசித்தாள்.

‘கலியுக ராமனின் வழிப்பற்றி நடக்கும் சிறு அணில்கள்!’ என்று ஊரின் நண்டு சிண்டு முதல் புள்ளிங்கோ வரை அனைவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமும் இருந்தது.



“இவனுக்குன்னு ஊருக்குள்ள திரியுரானுங்க பாரு, பத்து அல்லக்கைங்க! அதுங்க எழுதுன வாசகமா தான் இருக்கும்!” என்ற காண்டீபன், “இவன் வாய்க்கொப்பளிச்சா அமேசான் காட்டுல நெருப்பு அணையுமாம்! எல்லாம் காலக்கொடுமை!” என்று தலையில் அடித்துக்கொள்ள, “உனக்கு யாரும் இப்படி செய்ய மாட்டேங்குறாங்கன்னு பொறாமடா” என்று சிரித்தார் சிவகாமி!!



அதைவிட அடுத்து அவர்கள் கண்ணில் பட்ட அந்த ஒரு வார்த்தை!!! காண்டு மூஞ்சி காட்ஜில்லாவையே உரக்க நகைக்கச்செய்ய, “வச்சானுங்க பாரு ஆப்பு” என்று சொல்லி சொல்லி சிரித்தான் காண்டீபன்.



“மாமா இதை பார்த்துருப்பாரா?” கோகிலா சிரிப்பினூடே கேட்க, “இந்நேரம் கிளிங்களை ஜூஸ் புழிஞ்சுட்டு இருப்பான்!” என்று நகைத்தான் காண்டீபன்.



அதேதான் நடந்தது. கிளிகள் இன்பனின் கையில் சிக்கிக்கொண்டு கிழிபட்டனர்.



“டேய், என்னடா செஞ்சு வச்சுருக்கீங்க?” இன்பனின் இரு கைகளிலும் கிளிகளின் உச்சி முடி கொத்தாய் சிக்கியிருந்தது. அவர்கள் தலை முடியை கொத்தாய் பிடித்து ஆட்டிக்கொண்டே அந்த பேனர் முன்னே நின்று பொருமிக்கொண்டிருந்தான் பேரின்பன்.



“நீ சொன்னமாறியே ஈரோடு வரைக்கும் நம்ம பிளக்ஸ் பேனர் தான் இருக்குண்ணே” பச்சைக்கிளி அவனிடம் இருந்து தன் முடியை காப்பாற்றிக்கொள்ள பாடுபட்டுக்கொண்டே சொல்ல,

“அதுக்குன்னு எவன்டா இப்படி எழுத சொன்னது?” என கர்ஜித்தான் இன்பன்.

“ண்ணே... இந்தமாறி பந்தாவா வசனம் போட்டா தானே நாலு பேரு நின்னு படிப்பாங்க!!” வலியில் ஆடிக்கொண்டே பதில் சொன்னான் வெட்டுக்கிளி.



“டேய்........!!! அதைக்கூட மன்னிச்சுடுவேன்டா! நான் ஐஞ்சு வருஷம் படிச்ச படிப்பை என்னடா பண்ணி வச்சுருக்கீங்க?” என்று அவன் கத்த, அண்ணாந்து பார்த்த கிளிகளுக்கு சட்டென்று விஷயம் பிடிபடவில்லை. வாசகத்தை ஊன்றி படிக்க, ‘திரு. பேரின்பன் எம்.ஏ.,’ என்றதற்கு பின் என்ன இருக்கிறதென கண்டுக்கொண்ட கிளிகளுக்கு, “ஐயையோ!!!!” என்றானது.



“பில்லாசப்பி-ல ‘ச’ னாவ காணோம்டா!!”



“ண்ணே ராவோட ராவா அடிச்சதுல சின்ன தப்பு நடந்து போச்சுண்ணே!!!” என்று அலறிய கிளிகள், அடுத்து அவன் அடிக்க தென்னம்மட்டையை தூக்குவதற்குள் தறிகெட்டு ஓடிவிட்டனர்.

‘பில்லாசப்பி, பிம்பிளிக்கா பில்லாப்பி ஆகிப்போனது!!’ அதை பார்க்கும் நெட்டிசன்கள் ‘மாப்பிள்ளையின் படிப்பை பாருங்கள்’ என இந்நேரம் மீம் உருவாக்கி உலவவிட்டாலும் விட்டிருப்பார்கள்! யார் கண்டது!!?

-தொடரும்...



அடுத்த அத்தியாயத்தோடு முதல் பாகம் முற்று பெரும்!!
 
Last edited:
My heartiest advanced wishes and congratulations to you, பிரியா டியர்
என்னப்பன் எம்பெருமான் விநாயகர் பெருமானின் எல்லையற்ற கருணையினாலும் திருவருளினாலும் உங்களுடைய அனைத்து தேர்வுகளிலும் நீங்கள் சிறந்த வெற்றிகள் பெற்று எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டிருக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், பிரியா மோகன் டியர்
 
Last edited:
Top