Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 25 2

Advertisement

Admin

Admin
Member
கேசவமூர்த்தியின் பேச்சைக் கேட்ட தீனதயாளன் “நான் அவ்வாறு எல்லாம் பயப்படவில்லை.நீங்கள் தவறானவர் என்று ஒரு சதவீதம் கூட யோசிக்கவில்லை.திருமணம் ஆனா அந்த மூன்று மாதத்திலேயே நான் உங்களை பற்றி நன்கு தெரிந்துக் கொண்டேன்.நீங்கள் சாந்தி மீது வைத்திருந்த காதலின் ஆழம்.அது எந்த அளவுக்கு ஆழம் என்றால் சாந்தி எங்களிடம் பாசமாக இருப்பதை கூட உங்களால் தாங்க முடியாத அளவுக்கு ஆழம் என்பதை.நீங்கள் கொஞ்சம் பொறுத்திருந்தாள் நானே என் மனைவிடமும் பிரதாப்பிடமும் பக்குவமாக சொல்லி உங்களை தனிக்குடுத்தனம் வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.சரி எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது தான் நடக்கும்.”என்று தன் பேச்சை நிறுத்தினார்.

பின் தீனதயாளனே “டைம் ஆயிடுச்சி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.” என்று அழைத்தார்.

அனைவரும் டைனிங் ஹாலுக்கு சென்ற போது லட்சுமி அம்மா வந்து பிரதாப்புக்கு போன் வந்திருப்பதாக அழைத்தார்.பிரதாப் ஹாலுக்கு செல்லும் போதே ஏன் என் செல்லுக்கு அழைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டே தன் செல்லை எடுத்து பார்த்தான்.அது சார்ஜ் இல்லாமல் அணைந்து இருந்தது.

பின் லாட்ன் லைனை எடுத்து காதில் வைத்தது தான்.அந்த பக்கத்தில் இருந்த மோனா பிரதாப் என்ன நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைச்சிகூட பார்க்கவில்லை.அந்த போட்டாவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.அதுவும் இல்லாமல் நாம் அப்படியா பழகினோம்.மேலும் நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுக்காக தான் அந்த பெண் பெயர் கூட பத்மினி பெயரே கர்நாடகமா இருக்கே அவள் எப்படி இருப்பாள்.அவள் பேச்சை முடிக்கவில்லை.

“வாயய் மூடு.என் மனைவியின் பெயர் சொல்ல கூட உனக்கு அருகதை இல்லை.என்ன சொன்ன விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டேனா…..உனக்கு யார் அப்படி சொன்னது. அவளை பார்த்ததில் இருந்து என் நினைவு முழுவதும் அவள் நினைவே. முதலில் விருப்பம், காதல், இதை பற்றி பேச கூட உனக்கு அருகதை இல்லை. என் மனைவியின் பெயர் உனக்கு கர்நாடகமா இருக்கா….?உன் பெயரையே நார அடித்து விடுவேன்.

கடைசியாக உனக்கு ஒன்று சொல்கிறேன். தீ பந்தம் பெருசா எரியுதுன்னு அதை வீட்டுக்குள் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.குத்து விளக்கு சிறியதாக எரிகிறது என்று அதை வீதியில் வைக்க மாட்டார்கள்.உனக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.இனி மேல் என் விஷயத்தில் நீ தலையிட்டால் நடப்பதே வேறு.நான் உன்னை இத்தோடு விட்டதற்கு காரணம் நானும் தப்பு செய்தவன் என்பதால் தான்.இனி மேல் எதற்கும் என்னிடம் நீ தொடர்பு கொள்ளக் கூடாது.”என்று போனை வைத்தான்.

இவை அனைத்தையும் மாடியில் உள்ள மற்ற எக்ஸ்டங்ஷன் கனெக்க்ஷனில் இருந்து மினி அனைத்தையும் கேட்டிருந்தாள்.
இங்கு டைனிங் ஷாலில் பத்தூ பிரதாப்பை காணமல் “பிரதாப் இன்னும் சாப்பிடவராமல் அங்கு என்ன பேச்சு” என்ற தாயின் குரலில் மகிழ்ந்து விரைந்து சென்று தன் அன்னையை அணைத்துக் கொண்டான்.

பத்தூ பிரதாப் சென்றவுடன் காலையில் தன் கணவர் சொன்னதை எல்லாம் யோசித்து பார்த்தாள்.பிரதாப் செய்தது தவறு என்றால் அந்த தவறுக்கு தானும் ஒரு காரணம் என்றே...அவளுக்கு தோன்றியது.அதனால் இது வரை நடந்ததை நினைப்பதை விட இனிமேல் நடக்க வேண்டியதை பார்ப்போம்.இன்று தான் தன் குடும்பம் ஒன்று சேர்ந்து இருக்கிறது.அதை கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

அதனால் தான் இந்த மாற்றம். தன்னை அணைத்த பிரதாப்பை தலை கோதி சாப்பிடு கண்ணா...என்று கூறினார்.
டைனிங் ஷாலில் அனைவரும் இருக்க மினி மட்டும் இல்லாததை பார்த்த சகுந்தலா அம்மா… தன் பேத்தியை அழைத்தார் “வா சாப்பிடலாம்.என்ன மேலேயே நின்னுட்ட நான் உன்னை அப்படிதான் வளர்த்தேனா….நீ எங்களை விசாரித்து சாப்பிட அழைக்கனும்.ஆனால் நான் உன்னை சாப்பிட அழைக்கிறேன்.ம்...இது தான் நீ குடும்பம் பண்ணும் லட்சனமா…”என்று அவர் எப்போதும் திட்டுவது போல் திட்டினார்.

அதற்கு பத்தூ,தீனதயாளன் இருவரும் ஒரு சேர “அவள் எங்களுக்கு முதலில் பேத்தி அப்புறம் தான் மருமகள் அவள் விருப்பப்படிதான் இங்கு அனைவரும் நடக்கவேண்டும்.”என்று கட்டளையே இட்டார்.

தாத்தா பாட்டி பேச்சை கேட்ட மினி ஒடி வந்து அவர்களின் தோள் சாய்ந்து தன் சகுந்தலா பாட்டியை வெறுப்பு ஏற்றினாள்.இதனை பார்த்த பிரதாப்புக்கு மகிழ்ச்சியாக இருந்தது.காலையில் அவளின் வெளிறிய முகமே இன்று முழுவதும் அவன் கண் முன் வந்து நின்றது.

இப்போது இந்த குறும்பு தனமான செயல் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சகுந்தலா அம்மாவை மனதுக்குள்ளாகவே பாராட்டிக் கொண்டான்.மேலும் இந்த சகுந்தலா அம்மாவை முடிந்த வரை நம் வீட்டிலேயே வைத்திருக்க திட்டமும் இட்டான்.
மினியின் இந்த மாற்றதுக்கு காரணம் பிரதாப்பின் போன் உரையாடலை கேட்டதே…. நேற்றில் இருந்து அவன் தன்னை காதல் இல்லாமல் மணந்தான் என்று நினைத்ததற்கு மாறாக தன்னை விரும்பி தான் மணந்தான் என்பதை கேட்டதில் இருந்து அவள் அவளாக இல்லை. அவன் குற்றம் மன்னிக்க முடியாது தான்.

ஆனால் அவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும்… அவன் சிறு வயது முதலே மறுக்க பட்டதற்க்கு முதல் காரணம் தன் அம்மா. ஆம் அவனை கருவிலேயே அழிக்க நினைத்ததற்க்கு காரணம் தன் அம்மா தானே….பின் பிரதாப்பின் தந்தை பாசத்தையும் தாய் பாசத்தையும் கிடைக்காமல் ஆனாதுக்கும் தன் அம்மா தானே காரணம்.

தன் அம்மாவின் மனநிலைக்காக தானே பிரதாப்பை தாத்தா பாட்டி வளர்க்காமல் தன் அம்மாவிடம் வளர்க்கும் பொறுப்பை கொடுத்தது.அதாவது நிலைத்ததா….தன் அப்பா இடையில் வந்து பறித்தது.என்று அனைவரும் பிரதாப்புக்கு தீங்கு இழைத்ததாகவே கருதினாள்.

இப்போது தான் பிரிந்து மனைவியின் அன்பும் கிடைக்கவிடாமல் செய்ய விரும்பவில்லை.மேலும் இந்த காரணத்திற்க்கு எல்லாம் மீறிய ஒரு காரணம் இருந்தது. அது பிரதாப்பின் மீது மினி வைத்திருக்கும் காதல்.அது தான் உண்மையான காரணமே...அதனால் தான் தன் சகுந்தலா பாட்டி அழைத்ததும் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது.மினியின் மாற்றத்தை பார்த்து அனைவருக்கும் சந்தோஷமே...பின்பேச்சுக்கு இடையே சாப்பிட்டும் முடித்தனர்.

பின் மீண்டும் ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்.ஷாலினியின் அப்பா தியாகராஜன் தீனதயாளனிடம் “உங்கள் விஷயம் சரி நீங்கள் ஒன்றுக்குள் ஒன்று. சம்மந்தமே இல்லாமல் என் மகளை ஏன் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கிறிர்கள்.” என்ற அவர் பேச்சு நியாயமாகவே பட்டது.

அதற்க்கு தீனதயாளன் “எங்கள் குடும்பத்தில் அசோக்கும் ஒருவன் அப்படி பார்க்கும் போது ஷாலினியும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவள் தான்.அதனால் அவர்கள் செய்ததை நியாயம் என்று சொல்லமாட்டேன்.ஷாலினி இப்படி வீட்டை விட்டு வந்தது மிக பெரிய தவறு தான்.ஆனால் நீங்களும் விரும்பாத திருமணத்திற்க்கு அவளை வற்புறுத்தி இருக்க கூடாது.”என்ற தீனதயாளனின் பேச்சுக்கு…

“நீங்கள் ஷாலினியை பற்றி மட்டும் யோசித்து பேசுகிறிர்கள் நான் இவளுக்கு முன் உள்ள பெண்ணை பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.”தியாகராஜன் பேச்சில் குழம்பி போய்.

“ஏன் உங்கள் பெரிய பெண்ணுக்கு என்ன பிரச்சினை தியாகராஜன்.”

“பெண்ணுக்கு ஒரு குறையும் இல்லை.ஆனால் ஜாதகத்தில் தான் பிரச்சினை என்று இரண்டு வருடமாக என் பெண்ணுக்கு நல்ல இடமாக அமையவில்லை.இந்த இடம் தான் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறினார்கள்.மேலும் எங்களுக்கு ஏத்த இடமாகவும் பிடித்தும் இருந்தது.என்ன ஒன்று அவர்கள் குடும்ப ஒற்றுமைக்காக ஒரே வீட்டில் தான் பெண் எடுப்போம் என்று கூறினார்கள்.இரண்டு பையனும் பார்க்கவும் நல்லா இருந்தார்கள்.அதுவும் ஷாலினியை கேட்ட மாப்பிள்ளை ஆடிட்டராக இருக்கிறார்.”என்று கூறி நிறுத்தினார்.

தீனதயாளன் பிரதாப்பிடம் “இரு பெண் குழந்தையின் தந்தை என்று பார்க்கும் போது அவர் பேசியது அனைத்தும் நியாயமே இதற்க்கு என்னப்பா...சொல்கிறாய்.ஷாலினி இந்த திருமணத்தை மறுத்தால்.அவர் பெரிய பெண் திருமணமும் தடை படும் .”என்ற அவர் பேச்சை அசோக் இடையிட்டு நிறுத்தினான்.

“அதற்க்காக விருப்பம் இல்லாமல் ஒரு பெண் திருமணம் செய்துக் கொண்டாள் அவள் அந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பாளா…?

இவர்கள் பேச்சை யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்த பிரதாப் மயில்வாகனத்திடம் “அங்கிள் உங்களுக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதா…?என்று கேள்வி எழுப்பினான்.

மகன் போகும் பாதையை புரிந்துக் கொண்ட தீனதயாளன் மயில்வாகனத்திடம் “நான் உன்னிடம் நேரிடையாகவே கேட்கிறேன்.அசோக் என் மகன் போன்றவன் அது உன் மகன் வாசுவுக்கே நன்கு தெரியும். அப்படி இருக்கும் போது அசோக் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணின் அக்காவும் எனக்கு மருமகள் முறைதான் ஆகிறது.இப்போது அப்பெண்ணுக்கு உன் பையனை கட்டிக் கொடுக்க சம்மந்தமா”என்று நேரிடையாக கேட்டார்.

மயில்வாகனம் தீனதயானிடம் “நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”என்று கூறி தன் சம்மதத்தை தெரிவித்தார்.

“என்ன தியாகராஜன் என்ன உங்களுக்கு சம்மதமா”என்று கேட்டதற்கு உடனே அவர் தன் சம்மதத்தை சொன்னார்.

பின் என்ன அவர் பார்த்த சம்மந்தமோ மாத வருமானம் பார்ப்பவன். இந்த சம்பந்தம் ஒரு ஒட்டலின் முதலாளி பின் என்ன கசக்குமா செய்யும்.இங்கு பெரியவர்கள் தொடர்ந்து திருமண விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இளையவர்கள் அவர் அவர் வேளையில் ஈடுப்பட்டிருந்தனார்.

அது தாங்க கண்ணோடு கண் நோக்குதல் தான்.
 
Top