Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 24

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---24

பத்தூவின் பேச்சைக்கேட்ட தீனதயாளன் தன் முழு குரலையும் உயர்த்தி “பத்தூ இப்போ நம்ம பேத்தியைய் கூட்டிட்டு உள்ளே போ” என்ற கணவனின் பேச்சைக்கேட்ட பத்தூ.

“ஆமாம் நீங்களும் ஆம்பிளை தானே பின்ன எப்படி பேசுவீங்க. ஒரு பெண்ணின் உணர்வுகளை பற்றி உங்களுக்கு எங்கே தெரிய போகிறது.நேற்று என் பேத்தி அவன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டான் என்று தெரிந்தும் அவள் நமக்காக ஒன்றும் சொல்லாமல் நாம் சொல்வதை பொறுமையுடன் கேட்டாள்.நம் பக்கம் நியாயம் இருக்கபோய் தான் அவள் பிரதாப்பின் ரூமிலேயே நாம் சொல்லாமலேயே தானாக தங்கினாள்.இபோது இவன் செய்த காரியத்துக்கு யாராலும் ….”வேதனையுடன் தன் பேச்சை நிறுத்தினார்.

மனைவியின் பேச்சி நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதால் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.பின் இது அமைதியாக இருக்கும் நேரம் அல்ல என்பதனை உணர்ந்து. “இப்போது நானும் நம் பேத்திக்காக தான் உள்ளே போக சொல்கிறேன்.”என்ற கணவனை சந்தேகமாக பார்த்தாள்.

“என்ன புது கதை விடுறிங்க” என்ற மனைவியிடம்.

“பத்தூ புது கதையெல்லாம் இல்லை. பழைய கதைதான்.இந்த பத்திரிக்கையின் எடிட்டர் இத்தோடு சும்மா இருக்க மாட்டான்.எனக்கு கண்டிப்பாக தெரியும்.மேலும் நோண்டுவான்.எனக்கு நம் பைய்யனை பற்றி நன்கு தெரியும்.என்று கூறி தன் மகனை ஆழ பார்த்தவாறு நேற்று அவன் எந்த தவறும் கண்டிப்பாக செய்திருக்க மாட்டான்.ஏன் என்றால் மனைவி என்று வந்த பிறகு அவளுக்கு துரோகம் செய்ய துணிய மாட்டான்.”என்று தீனதயாளன் தன் பேச்சை முழுவதும் கூட முடிக்கவில்லை.

“நீங்களும் ஆம்பிள்ளை என்ற திமிரில் தானே பேசுறிங்க .திருமணத்திற்க்கு பின் தவறு செய்ய மாட்டான்.அப்போ பொம்பளைகளும் அதே வார்த்தையை சொன்னா நீங்க சும்மா இருப்பீங்களா….ஏன் நான் நேரிடையாகவே கேட்கிறேன்.இதே வார்த்தையை நம் பேத்திக்காக கேசவமூர்த்தி பேசினால்…”

“பத்தூ”என்று தீனதயாளனும்…. “அம்மா” என்று பிரதாப்பும் ஒரு சேர குரல் எழுப்பினர்.

பிரதாப் தன் தாயின் காலில் மண்டியிட்டு நான் செய்தது தவறு தான் அம்மா.அதற்காக அவளை பற்றி இப்படி பேச்சுக்காக கூட பேசுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.இப்போது தான் என் தவறின் தீவிரம் எனக்கு புரிகிறது.ஒரு சொல்லே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லையே.ஆனால் மினி …”

பின் தன் அப்பாவிடம் “அப்பா வேண்டாம்பா அம்மா மினியை அழைச்சிட்டு போகட்டும்.உப்பை திண்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். நேற்று நான் தவறு செய்ய வில்லை என்றாலும்… நான் தவறு செய்தவன் அதற்க்கு உண்டான தண்டனையை நான் அனுபவித்து தான் ஆகவேண்டும்.”

என்று கூறி வேதனையுடன் கூறிக் கொண்டே தன் தாயின் காலடியில் இருந்து எழுந்து ஷோபாவில் அமர்ந்து தன் இரு கையையும் தன் தலைக்கு தூணாக கொடுத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த அந்த தோற்றம் பத்தூவின் பெற்ற வயிறை கலங்கடிக்க போதுமானதாக இருந்தது.

பத்மினி எப்போதும் தன் மகனை கம்பிரத்துடன் பார்த்து இருக்கிறாளே….தவிர இப்படி பட்ட நிலையில் தன் மகனை அவள் பார்த்ததே இல்லை.எனினும் ஒரு பெண்ணாய் தன் பேத்திக்காகவே அவள் மனம் வாதாடியது.

தீனதயாளனுக்கு தெரிந்து விட்டது. இனி பொறுமையுடன் பேசினால் பத்தூவை இங்கே இருந்து போவதை தடுக்க முடியாது.என்று கருதி “தவறு செய்தான் தவறு செய்தான் என்று கூறிகிறாயே…அவன் தவறு செய்தான் என்றால் அந்த தவறுக்கு நாம் தான் ஆராம்ப புள்ளி.”என்று கூறிய கணவனை இது என்ன புது கதை என்பதை போல் தன் கணவனை பார்த்தாள்.

“ஆம் பத்தூ நாம் மட்டும் அவனுக்கு நியாயமாகவா நடந்து கொண்டிருக்கிறோம்.நாம் சாந்தி சாந்தி என்று தான் நன் சிந்தனை முழுவதும் இருந்தது ஒழியே நமக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று நினைத்தாவது பார்த்தோமா….ஏன் இன்னும் சொல்லா போனால் அவன் உருவாகும் போதே கலைக்க தான் நினைத்தோம்.நிம்மதியாக கலைத்தாவது இருக்கலாம்.”என்ற பேச்சில்…

“ தாத்தா அப்படி மட்டும் ஒரு வார்த்தை உங்கள் வாயில் இருந்து வரவேகூடாது.” காலையில் இருந்து பத்திரிகை பார்த்ததில் இருந்து வாயே திறக்காத மினி முதன் முதலில் வாயை திறந்து பேசினாள்.

மனைவியின் வார்த்தை காதில் வீழ்ந்தும் அவளை தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.அதற்க்கு உண்டான தகுதி தனக்கு இருக்கிறதா...?அம்மா சொன்னது போல் ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயமா…?என்று அவன் மனதே அவனை கொன்றது.

பேத்தியின் பேச்சில் அந்த முதியவரின் நெஞ்சம் நெகிழ்ந்தது.இது தான் தாலிகொடியின் மகிமையா..?.இல்லை தன் பேத்தி தன் மகன் மீது வைத்திருக்கும் காதலின் மகிமையா…? என்று சிந்தித்தார்.பின் என்ன தன்னை ஏமாற்றி மணந்தான் என்று தெரிந்தும் இங்கிருந்து செல்லாமல் இருந்ததோடு…. அவர் பார்த்தவரை தன் பேத்தி அவள் தந்தையான கேசவமூர்த்தியிடம் பேசக்கூட முயற்ச்சிக்கவில்லை.

இப்போது தன் மகனை கருவிலேயே அழித்திருக்கலாம் என்று கூறும் போது அதனை தாங்காது தன்னை அதட்டியது.அவரை நெகிழ்த்தியது.

“ராசாத்தி நான் சும்மா பேச்சுக்கு தாண்டா சொன்னேன்.சரி உனக்கு பிடிக்கவில்லை என்றால் இனி அந்த வார்த்தை பேச மாட்டேன்.”என்று பேத்தியிடம் சொல்லி தன் பேச்சை மனைவியிடம் தொடர்ந்தார்.

“சொல்லு பத்தூ நம் மகன் பிறந்தும் நாம் என்ன செய்தோம். சாந்தி மனநிலைக்காக நம் மகன் வளர்ப்பை முழுவதும் சாந்தியிடமே ஒப்படைத்தோம்.சாந்தியின் பிரிவை நம்மாலேயே…..தாங்கி கொள்ளமுடியவில்லையே….எட்டு வயது சிறுவன் எப்படி தன்னை தாயாய் வளர்த்த சாந்தியின் பிரிவை தாங்கி கொள்வான். நாம் சிறிதாவது யோசித்தோமா…..?நாம் நம் கவலையில் தான் மூழ்கி இருந்தோம்.நான் சாந்தியை தோடுவதிலும் மற்றும் என்னுடைய தொழில் போட்டிட்டவர்களிடம் என்னுடை தொழிலை காப்பற்றிக் கொள்வதிலேயே என்னுடைய நேரம் சென்றது.நீ சாந்தியின் பிரிவை கோயில் கோயிலாக சென்று உன் மனவேதனையை சாமியிடம் கொட்டுகிறேன் என்று சென்று விட்டாய் அவன் நிலை என்ன….?

கணவனின் பேச்சில் இருந்த உண்மை அவளை வாயடைத்து விட்டது.எதுவும் பேசாமல் குற்ற உணர்ச்சியில் கண்ணில் நீர் வடிய நின்று இருந்த மனைவியை அந்த நிலையில் பார்க்க இயலாத தீனதயாளன் தன் மனைவியிடம்.

“பத்தூ உன்னை கஷ்டபடுத்துவதற்காக நான் இதை உன்னிடம் சொல்ல வில்லை.அது போல் அவன் செய்தது நியாயம் என்றும் சொல்ல வில்லை.அவன் செய்த தவறில் நமக்கும் பங்கு இருக்கிறது என்று தான் நான் சொல்கிறேன்.”என்ற அவர் பேச்சை தீனதயாளன் போனின் சத்தம் இடையில் தடுத்தது.

அதை காதில் வைத்த தீனதயாளன் சிறிது நேரம் பேசிவிட்டு பதட்டத்துடன்.பிரதாப்பின் அருகில் சென்று “கிளம்பு பிரதாப் இந்த பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.”என்று தன் மகனை கிளப்புவதில் அவசரம் காட்டினார்.

பிரதாப் யோசனையுடன் “ இதைவிட வேறு பிரச்சினை என்னப்பா இருக்க போகிறது.”என்ற மகனை பார்த்து “உன் பிரச்சினைவிட மினியின் மானம்முக்கியம் அல்லவா….?

அப்பாவின் பேச்சில் தன்னுடைய கவலையெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது. “அப்பா என்னப்பா சொல்றிங்க ..”

“இப்போ போனில் வந்த நியூஸ் அது மாதிரி உங்க திருமணம் நாம் யாருக்கும் இங்கு முறையா அறிவிக்கவில்லை.நீ ஒரு மாதம் கழித்து தான் கோவாவில் இருந்து வருவதாக இருந்ததால் அதற்க்கு ஏற்ற மாதிரி தான் நான் ரிஸப்ஷன் டேட் பிக்ஸ் பண்ணேன். நீ சீக்கிரமாகவே இங்கு வரும்படியாகி விட்டது.இப்போது அந்த எடிட்டர் நீ ஏர்போட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பெண் யார் என்று விசாரனையில் இறங்கியிருக்கான்.கண்டிப்பாக அவன் நல்லவிதமாக யோசிக்க மாட்டான்.நாளை பத்திரிக்கையில் ..”என்ற தந்தையின் பேச்சில

“ அப்பா நீங்க இங்கே பாத்துக்குங்க நானும் அசோக்கும் இந்த விஷயத்தை பார்த்துக் கொள்கிறோம்.” அசோக்கை கண் ஜாடையில் வரும் படி அழைத்து மினியின் அருகில் போய் நின்றான்.

“மினி உன் எதிரில் நிட்கக்கூட எனக்கு அருகதை இல்லை.ஆனால் நீ என்னை விட்டு போனால் உயிர் இருந்தும் ஜடமாக தான் வாழ்வேன்.நான் செய்தது பெரும் தவறு தான் ஆனால் உன்னை டிவி நிகழ்ச்சியில் பார்த்ததில் இருந்து உன்னை தவிர வேறு யாரையும் எண்ணத்தால் கூட நினைக்க வில்லை. இதற்க்கு மேல் நீ என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுபடுகிறேன்.”என்று அவளிடம் கூறி ஒரு நிமடம் கூட தாமதிக்காது அசோக்கை அழைத்துக் கொண்டு விரைந்தான்.

அசோக்கை அழைத்துக் கொண்டு அவன் நேராக சென்ற இடம் நேற்று பார்ட்டி நடந்த ஒட்டலுக்கு தான்.அந்த ஒட்டலும் பிரதாப்போட ஒரு பிரான்ச் தான். தன் ஆபிஸ் ரூமில் அமர்ந்துக் கொண்டு நேற்று பார்டியில் நடந்த வீடியோ கவரேஜை ஓடவிட்டான்.

அதில் மோனா அந்த பத்திரிக்கை காரனின் காதில் பேசுவதில் இருந்து.அவனுக்கு பணம் கொடுப்பது.பின் பிரதாப்பிடம் வந்து வேண்டும் என்றே பிரதாப்பின் மேல் விழுவது வரை அனைத்தும் துள்ளியமாக இருந்தது.

பின் அங்கிருந்தே தன் லாயருக்கு அழைத்து தான் இருக்கும் இடத்தை சொல்லி உடனடியாக வரும் படி அழைத்தான்.அனைத்து வேலையும் அவசரம் அவசரமாக முடித்த பிரதாப் மினியின் நினைவில் யோசனையுடன் அமர்ந்தான். அவள் என்ன முடுவு எடுப்பாள் என்பதை பற்றி அல்ல இந்த விஷயம் அவளுக்கு எவ்வளவு மனவேதனை கொடுக்கும் என்பதனை நினைத்து தன்னை நினைத்தே வெட்கப்பட்டான்.

அசோக்கிடம் “எப்போதும் நீ என் கூடவே இருப்பியேடா….நான் கூட அதற்கு உன்னை என்னவெல்லாம் சொல்லி கிண்டல் செய்திருக்கிறேன்.நேற்று மட்டும் நீ என் கூடயிருந்தால் இது மாதிரி நடக்கமால் இருந்திருக்குமோ…?”என்று நண்பனிடம் கண்ணிருடன் கூறினான்.

நண்பனின் கண்ணில் நீரை பார்த்த அசோக் பதைத்து விட்டான்.அவன் நினைவு தெரிந்து எதற்கும் கலங்காதவன்.எப்போதும் கம்பிரத்துடனே வளையவந்தவனை இவ்வாறு கண் கொண்டு அவனால் பார்க்க முடியவில்லை.

“பிரதாப் கவலைபடதே அந்த பத்திரிக்கை ஆபிஸையே நாம் இழுத்து மூடிவிடலாம்.மேலும் அவனுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போட்டு உன் தந்தை செய்தது போல் நாமும் செய்து அவனுடைய மொத்த சொத்தையும் பிடுங்கி நடு ரோட்டில் நிற்க்க வைக்கலாம்.”என்று தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான்.

அசோக் கூறியதை கேட்ட பிரதாப் விரக்தியாக சிரித்து கொன்டே “இது எல்லாம் செய்தால் மினி இப்போது அவள் படும் வேதனை தீர்க்க முடியுமா….”என்று கூறி “ஆனாலும் அவனை சும்மா விடமுடியாது.மினியை பற்றி அவன் ஏதாவது எழுவதுக்கு முன் அவனை உண்டு இல்லை.என்று ஆக்கிவிடவேண்டும்.”என்று அவன் அசோக்கிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே லாயரும் வந்து சேர்ந்தார்.

பிரதாப் லாயரிடம் விவரமாக எல்லாம் கூறி அந்த வீடியோவையும் காட்டினான்.மேலும் மினியை பற்றி கூறி அவளை பற்றி நாங்கள் முறையாக சமுகத்திற்க்கு அறிமுகம் படுத்துவதற்கு முன் அவளை பற்றி எந்த விவரமும் வரகூடாது என்றும் கூறினான்.

லாயர் பிரதாப்பிடம் “இந்த வீடியோவே போதும் அந்த பத்திரிக்கையின் எடிட்டரை ஒரு வழி பண்ண” என்று கூறி உடனே முறையாக அந்த எடிட்டருக்கு எதிராக கேஸ் பைல் பண்ணினான்.

பின்பு நேராக பிரதாப், அசோக், லாயர் மூன்று பேரும் அந்த பத்திரிக்கை ஆபிசுக்கு சென்றனர்.அங்கு வெளியில் உள்ள செக்யூரிட்டி தடுத்தும் நேராக அந்த எடிட்டரின் ரூமுக்கே சென்றனர்.

அங்கு அந்த எடிட்டரின் டேபில் பிரதாப் மினி சேர்ந்து இருக்கும் படியான போட்டாவை பரப்பி வைத்துக் கொண்டு நாளை வரும் பத்திரிக்கையில் எந்த படம் போடலாம் என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்ற பிரதாப் டேபிளில் மினியின் போட்டோவை பார்த்து கண் முன் தெரியாமல் கோபம் வந்தது.பிரதாப் அவரின் வயதையும் பொருட்படுத்தாமல் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க ஆராம்பித்திருந்தான்.

அசோக்கும் லாயரும் “பிரதாப்பை தடுத்து நிறுத்தினர்.லாயர் பிரதாப்பின் காதில் “பிரதாப் உங்கள் கோபத்தை கட்டுபடுத்துக்கள். இல்லை என்றால் நமக்கு தான் பிரச்சினையாகும்.நாம் லீகலா தான் அணுக முடியும். அப்போது தான் இந்த பத்திரிக்கை ஆபிஸையே இழுத்து மூடமுடியும்.”லாயரின் பேச்சில் இருந்த உண்மையால் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

பின் பிரதாப் டேபிள் மேல் உள்ள போட்டோவை காட்டி “இது எல்லாம் என்ன.” என்று கேட்டான்.

அந்த எடிட்டர் பிரதாப் அடித்ததால் ஏற்பட்ட சட்டையின் கசங்களை சரி செய்துக் கொண்டே “தெரியவில்லை எல்லாம் உன்னுடைய திருவிளையாடல் தான் இதில் எந்த போட்டோவை நாளை பத்திரிகையில் போடுவது என்று குழப்பமாக இருக்கிறது.நீங்கள் உதவி பண்ண முடியுமா….?” என்று தெனவாட்டாக கேட்டான்.

பிரதாப்பும் “அதற்கு என்ன கண்டிப்பாக உதவி செய்கிறேன்.”என்று கூறி அசோக்கிடம் அந்த போட்டோவை காட்டி “ என்னிடம் கூட இவ்வளவு அழகான கலக்க்ஷன் இல்லை.” என்ற பிரதாப்பின் பேச்சில் லாயர் அசோக் சிரித்தார்கள் என்றால் எடிட்டர் குழம்பி போனார்.பிரச்சினையை விளைகொடுத்து வாங்கிவிட்டோமோ…..பிரதாப் பற்றி நன்கு தெரியும் ஆதாரம் இல்லாமல் வாய் வார்த்தையாக பேசும் ரகம் இல்லையே… என்று இப்போது தான் சரியாக சிந்திக்க ஆராப்பித்திருந்தார்.

பின் அவர்கள் மூவரையும் ஒரு திகிலோடு பார்த்தார்.பின் லாயர் எடிட்டரிடம் “போட்டோவை பின் பிரதாப் சார் பொருமையாக உங்களுக்கு செலக்ட் செய்து தறுவார்.நான் காமிப்பதை நீங்கள் முதலில் பாருங்கள்” என்று அந்த வீடியோவை போட்டு காமித்தார்.பின் “பார்த்தீங்களா… இப்போது நாங்கள் உங்கள் மீது என்ன குற்றபத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறோம் என்றால் பிரதாப்பின் தந்தை மீது உள்ள முன் பகை காரணமாக நீங்களே உங்கள் பத்திரிக்கைக்காரனை அனுப்பி அந்த மாடல் மோனாவின் உதவியுடன் பிரதாப்பின் சமுகத்தில் அவருக்கு உள்ள மதிப்பை பாதிக்கும் அளவுக்கு செய்திருக்கிறிர்கள் என்று குற்றம் சாட்டி உள்ளோம்.”என்று கூறியதை கேட்டு ஆடி போய் விட்டார்.

அந்த போட்டாவை பார்த்ததும் ஆராயமல் போட்டதுக்கு காரணம் பிரதாப்பின் பெண்கள் பழக்கம் முன்பே தெரிந்திருந்ததால் தான்.ஆனால் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

இந்த வழக்கு மட்டும் போட்டால் கண்டிப்பாக பத்திரிகை ஆபிஸை இழுத்து மூடிவிட வேண்டியது தான் என்று மனதில் நினைத்துக் கொண்டே…

அப்போதும் கெத்து விடாமல் டேபிள் உள்ள போட்டோவை காண்பித்து.”இது எல்லாம் என்ன என்று கேட்டார்.அசோக் மனதில் இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவானோ… என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

பிரதாப் அந்த போட்டாவை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டே லாயரிடம் கண் காட்டினான். “லாயர் பிரதாப்பின் திருமண போட்டோ மற்றும் திருமணம் பதிவையும் காட்டினார்.

அதனை பார்த்த எடிட்டார்.இதனை சிறுதும் எதிர் பார்க்க வில்லை.பேந்த...பேந்த முழித்து பார்த்தார்.பின் பிரதாப் “இந்த போட்ட எடுத்ததுக்கும் என்னை பற்றிய செய்தி வெளிவந்ததுக்கும் உன் பத்திரிக்கை முடவைத்து உன் சொத்து முழுவதும் மானநஷ்ட வழக்கில் வாங்கி விடுவேன்.நீ மட்டும் நேற்று என் மனைவியின் படம் போட்டு இருந்தாள் உன் உயிரையே வாங்கியிருப்பேன்.”

என்ற பிரதாப்பின் பேசுவதில் இருந்தே தெரிந்தது கண்டிப்பாக செய்திருப்பான் என்று பின் அவனை ஒரு புழுவை போல் பார்த்து. “ இனி நீ பல் பிடிங்கிய பாப்பு” என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றனர்.

ஆபிஸிக்கு சென்றதும் மோனாவின் அனைத்து அக்ரிமெண்டும் கேன்சல் செய்தது மட்டும் அல்லாமல்.அவள் எந்த எந்த கம்பெனியில் எல்லாம் மாடல் செய்கிறாளோ அனைத்தும் அவள் கை விட்டு செல்லும் படி தன் பணபலத்தால் செய்து முடித்தான்.

பின் அனைத்து வேளையும் புயல் வேகத்தில் முடித்து லாயரை அவர் வீட்டில் விட்டு அசோக்கும் பிரதாப்பும் வீடு வர இரவு நேரமாகி விட்டது.உள் நுழைந்தவர்களை ஹாலில் அமர்ந்திருந்த கேசவமூர்த்தியும்,சகுந்தலா அம்மாவும் வரவேற்றனர்.
 
பொண்டாட்டி பத்மினியை எசகுபிசகாக பிரதாப்புடன் மாட்டி விடப் பார்த்தாயா?
ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டியே சங்கர்
சங்கர சங்கர சம்போ
ஹா ஹா ஹா
 
Last edited:
Top