Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 10 (1)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோஸ்!

ரொம்ப கேப் எடுத்துட்டேன்... யாரோட மெசேஜுக்கும் ரிப்ளை பண்ண முடியல!!
இன்னைக்கு எப்படியாவது ud போடணும்ன்னு முயற்சி செஞ்சதுல இதுதான் முடிஞ்சுது!! கண்டிப்பா சின்னதா இருக்குன்னு தான் சொல்லுவீங்க... ஏன்னா எனக்கே தெரியும்... இது சின்ன எபி தான்...ஹீஹீ...!! ?
ஒண்ணுமே குடுக்காம இருக்குறதுக்கு வருஷத்துல முதல் நாள், இப்போதைக்கு முடிஞ்சதையாவது போஸ்ட் பண்ணலாமேங்குற ஒரு உயரிய எண்ணம் தான்....?

10 (2) நாளைக்கோ, இல்ல நாளை மறுநாளோ கண்டிப்பா குடுக்க முயற்சி பண்றேன்....!! இந்த புள்ள சரியா ud போட மாட்டேங்குதுன்னு யாரும் கதையை கை விட்டுறாதீங்கப்பா...?


அத்தியாயம் 10 (1):

ன்பன் வீடே அதிர 'சுசீலா' என கத்தியதில் வீட்டின் கடைகோடியில் நின்றிருந்த ஒண்டிவீரர் முதற்கொண்டு அனைவரும் அவ்விடம் வந்துவிட, யாரும் யோசிக்கக்கூட முடியாதபடி தன் இரும்புக்கரத்தால் அவளை அறைந்திருந்தான் பேரின்பன்.



சுசீலா உடல் முழுதும் அதிர அவனை விட்டு பின்னோக்கி சென்று சுவரோடு காலை மடக்கிகொண்டபடி அமர்ந்துவிட, இன்பன் கை நீட்டுவான் என சற்றும் எதிர்ப்பார்த்திராத கோகிலா, அவனது சிவந்த தோற்றத்தில் திகைத்து போய் நின்றுவிட்டாள்.



“இனி ஒரு வார்த்தை என் பொண்டாட்டியை பேசுன...”” என்ற இன்பன் ஒரு விரல் நீட்டி, ‘தொலைச்சுடுவேன்’ என எச்சரிக்க, அவன் பார்வையும் நின்றிருந்த தோற்றமும் அவனது அதிகபட்ச கோபத்தை பறைசாற்றியது.



அடித்தவன் அடுக்களையை விட்டு வெளியே வர, அவனுக்கு குறையாத ரௌத்திரத்தை கையில் எடுத்தவனாய் நின்றிருந்தான் காண்டீபன்.



காண்டீபனின் வார்த்தைகள் இன்பனை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சென்று தாக்கி போர்க்களத்தை உருவாக்கும் முன் ஒண்டிவீரர், “என்ன காரியம் செஞ்சுருக்க பேரின்பா?! பொண்ணுங்க மேல கை வைக்குற பழக்கம் எப்போ இருந்து வந்துச்சு உனக்கு? அதுவும் சுசீலா உன்னோட தம்பி மனைவின்னு மறந்துட்டியா?” என்று ஆக்ரோஷமாய் கேட்க, தலைகுனிந்து நின்றிருந்தான் பேரின்பன்.



சுசீலா பேசிய வார்த்தைகள் அவனை கை நீட்டுமளவு தூண்டிவிட்டிருந்தாலும், அவன் செய்தது தவறு என்பதை உணர்ந்தே இருந்தாலும், ஒண்டிவீரரின் அதட்டலுக்கு பதில் சொல்ல அவன் விளையவில்லை.



“நீ அடிக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு இன்பா?” தான் வளர்த்தவன் தவறு செய்திருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என யூகித்து தங்கம் தவிப்பாய் அவனிடம் கேட்க,



“என்ன நடந்துருந்தாலும் என் பொண்டாட்டியை அடிச்சது தப்பு தான்!!” என்றான் காண்டீபன், அழுத்தம் திருத்தமாய்.



தன் மகனுக்கு பொருத்தம் இல்லாத மருமகள் என மனதுக்குள் நொந்துக்கொண்டிருந்த சத்தியராஜன் கூட இன்பன் மீது தவறென்றதும், “என் மருமகளை அடிக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கு? இதே இவன் பொண்டாட்டியை என் மவன் அடிச்சுருந்தா இப்படி சும்மா நின்னு பேசிட்டு இருப்பானா? என் மகனா இருக்கப்போய் நிதானமா நிக்குறான்?!” காண்டீபனின் ‘பொறுமை?!’ பற்றி பெருமையாய் அவர் பேச, அனைவர் கண்களும் இன்பனை குற்றவாளி கூண்டில் ஏற்றி நிறுத்தின.



சுசீலா பேசிய வார்த்தைகளை இன்பன் சொல்லியிருந்தால் அவனை மட்டுமே குற்றவாளியாக்கும் சூழல் சற்றே மாறியிருக்கும். ஆனால், அதை சொல்லக்கூட அவன் நினைக்கவில்லை. அந்த வீட்டில் காலத்திற்கும் வாழ வேண்டியவள் மீது குற்றம் சுமத்தி மற்றவர் கண்ணில் அவளை மாசுப்படுத்தி காட்ட அவனுக்கு மனம் வராது போனது.



அடிவாங்கியவள் இன்னமும் மூலையில் அமர்ந்து கன்னத்தை பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க, திகைத்து நின்றிருந்த கோகிலா, “மாமா அடிச்சது தப்பு தான், ஆனா, என்ன நடந்துச்சுன்னா....” என சொல்ல தொடங்கும்போதே “கோகிலா...!!” என சிறு அதட்டலும் அவன் நயனத்தில் தென்பட்ட சிவப்பு கொடியும் அவளை மேற்கொண்டு பேச விடாமல் தடை செய்தது.



சுசீலா என்னவோ தவறாய் பேசியிருக்கிறாள் என்பது மட்டும் அங்கிருந்தவர்களுக்கு நன்றாய் புரிந்தது. அதை பகிரங்கப்படுத்த இன்பனே முயலாத போது வற்ப்புறுத்தி கேட்க யாருக்கும் மனம் வரவில்லை.



காண்டீபன், “ஏய்... எதுக்கு அவளை அடிச்சன்னு கேக்குறேன்ல? அவ தப்பு செஞ்சா திட்ட பெரியவங்க இருக்காங்க! கண்டிக்க அவ புருஷன் நான் இருக்கேன்!! நீ எந்த உரிமைல அவ மேல கை வச்ச?”

நேருக்கு நேராய் நின்று எந்த வித தூதும் விடாது, இன்பனிடமே கேட்டான் காண்டீபன்.



இத்தனை வருடமாய், காண்டீபன் எகிறிக்கொண்டு வரும்போதெல்லாம் தணிவாய் பேசியோ, இல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்தோ சண்டையை தவிர்த்துக்கொண்டு வந்த இன்பன், இன்றோ, “ஆமான்டா! அடிச்சுட்டேன்!! இப்போ என்னங்குற? நான் அடிக்குற அளவுக்கு உன் பொண்டாட்டி பேசுனா! என்ன பேசுனான்னு அவளையே கூப்பிட்டு கேட்டுக்கோ!!” என்றுவிட்டு நகரப்போக, அவன் கரத்தை உடும்பாய் பிடித்து நிறுத்தினான் காண்டீபன்.



“அவ தப்பே செஞ்சுருந்தாலும் நீ அவளை அடிச்சது தப்பு!! ஒழுங்கா அவக்கிட்ட மன்னிப்பு கேளு” காண்டீபன் சொல்ல, அவனை கண்டு இளப்பமாய் சிரித்த இன்பன், “மன்னிப்பா? ஹும்ம்!! முதல்ல அவளை கோகிலாக்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு!! அதுக்கு பிறகு நான் மன்னிப்பு கேட்குறதெல்லாம் இருக்கட்டும்!!” என்றான்.



ஒண்டிவீரர், “இன்பா, நீ பேசுறது கொஞ்சமும் சரியில்ல...! செஞ்ச தப்புக்கு முதல்ல மன்னிப்பு கேளு... நீ இப்படி நடந்துப்பன்னு நான் கொஞ்சமும் நினைக்கல!!”



“முடியாது தாத்தா! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!!” என்றான் இன்பன் ஸ்திரமாய்.



சத்தியராஜ், “அடிச்சதும் இல்லாம, மன்னிப்பும் கேட்க முடியாதாமா!! இவனை தான் எல்லாரும் தலைல தூக்கி வச்சுட்டு ஆடுறீங்க!!”



சிவகாமிக்கு எந்த பேரனுக்கு சாதகமாய் பேசுவது என்றே தெரியாது காட்சியாளறாய் நின்று போனார். ஒண்டிவீரருக்கு எத்தனை நியாயம் இன்பன் பக்கம் இருந்தாலும், அவன் கை நீட்டியது பெரும் அநியாயமாய் பட்டது.

தங்கத்திற்கு இன்பனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. கோகிலாவிற்க்கோ தன்னை பேசியதற்காக இன்பன் செய்தது பெரும் சண்டையில் இன்பனை சிக்க வைத்து விடுமோ என்ற ஐயம்.



அவள் ஐயத்தை ஊர்ஜிதப்படும்படி, “மன்னிப்பு கேட்க முடியாதுன்னா வீட்டை விட்டு வெளில போடா” என்றான் காண்டீபன்.



சிவகாமி, “காண்டீபா, அமைதியா இரு! நாங்க தான் பேசுறோம்ல!!” பதைபதைப்புடன் சொல்ல,



மற்ற நாளாய் இருந்தால், காண்டீபன் வீட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு, “ஓகே போறேன்” என இயல்பாய் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றிருப்பான்.

இன்றோ இன்பன், “இது என் வீடு!! நான் இந்த வீட்டோட மூத்த வாரிசு! என்னை இந்த வீட்டை விட்டு போகச்சொல்ல உனக்கு இல்ல, வேற யாருக்குமே உரிமை இல்லை” என்றவன் வேட்டியின் நுனியை இரு விரலால் தூக்கி பிடித்தபடி காண்டீபனை தாண்டி நடந்து செல்ல, அவன் பேச்சில் கோகிலா உட்பட அனைவருமே திகைத்து போயினர்.



‘இது இன்பன் இல்லையே!’ என்ற திகைப்பு.

‘இவனுக்கு இப்படியும் பேசத்தெரியுமா?’ என்ற ஆச்சர்யம்.



காண்டீபனுக்கு அவன் செவிகளையே நம்பமுடியவில்லை.

‘பேசியது இன்பன் தானா? தன்னிடமா அவன் இப்படி பேசியது?’



“இத்தனை நாள் இல்லாம இப்போ என்னடா புதுசா வாரிசுரிமை எல்லாம் பேசுற?” சத்தியராஜன் இன்பனை பின்தொடர்ந்து செல்ல, “ஏன் நான் உங்களுக்கு பொறக்கலையா?” என்றான் பேரின்பன் அவரிடமே!!!



மனைவி மீது கொள்ளைகொள்ளையாய் காதலை தேக்கி வைத்திருப்பவர், எப்படி சொல்லுவார்? இல்லை என்று!! வார்த்தையின்றி ஸ்தம்பித்து போய் நின்றார்.



“இங்கப்பாரு!! என் பொண்டாட்டிக்கிட்ட மரியாதையா அடிச்சதுக்கு மன்னிப்பு கேளு” காண்டீபன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு கேட்க,

“முடியாது!! என்னடா பண்ணுவ?” என்றான் இன்பன், சண்டைக்காரன் போல!!



தங்கம் குறுக்கே வந்து, “என்ன இன்பா நீ? எப்பவும் பொருத்து தானே போவ? இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? அமைதியா போயா” என்றார் கெஞ்சலாய்.



“இத்தனை நாள் அமைதியா தான் போனேன் அத்தே! என்ன எவ்வளோ பேசுனாலும் அசிங்கப்படுத்துனாலும் இது என் அப்பா, என் தம்பின்னு நான் சகிச்சுக்கிட்டு தான் போனேன்! ஆனா, என் பொண்டாட்டி எதுக்கு சகிச்சுக்கனும்? இனிமேலும் நான் இவங்களுக்கு அடங்கியே போனா, கோகிலாவுக்கு இந்த வீட்ல என்ன மரியாதை இருக்கும் சொல்லுங்க?”



இன்பனின் கேள்வியில் இருந்த நியாயம் மறுத்து பேச முடியாது நிற்க வைத்தது.



“இந்த வீட்டோட மூத்த வாரிசுங்குற உரிமையையோ, மரியாதையையோ இதுவரைக்கும் இவங்க குடுத்ததும் இல்லை, நானும் அதை எதிர்ப்பார்த்ததும் இல்லை! அதனால தான் அப்பாவுக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சதும், எந்த சொத்துலையும் நான் உரிமை எடுத்துக்க கூடாதுன்னு என் உரிமையை கூட தம்பிக்கு விட்டுகுடுத்துட்டு, நம்ம மில்லுலயே நான் சம்பளம் வாங்கி வேலை பார்க்குறேன்!! இதுவரை ஒத்தையாளா இருந்த எனக்கு இது எதுவுமே தப்பா தெரியல!”



“ஆனா, எனக்கு கிடைக்காத மரியாதையும் உரிமையும் இந்த வீட்டுக்கு மூத்த மருமகளான என் மனைவிக்கு கிடைக்கனும்! கிடைச்சே ஆகணும்!! அவளை ஒரு வார்த்தை யாரும் சொல்றதை கூட என்னால அனுமதிக்க முடியாது” என்றவனின் பார்வை காண்டீபன், சத்தியராஜனை தாண்டி பின்னிருந்த சுசீலாவை தொட்டு மீண்டது மிரட்டலாய்.



ஒண்டிவீரர், “என்ன நடந்துச்சுன்னு தெரியாம என்ன சொல்றதுன்னே எனக்கு புரியல!” என்றவர், “சுசீலா...!! இங்க வா” என்றார். அடிமேல் அடி வைத்து தயங்கியபடியே அவள் வர, “நீ என்ன பேசுனன்னு நான் கேட்கப்போறது இல்ல. உன் மனசுக்கு தெரியும்! நீ பேசுனது தப்புன்னு!! அதை நீ உணர்ந்தா கோகிலாக்கிட்ட மன்னிப்பு கேட்டுடு” என்றார்.



“அப்பா, என் மருமக எதுக்கு மன்னிப்பு கேட்கனும்?” என்ற சத்தியராஜனை அவர் கண்டுக்கொள்ளவில்லை. சுசீலா தயக்கமாய் காண்டீபனை பார்க்க, அவன் முகத்தில் இருந்து எந்த உணர்வையும் அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.



‘கேளுன்னு சொல்றானா, இல்லன்னு சொல்றானா?’ என யோசித்தவள் எல்லோரும் அவளையே பார்க்கவும், தயக்கத்துடனே கோகிலாவிடம் செல்ல, அவள் பேசும் முன்னே, “மன்னிப்பெல்லாம் வேணாம்! நடந்ததை மறந்துடுவோம்” என்ற கோகிலாவின் விரல்கள் சுசீலாவின் சிவந்த கன்னத்தை வருடிக்கொடுத்தது.



பிரச்சனை முடிந்தது என எல்லோரும் நினைக்க, முடியவிடாமல் தொடர்ந்தான் காண்டீபன்.



“சுசீலாக்கிட்ட அவன் மன்னிப்பு கேட்கணும். கேட்கலன்னா ஒன்னு அவன் இந்த வீட்டை விட்டு போகணும், இல்ல நான் இந்த வீட்டை விட்டு போய்டுவேன்” என்றான் முடிவாய்.



சிவகாமி, “ஐயோ டேய், ஏன்டா பிடிவாதம் பண்ற?”



“இதான் என் முடிவு” என்றுவிட்டான் அவன்.



இன்பன், “நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்!! இதான் என்னோட முடிவும்!!”



காண்டீபன், “அப்போ நான் இந்த வீட்டை விட்டு போய்டுவேன்”



“யார் இந்த வீட்டை விட்டு போனாலும் எனக்கு கவலையில்லை” என விட்டேத்தியாய் வந்தது இன்பனின் பதில்.



தம்பிக்காக எதையும் செய்யும் இன்பனா இப்படி சொல்வது? என அசந்துவிட்டார் ஒண்டிவீரர்.



காண்டீபனின் பிடிவாதமே இத்தனை நாளும் முடிவாய் மாறியிருக்க, ‘நான் உனக்கே அண்ணன்டா’ என திமிராய் அவனை விட பிடிவாதமாய் நின்றிருந்தான் பேரின்பன். இந்த பேரின்பன் முற்றிலும் புதியவன்!!!



சிவகாமி, “என்னடா ரெண்டு பேருமே இப்படி மல்லுக்கு நிக்குறீங்க? இப்படி அடிச்சுக்கவா நாங்க வளர்த்து விட்டோம் உங்களை?” மனம் கேளாது அவர் புலம்ப,



“என் மகன் எதுக்கு வீட்டை விட்டு போகணும்? இவனை போக சொல்லுங்க! இல்லனா என் புள்ளையோட சேர்ந்து நானும் எங்கயாவது போய்டுவேன்” என்றார் சத்தியராஜன்.



சிவகாமி தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

-வருவான்...



யார் வீட்டை விட்டு போவாங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்...
 
காண்டீபன்தான் போவான்
ஏன்னா இத்தனை வருஷமாக அண்ணனுக்கு கிடைக்காத மரியாதை இனிமேலாவது இன்பனுக்கு கிடைக்கட்டும்ன்னு நல்லதை நினைத்தும் தனியாகப் போனால் சுசீலா தன்னுடன் ஒட்டுதலாக இருப்பாளோன்னு நினைத்தும் காட்ஜில்லா போனால் இந்த ஜில்லாக் கேடி அப்பன் சத்தியராஜ் பள்ளிபாளையம் மேட்டர் வெளியே வராமல் இருக்கட்டும்ன்னு இளைய மகனுடன் சேர்ந்து வெளியே போவாரு
 
Last edited:
காண்டு தான் போகணும்... ஏன்னா இப்ப கிடச்ச சான்ச பயன்படுத்திட்டா சுசுலா அவன சீக்கிரம் தன் கணவனா ஏத்துப்பா.... ஒரே இடத்துல இருந்தா இது நடக்க காலம் ஆகலாம்
 
Top