Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 04 (அ)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
இந்த எபியோட செகண்ட் பார்ட் எழுதிட்டே இருக்கேன்! இன்னைக்கு நைட் இல்லனா நாளைக்கு கண்டிப்பா வரும்....!!! இந்த கதையில சோகம் எல்லாம் ரொம்ப கிடையாது பிரண்ட்ஸ்! ஜஸ்ட் ப்ரீயா படிங்க!!!
அண்ட், இன்பனுக்கு என்ன ஆச்சுன்னு DIRECT CLUEவே குடுத்துட்டேன் இதுல! ஏன்னா, உங்க கெஸ்ஸிங்...... சத்தியமா முடியல!!:ROFLMAO:

04 (அ)

பேரின்பன் காலையில் கண் திறந்ததுமே அவன் முன்னே வந்து “என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க மாப்பிள்ளை” என்று ஷங்கரும் செல்லமும் கரம் கூப்பி நிற்க, அவர்கள் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் திரும்பிக்கொண்டான் இன்பன்.



“நாங்க பார்த்த மாப்பிள்ளை தான் சரியில்லாதவனா போய்ட்டான்! என் பொண்ணு ஆசைப்படுற வாழ்க்கையாவது நல்லபடியா அமையட்டும்” ஷங்கர் சொல்ல, மௌனமாய் எழுந்தவன் போர்வையை மடித்து ஓரமாய் வைத்துவிட்டு புறவாசலுக்கு சென்றான்.



அவன் தங்களை மதியாமல் செல்கிறான் என்பது மனதை அறுத்தாலும் அதை வெளிக்காட்டும் நிலையில் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்து பொறுத்து நின்றனர்.



“அட, யாரது நடுவீட்ல நிக்குறது?” சத்தம் கேட்ட திக்கில் அவர்கள் நிமிர, மாடியில் இருந்து இறங்கி வந்துக்கொண்டிருந்தான் காண்டீபன்.



“அம்மாயி! அத்தே! யாரு வந்துருக்காங்கன்னு பாருங்க” என்றவன் சோபாவில் அமர்ந்துக்கொண்டான் சௌகர்யமாய்.



அவன் சத்தத்தில் வெளியே வந்தவர்கள் ஷங்கரையும் செல்லத்தையும் கண்டு முகம் சுளிக்க, “அம்மா...” என அருகே வர இருந்த செல்லத்தை கையுயர்த்தி தடுத்தார் சிவகாமி.



“அங்கேயே நில்லு! எதுக்கு வந்தன்னு மட்டும் சொல்லிட்டு கிளம்பு!” என்று பட்டென சொல்ல, “ஏன்ம்மா இப்படி பேசுற?” என்று அவர் விசும்ப, “உன் அழுகைக்கு மனசு இளகுற நிலையில நான் இல்லை! அதனால வந்த விஷயத்தை சொல்லு!” என்றிருந்தார்.



தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு இன்பனும் அங்கே வந்துவிட, அவனை கண்டு, “மாப்பிள்ளை...” என ஷங்கர் தொடங்கியதுமே, “இதப்பார்ரா! நேத்து ஒருத்தன் மாப்பிள்ளை, இன்னைக்கு ஒருத்தன் மாப்பிள்ளை, அப்போ நாளைக்கு இன்னொருத்தனா?” என்று காண்டீபன் இளக்காரமாய் கேட்க, அங்கிருந்த அனைவர் வாயில் இருந்தும் ‘காண்டீபனின்’ பெயர் ஹை டெசிபலில் ஒலித்தது.



“காண்டீபா! இதுல கோகிலாவும் சம்பந்தப்பட்டுருக்கா! அவங்களை பேசுறதா நினைச்சு அவளை கீழிறக்காத!” தங்கம் எப்பொதும்போலின்றி சபையில் பேச, காண்டீபன் அமைதியானான்.



“இப்போ எதுக்கு வந்தீங்க?” இன்பன் கடமையாய் கேட்க, “என் பொண்ணு வாழ்கை இப்படியே போய்டக்கூடாது இன்பா! அவளை நீதான் கல்யாணம் செஞ்சுக்கணும்” செல்லம் கண்ணீர் விட, “ரொம்ப அக்கறையோ?” என பழித்தான் இன்பன்.



“உங்க பொண்ணு மேல அக்கறை இருக்கிறது மாதிரி காட்டிக்க வேணாம்! உங்களை விட அவமேல அக்கறை வைக்க இங்க நிறைய பேரு இருக்கோம்!” காண்டீபன் கத்த, அது நெஞ்சில் சுருக்கென தைத்தாலும் பதில் பேசவில்லை ஷங்கர்.



“வந்து இவ்வளோ நேரமாச்சு, அன்னைக்கு விட்டுட்டு போன பொண்ணு எப்படி இருக்கா? என்னமா இருக்கானு பார்க்கனும்ன்னு கூட தோணல பெத்தவளுக்கு” சிவகாமி கடிய, “உங்ககிட்ட இருக்கும்போது அவ நலத்துக்கு என்னம்மா குறை இருக்க போகுது?” என்றார் செல்லம்.



‘பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்பதை போல கழுத்தை நொடித்துக்கொண்ட சிவகாமி சத்தமாய் குரல் கொடுக்க, மாடியில் இருந்து இறங்கி வந்தாள் கோகிலா. கூடத்தில் தன்னை பெற்றவர்கள் நிற்ப்பதை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை.



“கூப்பிட்டீங்களா அம்மாயி” என சாந்தமாய் அவர் அருகே சென்று அவள் நின்றுக்கொள்ள, “கோகிமா?” என அழைத்தார் ஷங்கர்.



“எதுக்கு வந்தீங்க?” நறுக்கென வந்தது கேள்வி அவளிடம் இருந்து.



“நான் உன் அப்பா டா?”

“அதுக்கு?” அவள் கேட்க என்ன சொல்வார் அவளிடம்!?

“இனி இதான் என் வீடு! இவங்க மட்டும் தான் என் சொந்தம்! இங்க இருந்து நான் வேறெங்கயும் வர மாதிரி இல்லை”

ஒருவேளை அவளை திரும்ப அழைத்து செல்ல வந்திருக்கிறார்களோ என்றெண்ணி அவள் பேச,



“சந்தோசம்டா, இனி நீ இங்கயே இரு! இன்பனை கல்யாணம் செஞ்சுக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருடா!!” செல்லம் கண்களை துடைத்துக்கொண்டு பிரகாசமாய் சொல்ல, “என்ன திடீர்ன்னு இவன் பக்கம் கொடி பிடிக்குறீங்க? என்ன சங்கதி?” என்றான் காண்டீபன், ஆராய்ச்சியாய்.



சிவகுரு வாயால் வெளிவந்த உண்மைகள் அத்தனையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்த ஷங்கர், “அவனை நல்லவன்னு நம்பி அவன்கூட சேர்ந்து...” என்று ஆரம்பித்ததுமே, “சரி இப்போ என்ன பண்ணனும் சொல்லுங்க” என்றான் இன்பன், அவசரமாய்!



சொல்ல வந்தது பாதியோடு நிற்க, “என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க” என்றார் ஷங்கர்.



“அதை நீங்க சொல்லிதான் நான் செய்யணும்ன்னு அவசியம் இல்லை, அதுக்கு உங்க அனுமதியும் நான் எதிர்ப்பார்க்கலை! கோகிலா கொஞ்சம் தெளியட்டும்ன்னு தான் காத்துருக்கேன்!” என்று பளிச்சென இன்பன் சொல்ல, ‘நீ என்ன சொல்கிறாய்?’ என்பதை போல கோகிலாவை கண்டனர்.



“என்னை பொருத்தவரைக்கும் அன்னைக்கு நடந்தது கல்யாணமே இல்லை! அது என்னை எந்த விதத்துலையும் பாதிக்கவும் இல்லை!!” கடைசி வரியை சொல்கையில் அவள் குரல் தேய்ந்தது.



“அப்பறம் என்ன ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சு வச்சுடலாம்!” சிவகாமி சங்கடம் நிவர்த்தி ஆன திருப்தியில் சொல்ல,



“நான் கோகிலாவை கல்யாணம் செஞ்சுக்குறேன்! ஆனா எனக்கு சீதனமா என்ன தருவீங்க?” இன்பன் யாரும் எதிர்ப்பாரா கேள்வியொன்றை முன்வைக்க,



“எல்லாமே! எல்லாமே இனி உங்களுக்கு தான்! இனி கூலி வேலைக்கெல்லாம் போக அவசியம் இல்ல நீங்க! நான் சேர்த்து வச்சுருக்க மொத்த சொத்தையும் எடுத்துக்கோங்க” ஷங்கர் துரிதகதியில் வியாபாரம் செய்ய, அவரை தடுத்தவன், “எனக்கு இதெல்லாம் வேணாம்! நான் கேக்குறதை மட்டும் குடுங்க!” என்றிட,



“எது கேட்டாலும் குடுக்க நான் தயார்! என்ன வேணும்ன்னு சொல்லுங்க”



அவர் கேட்டதும் நிர்தாட்சண்யமாய், “நீங்க இனிமே எங்க வாழ்கையில வரவே கூடாது!! உங்க முகத்தை இன்னைக்கு பிறகு நான் ஒருநாளும் பார்க்கவே கூடாது! என் கண்ணு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் வரவே மாட்டீங்கன்னு ஒரு வாக்கு குடுங்க போதும்!!” ஷங்கர் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்றை கேட்டு அவரையும் செல்லத்தையும் அதிர வைத்தான் பேரின்பன்.



ஷங்கரும் செல்லமும் விக்கித்து போய் நிற்க, அவர்களுக்கு ஆதரவாய் ஒரு வார்த்தை பேச அங்கே ஒருவரும் இல்லாதது தான் அந்தோ பரிதாபம்!!



“இந்த வாக்கு குடுத்தா தான் நான் கோகிலாவை கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லல! குடுத்தா நல்லா இருக்கும்ன்னு சொல்றேன், அவ்வளோதான்!!” தோளை குலுக்கி இலகுவாய் சொன்ன இன்பன், காண்டீபனின் அருகே சற்று தள்ளி அதே சோபாவில் அமர்ந்துக்கொள்ள, சிவகாமி நாள்காட்டியை ஆராய சென்றார்.



“அவ எங்களுக்கு ஒரே பொண்ணு, அவளை விட்டுட்டு நாங்க எப்படி இருப்போம்? எங்களுக்கு இருக்க ஒரே சொந்தம் அவதானே?” செல்லம் மீண்டும் கண்ணீர் சுரப்பிக்கு வேலை கொடுக்க, இன்பனிடம் பதில் இல்லை.



பெற்ற பிள்ளையை பார்க்க கூடாதென சொல்லும் அளவுக்கு அவன் நெஞ்சில் ஈரம் வற்றிவிடவில்லை. ஆனால் சகஜமாய் அவர்களிடம் உறவு கொண்டாட அவனால் கிஞ்சித்தும் முடியாது. அவன் கண்முன் வர வேண்டாம் என்று சொன்னானே தவிர, அவன் முடிவில் கோகிலாவை உள்ளிழுக்கவில்லை.



அவளுக்கு பெற்றோர் வேண்டும் எனும்போது அவனால் தடை போடவும் முடியாது. முடிவு கோகிலாவிடம் என்ற எண்ணத்தில் அமைதியாகிவிட்டான்.



“நாளபின்ன அவ தேவைக்கு அம்மா நான் வேண்டாமா? இப்படி ஒரேயடியா உறவை முறுச்சுக்க சொன்னா எப்படி?” மீண்டும் கேள்வி இன்பனிடம் பாய, அவன் பார்வை ஒருமுறை கோகிலாவை தொட்டு மீண்டது.



அங்கு நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற பாவனையில் தங்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தவளை பார்த்தவன், மௌனமாய் திரும்பிக்கொண்டான். இன்பனிடம் பதில் கிடைக்காது என்றுணர்ந்து தன் மகளிடம் முறையிட சென்றார் செல்லம்.



“பாருடி! என்ன பேசுறாங்கன்னு! அம்மா புள்ளை உறவே இருக்க கூடாதுன்னு சொல்றாங்க! கேட்டுட்டு சும்மா நிக்குற?”



“அவர் கண்ணு முன்னாடி வரக்கூடாதுன்னு தான் சொன்னாரு, நம்ம உறவை முறிச்சுக்கனும்ன்னு அவர் சொல்லவே இல்லை” கோகிலா சொன்னதும் ஒரு நொடி மிளிர்ந்த செல்லத்தின் முகம், “ஆனா, எனக்கு தனிப்பட்ட முறைல உங்கக்கூட உறவை தொடர விருப்பம் இல்லை! அவரோட முடிவு என்னவோ அதுதான் என்னுதாவும் இருக்கும்!!” என்றிட, அவர் முகம் கூம்பிப்போனது.



“என்னடி பேசுற?”

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் என்பதை போல மௌனமாய் நின்றாள் கோகிலா.



“அடுத்த வாரமே ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கு இன்பா!!” சிவகாமி நாட்காட்டியுடன் அவனிடம் வர, “ஏன் அம்மாயி? இன்னைக்கு நாள் நல்லா இல்லியா?” என்றான் இன்பன்.



“இன்னைக்கேவா?”

“ஆமா?”

“ஆனா....!!?”

“ஏற்கனவே லேட் தான் அம்மாயி! அன்னைக்கே முடிஞ்சுருக்க வேண்டிய கல்யாணம்!” என்ற இன்பன் கண்மூடி ஆழ மூச்செடுத்து, “இன்னொரு முறை மாலையும் கழுத்துமா பத்து பேரு முன்னாடி கோகிலாவை நிறுத்தி வைக்க எனக்கு விருப்பம் இல்லை! அவ தெளியனும்! அதுக்கு நான் அவக்கூடவே இருக்கணும்!!” என்றான் திடமாய்.



கோகிலாவின் முகத்தில் இருந்து எந்த உணர்வையும் அறியமுடியவில்லை. அங்கே இன்பன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான்.



“கோகிலா?” இன்பன் அழைக்க, அவள் அவனை நிமிர்ந்து பார்த்ததும், “நம்ம பீரோல நிறைய புது புடவை இருக்கும்! என் அம்மாக்கு வருஷா வருஷம் வாங்கி வைப்பேன்! அதுல உனக்கு எது புடிச்சுருக்கோ அதை கட்டிக்கோ! தாத்தாவும் அப்பாவும் வந்ததும் நமக்கு கல்யாணம்!” என்றவன், “உனக்கு சம்மதம் தானேடா?” என்றான். அவள் தலை மெல்ல அசைந்தது.



இன்பனின் அறைக்கு சென்ற கோகிலா அவன் சொன்னது போல பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புது புடவைகளை நோட்டமிட்டாள். இருந்த அத்தனையும் அவளுக்கு எடுப்பாக இருப்பது போல தோன்ற, ஐந்து நிமிட யோசனைக்கு பின்னே, இளமஞ்சள் நிற மெல்லிய கரையிட்ட புடவையை தேர்வு செய்தவளுக்கு, அருகே புகைப்பட சட்டத்தினுள் இருக்கும் வைதேகி, ‘அதையே கட்டு!’ என சொல்வதையே போல பிரம்மை தோன்றியது.



கையில் இருந்த மீதி புடவைகளை மீண்டும் உள்ளே அடுக்கிய போது அதில் ஒன்று தவறி விழுந்து விட அதை எடுக்க குனிந்தவளின் கண்ணில் சிக்கியது, கடைசி ரேக்கில் இன்பன் ஒளித்து வைத்திருந்த வேட்டி சட்டை.



‘துவைக்க போடாமல், ஏன் உள்ளேயே வச்சுருக்கான்?’ என்ற எண்ணத்தில் அவள் அதை வெளியே எடுக்க, அவள் விரல் மோதிரத்தில் சிக்கியது அச்ச்சட்டையின் கிழிந்த பகுதி. வேகமாய் அவள் சட்டையை பிரிக்க, இடது பக்க கீழ் ஓரம் கிழிந்து ரத்தக்கறையுடன் இருந்தது.



பார்த்தவளுக்கு நெஞ்சுக்குள் ‘பகீர்’ என்றிருக்க, வேட்டியை விரித்துப்பார்த்தால், அதிலும் சிதறியிருந்தது இரத்தத்துளிகள். அவன் அணிந்திருக்கும்போது இது எதுவும் கண்ணில் படவில்லையே என எண்ணும்போது நினைவு வந்தது, அவன் வந்தது முதல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்ட வாக்கிலேயே இருந்தது.



மடித்து கட்டியிருந்ததால் சட்டையின் கிழிசலோ ரத்தக்கரையோ வெளிதெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. என்ன ஏதென்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவள், மீண்டும் அவன் வைத்தது போலவே அவன் உடையை சுருட்டி வைத்துவிட்டு, புது புடவை உடுத்தி தயாராகி கீழே வந்தபோது, அவள் பெற்றோர் அங்கே இல்லை.



‘இன்பன் அனுப்பிவிட்டான் போலும்’ என யூகித்துக்கொண்டாள்.



வெளியே சென்றிருந்த ஒண்டிவீரரும் சத்தியராஜனும் கூடத்தில் நிற்க, “எல்லாமே அவசரமா இன்பா? யாருக்கும் சொல்லாம இப்படி வீட்டோட வச்சு கல்யாணம் பண்றதுல எனக்கு துளியும் விருப்பம் இல்லை” என்றார் ஒண்டிவீரர்.



“எவன் என்ன பேசிடப்போறான்? எல்லாருக்கும் சொல்லியே நிதானமா செய்யலாமே?” ஒண்டிவீரர் கேட்க, “இது என் முடிவு தாத்தா! நடத்துக்குடுங்க!!” வந்ததில் இருந்து அவர் கேட்பதற்க்கெல்லாம் அவன் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருந்தது.



‘இதை தான் செய்வேன்’ என பிடிவாதம் பிடித்தால் பதிலுக்கு அவரும் முரண்டு பிடிக்கலாம், அவனோ, ‘செய்து கொடுங்களேன்’ என இறைஞ்சும்போது அதற்கு மேல் அவரால் மறுக்க முடியவில்லை.



பேசி பேசி பார்த்தவர் அவன் முடிவில் தெளிவாய் இருப்பதை கண்டு, “எல்லாம் உங்க இஷ்டத்துக்கு செய்ங்க!” என்றார். அவருக்கு வீட்டோடு வைத்து திருமணம் செய்வதில் துளியும் நாட்டம் இல்லை. இன்பனின் திருமணத்தை ஊர் மெச்ச செய்ய வேண்டும் என அடிக்கடி சிவகாமியிடம் சொல்லிக்கொண்டிருப்பார். இன்று அவர் எண்ணத்திற்கு அவன் முட்டுக்கட்டை போட, அரை மனதாய் சம்மதித்தார்.



வைதேகி இறந்தபின்னே அவரது தாலியை பத்திரப்படுத்தி வைத்திருந்தார் சிவகாமி. திடீரென இன்று திருமணம் என சொன்னதும் அதே தாலியை பூஜையறையில் வைத்து மனமார வேண்டிக்கொண்டு மஞ்சள் கயிறில் கோர்க்க தொடங்கினார்.



கோகிலாவுக்கு கை கால்கள் ஏனோ வெடவெடத்துப்போயின. அவள் பதட்டம் முகத்தில் வியர்வையை பூக்க செய்ய, “கோகிலா? என்னைப்பாரு!!?” என்றான் பேரின்பன்.



எதிரில் நின்றவனை மெல்ல நிமிர்ந்து அவள் நோக்க, இரு கைகளிலும் தாலியை ஏந்தியபடி அவள் முகம் பார்த்து மென்னகையுடன் நின்றிருந்தான் பேரின்பன். அவன் கண்கள் தீர்கமாய் அவளை காண, அவன் கண் பார்வையில் அவள் பதட்டம் மெல்ல குறைய, அவளை நெருங்கி வந்தவன், அவள் மணிக்கழுத்தில் நிதானமாய் இட்டான், மும்முடிச்சுகளை!!!

மஞ்சள் அரிசி அவர்கள் மீது சாரலாய் தெளிக்க, அந்த தருணத்தை காணொளி ஆக்கிக்கொண்டிருந்தான் காண்டீபன்.



“கட்டுனா தான் அது தாலி, மாட்டுனா அது சங்கிலி!!” என்றவன் சிரிக்க, அவன் சிரிப்பில் எப்போதும் போல தொலைய துடித்த மனதை கடிவாளமிட்டு நிறுத்தினாள் கோகிலா.



முகமெங்கும் புன்னகையாய், காண்பதற்கே அரிய வகை காட்சியாய் காண்டீபன் சிரித்துக்கொண்டே “கங்க்ராட்ஸ் கோகிலா!!” என்று சிரிக்க, அவனிடம் மெலிதாய் சிரித்தாள் கோகிலா.



அடுத்த நொடி பவர் கட் ஆனதை போல இருண்டு போய் இயல்புக்கு திரும்பிய அவன் முகம், இன்பனிடம், “கங்க்ராட்ஸ்!” என்றது கடன் கொடுத்தவனை போல கடுப்புடன்!!



திருவிழாவில் காணப்படும் ‘சிவகாமி கம்யூட்டர்’ ரேஞ்சுக்கு விறைத்து நின்றிருந்தார் சத்தியராஜன்.



பெரியவர்கள் காலில் வரிசையாய் விழுந்து கும்பிட, அடுத்து சிவகாமியின் வற்புறுத்தலால் பாலும் பழமும் கொடுக்கப்பட்டது. வெகு நாட்களுக்கு பிறகு சமையல் அறை தங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட, அன்றைக்கு விருந்து தூள் பறந்தது.



இன்பனின் மலர்ச்சியும், கோகிலாவின் தெளிச்சியும் ஒண்டிவீரரை வெகுவாய் சமன்படுத்திவிட்டிருந்தது. காலை உணவே பலவித பலகாரங்களுடன் முடிந்திருக்க, கூடத்தில் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை கலைத்தது வாசலில் கூடிய பெரியவர்களின் குரல்.

-வருவான்...
 
:love: :love: :love:

பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு
கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட
கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

மதுர மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் இது மறையாத என்னுடைய பாசம்
 
Last edited:
Top