Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 8 2

Advertisement

Admin

Admin
Member


அசோக் “சரி விடுடா இருந்து இருந்து நானே இப்போது தான் என் இருபத்தியொன்பது வயது பிரம்மச்சரிய விரதத்தை முடிக்க நேரம் வந்து இருக்குன்னு நினைக்கிறேன்.என்னை பார்ப்பதை விட்டு உன் மினியை பாறு…..”என்று கூறிக் கொண்டே பிரதாப்பை டைனிங் ரூமுக்கு அழைத்து சென்றான்.

அங்கு அவர்களுக்காக அனைவரும் காத்திருந்ததை பார்த்த அசோக் அவசரமாக பிரதாப்பின் கை பிடித்து இழுத்து சென்றான்.பிரதாப் அசோக்கின் கையை தட்டியவாறே “ஏண்டா இவ்வளவு அவசரமாக கூட்டிட்டு போற இப்போ வரும் போது தானே ராமைய்யா கொடுத்த டிபனை சாப்பிட்டு வந்த அதுக்குள் என்ன அவசரம்…”என்று கூறிக் கொண்டே பொருமையாக வந்து அமர்ந்தான்.

“ஏண்டா நான் சாப்பிடுவதுக்கா உன்னை அவசரமாக அழைச்சிட்டு வந்தேன் நமக்காக எல்லாரும் காத்திட்டு இருக்காங்க”தான் அவசரம் பட்டதற்க்கான காரணத்தை கூறினான்.

பிரதாப் மிக கெத்தாக” கொஞ்சம் நேரம் காத்திட்டு இருந்தா தான் என்ன.?

“உன் மாப்பிள்ளை முருக்கெல்லாம் அவர் பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தவுடன் காமி…. இப்போ கல்யாணம் இன்னும் நடக்க வில்லை.அவரை பெண்ணை கொடுக்கலாமான்னு….. யோசிக்க வைச்சிடாதே”என்ற அசோக்கின் பேச்சில் இருக்கும் உண்மையில் அவன் அடங்கி அமர்ந்தான்.

அசோக் மனதுக்குள்ளாக இன்னும் கல்யாணம் கூட நடக்க வில்லை. ஆனால் பயப்புள்ள அதுக்குள் என்னம்மா அடங்கி போறான். கல்யாணம் செய்வதற்கான அனைத்து தகுதியும் நம்ம பிரண்டுக்கு வந்து விட்டதாக கருதிக் கொண்டான்.

அங்கு டைனிங் டேபிளில் பத்மினிக்கு எதிர் பக்கமாக அமர்ந்து தன் இரு பக்கத்தில் அமர்ந்து இருக்கும் சந்தானத்திடமும், கேசவமூர்த்தியிடமும், மட்டுமே பேசிக் கொண்டு இருந்தான்.மறந்தும் தன் பார்வையை பத்மினி பக்கம் திருப்பவில்லை.

சற்று முன் அசோக் கூறிய பேச்சில் இருந்த உண்மையே அதற்கு காரணம்.தன் சிறு தவறால் கூட பத்மினியை இழக்க விரும்ப வில்லை.கல்யாணம் வரை தான் அடங்கி இருக்க வேண்டும். பிறகு நான் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டும்,என்று மனதுக்குள்ளாகவே கூறிக் கொண்டான்.

ஆனால், இது ஏதும் அறியாத பத்மினி மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தாள். இவர் நம்மை பிடித்து தான் பெண் கேட்டாறா….? அப்படி பிடித்து கேட்டிருந்தாள், தன்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேச வில்லை…? தன்னிடம் பேசுவது என்ன? பார்க்க கூட வில்லையே என்று குழம்பிக் கொண்டே தன்னையும் அறியாமல் பிரதாப்பையே பார்த்திருந்தாள்.

பிரதாப் சந்தானத்திடமும், கேசவமூர்த்தியிடமும், பேசியவார் இருந்தாலும்…. பத்மினி தன்னை பார்ப்பதை அறிந்துக் கொண்டான். அதுவும் அவள் தன்னை பார்க்கும் போது அவள் முகத்தில் குழப்பமே மிகுந்து இருந்தது.இவள் எதற்க்கு தன்னை இப்படி குழம்பி போய் பார்க்கிறாள்.

இவளை பார்த்ததில் இருந்து என்னை காய விடுறாளே….இது என்ன பார்வை ஆசையாக பார்த்தாள் கூட பரவாயில்லை..இவள் இப்படி பார்த்தாள் நம்மை சந்தேகம் படுகிறாளோ...என்ற எண்ணம் மனதில் உதித்தவுடன் அவசரம் அவசரமாக தன் உணவை உண்டு விட்டு அசோக்கையும் அவசரமாக கிளப்பினான்.

பாவம் அவன் அப்போது தான் ஷாலினியை நிதானமாக நோட்டம் விடவே ஆரம்பித்திருந்தான்.ஆனால் அதற்குள்ளாகவே பிரதாப் அனைவரிடமும் சொல்லிக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அவன் கையை இழுத்தவாறு கார் அருகில் வந்த உடன் தான் அசோக்கின் கையையே விட்டான்.

பின் அவசரமாக காரை எடுத்துக் கொண்டு இரண்டு சந்து கடந்த பின் காரை ஒரமாக நிறுத்தி தன்னை நிதானம் படுத்தி கொண்டான். இவன் செயல்களை பார்த்து கொண்டிருந்த அசோக் “என்ன பிரதாப் ஏன் இந்த டென்ஷன்… எல்லாம் நாம் நினைத்த மாதிரி சரியாக தானே நடந்தது. பின் எதற்க்கு அவசரமாக வந்தாய் “என்ற அசோக்கின் கேள்விக்கு…

“எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல அசோக். பத்மினி என்னையே பாத்துட்டு இருந்தா……”என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக்குக்கு மண்டை காய்ந்த்து தான் மிச்சம்.

“பத்மினி முதலில் பார்க்க வில்லையின்னு சொன்ன ….இப்போது என்னான்னா பாக்குறா அப்படின்னு பயந்துட்டு ஓடி வர உனக்கு என்ன தான் பிரச்சனை…

அது தான் எனக்கு தெரியலே அசோக் பத்மினி என்ன சந்தேகத்தோடு பார்த்த மாதிரி இருந்தது.ஒரு சமயம் அவள் சாதாரணமாக கூட பார்த்து இருக்கலாம்.ஆனால் எனக்கு தான் மிகவும் பயமாக இருக்கு” என்ற பிரதாப்பின் பேச்சை அசோக்கால் தான் நம்ப முடிய வில்லை.

பிரதாப் எதற்கும் அஞ்சாதவன். அப்படி பட்டவன் இப்போது இந்த பயம் இந்த நடுக்கம் அவனுக்கு புதியது.அதை அசோக் பிரதாப்பிடம் கூறிய போது….

“இந்த பொய் கூட எனக்கு புதியது தானே அது தான் இந்த பயம் அது மட்டுமா…. இனிமேல் நான் கூற போகும் பொய் தான் எனக்கே என்னை மன்னிக்க முடியாமல் இருக்க போகிறது.”என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக்குக்கு குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவன் பெரிய திட்டம் நமக்கே தெரியாமல் திட்டம் இட்டு இருக்கிறான். ஆனால் அந்த திட்டத்தில் அவனுக்கே உடன் பாடில்லை என்று…

“என்ன பிரதாப் திட்டம் செய்திருக்கிறாய் அதுவும் எனக்கே தெரியாமல்”

“அசோக் நான் திட்டம் எல்லாம் தீட்ட வில்லை அதுவும் உனக்கு தெரியாமல்….இனிமேல் தான் நான் ஒரு பெரிய பொய் கேசவமூர்த்தியிடம் சொல்ல வேண்டும்.”

அசோக்கின் புரியாத பார்வையில் “கேசவமூர்த்தி என்ன சொன்னார்….ஞாபகம் இல்லையா...என் பெற்றவர்களை அழைத்திட்டு வர சொல்லியிருக்காறு…..

“ஆமாம் பிரதாப் நானே உன்னை கேட்கலாம் என்று நினைச்சிட்டு இருந்தேன்.அம்மா,அப்பா எப்போ வேல்ட்டு டூர் போனாங்க… என் கிட்டே அதை பத்தி சொல்லவே இல்லை.

“அதை பற்றி தான் நான் உன் கிட்டே சொல்லனும் அசோக். என் அம்மா, அப்பாவை கேசவமூர்த்தியும், சகுந்தலா அம்மா பாத்துட்டா….கண்டிப்பா பத்மினியை எனக்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டாங்க…”

“ஆமா… இதை நாம் யோசிக்கவே இல்லையே…பிரதாப். பார்க்கிறது என்ன உன் அப்பா, அம்மா பெயர் கேட்டாலே தெரிஞ்சிடுமே....

“ அசோக் நீ யோசிக்கலேன்னு சொல்லு…..நான் யோசிக்கலேன்னு சொல்லாதே….”

“அப்போ இதை பற்றி தான் ஏதோ பெரிய பிளான் யோசிச்சு வைச்சிருக்கே….என்ன பிளான்?

“அசோக் நான்… என் அப்பா, அம்மா பெயரையே மாத்தி சொல்ல போறேன்.அதுவும் இல்லாமல் கல்யாணம் அன்னைக்கு வேறு யாரையாவது என் பெற்றோர் என்று கொண்டு வந்து நிறுத்தனும்.”

பிரதாப் சொல்வதை கேட்டு ஒரு நிமிடம் அசோக்குக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.அதுவும் இல்லாமல் அவனும் யோசித்ததில் இதை தவிர வேறு வழியும் இல்லை.

முதலில் என்றால் வெறும் பழி வாங்குவதற்கு இந்த திருமணம் என்று நினைத்திருந்தான். ஆனால் இப்போது அவன் சென்னை வந்த உடன் அவனிடம் தென்பட்ட மாற்றம். அவன் முகத்தில் தென் பட்ட மகிழ்ச்சி இத்தனை வருடத்தில் அவன் பார்த்ததே இல்லை.

ஏன் பிஸ்னஸில் எவ்வளவு லாபம் வந்த போதும்….இந்த மகிழ்ச்சியை அவன் முகத்தில் பார்த்தது இல்லை.ஒரு சின்ன பார்டியோடு முடித்து விடுவான்.சென்னை வந்த பிறகு தான் மனது விட்டு பேசுகிறான்….சிரிக்கிறான்.அதற்கு காரணம் கண்டிப்பாக பத்மினி தான். இதில் சந்தேகம் ஏதும் இல்லை.

எந்த காரணம் தொட்டும் இந்த திருமணம் நிக்க கூடாது.அதனால் பிரதாப் சொன்ன யோசனை பிடிக்கா விட்டாலும் அதற்கு உடன் படுவது என்ற முடிவுக்கு வந்த உடன் தன் கையை பிரதாப் கையோடு பிணைத்து “நீ என்ன செய்தாலும் உனக்கு என் சப்போர்ட் எப்போதும் உண்டு. பத்மினியை திருமணம் செய்ய இது தான் வழி என்றால் அதுவே செய்...ஆனால் எது செய்வது ஆனாலும் சீக்கிரமாக செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறு சந்தேகம் கூட ஏற்படக்கூடாது.ஏற்கனவே சகுந்தலா அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாது போல் தான் தெரிகிறது.”என்று பிரதாப் நினைத்ததையே அசோக்கும் கூறினான்.

அசோக்கின் கை பற்றிய வாறு “இப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு.எனக்கு ஏதோ தவறு செய்வது போலவே இருந்தது.நம் பெற்றவர்களின் பெயரையே மாற்றி சொல்லவது என்றால்…..அதுவும் என் அப்பா,அம்மா, என் கல்யாணம் பற்றி பல கனவுகள் உள்ளது.ஆனால் இப்போது என் திருமணம் அவர்கள் இல்லாமலேயே….”என்று கூறி வேதனையுடன் அசோக்கின் தோள் சாய்ந்தான்.

இவர்கள் நினைப்பது எல்லாம் நடக்குமா…..
 
:love: :love: :love:

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு என்று செல்வார்கள்...

இங்கயும் பொய்யில் தொடங்க போகும் வாழ்க்கை எப்படி இருக்கும்???

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால்
அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே
 
Last edited:
கேசவனை புலம்பவிடனும் என்று டெல்லியிலிருந்து வந்தவன் இப்போ இவனே புலம்பிக்கிட்டிருக்கானே. அருமை விஜிக்கா.
 

Advertisement

Latest Posts

Top