Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 25 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---25
அவர்களை பார்த்த பிரதாப்புக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மற்ற இருக்கையில் வாசுவும்.அவர் தந்தை மயில் வாகனமும் மற்ற ஒரு பெரியவரும் இருந்தனர். அந்த பெரியவரின் முகம் பார்த்த மாதிரி இருந்தது.
அவனுக்கு இந்த சூழ்நிலையை எப்படி எதிர் கொள்வது என்றே தெரியவில்லை. அவன் முன்பு இதை எதிர் பார்த்து தான் அவன் அனைத்து காரியமும் செய்தது.அவர் தன் பெண்ணை எப்படியும் மயில் வாகனம் மூலம் கண்டு பிடித்து விடுவார் என்று தெரியும்.

தன் பெண்ணை தேடி தன் வீட்டுக்கு வரவேண்டும்.அப்போது அவரை பார்த்து எவ்வாறு எல்லாம் கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒரு திட்டமே வகுத்திருந்தான்.ஆனால் இப்போது எல்லாம் தலை கீழாக மாறியிருந்தது.
இப்போது ஏனோ அவருக்கு முன் தான் தாழ்ந்து விட்டோமோ என்று கூட எண்ணினான்.முப்பது வயதிலேயே மனைவியை இழந்து வேறு பெண்ணை நாடாத அவர் எங்கே…? தான் எங்கே …?அந்த எண்ணம் தோன்றியவுடன்.ஒரு பயப்பந்து வந்து ஒட்டிக் கொண்டது.

அசோக் பிரதாப்பிடம் “சரி பிரதாப் நான் வீட்டிற்க்கு போகிறேன். நீ எதுவாக இருந்தாலும் பொறுமையாக உன் மாமானாரிடம் பேசு. முதலில் உள்ள சூழ்நிலை இப்போது இல்லை.அதனால் அடக்கியே வாசி.” என்று கூறி புறப்பட முற்பட்டான்.

“அவன் கையய் பிடித்து இழுத்து “எங்கே போகிறாய் இரு.” என்று கூறியதற்க்கு…

“ஏன்டா உனக்கே இது நியாயமா….?நேற்று ஒரு நாள் உன் கூட நான் இல்லாததுக்கு. ஷாலினியையும் கூட்டிட்டு வந்துட்டே சரி விடு.அவள் என் வீட்டில் இருந்தால் என் கற்புக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்து உன் கூட அனுப்பி வைத்தேன்.ஆனால் நான் காலையில் இருந்து அவள் கூட பேசக் கூடயில்லைன்னே எப்படிடா... நீயே சொல்…? அதனால் ஆளை விடு நீயாச்சி உன் மாமானார் ஆச்சி…”என்று கூறி அவன் கையில் உள்ள தன் கையய் இழுத்தான்.

ஆனால் பிரதாப் விடாமல் “என் இன்னால் மாமானாரை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் வருங்காள மாமனாரை நீ தானே பார்த்துக் கொள்ளனும்.”என்று கூறிய நண்பனின் பார்வையை தொடர்ந்து அசோக்கின் பார்வையும் சென்றது.

பிரதாப்பின் பார்வை அந்த புதிய பெரியவரின் மீது நிலைத்தது.பின் பிரதாப் சிரித்துக் கொண்டே “ஷாலினியை காமித்து அவளுக்கு ஆம்பிளை வேஷம் போட்டு பார்.அப்படியே அந்த பெரியவர் மாதிரி இல்லை.”

பிரதாப் கூறியவுடன் தான் அசோக் அந்த பெரியவரை உற்று பார்த்தான்.பிரதாப் சொல்வது சரி தான் அப்படியே அச்சில் வார்த்தது போல் தான் இருக்கிறார்கள்.அசோக் மனதுக்குள் எந்த மாதிரி சூழ்நிலையிலும் இவனால் மட்டும் தான் அனைத்துலும் கவனத்தை செலுத்த முடியும் என்று மனதுக்குள் பாராட்டிக் கொண்டான்.

பின் இழுக்க முயன்ற தன் கையாலேயே அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு “முதல்ல சொன்னது சும்மடா நண்பன் இருக்க உனக்கு என்னடா பயம் நாம் இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு மாமானாரையும் சமாளித்து விடலாம்.”என்ற நண்பனை அது என்று கெத்தாக ஒரு பார்வை பார்த்தான்.

தீனதயாளன் வீட்டுக்கு வராமல் வாசலிலேயே என்ன பேச்சு என்ற அதட்டலில் இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் உள் நுழைந்தனர்.பின் அவர்கள் அமர்ந்ததும் அங்கு ஒரு பின் விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அந்த இடம் அமைதியாக இருந்தது.
முதலில் அந்த அமைதியை கலைத்தது தீனதயாளன் தான்.பிரதாப்பிடம் “பிரதாப் என்ன வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கூப்பிடமால் என்ன பழக்கம் இது பிரதாப்” என்று தன் மகனை அதட்டினார்.

உடனே கேசவமூர்த்தி “விடுங்க மாமா”என்று கூறியதை கேட்ட பிரதாப் தலை நிமிர்ந்து கேசவமூர்த்துயை பார்த்தார்.அப்போது அவரும் பிரதாப்பை தான் பார்த்திருந்தார். பின் பிரதாப் சாதரணமாக சகுந்தலா அம்மாவை பார்த்து “எப்படி இருக்கீங்க “என்று அவரிடம் நலம் விசாரித்தான்.

பிரதாப் நலம் விசாரிக்கும் போதே பிரதாப்புக்கும் சரி சகுந்தலா அம்மாவுக்கும் சரி இரு வரும் ஒரு சேர சிரித்து விட்டனர்.இதனை பார்த்த அசோக் என்னடா இது ஒரு ஆக்க்ஷன் படத்தை எதிர் பார்த்த காமெடி படமா ஓடிட்டு இருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

சகுந்தலா பிரதாப்பை பார்த்து “எனக்கு என்னப்பா நான் நல்லா தான் இருக்கேன்.என்ன ஒன்னு என் பேச்சை என் பையன் கேட்கிறது தான் இல்லை.”என்ற சகுந்தலா அம்மாவின் பேச்சுக்கு சிரித்துக் கொண்டே…

“அப்படி கேட்காமல் இருந்ததால் தானே….இப்போது இங்கே வந்து இருக்கிறிர்கள்.இல்லை என்றால் டெல்லி பக்கம் தலை வைத்து படுத்து இருப்பீங்களா…? என்று அவனும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தான்.

பிரதாப்புக்கு சகுந்தலா அம்மாவின் புத்தி கூர்மை முதலில் இருந்தே பிடித்து இருந்தது.முதலில் இருந்தே அவர் தன்னை ஒரு சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்தது.தன் திருமணத்துக்கு முழுமனதோடு அவர் ஒத்துக் கொள்ளாதது.அவனுக்கு பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பான். அதனால் சகுந்தலா அம்மாவை அவனுக்கு மிக பிடித்து விட்டது.

பின் மினி எங்கு என்று தேடினான்.அவள் அங்கு இல்லவே இல்லை. மினி அவள் தந்தையை பார்த்து பத்து நாளுக்கு மேல் ஆகிறது.அவள் இங்கு தான் இருப்பாள் அதுவும் இப்போது உள்ள சூழ்நிலைக்கு தன் தந்தையின் தோள் மீதே சாய்ந்து இருப்பாள் என்று தான் கருதினான்.அங்கு அவள் இல்லாதது அவனுக்கு ஆச்சரியமே….

அவனுக்கு தெரியாதது மினி தன் தந்தையை பார்த்ததும் தன் தாத்தா,பாட்டியிடம் அந்த பத்திரிக்கை விஷயத்தை சொல்லக் கூடாது என்றதும்… பின் கேசவமூர்த்தி தன் மகளிடம் தனிமையில் எல்லாம் கூறியதும்.பின் ராசியானதும்.
இது எதுவும் அறியாத பிரதாப் கேசவமூர்த்தி இங்கு இருக்கும் போது அவள் எங்கே என்று கேட்க வாய்திறந்த வேளையில் கேசவமூர்த்தி தீனதயாளனிடம் “நான் உங்களுக்கு அன்று செய்தது மிக பெரிய பாவம் தான்.நான் உங்கள் பெண்ணிடம் என் காதலை சொன்ன போது அவள் மறுத்திறுந்தாலும் எனக்கு அவ்வளவு வேதனை தந்திருக்காது.

ஆனால் என்னை மிக பிடிக்கும். ஆனால் என் அப்பா அம்மா சொன்னால் தான் நான் உங்களை திருமணம் செய்துக் கொள்வேன்.மேலும் வீட்டோடு மாப்பிள்ளை என்று அவள் கூறியது என் மனதை மிகவும் புன்படுத்தி விட்டது.எனக்கு அவளை விடவும் முடியவில்லை.நான் அந்த அளவுக்கு அவளை விரும்பினேன்.எந்த அளவுக்கு என்றால் திட்டம் இட்டு மணந்து பின் அவள் கருவுற்று இருக்கும் போது அந்த குழந்தையையே காரணம் காட்டி உங்களிடம் இருந்து பிரித்து கூட்டி போகும் அளவுக்கு விரும்பினேன்.” என்று கூறி தலை குனிந்தார்.

பின் “உங்கள் மகளுக்கு ஒரு குணம் உள்ளது அது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.தன் கடமை என்று வந்து விட்டாள் அவள் எப்படியாவது நிறைவேற்றுவாள் என்பது. அதனை கூறிதான் நான் அழைத்துக் கொண்டு சென்றேன். உங்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டிதான் உங்களிடம் இருந்து அவளை பிரித்தேன்.” கேசவமூர்த்தி தன் மகள் அழும் குரல் கேட்டு தன் பேச்சை நிறுத்தினார்.

மினி மாடியின் முதல் படிக்கட்டில் நின்றுக் கொண்டு இவை அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்தாள்.பின் தன் மகள் முகத்தை பார்த்தவாரே பிரதாப்பிடம் “ ஒரு காதலனாக ஒரு கணவனாக அப்போது நான் செய்தது தவறாக எனக்கு தோன்றவில்லை.ஆனால் ஒரு தகப்பனாக நான் இந்த இரண்டு நாள் என் பெண்ணின் போனிலும் தொடர்பு கொள்ளமுடியாமல் நீங்கள் தங்கி இருந்த இடத்துக்கு போன் செய்தாள். நேற்றே அவர்கள் காலி செய்து விட்டார்கள் என்று கேட்டவுடன் நான் பதறிவிட்டேன். என் பெண்ணை பற்றி எதுவும் தெரியாமல் தவறான இடத்தில் கொ...டுத்து விட் “அவறால் பேச்சை தொடர முடியவில்லை.

பிரதாப் சிறிதும் யோசிக்காமல் கேசவமூர்த்தியின் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக் கொண்டான்.அவன் இவ்வகையில் யோசிப்பார் என்று நினைத்துக் கூடபார்க்கவில்லை.ஆமாம் அவர் நினைப்பதும் சரிதானே.இப்போது எப்படி எல்லாம் ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டு அவர்களை எப்படி எப்படியோ…பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கேசவமூர்த்தி பின் தன்னை நிலைப்படித்துக் கொண்டு “பின் நான் சந்தானத்துக்கு போன் செய்து பார்த்தால் எனக்கு ஒன்றும் தெரியாது.இந்த ஒட்டல் வாங்குவதில் தான் பழக்கம் என்று கேட்டதும்.நான் ஆடிதான் போய் விட்டேன்.என்னால் யோசிக்க கூடமுடியவில்லை.அப்போது அம்மா தான் மயில்வாகனத்தை சொல்லி அவரிடம் விசாரிக்க சொன்னார்கள்.”பிரதாப் சகுந்தலா அம்மாவை மெச்சுதலோடு ஒரு பார்வை பார்த்தான்.

“பின் மயில்வாகனத்தை அவர் ஒட்டலில் போய் விசாரித்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது.”என்ற கேசமூர்த்தியை பிரதாப் கேள்வியோடு பார்த்தான்.

“ஆமாம் பிரதாப் நான் என்ன என்னவோ நினைத்ததற்கு என் மாப்பிள்ளை என் மச்சான் தான் என்றும்… நான் தவறான இடத்தில் என் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்பதே எனக்கு ஆறுதல் தான் மாப்பிள்ளை. மேலும் நான் ஒரு இரண்டு நாளுக்கே என் பெண்ணை நினைத்து பயந்து விட்டேனே… நீங்கள் எப்படியெல்லாம் பயந்தீர்களோ என்று அப்போது தான் நான் நினைத்து பார்த்தேன். அப்போது தான் நான் உங்கள் நிலையில் இருந்து யோசித்து பார்த்தேன் என்று கூறி வருந்தினார்.
 
Top